Naan aval illai - 51

sakthipriya

SM Exclusive
Author
SM Exclusive Author
#41
முத்தமா எல்லாம் மொத்தமா முடிஞ்சிருச்சே அப்புறம் என்ன?
நோ நோ அதை நான் ஒத்துக்க மாட்டேன் எங்க ஜென்னி ஆசையாக காதலுடன் டேவிட்டுக்கு கொடுக்கனும்
 
#44
ஹாய் மோனிஷா அருமையான ஸ்டோரிபா ஆரம்பத்தில் குழப்பத்தில் ஆழ்த்தி முடிவில் தெளிவை தந்த கருத்துக்களை தெரிவிக்க எங்கள் சிந்தனையை தூண்டிய நாவல் என்றே சொல்லலாம் டேவிட் ஜென்னி என்ற அற்புதமான மனிதர்களின் இணைவு ஒரு அற்புதமான உணர்வைத்தருகிறது இந்த கதையில் மகிழ் சாக்ஷி காதலில் மகிழுக்கு சாக்ஷி மேல் ஆழமான காதல் இருந்தாலும் அவன் சாக்ஷிக்கு அதை உணர்த்த தவறி விட்டான் எவன் ஒருவன் தன்னை நேசிப்பவளின் மீது நம்பிக்கை வைக்கவும் அவளுக்கு தர வேண்டிய பாதுகாப்பு உணர்வையும் தர தவறுகிறானோ அங்கு எவ்வளவு ஆழமான காதலாக இருந்தாலும் அதில் பிளவு வருவது சாத்தியம் சாக்ஷியை பொறுத்தவரை அவள் மகிழீன் குரலை ஆழமாக நேசித்த அளவுக்கு அவனை உணரவில்லை என்பது தான் சரி மகிழ் சாக்ஷியை ஜென்னியாக சந்தித்தபொழுது அருகருகில் இருந்த பொழுது கூட அவள் உள்ளுணர்வு அவன் தான் தன்னை காதலித்த மகிழ் என்று அவன் குரல் கேட்கும் வரை அவளுக்கு உணர்த்தவில்லை இதை வைத்து பார்க்கும் பொழுது சாக்ஷியின் மகிழ் மீதான காதல் ஒரு உயர்ந்தபட்ச ஈர்ப்பு என்று தான் தோணுகிறதே தவிர அது காதல் என்றே சொல்ல முடியவில்லை இப்ப டேவிட்டின் காதல் அவள் அழகை பார்த்தோ குரலை வைத்தோ வேறு அவளின் திறமை வைத்தோ பரிதாப பட்டோ வரவில்லை அவள் காதலை பற்றி சொன்னதாலும் வரவில்லை ஜென்னியின் வார்த்தைகள் ஒரு தூண்டுகோலாக இருந்திருக்குமே தவிர அதனாலும் வரவில்லை அதை அவன் உணர்ந்தது மட்டுமல்லாமல் அதை ஜென்னிக்கும் உணர்த்தியது தான் உண்மையான காதலின் மகத்துவம் அவனின் நிலையான சிந்தனையே அவன் காதலின் வெற்றிக்கும் காரணம் அவன் அவளை காதலுக்காக கட்டாயப்படுத்தவில்லை அதே சமயம் அவளுக்கு உணர்த்தவும் மறக்கவில்லை திணிக்கவுமில்லை மகிழ் மாயா மீது காட்டுவது இரண்டாம் பட்ச காதல் தான் ஆனால் மாயா தான் தன் காதல் மூலம் முழுமை ஆக்கி கொள்ளவேண்டும் எல்லாம் தெரிந்து காதலித்துபின்பு அவன் மனம் புரிந்து நல்ல நட்ப்புடன் அவனை தன்னை நோக்கி திருப்பி கொள்வது அவள் சாமர்த்தியம் மகிழ் உண்மையில் நல்ல மனிதன் தான் நேசித்த பொருள் தன் கைவிட்டு சென்றாலும் அது சேர்ந்த இடம் சிறப்பானது தன்னிடம் இருந்ததைவிட மேலான இடத்தில சேர்ந்து நன்றாக இருக்க வேண்டும் என்ற அவன் சிந்தனை அவனை ஒரு உயர்ந்த மனிதனாக காட்டுகிறது டேவிட்டுக்கு பின் என்னை கவர்ந்த பாத்திரம் சையத் என்ன ஒரு சிறப்பான மனிதன் அவன் பண்பு அவன் தாய் தந்தையின் வளர்ப்பை பெருமை படுத்தியுள்ளது அவன் தந்தையின் வார்த்தையை மீறி லட்சியத்தை அடைவதற்காக குடும்பத்தை கவனிக்க தவறியிருக்கலாம் பின் புரிந்து தன் தவறை மாற்றிக்கொண்டு பொறுப்பாக நடந்து கொள்வது எத்தனை பேரால் சாத்தியம் தன் சுயநலத்தை பற்றி சிந்திப்பவர்கள் தான் இங்கு அதிகம் தன்னிடம் வேலை பார்ப்பவள் என்று எண்ணாமல் தன் குடும்பத்தில் ஒருத்தியாக நினைத்து மதுவின் பாதுகாப்பிற்க்காக அவள் வீடுவரை சென்று விட்டு வருவதாகட்டும் அவள் அவன் பெயரை மீடியாவில் தவறாக சொன்னபொழுது அவள் சூழ்நிலையென்னவோ என்று நினைத்து அவள் பெயர் குடும்பம் காப்பதற்க்காக திருமணம் செய்வதாகட்டும் திருமணத்திற்கு முன்பே அதற்கு உண்மையாக இருக்க தன்னை தயார்படுத்தி தன் மனைவிக்கு சிறு துன்பம் கூட தன்னால் வந்துவிடக்கூடாது என்று எண்ணத்தாலும் செயலாலும் நடந்து கொண்ட அவன் ஒரு சிறந்த மனிதன் திருமணத்திற்குப்பின் வரும் பொருளாதார பிரச்சனைகளுக்கு தன் மனைவியை குற்றம் சாட்டாமல் தன் கலக்கத்தை காட்டாமல் தன் மனைவியின் கலக்கத்தை உணர்ந்து அவளை தன் பேச்சாலும் செயலாலும் திசை திருப்பி மனைவியின் குடும்பத்தையும் தன் குடும்பமாக பாவித்து பார்த்து கொள்வது அருமை அவன் நல்ல மனதிற்கு டேவிட் ஜென்னி மூலம் ஒரு விடிவுகாலம் வந்துவிட்டது இனி அவன் தொழிலும் சரி வாழ்க்கையிலும் சரி ஒரு உயர்ந்த நிலையை அடைந்து விடுவான் என்பதில் ஐயமில்லை வேந்தன் பற்றி என்றால் எனக்கும் ஜென்னியோட மனநிலை தான் ராகவ் என்ன ஜென்மம் அவன் குணம் அவன் தந்தை வாசன் இடம் இருந்து வந்தது போல் மகனை குணப்படுத்தி இனிமேலாவது அவனை நல்வழிப்படுத்த நினைக்காமல் இவரும் ராகவ் மாதிரி டேவிட் ஜென்னிக்கு இடைஞ்சல் கொடுக்க நினைக்கிறார் இனி யாராலும் ஜென்னிக்கு சிறு துன்பம் கொடுக்க முடியாது அவள் டேவிட் என்ற அற்புதமானவன் கையில் ஒப்படைக்க ப்பட்டுவிட்டாள் இந்த படைப்பாளியால் மிக்க நன்றி மோனிஷா இந்த அற்புதமான கதையை எங்களுக்கு வாசிக்க தந்ததற்கும் மற்றும் தேடல் போட்டியில் வெல்வதற்கும் எங்கள் வாழ்த்துக்கள்
 
#47
@Monisha டியர் இந்த அருமையான
"நான் அவள் இல்லை"-ங்கிற
நாவலும், தேடல் 2018 போட்டியில
இருக்காப்பா?
இந்த அழகான நாவலுக்கு
பரிசு கிடைக்க என்னோட
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மோனிஷா டியர்
 

Advertisements

Latest updates

Top