• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Naan aval illai - 19

Hi friends,
முந்தைய பதிவிற்கான உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றி.
இந்த பதிவிற்கு கருத்துதெரிவியுங்கள். நிறைய கேள்விகளை இப்பவே பதில் எதிர்பார்க்காதீங்க. நான் பொறுமையாக வரும் பதிவுகளில் தெளிவுப்படுத்திறேன்.


முக்கியமான விஷயம் சாக்ஷி @ ஜென்னி இந்த சஸ்பென்ஸுக்கான பதில் Naan aval illai intro படிச்சிருந்தாலே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.

This song for jenni #sakshi
 




Last edited by a moderator:

Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
ஹாய் மோனி என்னமா இப்படி ஒரு ட்விஸ்ட் புகழ் காக நான் சாக்ஷி னு சொல்றாளா வேந்தன் கண்பியூஷன் உங்களுக்கு மட்டும் இல்ல எங்களுக்கும் தான் உங்க இன்ட்ரோ நான் அவள் இல்லைனும் சொல்லுது மரணத்தை வென்றவள் னும் சொல்லுது பட் ஜெனி ஏன் இப்படி இருக்கணும் டேவிட் ஏன் இப்படி கேக்கணும் ஜெனி குள்ள இருக்கற சாக்ஷி ணு ???காட் ட்வின்ஸ் அ இருக்குமோ நான் நினச்சா இப்படி ஒரே உருவம் இரண்டு உயிர் ஜெனி அண்ட் சாக்ஷி வைட்டிங் மோர் எபிக்
 




N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
ஏனோ ஜென்னி அந்த நிகழ்விலிருந்து மீண்டு வராமல் அதிலயே மூழ்கியிருக்க, அவள் தோளின் மீது ஒரு கரம் பதிந்தது.

அதனை உணர்ந்தவள் சட்டென்று
பார்வையை திருப்பி யாரென்று நோக்கினாள்.


டேவிட் அவளை ஆழ பார்த்திருந்தான்.

எதிர்பாராத அதிர்ச்சியோடு "நீங்க எப்போ வந்தீங்க டேவிட் ?" என்று வினவ,

"எப்போ வந்தீங்களாவா ?!! நானும் டென் மினிட்ஸா ஜென்னி ஜென்னின்னு கத்துக்கிட்டிருக்கேன்... நீ கவனிக்காம அப்படி என்ன யோசிச்சிட்டிருக்க ?" என்று இறுக்கமாக கேட்கவும்,

"ஓ சாரி டேவிட்" என்றபடி எழுந்து கொள்ள முயற்சித்தவள் நிற்க முடியாமல் தடுமாறி பின்னோடு தண்ணீருக்குள் விழப் போக டேவிட் "ஜென்னி கேர்ஃபுல்" என்று சொல்லி அவள் கரத்தை பற்றி பின்னோடு விழாமல் அணைத்துப்பிடித்தான்.

அத்தனை நேரம் ஓரே நிலையில் அமர்ந்திருந்ததால் மறுத்து விறைத்திருந்த அவள் கால்கள் நிற்க முடியாமல் கெஞ்ச, அவளும் விழாமல் அவன் கரத்தை இறுக பிடித்துக் கொண்டாள்.

அவள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றிருந்த கணம், டேவிடின் உணர்வுகள் அவளிடம் தடுமாறின.

அப்போது ஏற்பட்ட உணர்வு அவனுக்கு ரொம்பவும் புதியது.

மனதாலும் உடலாலும் இதுவரையில் அனுபவித்திராத உணர்வு.

தோழி என்ற வரையறை தகர்ந்து போன உணர்வு.

அவளின் நெருக்கத்தில் அவன் கண்ணியம் மெல்ல மெல்ல நழுவிக் கொண்டிருந்தது.

ஜென்னி அந்த நொடி சுதாரித்து பாதத்தை ஊன்றியவள் அவனிடமிருந்து விலகி நின்று "தேங்க்ஸ் டேவிட்" என்றாள்.

அவன் பார்வையை அவளிடமிருந்து வேறுபுறம் திருப்பிக் கொண்டு, அவளை எதிர்கொள்ள முடியாமல் தவித்திருந்தான். தான் அவளை பார்த்தவிதம் தவறென்று அவன் மூளை குற்றச்சாட்ட, மனமோ அந்த உணர்வை உள்ளூர விரும்பியது.

"டேவிட்" என்ற ஜென்னியின் அழைப்பு அவனை மீட்டெடுக்க,

தன் எண்ணங்களுக்கு அணைப்போட்டு நிறுத்தியவன் அவள் புறம் திரும்பி "டூ யூ ப்ஃல் பெட்டர் நவ் ?!" என்று வினவ,

"ம்ம்ம்" என்று இயல்பாய் தலையசைத்தாள்.

அதன் பிறகு இருவரும் அங்கிருந்து முன்னேறி நடக்க, அவர்கள் இருவருக்கு இடையில் அழுத்தமான மௌனம் குடிக்கொண்டிருந்தது.

டேவிட் அந்த மௌனத்தை கலைத்தபடி "என்னாச்சு ஜென்னி உனக்கு ? இஸ் எனிதிங் ராங்?" என்று கேட்டபடி அவளை பார்த்தான்.

அவள் தன் எண்ணங்களை மறைத்தபடி புன்முறுவலோடு "நோ டேவிட்" என்றாள்.

"எல்லார்கிட்டயும் நீ முகமூடி போட்டுட்டிருக்கிறது ஓகே... ஆனா என்கிட்டயும் கூடவா ?"
அவன் பார்வை அவளை ஆராய்ந்து பார்க்க, அவளோ பதிலின்றி மௌனமாகவே நடந்து வந்தாள்.


"உன்னை எதோ டிஸ்டர்ப் பண்ணியிருக்கு ஜென்னி... வாட் இஸ் இட் ?" என்று கேட்டான்.

"அ.. ப்.. படி எதுவும் இல்ல டேவிட்"

"நோ.. சம்திங் பாதரிங் யூ" என்றான் அழுத்தமாக!

அவள் அவனை சமாளிக்க முடியாமல் யோசித்திருக்க,

டேவிட் மேலும் "ஹ்ம்ம்... ஜென்னிக்குள்ள இருக்கிற சாக்ஷி எட்டி பார்க்கிறாளோ?!" என்றான்.

"ஷட் அப் டேவிட்"

ரௌத்திரமானாள் ஜென்னி !

அவள் முகம் சிவக்க, உதடுகள் கோபத்தில் துடித்தன.

Hi friends,
முந்தைய பதிவிற்கான உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றி.
இந்த பதிவிற்கு கருத்துதெரிவியுங்கள். நிறைய கேள்விகளை இப்பவே பதில் எதிர்பார்க்காதீங்க. நான் பொறுமையாக வரும் பதிவுகளில் தெளிவுப்படுத்திறேன்.


முக்கியமான விஷயம் சாக்ஷி @ ஜென்னி இந்த சஸ்பென்ஸுக்கான பதில் Naan aval illai intro படிச்சிருந்தாலே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.

This song for jenni #sakshi
புகழு சாஷியின் நினைவுகளை உழுப்பிச்சு போல.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top