Naan aval illai - 43

SAROJINI

Well-known member
#53
எழில் விடாமல் "சும்மா இரு மாயா... எப்படி அவ்வளவு தூரம் தனியா போவ... அதுவும் இருட்டிடுச்சு வேற" என்று சொல்லி தன் தம்பியிடம் சமிஞ்சையால் அழைத்து போக சொல்லி கட்டாயப்படுத்தினாள்.

அவன் சலிப்போடு "சரி வர சொல்லு... " என்றதும்

"அப்படி ஒண்ணும் அவர் சலிச்சிக்கிட்டு என்னை கூட்டிட்டு போக தேவையில்லை... எனக்கு போக தெரியும்" என்றவள் ஒரு நொடி கூட தாமதிக்காமல் செல்லவும் எழில் வேதனையோடு தம்பியை நோக்கினாள்.

அவன் உணர்ச்சிகளற்ற பார்வை ஒன்றை உதிர்த்துவிட்டு அப்படியே இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

எழிலுக்கும் மகிழின் அந்த இறுக்கத்தை நம்ப முடியவில்லை.

அவனின் இறுக்கம் தளர வேண்டுமெனில் மாயா அவனை புரிந்து கொண்டு இறங்கி வர வேண்டும். ஆனால் அது ஜென்னியால் மட்டுமே சாத்தியம்.

இப்போது இருக்கும் நிலைமையில் ஜென்னிக்கும் எந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் தருவதென்றே புரியவில்லை. வரிசையாய் பிரச்சனைகள் அணிவகுத்து அவள் மனோதிடத்தை தகர்த்து கொண்டிருக்க, டேவிட் இப்போது தன் அருகாமையில் இருந்திருக்க கூடாதா ?

ஏங்கி தவித்தது அவள் மனம். அவனை பார்ப்பதற்கும் பேசுவதற்கும்.

ஆனால் அப்படி செய்துவிடவே கூடாதென என அவளை அவளே கட்டுப்படுத்தி கொண்டு இருக்க, டேவிடின் நினைவு அவள் உறக்கத்தை களவாடிக் கொண்டது.

இரவெல்லாம் விழித்திருந்ததினால் அவள் அகம் முகம் என எல்லாம் சோர்ந்து போயிருக்க, அப்போது அவளின் அலைப்பேசி ரீங்காரிமிட்டது.

அதனை எடுத்து அவள் "ஹெலோ" என்க, டேவிடின் தந்தை தாமஸின் குரல் ஒலித்தது.

அவள் சற்று தெளிவுப்பெற்று "என்ன விஷயம் அங்கிள் ?" என்க,

"நீ இப்போ எங்க இருக்கம்மா ?" என்று கேள்வி எழுப்பினார்.

"சென்னையிலதான் அங்கிள்... ஏன் ?"

"கொஞ்சம் உடனே வீட்டுக்கு வர முடியுமா ?" என்று கேட்க,

அவள் யோசித்துவிட்டு மேலே எதுவும் விசாரிக்காமல் "வர்றேன் அங்கிள்" என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

விரைவாய் அவள் டேவிட் வீட்டை அடைய தாமஸ் முகப்பறையில் அமர்ந்திருக்க "என்ன அங்கிள்? என்னாச்சு?" என்றவள் கேட்டு அவர் கவலை தோய்ந்த முகத்தை கூர்மையாய் பார்த்தாள்.

அவர் தயக்கத்தோடு "டேவிட்" என்று ஆரம்பிக்கவும்

"டேவிடுக்கு என்ன. ?" என்று பதறினாள்.

"டேவிட் சென்னையை விட்டு போறானாம்... அவனுக்கு ரிலேக்ஸேஷன் தேவைப்படுதுன்னு ஏதோஏதோ சொல்றான்... என்னால அவன்கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ண முடியல... எனக்கென்னவோ அவன் நீ சொன்னா கேட்பான்னு தோணுது" என்றவர் உரைத்த மறுகணமே தாமதிக்காமல் அவன் அறை நோக்கி விரைந்தாள்.

டேவிட் அப்போதுதான் தன் படுக்கையில் அமர்ந்தபடி ஒரு ஊதா நிற ஷர்ட்டை தடவி பார்த்து தன் வேதனையை உள்ளூர விழுங்கி கொண்டிருக்க, ஜென்னி அவனின் அந்த செய்கையை விசித்திரமாய் பார்த்தாள்.

'அது என்ன ஷர்ட் ?' என்று அவள் மனம் கேட்ட கேள்விக்கான விடையை அவன் மட்டுமே சொல்ல கூடும்.

Hi friends,
திரும்பியும் count down start ஆகிடுச்சு. கதையை முடிக்கனும்னா தினம் ஒரு பதிவு கொடுக்கனும் போல.


முயற்சி செய்து இறுதி நாளுக்கு முன் முடிக்க பார்க்கிறேன்.

முந்தையை பதிவிற்கு கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி. பிழையேனும் இருந்தால் பொறுத்தருளுங்கள்.

உங்கள் கருத்துக்கள்தான் என் பலம்.

ஆதலால் உங்கள் கருத்தை மறவாமல் தந்து ஊக்குவிக்கும்.

அடுத்த பதிவு ஜென்னி டேவிடுக்காக Spl
nice epi
 

Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top