• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayak Kottai - Minnal : Aththiyaayam 14.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 14.

புத்தகம் அதோடு நின்று போயிருந்தது. படித்து முடித்த மூவர் முகங்களிலும் பயம் ஆச்சரியம் என எல்லாம் கலவையாக இருந்தது. மின்னல் மீதும் மகிழி மீதும் பெரிய மரியாதை தோன்றியது அவர்களுக்கு. நிச்சயம் மின்னல் தங்களுக்குத் தீங்கு இழைக்க மாட்டாள் என நம்பினார்கள். இறந்து போன ஒரு உயிர் இந்தக் காட்டின் மேல் பற்றுதல் வைத்து இன்னமும் காவல் காத்துக்கொண்டிருக்கிறதா? மின்னலும் மகிழியும் இறந்தும் கூட நட்பைத் தொடர்கிறார்களா? என்ன ஒரு பாசப் பிணைப்பு இருவருக்குள்ளும் என எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனாலும் பதில் தெரியாத பல கேள்விகள் அவர்கள் மனதைக் குடைந்தன.

"அருண்! நம்மை இங்க கூட்டிக்கிட்டு வந்தாளே அவ தான் மகிழின்னு நினைக்கறேன். தன் பேரை மகிழின்னு தானே சொன்னா அந்தப் பொண்ணு?" என்றாள் பூஜா.

அவளது பேச்சு மற்ற இருவரையும் நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தது. அருண் எழுந்து நின்றான். ஹாலில் இருந்த ஜன்னலில்ன் வெளிய இப்போது மெல்லிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. விடிந்து விட்டதா? அத்தனை நேரமா ஆகிவிட்டது? ஆனால் ஹாலில் ஏற்றி வைத்த மெழுகு வர்த்திகள் இன்னமும் எரிந்து கொண்டிருக்கின்றனவே? என்று ஆச்சரியத்தியோடு பார்த்தான். மனதில் பல கேல்விகள் எழுந்தன. அரவிந்தனும் எழுந்து வந்தான்.

"அடேயப்பா விடிஞ்சிடிச்சா?" என்றான் இப்போது அவன் முகம் தெளிவாக இருந்தது.

"நாம கிளம்புவோமா?" என்றான் அரவிந்தன். பயமில்லை என்றாலும் அவனுக்கு இந்த இடத்தை விட்டுப் போனால் போதும் போல இருந்தது. புத்தகத்தில் காணப்படும் இறந்து போன மகிழியை நேரில் காண நேர்ந்தது அவனுக்கு இன்னமும் அதிர்ச்சி தான்.

"கொஞ்சம் வெயிட் பண்ணு அரவிந்தா. இன்னமும் நமக்கு பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவே இல்லையே?"

"ஆமா! நீ சொல்றது தான் கரெக்ட். முதல் கேள்வி மகிழி பத்தியும் மின்னல் பத்தியும் யாரு இத்தனை விரிவா எழுதி வெச்சிருக்காங்க? இந்த பங்களாவுல குடியிருந்த வெள்ளைக்கார துரை யாரு? அவரு என்ன ஆனாரு? அவருக்கும் மின்னலுக்கும் என்ன சம்பந்தம்? அப்புறம் அந்த மூணாவது ரூமுல பார்த்தோமே எலும்புங்க அது யாரோடது? அவங்களைக் கொன்னது மின்னல் தான்னா ஏன் கொன்னா? இப்படி நிறையக் கேள்வி இருக்கே அரவிந்தன்" என்றாள் பூஜா.

அவர்களை வினோதமாகப் பார்த்தான் அரவிந்தன்.

"உங்க ரெண்டு பேருக்கும் நட்டு கழண்டு போச்சா? நாம ஒரு ராத்திரி இந்த மாயக்கோட்டையில மின்னல் கூட தங்கிட்டு உயிரோட வந்ததையே என்னால நம்ப முடியல்ல. ஏதோ கடவுள் அருளால நாம அந்தப் பேய் கிட்ட இருந்து தப்பினோம். இன்னமும் அவளைப் பத்தி என்ன ஆராய்ச்சி? நேரா ஊருக்குப் போவோம்" என்றான். அவன் பேசியதும் மகிழி மின்னல் ஓவியம் தொங்கிய அறையில் கதவுகள் படு வேகமாக அடித்துக்கொண்டன. யாரோ கோமபாக பெருமூச்சு விடும் சத்தமும் கேட்டது. பயந்தே போனான் அரவிந்தன். பூஜா சமாளித்துக்கொண்டாள்.

"அம்மா தாயே மின்னல்! நீ தெய்வம். இந்தக் காட்டைக் காப்பாத்த வந்த தெய்வம். அதைப் புரிஞ்சிக்காம அரவிந்தன் தப்பா பேசிட்டான். மன்னிச்சுக்கோ தாயே! மகிழி நீ தான் உன் தோழி கிட்ட எடுத்து சொல்லணும். " என்று அந்த திசையைப் பார்த்து கை கூப்பி வேண்டிக்கொண்டாள். கதவின் ஆட்டம் சட்டென நின்றது. அரவிந்தனை நோக்கித் திரும்பினாள் பூஜா.

"அரவிந்தன் உங்களுக்கு பயமா இருந்தா நீங்க தாராளமாப் போயிக்கோங்க. ஆனா கொஞ்சம் நல்லா யோசிச்சுப் பாருங்க. எத்தனையோ பேரு இங்க வர முடியாம தவிச்சிருக்காங்க. அப்படியே வந்தவங்களும் உயிரோட போனதில்ல. ஆனா மின்னல் நம்மை இங்க கூட்டிக்கிட்டு வந்து அவ கதையையும் நமக்குத் தெரியப்படுத்தியிருக்கான்னா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும். அதைத் தெரிஞ்சிக்காம நானும் அருணும் இங்க இருந்து வர மாட்டோம்" என்றாள் திட்டவட்டமாக. அவள் பேசப் பேசவே மகிழம் பூவின் மணம் கம்மென வந்தது.

"ஆமா அரவிந்தா! பூஜா சொல்றது தான் சரி. நம்மை அவங்க ஏன் தெர்ந்தெடுத்தாங்க? நாம காணிங்க கூட இல்லையே? அப்புறம் முன்ன சொன்ன மாதிரி கேள்விகளுக்கு பதில் தெரியாம எப்படி வரது?" என்றான்.

சற்று நேரம் மௌனமாக இருந்தான் அரவிந்தன். அவனது முகம் பலவிதமான உணர்ச்சிகளைக் காட்டியது.

"சரி நானும் உங்க வழிக்கே வரேன். எப்படி நீங்க அந்த விஷயங்களைப் பத்தித் தெரிஞ்சுக்க போறீங்க? மின்னல் வந்து சொல்லுவாளா?" என்றான்.

"கட்டாயம் சொல்லுவா! அதுக்கு அவன் நேர்ல வரணும்னு அவசியம் இல்ல. ஏதாவது வழியில அவ நமக்கு செய்தி சொல்லுவா. நாம கொஞ்சம் காது கண்ணை சுறுசுறுப்பா வெச்சிக்கணும் அவ்வளவு தான்" என்றாள் பூஜா. முண முண என்று ஏதோ சொன்னான் அரவிந்தன். அதை லட்சியம் செய்யவில்லை இருவரும்.

இப்போது சூரிய வெளிச்சம் அந்த பங்களாவினுள் நன்றாகவே வந்தது. இன்னமும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்த ஹாலில் ஒரு ஓரத்தில் மேஜை இருந்தது. அதில் பல டிராயர்கள் இருந்தன. அவற்றில் ஏதேனும் கிடைக்கலாம் என அவற்றைத் திறந்தான் அருண். சர் ஜான் பெக்கெட் என்று பெரிதாக ஆங்கிலத்தில் எழுதிய டைரி ஒன்று இருந்தது. அதை ஆவலோடு எடுத்துத் திறந்து பார்த்தான். ஜனவரி முதல் ஜூன் வரையில் சில பக்கங்களில் ஆங்காங்கே ஏதேதோ எழுதப்பட்டிருந்தது. மற்ற பக்கங்கள் வெறுமையாக இருந்தன. அந்த டைரியைப் பத்திரப்படுத்திக்கொண்டான் அருண்.

பூஜா தன் பங்குக்கு மேஜே மேலிருந்த காகிதக்கட்டைப் பிரித்து அதில் ஏதேனும் செய்திகள் இருக்கின்றனவா என்று பார்த்தாள். அந்தக் காகிதக்கட்டில் பழைய கால ஆங்கிலச் செய்தித்தாள்கள் பொதிந்து வைக்கப்பட்டிருந்தன. வருடத்தைப் பார்த்தாள் 1857 என்று இருந்தது. ஆச்சரியத்தில் வாய் பிளந்தது அவளுக்கு. மேலோட்டமாக அந்த பக்கங்களைப் படிக்க முயன்றாள். மிகவும் பழைய கால ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. கஷ்டப்பட்டு பொருள் அறிந்து கொண்டாள்.

"அருண்! இந்த பேப்பர்ல இந்தக் காட்டுக்குள்ள நடந்த பல நிகழ்ச்சிகளைப் பத்திப் போட்டிருக்காங்க. பாரு மிஸ்டீரியஸ் ஃபாரஸ்ட் ! அப்படீன்னு தலைப்பு போட்டு ஒரு கட்டுரை வந்திருக்கு. அதே மாதிரி இன்னும் நிறையக் குறிப்பு இருக்கலாம். என்ன செய்ய இதை?" என்றாள்.

"இதுல என்ன சந்தேகம் பூஜா. இந்த பேப்பர் வரலாற்று டாக்குமெண்ட். கட்டாயமா நம்ம கேள்விக்கு பதில் இதுல இருக்கலாம். எடுத்துக்கோ"

"தொட்டாலே உதிரும் போல இருக்கே அருண்" என்றாள் எரிச்சலாக.

"எதுக்கு இத்தனை டென்ஷன். நம்ம செல்ஃபோன் காமிரால படம் எடுத்துப்போம். அப்புறமா நிதானமாப் படிப்போம்" என்றான் அரவிந்தன். அப்போது தான் அவர்களுக்கு செல்ஃபோன் என்ற ஒன்று தங்களிடம் இருப்பதே நினைவுக்கு வந்தது. மூவரும் ஒரே நெரத்தில் செல்ஃபோனை எடுத்தனர். சிக்னல் சுத்தமாக இல்லை. இருந்தாலும் காமிரா வேலை செய்யுமே என்று மூவரும் ஆளுக்கொரு பக்கமாக மள மளவென படம் பிடித்தனர்.

"இதையெல்லாம் இங்க பத்திரப்படுத்தி வெச்சது யாரா இருக்கும்? "

"உம்! அதான் எனக்கும் புரியல்ல! யாரைப் பார்த்துக் கேட்டா நம்ம கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்னு தெரியலையே?" என்றான் அருண்.

"கொஞ்சம் வெயிட் பண்ணு அருண். இரண்டாவது ரூம்ல மகிழி மின்னல் படம் இருந்தது இல்ல அதை நான் ஃபோட்டோ எடுத்துட்டு வரேன். அதை நாம காணிங்க கிட்டக் காட்டலாம் "

"என்னன்னு சொல்லுவ?"

"அவங்களுக்கு மின்னல் பத்தி ஏற்கனவே தெரியும். அந்தக் கூட்டத்துல யாராவது வயசானவங்களுக்கு மகிழி பத்தியும் மின்னலும் மகிழியும் எப்படி தெய்வமானாங்கன்னும் தெரிஞ்சிருக்கலாம் இல்ல? அவங்களைக் கேட்டா நமக்கு சில விவரங்கள் கிடைக்கும்னு நான் நினைக்கறேன்" என்றாள் பூஜா.

"சரி உன் இஷ்டம் எடுத்துக்கோ. நேரமாயாச்சு. நம்மைக் காணலைன்னு தேடுவாங்க. அதனால நாம கிளம்புவோம் என்ன?" என்றான் அருண். சரியெனத் தலையசைத்து விட்டு இரண்டாவது அறையை நோக்கிச் சென்றாள். அவளுடன் போனான் அரவிந்தன். தன் காமிராவிலும் படம் எடுத்துக்கொண்டான். இருவரும் படத்தைப் பார்த்த போது எதுவுமே விழவில்லை. ஆச்சரியமாக இருந்தது இருவருக்கும். காமிராவில் ஏதோ கோளாறு என நினைத்து மீண்டும் எடுத்தார்கள். அப்போதும் எதுவும் விழவில்லை.

"அருண்! எங்க காமிராவுல படம் வரவே மாட்டேங்குது. நீ வேணும்னா டிரை பண்னேன் என்றாள் பூஜா. அவசரமாக வந்தான் அருண்.

"ஃபோட்டோ எடுக்காதே பூஜா. அதை அவங்க விரும்பல்லன்னு நினைக்கறேன். அதான் இமேஜ் வர மாட்டேங்குது. இத்தனை நேரம் மத்த பேப்பர் எடுக்கும் போது வந்ததே? அவங்க விருப்பத்தை மீறி நாம செயல்பட வேண்டாம்" என்றான். அவன் சொல்வது தான் சரி என ஒப்புக்கொண்டனர் பூஜாவும் அரவிந்தனும். சட்டெனக் கூர்ந்து கவனித்தான் அருண். அவனுக்கு வியர்த்தது.

"என்ன அருண்? என்ன ஆச்சு? எதுக்கு டென்ஷனாற?" என்றாள் பூஜா.

"பூஜா இங்க பாரு! இந்தப் படத்தைப் பார்த்தியா?" கத்தலாக ஒலித்தது அருணின் குரல்.

"என்ன என்ன? எனக்கு ரெண்டு பொண்ணுங்க தெரியறாங்க அவ்வளவு தானே?" என்றான் அரவிந்தன். அவன் குரலில் கலவரம்.

"மகிழியோட தலை முடியில நல்லாப் பாருங்க பீளீஸ்" என்றான். கூர்ந்து பார்த்தாள் பூஜா. அவளுக்குத் தூக்கி வரிப்போட்டது. ஆனால் இன்னமும் அரவிந்தனுக்கு எதுவும் தெரியவில்லை.

"என்ன? ஏதோ கிளிப் மாதிரி இருக்கு அதானே?" என்றான்.

"நல்லாப் பருங்க அரவிந்தன். அது ஏதோ சாதாரண கிளிப் இல்ல. மகிழிக்கு நான் கொடுத்த கிளிப். அது எப்படி இந்த படத்துல வந்தது? நேத்து பார்த்தப்ப இருந்ததா? நான் கவனிக்கவே இல்லையே?" என்றாள் பூஜா. அவள் குரலில் பயம் ஆச்சரியம் மகிழ்ச்சி என எல்லாம் இருந்தன.

"நானும் கவனிக்கல்ல பூஜா! எப்படியோ நீ குடுத்ததை மகிழி ஏத்துக்கிட்டா. அது தெரியுது. ஆனா நம்மை ஏன் தெர்ந்தெடுத்தாங்க? அதுக்கான காரணம் தான் தெரியல்லை? யாரைக் கேட்டா தெரியும்? அதை இவங்க சொன்னா எவ்வளவு நல்லா இருக்கும்" என்றான்.

அவன் கேட்டதற்கு பதிலே போல ஒரு கிளியின் படம் அந்த ஓவியத்தில் தோன்றியது. வியந்து போய் அப்படியே நின்றனர் மூவரும்.

"என்ன இது? கிளியோட படம்? அதுவும் சின்னக்கிளி. எனக்கு ஒண்ணும் புரியலியே?" என்றான் அருண்.

அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டாள் பூஜா. அவளுக்கு ஏதேதோ யோசனைகள் தோன்றின. யார் யாரை சந்தித்தோம் என வரிசைப்படுத்தி நினைத்தாள். சட்டென மூளையில் அது உதயமானது.

"அருண்! நாம இங்க வரும் போது ஒரு வயசான பாட்டியைப் பார்த்தோம் நினைவு இருக்கா? அவங்க கூட நம்மை இங்க போகுறதுக்கு தடை சொல்லாமப் போய்ப் பாருங்கன்னு சொன்னாங்களே?" என்றாள்.

கைகளைச் சொடுக்கிக் கொண்டான் அருண்.

"ஆங்க! நினைவு இருக்கு அவங்க பேர் கூட ரொம்ப வித்தியாசமா இருக்குமே?" என்றான்.

"கிளிக்குட்டி! எனக்கு நல்லா நினைவு இருக்கு. நாம அவங்களைப் போய்ப்பார்க்கணும்னு நினைக்கறேன்" என்றாள் பூஜா.

"நீ சொல்றது சரியா இருக்கும்னு தான் தோணுது. அப்ப கிளம்புவோம். முதல்ல அந்த கிளிக்குட்டிப் பாட்டியைப் பார்க்கணும். அப்புறம் தான் எல்லாம்."

"நாம எடுக்க வேன்டியது எல்லாம் எடுத்தாச்சா? கிளம்புவோம்" என்று தன் பையிலிருந்த டைரியையும் செல்ஃபோனையும் பத்திரப்படுத்திக்கொண்டான் அருண்.. வாசற்கதவை நோக்கி நடக்க நடக்க அது தானாகவே திறந்தது. வெளியில் வந்தார்கள். சூரிய வெளிச்சத்தில் அந்த இடமே அழகாக இருப்பதாகத் தோன்றியது அவர்களுக்கு. இரவு பார்த்த போது பயத்தைக் கொடுத்த அந்த இடம் இப்போது ஆச்சரியத்தைக் கொடுத்தது. பல விதமான மலர்கள் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்தன. அந்த இடமே வண்ண மயமாகக் காட்சியளித்தது. அதனை ரசித்துக்கொண்டே நடந்தனர். அப்போது மகிழ மரத்திலிருந்து சில பூக்கள் உதிர்ந்தன. அவற்றை எடுத்து பத்திரப்படுத்தியவாறே நடந்தனர் மூவரும்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
ஸ்ரீஜா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top