• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan Aval Illai

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Wow..A gr8 writer is hidden inside you...pls start to write a novel soon(as @Deepivijay said)
Romba Azhaga 50 episodes review va Solli irrukka Appu.????????.Again review read panniten konjam tamizh la feedback kudukka try pannuren ..???
Yeah..naanum idhai vazhimozhigiren??....
Neengalum story ezhudha try pannunga...ungalukku andha accent romba nalla varudhu ka??
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
இன்னும் இரண்டு பகுதி இருக்கு, ஆனாலும் என்னால பதிவு போடாம இருக்க முடியல.. அதான் போட்டுட்டேன் மக்களே...

“தேடிச் சோறு நிதம் தின்று;
அதில் திண்ணைக் கதைகள்பல பேசி மனம் வாடித் துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத் தாயோ? ”

இது வெறும் பாரதி கவிதை மட்டும் இல்லைங்க, நமக்கான உந்துதல் சக்தி..

அந்த மாதிரி ஒரு நல்ல உந்துதலா, பெண் என்பவள் ஆக்க சக்தி..ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற அழகான கருவோடு , தேடலில் நம்மை தேடி வந்து "நான் அவள் இல்லை" என்றவளை பற்றி பகிர விளைகிறேன்..

நான் அவள் இல்லை தலைப்பை பார்த்து தான் ,தலையை நுழைத்தேன்.. தலைக்குப்புற இக்கதைக்குள் விழுவேன் என்று எண்ணவுமில்லை..

கதை தொடங்குவதே ஒரு விபத்தில்.. சாக்ஷி , பிரம்மன் அவளை செதுக்கிய பிறகு பிரம்மித்து நின்றதில், அவள் நயனங்களை நயமாய் விரிய செய்ய மறந்தான் போல.. ஒளி பொருந்திய முகத்தில் விழிக்கு மட்டும் அப் புகழ் கிட்டவில்லை... ஆமாம் சாக்ஷி ஒரு கண்பார்வை அற்றவர்...

குறை என்பது நாம் நம்மில் ஒடுங்கினால் தான்.. சாக்ஷி பாரதி கண்ட புதுமைபெண்.. வீணையின் வாணி.. கச்சேரிகளில் வீணை வாசிப்பவர்..

இவரை சுற்றிய நகரும் கதை.. இவருக்கு ஏற்படும் விபத்து எத்தனை பேயருடைய வாழ்வை பந்தாட போகிறது.. ஏன் விபத்து, எதனால், யாரால், என்ன ஆனது அவளுக்கு?என்று பல பல கேள்விக்குறிகளோடு நம்மை உள்ளிளுக்கிறார் ஆசிரியர்...

இக்கதையில் 3 முக்கியமான கதைமாந்தர்கள்.. டேவிட், மகிழ், சையித் இவர்கள் சாக்ஷியின். காவலன்,காதலன்,கேண்மை..

டேவிட்- சிறந்த மனிதன் , புடம் போட்ட தங்கம்.. டேவிட் தாமஸ் பிரபல ஜெ தொலக்காட்சியின் தலைமை பொறுப்பு வகிப்பவர்.. இவரால் தான் நம் சாக்ஷியின் வாழ்வு தலைகீழாய் மாறும், அது நன்மையான மாற்றம்.. அவளின் ஒவ்வொரு அசைவையும் நட்புடன் ரசிக்கும் இதயத்தில் எங்கோ அவர் அறியாமல் அவள் மேல் காதல் பூ மொட்டுவிடும்.. அது மலர்ந்து மணம் வீசியதா ??

மகிழ் ஒர் ஆர்.ஜெ.. சாக்ஷியை அவளாகவே விரும்பியவன்.. அவளுக்காக உயிர் துறக்கும் காதலன்.. அவளை அணு அணுவாய் உள்வாங்கி.. அவள் பிரிவில் நரக துயில் கொண்டு.. சந்தர்ப வசத்தால் அடுத்தவள் கரம் பிடித்து.. மன அளர்ச்சியில் அளன்று கொண்டிருக்கும் உருக்கமான அன்பு காதலன்..எதனால் இவர்களுக்குள் இப்பிரிவு???

சையித் மத்திய வகுப்பை சார்ந்து இயக்குனர் என்ற ஒரே கனவில் லாடம் கட்டிய குதிரையாய் பயணிக்கும் ஒர் லட்சிய இளைஞன்.. அவன் லட்சியம் நிறைவேறியதா?? சாக்ஷிக்கும் அவனுக்கும் எப்படி நட்பு மலர்ந்து???

வேந்தன் ,ராகவ் .. கதையில் ஹிரோ என்று இருந்தால் வில்லன் வேண்டுமே.. இவர்கள் தான் அந்த அற்ப பதர்கள்..சாக்ஷியின் வாழ்வை சின்னாபின்னமாகி சிதைத்த மகானுபாவர்கள்.. ஆனால் ஏன்??

இப்படி பல கேள்விக்கு பதில் சொல்லுவாள் சாக்ஷி அல்ல மிஸ் ஜென்த்தா விக்டர் (எ) ஜென்னி..

யாரிந்த ஜென்னி? இவள் யாரை ஆக்கினாள்? யாரை அழித்தாள்? எதற்காக இவள் இதை செய்தாள்? இந்த கேள்விகளின் பதில் என்னிடம் இல்லை ஏன்னென்றால் நான் அவள் இல்லை?? நீங்களே கேளுங்கள்...

கண் தெரியாத சாக்ஷி ஒரு விபத்தில் சிக்கி டேவிடின் மூலமாக மருத்துவமனையில் சேர்க்கபடுகிறாள்..கவலைகிடமான நிலையில்.. அவள் இறந்தாள் என்ற செய்தி அவளை விரும்பிய மகிழையும் அவள் உயிர்த்தோழி மாயாவையும் நிலை குலைய செய்கிறது..சந்தர்ப்ப வசத்தால் மாயாவின் கரம் பிடிக்கும் மகிழுக்கு அவன் தமையன் வேந்தனின் திருமணத்திற்கு அழைப்பு வருகிறது.. அப்போது தான் அவன் வாழ்வில் சூராவளி வீச தொடங்குகிறது..

சையித் அவன் கனவை ராகவ் என்ற பிரபல நடிகர் மூலம் மெய்பிக்கிறான்.. தன் கனவு படத்தை எடுக்க தன் மனம் செதுக்கிய பெண்ணை வரைய சொல்ல அதில் சிரிக்கிறாள் அத் தேவதை.. அதை கண்டு ஒருவனுக்கு காம வெறி,ஒருவனுக்கு காதல் நெடி..
அத் தேவதை வரவு யார் யாருக்கு வரம் யார் யாருக்கு சாபம்.. என்பதே இக்கதை..

ஏன் இந்த கதையை படிக்கணும்..

1. பாரதிக்காக.. லவ் ப்ரபோஸல் பண்ணணுமா? அதுவும் புத்திசாலிதனமா? இந்த எழுத்தாளர் அதற்கு வழி சொல்லி கொடுத்து இருக்காங்க.. உபயோகித்து பயன் பெறுக??

2. பெண் என்றால் வெறும் பேதையல்ல ,அவள் ஆணி வேர் அன்பூட்டிய கை ஆஸிட் வீசவும் தயங்காது என்று ஒரு தைரியமான பெண்ணை காம்மிச்சு இருக்காங்க

3. பெண் வன்கொடுமை அவளை எவ்வளவு உருகுலைக்கும், அதில் எப்படி வெளி வருகிறாள்.. சுற்றத்தின் நம்பிக்கை வார்த்தை அத் தருணத்தில் எவ்வளவு தெம்பு தரும் என்பதற்காக..

4.ஆத்திரம் ,அகம்பாவம்,கர்வம் ஒருவனை எவ்வளவு இழி நிலைக்கு இட்டு செல்லும், எந்த வகை போதையும் எவ்வளவு ஆபத்தானது என்ற கூற்றிற்காக..

5. ஆண்மகன் என்ற இலக்கணத்தை வகுத்து , இவர்கள் நிஜத்தில் காண மாட்டோமா என்று ஒரு நிமிட எண்ணத்தை ஏற்படுத்தியதற்காக..

6. ஸிட்டுவேஷன் சாங்ஸ் காக..

7.ப்ராக்டிகல் நரேஷன் காக..

8. காமம் தாண்டி காதலை காதலாகவும், காதலின் வலியை நய் கண்முன் நிறுத்தியதர்காக..

நான் அவளில்லை கண்டிப்பா படிச்சு முடித்ததும் உங்களுள் ஒரு திருப்தியை தருவாள் என்று நம்புகிறேன் என்னை போல..


" வீணையின் நாதம் சுருதி சேர்த்தது
அவன் குரலின் கீதம்..

கண்காணா கண்ணனை காதோடு அணைத்து வைத்தேன்..

காலனுக்குத்தான் கண்ணயில்லையோ?
காமுகனால் கசக்கபட்டேன்

தேவதூதன் வந்தான் இருண்ட வானில் விடிவெள்ளியாய்..

அகபுற ரணங்களில் உந்துதலால் உயிர்பித்தேன் ஃபினிக்ஸ் பறவையாய்

நட்புக்குள் காதல் வந்தால் கடவுளும் ஊமையாவாரோ?

புயலில் சிக்கிய என்னை தென்றலாய் தீண்டினான்..

குடியிருந்த தெய்வம் பிறர் கையில் கண்டு..
கண்கண்ட தெய்வத்தை இருத்தவா கர்பகிரக்த்தில்?

உடல் புசிக்க பறந்த வல்லூரை கொன்று குவிக்க திராணியில்லை

சாமர்த்திய சாமரம் வீசி
சடுதியில் காய்கள் வீழ்த்த

இதோ என் வானில் விடியல்
என் போன்ற பெண்களுக்கும் கடைக்குமா , இத்தகைய விடியல்????"
கண்டிப்பாக இது வித்தியாசமான கதை பெண்ணை தேவதை மாதிரி நேசிக்கும் டேவிட் இருக்கும் இதே உலகில் தான் ராகவ் மாதிரியான பொறுக்கிகளும் இருக்கிறார்கள்
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
கண்டிப்பாக இது வித்தியாசமான கதை பெண்ணை தேவதை மாதிரி நேசிக்கும் டேவிட் இருக்கும் இதே உலகில் தான் ராகவ் மாதிரியான பொறுக்கிகளும் இருக்கிறார்கள்
உண்மை இருளும் ஒளியும் ஒரு இடத்தில் ?
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
Sema review Aparna sis intha website Ku new unga review padichu two stories read panninen really I surprised evlo deep aaa story ulvangikiringa a big applause to u
Thank u gomathy??happy that u liked my review.. hope u enjoyed the stories ??
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் அபர்ணா
உங்களோட ரெவியூ இப்பத்தான்பா படிச்சேன் எப்பவும் உங்களோட ரெவியூ படிக்கும் பொழுது கதையின் சாராம்சத்தை உள்வாங்கி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக ரசிக்கும்படியாக முழுக்கதையும் படித்த உணர்விருக்கும் சில சமயம் நம்ம சொல்ல நினைக்கணும் நினைக்கிறதாகட்டும் எழுத நினைக்கிறதாகட்டும் வெளிப்படுவதுசிலரால் தான் சாத்தியம் அந்த வகையில் உங்கள் திறமை அலாதியானது இந்த ரெவியூ படித்தால் முழுகதையையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தன்னால் வந்துவிடும் மோனிஷாக்கு ஒரு சின்ன request நான் அவள் இல்லை ஸ்டோரி புக்காக போடும்பொழுது அபர்ணாவின் ரெவியூவையும் அட்டைப்படத்தில் அச்சிடுப்பா அவ்வளவு அருமை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய கதை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உயிர் போகும் நிலையிலும் தான் வாழவேண்டும் என்று ஆசைப்படுவதாகட்டும் மீண்டு வந்து தன்னை புதிப்பித்து கொண்டதோடுமட்டுமல்லாமல் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் ஒளியை வழங்குவது மட்டுமல்லாமல் தன்னை நாசம் செய்தவனுக்கு ஒரு பாடம் கற்று கொடுப்பதாகட்டும் தன்னை உண்மையாக நேசித்த உள்ளங்களின் நேசத்தை புரிந்து கொண்டு ஒதுங்குவதாகட்டும் பகைவனுக்கும் மனிதாபிமானம் காட் டுவதாகட்டும் எல்லா சூழ்நிலையிலும் தோழமையுடன் இருந்து தன் நேசத்தை உணர்த்தியவனின் நேசத்தை புரிந்து உணர்ந்து அவன் கரம் கோர்த்து தன் வாழ்வை செம்மைப்படுத்தி பிறர் வாழ்வை மட்டுமல்ல தன் வாழ்வையும் தன்னம்பிக்கையோடு வெல்வது பெண்களாகிய நமக்கு ஒரு படிப்பினை தான் இந்த கதை இந்த கதையின் முழுமையும் எடுத்துரைப்பதுபோல் அருமையான கருத்துக்கள் அபர்ணாவின் ரெவியூ கதைக்கு ஈடாக அபர்ணாவின் கருத்துகளும் மிகவும் சிறப்பாக உள்ளது ராகவ் வேந்தன் போல் உள்ளவர்கள் வாழும் உலகத்தில் தான் ஜென்னி மாயா மகிழ் சையத் டேவிட் போன்ற அருமையான மனிதர்களும் இருக்கிறார்கள் தானும் வாழ்ந்து தன்னை சுற்றி உள்ளவர்களின் நலன் நாடுபவர்களும் இருக்கிறார்கள் என்பதை கதையும் சரி கருத்துக்களும் சரி நமக்கு ஒரு நல்ல சிந்தனையை தருகிறது ஒரு மறுக்க முடியாத உண்மை சூப்பர் அபர்ணா உங்கள் சிந்தனை எழுத்து மிகவும் அற்புதம் நன்று தமிழ் உங்கள் கையில் கொஞ்சி விளையாடுது மற்றவர்கள் சொல்வது மாதிரி கருத்துக்களையே இவ்வளவு அழகாக வெளிப்படுத்தும் உங்கள் திறமை நாவல் எழுத ஆரம்பத்தால் நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராவது நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள் உங்கள் திறமை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக பளிச்சிடுகிறது வாழ்த்துக்கள் தோழி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top