Naan aval illai - 45

#41
ஐயோ இது என்ன? ரோட்டில் பார்த்தும் விட்டு சென்றானா?
:eek:episode
 

SAROJINI

Well-known member
#44
சையத்தின் திருமண நிகழ்வில் ஆங்காங்கே சில உறவுகளின் மனசப்புகள் வெளிப்பட்டு கொண்டிருக்க, வேற்று மத பெண்ணை மணந்து கொள்கிறான் என்ற வருத்தம்தான் எல்லோருக்கும். இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணங்களில் இவையெல்லாம் சகஜமாகிவிட்ட நிலையில் அது காதல் திருமணமும் அல்ல. சில சர்ச்சைகளால் அரங்கேறிய திருமணம் வேறு.

ஆனால் இதையெல்லாம் மறக்கடிக்கும் விதமாய் சில முக்கிய நட்சத்திரங்களின் வருகை அந்த இடத்தையே அல்கல்லோலப்பட வைத்திருந்தது.

அங்கே இருந்த பலரும் கடைசி வரையில் ராகவின் வருகைக்காக ஆவலோடு எதிர்பார்த்திருக்க, மீடியா முதற்கொண்டு எல்லோருக்குமே ஏமாற்றம்தான் மிச்சமானது. அவன் வரவில்லை.

இதற்கிடையில் மதுவின் நிலைமைதான் பரிதாபகரமாய் இருந்தது. புரியாத புதிரான சடங்குகளுக்கு இடையில் தவித்துப் போயிருந்தாள். அதே நேரம் மதுவின் பெற்றோர்களோடு சில முக்கிய உறவினர்களை தவிர்த்து வேறு யாரும் அந்த திருமண சடங்குகளில் பங்கேற்கவில்லை.

மனிதம் என்பதை விட மதம் முக்கியதுவம் வாய்ந்ததாக போய்விடுகிறது.

மதுவின் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும் போது கை கொடுத்து உதவாத அவளின் உறவினர்கள், அவள் இக்கட்டில் சிக்கியிருக்கும் போது அவதூறாக பேச மட்டும் கூடினர் என்பதுதான் கொடுமை.

ஆதலால் அவர்கள் திருமணத்திற்கு வராததினால் பெரிய இழப்பு ஒன்றுமில்லை.

அதுவும் அவனை போன்றவனுக்காக எதையும் இழக்கலாம் என்றளவுக்காய் அவள் மனநிலை அவனை பற்றி மட்டுமே சிந்திக்க தொடங்கியது.

அந்த சடங்குகள் அவளுக்கு புரியாமல் இருந்தாலும், அவனின் இன்பதுன்பங்கள் அனைத்திலும் துணையிருக்க வேண்டும் என்று அவளே மனதளவில் உறுதி பூண்டாள்.

மரணம் வரை அவனை பிரியவே கூடாது என்று அவள் தீர்க்கமாய் எண்ணி கொள்ள, அவன் கரத்தின் பற்றுதலில் அத்தகைய உறுதியையும் பாதுகாப்பையும் அவன் நிச்சயம் தருவான் என்பதையும் உணர்ந்து கொண்டாள்.

திருமணம் முடிந்து மதுவின் பெற்றோர்கள் அவளை கண்ணீரோடு விடையளிக்க, அந்த வீடும் அங்கே இருப்பவர்களும் அவளுக்கு பழக்கப்பட்டவர்கள்தான் எனினும் மனம் அவர்களோடு இயைந்து போக சிரமப்பட்டது.

சையத் அவள் சொல்லாமலே அவளின் மனநிலையை புரிந்து கொண்டான்.

ஜென்னியின் மீது கொண்ட காதல் தோல்விக்கு பிறகு வரிசையாய் அவனுக்கு பல தடங்கல்கள்.

ராகவினை எதிர்த்து கொண்டு அவன் மீண்டும் தமிழ் சினிமாவில் தலைதூக்க வேண்டுமெனில் அது பிரம்மபிராய்த்தனம்தான்.

அவனின் சினிமா வாழ்க்கையே முடக்கி போடப்பட்டிருக்கும் நிலையில் இந்த திருமணம் அவசியமா என்று எல்லோருக்குமே தோன்றியது.

ஆனால் நடந்த நிகழ்வால் மதுவின் குடும்பமே தலைகாட்ட முடியாமல் இருக்க, அதே நிலையில்தான் இவனுக்கும்.

எல்லாவற்றையும் சரி செய்ய இதை தவிர அவனுக்கு வேறுவழியில்லை.

அதே நேரம் மதுவை முழுமனதோடு ஏற்க தயாரான பின்னரே அவளை மணமுடித்தான்.

அன்று அவன் குடும்பத்தை பிரிந்திருந்த காலகட்டங்களில் அவனின் தனிமையை போக்கியதில் அவளுக்கு அதிக பங்குண்டு என்பதை அவன் மறந்திருக்கவில்லை.

அவள்தான் இனி தன்னுடைய உறவு என்று அவன் மனமாற்றி கொண்டவனுக்கு அப்போதைய சிக்கல்
அந்த முதலிரவின் காட்சியை எப்படி அரங்கேற்றுவது என்பதுதான்.


அதுவும் மதுவின் பார்வையில் அபரிமிதமாய் தெரிந்த பயபக்தியும் மரியாதையும் அவனை சங்கடபடுத்த, அவளை அருகில் அவன் அமர சொல்லி அரைமணி நேரம் கடந்திருந்தது.

அவளோ சலிப்புறாமல் அவள் கட்டியிருந்த புடவை முந்தியை சூழற்றி கொண்டிருந்தாள். அதுக்கு பெயர்தான் நாணமா என்றெல்லாம் அவளூக்கு தெரியாது. ஆனால் அவனுடன் சரிக்கு நிகராய் பார்த்து பேசுவதெல்லாம் அவள் இதுவரையிலும் கனவிலும் எண்ணியிராத ஒன்று.

பொறுமையிழந்தவன் மெல்லிய குரலில் "மது" என்றழைக்க, அவள் "சார்" என்று நிமிரவும், அவனுக்கு தூக்கிவாரி போட்டது.

"என்ன சொன்ன ?" என்றவன் அழுத்தி கேட்க,

அவள் அஞ்சியபடி "தெரியாம சொல்லிட்டேன்... இனிமே வாங்க போங்கன்னு கூப்பிட்டு பழகிக்கிறேன்" என்றாள்.

"எப்போ பழகிப்ப ?" என்றவன்
கேட்க,


"சீக்கிரமாவே ?" என்று வேகமாய் தலையசைத்தவளை பார்த்து புன்னகையித்தவன்,

"சரி... அது அப்புறமா பழகிக்கலாம்... இப்ப உட்காரு" என்று தன் அருகாமையில் அமர சொல்ல, உள்ளூர அவளை ஏதோ தடுக்க,

"என்ன மது நீ... பழைய பட ஹீரோயின் ரேஞ்சுக்கு ரியாக்ட் பண்ணிட்டிருக்க" என்றவன் சொல்லவும் அவள் வாய் விட்டு சிரித்தாள்.

அவளின் அந்த சிரிப்பில் அவனின் தயக்கம் மறைந்து அவளை அருகாமையில் இழுக்கவும் அவன் அருகில் அமர்ந்தவள் "அய்யோ சார்" என்று மீண்டும் பதறினாள்.

"மது" என்றவன் சீற்றாமய் விழிகளை உருட்ட,

"உம்ஹும் தப்பு தப்பு அப்படி கூப்பிட மாட்டேன்" என்று தன் கரத்தால் இரு காதுகளையும் பிடித்து கொண்டு மன்னிப்பு கோர,

அவள் கரத்தை பற்றி விலக்கியவன் "நீ எனக்கு செகரட்டிரி இல்லை... வொஃய்ப்" என்க, அந்த உறவை அவள் முழுமையாய் ஏற்க இன்னும் சில நாட்கள் பிடிக்குமே.

ஆனால் அதனை அவள் மனதில் ஆழமாய் விதைக்க எண்ணியவன், அவளின் வித்தியாசமான உடையலங்கராங்களை பார்த்தான்.

வெறுமையாய் இருந்த அவள் நெற்றியும் தலையை மறைத்தபடி இருந்த அந்த அழகான துப்பட்டாவும் அவளை அவர்கள் மதத்து பெண்ணாகவே காட்டி கொண்டிருந்தது.

அவன் அவள் தலையில் அணிவிக்கப்பட்டிருந்த சரிகையால் மின்னிக் கொண்டிருந்த துணியை விலக்கினான்.

அவள் நாணமுற தலையை கவிழ்ந்து கொள்ள, அவள் முகத்தை தன் கரத்தால் நிமிர்த்தி பிடித்தவன் "நீ எதுக்காகவும் உன்னை மாத்திக்க தேவையில்லை... எங்களை மாதிரியெல்லாம் டிரஸ் பண்ணனும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன்... உனக்கு எப்படி விருப்பமோ நீ அப்படியே இருக்கலாம்" என்றான்.

அவளுக்கு கண்ணீர் பெருகி ஊற்ற, "உங்களுக்கு எது விருப்பமோ அதுதான் எனக்கும்" என்றவள் தழுதழுத்த குரலில் கூறவும்,

"அப்படின்னா நீ இப்படி அழறது எனக்கு சுத்தமா விருப்பமில்லை" என்றவன் சொல்ல அவள் விழி நீரை துடைத்தபடி "அழல" என்றாள்.

அவன் குறும்பாக புன்னகையித்தபடி "இப்போ என் விருப்பம்" என்றவன் வார்த்தைகளால் விவரிக்காமல் பார்வையால் அவள் தேகத்தை தீண்ட,
அவன் எண்ணம் புரிந்து அவள் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.


அவளின் நாணமும் மௌனமும் அவனை கிறங்கடிக்க அவளின் கரத்தை பற்றி ஒவ்வொரு விரலாக முத்தமிட்டவன் முன்னேறி செல்ல அவள் நெகிழ்ந்து படுக்கையின் மீது சரிந்தாள்.

தன் கரத்தின் வளையத்திற்குள் அவளை சிறைபிடித்து நிதானமாய் அவள் உடை களைந்து ரசனையாய் அவளோடு புணர்ந்தவன், தன்னவளுக்கு காதலோடு கூடிய களவியல் பாடத்தை கற்பித்து அவளுடனான இன்பத்தில் கரைதொட முடியாமல் தானே அதில் கரைந்தும் போனான்.

சையத்தின் காதல் பொய்த்து போயிருக்கலாம். ஆனால் அவன் வாழ்க்கை பொய்த்து போகவில்லை.

**-***-****

மருத்துவமனையில் இருந்த வேந்தன் ஒருவாறு உடல் தேறி வீட்டிற்கு வந்திருந்தான். விஷயம் தெரிந்த மாத்திரத்தில் பதறி துடித்து போயிருந்தார் வள்ளியம்மை. ஞானசேகரனும் வேந்தனுக்கு ஏற்பட்டு விபத்தால் தன் கோபத்தில் இருந்து கொஞ்சம் இறங்கியிருந்தார்.

ஆனால் மகிழ் மட்டும் மேம்போக்கோய் தன் தமையனை கண்டும் காணாமல் விலகி இருந்தான். அவனை பார்க்கவும் பேசவும் முழுமையாய் தவிர்த்தான்.

அவன் கோபமுற்றிருக்கும் உண்மையான காரணம் குறித்து யாருக்கும் தெரியாது. அவனும் தெரியப்படுத்தவில்லை.

அதுவும் அல்லாமல் அவனுக்கு புற்றுநோய் இருக்கும் விஷயம் குறித்தும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவுமில்லை. அது தெரிய வந்தால் நிச்சயம் யாரும் தாங்கி கொள்ளவே மாட்டார்கள்.

ஓர் சுமைதாங்கியாய் தன் மனதிலயே எல்லாவற்றையும் சுமந்தபடி அவன் உள்ளூர புழுங்கி கொண்டிருந்தான்.

அன்று இரவு மகிழ் தன் அறையில் தனித்திருக்க, வேந்தன் அவன் கவனிக்காத சமயமாக பார்த்து உள்ளே நுழைந்தான்.

நோயாளிகளுக்கான அத்தனை அடையாளமும் அவன் முகத்தில் படர்ந்திருக்க,

மகிழ் அவனை பார்த்த கணம் "முதல்ல வெளியே போ"என்று சீற்றமடைய

"போறேன் மகிழ். ஆனா ஒரே ஒரு விஷயம் கேட்டுட்டு போயிடிறேன்" என்றான் நிதானத்தோடு !

"ஒண்ணும் வேண்டாம்" என்று முகத்தை திருப்பிக் கொள்ள

வேந்தன் அவனிடம், "ப்ளீஸ் மகிழ்... நான் அடிப்பட்டு கிடந்த போது என்னை ஹாஸ்பெட்டில சேர்த்தது யாருன்னு மட்டும் சொல்லு" என்க,

அவன் அதிர்ச்சியோடு திரும்பி "தெரிஞ்சி கேட்கிறியா இல்லை தெரியாம கேட்கிறியா ?"என்று கேள்வியை பார்க்க,

"தெரிஞ்சிக்கனும்னு கேட்கிறேன்"

அவன் யோசித்துவிட்டு வெறுப்பாய் பார்த்தவன், "நீ வாய்க்கு வந்ததெல்லாம் பேசி யாரை அவமானப்படுதினயோ அவதான்... உனக்கெல்லாம் பாவம் பார்த்திருக்கா பார்... அவளை கொன்னா என்னன்னு தோணுது" என்க,

வேந்தன் தவிப்போடு "சாக்ஷியை நான் பார்க்கனும் மகிழ்" என்றான்.

"எதுக்கு ? அவ நிம்மதியை கெடுக்கவா ?"

"நான் அவகிட்ட மன்னிப்பு கேட்கனும் மகிழ்"

"மன்னிப்பு கேட்டு உன் பாவ கணக்கை குறைச்சுக்கலாம்னு நினைக்கிறியா ?"

"நிச்சயமா இல்ல மகிழ்... அப்படியே நான் அவ காலிலயே விழுந்தாலும் நான் அவளுக்கு செஞ்சதை சரி பண்ண முடியாது ... "

"தெரியுது ல அப்புறம் எதுக்கு அவளை பார்க்கனுங்கிற ?" என்றவன் அலட்சியமாய் பார்க்க

"முடியல மகிழ்... ரொம்ப கஷ்டமாயிருக்கு ... அன்னைக்கு அவ ரோட்ல விழுந்து கிடந்த போது நான் கொஞ்சமும் இறக்கப்படாம சாகட்டும்னு விட்டுட்டு போனேன்... ஆனா எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்த போது அவ காப்பாத்தி இருக்கா பாரு? என் மனசாட்சி என்னை கொல்லுதடா " என்றவன் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் தளும்ப உரைக்க, மகிழ் அவன் சொன்னவற்றை கேட்டு இது எப்போது நிகழ்ந்தது என்று புரியாமல் பார்த்தான்.
:cry:
 

Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top