• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
எதுவும் பேசாமல் அவள் பாட்டுக்கு காரிலிருந்து இறங்கி நடக்க,

டேவிடும் காரை விட்டு இறங்கி,

"ஜென்னி நில்லு" என்றான்.


அவள் மௌனமாய் அவன் புறம் திரும்பினாள்.


"நீ செஞ்சது உனக்கே சரின்னு படுதா?"

அவள் புருவங்கள் சுருங்க "என்ன செஞ்சேன்?" என்றாள்.

"மகிழையும் மாயாவையும் ஏன் அவாயிட் பண்ண? அப்படி என்ன பிடிவாதம் உனக்கு ?"

"அவாயிட்லாம் பண்ணல... அவங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்ல.. நான் பேசல"

"ஓ... அப்போ ஏன் மகிழ் அப்பாவுக்கு உடம்பு முடியலன்னதும் அவ்வளவு பதட்ட பட்ட"

"புகழ் அழுதுகிட்டே சொல்லும் போது மனசுக்கு கஷ்டமாயிடுச்சு... அதான் போய் பார்க்கலாம்னு.. அதுல என்ன தப்பு ?"

"போய் பார்த்தது தப்பில்லை ஜென்னி... அங்கே போய் மகிழும் மாயாவையும் பார்க்காம பேசாம வந்ததுதான் தப்பு..."

"தப்பில்லை டேவிட்... நான் பேசியிருந்தாதான் தப்பா போயிருக்கும்"

"ஏன்?"

"ஏன்னா?" என்று தயக்கமுற்று அவள் யோசிக்க,

"சொல்லு ஜென்னி" என்று டேவிட் அழுத்தம் கொடுத்தான்.

அவள் வேதனையோடு "மகிழ் என்னை இன்னும் காதலிக்கிறாரு டேவிட்" என்றாள்.

டேவிடின் முகம் லேசாக மாற்றமடைந்து மீண்டவன் சற்று நிதானித்து "ஏன் ஜென்னி? நீ அவரை இன்னும் காதலிக்கல?!" என்று கேட்டான்.

"அது" என்று தடுமாறியவள் "நான் காதலிக்கிறானா இல்லைங்கிறது இப்ப முக்கியமில்லை... மகிழ் மாயாவோட ஹஸ்பெண்ட்... அதுதான் முக்கியம்... " என்றாள்.


டேவிட் யோசனையில் ஆழ்ந்திட, ஜென்னி அவனிடம் "காலையில நான் மகிழை உங்க ஆபிஸ்ல பார்த்தேன் டேவிட்... என்னை பார்த்துட்டு நீங்கதான் ஜென்னித்தா விக்டரான்னு கேட்டாரு.." என்க,

"நீ என்ன சொன்ன?"

"எஸ்னு சொன்னேன்... ரொம்ப உடைஞ்சி போயிட்டாரு...அந்த நிமிஷம் அவர்கிட்ட தெரிஞ்சது வெறும் ஏமாற்றம் இல்ல... வலி.. அப்பதான் தோணுச்சு... மகிழ் மாயாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இரண்டு பேரும் சந்தோஷமா வாழலன்னு"

"அதெப்படி சொல்ற ?"

"மகிழால என்னை மறக்க முடியலன்னா... மாயாவோடு அவரால சந்தோஷமா எப்படி வாழ முடியும் ?... மகிழால ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ முடியாது... ஐ நோ அபௌட் ஹிம்...

கடலும் வானமும் தூரத்தில சேர்ந்திருக்கிற மாறி தெரியும்... ஆனா அது வெறும் பிம்பம்தான்... நிஜமில்லை... அவங்க இரண்டு பேரும் அப்படிதான் இருக்காங்க...

இந்த நேரத்தில நான் சாக்ஷியா அவங்க வாழ்க்கையில நுழைஞ்சா... எல்லாமே தப்பாயிடும்... ஏன்? மகிழ்கிட்ட இரண்டு வார்த்தை பேசிட்டா கூட என் கட்டுபாடு உடைஞ்சி போயிடும்னு எனக்கே பயமா இருக்கு... அப்புறம் மாயாவோட லைஃப் மொத்தமா ஸ்பாயிலாயிடும்..."

"நீ சொல்ற மாதிரி பார்த்தா... மகிழ் ரொம்ப பாவம் ஜென்னி... அவர் இன்னும் உன்னை நினைச்சிட்டிருக்காருன்னா அவரோட காதலை என்ன சொல்றதுன்னே தெரியல" அவன் ஜென்னியை காதலித்தாலும் அந்த வார்த்தை அவன் மனதிலிருந்து வந்ததே.

"சாக்ஷியை அந்தளவுக்கு காதலிக்க மகிழால மட்டும்தான் முடியும்... ஆனா சாக்ஷிக்குதான் அந்த கொடுப்பனை இல்லையே" என்று விரக்தியோடு புன்னகையித்தவளை ஆச்சர்யமாய் பார்த்தான் டேவிட்.
அவளே மேலும் "ஆனா அந்த கொடுப்பனை என் மாயாவுக்கு கிடைச்சிருக்கு... ஷீ இஸ் ரியலி லக்கி" என்றாள்.


"நீ மாயாவை பத்தி மட்டும் யோசிக்கிற ஜென்னி"

"உண்மைதான்... இந்த சூழ்நிலையில நான் இரண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தருக்காகதான் யோசிக்க முடியும்... ஸோ மகிழா மாயாவான்னு பார்த்தா... எனக்கு மாயாதான் முதலிடம்... எனக்கு கண்ணு போன நாள்ல இருந்து நான் இந்த உலகத்தை பார்த்ததே அவளோட கண்களாலதான்... எனக்கு அவ வெறும் தோழி இல்ல... அம்மா... என்னை அந்தளவுக்கு கண்ணுக்குள்ள வைச்சு பார்த்துகிட்டவ..

நான் மட்டும் மாயாவை விட்டுவிட்டு தனியா அன்னைக்கு போகாம இருந்திருந்தா எனக்கு எதுவும் ஆயிருக்காது... அப்படி ஒரூ மோசமான நாள் என் வாழ்க்கையில வந்திருக்காது...

கரெக்டா சொல்லனும்னா... மகிழ் எனக்கு வானம் மாதிரி... ரொம்ப வண்ணமயமா என் வாழ்க்கையை மாத்தினவர்... ஆனா மாயா என்னோட மூச்சு காற்று... நான் எப்படி அவளை விட முடியும்
அதான்... அவளுக்காக என் காதலை விட்டுகொடுத்திட்டேன்... அதில ஒண்ணும் தப்பில்லை... இன்னும் கேட்டா மகிழுக்கு என்னை விட அவதான் பெட்டர் பேர்... இன்னைக்கு மகிழ் இந்த இடத்தில இருக்கிறாருன்னா அவதான் அதுக்கு காரணம்... அவளுக்குதான் அதோட மொத்த கிரெடிட்டும்... நான் வேண்டிக்கிறதெல்லாம் ஒண்ணே ஓண்ணுதான்... எந்த காரணத்தை கொண்டும் எந்த சந்தர்பத்திலயும் மகிழை மட்டும் நான் சந்திச்சி பேசிடவே கூடாது" என்று அவள் கண்ணீர் சிந்தி வேதனையுற, டேவிடின் கண்களிலும் அவனை அறியாமல் கண்ணீரை நிரம்பியது.


அந்த நேரம் அங்கே ஒரு மௌன நிலை சூழ்ந்து கொள்ள டேவிட் அதை கலைத்தபடி,

"இவ்வளவு யோசிச்ச நீ ஹாஸ்பெட்டில் போனங்கிற முடிவை எடூத்திருக்க வேண்டாமே" என்றான்.

"அதெப்படி டேவிட்? மகிழ் அப்பாவுக்கு ஏதாவதாயிருந்தா என் மனசாட்சியே என்னை கொன்னுடுமே"

"ஏன்? " என்று கேட்டு அவன் ஆழமாய் பார்க்க சற்று தடுமாறியவள்

"விஷயம் தெரிஞ்சி போகாம இருந்தா கில்டியா இருக்காதா ?" என்று மழுப்பினாள்.

"நீ சொல்றதும் சரிதான்" என்று அவள் சொல்வதை ஏற்றுக் கொண்டவன்

"நான் கிளம்பட்டுமா? " என்று கேட்டு அவளை தவிப்பாய் பார்க்க,

அவள் "ஹ்ம்ம்ம்" என்றாள்.

காரில் ஏற திரும்பியன் மீண்டும் அவள் புறம் திரும்பி "கிளம்பிறேன் சொன்னனும் சரின்னுட்ட... உள்ளே கூப்பிடமாட்டியா ?" என்று கேட்டு ஏக்கமாய் அவளை பார்க்க,


அவள் அவன் எண்ணம் புரிந்து "லேட்டாயிடுச்சு... உங்க அப்பா தேவையில்லாம ஏதாவது கற்பனை பண்ணிப்பாரு... நீங்க கிளம்புங்க" என்றாள் அலட்சியமாக !

"ஏதாவது நினைச்சிக்கட்டும்... பரவாயில்லை" என்றவனுக்கோ இன்னும் சில நிமிடங்கள் அவளோட இருக்க மாட்டோமா என்றிருந்தது.

அவள் தீர்க்கமான பார்வையோடு "எனக்கு பரவாயில்லை இல்லை... நீங்க கிளம்புங்க" என்று அழுத்தமாக சொல்ல,

"ஷுவரா சொல்றியா?" என்று போகாமல் நின்றவனை அவஸ்த்தையோடு பார்த்தவள்

"என்னாச்சு டேவிட் உங்களுக்கு ?" என்று திகைப்புற கேட்டான்.

"அதான் எனக்கும் தெரியல ஜென்னி... நீதான் சொல்லனும்... அன்னைக்கு காதலை பத்தி அவ்வளவு க்ளாஸ் எடூத்தியே... உனக்கு புரியலயா என் ப்லீங்ஸ் ?" என்றான் முகத்தை பரிதாபமாய் மாற்றிக் கொண்டு !

"ப்லீங்ஸா ?!! " என்றவள் தவிப்போடு "நான் தப்பு செஞ்சிட்டேன்... வாயை வைச்சிட்டு சும்மா இல்லாம... காதல் கத்திரிக்காய்னு... ஏதோஏதோ பேசி உங்க மனசை கெடுத்திட்டேன்... நான் சொன்னதை எல்லாத்தையும் வாபஸ் வாங்கிக்கிறேன் ப்ளீஸ் கிளம்புங்க" என்று கரத்தை கூப்பியபடி கெஞ்சாத குறையாக கேட்க,

அவன் கோபத்தோடு "அப்போ நான் ப்ரீஸ்ட்டா கிறதுதான் உனக்கு விருப்பமா ?" என்றான்

அவள் புன்னகையித்துவிட்டு "கரெக்ட் டேவிட்... கர்த்தருக்கு சேவை செய்ற பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்குமா என்ன ? நீங்கெல்லாம் கோடில ஓருத்தர்... ஒருத்தர் இரண்டு பேர் காதலிக்காததால இந்த உலகம் ஒண்ணும் ஸ்தம்பிச்சிடாது... பேசாம நீங்க ஆசைப்பட்டதையே செய்யுங்க "

அவளை விழிகள் இடுங்க பார்த்தவன் "ஆனா எங்க அப்பாவுக்கு அதுக்கு விருப்பமில்லையே" என்றான்.

"ஆனா கர்த்தரோட விருப்பம் அதுவா இருக்கே டேவிட்..."

"அப்படின்னு உனக்கு யாரு சொன்னது?"

"யாராவது சொல்லனுமா என்ன ? உங்களுக்குதான் அதுக்கான மொத்த தகுதியும் இருக்கு... உங்க ஆசையும் அதானே டேவிட்" என்றாள்.

"இப்ப எனக்கு அந்த ஆசை இல்லை... என்னோட ஆசை விருப்பம் எல்லாம்... நீ என் வாழ்க்கையில இருக்கனும்... எப்பவும் இருக்கனும்... என் கூடவே இருக்கனும்... டில் மை டெத்... "


"டேவிட் என்ன பேசிறீங்க... அதெல்லாம் முடியாது... அதுவும் உங்க ப்லீங்ஸ் நீங்க நினைக்கிற மாதிரி காதல் எல்லாம் கிடையாது" என்று மறுத்தாள்.

"அப்புறம் எது காதல்?... விட்டுட்டு போறதும் விட்டு கொடுக்கிறதுமா ?" என்று கேட்க அந்த வார்த்தை அவளை குத்தி காயப்படுத்தியது.

அவளின் வேதனையை பார்த்தவன் "ஸாரி ஜென்னி... உன்னை குத்தி காட்ட அப்படி பேசல... தோணுச்சு கேட்டுட்டேன்" என்றான்.

"நீங்க கேட்டது தப்பில்லை.. ஆனா டேவிட்... என்னை ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.. உங்களை என்னால ப்ரண்ட்டா மட்டும்தான் பார்க்க முடியும்... நாட் ஹேஸ் அ பெட்டர் ஹாஃவ்...

நான்... உங்களுக்கு வேண்டாம்... உங்க தகுதிக்கும் உங்க கேரக்டருக்கும் ஏத்த மாதிரி ஒரு பெஸ்ட்டான பொண்ணு நிச்சயம் கிடைப்பாங்க ... என்னை விட்டுவிடுங்க" என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் திரும்பி வீட்டை நோக்கி நடக்க,

"யூ ஆர் ரைட் ஜென்னி... நான் கல்யாண பண்ணிக்க போற பொண்ணு இந்த உலகத்திலயே ரொம்ப ரொம்ப பெஸ்டான பொண்ணு.... அந்த பொண்ணு நீதான்... நீ மட்டும்தான்" என்று அவள் காதில் கேட்கும்படி சத்தமாய் உரைத்துவிட்டு தன் காரில் ஏறி விரைந்தான்.

ஜென்னி டேவிடின் வார்த்தைகளை கேட்டு ஒரு பக்கம் ஆச்சர்யப்பட்டு போனாள். மறுபுறம் அதிர்ச்சியும் அடைந்தாள்.

சிலரை பார்க்கும் போது நட்புணர்வு வரும்.
சிலரை பார்க்கும் போது அன்புணர்வும் காதலும் வரும்.
ஆனால் ரொம்பவும் குறுகிய சிலரின் மீது மட்டுமே பக்தி வரும்.


அவன் மீது அவள் கொண்டது பக்தி.
கடவுளாய் பார்த்தவனை காதலன் என்று ஸ்தானத்தில் எப்படி வைத்து பார்க்க முடியும். அதுவே அவளின் தயக்கம்.




Hi friends,
நேற்று Ud போட முடியல. கொஞ்சம் Mood Off, ஆனா கதையை சீக்கிரம் முடிச்சாகனும். இன்னும் 10 நாள்தான் இருக்கு. கதையை முடிக்க.


உங்க support கொடுங்க. கமெண்ட் பண்ணுங்க. அதுதான் என்னை ரொம்பவும் உற்சாகமா எழுத வைக்கும்.

தொடர்ந்து கருத்தை பகிர்ந்து கொள்ளும் அனைத்து வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

Pls click like button
porumaya pporumaya sothikkiringa mam
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
மகிழ் அழாதீங்க..... 😔

ஓ.... ஜென்னி அதான் கண்டுக்காம வந்தாங்களா..... 😔

அவங்க எண்ணம் கரெக்ட் தான்....

வேந்தன் பத்தி உண்மைய தெரியபடுத்தனது ஜென்னி தான....

டேவிட் நினைக்கறது நடக்குமா....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top