ரொம்ப நாளைக்கு அப்புறம் மூன்று ஜென்டில்மேன்களை சேர்த்து பார்த்ததில் மகிழ்ச்சி...
ராகவ் சாமர்த்தியசாலி தான் .. எங்க அடித்தால் எங்கு வலிக்கும் என்று குறி பார்த்து அடித்து விட்டாயே..
மகிழ், மாயாவோடு ஒன்றினாலும் உன் எண்ணமானவளின் பிறிதோரு ஆணுடனான ஒற்றுதல் உனக்கு ஒட்டவில்லையே ஏன்?? இது தான் காதலா??? பூக்கடைக்கு விளம்பரங்கள் தேவையில்லை.. நீ எவ்வளவு மறைத்தாலும் ,மறந்தாலும் அவள் நினைவுகள் உன் உடலுடன் கலந்த உயிரே...
டேவிட், பெருத்த அதிர்ச்சி தான் எங்களுக்கும்.. தோழமையுடன் தோள் சாய இடம் கொடுத்து போல், மனைவி என்று மடி சாய இடம் கொடுப்பாளா????
சயீத் மிகவும் பாவபட்ட ஆத்மா, மகிழ் டேவிட் காதலாவது பிரகடன படுத்த பட்டது ஆனால் சயீதின் காதல்.. கானல் நீரா? காதல் தோல்வியை விட தன் காதல் காதலிப்பவற்கும் தெரியாமல், தன் காதல் சாவது என்பது கொடுமை..
காதலின் பல பரிமாணங்கள் வெவ்வேறு உணர்ச்சிகளாய்.. நால்வரையும் நாட வைத்த நடுநிலை நாயகி என்ன நவில்வாளோ?? எத்திசை நோக்கி நகர்வாளோ???