• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayak Kottai - Minnal : Aththiyaayam 15.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 15.

காட்டை நோக்கி நடந்தனர் மூவரும். காணிக்குடியிருப்புக்குச் செல்வதற்கு வழி தெரியாது ஆனால் எப்படியாவது சென்று சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. மகிழியும் மின்னலும் தங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை மூவருக்கும். மாலை மயங்கிய நேரத்தில் அவர்கள் வந்த பாதை. ஆனால் இப்போது வெளிச்சத்தில் நன்றாகப் பார்க்க முடிந்தது. மழை பெய்து நின்றிருந்ததால் மரங்கள் செடிகள் இவற்றில் இருந்த இலைகளும் பூக்களும் கழுவி விட்டாற் போல பளிச்கென இருந்தன. காற்றினால் சில மலர்கள் உதிர்ந்து கிடந்தன. அவற்றிலிருந்து வந்த வாசம் மயக்கியது.

"ஏன் அரவிந்தா உங்க தாத்தா இந்த இடத்துக்குப் பக்கத்துல வந்ததா சொன்னியே? அப்ப அவருக்கு மயக்கம் வந்ததாகவும் சொன்ன இல்லியா? ஆனா இங்க கஞ்சா செடிகளே இல்லையே?"

"அவர் கஞ்சாச் செடிப்புகையால மயங்கியிருக்க மாட்டாரு அரவிந்தன். எனன்னென்னவோ அது மகிழி இல்ல மின்னலோட வேலையாத்தான் இருக்கணும்னு தோணுது. அவரு நல்லவரா இருந்ததால உயிருக்கு எந்த ஆபத்தும் வராம வெறுமே மயக்கம் வர வெச்சிருக்காங்க" என்றாள் பூஜா.

"நேத்து நடந்ததை எல்லாம் வெச்சுப் பார்க்கும் போது நீ சொல்றது சரியா இருக்கும்னு தான் தோணுது. ஆனா ஏன் இதைப் பத்திக் காணிக பேறதில்ல?"

"அதான் எனக்கும் புரியல்ல! எல்லாத்தையும் அந்த கிளிக்குட்டி அம்மா கிட்டக் கேப்போம். ஆனா தலைவரை விட்டுட்டு ஏன் கிளிக்குட்டி கிட்ட நாம பேசணும்? எனக்கு ஒண்ணும் புரியல்ல."

"இப்ப பகல் வெளிச்சத்துல நடக்கும் போது நடந்தது எல்லாமே ஒரு கனவோன்னு கூடத் தோணுது" என்றான் அரவிந்தன்.

"நிச்சயம் கனவில்ல அரவிந்தன். நம்ம கையில டைரியும் ஃபோட்டோசும் இருக்கு. அதை மறந்துடாதீங்க" என்றாள். பேசிக்கோண்டே வந்த போது அந்த குருதி ஓடை குறுக்கிட்டது.

"என்ன இது? நாம மிகச் சரியா குருதி ஓடை கிட்ட வந்துட்டோம். இனிமே நமக்கே நல்லா வழி தெரியுமே? எல்லாமே இங்க மாயமா இருக்கு" என்றான் அரவிந்தன்.

"அதனால தான் அந்த பங்களாவுக்கு மாயக்கோட்டைன்னு பேரு வெச்சிருக்காங்க போல இருக்கு. பாரு இப்பவும் தண்ணி சிவப்பா ஓடுது" என்று காட்டினாள் பூஜா. சற்று நேரத்துக்கு முன்னால் தெள்ளிய நீரோடையாக இருந்த அது அவர்கள் பார்க்கப் பார்க்கவே சிவப்பு நிறத்தைப் பெற்றது. இப்போது மனதில் அச்சம் இல்லாமல் அதனைப் பார்த்தனர்.

"அந்த புத்தகத்துல கூட இதைப் பத்தி குறிப்பு வந்ததே நினைவு இருக்கா உனக்கு?" என்றாள் பூஜா.

"ஓ! நல்லா நினைவு இருக்கு பூஜா! ஏதோ ஒரு வகை நீர்த்தாவரம் இந்த ஓடையில இருக்குறதால இந்த நிறம் வருதுன்னு போட்டிருந்தது"

"அப்படீன்னா எப்பவுமே தானே சிவப்பா இருக்கணும்? இல்லையே? இதோ இன்னும் கொஞ்ச ஏரத்துல சாதாரண தண்ணிஉயா ஆயிடும் பாரு" என்றாள். அவள் சொன்னது போலவே சற்று நேரத்திற்கெல்லாம் தெள்ளிய நீர் கற்கண்டாக ஓடியது.

"நீ என்ன நினைக்குற அரவிந்தா?" என்றான் அருண்.

"நான் பாட்டனி படிச்சவன். அதனால என்னால ஓரளவு விளக்க முடியும்."

"உம் சொல்லு!"

"ரெட் ஆல்கேன்னு ஒண்ணு இருக்கு. அது தண்ணியில தான் வளரும். அதுவும் எந்த விதமான மாசும் இல்லாத இடத்துல தான் வளரும். நிறைய ரெட் ஆல்கே இருந்தா தண்ணியே சிவப்பாத் தெரியும்"

"எல்லாம் சரி! ஆனா ஏன் குறிப்பிட்ட நேரம் மட்டும் சிவப்பா ஒடுது?"

"அதான் எனக்கும் தெரியல்ல! யாராவது பாட்டனியில ஆராய்ச்சி செஞ்சவங்களைக் கேக்கணும்" என்றான் அரவிந்தன்.

"எனக்கு ஒரே விளக்கம் தான் தோணுது."

"என்ன அது?"

"மின்னலும் மகிழியும் இன்னமும் இந்த வனத்துக்குக் காவலா இருக்காங்கன்னு காமிக்குற அறிகுறி தான் இது. அப்படித்தானே அந்த புத்தகத்துல போட்டிருந்தது?" என்றாள் பூஜா.

"இருக்கலாம்! ஆனா அவங்க தெய்வமாறதுக்கு முந்தியே தண்ணி ஒரு குறிப்பிட்ட நேரத்துல சிவப்பா ஓடிச்சுன்னும் கூடத்தானே இருந்தது? அதுக்கு என்ன சொல்ற?" என்றான் அரவிந்தன். காட்டை விட்டு நடக்க நடக்க அவனுக்கு தைரியம் அதிகமானது.

"உம் யோசிக்க வேண்டிய விஷயம் தான். இப்ப முதல்ல நாம ஏதாவது சாப்பிட்டுட்டு அப்புறமா போவோம். பசி வயத்தைக் கிள்ளுது" என்றான் அருண்.

"இந்தக் காட்டுல உனக்கு பிரியாணி விருந்தா கிடைக்கும்? "

"ஏதாவது பழங்கள் கிடைக்கலாம். அது போதும் இப்போதைக்கு" என்றான் அருண். அவர்கள் பேசிக்கொண்டே ஓடையைக் கடக்க முற்பட்டார்கள். தண்ணீர் கால்களை அழகாகத் தழுவியது. அந்த நீரோட்டம் அவர்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது. யாரோ பாடும் சத்தம் கேட்க மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஆனால் இம்முறை பாடியது ஆண்குரல். அதுவும் இன்றைய சினிமாப்பாட்டு. சிரித்து விட்டாள் பூஜா.

"நிச்சயம் இது யாரோ காணிங்க தான். நாம அவங்களைக் கூப்பிட்டுக்கிட்டுப் போயிரலாம்" என்று சொல்லி விட்டு அருண் குரல் வந்த திசையைஅ நோக்கி நடந்தான். அவனைத் தொடர்ந்தார்கள் மற்ற இருவரும். காட்டுக்கிழங்குகளை தோண்டி எடுத்துக்கொண்டிருந்தான் ஒருவன். லுங்கியும் நீல நிற கை வைத்த பனியனும் அணிந்திருந்தான். இவர்களைப் பார்த்ததும் பாட்டு அவன் வாயில் அப்படியே நின்றது.

"யாரு நீங்க? மாயக்கோட்டை இருக்குற திசையில இருந்து வரீங்க? " என்றான் பயத்தில்.

"இல்ல! நாங்க மாயக்கோட்டையில இருந்து வரல்ல! நேத்து சாயங்காலம் இங்க வந்தோம். வழி தவறிட்டது. அதோ தெரியுதே அந்த மரத்தடியுல தங்கிட்டு இப்பத்தான் வரோம். எங்களை காணிக்குடியிருப்புக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களா?" என்றான் அருண். அவன் பார்வையில் சந்தேகம்.

"ராத்திரி பூரா மழை பெஞ்சதே? ஆனா நீங்க நனைஞ்சா மாதிரியே தெரியலியே?"

"பெரிய பெரிய இலைகளை எங்க தலைக்கு மேல பிடிச்சுக்கிட்டோம்" என்றான் அரவிந்தன். அவர்கள் சொன்னதை அந்த மனிதன் நம்பவில்லை. இருந்தாலும் சிரித்தான்.

"சரி நீங்க எங்க இருந்து வேணா வாங்க! நிச்சயம் மாயக்கோட்டை நீங்க போயிருக்க முடியாது. ஏன்னா நீங்க இன்னமும் உயிரோட இருக்கீங்களே? நீங்க சந்தன மரம் எடுக்க வந்தீங்களோ இல்லை எதுக்கு வந்தீங்களோ. எனக்கு அது தேவையில்ல"

"ரொம்ப நல்லது. அப்ப எங்களை கூட்டிக்கிட்டுப் போறியா?"

"கூட்டிட்டுப் போறதைப் பத்தி ஒண்ணும் இல்ல. ஆனா இன்னைக்கு முழுக்க கிழங்கு எடுத்து அம்பாசமுத்திரம் சந்தையில வித்தா எனக்கு 200 ரூவா கிடைக்கும். அதை நீங்க தருவீங்களா? அப்படீன்னா நான் இப்பவே வரேன்" என்றான்.

மூவருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

"ஏம்ப்பா நீ காணி தானே?"

"ஆமா! அதுல என்ன சந்தேகம்?" என்றான்

"இல்ல! நீ டிரெஸ் போட்டிருக்குறதும் எங்களை மாதிரி போட்டிருக்கே! அதோட காசு வேற கேக்குறியே அதான் எங்களுக்கு சந்தேகம் வந்தது" என்றான் அரவிந்தன்.

அவன் கையிலிருந்த மண் வெட்டியைக் கீழே போட்டு விட்டு அவர்களை ஏறிட்டான். அவன் கண்களில் கோபம் இருந்தது.

"ஏன் நீங்க மட்டும் தான் நல்லா உடுத்தணும் நல்லா சாப்பிடணுமோ? எங்களுக்கு மனசு இல்லியா? அதுல ஆசை இருக்கக் கூடாதா?"

"ஐயையோ நாங்க தப்பா சொல்லல்லங்க! காணிங்கள்ல சில பேரு காசு வாங்குறதை பாவம்னு நினைக்கறாங்களே அதான் கேட்டேன். சாரி. உங்க பேரு என்ன?"

"கந்தன். நான் அவங்களைப் போல இல்ல! எனக்கு இந்த மலை பிடிக்கல்ல. எங்கியாவது போய் வாழலாம்னா வழியும் தெரியல்ல! சரி சரி அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? என் பின்னால வாங்க காணிக்குடியிருப்புக் கூட்டிக்கிட்டுப் போறேன்" என்றான். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அவனைத் தொடர்ந்தனர்.

எதுவும் பேசாமல் நடந்தான் கந்தன். இம்முறையும் சற்றே பயமாகத்தான் இருந்தது மூவருக்கும். காரணம் இப்படிச் சொல்லித்தானே மகிழியும் அவர்களை அழைத்துப் போனாள். ஆனால் கொஞ்ச தூரம் சென்றதும் அரவிந்தன் அடையாளம் வைத்த மரங்கள் தட்டுப்பட ஆரம்பித்தன. பெருமூச்சு விட்டார்கள். அரை மணி நேர நடையில் காணிக்குடியிருப்பு வந்து விட்டது. இவர்களைப் பார்த்ததும் பதறியோடி வந்தார்கள் ஆறுமுகக்காணியும் பிலாத்தியும்.

"என்ன ஆச்சு? நீங்க ஏதோ காணாமப் போயிட்டதாகவும் மாயக்கோட்டை மின்னல் உங்களை அடிச்சிட்டதாகவும் ஒரே புரளியா இருக்கே? நீங்க என்ன போனீங்க?" என்றார் ஆறுமுகக் காணி.

கந்தனிடம் சொன்னதையே திருப்பிக் கூறினர். பூஜாவின் கண்கள் கிளிக்குட்டியையே தேடின. அவளை அந்தக் கூட்டத்தில் காணவில்லை.

"ஐயா! இங்க வயசான அம்மா ஒருத்தங்க இருப்பாங்களே? பேரு கூட கிளிக்குட்டி..." என்று இழுத்தாள்.

"ஓ! அவங்களா அவங்க மயிலோடைக்குப் போயிருக்காங்க! கொஞ்ச நாளாவே அவங்க சரியில்ல! மின்னல் வந்துட்டா மின்னல் வந்துட்டான்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதோட மீகாமர்கள் வந்தாச்சுன்னு வேற சொன்னா" என்றார்.

அவர் பேசியதிலிருந்து கிளிக்குட்டி வேறு எங்கோ இருக்கிறார் என்பது புரிந்ததே தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

"ஐயா நாங்க அவங்களைப் பார்க்கணும். மயிலோடைக்கு எப்படிப்போகணும்?" என்றான் அருண்.

"உம் !கிளிக்குட்டி சொன்னது சரி தான். என்னைத் தேடிக்கிட்டு சிலபேரு வருவாங்க. அவங்களை தடுக்காதீங்கன்னு சொன்னா. நீங்க தானா அது? ஒரு வேளை நீங்க தான் மீகாமர்களோ?" என்றார்.

"என்ன சொல்றீங்க பிலாத்தி? நேத்து நடந்த பூஜையில தெரிஞ்ச உருவம் இவங்களதா?" என்றார் ஆறுமுகக் காணி.

தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நின்றிருந்தனர் மூவரும். மூட்டுக்காணியான ஆறுமுகக் காணியும் பிலாத்தியும் சற்று தள்ளிப் போய் பேசி விட்டு வந்தனர். இவர்களை நோக்கி வரும் போது கண்களில் மரியாதை தெரிந்தது.

"ஐயா! நீங்க மயிலோடைக்குப் போங்க! கிளிக்குட்டி எல்லாம் விவரமா சொல்லுவா! ஆனா குளிச்சுட்டு சுத்த பத்தமா போங்க! பக்கத்துல தான் காட்டோடை இருக்கு. அங்க போயி குளிங்க. உங்களுக்கு வள்ளிக்கிழங்கும் சுக்கு தண்ணியும் தரச் சொல்றேன். சாப்பிட்டுட்டு கிளம்புங்க" என்றார். அவர்கள் ஏதோ கேட்க முயன்ற போது கைகளைக் காட்டி அடக்கி விட்டார். எல்லாத்தையும் விளக்கமா கிளிக்குட்டி சொல்லுவா என்று சொல்லி விட்டு மயிலோடை இருந்த திசையைக் காட்டினார். அங்கிருந்து மெல்லிய நீல நிறத்தியல் புகை வந்து கொண்டிருந்தது, அதை திகைப்போடு பார்த்தார்கள் மூவரும்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
எனக்கும் இதே சந்தேகம்தான்,
ஸ்ரீஜா டியர்
மீகாமர்கள்=ன்னா, யாருப்பா?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கந்தன். நல்லவன்
இல்லையா, ஸ்ரீஜா டியர்?
ஆனாலும், அருண், பூஜா
and அரவிந்தன் இவங்க
மூணு போரையும், கந்தன்தானே
காணிகளோட குடியிருப்புக்குள்
கூட்டிக்கிட்டு வந்திருக்கான்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அந்த வெள்ளைக்கார டாக்ஸ்
பழக்கி வைச்சதனாலே
காசு-ங்கிற சாத்தான் பக்கம்
கந்தனின் மனம் திரும்பிவிட்டது
இதில் அவனோட தவறு
எதுவும் இல்லை, ஸ்ரீஜா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அருண், பூஜா and அரவிந்தன்
இவங்க மூணு பேரும்
தன்னைத் தேடி வருவாங்க-ன்னு
கிளிக்குட்டி அம்மாவுக்கு
எப்படித் தெரியும், ஸ்ரீஜா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top