• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Moonlight Kadhal Episode 2 (updated)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Merin Nelson

மண்டலாதிபதி
Joined
Apr 22, 2018
Messages
373
Reaction score
536
Location
Chennai
Hi friends ,
How are you all ?... Hope all doing good ... When. I started writing third episode. ifelt like am out of what I wanted to write . So edited second episode for the betterment and for a continuity . Sorry for the inconvenience.

Please post your comments after reading the episode . Thanks for the people who have commented for my previous posts it meant. a lot to. me... Correct. me if. am wrong too...

Thanks and regards
Merin
 




Merin Nelson

மண்டலாதிபதி
Joined
Apr 22, 2018
Messages
373
Reaction score
536
Location
Chennai
அத்தியாயம் - 2

கார் கேட்டை நெருங்கும் நேரம் செக்யூரிட்டி ஒரு salute வைத்து கேட்டை திறந்தார். Maggie யை வரவேற்பதற்காக அங்கு ஒரு கூட்டமே கூடி இருந்தது. மக்களை பார்த்து ஒரு சிறு முருவலை தந்து விட்டு அன்றைய நாளின் பரபரப்பை உணர்ந்தவளாய் தன் அறையினுள் வேகமாக சென்றவாரே தன் P.A காமாட்சியை அழைத்தாள். என்ன காமாட்சி இன்னைக்கு schedule ( அட்டவணை) என்று கேட்டுக் கொண்டே தன் மேசையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். பதில் வராமல் போகவே நிமிர்ந்து காமட்சியை பார்த்தாள்.

அவன் வாய் திரவாமல் தன் சிறு கையேட்டை பார்த்துக் கொண்டிருந்தான். தான் பேசியதை அவன் கவனிக்க வில்லை என்று அறிந்து அவன் hearing aid எடுத்து அவன் காதில் வைத்தாள். அதை அவனுக்கு வாங்கி குடுத்ததும் அவள் தான். மறுபடியும் காமாட்சி என்று அழைத்தாள் , அவன் கோபமாய் " அக்கா நான் காமாட்சி சுந்தரம் . சுந்தரம் என்று குபுடுங்க , காமாட்சி நு குப்டு என் மானத்தை வாங்காதீங்க " என்று சொல்லி வேகமாக இன்றைகான அட்டவணையை ஏதோ voice machine ஒப்பிபது போன்று ஒப்பித்து விட்டு " நான் போய் வெளிய எல்லா ஏற்பாடும் பன்றே " என்று சொல்லி வெளியே செல்ல முயன்றபோது "தம்பு " என்றே வார்த்தை தேக்கியது.

Maggie அவன் அருகே வந்து அவன் முகவாய்யை திருப்பி " ரொம்பக் கோவம் வருது உனக்கு இப்போ எல்லாம் . tension la அப்புடி கூப்டே . Sorry " என்றாள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு. காமாட்சி சுந்தர பாண்டியன் என்பது தான் அவன் முழு பெயர்.

சுந்தரத்தின் குடும்பம் கேரளாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒன்று . சுந்தரத்தின் தந்தை வேலு பிரபாகர் பாண்டியன் கேரள மாநில பத்தனம்திட்டா மாவட்டத்தில் புகழ்பெற்ற பாண்டியன் கோகோ ஏற்று மதி நிறுவனத்தை நடத்தி வருகின்றார். அவர்கள் குடும்பம். தன் பூர்வீக திருநெல்வேலியை விட்டு அண்டை இடமான பத்தனம்தட்டா வந்து கிட்டத்தட்ட ஒரு தலைமுறை ஆகிவிட்டது , அவருடைய பாட்டனார் வேலு தம்பி புரட்சி செய்த காலத்தில் இருந்தே பிரிட்டிஷ் ஆட்சியில் இராணுவத்தில் இருந்தார் . அந்த பெருமை அவர் குடும்பத்திற்கு உண்டு . அவர் வழியில் திரவிய பாண்டியன் , சுந்தரத்தின் தாத்தா காவல் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வுப் பெற்றவர். சுந்தரம் படித்து வளர்ந்தது எல்லாம் கேரளாவில் தான்.

பார்க்க தன் மனைவியை போலே இருந்ததாலே தன் பேரனுக்கு இறந்த தன் ஆருயிர் மனைவி பெயரான காமாட்சியும் அவன் மட்டும் தான் தன் பரம்பரையில் கருப்பு என்ற நிறத்தை சிறிதளவு கூட பெராது இருந்ததாலே அழகை குறிக்கின்ற சுந்தரத்தையும் தன் குடும்ப பெயரான பாண்டியனை சேர்த்து ' காமாட்சி சுந்தரப் பாண்டியன் ' என்றே வைத்தார் .அவனை அவர் மட்டும் தான் காமாட்சி என்று அழைப்பார்.

அவனுக்கு தன் தாத்தா. மீதான எல்லை அற்ற அன்பு அவர் அவ்வாறு கூப்பிடுவதை தன் பாட்டியின் மேல் வைத்த அன்பின் வெளிப்பாடாக தான் தெரிந்தது அது அவன் நண்பர்கள் அவனை காமாட்சி என்ற பெயரை காமு என்று அழைத்து கேலி செய்வது வரைக்கும் தான். தன் தாத்தா தன்னை பாசமாக ' காமாட்சி ' என்று அழைப்பதை அவ்வளவு விரும்புபவன் தாத்தா மேல் இருந்த மரியாதை யால் தனக்கு ஏன் இந்த பெயரை வைத்தீர்கள் என்று கோவம் கொள்ள தெரியவில்ல மாறாக அவர் மேல் கொண்ட அபரிவிதமான அன்பு , தேய்பிறை போல கரைய தொடங்கியது.


தன் பெற்றோர் மீது கூட காட்டாத அன்பினை தன் தாத்தாவிடத்தில் காண்பித்தவன் , தன் பாட்டியை தன் ரூபத்தில் கண்பவரிடம் அன்பினை காட்ட வேண்டும் என்று அவன் நினைத்தாலும் நண்பர்களின் கேளிக்கைகள் மற்றும் அவர் பாசமாக தன்னை அழைக்கும் ' காமாட்சி ' கூட வேப்பங்காய்யாய் கசந்தது. அதற்கு பின்னர் அவன் மற்றோர் இடத்தில் அறிமுகம் செய்து கொள்ளும் போது "சுந்தரம்" என்று தான் சொல்வான். ஒரு சிலருக்கே "காமாட்சி சுந்தர ப் பாண்டியன் " என்று தெரியும் அதில் நம் Maggie ஒருவர்.

சுந்தரம் " விடுங்க Mam , ஏற்பாடு எப்டி பண்றாங்க பார்த்துட்டு வந்து அப்டேட்ஸ் குடுகிரே " . Maggie முறைத்து கொண்டே " mam ah ? என்று கேட்டாள். அதற்கு சுந்தரம் " நீங்க எப்பவும் எங்க அக்கா தான். ஆனா இப்போ எனக்கு நீங்க mam . இந்த மக்களுக்கு கலெக்டர் செவ்வந்தி " .

ஆம் Margaret Sevvanthi IAS , 2014 ஆண்டில் அகில இந்திய தரவரிசை பட்டியலில் 29வது இடம் பெற்றால். ஆனால் அதை பெருவதற்குள் திக்குமுக்காடி போனாள். ஹோம் கேடர் மாநில மான தமிழ் நாட்டை விட்டு அண்டை மாநிலமான கேரளாவை தேர்ந்தெடுத்து கடந்து மூன்று வருடமாக பணியாற்றி வருகிறாள் .தந்தையின் கனவு என்பதற்காகவே தன் மனகஷ்டத்தை அப்போதைக்கு pause button அழுத்தி reset mode கு முயன்று தன்னை தயாற்படுத்தி வெற்றிக் கனியை பரித்தாள்.
 




Merin Nelson

மண்டலாதிபதி
Joined
Apr 22, 2018
Messages
373
Reaction score
536
Location
Chennai
சில வருடங்களுக்கு முன்பு

2012 ------

அவள் engineering முடித்த கையோடு ஒரு பெரிய MNC கம்பனியில் வேலையிலும் சேர்ந்து விட்டாள் . தனுக்கு விருப்பம் இல்லாத போதும் மகளின் திறமைக்கு அவளை கலெக்டர் ஆக பார்க்க வேண்டும் என்ற ஆசையை மனதில் புதைத்து விட்டு அவளின் ஆசைக்காக மட்டுமே வேலைக்கு செல்ல அனுமதித்தார்.

இரவு பகல் பாராமல் உழைத்து களைப்புடன் வீடு வரும்போதெல்லாம் Danny " ஏன் இவளோ கஷ்டபடனும் baby , ? " என்று கேட்பார் . அதற்கு அவளின் பதில் " அப்பா வாழ்க்கைல ஒரு நாளாவது அந்த அமெரிக்கா இருக்குற statue of liberty சிலைய ஆசை தீர தொட்டுட்டு ஓடி வதுருவே ஓடி ." என்று சொல்லி சிரிப்பாள். அவரும் அவள் இஷ்டம் ஏதுவாக இருகிரப்போ நம்ம என்ன சொல்வது என்று விட்டுவிட்டார்.

நாட்கள் அதன் போக்கிலே சென்று கொண்டிருந்தது , ஒரு நாள் இரவு உணவை .இருவரும் அறுந்திக் கொண்டு இருக்கும் போது Maggie தான் Baby நான் job resign பண்றதுக்கு நாளைக்கு பேபர் போட போரே. என்று சொல்லிக் கொண்டு உணவை தட்டில் போட்டுகொண்டிருந்தாள்
Oh newspaper போட்டா தா job resign பண்ண முடியுமா என்று அப்பாவி போல கேட்டு வைத்தார்.


Maggie பற்களை நரணரவென்று கடித்துக் கொண்டே " U know dad . சும்மா கிண்டல் பண்ணாதீங்க என்று சொல்லி முறைத்தாள்

Danny சிறு சந்தோஷத்தோடு Statue of liberty lady ah deal la விட்டுடியா ?

மெலிதாக சிரித்துக்கொண்டே " ஐ ஃபீல் IT is not my cup of tea daddy , repetitive ah அதே பண்ற மாதிரி இருக்குது , it's not interesting . அதே கோடிங் , debugging ... Am exhausted .. என்று தன் தந்தையை ஆராயும் பார்வையுடன் Maggie சொன்னாள்.

Danny சிரித்துக் கொண்டே " IT, TEA what a Rhyming ! எப்படி இப்படி. !!! ஒரு வேளை நீ T R ( T. ராஜேந்திரன் ) ஃபேன் அஹ் என்று கேட்டார்

Maggie கடுப்புடன் இல்ல STR (நடிகர் சிலம்பரசன் T.R அவர்களின் மகன் ) ஃபேன்.

Dannie நடிகர் வடிவேலு பாணியில் சொல்லவெய்ல்ல என்று இழுத்தார்.

Maggie உச்சஸ்தாத்தியில் " அப்பா Be serious " என்று சொல்லவும் Danny " மூச்சை மேலே கீழே என்று உள்வாங்கி வெளியேற்றி மருத்துவமனையில் சீரியஸ் கண்டிஷனில் இருப்பது போல் ஆக்ஷன் செய்து அவளை வச்சு செய்துக் கொண்டிருந்தார்.


மிகவும் கடுப்பாகிய Maggie வேகமாக எழுந்துக் kitchen சென்று தட்டை சிங்கிள் போட்டுவிட்டு வேகமாக மாடி ஏறிச் சென்றாள். மகளை சமாதான படுத்தா விட்டாள் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே அவளுக்கு பிடித்தமான ஏலக்காய் பாலை காய்ச்சி ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு தானும் அவளை பின்பற்றி மாடி ஏறினார்.

அங்கே அவள் எப்பொழுதும் போல தன் தன் நிலா தோழியிடம் தன் கண்களாலேயே தன் மனதை படித்து கட்டிக் கொண்டிருந்தாள் , இக்காட்சியை கண்டவருக்கு அவள் 5ஆம் வகுப்பு படிக்ரப்போ நடந்ததை நினைவுக் கூர்ந்தார். (Maggie சிறு வயது முதலே பூசினார் போன்று உடல் வாகு கொண்டவள், UKG படிக்கும் போதே அவள் உயரம் 3 ஆம் வகுப்பு படிக்கிற பிள்ளைகளின் வளர்ச்சியை ஒத்து இருக்கும் . அதனாலே சிறு வயது முதலே அவளை சக மாணவர்கள் 'Giant' என்று தான் அலைத்ததுண்டு. பூப்பெய்தினர்கு பின்பு அவள் அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை எனிலும் சராசரி பெண்களை விட உயரம் தான் )..

அன்றும் இதேபோல நிலவினை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். Danny அவள் அருகே அமர்ந்து " என்ன baby moon ? அப்புடி பாகிர " என்று கேட்டு அவளை ஆராயும் பார்வை பார்த்தார் .

Daddy அது எவ்ளோ அழகா இருக்கு . U Know அது இஷ்டப்படி weight ஜாஸ்தி ஆகுது , அப்ரோ கம்மி ஆகுது . சோ gifted என்றுச் சொல்லி சிலாகித்தாள்.

Dannie மகளின் மனவருத்தம் அடைவதை உணர்ந்து " Correct .. But அதுக் குண்டா இருக்ரப்போ தா நாம ரொம்ப ரசிக்கிறோம் என்று அவளுக்கு தாழ்வு மனப்பான்மை வராத அளவுக்கு அவள் மொழியிலே புறியவைத்தார்.

True daddy என்னை நீங்க ரசிகிரமாதிரி என்று சொல்லிக் கட்டிக் கொண்டாள்.

You are my chubby baby and not fatty !!!! என்று சொல்லி அவள் நிலா தோழியிடம் தானும் அமர்ந்து பேச ஆரம்பித்தார் ...

அதை நினைத்தவாறே Danny அவளின் அருகே சென்று அவளின் தோழைத்தொட்டு திருப்பி " Baby calm down . திடீர்னு ஏன் இப்படி , foreign போக சான்ஸ் கிடைக்கிற இந்த நேரத்தில . Tell me what is eating you ( உன்னை உறுத்தும் விஷயத்தை சொல்லு) ". என்று கேட்டார்.

Maggie திரும்பி ' முழு நிலவை பார்த்துக் கொண்டே ' நம்ம மைண்ட் voice வெளியே யாருக்கும் கேட்கவும் கூடாது , அதே சமயம் நம்ம சொல்லாமலே அவங்க நம்ம மைண்ட் ரீட் பண்ணிக்கணும் ,, ஆனால் சீக்ரெட் ஆகவும் வச்சுக்கணும் அப்டி எனக்கு கேடச்ச ஒரே friend my moon ? , நீங்களும் try பண்ணுங்க dad you will feel good " . என்று சொல்லி மறுபடியும் தன் நிலா தோழியிடம் கதை பேச ஆரம்பித்தாள்.

Dannie : " ok as you wish . Resign பண்ணிட்டு என்ன பண்ணலாம்னு இருக்க ? " என்று கேட்டார் .

Maggie : இல்லப்பா தோணுது இது தான் எனக்கு கடவுள் எழுதிர க்காருனு தோணுது . Moreover challenging Job பா. அம்மா நா கலெக்டர் ஆகனும்னு. ஆசப்படாங்கனு நீங்க ஒருதடவை சொல்லிருக்கீங்க. சோ வொய் டோண்ட் ஐ டிரை நு தோணிச்சு.
Danny : அதனாலே மட்டும் தானா வேர எதும் இல்லல. Are you sure ?
Maggie : yea dad will see. Daddy I always thought to become an IAS but எப்போ என்றெல்லாம் decide பண்ணதில்ல . But mind la இருந்துட்டே இருந்துச்சு .


Danny மௌனமாய் அவளை எரிட்டார். Maggie அவர் கையை தன் கைகளுக்குள் வைத்து statue of liberty பாக்க நம்ம ரெண்டு பேரும் tourist visa la பார்துட்டு வரலாம் dad no issues . அங்க போய் நம்ம ஜோலி ஆ நியூ யோர்க் city சுத்தி வரணும். அப்புரோ நயாகரா falls பாக்கணும். ஆ அப்புறம் அந்த சூப்பர் சிங்கர் ல ஒரு பொண்ணு பாடிச்சே பெயரென்ன என்று தன் நெற்றியை தேய்த்து யோசித்து கொண்டு , அவரிடம் திரும்பி உங்களுக்கு கூட பிடிக்குமே ஆஹ் ஜெசிகா ஜூட் , அந்த பொண்ணு கனடா தான் அப்டியே அந்த பொன்னையும் பாத்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டு வர்றோம் என்று சொல்லிக் கொண்டே போக , இவள் பேசியதை யாவும் கேட்டாரே தவிர வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. Maggie சிறு கோபத்தோடு என்ன நான் பேசிட்டு இருக்கே எதுமே சொல்லாம சொள்ளமாட சாமி மாத்ரி நின்னுட்டு இருக்கீங்க என்று சொல்லி அவரை உசுப்பிநாள்.

உங்க அம்மா இருந்தா ரொம்ப பெருமை பட்டூரூப்பா என்று சொல்லிக் கொண்டே கண்கலங்கி thanku dear என்று சொல்லி கட்டிக் கொண்டார்...
அவர் அழுகையை போக்க வேண்டும் என்று " let's go சீக்கிரம் வாங்க நம்ம அங்க போறதுக்கு என்ன process nu பார்க்கலாம் . "


அவரும் மகளை தன் தாயையும் தாரத்தையையும் சேர்த்து தனக்கு மகளாய் அனுப்பிய கடவுளுக்கு நன்றி சொல்லி கொண்டே வீட்டிற்க்கு வந்தடைந்தனர்.


அவர்கள் ஆசை போல் அமெரிக்கா சென்று எல்லா வற்றையும் பார்த்து இன்ஸ்டாகிராம் , ஃபேஸ்புக் என்று எல்லாவற்றிலும் செல்ஃபி களை போட்டு ஊரில் இருக்கும் எல்லாருக்கும் ஸ்டோமக் பர்ணிங் வரவைத் விட்டனர். எல்லா செலவியையும் Maggie தான் செய்வேன் என்று சொல்லி அடம் பண்ணி செய்தாள். Danny Ku பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
 




Merin Nelson

மண்டலாதிபதி
Joined
Apr 22, 2018
Messages
373
Reaction score
536
Location
Chennai
பிறகு சென்னை சென்று விடுதி , படிக்க நல்ல இன்ஸ்டிட்யூட் மற்ற எல்லா ஏற்பாட்டையும் அவளுக்கு செய்து கொடுத்து மீண்டும் அவர் தன் ஊரான கோயம்பத்தூர் வந்துவிட்டார் .

முதலாம் மற்றும் இரண்டாம் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிறகு , Delhi சென்றால் நேர்காணலை இன்னும் சிறப்பாகவும் திறம்படச் செய்ய முடியும் என்று அவள் டிரெயின்னிங் ஆசிரியர்கள் கூறியதை தந்தையிடம் கூறிய போது அவருக்கு கண் முன் நிழலாடியது நிர்பயா rape தான்.
ஒரு முடிவுடனே தந்தையுடன் Delhi சென்று அங்கு நேர்முகத் தேர்விற்கு பிரசித்தி பெற்ற ***** இன்ஸ்டிட்யூட் இல் தன்னை தயார் படுத்தினாள். அவள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு Danny ஒருஅபார்ட்மெண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே அவளுடன் தங்கி , அவளுக்கு வேளாவேளைக்கு சமைத்துக் கொடுத்து , , தினமும் அவளை தன் bike யில் இன்ஸ்டிட்யூட் ற்கு கூட்டி சென்று விடுவார் .
அவள் எவ்வளவு தனியாக நான் சென்று வருகிறேன் என்று சொல்லியும் அவர் அசைந்தபடில்லை . அவளின் பாதுகாப்பு மட்டுமே அவர் கருத்தில் இருந்தது.
அவள் தேர்ச்சி பெற்ற அன்று அவரை கையில் பிடிக்க முடியவில்லை அவ்வளவு சந்தோஷம் . மகளிடம் கூட " செவ்வந்தி இருந்தா ரொம்ப பெரும பட்டுருப்பா " என்று சொல்லி அவளுக்கு கேக் ஊட்டி விட்டார் . உடனே அவள் " அம்மா பேரு சோபியா தானே பா ஏன் செவ்வந்தி சொல்டிரீங்க என்று கேட்டாள் ....


அவர் சிரித்த வாரே அவளுடைய அம்மாவின் ஆளுயுற புகைப்படத்திற்கு முன்னாள் அவளை நிறுத்தி " பாரு குட்டி அம்மா ஒரு மாதிரி மஞ்சளும் இல்லாம வெள்ளையும் இல்லாம ஒரு மாதிரி செவ்வந்தி நிறமா இருக்காங்கள்ள அதா, . அவள பாத்த உடனே தோனினது செவ்வந்தி பூ தான் " என்று சொல்லி கொண்டே அவரின் காதல் நாட்களை எண்ணி பார்க்க தொடங்கும் முன் Maggie " hello Danny உங்க ரொமான்ஸ் கொஞ்சம் கம்மி பண்ணுங்க , நயாகரா பால்ஸ் ஓவர் flow அகுது என்று சொல்லிச் சென்றாள்.

அவர் தன் மனைவியின் புகைப்படத்தை பார்த்தவாறே " நீ உன் மனசை தோலச்சு கஷ்ட பட்ட மாத்ரி நம்ம பொண்ணும் ஆகாம பாத்துக்கோ அவ அதெல்லாம் தாங்க மாட்டா " என்று மானசீகமாக வேண்டிகொண்டிருந்தார் . அந்தோ பரிதாபம் முன்பே மகள் தன் மனதை தொலைத்து விட்டதை அவர் அறியவில்லை.

தேர்ச்சி பெற்று முஸ்சொரியில் ( உட்டர்கண்ட் மாநிலம் ) ஒன்றரை வருடம் பயிற்சிக்கு பிறகு கடந்த இரண்டரை வருடமாக கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றிவருகிராள்.

. முதலில் மலையாள மொழியை கற்க சிரமமாக இருந்தது , ஆனால் தன் அருகே இருப்பவர்களிடம் பேசி அவள் முயன்று கற்று கொண்டாள். எழுதப் படிக்க தான் தனியாக கிளாஸ் எடுக்க ஆள் வைத்து படித்தாள். அவளுக்கு கற்று கொடத்தது சட்ஷாத் நம்ம காமாட்சி சுந்தரம்.

Sundaram தன்னுடைய பி.com degree முடித்து விட்டு வேலைக்குச் செல்ல காத்துக் கொண்டு இருந்த சமயத்தில் செய்தி தாளில் வந்த ' மலையாளம் மொழியை தமிழ் அல்லது ஆங்கில வழியில் கற்று தர ஆட்கள் தேவை ' என்ற விளம்பரத்தை ஒரு நாள் பார்களாகினான் . சரி யார் விளம்பரம் குடுத்திருக்கிரார்கள் என்று பார்த்தால் ' Margaret Sevvanthi என்று இருந்தது. சுந்தரம் தன் மனதில் இந்த பெயரை எங்கயோ கேட்டு இருக்கேனு என்று மனதில் எண்ணியவாரே செய்தி தாளில் குறிப்பிட்டு இருந்த தொலைபேசி எண்ணிற்கு அழைத்து அட்ரஸ் கேட்டுவுடன் அது கலெக்டர் பங்களா என்று தெரிந்த பின் சிறு பதட்டம் . ஆனாலும் எதையும் அசாதாரணமாக செய்யும் அவனக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று தான் தோன்றிற்று .


வாயிலில் நுழையும் போதே மீன் வருகின்ற நறுமணம் அவன் நாசியில் சென்று உள்ளிருக்கும் வயிறு என்னை கொஞ்சம் கவனியேன் என்று சத்தமிட்டது , அமைதியா இரு நானே இன்டர்வியூ வந்துருக்கே இப்போ போய் மீன் வாசம் பூ வாசம் என்று பிதற்றிகொண்டிருக்கிராய் என்று அதை அதட்டி தன் நாவையையும் சேர்த்தே அதெட்டினான்.

கேட்டை திறந்து உள்ள எட்டிப் பார்த்துக்கொண்டே என்ன செக்யூரிட்டி யாரையும் காணும் , Sunday leave ah இருக்குமோ என்று எண்ணிக் கொண்டே உள்ளே நுழைந்தான் . அங்கே இருந்த கார்டன் அவனை விழுங்கி கொண்டது , அவ்வளவு பறந்து விரிந்த கார்டனை அவன் பார்த்ததில்லை, அவன் வீட்டிலும் கார்டன் இருக்கிறது தான் சொல்லப் போனால் இதை விட இரண்டு மடங்கு பெரியது தான் ஆனாலும் இதில் இருக்கும் நேர்த்தியை அவனால் மெச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

Dahlia , crotons , ரோஜா செடிகளில் உள்ள எல்லா வண்ண நிறங்களும் அங்கே இருந்தன, மரங்களில் மா , பலா , வாழை என்ற முக்கனி களின் சங்கமும் , மற்ற எல்லா வகையான காய்கறி செடிகள், கொடிகளும் இருந்தன. எல்லாவற்றிற்கும் highlight ஆக கருப்பு ரோஜா இருந்தது , அதை பார்த்தவாறே ஒரு வேளை Turkey யிலிருந்து வரவைத்து இருப்பார்களோ என்று எண்ணிக் கொண்டே அதின் அருகே சென்றான்.


அதன் அழகிலே லயித்து நின்றுவிட் டான் பிறகு தான் வந்த வேலை நியாபகம்வந்தது அவனுக்கு . சுற்றும் முற்றும் தன் கண்களால் யாராவது தென்படுகிறது போல தெரிகிறதா என்று ? telescope இல்லாமலேயே தேடிக் கொண்டிருந்த போது சிறிது தூரத்தில் யாரோ களை எடுத்துக் கொண்டு இருப்பதை அறிந்து அவர்களிடம் போய் அவன் வந்தக் காரியத்தை சொல்ல. அப்பெண்மணியோ அவனை அளவெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டு இருந்த பொழுதே ' Pick up the call baby , pick up the call ' என்ற தொலைபேசியில் இருந்து வந்த ஒலியெளுப்பி யின் ஒலியை கேட்டு அதிர்ந்தவனாய் நின்றான் சுந்தரம். அதை சிரித்த முகமாய் எடுத்து " சொல்லு அருண் " என்று சொன்னாள் Maggie...


Moonlight will pass :)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மெரின் நெல்சன் டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஓ, நம்ம மார்கரெட் செவ்வந்தி
அக்கா கலெக்டர் அக்காவா?
ஜூப்பருங்கோ, மெரின் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top