• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Meendum uyirthezhu - 34

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Janani26

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
49
Reaction score
55
ஆனால் இப்படியே எத்தனை நேரம் அறைக்குள் அடைந்திருப்பது என யோசித்தவள் அது என்ன இடமாக இருக்க முடியும் என யூகிக்க தொடங்கினாள். கோயமுத்தூரிலிருந்து கிளம்பியதை எண்ணியவள் கண்ணாடி சாளரத்தின் வழியே தெரிந்த ரம்மியமான சூழலும் அவளை சிலிர்ப்பூட்டும் அந்த குளிரும் இது நிச்சயம் ஊட்டியாகவே இருக்கும் என உறுதி கொண்டாள். ஏனெனில் ரா குரூப் ஆஃப் கம்பெனிஸற்கு இங்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருப்பதை அவள் மூளை நினைவுக்கூர இங்கே தன்னை ஏன் அவன் அழைத்து வந்தான் என சிந்திக்க நிச்சயம் வேலை நிமித்தமாக இருக்கும் என கணித்த போதும் அது என்னவாக இருக்கும் என புத்தியை தீட்டியபடி அறைக் கதவை திறக்க அது தானாகவே திறந்து கொண்டது.

அந்த அறையிற்கு வெளியே அந்த பெரிய ஹால் அவளை பிரம்மப்பூட்ட மெல்ல சுற்றிலும் நடந்தவள் மேலே சுழன்று கொண்டு செல்லும் படிக்கெட்டுகள் தென்பட அவள் படியேற யத்தனித்த போது "சூர்யா" என்றழைப்பை ஏற்று தடைப்பட்டு நின்றாள்.

மதி பதட்டமான குரலில் அவளிடம் "மேலே யாருமில்லை" என்றான்.

சூர்யா படியேறும் எண்ணத்தை தற்காலிகமாக கைவிட்டு அவன் புறம் திரும்ப "பெயின் குறைஞ்சிருக்கா... இப்ப ஒகேதானே" என்று மதி அக்கறையாய் விசாரித்தான்.

சூர்யா கோபமான பார்வையோடு "உனக்கே நியாயமா இருக்கா மதி... அந்த ஈஷ்வர் டிரைவ் பன்றேன் பேர்வழின்னு வண்டியை ஆக்ஸிடென்ட் பண்ணி என்னை மொத்தமா காலி பண்ணிடலாம்னு பார்த்தான்... இதுல ஓகேதானான்னு கேட்கிறியா... யாருக்கு தெரியும் இதில உங்க பங்கென்னவோ?!" என்று கேட்க

மதி பதறியபடி "அய்யோ! சத்தியமா இல்ல... அது தெரியாம நடந்த விபத்துதான் ?" என்றான்.

"நிறுத்து மதி... உன் பாஸ் செய்றதெல்லாம் நியாயப்படுத்தாதே" என்று சொல்லும் போதே அவளின் கோபத்தை அவனால் உணரமுடிந்தது.

"என்ன சூர்யா நீங்க... பாஸ் உங்க மேல எவ்வளவு அக்கறையா இருக்காரு தெரியுமா ?" என்று ஈஷ்வரை விட்டு கொடுக்காமல் பேச சூர்யா புருவங்கள் முடிச்சிட

"எது அக்கறை... ஆக்ஸிடென்ட் பன்றதா" என்று கேட்க

"அதையே பேசிறீங்களே... ஆக்ஸிடென்ட் ஆனதும் பாஸ் உங்க பக்கத்திலேயே இருந்து எப்படி பார்த்துக்கிட்டாருன்னு தெரியுமா"

சூர்யா மனதிற்குள் 'பார்த்திருப்பான்... இதான் சேன்ஸ்னு நல்லா பார்த்திருப்பான்'
புலம்பியபடி இருக்க மதி மேலும்,
"நீங்க மயக்கத்தில இருந்த போது உங்களை அவரேதான் தூக்கிட்டு வந்து... "
என்று சொன்னதும் சூர்யா அதை கேட்க கூட விருப்பமில்லாமல் காதுகளை மூடிக் கொண்டாள்.


"சொல்லாதீங்க... இதுக்கு பேர் எல்லாம் அக்கறை இல்ல..." என்று அவனின் செயலை எண்ணி உள்ளுக்குள் அருவருப்பாய் உணர்ந்தாள்.

சூர்யா அப்படி ஈஷ்வரை உரிமையோடு அழைப்பதும் மறுபுறம் ஈஷ்வர் சூர்யாவிற்காக துடிப்பதும் என அவர்களுக்கு இடையில் இருக்கும் உறவை அவர்கள் சொல்லாமலே மதி உணர்ந்து கொள்ள அவன் மெல்ல
சூர்யாவிடம் "நீங்க ஏன் பாஸை புரிஞ்சிக்காம இப்படி அவரை கஷ்டப்படுத்திறீங்க சூர்யா" என்று கேட்டதும் அவள் அதிர்ந்தபடி


"நான் கஷ்டப்படுத்திறேனா... மதி திஸ் இஸ் டூ மச்... அந்த ஈஷ்வர் என்னை இப்படி எங்க ஏதுன்னு சொல்லாம கூட்டிட்டு வந்ததில்லாம... என் போஃனை வேற எடுத்து வைச்சுக்கிட்டான்... இதுல பழியெல்லாம் என் பேர்லயா... நான் வீட்டுக்கு எப்படி கான்டெக்ட் பண்ணுவேன் மதி" என்று அவள் கேட்ட போது அவன் தன் போஃனை நீட்டி

"இந்தாங்க... என் போஃன்ல இருந்து பேசுங்க" என்றான்.

அவளும் கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவானேன் என பெற்று கொள்ள அந்த நொடி 'அபியோட நம்பர் தெரியாம... எப்படி பேசிறது' என யோசித்தபடி நின்றவளிடம் மதி "அதுலயே சுந்தர் சாரோடு நம்பர் இருக்கு சூர்யா" என்றான்.

அவள் தனக்குள்ளேயே 'அப்பாவுக்கு கால் பண்ணி இந்த ஈஷ்வர் இப்படி எல்லாம் பண்றான்னு சொன்னா நிச்சயம் நம்பவே மாட்டாரு... நான்தான் பொய் சொல்றேன்னுவார்... அம்மாவுக்கும் அக்காவுக்கும் சொன்னா பயப்படுவாங்க... மேடமுக்கு கால் பண்ணா... வேண்டாம்... ஒரு தடவை கால் பண்ணதுக்கே அந்த ஏறு ஏறிட்டான்... எனக்கு ஹெல்ப் பண்ண முடியும்னா அது அபிமட்டும்தான்.. பட் அவன் நம்பரும் தெரியல... சே... இப்படி சேன்ஸ் கிடைச்சும் மிஸ் பண்ணிட்டியே சூர்யா' என்று யோசித்து கொண்டிருந்த நொடி பின்னோடு ஈஷ்வரின் குரல் "நான் வேண்டும்னா அபி நம்பர் சொல்லட்டுமா ?" என்று கேட்க சூர்யா தலையிலடித்து கொண்டாள். 'மை பேட் டைம்' என்று அவள் வாய்க்குள் முனகினாள்.

ஈஷ்வர் மதியின் புறம் திரும்பி "உனக்கு ரொம்ப ஹெல்பிங் டென்டன்ஸி இல்ல மதி... " என்று சொல்ல

"இல்ல பாஸ்... சூர்யா" என்று மதி தயங்க

ஈஷ்வர் அப்போது சூர்யாவின் முன்பு வந்து ஒரு பார்வை பார்க்க அவள் அந்த கைப்பேசியை மதியிடம் வேண்டா வெறுப்பாய் கொடுத்தாள்.

ஈஷ்வர் இப்போது மதியை நோக்கி "மதி ... ஐ நீட் அ கப் ஆஃப் காபி" என்றவன் சூர்யாவை பார்த்து "என்ன டார்லிங்... உனக்கும் வேணுமா ?" என்று கேட்டான்.

அவள் விழிகளாலயே எரித்துவிடுவது போல் பார்க்க ஈஷ்வர் மதியிடம் திரும்பி "ஆல்ரெடி மேடம் ஹாட்டாதான் இருக்காங்க... ஸோ எனக்கு மட்டும்" என்றான்.

மதி சென்றதை கவனித்துவிட்டு அங்கே நிற்க விருப்பமில்லாமல் நகரப் பார்த்தவளிடம் "ஏன்டி என் லவ்வை புரிஞ்சிக்க மாட்டிற" என்று கேட்க சூர்யாவால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

அவனிடம் "லவ்னா உங்க ஊர்ல என்ன ஈஷ்வர்... டார்ச்சர் பன்றதா" என்று கேட்க அவனோ சற்றும் புன்னகை மாறாமல் "நீ என்னை டார்ச்சர் பன்ற... நானும் உன்னை டார்ச்சர் பன்றேன்... நீ என்னை லவ் பண்ணு... நானும் உன்னை லவ் பன்றேன்" என்றான்.

சூர்யா அவனிடம் பேசுவது வீண் என அவனை பொருட்படுத்தாமல் செல்ல ஈஷ்வர் குரலை உயர்த்தி "இத பாரு சூர்யா... சவால் முடியற வரைக்கும்தான் நான் இப்படி பொறுமையா பேசிட்டிருப்பேன்.. சவாலில் நான் ஜெய்ச்சிட்டேன் கம்பிரமைஸ் எல்லாம் கிடையவே கிடையாது... எனக்கு வேண்டியதை நீயா தரனும் இல்ல நானாவே எடுத்துப்பேன்... ரைட்" என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட அவள் அதை அப்படி எதிர்கொள்வது என புரியாமல அந்த நொடியே விரைவாய் சென்று அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டாள்.

சூர்யாவிற்கு என்ன நடக்குமோ என ஒவ்வொரு நொடியும் மரணபீதியாய் இருந்தது. தீயின் மேல் நிற்பது போல ஒரு உணர்வு. அவள் நின்று கொண்டிருக்கும் இடமே முற்றிலும் வெடித்து சிதறி அகலபாதாளத்தில் அவளை இழுத்து சென்றதாய் தோன்ற அவளின் மனமோ அபிமன்யுவின் புத்திகூர்மைக்கு கொஞ்சம் கூட ஈஷ்வரும் சளைத்தவன் அல்ல என்று சொல்லி அவளை மேலும் அச்சுறுத்தியது.


அடுத்தடுத்த விறுவிறுப்பான பதிவுகள் வந்து சேர நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்வதுதான். அட்லீஸ்ட் ஒரு லைக் பட்டனை தட்டுங்கள்.
Pavam Surya?
Nice update akka
Eagerly waiting for your upcoming updates
Sema viruvirupa iruka poguthu?
 




Janani26

நாட்டாமை
Joined
Jan 17, 2018
Messages
49
Reaction score
55
Monisha// Eshwar avanoda style. A konjam arrogant approach panran, avan mela ellarukum soft corner yerpaduthuna. Ore karnamthan,

Eshwar avan valkaila surya matum than ore love, that too unique[/QUOTE].


???
 




Last edited:

Anu Dhak

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,204
Reaction score
1,198
Age
44
Location
Shollinganallur
I think Eswar's feelings towards Surya is lust more than love. A human who uses weaker section of the society for his benefit is not a good person according to me.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top