• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Current Krishnan... - Part 1.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
கரண்டு கிருஷ்ணன்

எழுத்து : ஸ்ரீஜா வெங்கடேஷ்

தனக்கு முன்னால் இருந்த கீரைக் கட்டை வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன். உங்களுக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால் கரண்டு கிருஷ்ணன். அவன் மின் வேலைகள் செய்பவனாக இருந்த காரணத்தால் மட்டும் அந்தப் பெயர் வந்து விடவில்லை. பேச்சும் அடியும் மின்சாரம் பாய்வது போல இருக்கும் என்பதால் அந்தப் பெயர். உங்களுக்காக அவனைப்பற்றிய வர்ணனையைத் தருகிறேன். எப்போதும் முறைப்பாகவே இருப்பான். எது பேசினாலும் சண்டை தான். சண்டைக்கான தீர்வு அடி ஒன்று தான் என்பதில் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்த காரணத்தால் அவனோடு சண்டைக்குப்போக பலரும் தயங்கினார்கள். சற்றே குட்டையான உருவம் என்றாலும் நல்ல தெம்பு உள்ளவன். மின் வேலைகளில் கில்லாடி தான். ஆனால் கூலி கொஞ்சம் அதிகமாகக் கேட்பான். குறைத்து வாங்கிக்கொள்ளக் கூடாதா? என்று கேட்டால் அந்த பயனாளிக்குக் கிடைக்கும் அர்ச்சனைகளை சொல்ல முடியாது எழுதவும் முடியாது. கொஞ்சம் இளைத்தவர்கள் என்றால் அடிக்கவே போய் விடுவான்.

கிருஷ்ணன் வசித்து வந்த ஏரியாவில் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் சில முதலாளிகள் இருந்தனர். அவர்களுக்கு கிருஷ்ணன் என்றால் வெல்லக்கட்டி தான். "கிருஷ்ணா! இந்த அட்ரசுல இருக்குற ஆளு வட்டியும் குடுக்கல்ல, அசலும் வரல்ல" என்று சொல்லி அன்றைய சாராயக்காசையும் கோழிக்கான காசையும் கொடுத்து விட்டால் போதும். அட்ரசில் இருக்கும் ஆள் கதறிக்கொண்டு சம்பந்தப்பட்ட முதலாளியின் காலில் விழுவான். கிருஷ்ணனின் மனைவி வேணி "அந்த ஆளுக்கு அடிதடி தான் மெயின் வேலை, கரண்டு வேலை சும்மா பொழுது போக்குக்குத்தான்" என்பாள். அதில் உண்மை இல்லாமல் இல்லை. அவனையும் கல்யாணம் செய்து கொள்ள பெண் கிடைப்பாளா? என்று இருந்தது. இப்படிப்பட்டவர்களுக்காகத்தானே மாமன் மகள்களே பிறக்கிறார்கள்?மாமன் மகளையே கட்டி வைத்தார்கள். அவள் பெயர் வேணி. நிஜமான பெயர் குப்பம்மா. கிராமத்திலிருக்கும் போது குப்பம்மா சரி தான். ஆனால் சென்னை நகரத்துக்கு அந்தப்பெயர் எடுபடாது என்று கிருஷ்ணவேணி என்று மாற்றி விட்டான் கரண்டு கிருஷ்ணன்.

எப்படியோ அவனோடு வாழ்ந்து இரண்டு குழந்தைகளையும் பெற்று விட்டாள் குப்பம்மாள். தப்பு தப்பு கிருஷ்ண வேணி. வீட்டுக்குச் செலவுக்குக் காசு கேட்டால் அவளை அடிக்காமல் கொடுக்கவே மாட்டான். குழந்தைகள் அப்பா என்றாலே அலறும். அவனது தம்பிகளுக்குக் கூட கிருஷ்ணனைக் கண்டால் பயம் தான். ஆனால் எல்லாமே 30 ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது கிருஷ்ணனுக்கு வயதாகி விட்டது. உடம்பில் நோய்கள் எதுவும் இல்லை என்றாலும் பலவீனமாக ஆகிவிட்டான். நரைத்த மீசையும் கலைந்த உப்பு மிளகுத்தலையும் அழுக்கு லுங்கியும் இன்றைக்கும் பார்த்தால் பயம் வரும்படியாகத்தான் இருந்தான்.

காலைப் பலகாரத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தான் கிருஷ்ணன். வயதான காரணத்தால் 8 இட்லிகள் தான் சாப்பிட முடிந்தது என்பது அவனுக்கு குறையாகவே இருந்தது. இதுவே இளமையில் 15 இட்லிகளுக்குக் குறையாமல் உள்ளே தள்ளுவான். அதிலும் இன்று அமைந்தது போல காரச்சட்னியும் அம்சமாக அமைந்து விட்டால் கூட இரு இட்லிகள் உள்ளே போகும். அடிதடிக்கு அடுத்தபடியாக அவனுக்குப் பிடித்தது சாப்பாடு தான். அவன் மனைவி வேணி சமையலில் மிகவும் கெட்டிக்காரி என்பதில் அவனுக்கு தாளாத பெருமை உண்டு. ஆனால் அதை அவளிடம் சொல்ல மாட்டான். அவளுக்குத் தலைக்கனம் ஏறி விடும் என்று அச்சம்.

யாரோ எப்போதோ சொன்னார்கள் என்று தினமும் உணவில் கீரை வேண்டும் அவனுக்கு. அதிலும் புளிக்குழம்பும் கீரையும் தான் சாப்பிட நன்றாக இருக்கும் என்பது அவனது தீர்மானம். அதனால் அவன் வீட்டில் தினமும் கீரையும் புளிக்குழம்பும் என்பது எழுதாத சட்டம். மற்றபடி மீனைப் பொறிப்பதோ, கருவாட்டை வறுப்பதோ கையில் இருக்கும் காசைப் பொறுத்து அமையும். சாப்பிட்டு முடித்தவன் வெளியே வந்து கோயில் வாசலில் அமர்ந்து கொண்டான். பக்கத்திலேயே தொடர் வண்டி நிலையம் என்பதால் போவோர் வருவோர்க்குக் குறைவே இருக்காது.

கோயில் ஐயர் கிருஷ்ணனின் கைக்கும் வாய்க்கும் பயந்து ஒன்றுமே சொல்ல மாட்டார். அந்தப் பகுதியிலேயே பிறந்து வளர்ந்து மணந்து வாழ்ந்தவன் என்பதால் அனைவரையும் நன்றாகத் தெரியும். இட்லிக்கடை வைத்திருக்கும் மனோகர், மேஸ்திரி தண்டபாணி, சைக்கிள் கடை பாண்டியன் எனப் பலரும் இவரது நண்பர்கள் தான். இப்போது அவரது தலைமுறையினரின் வெளித் தொடர்புகள் குறைந்து அவர்களது மகன்களே தொழிலைக் கவனிக்கும் நிலை வந்து விட்டது. அவ்வளவு ஏன்?அவரது மகன் கணேசன் ஒரு கம்பெனியில் வேலைக்குப் போய் அவன் தானே குடும்பத்தைக் காப்பாற்றுகிறான்?. அவனுக்கும் கல்யாணமாகி இதோ மூன்று வயதில் பேரனும் இருக்கிறானே?

ஏதேதோ நினைத்தபடி அரச மரத்து இலைகளை எண்ணிக்கொண்டிருந்தான். கொய்யாப்பழ வண்டி போயிற்று. "அண்ணாத்தே சௌக்கியமா கீறியா? இந்தா பழம் சாப்பிடு" என்று கொடுத்து விட்டுப் போனான் அவன். "அல்லாம் நேரம் இத்தே கண்டி பத்து வருசம் முன்னால இவன் என்னைக்கண்டாலே ஓடுவான் . இப்ப எனக்கே பழம் குடுக்குறானே" என்று நினைத்துக் கொண்டான்.

ஏனோ அவனுக்கு சில ஆண்டுகளாக நேரம் சரியில்லை. வேணி கூட இப்போதெல்லாம் இவனை மதிப்பதே இல்லை. காரக்குழம்புக்கு பதில் சில சமயம் சாம்பார், சில சமயம் ரசம் என வைத்து விடுகிறாள். கேட்டால் "உனக்கு மட்டும் தான் வயசாச்சா? எனக்கு வயசாகல்ல? போட்டதைத் துண்ட்டு சும்மாப் போ! அதான் கீரை வெச்சிருக்கேன் இல்ல" என்கிறாள். சில நாட்கள் கீரையும் இருப்பதில்லை. கேட்டால் "என்னால முடியல்ல" என்ற பதில் அலட்சியமாக வருகிறது. போனாப்போகுது என்று விட்டு விட்டான்.

என்றாலும் கிருஷ்ணனின் மனம் ஆண்டுகளை விழுங்கி பின்னோக்கிப் பறந்தது. அப்போது கணேசன் கைக்குழந்தை. துறுதுறுவென இருப்பான். அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சாப்பாடு பரிமாறினாள் வேணி. "இன்னா தட்டைப்பார்த்து சோறு போட முடியாதா உன்னால" என்ற இடிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் குழந்தையை தூளியில் போட்டாள். சோறு போட்டு சாம்பார் ஊற்றினாள். "என்னா இன்னைக்கு புளிக்குழம்பு வெக்கல்ல?" "இல்ல வந்து... ஐயர் வூட்டுல கொட்த்தாங்கோ! இன்னைக்கு அமாசி அதான்" "சரி சரி! கீரையை வை" என்றான். கதவுக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டாள் வேணி.

"வந்து..இன்னைக்கு எனக்கு உடம்பு நல்லா இல்ல! கொஞ்சம் தூங்கிட்டேன். கீரையை ஆஞ்சு செய்ய முடியல்ல! நீயாவது ஆஞ்சு குடுத்திருக்கலாம் இல்ல? நீயி சோத்துக்குத்தான் வூட்டுக்கே வர. அதான் இன்னைக்கு கீரை செய்யல்ல. ஒரு நாளு அஜீஸ் பண்ணிக்க" என்று இழுத்தாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top