• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 39

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
மரணத்துக்கு நிகரான வலி


வீணையை விரல்கள் மீட்டாத போது அங்கே எங்கனம் நாதத்தின் இசை ஒலிக்க முடியும்.

அவர்கள் இருவருமே மீட்டாத வீணை போலவே மௌனிகளாய் நின்றிருந்தனர்.

அலைஅலையாய் அவள் கேசம் கடல்காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்க, பார்வை மட்டும் ஓரே நிலையில் சமுத்திரனோடு சங்கமித்திருந்தது.

ஒரே ஒரு முறை கூட அவள் பார்வை அவன் புறம் திரும்பவில்லை.

அவனாகவே பேசட்டும் என்று அவள் அமைதி காத்திருக்க, இந்தளவுக்கு தன்னை பார்க்க அவள் நிராகரிக்கிறாள் எனும் போது அவளிடம் தான் நினைத்ததை எப்படி கேட்பதென்று அவன் தவித்து கொண்டிருந்தான்.

'மகிழ் பேசு' அவனுக்கு அவனே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டான்.

ஆனால் உதடுகள் இரண்டும் ஓட்டிக் கொண்டு அவனுக்கு உதவமாட்டேன் என்றிருந்தது.

அந்த காத்திருப்பும் மௌனமும் நீண்டு கொண்டே இருக்க, இறுதியாய் அவளே அந்த மௌனத்தை உடைத்தாள்.

"என்னை பேசனும்னு வர சொல்லிவிட்டு இப்படி ஸைலன்டா இருந்தா என்ன அர்த்தம்... டேவிடும் இப்போ இங்கே இல்லை... இன்னும் உங்களை எது தடுக்குது" என்று கேட்டவளை ஆச்சர்யமாய் நோக்கினான்.

அவளோ அப்போதும் அவனை பாராமல் கடலையே பார்த்துக் கொண்டிருக்க,

அவன் கோபத்தோடு "என்னை எதுவும் தடுக்கல... உன்னைதான் ஏதோ தடுக்குது..." என்று நிறுத்தியவன்,

அவளின் பாரா முகத்தை பார்த்தபடி "ஐ திங் யூ ஆர் ஸ்டில் இன் லவ் வித் மீ" என்று உரைத்தான்.

அவள் அதிர்ந்தபடி "மகிழ்" என்று அவனை நேர்கொண்டு பார்த்தாள். அவள் விழிகள் அகண்டு அவனை சீற்றமாய் பார்க்க, அந்த வார்த்தை அவளை நேரடியாய் தாக்கியிருந்தது.

விழிகள் இரண்டும் அழுவதற்கான முதல் படியை எட்டியிருக்க,

மகிழ் நிதானமாகவே அவளை எதிர்கொண்டு "அப்படி எதுவும் இல்லைன்னா என்னை நேரா பார்த்து பேசிறதில உனக்கென்ன தயக்கம் ?" என்றவன் கோபமாய் முடிக்க,

"நீங்க புரிஞ்சிதான் பேசிறீங்களா ? எனக்கும் ஆக்டர் ராகவுக்கும் மேரேஜாகாப் போகுது... அது ஊருக்கே தெரியும்.. ஏன் அது உங்களுக்குமே தெரியுமே ? அப்படி இருக்கும் போது இந்த மாதிரி நேரத்தில உங்களை தனியா மீட் பன்றது சரியா ? ஒரு மீடியா பர்ஸனா என்ன மாதிரியான விளைவுகளை நம்ம மீட்டிங் ஏற்படுத்தும்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை... அப்படி இருக்கும் போது இதை விட என் தயக்கத்துக்கு காரணம் வேறென்ன இருக்க முடியும் ?!" என்று ஆணித்தனமாய் அவன் முகத்துக்கு நேராய் கேட்டாள்.

எந்நிலையிலும் தான் உணர்ச்சிவசப்பட்டு மகிழின் வாழ்க்கையில் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்கிற அவளின் பயமே அவளை மனோதிடத்தோடு பேச வைக்க, உண்மையிலயே அந்த நொடி மகிழ் குற்றவுணர்வாய் உணர்ந்தான்.

அவள் சொன்னது எதையும் உணர்ச்சிவசத்தால் அவன் யோசிக்க மறந்திருந்தான். ஆனால் இப்போது சிந்தித்தால் தன் தமையனின் அவச்சொல்லை கேட்டு அவளின் வாழ்க்கையில் இடையூறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது.

அவன் அவளை நிமிர்ந்து பார்த்து "சாக்ஷி ஐம் சாரி... நான் இது எதை பத்தியும் யோசிக்காம ஏதோ ஒரு இமோஷன்ல உன்னை இங்கே வரவைச்சிட்டேன்" என்க,

"எதை பத்தியும் யோசிக்காமன்னா... உங்க மனைவியை பத்தியுமா ?! என்று புருவத்தை ஏற்றி அவள் ஏளனமாய் கேட்டாள்.

"என் மனைவியா ?... அப்போ அவ உனக்கு ப்ரண்ட் இல்லையா ?!" என்று இறங்கிய பார்வையோடு அவன் வினவ,

"முடிஞ்சி போன விஷயங்களை பத்தி நான் பேச விருப்பப்படல... நீங்களும் அதை பத்தி எல்லாம் கேட்க வேண்டாம்னு நினைக்கிறேன்... அதனால எந்த யூஸ்ஸும் இல்ல... ஸோ ப்ளீஸ் நம்ம வாழ்க்கையில நடந்த பழைய விஷயங்களை எல்லாம் மறந்திருவோமே... அதுதான் இரண்டு பேருக்கும் நல்லது" என்று சமார்த்தியாய் பேசி அவனிடமிருந்து அவள் நழுவிக் கொள்ள பார்க்க, மகிழுக்கு அவள் பேசியது எதையும் நம்பமுடியவில்லை.

அத்தனை சுலபமாய் அவள் பழைய விஷயங்களை கடந்துவிட சொல்வதை ஏற்க முடியாமல் பார்த்தவன், மாயாவின் நட்பை கூட உதறுமளவிற்கு அவள் மனம் இறுகி போனதா என்று கோபமானான்.

அவள் மேலும் "டேவிட் வேற ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டிருக்காரு... நான் போகனும் மகிழ்" என்றவள் அவஸ்த்தையோடு உரைக்க,

அவன் அழுத்தமான பார்வையோடு "டேவிட் ஒரு முப்பது நிமிஷமா வெயிட் பண்ணிட்டிருக்கிறதுக்கே உனக்கு இவ்வளவு துடிக்குது... ஆனா நான் உனக்காக மூணு வருஷமா காத்திட்டிருந்தேனே... பையத்திக்காரனாட்டும்... அப்போ உனக்கு துடிக்கல... இன்னைக்கு வந்து ஈஸியா பழசை பத்தி பேச வேண்டாம்னு சொல்ற" உணர்ச்சிவசத்தாலும் கோபத்தாலும் அவன் மனதில் தேக்கி வைத்திருந்த கேள்வியை வார்த்தைகளாக கொட்டிவிட, அவள் பேச்சற்று நின்றுவிட்டாள்.

அவனே மேலும் "சாக்ஷி எப்போ எப்படி ஜென்னித்தா விக்டரா மாறினான்னு நான் தெரிஞ்சிக்கலாமா ?!" என்றவன் கேள்வி எழுப்ப,

அவள் ஒருவாறு சுதாரித்து கொண்டு "அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம்... நான் உங்களுக்கு அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை" என்று மறுத்தவள்,

நிராகரிப்பாய் அவள் பார்வையை அவனிடமிருந்து திருப்பிக் கொண்டாள்.

அவன் நிதானமாக, "ஓகே அந்த கேள்விக்கு நீ பதில் சொல்ல வேண்டாம்... அது எனக்கு தேவையில்லாத விஷயம்னே இருக்கட்டும்... ஆனா எனக்கு தேவையான விஷயம் ஓண்ணு கேட்க வேண்டியிருக்கு... அதுக்கு மேடம் பதில் சொல்வீங்களா ?!" என்று கேட்டு அவளை எகத்தாளமாய் பார்த்தான்.

"என்ன அது ?" அவனை பாரமலே அவள் கேட்க,

"மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்த என் பிறந்த நாள்... நீ நிச்சயம் மறந்திருக்க மாட்ட... " என்று அவன் சொல்லிய உடனே அவள் முகமாற்றமடைந்திருந்தது. பதட்டத்திற்கும் பயத்திற்கும் இடைப்பட்ட உணர்வில் அவள் சிக்கி தவிக்க,

மகிழ் மேலும் "நம்ம இரண்டு பேரும் வெளியே எல்லாம் போயிட்ட பிறகு நானே உன்னை இல்லத்தில கூட்டிட்டு வந்துவிட்டேன்... அதுக்கப்புறமா... நீ மாயாகிட்ட என்ன சொன்ன ?" நிறுத்தி நிதானமாய் அவன் கேட்க, அவள் தடுமாறி நின்றாள்.

"உன்னைதான் கேட்கிறேன்... பதில் சொல்லு" என்றவன் திரும்பி நின்றவளின் தோளை பிடித்து திருப்பினான்.

அவன் செய்கையில் மிரண்டவள் "என்ன பன்றீங்க மகிழ்?" என்று அவன் கரத்தை தட்டிவிட,

அவன் அதீத கோபத்தோடு,

"அப்போ நான் கேட்டுட்டே இருக்கேன்... நீ பாட்டுக்கு பதில் சொல்லாம நின்னுட்டிருந்தா என்னடி அர்த்தம்.. ?" என்றான்.

அவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் "தப்புதான் மகிழ்... என்னை மன்னிச்சிடுங்க... நான் அப்படி சொல்லி இருக்க கூடாது... ஏன் ? உங்க காதலை பத்தி அப்படி நான் நினைச்சி கூட இருக்க கூடாது ?... தப்பு செஞ்சிட்டேன்" என்றவள் அழுகை தொனியில் உரைக்க, அவள் விழிகளில் நீர் ஆறாய் பெருகியது.

அவள் அந்த நொடி முகத்தை மூடிக் கொண்டு வெதும்பி, மகிழின் மனம் இளகிப் போனது.

அவளை அணைத்து கொண்டு சமாதானம் செய்ய வேண்டும் என்று உள்ளம் துடிக்க, அந்த எண்ணத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

"சாக்ஷி ப்ளீஸ் அழாதே..." என்றான்.

அவளோ அமைதியடையாமல் அழுதபடியே இருக்க அவன் பொறுமையாக, "எனக்கு தெரியும் சாக்ஷி... நீயா அப்படி பேசலன்னு..." என்க,

அவள் முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அவனை பார்க்க,

அவன் கூர்ந்து பார்த்தபடி "அந்த பொறுக்கி... அதான் எங்க ண்ணன் உன்கிட்ட என்ன பேசினா?" என்றவன் உக்கிரமாய் கேட்க,

அவனுக்கு எப்படி தெரியும் என்பது போல் அவள் குழப்பமாய் பார்த்தாள்.

மகிழ் அவள் பார்வை புரிந்து "நான் அவனை பார்த்துட்டுதான் வர்றேன்... அவன் சொன்னதை எல்லாம் கேட்டு கொதிச்சி போய் வந்திருக்கேன்" என்க,

ஜென்னி உணர்ச்சியற்ற பார்வையோடு "டூ லேட் மகிழ்" என்றாள்.

அவள் வார்த்தையிலிருந்த வலியை அவள் முகம் பிரதிபலிக்கவில்லை எனினும் அதனை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவள் விரக்தியான பார்வையோடு "அதை நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கனுமா ?!" என்று கேட்க,

அவன் ஆம் என்பது போல் தீர்க்கமாக தலையசைத்தான்.

அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவள் சில நொடிகள் மௌனத்திற்கு பின் அன்று நடந்ததை அவனிடம்
உரைக்கத் தொடங்கினாள்.
************
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அன்று...

மகிழ் சென்ற சில நொடிகளிலயே சாக்ஷிக்கு அந்த தனிமையும் அமைதியும் எரிச்சலை உண்டாக்க, அவன் எப்போது வரக் கூடும் என்று சோபாவின் கைப்பிடியில் கையை வைத்து தலையை தாங்கி விழிகளை மூடியிருக்க, அந்த கணம் யாருடைய சுவாசமோ அவள் முகத்தை தீண்டிய உணர்வு.

அதுவும் சிகரெட்டின் நெடி குமட்டிக் கொண்டு வர, "யாரு ?" என்று அதிர்ந்து தலையை நிமிர்த்தினாள்.

பதிலில்லை.

யாரோ இருக்கிறார்கள் என்பதை அவள் உள்ளுணர்வு கணிக்க "யாராச்சும் இருக்கிங்களா ?!" என்று கேட்க அந்த இடமே நிசப்தமாய் இருந்தது.

ஆனால் அந்த நிச்பதத்திலும் யாரோ நடமாடும் மெல்லிய சத்தத்தை அவள் செவியால் கேட்க முடிந்தது.

மெல்ல மெல்ல பதட்டம் அதிகரித்து கொண்டே போக, சோபாவில் இருந்து எழுந்து கொண்டவள் நேராக நடந்து கதவருகே சென்றாள்.

அது மூடியபடியே இருக்க, மகிழ் மூடிவிட்டு சென்றதை அவள் கேட்டிருந்தாள். அதை யாரும் திறந்தது போலவும் சத்தம் எழவில்லை.

மூச்சை இழுத்துவிட்டு கொண்டவள், தான் ஏதோ கற்பனை செய்து பயப்படுகிறோம் என்று எண்ணி மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அவள் எப்போதும் விரும்பாதது அமைதியும் தனிமையும்.

இரண்டுமே அந்த நொடி அவளை ஒருசேர மிரட்ட, அவள் பேகிலிருந்த பாடல் ஓலிக்கும் இயந்திரத்தை எடுத்து இயக்க செய்தாள்.

அவள் பாடல்களை கேட்கும் போது உணவு தண்ணீரையும் கூட மறந்து விடுவாள்.

அப்படியிருக்க தனிமை எம்மாத்திரம்.

அதுவும் பாரதியார் பாடல்கள் மீது அவளுக்கு எப்போதுமே அலாதியான காதல்

'மாலை பொழுதிலொரு மேடை மிசையே

வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்

மூலைக் கடலினை அவ்வான வளையம்

முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்'

அந்த பாடல் வரிகள் காற்றோடு கலந்து உள்ளத்தை மருகச் செய்ய, அதனூடே அவள் கரைந்து போயிருக்க,

ஒர் ஆணின் குரலில் அவளின் அந்த இசைதவத்தை கலைத்துவிட்டது.

"நீ வாசிக்கிறதுதான் அழுகுன்னு பார்த்த... நீ பாட்டு கேட்டு ரசிக்கிறது கூட அழுகுதான்டி" என்றதும் அவள் பதறிப் போனாள். அப்படியெனில் அவள் கற்பனையென்று எண்ணியது ??

உண்மையிலயே யாரோ இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டவள்
"யாருங்க ?" என்று அழுத்தமாய் கேட்டாள்.

பாடிக் கொண்டிருந்த அந்த பாடல் அதுவாக நிறுத்தப்பட, மேலும் அவள் படபடப்பானாள்.

இதயத்துடிப்பு அவளின் செவியில் மத்தளம் கொட்டுவது போன்று ஒலிக்க நடுங்கிய குரலில்

"யாருன்னு கேட்கிறேன் ல"

"நான் உன் ரசிகன் சாக்ஷி... நீ வீணை வாசிக்கும் போது அப்படியே கேட்டுக்கிட்டே இருக்கனும் போல இருக்கும்... நீ வாசிக்கிற அழகை பார்த்துக்கிட்டே இரூக்கனும் போல இருக்கும்" என்று சொல்ல முகம் சுளித்தவள்,

"இடியட்... வெளியே போடா முதல்ல" என்று கோபமாக உரைக்க,

அவன் சத்தமாய் சிரித்துவிட்டு "என் வீட்டுக்கு வந்து என்னையே வெளியே போங்கிறியா ? உனக்கு ரொம்பதான் தைரியம்" என்றதும் அவள் அதிர்ச்சி தாங்காமல்,

"உன் வீடா ? யார் நீ ?" என்று மீண்டுமே கேட்டாள்.

"என் தம்பி என்னை பத்தி உன்கிட்ட சொல்லவேயில்லையா ?!" என்று வினவினான்.

அவள் சிறிது நேர யோசனைக்கு பின் "அப்போ நீங்க மகிழோட அண்ணன் வேந்தனா ?" என்றவள் கேட்டபடி நெற்றியில் துளிர்த்து வியர்வையை துடைத்து கொண்டான்.

"பரவாயில்லையே... கண்டுபிடிச்சிட்ட" என்றதும்

அவள் பெருமூச்செறிந்தபடி,

"ஸாரி... நீங்க மகிழோட அண்ணன்னு தெரியாம... ஆனா நீங்க இங்க இருக்கிறதை பத்தி மகிழ் சொல்லல" உள்ளுர பயம் இருந்தாலும் அவள் அவனிடம் காட்டிக் கொள்ளாமல் பேச,

"நான் வீட்டுக்குள்ள இருந்தது அவனுக்கு தெரியாது பாவம்... எங்கம்மா நான் தூங்கிட்டிருந்ததால கதவை பூட்டிட்டு வேலைக்கு போயிட்டாங்க" என்றான்.

"ஓ" என்றவளுக்கு யோசனையாய் இருந்தது. மகிழின் தமையன் ஏன் தன்னிடம் இப்படி எல்லாம் பேச வேண்டும் ?

ஏன் தான் இருப்பதை காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என அவள் தனக்குள்ளயே குழம்பியிருக்க,

"அப்புறம் எப்படி இருக்க சாக்ஷி ?" என்று சகஜமாய் அவன் கேட்கவும்,

அவள் உடனடியாக,

"ஹ்ம்ம்... நல்லா இருக்கே ண்ணா" என்று பதட்டத்தோடு பதிலளித்தாள்.

"என்ன சொன்ன ? அண்ணாவா..?" அவன் வெறுப்போடு கேட்க,

"நீங்க மகிழுக்கு அண்ணாதானே... அதான்... ஏன் ண்ணா அப்படி கூப்பிட கூடாதா ?" என்றவள் கேட்டதுதான் தாமதம்.

அவனுக்கு கோபம் தன் எல்லையை மீற,

"அடிங்க... திரும்பியும் அண்ணங்கிற...
அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி என்னை பொறுக்கின்னு கூப்பிட்ட" என்று கேட்டுவிட,

அவள் புரியாமல் "நான் எப்போ ண்ணா உங்களை அப்படி கூப்பிட்டேன் ?" என்றவள் கேள்வி எழுப்ப,

அவள் கழுத்தை அவன் கரம் நெறித்தபடி "ஏய் இன்னொரு தடவை உன் வாயால இருந்து அண்ணங்கிற வார்த்தை வந்துது... உன்னை கொன்றுவன் பார்த்துக்கோ" என்க, அவள் பதறிப் போனாள்.

அவன் மெல்ல தன் கரத்தை விலக்க,

அவள், "நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி என்கிட்ட நடந்துக்கிறீங்க" என்று அவள் கேட்க,

"நீ என்னை அசிங்கப்படுத்தினதை மறந்திருக்கலாம் சாக்ஷி... ஆனா என்னால மறக்க முடியலயே... அன்னைக்கு கோவில்ல கீழ விழ போன உன்னை தாங்கி பிடிச்சேன்... அதுக்கு போய் என்னை பொறுக்கின்னு சொல்லி என் சட்டையை பிடிச்சி அங்கிருந்தவங்க கிட்ட எல்லாம் அடி வாங்க வைச்சிட்ட... எனக்கு எவ்வளவு அவமானமா இருந்துச்சு தெரியுமா ?" என்றவன் ஆக்ரோஷமாய் நடந்தவற்றை சொல்லவும் அவள் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்திக் கொள்ள முயற்ச்சித்தாள்.

ஆனால் அப்படி ஒரு சம்பவம் அவள் நினைவில் பதிவாக கூட இல்லை.

அவள் யோசித்திருக்கும் போதே, அவள்
அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிரே இருந்த டேபிளில் அவன் வந்து அமர அவன் கால் அவள் காலில் இடிப்பட்டது.

அவள் துடித்தெழுந்து கொள்ள,
அவள் தோளை பற்றி "உட்காரு சாக்ஷி" என்று அவளை எழுந்திருக்க விடாமல் தடுத்தான்.

அவன் கரத்தை தட்டிவிட்டவள், மீண்டும் தட்டுத்தடுமாறி எழுந்திருக்க முற்பட,

"வேண்டாம் சாக்ஷி... நீ எழுந்திருச்சன்னா... என் கை உன் மேல ஏடாகூடாம பட வேண்டியிருக்கும்... அன்னைக்கு தெரியாம பட்டுது... இன்னைக்கு தெரிஞ்சே படும்" என்று அவன் வன்மத்தோடு எச்சரிக்க, அவள் உச்சபட்ச அதிர்ச்சியோடு சிலை போல் அமர்ந்து கொண்டாள்.

நெருப்பிற்கிடையில் சிக்கியது போல் அவள் தவிக்க, அவன் கால்களோடு உரசியிருந்த தம் கால்களை தூக்கி சோபாவின் மீது வைத்து கொண்டாள்.

எந்த புறம் அவன் பார்வை இருக்குமென்பது புரியா வண்ணம் அவள் தவித்துக் கொண்டிருக்க,

அவள் உடலெல்லாம் நடுக்கமுற்றது.

"இப்போ ஏன் நீ இவ்வளவு பயப்படிற ?" என்று சொல்லியபடி அவள் தோளைத் அவன் தொடவும் உடனடியாய் தட்டிவிட்டவள், அருகிலிருந்து பேகை துழாவி ஒரு சிறு கத்தியை எடுத்து காண்பித்தாள்.

அவன் கலீரென்று சிரித்துவிட்டு "பெரிய வீராங்கனைதான்... கத்தியெல்லாம் காண்பிக்கிற... நான் என்னடி உன்னை ரேப்பா பண்ண போறேன்... அவ்வளவு சீனெல்லாம் இல்லை.... உள்ளே வை" என்று சொல்லி எள்ளி நகைத்தான்.

அவள் உறுதியாய் அந்த கத்தியை விடாமல் பிடித்தபடியே "நானும் மகிழும் காதலிக்கிறோம்... என்கிட்ட போய் நீங்க இப்படி நடந்துக்கலாமா ?! நீங்க செய்றது உங்களுக்கே தப்பா தெரியல" என்றவள் பொறுமையாக கேட்க,

"அதெல்லாம் சரி... நீ கத்தியை முதல்ல உள்ளே வை" என்றுரைக்க,

"மாட்டேன்" என்றாள் உறுதியோடு !

எங்கே அவன் தன்னை நெருங்கிவிடுவானோ என்ற பதட்டம் அவளுக்கு.

அவன் இறுக்கத்தோடு "அந்த கத்தியை நீயா உள்ளே வைச்சிட்டா நல்லது... அதை நான் பிடுங்கிட்டன்னு வைச்சுக்கோ... சேதாரம் உனக்கில்லை... உன் புடவைக்கு... பரவாயில்லையா ?" என்று கேட்ட நொடி அவள் கரத்திலிருந்து கத்தி தடுமாறி தரையில் விழ...

அந்த கத்தியை அவன் எடுத்து
"தேவையான பொருளை இப்படி தவற விட்டுட்டியே" என்று அவனே அதை அவள் பேகில் நுழைத்தான்.

சாக்ஷி தலையை கவிழ்ந்து "என்னை விட்டிருங்க ப்ளீஸ்... நான் போகனும்" என்று கெஞ்சினாள்.

"போகப் போறியா ? இன்னும் கொஞ்ச நேரத்தில மகிழ் வந்து நீ எங்கன்னு தேடுவானே சாக்ஷி" என்றவன் கிண்டலாய் கேட்க,

அவள் தன் கரத்தை கூப்பியபடி "நான் ஏதோ கோவில்ல உங்களை அவமானபடுத்திட்டேன்னு சொன்னிங்க இல்ல... அது ஏதோ தெரியாம அப்படி நடந்திடுச்சு... ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க.." என்று இறங்கிய குரலில் அவள் கேட்டதும்

அவன் சிரித்துவிட்டு "நீ இவ்வளவு இறங்கி வரும் போது... நானும் கொஞ்சம் இறங்கி வந்தாதான்னே நல்லா இருக்கும்... ஸோ ஒரு முத்தத்தோடு நம்ம யுத்தத்தை முடிச்சிப்போம்" என்றவன் சொல்லிய மாத்திரத்தில் பதறிப் போனவள் அவன் நெருங்கும் முன்னர் அவள் முகத்தை முழங்காலில் புதைத்து கொண்டு,

"வேண்டாங்க ப்ளீஸ்... நான் உங்க தம்பியை ரொம்ப காதலிக்கிறேன்" என்றவள் அழுதமேனிக்கு உரைக்க,

"ப்ச் திரும்ப திரும்ப அதையே சொல்லாத டி... எனக்கு கடுப்பாகுது... உன்னை என் தம்பி பொண்டாட்டி எல்லாம் என்னால சத்தியமா கற்பனையில கூட நினைச்சி பார்க்க முடியாது" என்றான் வெறியோடு !

அவள் நிமிராமலே "நீங்க பேசிறதும் நடந்துக்கிறது எதுவும் சரியில்லை... மகிழுக்கு மட்டும் இதை தெரிஞ்சுதுன்னா ?" என்றதும்,

"என்னடி மிரட்டிறியா ? அவன் எனக்கு தம்பி... நான் அவனுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்... முதல்ல நீ காதல் கீதல்னு சொல்லிட்டு என் தம்பி கூட சுத்திற வேலை வைச்சுக்காதே... கனவில கூட நீ மகிழை கல்யாணம் பண்ணிக்க முடியாது... ஏன்னா உன்னை மாறி குருட்டு பொண்ணை எங்க அம்மா அப்பா மருமகளா ஏத்துக்க மாட்டாங்க..." என்றவன் சற்று நிறுத்தி

"ஆனா நீ கவலைப்படாதே சாக்ஷி... நான் உன்னை பார்த்துக்கிறேன்... உனக்கு தேவையானதெல்லாம் செஞ்சி தர்றேன்... ஜஸ்ட் பீ வித் மீ..." என்று சொல்லி அவளை நிமிர்த்தி அவள் கன்னங்களை வருட,

அவன் கரத்தை தட்டி விட்டவள் "செருப்பு பிஞ்சிரும் ராஸ்கல்... என்னடா நினைச்சிட்டிருக்க உன் மனசில... நீ மகிழோட அண்ணங்கிறதாலதான் இவ்வளவு நேரம் பொறுமையா பேசிட்டிருக்கேன்" என்று வார்த்தைகளை தீயாய் உதிர்த்தாள்.

"புரிஞ்சிக்கோடி அவன் உன்னை காதலிக்கல... அவனுக்கு உன் மேல இருக்கிறது பரிதாபம்... அவ்வளவுதான்..." என்க,

"அப்படி யெல்லாம் இல்ல... அவரு என்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறாரு... நீங்க மட்டும் இப்படி என்கிட்ட நடந்துக்கிறது மட்டும் அவருக்கு தெரிஞ்சா " என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
"உயிருக்கு உயிரா காதலிக்கிறானா? லூசா நீ... போனா போதுன்னு பாவம் பார்த்து உனக்கு வாழ்க்கை கொடுக்கிறேங்கிறான்... அது வெறும் பச்சாதாபம்... காதல் இல்லை... இன்னும் கேட்டா அவன் உனக்கு போட போறது பிச்சை" என்க,

அந்த வார்த்தை மரணத்துக்கு நிகரான வலியை அவளுக்கு கொடுத்ததென்றே சொல்ல வேண்டும்.

கோபத்தோடு, "நீங்க சொல்ற எதையும் நான் நம்ப மாட்டேன்" என்றாள்.

"நீ நம்பலன்னாலும் அவனுக்கு உன் மேல இருக்கிறது பச்சாதாபம்தான் டி.. அவன் போடிற பிச்சைக்கு நான் பெட்டர் இல்ல... நீ யோசிச்சி சொல்லு... நானே உனக்கு கால் பன்றேன்... கனடா போறதுக்கு முன்னாடி" என்று அவன் சொல்லி முடித்த சில கணத்தில் அந்த இடமே நிசப்தமாய் மாறியது.

ஏதோ ஒரு கோரமான கனவை கண்டது போன்ற உணர்வு. அந்த மூழ்கிய இருளுக்குள் எது கனவு நிஜம் என்று பிரித்தறிய முடியாத நிலை.

யாரென்றே அறியாத ஒருவன் இந்தளவுக்கு தன்னிடம் பேச முடியுமா ?!

அங்கே இன்னும் அவன் இருப்பதான உணர்வு மட்டும் அவளுக்கு நீங்கவில்லை. தன் செவிகளை தீட்டி கேட்டவளுக்கு அங்கே எந்த சத்தமும் ஒலிக்காமல் அமைதியாயிருக்க, கால்களை தரையில் இறக்கியவள்
அமர்ந்திருந்த இடத்தை விட்டு இம்மியளவும் நகராமல், எழிலும் மகிழும் வரும் வரையில் அதிர்ச்சியில் அசைவின்றி கிடந்தாள்.

****************

மகிழுக்கு அவள் சொன்னதை கேட்க கேட்க நிறுத்தாமல் கண்ணீர் வழிந்தோடியபடியே இருக்க அவன் மொத்தமாய் நனைந்திருந்தான்.

ஆனால் அவள் திடமாய் நின்று கொண்டிருக்க,

அவன் வேதனை தாளாமல் "என்கிட்ட அப்பவே சொல்லி இருக்கலாம் இல்லடி" என்றவன் கோபம் கலந்த தொனியில் கேட்க,

"இந்த கண்ணு தெரியாதவ சொல்றதை நீங்க நம்பியிருப்பீங்களா மகிழ்?" என்று ஏளனமாய் கேட்க,

"சமாளிக்காதடி... நீயென்ன நம்பலன்னு சொல்லு" என்றவன் பார்வையில் கோபம் எரிமலையாய் வெடித்திருக்க,

"ஆமா... நம்பலதான்... எல்லோருமே ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லும் போது நான் என்ன பண்ண முடியும்... ?" என்று தன்னிலையை அவள் எடுத்துரைக்க,

அவளை விழி இடுங்க பார்த்தபடி "எல்லோருமேன்னா ?" என்று கேட்கவும்

"உங்க பெஸ்ட் ப்ரண்ட் ஷாலினி... உங்க கூட பிறந்த அண்ணன்... ஏன் மாயா உட்பட... ? இதெல்லாம் இப்படின்னா... நான் உங்ககிட்ட என்னை முதல்ல முதல்ல பார்த்ததும் என்ன நினைச்சிங்கன்னு கேட்டேன்னே... அதுக்கு என்ன சொன்னிங்க... ஞாபகம் இருக்கா ?!"

"என்ன சொன்னேன் ?"

"ஹ்ம்ம்... அழகு அறிவு திறமை எல்லா இருக்கிற உனக்கு கண் பார்வையில்லைன்னு நம்ப முடியல... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னு சொன்னிங்க"

"அய்யோ... அதை நீ பரிதாபம்னு எடுத்துக்கிறதா ?"

"வேறெப்படி எடூத்துக்கிறதாம்"

"ஏ பையத்திக்காரி... நான் உன்னை உண்மையா காதலிச்சன்டி... உன் கவிதையில ஆரம்பிச்சி உன் புத்திசாலித்தனமான பேச்சில நீ என்கிட்ட பிரப்போஸ் பண்ண விதத்தில... உன் வீணையோடு இசையில.. முக்கியமா உன்னை நான் முதல் தடவை பார்த்த போது என் குரலை கேட்டதும் நீங்க மகிழ்தானேன்னு கேட்டியே... அப்போ... அந்த நிமிஷம்" என்றவன் வரிசையாய் சொல்லிக் கொண்டே போக

"போதும் மகிழ் நிறுத்துங்க" என்றவளின் கண்ணீர் கிட்டதட்ட உடைப்பெடுக்க,

அவள் உணர்வுகள் அவன் சொன்னதை கேட்டு எத்தகைய நிலையை எட்டியதென்று சொல்வதற்கு வார்த்தையில்லை.

இதையெல்லாம் முன்னமே கேட்டிருக்க கூடாதா என்று ஏங்கிய மனதிற்கு எத்தகைய சமாதானம் உரைப்பாள்.

அந்த மாயக்கண்ணாடிதிரை கொஞ்சம் விட்டால் உடைந்து போயிருக்க கூடும்.

அவள் அவனிடம் கெஞ்சிய நிலையில் "ப்ளீஸ் மகிழ்... இதெல்லாம் பத்தி நாம இப்போ பேசி என்னவாக போகுது..." என்றாள்.

"ஆமாம் இப்போ பேசி என்னவாக போகுது... பேச வேண்டிய நேரத்தில எதையும் பேசாம விட்டதினால வந்த வினை... உன்னை போய் நான் உண்மையா நேசிச்சேன் பாரு... போயும் போயும் உன்னை நினைச்சிட்டு என்னை உண்மையா நேசிச்சவளை புரிஞ்சிக்காம இருந்தேன் பாரு" என்று தன்னை தானே அவன் கடிந்து கொள்ள 'நானும் உங்களை உண்மையாதான் நேசிச்சேன் மகிழ்' என்று சொல்ல வாயெடுத்தெவள் அதை சொல்லாமலே நிறுத்திக் கொண்டாள்.

அவளை அடங்காத கோபத்தோடு பார்த்தவன் "அன்னைக்கே நீ எங்க அண்ணனை பத்தி சொல்லி இருந்தேன்னா ?!" என்று கேட்டவனை

அவள் கோபத்தோடு பார்த்து "சொல்லி இருந்தேன்னா நீங்க நம்பி இருப்பீங்களாக்கும்... அன்னைக்கு நான் ஷாலினி உங்களை காதலிக்கிறாங்கன்னு சொன்ன போது ... நீங்க என்ன சொன்னிங்க ? ஷாலினி என்னோட பெஸ்ட் ப்ரண்ட்டு... யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை நீ எங்க நட்டை கலங்கப்படுத்தன்னு என்கிட்ட கோபப்பட்டீங்க... நட்புக்கே அப்படின்னா கூடபிறந்த அண்ணனை பத்தி எப்படி ? அதுவும் அவர் என் மேல விருப்பப்படிறாருன்னு சொன்னா......" தவிப்போடு நிறுத்தி மீண்டும் பேசியவள்

"நல்லா யோசிச்சி பாருங்க மகிழ்... உங்க அண்ணன் வீட்டிலிருந்ததே உங்களுக்கு தெரியல.. நான் எதை சொல்லி எப்படி உங்களை நம்ப வைப்பேன்... " என்றவள் கேட்க அவன் தன் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் மண்டியிட்டபடி மணல் மீது தன் கரத்தால் குத்தினான்.

பகைமையை விட துரோகம் வலி மிகுந்தது.

உடன் பிறந்த தமையனே தன் உணர்வோடு விளையாடியிருக்கிறேன் என்பதை எவ்விதம் அவனால் தாங்கி கொள்ள முடியும் ?

இயலாமையும் கோபமும் அவனை ஒருசேர ஆட்டிவித்தது.

ஜென்னிக்கு அவன் நிலையை பார்த்து உள்ளூர துடிக்க, எப்படி அவனை தேற்றுவது என்று புரியாமல் தவித்திருந்தாள்.

உயிர் உடலுக்கு பாரமாகுமா ? ஆனால் அந்த கணம் அவன் தேகத்திற்கு உயிர் பாரமாய் தோன்றியது என்றே சொல்ல வேண்டும்.

மனதை கொன்றுவிட்டு வாழ்வதை விட மரணித்து போவதே மேல் என்ற எண்ணம் தோன்ற இன்னும் உக்கிரமாய் தன் கரத்தை அழுத்தி குத்தினான்.

அவனாக அமைதியடைவான் என்று எண்ணியவளுக்கோ அவன் இன்னும் தீவிரமாய் மாறுகிறானே என்பதை பார்த்து அச்சம் தொற்றிக் கொண்டது.

இதற்கு மேல் அமைதியை இருத்தல் சரியல்ல என்றெண்ணி, "மகிழ் வேண்டாம் ப்ளீஸ்..." என்றவள் அவனை சமாதானப்படுத்த வேண்டி அவன் தோளினை தொட்டாள்.

அதே சமயம் அவனுக்காக அவள் வடித்த கண்ணீரும் அவன் மீது விழுந்து அவன் உணர்வுகளை தொட்டுச் சென்றது.

அவளின் வார்த்தைக்கும் கண்ணீருக்கும் மதிப்பு கொடுத்து ஒருவாறு அமைதியானவன்,

அவளை நிமிர்ந்து பார்த்த பார்வையில்,

நடந்ததை இனி மாற்றவே முடியாதா... ? என்று கேள்வி இருக்க,

அவன் பார்வையின் பொருளூணர்ந்தவள், முடியாது என்பது போல் பார்வையாலயே சமிஞ்சை செய்தாள்.

அவன் மனம் இன்னும் அமைதி நிலையை எட்டாமல் அவள் தோள்மீதிருந்த கரத்தை அவன் பிடித்து கொள்ள, அவள் தவிப்புற்றாள்.

வாழ்க்கை பூராவும் பற்றி கொள்ள அவள் விரும்பிய கரம் அது.

ஆனால் அந்த கனவெல்லாம் கானல்நீராய் போனப்பின், காலம் தாழ்ந்த அவனின் பிடியை ஏற்கமுடியாமல் அவள் அவதியுற, அவனோ குற்றவுணர்வோடு அவள் கரத்தை தன் விழிநீரால் நனைத்தான்.

"மகிழ் என்ன பன்றீங்க" என்றவள் அவஸ்த்தையோடு கேட்க,

அவள் கரத்தை விடாமலே "நான் பெரிய முட்டாளா இருந்திருக்கேன்டி.. என்னை நம்பி வந்த உனக்கு நான் அநியாயம் செஞ்சிட்டேன் சாக்ஷி" என்று சொல்லி கதறினான்.

அவள் கனத்த மனதோடு அவனருகில் அமர்ந்து, "ப்ளீஸ்... அழாதீங்க மகிழ்... இதுல உங்க மிஸ்டேக்னு எதுவும் இல்லை... நாம சேரக் கூடாதுன்னு விதி இருக்கு... அது நடந்திடுச்சு... ஆனா உண்மையை சொல்லனும்னா அதை விட பெட்டரான லைஃப்... பெட்டரான வொய்ஃப் உங்களுக்கு கிடைச்சிருக்கா... நீங்க லக்கிதான்" என்க,

அப்போது அவளை அவனை நிமிர்ந்து பார்க்க இரு விழிகளும் முதல் முறையாய் ஒரு சேர சங்கமித்து கொண்டன.

உணர்வுகளோடு மட்டுமே பேசியவர்கள் முதல் முறையாய் விழியோடு பேசிக் கொள்ள, அது மடிந்துவிட்ட அவர்களின் காதலுக்காக அவர்கள் செலுத்திய மௌன அஞ்சலி.

ஏக்க பெரூமூச்சொன்றை வெளிவிட்டவன் மெல்ல அவள் கரத்தை விடுவிக்க,
அப்போது அவனை முழுவதுமாய் மூழ்கடித்திருந்த சோகத்திலிருந்து அவள் விழியின் விசையால் கரையேறியிருந்தான்.

மெல்ல தன் அழுகையை உள்வாங்கி கொண்டவன்,

"நீ சந்தோஷமா இருக்கியா சாக்ஷி ?" என்று கேட்டவனின் பார்வையில் அக்கறையோடு மீதமாய் கொஞ்சம் காதலும் ஓட்டிக் கொண்டிருந்ததை மறுக்க முடியாது.

அவள் உடனே தன் முகத்தில் தேங்கியிருந்த சோகத்தை எல்லாம் வடித்துவிட்டு அவனை புன்முறுவலோடு நோக்கியபடி,

"என்ன மகிழ் ? இப்படி கேட்டீங்க? இன்னைக்கு இந்த உலகத்திலயே ஹேப்பியஸ்ட் உமன் நான்தான்னு சொல்வேன்... டேவிட் மாதிரி ஒரு ப்ரண்ட்... விக்டர் ஜென்னிஃபர் மாறி ஒரு அம்மா அப்பா.. அப்புறம் ராகவ் மாதிரி ஒரு பியாஃன்ஸின்னு கடவுள் எனக்கு கொடுத்ததெல்லாமே தி பெஸ்ட்தான்" என்று பூரிப்போடு உரைப்பது போல் காட்டிக் கொள்ள,

"கேட்கவே சந்தோஷமா இருக்கு சாக்ஷி" என்றவன் சொன்ன போதும், மனதில், அவள் சொன்னதெல்லாம் உண்மைதானா என்ற சந்தேகம் துளிர்விட்டது.

இருவருமே மேலே என்ன பேசுவது என்று யோசித்த வண்ணம் இருக்க அந்த கணம் அவர்களுக்கிடையில் ஓர் அழுத்தமான மௌனம் குடியேறியது.

நேரம் கடந்து செல்வதை அவனுக்கு உணர்த்த ஜென்னி தன் கைகடிகாரத்தை பார்த்தவாறு,

" நான் கிளம்பட்டுமா மகிழ்?" என்று தயக்கதோடு கேட்டாள்.

அவளை விழி இடுங்க பார்த்தவன்,

"நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவே இல்லை ஜென்னித்தா விக்டர்" என்க, அவன் பேச்சு தோரணை மாறியிருந்ததை அதிர்ச்சியாய் கவனித்தாள்.

இத்தனை தூரம் வந்த பின் உண்மையை தெரிந்து கொள்ளாமல் விடுவதா என்றெண்ணத்தோடு,

மகிழ் அவளிடம்"ஏன்... சாக்ஷி ... ஜென்னித்தாவா மாறனும் ? ? ?

சாக்ஷிக்கு என்னாச்சு?

தட்ஸ் தி மில்லியன் டாலர் க்விஷின்... ரைட்.... "

என்று கேட்டவன் தீர்க்கமான பார்வையோடு அவள் பதிலை எதிர்நோக்க,

அவளோ அந்த கணம் அவனிடம் எதை சொல்லி சமாளிப்பது என்று தீவிரமாய் யோசிக்கலானாள்.
Hi friends,
பிழைகள் இருப்பின் பொறுத்தருளூங்கள்.
உங்கள் கருத்தை மறவாமல் தந்தருளுங்கள்.

அடூத்த பதிவும் விரைவாக தருகிறேன். ஆனால் அடூத்த பதிவு இதுவாகதான் என்ற எதிர்பார்ப்புகளோடு படிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
Its unpredictable! !!

இந்த Ud a பழைய பதிவுகளோட வர சீன்களோட ஒத்துப்பாருங்கள். இறுதிதியாய் ஜென்னி மகிழிடம் சொன்னது, வேந்தன் மகிழ் பிறந்த நாளன்று சந்தித்தது எல்லாமே கனெக்ட் ஆகும். அதை படிச்சி இதை செக் உங்களுக்கு குழப்பம் சரியாகும். எல்லாமே 10 ud kullla than irukum



 




Last edited:

stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
Wow awesome and wonderful epi ma'am
 




Thadsa22

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
602
Reaction score
1,179
Location
Switzerland
Hi mam

சாக்ஷி அன்று டேவிட் வண்டி முன்னால் ஓடி வந்து விழுந்து எதனால்,யார் அவரை துரத்தியது அல்லது யாரிடமிருந்து தப்பித்து வந்தார்,அப்பொழுது வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா,அப்படித்தானே மருத்துவர் டேவிட்டிடம் விபத்து நடந்து முருத்துவமனையில் சேர்த்தபோது கூறினார்,அப்போ இதற்கும் வேந்தனுக்கும் சம்மந்தமில்லையா.

நன்றி
 




Jasha

மண்டலாதிபதி
Joined
Mar 11, 2018
Messages
164
Reaction score
307
Location
Karaikudi
Situation song kalakkuringa
naanga ethirpaakkala yaenna sinna incident varavae ivlo naal aahiduccu
Sashi jennithava maarinathu paeriya incident atha vivarikkanumna avalukku nadantha kodooratha sollanum athukku ava thayarahanum
Athoda antha visaya mahilukku naeradiya thaeriyathu maya moolama thaan solluvinga
So wait panrom
Ippothakku mahil jenitha face to face meet pannra alavu vanthirukkaanga
Rahav thaan ippo irukka paeriya kolappam marriage ku epdi othukittanu
Seekram athayum clear pannidunga
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
பல நாள் அழுத்தம், பல நாள் வேதனை எல்லாம் மடை திறந்த வெள்ளம் என பிரவாகம் எடுத்தது.. யாரை நோக சதி செய்த விதியையா? சூழ்நிலை கைதியாகிய சாக்ஷியையா? கண்மூடி உலகம் இருள் என்று இருந்துவிட்ட மகிழையா? காதலில் கள்ளம் வந்தால் கனங்களும் கூட வந்து விடுமே.. ஒருவர் வார்த்தைக்கு செவி சாய்த்தல் சிறந்த செயல் அதுவும் நுண்ணிய உறவுக்களுக்கு அது தான் அடி நாதம்..பிசறிய வீணையின் தந்திகளை நேர் செய்யாமல் வீணையை துறந்து வீண் செய்தனரே இரு அழகு அகமுடையோர்..இருவருக்கும் மனதில் உதிரம் தான் கொட்டுகிறது என்ன மௌனமாக.. தேடி தொலைத்தனர் இருவரும்.. சற்று உருக்கமான பகுதி தான்..

"யாரை நோக என் சகி..
கண் திரையால் காயமடைந்தாய் என
கண்ணிருந்தும் காட்சி பிழையாய் நான்
கடந்துவிட்ட காலங்கள் திரும்பி வாராதா கண்ணம்மா..
முண்டாசு கவியுடன் மூழ்கி போகமாட்டோமா..
ஆவி தழுவ எழுந்த ஆவலும் நீர்த்ததேனோ?
இன்னும் ஒர் பிறவி வாய்க்காதோ??
வாய்த்தால் பாரதியின் பா போல்
அந்த காணி நிலத்தில் நீயும் நானும் மட்டும்!!!"
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top