• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்???.... ரொம்ப சாரி???... இந்த எபி கொடுக்க ரொம்ப லேட்டாகிடுச்சு???... இந்த லேட்டானா எபிக்கும் எப்பவும் போல உங்க ஆதரவை கொடுப்பீங்கங்கிற நம்பிக்கைல லேட்டானாலும் பரவாலன்னு இந்த எபிய லேட்டா போஸ்ட் பண்றேன்...??? (ஷப்பா... எத்தன லேட்டுனு நீங்க மைண்ட் வாய்ஸ்ல பேசுறது எனக்கு கேக்குது???) சோ இதை இவ்ளோ நேரம் வாசிச்சு லேட் பண்ணாம எபிக்கு போய்டுங்க???...

1575911678988.jpg

ஈர்ப்பு 18

அடுத்த நாள் மாலை… நான் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தேன். அரை மணி நேரம் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த ப்ளாக் வெல்வெட் டாப்பும் கோபால்ட் ப்ளூ மாக்ஸி ஸ்கர்ட்டும் எனக்கு கச்சிதமாக பொருந்தியது. அதற்கேற்ற காதணிகளையும் கழுத்தணியையும் அணிந்து லேசாக மேக்-அப் போட்டு என்னைக் கண்ணாடியில் பார்த்தேன்.

‘இப்படி பாத்து பாத்து அலங்காரம் பண்ணிட்டு போற… அங்க அவன் உன்ன கண்டுக்கலேனா என்ன பண்ணுவ…’ என் மனச்சாட்சி என்னைக் கிண்டல் செய்தது.

‘நான் ஒன்னும் அவனுக்காக மேக்-அப் போடலீயே… எனக்கா தோணுச்சு அதான் போட்டேன்…’

‘அடேங்கப்பா… நீ யாருன்னு எனக்கு தெரியும்… நான் யாருன்னு உனக்கு தெரியும்… நம்ம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியும்…. அப்பறம் எதுக்கு இப்படி பீலா உட்டுட்டு இருக்க..’

‘ஸ்ஸ்… ரொம்ப பேசுற போ உள்ள…’ என்று என் மனச்சாட்சியை தலையில் தட்டி வெளியே செல்ல எத்தனித்தேன். அப்போது என் அம்மா, “இந்தா டி பூ வச்சுக்கோ…” என்று கூறியதும் என் முகம் அஷ்டகோணலாய் சுருங்கியது.

“எதுக்கு டி இப்படி முழிச்சுட்டு இருக்க…”
நான் ஒன்றும் கூறாமல் அவர் கையில் உள்ள பூவையும் என் உடையையும் மாறி மாறிப் பார்த்தேன்.


“எனக்கு வேற வேல இருக்கு டி… இந்தா பிடி இத…”

“அம்…ம்…மா… இந்த ட்ரெஸுக்கு யாராவது பூ வைப்பங்களா… “

“பூவ வேண்டாம்னு சொல்லக் கூடாது டி…”

“அப்போ நான் இப்படி ட்ரெஸ் பண்றப்போலாம் நீ பூ வேணுமான்னு கேக்கக் கூடாது ம்மா…” என்று கூறி என் அம்மாவைப் பார்த்து கண்ணடித்தேன்.

“தப்பான நேரத்துக்கு என்ட்ரி கொடுத்துட்டேனோ…” என்றவாறே வந்தாள் ப்ரியா.

அவளோ அழகான நவாப்பழ கலரில் க்ரேப் சில்க்கை கட்டியிருந்தாள். அதற்கேற்ற நகைகளோடு அழகாக இருந்தாள்.

“அந்த பொண்ணு எவ்ளோ லக்ஷணமா சேலைல வந்திருக்கா… நம்ம வீட்டு ஃபங்க்ஷனுக்கு நீ இப்படி ட்ரெஸ் பண்ணிருக்க...” என்று என்னைத் திட்டிவிட்டு…. “இந்தா மா நீயாவது இந்த பூவ வச்சுக்கோ…” என்று ப்ரியாவிடம் கொடுத்தார்.

‘நல்ல வேல ப்ரியா வந்து என்ன காப்பாத்துனா… இல்லனா இந்த பூ வேஸ்ட்டாகிடுச்சுன்னு அதுக்கு ஒரு தடவ அம்மா கிட்ட திட்டு வாங்கியிருப்பேன்…’

அங்கு என் அம்மா ப்ரியாவின் கன்னத்தை வழித்து, “அழகா இருக்க டா ப்ரியா” என்று கொஞ்சிக் கொண்டிருக்க அவளோ லேசாக வெட்கப்பட்டாள்.

“ஹ்ம்ம் போதும் போதும்… அங்க உங்க ஹஸ்பண்ட் கிளம்பிட்டாரானு போய் பாருங்க…” என்று என் அம்மாவை அனுப்பி வைத்துவிட்டு அவளிடம் திரும்பினேன்.

அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்ட அவள், “எதுக்கு டி இப்படி பாத்துட்டு இருக்க” என்றாள் இன்னும் வெட்கத்தோடு.

“ம்ம்ம் சும்மா தான் பாத்தேன்… வா நாம முன்னாடி போகலாம்..” என்று அவளிடம் கூறிவிட்டு வெளியே என் ‘டியோ’வை எடுக்கச் சென்றேன்.

டியோவில் அவள் ஏறியதும், வெளியிலிருந்தே என் அம்மாவிடம் கிளம்புவதாக கத்திவிட்டு வண்டியைக் கிளப்பினேன். ரெஸ்டாரண்ட்டிற்கு வந்ததும் வண்டியின் ‘சைட் மிரர்’ரைப் பார்த்து என் முடியை சரி செய்தேன்.

“ஹே எவ்ளோ நேரம் டி இங்கயே நின்னுட்டு இருப்ப…”

“உனக்கு அவ்ளோ அவசரம்னா நீ முன்னாடி போயேன்….”

அவள் ஒரு மாதிரி முழிக்க நான் அவளை நமுட்டுச் சிரிப்போடு கடந்து சென்றேன். உள்ளே பார்ட்டிக்காக அனைத்தும் தயாராகிக் கொண்டிருந்தது. நான் அபியைத் தேடிக் கொண்டிருந்தேன். (நான் மட்டுமல்ல???)

அப்போது என் மனச்சாட்சி, ‘அபியை மட்டுமா தேடுற…’ என்று உசுப்பேத்தியது.
‘நீ எதுக்கு இப்போ தேவையில்லாம அஜராகுற…’ என்று அதை அனுப்பிவிட்டு மீண்டும் நோட்டமிட்டேன்.
நாங்கள்??? தேடிய யாரும் எங்கள் கண்களுக்கு சிக்காததால், நான் அங்கு நின்று ‘செல்ஃபி’ எடுத்துக் கொண்டிருந்திருந்தேன். ப்ரியாவிற்கு ‘பேஸ்ட்ரி’யில் ஆர்வம் அதிகம் இருந்ததால், அங்கு ‘கேக்’ தயாராகிக் கொண்டிருப்பதைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.


நான் அங்கிருந்த அனைவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு குட்டி அவளின் அம்மாவின் பேச்சிற்கு அடங்காமல் அங்கும் இங்கும் தத்தி தத்தி அழகாக நடைப் பயின்று கொண்டிருந்தது. அந்த அழகான காட்சியை மெல்லிய சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தேன். அந்த குட்டி என்னைக் கடந்து செல்லும்போது அதன் பொக்கை வாயைத் திறந்து சிரித்தது. நானும் சன்னமாக சிரித்தேன். என் கைப்பேசியின் ஒலியில் சிந்தை கலைந்து கவனத்தை கைப்பேசிக்கு மாற்றினேன். சாண்டி தான் அழைத்திருந்தாள். அவளிடம் சீக்கிரம் வருமாறு கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தேன்.

அந்த குட்டியின் நியாபகம் வர நான் திரும்பிப் பார்த்தபோது அவளோ தடுமாறி கீழே விழப்பார்த்தாள். அவள் கீழே விழப்போகும் இடத்தில் மேசையின் கூர்மையான கால்பகுதி இருந்ததால் அதில் இடித்துக் கொள்வாளென விரைந்து அவளைத் தாங்கச் சென்றேன். அதற்குள் அவள் விழுந்துவிட்டாள். நல்ல வேலையாக அவள் அந்த மேசையில் இடிக்கவில்லை.

அவளைத் தூக்க குனிந்தபோது எனக்கு முன்னாடியே இரு கரங்கள் அந்த குட்டியைத் தூக்கின. அந்த கரங்களுக்குச் சொந்தக்காரன் யாரென நிமிர்ந்து பார்த்தபோது ராகுலைப் பார்த்து சிறிது அதிர்ந்தேன்.

ராகுல் ஹாஃப் வைட் ஷர்ட்டும் அதற்கு மேல் மெரூன் கலர் நேரு ஜாக்கெட்டும் கிரீம் பேண்ட்டும் அணிந்து அசத்தலாக இருந்தான். எப்போதும் போல் அவனின் ஒமேகா கடிகாரமும் அர்மானி குலேர்ஸும் அவனை அலங்கரித்தன. அவனின் தோற்றத்தில் நான் வாயடைத்து நின்றது என்னவோ உண்மை தான்.

என் கண்களை அவனிடமிருந்து திருப்பவே மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் அவனோ என்னை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் அந்த குட்டியை சமாதானப் படுத்துவதிலேயே குறியாக இருந்தான். சிறிது நேரத்திலேயே அந்த குட்டியும் அழகாக சிரித்தது. அப்போது அந்த குட்டியின் அம்மா வந்து நன்றி கூறி அந்த குட்டியை வாங்கிச் சென்றார்.

என்னைத் தாண்டும்போது அந்த குட்டி என்னைப் பார்த்துச் சிரித்தது.நானும் பதிலுக்கு சிரித்து விட்டு திரும்பிய போது ராகுல் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். அவன் சாதாரணமாக சிரித்தாலும் எனக்கு என்னவோ அவன் கிண்டலாக சிரிப்பது போல் தோன்றியது.

“யார தேடிட்டு இருந்த?” என்று என்னிடம் கேட்டான்.

‘அச்சோ முன்னாடியே என்ன பார்த்துட்டானோ… அவன தேடினத கண்டுபிடிச்சிருப்பானோ…??? இப்போ என்ன சொல்றது…???’ என்று நான் மனதிற்குள்ளே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிரும்போது என் குழப்பமான பாவனைப் பார்த்து அவன் மீண்டும், “உன் அண்ணா கிச்சன்ல இருக்கான்…” என்று கூறினான்.

‘ச்சே இது ஏன் எனக்கு தோணல…’

“தேங்க்ஸ்… அபியைத் தான் தேடிட்டு இருந்தேன்…???” என்று நான் இளித்து சமாளித்தபோது அவன் என் நன்றியை ஏற்றுக்கொள்வது போல தலையசைத்தான். ஆனால் அவன் உதட்டோரம் சிரிப்பில் வளைவதைக் கண்ட நான் யோசனையோடு அவனைப் பார்க்கும்போது என் அருகில் அரவம் உணர்ந்து நான் திரும்பிப் பார்த்தேன்.

அங்கு சாண்டி என்னையும் ராகுலையும் அவளின் குறும்பு நிறைந்த கண்களால் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் ஏதாவது சொல்லி என் மானத்தை வாங்கி விடுவாள் என்று உணர்ந்து அவளை அங்கிருந்து அப்புறபடுத்துவதற்கு முயன்றேன்.

ஆனால் அதற்குள் அவள் அவனிடம் சென்று, “ஹாய் நான் சாண்டி… நந்தி… ஸ்ஸ்ஸ்… நதியோட பிரென்ட்…” என்றாள் என்னைப் பார்த்து கண்ணடித்தவாறே.

அவள் நந்தி என்று சொல்வதைக் கேட்டு என் பிபி தாறுமாறாக எகிறியது. ராகுலோ இன்னும் சிரித்துக் கொண்டிருந்தான்.
சாண்டி என்னிடம், “உன்ன உங்க அம்மா தேடிட்டு இருந்தாங்க… நீ அவங்கள பாரு… நான் இங்க சீனியர் கூட கொஞ்சம் பேசிட்டு இருக்கேன்…” என்று என்னை சீண்டிக்கொண்டிருந்தாள்.


‘என்ன இன்னும் அவன்கிட்ட பேசப் போறியா???… இப்படியே உன்ன விட்டா என்ன ஃபுல்லா டேமேஜ் பண்ணிடுவ???… ஃபர்ஸ்ட் உன்ன இந்த இடத்த விட்டு கூட்டிட்டு போகனும்???…’

“எங்க அம்மா உன்ன தான் பாக்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்க… அதனால நீயும் என் கூட வா” என்று அவளைக் கையோடு அழைத்து(இழுத்து)ச் சென்றேன்.

அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் சாண்டி சிரித்தாள். “ஏன் டி லூசு மாதிரி சிரிச்சுட்டு இருக்க…”

“ஹாஹா… உன் பொறாமை பாத்து தான் சிரிச்சேன்…”

“எனக்கு ஒன்னும் பொறாமை இல்லையே…” என்று வெளியில் சொன்னாலும் ‘ஒரு வேல அப்படியும் இருக்குமோ???…’ என்று எனக்குள் யோசித்துக் கொண்டிருந்தேன்.

“நம்பிட்டேன்…”

இப்படி பேசிக் கொண்டே சமையலறையைக் கடக்கும்போது அங்கிருந்து ப்ரியா வேகமாக வெளியில் சென்றாள். நான் ப்ரியா என்று அழைத்தபோதும் அவள் திரும்பி பார்க்காமல் வேகமாக ‘ரெஸ்ட் ரூம்’மிற்குள் நுழைந்தாள்.

நானும் சாண்டியும் ஒருவரை ஒருவர் புரியாத பாவனையோடு பார்த்துக்கொண்டோம். பின்பு சமையலறையில் நுழைந்து பார்த்தபோது அங்கு அபி தீவிரமாக ‘கேக்’கை அலங்கரித்துக் கொண்டிருந்தான். அவன் கை கேக்கை அலங்கரித்தாலும் மனமோ இங்கில்லை என்பது எனக்குப் புரிந்தது.
 




Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
அபி எப்போதும் எந்த விஷயத்திற்காகவும் இப்படி குழம்பிக் கொண்டிருக்கமாட்டான். ஆனால் அவன் இப்போது இப்படி குழம்பி இருப்பதும் ப்ரியா இவ்விடத்தை விட்டு வேகமாக வெளியேறியதும் எனக்கு எதையோ உணர்த்தியது.

சாண்டி அபியிடம் சென்று, “ஹாய் அபி அண்ணா…” என்று கூறினாள். அதைக் கேட்டதும் தான் அவன் நிகழ்வுக்கு வந்தான்.

“ஹே சந்தி நீ எப்போ வந்த?”

“ச்சு அண்ணா… எப்போ பாத்தாலும் சந்தினு கூப்பிட்டுட்டு இருக்கீங்க…” என்று அவள் சிணுங்க…

“நீ மட்டும் என்ன நந்தினு கூப்பிடுற… அது மாதிரி தான் நாங்க உன்ன சந்தினு கூப்பிடுறோம்…” என்று அபிக்கு ஒரு ஹை-ஃபை கொடுத்தேன். சாண்டியைக் கிண்டல் செய்வதற்காக மட்டும் நானும் அபியும் ஒரே கட்சியாகி விடுவோம்.

மேலும் மூவரும் பேசிக்கொண்டே அந்த ‘ரெட் வெல்வெட்’ கேக்கை செய்து முடித்தோம். (அபி ‘ஐசிங்’ செய்ய நாங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்???)
இப்படி அரட்டையடித்தவாறே பார்ட்டிக்கான எல்லா ஆயத்த வேலைகளையும் முடித்தோம். நேரம் ஆக ஆக என் அப்பாவின் பொறுமை குறைந்து அவர் அனத்த ஆரம்பித்துவிட்டார். அபி அண்ணாவோ தாமோ அங்கிள் வரவிற்காக காத்திருந்தான்.
சாண்டி கூட பார்ட்டியை ஆரம்பிக்குமாறு கூறினாள். ஆனால் அபியோ மறுத்துவிட்டான். “எனக்கு என்னோட கரியர்ல ரொம்ப சப்போர்ட்டிங்கா இருந்த ரெண்டு பேருல ஒருத்தர் தாமோ அங்கிள். அவர விட்டுட்டு இந்த பார்ட்டிய தொடங்குறது எனக்கு சரியா படல…” என்று கூறிவிட்டான்.


அப்போதும் சாண்டி சும்மா இருக்காமல், “அப்போ அந்த இன்னொருத்தர் யாரு அபி அண்ணா?” என்றாள் என்னைப் பார்த்துக்கொண்டே...

நானோ அவர்களைக் கண்டுகொள்ளாமல் என் கைப்பேசியில் சற்று முன்பு எடுத்த ‘செல்ஃபி’க்களை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் கவனம் முழுவதும் அவர்களின் பேச்சிலேயே இருந்தது.

“உன் சீனியர் ராகுல் தான்…”

“ஓ… நீங்களும் சீனியரும் இப்போ திக் பிரெண்ட்ஸாமே… கொஞ்சம் என்னையும் அவங்களுக்கு இண்ட்ரோ கொடுங்க அபி அண்ணா…” என்றாள் கேலிக் குரலில்.

அவளைப் பார்க்காமலே கூறுவேன்… அவள் இதை சொல்லும்போது என்னைப் பார்த்துக்கொண்டே தான் கூறியிருப்பாள்.

இதற்கு மேல் விட்டால் அவளே அபியிடம் என் ‘லவ் மேட்டர்’ரைப் போட்டுக் கொடுத்து விடுவாள் என்று பயந்து அபியிடம், “அபி ரொம்ப லேட்டாகப் போகுது… நீ கேக்லாம் எடுத்து வச்சு எல்லாம் ரெடியாகிடுச்சான்னு பாரு… நாங்க ரெண்டு பேரும் அங்கிள் வந்துட்டாரானு பாத்துட்டு வரோம்…” என்று மறுபடியும் அவளை இழுத்துக் கொண்டு வெளியே சென்றேன்.

“உன் வாய வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா… இப்போ எதுக்கு அவன்கிட்ட ராகுல் பத்தி சொன்ன… அவனுக்கு ஏதாவது டவுட் வந்துடுச்சுனா….”

“வரனும்னு தான அந்த பேச்ச ஆரம்பிச்சது…” என்று அவள் முணுமுணுக்க நான் அவளை முறைத்தேன்.

“எதுக்கு இப்போ முறைக்குற… ஒன்னு நீ லவ் பண்ணுற விஷயத்த ராகுல் கிட்ட சொல்லனும்… அப்படி சொல்றதுக்கு உனக்கு தயக்கமா இருந்துச்சுனா அபி அண்ணா கிட்ட சொல்லனும்… அபி அண்ணா உன்கூட பிரின்ட்லியா தான பேசுறாங்க… அண்ட் இதுல உனக்கு சாதகமான விஷயம் அவங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் வேற…. ராகுலும் பக்கா ஜென்டில் மேன்…அப்பறம் எதுக்கு தயங்குற… லவ் பண்ணுறதா இருந்தா உடனே சம்மந்தப்பட்டவங்க கிட்ட சொல்லிடனும்… இல்லனா அதுக்கு அப்பறம் நீதான் ஃபீல் பண்ணுவ…”

இதெல்லாம் எனக்கும் மனதில் தோன்றினாலும் ஏதோ ஒன்று நான் அவனை நோக்கி அடியெடுத்து வைப்பதற்குத் தடையாக இருந்தது. அதற்கான காரணத்தை யோசிக்கும்போது எனக்கு தோன்றியது அவன் என்னை முதலில் (இப்போதும் சில சமயங்களில்…) கண்டுக்கொள்ளாமல் தவிர்த்தது… என்னைத் தவிக்கவிட்டது…

அந்த நிகழ்வுகள் ஏற்படுத்திய தாக்கத்தால் அவனிடம் என் காதலை சொல்வதற்கு எனக்கு பயமாக இருந்தது. ஆம் பயமே… நான் என் காதலைச் சொல்லி அதை அவன் மறுத்துவிட்டால் கூட பரவாயில்லை… ஆனால் அதைக் கிண்டல் செய்வது போல் ஏதாவது பேசினாலோ என்னைத் தவிர்த்தது போல் அதைக் கண்டுகொள்ளாவிட்டாலோ என்னால் தாங்க முடியாது. அதற்காகவே அவனிடம் என் காதலைப் பகிர்வதை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தேன்.

ஆனால் இக்காரணங்களை எல்லாம் சாண்டியிடம் நான் கூறவில்லை. இதற்கு முன்னால் என்னை தவிர்த்ததையும் நான் கூறவில்லை. என்னவனை நானே எப்படி மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்க முடியும்….

“ஹே நந்தி என்னடி யோசிச்சுட்டு இருக்க” என்று சாண்டி என்னை உலுக்கியதும் தான் நிகழ்வுக்கு வந்தேன்.

“என்ன நந்தினு கூப்பிடாதன்னு எத்தன தடவ சொல்றது…” என்று அவளிடம் சண்டையிடும் வேளையில், “இன்னும் ரெண்டு பேரும் சண்டை போடுறத நிறுத்தலையா?” என்ற குரலில் இருவரும் எங்கள் சண்டையை நிறுத்திவிட்டு குரல் வந்த திசையை நோக்கினோம்…

ஈர்ப்பான்(ள்)...
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Podra attendance a????

Super n very interesting sister ????..

Thamatha maana uncle oda entry illai Anand oda entry a sister???

(Epdiyum next ud la solliruven nu solla poranga ???)

Priya cake ku icing panratha vittutu Vera cake Ku ice vaichuttu irukan intha Abi?
 




Last edited:

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
Podra attendance a????

Super n very interesting sister ????..

Thamatha maana uncle oda entry illai Anand oda entry a sister???

(Epdiyum next ud la solliruven nu solla poranga ???)

Priya cake ku icing panratha vittutu Vera cake Ku ice vaichuttu irukan intha Abi?
??? Nan reply panradhaiyum neengale sollita nan ena solradhu???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top