• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayak Koattai - Minnal : Aththiyaayam 35

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 35.

சனிக்கிழமை காலை மங்கலமாகப் புலர்ந்தது காணிக்குடியிருப்பில். அதிகாலையிலேயே எழும் பழக்கம் உள்ள மீகாமர்கள் நால்வரும் எழுந்து விட்டனர். காட்டின் அதிகாலை அழகைப் பருகியபடி பேசிக்கொண்டிருந்தனர். அன்றைய தினம் தான் சேட்டை எப்படி பணிய வைப்பது எனத் திட்டம் போட வேண்டும் எனவும் மீடியாக்களை எப்படிப் பயன் படுத்த வேண்டும் எனவும் தீர்மானித்திருந்தார்கள். காலை உணவுக்குப் பின் காணிக்க்குடியிருப்பிலிருந்து கிளம்பி குருதி ஓடைக்கைரையில் வைத்துப் பேசலாம் என தீர்மானித்துக்கொண்டர்கள். அப்படிச் செய்தால் தங்கள் திட்டத்துக்கு மின்னல் மகிழியின் சம்மதமும் கிடைக்கும் என்பது அவர்கள் எண்ணம்.

பேசிக்கொண்டிருக்கும் போதே அரவிந்தனின் செல்ஃபோன் ஒலித்தது. இந்தக் காலை நேரத்தில் யாராக இருக்கும் என எண்ணியபடியே எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். மறுமுனையில் பேசியது யார் என தெரியவில்லை. ஆனால் பேசப் பேச அவனது முகம் சந்தோஷத்துக்குப் போனது.

"அப்படியா நிச்சயமா தெரியுமா?"

"அப்ப எங்களுக்கு வேலையே இல்ல" என்றான். இன்னும் சற்று நேரம் பேசிவிட்டு வைத்தான்.

மற்ற மூவரும் அவன் என்ன பேசுகிறான் என யோசிக்க முயன்றவர்களாக முகம் பார்த்து நின்றிருந்தனர்.

"யாரு ஃபோன்ல?"

"நம்ம எல்லாருக்கும் ஒரு குட் ந்யூஸ்பா! குமுதா தான் பேசினா என்ன சொன்ன தெரியுமா?"

"என்ன சொன்னாங்க?"

"முதல் ந்யூஸ் இன்ஸ்பெக்டர் இன்பராஜ் நம்ம மேல இருக்குற கேசை வாபஸ் வாங்கிட்டாராம். ரெண்டாவது உங்களால ஊகிக்கக் கூட முடியாது" என்றான் முகமெல்லாம் பூரிப்பாக.

"அப்படி என்னதான் சொன்னாங்க சொல்லேண்டா?" என்றான் அருண் பொறுமையிழந்து.

"சேட் ஜலராம் ரிசார்டு கட்டுற திட்டத்தை மறு பரிசீலனை செய்யப் போறானாம்" என்றான் கைகளைத் தட்டியபடி.

மூச்சு விட்டால் கூட கேட்கும் நிசப்தம் நிலவியது. பின்னர் நால்வரும் ஒரே நேரத்தில் ஹே என்று கத்தி கை குலுக்கிக் கொண்டனர். சந்தோஷத்தில் ஒரே நேரத்தில் பேச முயன்றனர் நல்வரும். பூஜா மருதனின் கைகளைப் பற்றிக்குலுக்கி சிரித்தாள். சற்று நேரத்தில் ஆரம்ப நேர ஆர்ப்பாட்டங்கள் முடிய நிதானமாகப் பேச முடிந்தது நால்வராலும்.

"என்னடா இது ஆச்சரியமா இருக்கு? அன்னைக்கு சேட்டு நம்ம கிட்ட பேசினப்ப இந்த ஜென்மத்துல திட்டத்தைக் கை விட மாட்டான்னு தோணும்படி பேசினான். இப்ப என்ன திடீர்னு மனசு மாறிட்டான்? இந்த விஷயம் குமுதாவுக்கு எப்படித் தெரியுமாம்" என்றாள் பூஜா.

"இன்னைக்குக் காலையில பேப்பர்ல வந்திருக்காம் ந்யூஸ். சேட்டு அறிக்கை குடுத்ட்கிருக்கானாம். பாவநாச மலையில ரிசார்ட்டு கட்ட மக்கள் கிட்ட எதிர்ப்பு அதிகமாக இருப்பாதால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்னு குடுத்திருந்தாராம்"

"எல்லாம் மின்னல் தாயீயும் மகிழித்தாயீயும் செய்யுற வேலை. தீ நடுவுல நம்மை பத்திரமாக் கூட்டிக்கிட்டுப் போகத் தெரிஞ்சவங்களுக்கு சேட் மனசை மாற வைக்கிறது கஷ்டமா என்ன?" என்றான் மருதன்.

"இன்ஸ்பெக்டர் இன்பராஜ் வேற கேசை வாபஸ் வாங்கிட்டாராம். எல்லாமே ஆச்சரியமா இருக்கு" என்றான் அருண்.

"ஆமா! இன்னைக்குக் காலையில ஃபோன் செஞ்சு குமுதா கிட்ட விஷயத்தை பெரிசு படுத்த வேண்டாம் நான் கேசை வாபஸ் வாங்கிக்கரேன்னு சொல்லிட்டாராம்"

"எப்படியோ நாம வந்த வேலை சுலபமா முடிஞ்சது. இனி நாம என்ன செய்யணும்னு யோசிக்கணும்" என்றாள் பூஜா.

இப்போது அருணின் செல்ஃபோன் ஒலிக்க அதில் தெரியாத நம்பர் இருந்தது. சற்றே தயங்கி விட்டு எடுத்துப் பேசினான். சிக்னல் சரியாக கிடைக்காததால் சற்றே தள்ளிப் போய்ப் பேசி விட்டு வந்தான். அவனது முகம் குழப்பத்தைக் காட்டியது.

"என்ன அருண்? யாரு ஃபோன்ல?"

"சேட் தான் பேசினாரு."

"என்ன வேணுமாம் அவருக்கு?"

"இன்னைக்கு மதியம் அவரு மலைக்கு வராராம். சாயங்காலம் நம்மை வரச் சொல்றாரு"

"எதுக்காம்?"

"ரிசார்ட்டு கட்டுறதைப் பத்தி தான் பேசணும்னு சொன்னான். "

"என்ன பேசணுமாம்?"

"காட்டுக்குள்ள அந்த இடத்துல கட்டுறதுக்கு தான் நாம அப்ஜெக்ஷன் பண்றோமா? இல்லை பாவநாசத்துல கட்டுனாலும் நாம அப்ஜெக்ஷன் பண்ணுவோமான்னு கேக்குறாரு. அது தவிர சில விஷயங்களில் நம்ம ஒத்துழைப்பு அவருக்குத் தேவைப்படுதாம். அதைப் பத்தியும் பேசணும்னாரு." என்றான் அருண்.

"என்ன இது? இன்னைக்குக் காலையில உலகமே தலை கீழா மாறிட்டா மாதிரி தெரியுது. " என்றான் மருதன்.

சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் பூஜா. அவளை செல்லமாக மண்டையில் குட்டினான் அரவிந்தன்.

"ஏ லூசு! என்ன யோசிக்குற?"

"அரவிந்தன்! எனக்கு லேசா சந்தேகம் வருது" என்றாள்.

"எனக்கும் அதே தான்! ஒரு வாரம் முன்னால நம்மைக் கொலை செய்ய முயற்சி செஞ்சவன் இன்னைக்கு நம்மை பேச்சு வார்த்தைக்கு ஏன் கூப்பிட்டான்? குமுதா சொன்னபடி நம்மை லாக்கப்ல வெச்சுக் கூட தீர்த்துக்கட்ட அவன் முயற்சி செஞ்சிருப்பான். அப்ப்டி இருக்க அவன் கூப்பிட்டதை நம்பிப் போகலாமா?" என்றான் அருண்.

"போ அருண்! நீ எல்லாத்தையும் சந்தேகத்தோடவே பார்க்குற. அப்ப இருந்த சூழ்நிலையில அவன் அப்படி நடந்துக்கிட்டான். அவன் மனசு மாறாட்டா இப்படி பகிங்கிரமா பேப்பர்ல அறிக்கை விடுவானா?" என்றான் அரவிந்தன்.

மருதனின் முகம் குழப்பத்தைக் காட்டியது. அவனது எளிய மனதுக்கு நடப்பதைப் புரிந்து கொள்வது சற்றே கடினமாக இருந்தாலும் புரிந்து கொண்டு சிந்தித்தான்.

"அருண்! நம்மை மீகாமர்களா தெர்ந்தெடுத்து பூப்பரீட்சையிலும் நம்மைக் காப்பாத்தினாங்க மின்னலும் மகிழியும் இல்லையா?'

"ஆமா அதுக்கென்ன?"

"நீங்க சொல்றபடி பார்த்தா இப்ப நமக்கு வேலையே இல்லையே? சேட்டு மனசு மாறி ஓட்டல் கட்டப்போறதில்லேன்னு சொல்லிட்டாரு. போலீஸ்ல நம்ம மேல எந்தக் கேசும் இல்லைன்னு வக்கீலம்மாவே சொல்லிட்டாங்க."

"ஆமா மருதா! இதெல்லாமே மின்னல் மகிழியோட அற்புதம்னு நீ தானே சொன்ன?"

"ஆமா சொன்னேன் தான். ஆனா இப்ப யோசிச்சுப் பார்த்தா வேற மதிரி தோணுதே தாயீ"

"என்ன தோணுது?"

"இப்படி சேட்டு மனசை மாத்திட முடியும்னா மின்னல் நம்மை ஏன் மீகாமர்களா தெர்ந்தெடுத்தா? எதுக்குப் பூபரீட்சை கொடுக்க வெச்சா? எங்கியோ இடறுது" என்றான்.

அவன் சொல்வதில் அர்த்தம் இருப்பதாகப் பட்டது மற்ற மூவருக்கும். அவரவர் சிந்தனையில் தேங்கி நின்றனர். காலை உணவு தாயார் என கிளிக்குட்டி அம்மாள் அழைத்தாள். இந்த விவரங்கள் எதையும் இப்போதைக்கு காணிகளிடம் சொல்ல வேன்டாம் என முடிவெடுத்துக்கொண்டு உணவு உண்ணச் சென்றனர். பிறகு முன்னால் தீர்மானித்தபடியே குருதி ஓடைக்கரைக்குச் சென்றனர்.

"அருண்! நீங்க சொல்றதைப் பார்க்கும் போது எனக்கும் கூட சந்தேகம் வருது. நாம இப்படிக் குழம்புறதை விட எனக்கு ஒரு நல்ல யோசனை தோணுது சொல்லவா?"

"சொல்லு அரவிந்தா"

"நாம ஏன் குமுதா கிட்ட ஆலோசனை கேட்க க் கூடாது? அவ எந்தப் பிரச்சனையையும் நிதானமா அணுகக் கூடியவ. அந்த முதிர்ச்சி அவ கிட்ட உண்டு"

"இப்பவே ஃபோன் போட்டுக் கேளு. முக்கியமா அந்த சேட்டு நம்மை பேச்சு வார்த்தைக் கூப்பிட்டிருக்கானே? நாம அதுக்குப் போகலாமான்னு கேளு" என்றான் அருண். நம்பரை டயல் செய்து ஸ்பீக்கரில் போட்டான்.

"குமுதா! நாங்க இப்ப ஒரு குழப்பத்துல இருக்கோம். கொஞ்சம் ஹெல்ப் பண்றியா?"

"சொல்லுங்க அரவிந்த்"

சுருக்கமாக தங்களது பிரச்சயைச் சொன்னான்.

"அவனைப் போய்ப் பார்க்குறதுல எந்தத் தப்பும் இருக்கா மாதிரி எனக்குத் தெரியல்ல. ஆனா எதுக்கு போலீஸ்ல இன்ஃபார்ம் பண்ணிட்டுப் போங்க. நானும் என் பங்குக்குக்கு போலீசோட பேசிப்பார்க்குறேன்" என்றாள்.

"குமுதா சொன்னதைக் கேட்டீங்க இல்ல? பேச்சு வார்த்தைக்கு போகலாம்னு சொல்றா"

"அப்ப இப்பவே சேட்டு கிட்ட எத்தனை மணிக்கு எங்கே வரணும்னு கேட்டுக்கோ அருண்" என்றான் மருதன். அதன் படியே ஃபோன் செய்து பேசினான்.

"இன்னைக்கு சாயங்காலம் 6 மணிக்கு பயணியர் மாளிகைக்கு வரச் சொல்லியிருக்கான். " என்றான்.

"ஏன் பகல்ல கூப்பிடாம சாயங்காலம் கூப்பிடுறான்? ஆமா நீ ஏன் என்னவோ போல இருக்க?" என்றாள் பூஜா.

"இல்லை பூஜா! சேட்டு எங்கிட்டப் பேசிக்கிட்டு இருக்கும் போது பின்னாடி சில குரல்கள் ஒலிச்சது. அதை கொஞ்சம் கவனமாக் கேட்டப்ப ஏதோ பூஜை மணி மரம் சொரிமுத்தையான்ர் கோயில்னு சில வார்த்தைகள் சம்பந்தமில்லாம காதுல விழுந்தது. அதான் என்னன்னு யோசிக்கறேன்" என்றான் அருண். அவன் முகம் தீவிரமாக இருந்தது.

"அது ஒண்ணுமில்ல நம்ம தெய்வங்களோட சக்தியைக் கேள்விப்பட்டு அந்த சேட்டும் பூஜை செய்ய வரான் போல இருக்கு" என்றான் மருதன்.

"அப்படித்தான் இருக்கணும் அருண். நம்ம சாமிகளை ஐஸ் வெக்க வரான் போல இருக்கு" என்று சொல்லி சிரித்தாள் பூஜா.

"இருக்கும் இருக்கும். எப்படியோ இன்னைக்கு சாயங்காலம் என்னென்னு தெரிஞ்சிடும்." என்று சொல்லி சிரித்தனர்.

அதே நேரம் சேட் திருநெல்வேலியிலிருந்து கிளம்பினான். அவனுடன் சிவாவும் கணேசனும் இருந்தனர். காணிகள் மூவரும் பயத்தோடு பின் சீட்டில் அமர்ந்திருந்தனர். கணேசனுக்குப் பக்கத்தில் குளிர் சாதனப் பெட்டியில் ரத்தத்தை உறையாமல் செய்யும் மருந்து பயணித்துக் கொண்டிருந்தது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஸ்ரீஜா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Last edited:

Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ
????
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,568
Reaction score
7,787
Location
Coimbatore
திட்டங்கள் மாறுமா
சேட் நினைப்பது போல் நடக்குமா
மின்னல் மகிழி தாய் தான் துணை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top