• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Meendum Uyirthezhu

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
31

சிலந்தி வலை

அர்ஜுன் வீட்டிற்கு வந்ததிலிருந்து தன் அம்மாவிடம் விடாமல் குறுக்கு விசாரணை நடத்திக் கொண்டிருந்தான். சுகந்தியும் ஏதேதோ சொல்லி தப்பிக் கொள்ளவே முயற்சி செய்ய அவன் விடுவதாக இல்லை.

மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியைதான் தன் அம்மாவிடம் கேட்டு கொண்டிருந்தான்.

"சூர்யாவுக்கும் அபிமன்யுவுக்கும்... எங்களுக்கு நிச்சயம் பன்ன அதே தேதியிலயே ப்க்ஸ் பண்ண சொன்னா... ஏன் செய்ய கூடாதுன்னு ஏதேதோ காரணம் சொல்லி மழுப்பிறீங்க ?" என்றான்.

சுகந்தி வேதனையோடு, "நான் வேண்டாம்னு சொன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு அர்ஜுன்... புரிஞ்சிக்கோ" என்று அவர் கெஞ்சலாக உரைக்க,

"என்ன காரணம்... எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும் ?" என்று அவன் பிடிவாதமாய் கேட்டான்.

சுகந்தி இப்போது சினத்தோடு "காரணம் எல்லாம் கேட்காதே... அவங்க இரண்டு பேரும் சேரக் கூடாது... அதுக்கு நான் ஒத்துக்கவும் மாட்டேன்... இதோட இந்த விஷயத்தை பத்தி பேசாதே" என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அவர் அகல பார்க்க,

அர்ஜுன் தன் குரலை உயர்த்தி, "சரி நான் பேசல... அப்படியே என் முடிவையும் கேட்டிட்டு போங்க... அபி சூர்யா கல்யாணத்தை பத்தி பேசி முடிக்காம, நான் ரம்யாவை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்" என்றான்.

"டே அர்ஜுன்" என்று சுகந்தி அதிர்ச்சியானார்.

அர்ஜுன் மேலும் "என் காதல் எனக்கு எவ்வளவு முக்கியமோ... அத விட என் தம்பியோட விருப்பம் எனக்கு ரொம்ப முக்கியம்..." என்றான்.

சுகந்தியும் சற்று கோபத்தோடு மகனை நோக்கி குரலை உயர்த்தி, "அப்போ உனக்கு உன் தம்பியோட உயிர் முக்கியமில்லயா ?!" என்று கேட்டார்.

அந்த கேள்வி அர்ஜுனை அதிர்ச்சியில் உறைய வைக்க, "என்ன சொல்றீங்கமா ?" என்றான்.

சுகந்தி தன் மனவேதனையால் பெருகிய கண்ணீரை துடைத்தபடி, "சூர்யாவை பார்த்ததுமே நான் அந்த பொண்ணைதான் அபிமன்யுவிற்கும் பேசி முடிக்கனும்னு நினைச்சேன்... ஆனா என்னை என்னடா பண்ண சொல்ற ?... விதி அவங்க இரண்டு பேரும் சேரக் கூடாதுன்னு இருக்கு" என்று சொல்லி மௌனகிட அர்ஜுன் ஒன்றும் புரியாமல் நின்றான்.

சுகந்தியே மேலும் "ரம்யாவுக்கும் உனக்கும் பொருத்தம் பார்க்கும் போதே சூர்யாவிற்கும் அபிக்கும் சேர்த்துதான் பொருத்தம் பார்த்தேன்... ஆனா துரதிஷ்டவசமா அவங்க இரண்டு பேரோட ஜாதக அமைப்புப்படி.... கல்யாணம் பண்ணாலும் சேர்ந்து
வாழவே முடியாதாம்... இதெல்லாம் மீறி இவங்க கல்யாணம் நடந்ததுன்னா அபிமன்யுவோட உயிரே போற அபாயம் வரும்னு சொல்லிட்டாங்க... அதுக்கப்புறமும் எப்படி?!" என்று கேட்டபடி அவள் கண்ணீர் வடிக்க


அர்ஜுன் நம்பிக்கையற்றவனாய் "ஜாதக ஜோசியம்னு நீங்க பாட்டுக்கு தேவையில்லாததை எல்லாம் நம்பிக்கிட்டு" என்று கோபம் கொள்ள,

சுகந்தி கண்ணீரை துடைத்தபடி "நானும் அதெல்லாம் பொய்யாய் இருந்திரனும்னுதான் நினைக்கிறேன்... ஆனா அப்படி எல்லாமே பொய்யுன்னு உதாசீனப்படுத்தவும் என்னால முடியலடா... உங்க தாத்தாவும் என்கிட்ட அபிக்கு இருபத்தைந்து வயசுக்கு மேல ஒரு கண்டம் இருக்குன்னு சொல்லி இருக்காரு... உயிர் போய் உயிர் வர அளவுக்கு ஆபத்து வருமாம்... ஒவ்வொரு நாளும் அவனுக்கு என்ன வருமோ ஏது வருமோன்னு உன் தம்பியை நினைச்சு நினைச்சு நானே மடியில நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கேன்... இதுல இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வேற,

நான் நிம்மதியில்லாம தவிக்கனுமா... வேண்டாம் அர்ஜுன்... அபிமன்யுவிற்கு சூர்யா மேல விருப்பம் இருந்தா நீதான் அவன்கிட்ட பேசி புரிய வைக்கனும்... எந்த காரணத்தை கொண்டும் அவங்க இரண்டு பேரும் சேரவே கூடாது... இதை அவங்க இரண்டு பேரோட நல்லதுக்காகதான் சொல்றேன்" என்று சொல்லிவிட்டு சுகந்தி அதற்குமேல் அங்கு நிற்காமல் விரைவாக வெளியேறினாள்.

அர்ஜுன் தன் அம்மா சொன்னதெல்லாம் எந்தளவுக்கு உண்மை இருக்கும் என யோசனையில் ஆழ்ந்தான். ஆனால் அபிமன்யு தன் மனசை நிச்சயம் இந்த காரணங்களுக்காக எல்லாம் மாற்றிக் கொள்ளவும் மாட்டான்.

சூர்யாவை எதற்காகவும் விட்டு கொடுக்கவும் மாட்டான் எனும் போது இவர்கள் இருவரின் காதல் கைக்கூட என்னென்ன இடையூறுகள் நேரிடுமோ என அச்சமுற்றான்.


அதே சமயத்தில் சூர்யாவும் இப்போது அத்தகைய இடையூறை தேடித் தானே வலிய சென்று கொண்டிருந்தாள். ஈஷ்வர் போஃனில் பேசிய விதம் எங்கேயோ அவள் மனதில் ஒருவித எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியது. இருப்பினும் அவள் நடக்கவே சாத்தியமில்லை என நம்பிக்கையற்றிருந்த அவள் பெற்றோரை இணைத்து வைத்ததினால் ஏற்பட்ட நன்றி உணர்வு அந்த எச்சரிக்கை உணர்வை அலட்சியப்படுத்தியது.

மஹாலிபரம் கெஸ்ட் ஹவுஸிற்குள் சூர்யா நுழையும் போது வானில் சூர்யன் மெல்ல மெல்ல அஸ்தமித்து கொண்டிருக்க, பூமியை காரிருள் சூழ காத்திருந்தது. அவள் எதிர்பார்த்தது போல் எந்த விழாவும் அங்கே நடைபெறப் போவதற்கான அறிகுறி இல்லாததை கவனித்தாள். பின்னே எதற்கு அவன் தன்னை புடவையில் வரவேண்டியும், அதுவும் பார்ட்டிக்கு வருவது போலவும் வரச் சொன்னான் என சிந்தித்தபடியே ஈஷ்வர் எங்கே என அந்த வீட்டினுள் நுழைந்த மாத்திரத்தில் வேலையாளிடம் வினவ அவன் மேலே தன் அறையிலிருப்பதாக பதிலளித்தான்.

சூர்யா யோசனைகுறியோடு மூடியிருந்த அந்த அறை கதவை தயக்கத்தோடு தட்ட ஈஷ்வரின் குரல் கம்பீர தொனியில் "கம்மின் சூர்யா" என்று ஒலித்தது.

அவளும் கதவை திறக்க அந்த அறையை பார்த்தபடி பிரமித்து நின்றாள். அவளின் பார்வை அதிசயத்தபடி அந்த அறையின் முழுவதும் சிறு வண்ண விளக்குகளின் தோரணங்களால் ஜொலித்து கொண்டிருப்பதை பார்த்தாள். அந்த விசலாமான அறையில் இருந்த வட்ட மேஜையில் சிவப்பு ரோஜா பூங்கொத்தும் மெழுகவர்த்திகள் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருக்க இவையெல்லாம் எதற்காக என கேள்விகளோடு அவள் பார்த்து கொண்டிருக்க, அதே சமயம் ஈஷ்வரை பற்றி சிந்தித்தவள் அவன் புறம் திரும்ப அவனோ வசீகரமான புன்னகையோடு வாசலில் நின்றிருப்பவளை "வெல்கம் சூர்யா" என்றழைத்தான்.

கொஞ்சம் தயக்கத்தோடே அவள் உள்ளே நுழைய அந்த வண்ண விளக்குகளின் பிரதிபலிப்பு சூர்யாவின் முகத்தில் வீசி இன்னும் அழகாய் அவள் முகத்தை மின்னச் செய்து கொண்டிருந்தது. அவளோ அந்த அறையின் அலங்கரிப்பை ரசித்தபடியே மூழ்கியிருக்க அவன் விழிகளோ இமைக்காமல் அவளிடமே நிலைத்திருந்தது.

சூர்யா அவன் முகத்தை கூட பாராமல்,

"ரொம்ப ஸ்பெஷல் கெஸ்ட் யாரையாச்சும் இன்வைட் பண்ணிருக்கீங்களா?" என்று கேட்டு விட்டு அவனை நோக்க அவனும் புன்னகையோடு "ம்ம்ம்" என்று தலையசைத்தான்.

ஈஷ்வருமே இயல்பிலிருந்து மாறுப்பட்டு அதீத கம்பீரத்தோடு வெள்ளை நிற ஷர்ட் அணிந்து கொண்டிருந்தபடி நின்றிருந்தான்.

அவன் இயல்பாகவே எல்லோரையும் ஒரே பார்வையாலேயே வசப்படுத்துபவன் எனினும் இன்று அவனின் தோற்றத்தின் கம்பீரமும் மிடுக்கும் நொடிப் பொழுதில் எதிரே நிற்பவரை வீழ்த்தும் வல்லமை கொண்டதாகவே இருந்தது. சூர்யாவும் அவனை கண்ட நொடி அத்தகைய காந்த சக்தியை உணர்ந்தாள் என்றே சொல்ல வேண்டும்.

அவளோ அந்த அறையின் அலங்கரிப்புக்கான காரணத்தை யூகித்தபடி "கண்டிப்பா இது அஃப்பிஷயல் மீட்டிங் கிடையாது... இல்லையா ஈஷ்வர்... ஏதோ பர்ஸனல் மீட்டிங் ரைட்" என்று கேட்க அதற்கு "ம்ம்ம்... எஸ்" என்றான்.

மீண்டும் அவள் ஆர்வ மிகுதியால் "ஓ... அதனால்தான் நீங்க என்கிட்ட சொல்லலியோ ?!... பட் யார் அந்த பர்ஸ்ன்ல் கெஸ்ட் ?" என்று கேட்டவளை பார்த்து புன்னகை புரிந்தானே ஒழிய அவன் பதிலுரைக்கவில்லை.

சூர்யா அவன் பதில் சொல்லாத போதும் விடாமல் அவனை நோக்கி "ம்ம்ம்... ரொம்ப பர்ஸனலோ... நான் கேட்டிருக்க கூடாதோ?" என்று அவளே வினவிவிட்டு மீண்டும் அவனை பதில் பேசவிடாமல் "அப்படி பர்ஸனல் மீட்டிங்கா இருந்தா என்னை ஏன் இப்ப உடனே வான்னு கூப்பிட்டீங்க... ?" என்று கேட்டாள்.

இப்படி அவள் ஓயாமல் கேள்வி கணைகளை தொடுத்தபடி இருக்க அவனோ அதனை ரசித்தாலும் கொஞ்சம் கோபம் கொண்டவன் போல் "வந்ததிலிருந்து நானும் பார்த்திட்டிருக்கன்... நீ என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டிட்டிருக்க... நீ எனக்கு பாஸா இல்ல நான் உனக்கு பாஸா ?!" என்றான்.

அவனின் கோபத்தை கண்டு மௌனமாகியும் போதும் யாராக இருக்கும் என அவள் யோசனையில் ஆழ்ந்துவிட அவனும் மெல்ல தான் நினைத்ததை சொல்ல யத்தனிக்க சூர்யா மீண்டும் அவனை நோக்கி, "சாரி...நான் இங்கே ஏன் வந்தேங்கிறதை மறந்திட்டு தேவையில்லாம பேசிட்டிருக்கேன்... " என்று உரைக்க அவள் தன்னை பேசவே விடாமாட்டங்கிறாளே என ஒருபக்கம் கோபம் எழ,

சூர்யா புன்னகை ததும்ப "தேங்க்யூ தேங்க் யூ சோ மச் ஈஷ்வர்... நான் எக்ஸ்ப்பெக்ட் பண்ணவே இல்லை... திடீர்னு அப்பா வந்து எல்லோரையும் சர்ப்பரைஸ் பண்ணிட்டார்... அக்காவும் அம்மாவும் அவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க... இந்த நாள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்... அதுக்கு நீங்கதான் காரணம் ஈஷ்வர்... ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..." என்று நெகிழ்ந்தபடி உரைக்க,

"தேங்க்ஸ் ஒகே ... ஆனா நம்ம டீலிங்" என்று கேட்டு அவளை ஈஷ்வர் கூர்மையாய் பார்க்க

"டீலிங்கா... என்ன டீலிங்?" என்றாள்.

"நான் என்ன கேட்டாலும் செய்றேன்னு சொன்னியே... மறந்திட்டியா சூர்யா"

சூர்யா கொஞ்சம் யோசித்துவிட்டு "ம்ம்ம்... ரைட்... சொன்னேன்ல... ஒகே டன்... நம்ம டீலிங்படி... நீங்க என்ன கேட்டாலும்... நான் கண்டிப்பா செய்றேன்... பட் பாஸிபிளான விஷயமா கேளுங்க" என்றாள்.

அவள் அத்தனை சந்தோஷமான மனநிலையில் இருப்பதால் இதை விட சரியான சந்தர்ப்பம் வாய்த்திராது என்று எண்ணமிட்டபடி இருக்க அந்த இடமே மௌனத்தால் சூழ்ந்து கொண்டது. சூர்யாவிற்கோ அவன் எதை கேட்க இப்படி யோசிக்கிறான் என்ற சிந்தனை தோன்றியது.

ஆனாலும் அவளை வேறொரு எண்ணமும் ஆட்கொள்ள அவள் மீண்டும் அவனை நோக்கி "ஒகே... அந்த கெஸ்ட் எப்போ வருவாங்க ?" என்று தயங்கியபடி கேட்க,

ஈஷ்வர் கோபத்தோடு "உனக்கு இப்போ அந்த கெஸ்ட்டை பார்க்கனும்... அப்படிதானே" என்றான்.

சூர்யா ஆர்வமாய் "ம்ம்ம்" என்று தலையசைக்க ஈஷ்வர் "என்னோட வா" என்று அழைக்க அவளும் யோசனையோடு சென்றாள்.

அந்த அறையின் படுக்கையின் நேரெதிராய் இருக்கும் கண்ணாடியின் முன் வந்து நிறுத்தி அவள் பிம்பத்தையே காண்பித்து "நீதான் ?" என்று உரைக்க. சூர்யா அதிர்ச்சியோடு "நானா... என்ன விளையாடிறீங்களா" என்று கேட்ட நொடி "நோ ஐம் சீரியஸ்" என்றான்.

அவனின் பதிலால்அவள் முகத்திலிருந்த துடுக்குத்தனம் மறைந்து அவள் அதிர்ந்தபடி எதுவும் பேசாமல் மௌனமாய் நிற்க ஈஷ்வர் அவள் பின்னோடு நின்றபடி "உன் கோபம் உன் திமிரு உன் அகம்பாவம்... இதெல்லாமே என்னை கோபப்படுத்தின அதே நேரத்தில... என்னை ரொம்பவும் இம்பிரஸ் பண்ணிடுச்சு... நீ கோபப்பட்ட மாதிரி யாரும் உரிமையா என்கிட்ட கோபப்பட்டதும் இல்ல... ஐ லவ்ட் யுவர் ஹேட்டிட்டியூட்... நான் உன்கிட்ட கேட்க நினைச்சது ஒரே விஷயம்தான்... ஜஸ்ட் மேரி மீ" என்றான்.

சூர்யா அதிர்ந்தபடி அவன் புறம் திரும்ப அப்போதுதான் ஈஷ்வர் தேவ்வை வேறொரு பரிமாணத்தில் பார்த்தால் என்று சொல்ல வேண்டும். அவன் பார்வை தன் மீது லயித்திருப்பதை உணர்ந்தவள் எரிச்சலோடு "அப்போ நீங்க என்கிட்ட கேட்கனும்னு நினைச்சது" என்று கேட்க "ம்ம்ம்" என்று தலையசைத்து ஆமோதித்தான்.
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இப்படி ஒரு எண்ணத்தை அவன் மனதில் வைத்து கொண்டுதான் தன்னிடம் பழகினான் என்பதை தான் எப்படி யூகிக்காமல் போனோம் என்று சூர்யா சிந்தித்துவிட்டு அவனை நோக்கி தீர்க்கமாய் "உண்மையிலேயே நீங்க எனக்கு செஞ்சது பெரிய உதவிதான்... பட் இப்போ நீங்க கேட்கிறது... சாரி ஈஷ்வர்... சத்தியமா அது மட்டும் என்னால முடியாது" என்றாள்.

"முடியாதா..." என்று கேட்டு சிரித்தவன் அவளை நோக்கி கர்வமாய் "மிஸஸ். ஈஷ்வர் தேவ்ங்கிற அந்த ஒரு அங்கீகாரத்திற்காக எத்தனை பேர் தவம் கிடக்கிறாங்க தெரியுமா... அப்படி ஒரு மதிப்பை நான் உனக்கு தரன்னு சொல்றேன்... நீ முடியாதுங்கிற" என்றான்.

அவன் பேச்சிலிருந்து அதிகார தொனி சூர்யாவை கோபப்படத்த அவள் ஏளனமாக "தவம் கிடக்கிறவங்க எல்லோரையும் விட்டுவிட்டு போயும் போயும் உங்களுக்கு அசிஸ்டென்ட்டா இருக்கிற நான் எதுக்கு... நீங்க எனக்கு பாஸுங்கிற எண்ணத்தை தவிர வேறெந்த மாதிரி தாட்டும் எனக்கில்ல ஈஷ்வர்... உங்க ஸ்டேட்டஸுக்கு ஈக்வலா யாரையாச்சும் பாருங்க" என்றாள்.

"எனக்கு சரிசமமான ஸ்டேட்டஸ் இருக்கிற பொண்ணதான் நான் செலக்ட் பண்ணனும்னா... அதை நான் எப்பவோ செஞ்சிருப்பேன்... ஆனா நான் கல்யாணம் பண்ணிக்க போறப் பொண்ணு என் மனசுக்கு பிடிச்சவளா இருக்கனும்னு நினைக்கிறேன்..." என்றான்.

"உங்க மனசில இப்படி ஒரு எண்ணம் வர்றதுக்கு நான் காரணமா இருந்தா... அதுக்கு சாரி... பட் நீங்க நினைக்கிறது எப்பவும் நடக்காது" என்றாள்.

"நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்... இந்த ஈஷ்வர் தேவ் எதையாவது நடத்தனும் நினைச்சிட்டா அதை நடத்தியே தீருவேன்"

"நீங்களும் ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கோங்க... எனக்கு விருப்பமில்லாத விஷயத்தை யாருக்காகவும் எதுக்காகவும நான் செய்ய மாட்டேன்... உங்க விருப்பத்தை நீங்க என் மேல திணிக்க பார்க்காதீங்க... அதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன்... நீங்க பெட்டர் உங்க மனசை மாத்திக்கோங்க... நான் கிளம்பிறேன்" என்று சொல்லலிவிட்டு புறப்படப் போனவளின் கரத்தை அவன் இறுக்கமாய் பிடித்து கொள்ள சூர்யா அவனை முறைத்தபடி

"கையை விடுங்க ஈஷ்வர்... நீங்க பொண்ணுங்க விஷயத்தில ரொம்ப டீஸன்ட்டா நடந்துப்பீங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன்... அப்படிதான்னு நான் இப்ப வரைக்கும் நம்பிறேன்... அந்த எண்ணத்தை நீங்களே உடைச்சிராதீங்க" என்றாள்.

"யூ ஆர் ரைட்... நான் மத்த எல்லா பொண்ணுங்க கிட்டயும் அப்படிதான்... பட் நீ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் டார்லிங்" என்றான்.

அவனின் அந்த தோரணையும் நடவடிக்கையும் அவளை கலவரப்படுத்த"வேண்டாம் ஈஷ்வர்... இப்படி எல்லாம் பேசாதீங்க... எனக்கு சுத்தமா பிடிக்காது... என் கையை முதல்ல விடுங்க... நான் போகனும்" என்றாள்.

"நீ இப்படி என்னை விட்டு விலகி போறது கூடதான் எனக்கு பிடிக்கல... புரிஞ்சிக்கோ சூர்யா... உனக்காக நான் தவிக்கிற தவிப்பு இன்னைக்கு நேத்தில்ல... உன்னோட இந்த முகம் என்னை தூங்கவிடாம வேலை செய்ய விடாம டார்ச்சர் பண்ணுது...நீ எனக்கு வேணும்" என்றான்.

"இப்படி எல்லாம் என்கிட்ட பேசாதீங்க ஈஷ்வர்... நான் அபிமன்யுவை லவ் பண்றேன்... அவரைதான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்" என்றாள்.

ஈஷ்வர் அதிர்ச்சியோடு அவளின் கரத்தை இன்னும் இறுக்கமாய் பற்றியபடி "அவன் எல்லாம் என் கால்தூசி பெறுவானா... போயும் போயும் அவனை போய் நீ" என்று அவன் கேட்க

"ஸ்டாப் இட் ஈஷ்வர்... மைன்ட் யுவர் வார்ட்ஸ்... அபிமன்யு பத்தி பேசெல்லாம் உங்களுக்கு தகுதியே கிடையாது... அவரோட கேரக்டர் முன்னாடி நீங்கெல்லாம் நத்திங்... நல்லா கேட்டுக்கோங்க... அபிதான் என்னோட லவ்... அபிதான் என்னோட லைஃப்" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஈஷ்வர் கோபத்தோடு அவள் கழுத்தை நெருக்கியபடி சுவற்றோரத்தில் தள்ளி

"உனக்கு அவன் அவ்வளவு முக்கியமா" என்று கேட்டான்.

அவனின் இரும்புக்கரம் அவள் கழுத்தை இறுகிய போதும் சூர்யா தெளிவோடு "என் உயிரை விட எனக்கு அபிதான் முக்கியம்" என்று சொன்ன நொடி ஈஷ்வரின் கோபம் அதிகரித்தது.

ஆனால் அவளை கொல்லவோ காயப்படுத்தவோ மனம் வராமல் தன் கரத்தை அவன் விடுவிக்க அவளோ பெருமூச்சுவிட்டு அவனிடமிருந்து நகர பார்த்தவளை மீண்டும் தன் இரு கரங்களால் சிறைபிடித்தான்.

சூர்யா கோபத்தோடு "ஈஷ்வர் வழி விடு" என்றாள்.

"முடியாது... அதுவும் நீ அந்த அபிமன்யுவை இந்தளவுக்கு விரும்பிறன்னு சொன்னப் பிறகு சும்மா உன்னை அனுப்ப மனசு வரல" என்றான்.

சூர்யா அலட்சியமான பார்வையோடு "என்னடா பண்ணுவ..." என்று கோபமாய் கேட்க,

"டாவா... மேடமுக்கு ரொம்பதான் கோபம் வருது... சரி போகட்டும்... நீ என் டார்லிங்ல.. ஸோ செல்லமா கூப்பிடுக்கோ... பரவாயில்ல... பட் ஒரே ஒரு ஹெல்ப்... அதை மட்டும் செஞ்சிட்டு போ" என்று சொல்ல சூர்யா குழப்பத்தோடு அவனை பார்த்தாள்.

அவனோ புன்னகை ததும்ப "உன் லிப்ஸ் என்னை மேக்னட் மாறி இழுக்குதுடி... ஜஸ்ட் அ கிஸ் டார்லிங்..." என்றான்.

சூர்யா அவனின் மோசமான எண்ணத்தை அறிந்த நொடி நெருப்பில் சிக்குண்டவள் போல் தவித்தபடி அவனை தள்ளிவிட முயற்ச்சித்தாள். ஆனால் அவனின் தேகம் கொஞ்சமும் அசைந்து கொள்ளாமல் அவளை நெருங்க "நோ... ஐ வில் கில் யூ" என்று அவள் விலகிப் போக யத்தனிக்க அவன் புன்னகையோடு "இனிமேதான் நீ என்னை கொல்லனுமாடி..." என்று பதிலுரைத்தபடி அவன் மேலும் மேலும் அவளிடம் நெருக்கமாய் வந்தான்.

சிலந்தியின் வலையில் தானே சென்று சிக்குண்ட பூச்சியாய் அவள் இப்போது வழியின்றி தவிக்க அந்த சிலந்தி நீண்ட காத்திருப்பின் பின் கிட்டிய அந்த இரையை அத்தனை சீக்கிரத்தில் தப்பிச் செல்ல விட்டுவிடுமா என்ன?

pls dont give your comments below this thread.

Pls click the link below and post your comments

Meendum uyirthezhu comments
 




Last edited:

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
ஏன் தான் இந்த சூர்யா தானே சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டாளோ, இதில் இருந்து எப்படி தப்பிக்க போகிறாள்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
thanks siva punniya, lakshmi perumal, anushya, shofi

சிவபுண்ணியா. . இறையே தப்பி பிழைக்கட்டும். நான் என்ன செய்ய?

அடூத்த பதிவும் விரைவில் கொடுக்கவே விழைகிறேன். நேரம் ஒத்துழைத்தால் நிச்சயம் வந்துவிடும்

Pls இங்கே கருத்தை தொடர்ச்சியை பகிர வேண்டும். அடுத்த பதிவில் இடைவெளி உண்டாகலாம். கமெண்ட்ஸ் திரெட்ல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top