You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Marcus Weds Chaitanya-7-Prefinal

Bhavya

Author
Author
SM Exclusive Author
#1
ஹாய் பிரெண்ட்ஸ்... மார்கஸ் வெட்ஸ் சைதன்யா ப்ரீ ஃபைனல் எபியோட வந்திட்டேன்...மார்கஸ் சென்ற பிறகு தானும் கோபமாக எழுந்த நின்ற அர்ச்சனா,


"விக்கி!வாங்க போலாம்... எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல..."என கணவனை அழைத்தாள்.


தோழியின் கோபம் புரிந்த சைதன்யா,


"அச்சு....!"என்றாள் தயங்கியபடி.


அவளை விழிகளால் சுட்டவள்,


"ஜஸ்ட் ஷட் அப்....சே நீ இப்படி பண்ணுவேன்னு நா நெனைக்கவேயில்ல...இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.....ஐ ஹேட் யூ... சைதன்யா"என்றவள் விக்னேஷை இழுத்தபடி அங்கிருந்து அகன்று விட்டாள்.


அவர்கள் கண்ணை விட்டு அகன்ற பின் விஷ்வாவின் கையை நட்போடு பிடித்தவள்,


"தேங்க் யூ ஸோ மச் விஷ்வா!உங்க ஹெல்ப்ப நா என்னிக்கும் மறக்க மாட்டேன்..."


"இட்ஸ் ஓகே சைதன்யா!பிரெண்ட்காக இது கூட பண்ண மாட்டேனா...ஆனா உன் டிசிஷன் சரியில்லேன்னு தோணுது...ஐ திங்க் மிஸ்டர் மார்கஸ் லவ்ஸ் யூ ஸோ மச்...நீ ஏன் இந்த பொய்ய சொல்லி அவர் உன்ன ஹேட் பண்ணும் படி பண்ண?"


அதற்கு பதிலளிக்காமல் தலையை இடவலமாக ஆட்டினாள்.


"இட்ஸ் ஓகே....நீ சொல்ல வேண்டாம்...நா வரேன்..."என்றவன் எழுந்து சென்று விட்டான்.


வெளியே வந்து விடுவேன் என்று பயமுறுத்திய கண்ணீரை தொண்டைக் குழியிலேயே அழுத்தி இரும்பென கனத்த கால்களை சிரமப்பட்டு மெதுவாக எடுத்து வைத்து அங்கிருந்து வெளியேறியவள் தன் ஸ்கூட்டியில் வீடு நோக்கி சென்றாள்.


நல்லவேளையாக வீட்டில் யாருமில்லை.அவளுக்கும் யாருமற்ற தனிமைத் தேவைப்பட்டது.அறைக் கதவை இறுக்க தாழிட்டவள் மெத்தையில் முகம் புதைத்தாள்.அதுவரை அடக்கப்பட்ட கண்ணீர் தங்குதடையில்லாமல் மடைத் திறந்த வெள்ளமாய் வெளி வந்தது.


வெகுநேரம் இதயமே வெடித்துவிடும் போல் அழுதவள் அழுகை நின்று லேசான கேவலினின் நடுவில்,


"ஐம் வெரி சாரி மாக்கு!ஐம் ரியலி சாரி....உங்கள உயிருக்குயிரா காதலிச்சும் யாரையோ என் காதலன்னு உங்ககிட்டே சொல்லும்படி ஆயிடுச்சு....உங்கள காப்பாத்தத்தான் அப்பிடி பொய் சொன்னேன்...இந்த பாவிய மறந்து வேற யாரையாவது கல்யாணம் பண்ணி சந்தோஷமா நீங்க வாழனும்..."


அவனை இழந்தே விட்டோம் என்ற வலி முழுமையாகத் தாக்க தேற்றுவாரின்றி அழுதாள்.


இரண்டு நாட்களுக்கு முன்


அர்ச்சனாவின் விருந்து முடிந்த இரவு அறையில் தன்னை மறந்து கனவில் ஆழ்ந்திருந்த சைதன்யாவை தந்தை அவர் அறைக்கு அழைப்பதாகக் கூறிச் சென்றாள் தங்கை விதன்யா.என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி அவர் அறைக்குச் சென்றாள்.அங்கே ஏதோ ஃபைலில் ஆழ்ந்திருந்தவர் இவள் வந்த அரவம் கேட்டு நிமிர்ந்தவர்,


"சைதன்யா!வந்து இங்க உட்கார்... உங்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்..."என்று தன் எதிரில் இருந்த இருக்கையை காட்டினார்.


தயங்கி தயங்கி அதில் சென்று அமர்ந்தாள்.மகளின் முகத்தை இரண்டொரு நிமிடம் கூர்ந்தவர்,


"உனக்கு சாரதா இன்டஸ்ட்ரீஸ் பூபதிய பத்தி தெரியுமா?போன மாசம் கார் விபத்துல செத்துட்டாரே...அவரு!"


இது எதற்கு இப்போது கேட்கிறார் என்று புரியாமல் அவரை பார்த்தாள்.


"சொல்லுடாமா...தெரியுமா தெரியாதா?"


"தெரியும்பா...பெரிய பணக்காரர்...நிறைய கம்பெனி...ஃபேக்டரி எல்லாம் இருந்தது...எங்கையோ வெளியூர் போறப்போ கார் ஆக்ஸிடென்ட் ஆகி ஸ்பாட் அவுட்...இத இப்ப ஏன் கேக்கறீங்கபா?"


"அது ஆக்ஸிடென்ட் இல்ல...கொலை...ஏதோ இடத்தை கொடுத்தோமா பணத்தை வாங்கி பிச்னஸ்ல போட்டோமான்னு இல்லாம நம்ம அண்ணாச்சிக்கே இடம் கொடுக்க முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டான்...சும்மா விடுவாரா...ராத்திரியோட ராத்திரியா லாரிய விட்டு அவன் காரை தூக்கிட்டாரு...ஒரு சின்ன எவிடென்ஸ் கூட இல்ல....நா கேட்டாலும் அப்படியே பக்காவா செஞ்சு கொடுப்பாரு...ஒண்ணு விட்ட தம்பின்னாலும் என் மேல அவ்ளோ பாசம் அவருக்கு"


அவர் பேச்சில் சர்வமும் நடுங்கியது அவளுக்கு.பிரபாகரனின் ஒன்று விட்ட அண்ணன் பெரிய அரசியல் புள்ளி.அவர் பின்னே பெரிய தொண்டர்(அடியாள்) படையே இருந்தது.எதை செய்யவும் தயங்காத அவரிடம் யாரை கைக்காட்ட நினைக்கிறார் என்று சிறு சந்தேகப் பொறி அவள் மனதில் உதித்து அவள் சில்லிட வைத்தது.அடைத்த தொண்டையை லேசாக செருமியவள்,


"யாரை சொல்றீங்கப்பா?"


"நா வளவளான்னு இழுக்க விரும்பல... இன்னும் ரெண்டு நாள்ல அவன் சொந்த நாட்டைப் பாக்க நடய கட்டி இருக்கனும்...இல்ல மூணா நாளு அவனுக்கு பாடை கட்டும்படி ஆயிடும்...என்ன பண்ணுவியோ அதெல்லாம் எனக்கு தெரியாது... உனக்கு சொல்லாதயே முடிச்சிருப்பேன்...ஏதோ பாவம் வெளிநாட்டுக்காரன்...தீனாவுக்கு வேண்டப்பட்டவன்னு இந்தளவு வந்திருக்கேன்..."


"அப்பா ப்ளீஸ் அவரு.."


கையை காட்டி வேண்டாம் என தடுத்தவர்,


"இதெல்லாம் சரிப்பட்டு வராது...நம்ம ஜாதி பையன உனக்கு பாத்து வச்சிருக்கேன்...அவன கல்யாணம் பண்ணிக்கற வழியப் பாரு... எதையாவது சொல்லி அவன ஊரைப் பாக்க அனுப்பு...நா சொல்றத செய்றவன்...உனக்கே நல்லாத் தெரியும்..."


அவளும் அறிந்தது தான்.அவர் நினைத்ததை மீறி அவர் குடும்பம் எதை செய்யவும் இதுவரை தைரியம் கொண்டதில்லை.அவர் கிழித்த கோட்டைத் தாண்ட நினைத்தால் சொன்னதை கண்டிப்பாக செய்துவிடுவார் என்பதில் அவளுக்கு எள்ளளவும் அவளுக்கு ஐயமில்லை.காதல் கொண்ட மனம் தன்னவனுக்கு ஆபத்து என்றதும் அதன் உண்மை பொய்களை ஆராயத் தோன்றவில்லை.


இரவு வெகு நேரம் யோசித்தவள் மனதில் தோன்றிய திட்டப்படி விஷ்வாவை அழைத்து உதவிக் கேட்டாள்.முதலில் தயங்கியவன் அவள் வற்புறுத்தலில் ஒப்புக் கொண்டான்.நாடகமும் அவள் நினைத்தபடியே நன்றாக நடந்தது.காதலோடு நட்பையும் ஒரே நேரத்தில் இழந்துவிட்டாள்.


இரண்டு நாட்களாக கண்ணீரில் கரையும் மகளைக் கண்டு மனம் நொந்தார்.தன் வீரதீர பராக்கிரம செயலை யாரிடமோ போனில் அவர் விவரித்தப் போதுதான் மகளின் நிலை அவருக்கு புரிந்தது.ஏதாவது செய்து அவளை சரிசெய்ய வேண்டும் என்று தவித்தது தாய் மனம்.ஆனால் கணவருக்கு பயந்து மவுன சாட்சியாக சுற்றி வந்தார்.


நல்லவேளையாக மூன்றாம் நாள் காலை பிஸ்னஸ் விஷயமாக வெளியூர் சென்று விட்டார்.மார்கஸ் லண்டன் சென்றுவிட்டான்.அர்ச்சனா விக்னேஷ் இருவரும் தேன்நிலவிற்கு அமெரிக்கா சென்றுவிட்டனர்.அதனால் மகள் பற்றிய கவலை இல்லாமல் நிம்மதியாக மும்பை சென்று விட்டார்.


பத்து மணி அளவில் காலை உணவோடு மகளின் அறையில் நுழைந்த தாய்க்கு மகளின் வெளிறிய முகம் வயிற்றில் தீயை மூட்டியது.இப்படியே போனால் அதிக நாள் அவள் உயிர் பிழைத்திருக்க மாட்டாள் என்று உணர்ந்தார் அவர்.


உணவு தட்டை மேசையில் வைத்தவர் மெதுவாக அவள் அருகில் வந்து அவள் தோளை தொட்டார்.தூக்கிவாரிப் போட திகைத்து விழித்தவளை வாரி அணைத்துக் கொண்டார்.தாயின் ஆதரவான அணைப்பில் வற்றிய கண்ணீர் மீண்டும் உடைப்பெடுத்தது.குலுங்கிய மகளின் முதுகை ஆதரவாக தடவிக் கொடுத்தார்.


"சைதன்யா!சமாதானப்படுத்திக்கோடா!அம்மாக்கு எல்லாம் தெரியும்...சொல்லு என்ன சொல்லி அந்த பையனை அனுப்பின?"


"அம்மா...!"


"மார்கஸ் ரொம்ப நல்ல பையன்...பாத்து கொஞ்ச நாள்தான் ஆனாலும் அவனை மாதிரி ஒருத்தனை உலகம் பூரா தேடினாலும் உங்கப்பாவால உனக்கு வரனா கொண்டு வர முடியாது...சொல்லு என்ன பண்ண?"


மெல்லிய குரலில் தந்தை மிரட்டியதையும் தான் பயந்து மார்கஸை ஹோட்டலுக்கு அழைத்து நடத்திய நாடகத்தையும் விவரித்தாள்.அதைவரை பொறுமையாக கேட்டவர்,


"அடப்பாவி மகளே!என்ன வேலை செஞ்சுட்ட...அவரு மெரட்டினாராம்..இவ போயி பொய் சொன்னாளாம்...கொஞ்சமாச்சும் அறிவில்லையா உனக்கு...அந்த தம்பி யாரு?அதோட லெவல் என்ன?இங்க லோக்கல்ல ரவுடிதனம் பண்ணற அண்ணாச்சி அவரை போட்டு தள்ளிடுவாராமா...?அவருத்தான் சொன்னாருன்னா அத நம்பின நீ எவ்வளவு பெரிய முட்டாள்...அவரோட சுண்டிவிரலக் கூட இவங்களால அசைக்க முடியாது...புரிஞ்சுக்க... உனக்கு உங்க அப்பா பாத்துருக்கற மாப்பிள்ளை எப்படிப்பட்டவன் தெரியுமா...குடி பெண் சிநேகிதம்னு இருக்கறவன் நம்ம ஜாதிங்கற ஒரே காரணத்துக்காக உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ண பாக்குறாரு...இரு கொஞ்ச நேரத்துல வரேன்....இந்த டிபன சாப்பிடு"என்று சென்றவர் ஒரு மணி நேரத்தில் கையில் ஒரு கவரோடு வந்தார்.


"சைதன்யா!இது லண்டன் பிளைட் டிக்கெட்...உன் துணிமணி ரெண்டு செட் போதும் ஹாண்ட் பேக்ல வச்சுக்கோ...சத்தமில்லாம கெளம்பு..உன் வாழ்க்கை மார்கஸ்யோட தான்...உங்க அப்பா திரும்பி வந்த உடனே அவர் பாத்த பையனோட கல்யாணம்னு சொல்லிட்டு போயிருக்காரு...அவர் திரும்பி வரத்துக்குள்ள நீ லண்டன்ல இருக்கனும்...லேட் பண்ணாதே இன்னும் மூணு மணி நேரம்தான் இருக்கு ப்ளேனுக்கு...கிளம்பு கிளம்பு..."என்று அவசரப்படுத்தினார்.


"அம்மா!அவர் என்னெ எப்படி ஏத்துக்குவார்...பொய் சொன்னேன்னு கோவிச்சுக்க மாட்டாரா?... அப்பாவுக்கு தெரிஞ்சு உங்கள ஏதாவது செஞ்சுட்டா?"


"அடிச்சு பல்ல பேத்துடுவேன்...உடனே கெளம்ப சொன்னா நீ கேள்வி கேக்கறியா?நீ பண்ண வேலைக்கு உன்னை அடிக்காம கொஞ்சுமா அந்த தம்பி!... அப்புறம் உங்க அப்பா...அவரு என்னை ஒண்ணும் கடிச்சு முளுங்கிட மாட்டாரு...நீ பயப்படாம கெளம்புமா ராசாத்தி!"


எப்படியோ கெஞ்சி கூத்தாடி மகளை கால் டாக்ஸியில் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.விமான பயணம் முழுவதும் தன்னை பார்த்தால் மார்கஸ் எப்படி நடந்துக் கொள்வான்?என்ன சொல்வான் என்ற கவலையிலேயே கழித்தாள் அவள்.


லண்டன் விமான நிலையத்தில் இறங்கியவள் டாக்ஸியில் மார்கஸ் வீட்டிற்குச் சென்றாள்.வீடா அது சக்ரவர்த்தியின் அரண்மனை.வானளாவ நின்ற அந்த அரண்மனையின் வாட்மேனை சமாளித்து உள்ளே சென்றவள் மேனேஜருக்காக காத்திருந்தாள்.


குள்ளமாக ஐம்பது வயதான ஒருவர் வெளி வராண்டாவிற்கு வந்தார்.சைதன்யாவை ஏற இறங்க பார்த்தவர் யார் அவள்?என்ன வேண்டும்?என்று ஃப்ரெஞ்ச் மொழியில் கேட்டார்.


அவர் கேள்வியில் திருதிருவென விழித்த சைதன்யா அவர் கேட்டதை ஊகித்து தான் இந்தியாவிலிருந்து வந்திருப்பதாகவும்...மார்கஸை பார்க்க வேண்டும் என்றாள்.


அவளுக்கு அவர் கூறிய மறுமொழியில் மார்கஸ் சர்ச் மேரெஜ் என்ற மூன்று வார்த்தைகள் மாத்திரம் புரிந்தது.அதில் அதிர்ந்து சிலையென நின்று விட்டாள் அவள்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top