• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nadaipaathai...! - Sandhiya Sri

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நடைபாதை...!

காலைநேரத்தில் வெயில் சுளீர் என்று அடிக்கும் நேரத்தில் சாப்பாடு கூடையைக் கையில் படித்த வண்ணம் மண்பாதை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தாள் மஞ்சரி. அவளின் மனதில் ஒரு சின்ன குழப்பம் அதற்கு விடை தேடிய வண்ணம் நடந்தவளின் கண்கள் அந்த ரோட்டில் இருந்த மாற்றத்தை உணர்ந்து கால்நடை மெல்ல குறைந்து நின்று போனது..

அவள் அந்த இடத்தில் நிற்க காரணம் அந்த ரோடு மூன்று முன்று வழி மண் சாலை..! அந்த மூன்று வழி சாலையையும் சரியாக பிரிக்கும் வண்ணம் நடுவே அமைந்திருந்த ஆலமரம். அந்த வழியில் நடந்து செல்லும் அனைவருக்கும் இளைப்பாற இடம் தரும் ஆலமரம். பொருட்களை விற்க சிறுவியாபாரிகள் அதிகமாக கூடும் இடம். ஆனால் இன்று அதில் ஒரு மாற்றம் இருக்கவே அவளின் கண்கள் அந்த நடைபாதையை உற்று நோக்கியது..

அந்த சாலையை மூன்றாக பிரிக்கும் ஆலமரம் இன்று அடியோடு வெட்டப்பட்டு பெரிய லாரியில் ஏற்றப்பட அதை உணர்ந்தவள் அங்கே வேலை செய்பவரிடம், “இந்த மரத்தை ஏன் வெட்டி விட்டீர்கள்..?” என்று கேட்டாள்..

அவளின் கேள்வியில் நிமிர்ந்து பார்த்த பணியாளர்களின் ஒருவன், “இந்த மரம் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறதும்மா.. அதுதான் வெட்டிவிட்டோம்..” என்று சொல்ல யோசனையோடு அந்த சாலையை கடந்து வேலைக்கு சென்றாள் மஞ்சரி.. மாலையில் நடந்து வரும் பொழுதும் அதே யோசனையோடு நடந்தவளுக்கு மீண்டும் ஒரு மாற்றம் தெரிய அந்த இடத்திலேயே நின்று கவனித்தாள்..

காலையில் அவள் நடந்து வந்த மண்வழிசாலை கொஞ்சம் விரிவுபடுத்தப்பட்டு பெரிய சல்லிகற்கள் கொட்டபட்டு இருந்தது.. அதை கடந்தவண்ணம் வீட்டிற்கு வந்தவள் வீட்டின் வாசலில் அமர்ந்துவிட வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த அவளின் தம்பி, “அக்கா உனக்கு விஷயம் தெரியுமா..?” என்று கேட்டவண்ணம் வந்தான்..

அவனின் முகத்தைப் பார்த்தவள், “என்னடா விஷயம்..?” என்று கேட்டதும் அவளின் அருகில் ஓடிவந்து அமர்ந்தவன், “இந்த ரோடு மெயின் ரோடாக மாறப்போகிறது.. அங்கே இருக்கும் ஆலமரத்திற்கு பக்கத்தில் சிக்னல் எல்லாம் வர போகிறதாம்..” என்று அவளுக்கு தெரியாத தகவலைச் சொன்னான் அவளின் தம்பி நிகில்.. அவன் சொன்னதைக்கேட்டு யோசனையில் ஆழ்ந்தாள்..

மறுநாளும் யோசனையோடு அந்த ரோட்டை கடந்தவளுக்கு அந்தரோடு தார் சாலையாக மற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுப்பட்டு இருப்பது புரிய அதைப்பார்த்த வண்ணம் நடந்தாள்.. இப்படியே நாட்கள் விரைந்து செல்ல அவளின் தம்பி சொன்னது போலவே அது பெரிய ரோடாக மாற்றப்பட்டு சிக்னல் எல்லாம் வைக்கப்பட்டு புது பொலிவுடன் காட்சி அளித்தது..

அதையெல்லாம் பார்த்த வண்ணம் நடந்தவள் அன்று அந்த சாலையில் சிலநொடிகள் நின்றாள்.. அவளுக்கு அந்த நடைபாதை ஏதோவொரு விஷயத்தை புரிய வைப்பது போல இருக்க அதை யோசித்தாள்.. முதலில் அந்த சாலை மண்வழி சாலையாக இருந்தது.. அதில் அலமரம் இருந்தது..

இன்றோ ஆலமரம் நின்ற இடத்தில் சிக்னல் இருந்தது.. மண்வழி பாதை எல்லாம் தார்வழி சாலையாக மாறி இருந்தது.. அதையெல்லாம் பார்த்தவள் ஒரு நொடி அந்த நடைபாதையில் நின்றவள் அந்த பாதையின் மூன்று பக்கமும் பார்க்க அது அவளுக்கு வாழ்க்கை தத்துவத்தை கற்பித்தது..

முதலில் அது சொல்லிய ஒரே விஷயம் மாற்றம்.. ‘வாழ்க்கையில் நாம் நடந்து செல்லும் பாதையில் எத்தனை மாற்றம் வந்தாலும் நாம் அந்த மாற்றத்தை கண்டு நாம் மாறக்கூடாது..’ என்று அந்த தார்வழி சாலை அவளுக்கு உணர்த்தியது..

அடுத்து அந்த மூன்று வழி சாலையில் இருந்த சிக்னலைப் பார்த்தாள்.. அதுவும் அவளுக்கு ஒரு தத்துவத்தை சொன்னது.. ‘வாழ்க்கையில் எத்தனை திருப்பம் (வெற்றிக்கான படிகள்) அமைத்தாலும் ஒரு நிமிடம் நின்று நாம் செய்யும் செயல் தவறா..? சரியா என்று யோசித்துவிட்டு அந்த பாதையைக் கடந்து செல்ல வேண்டும்..’ என்று அவளுக்கு கூறியது..

அடுத்து அவளின் மனம் அங்கிருந்த மாற்றத்தைப் பார்த்து போன மாதம் இதே சாலை மண் வழி சாலையாக இருந்தது.. இன்றோ முக்கியமான சாலையாக தேர்வு செய்யப்பட்டு தார்சாலையாக மாற்றப்பட்டு இருந்தது.. அந்த வித்தியாசம் அவளுக்கு சொன்ன விஷயம், ‘வாழ்க்கையில் எத்தனை மாற்றம் வந்தாலும் கடந்து வந்த பாதையை மறக்கக்கூடாது.. அது மறந்து விட்டதால் அடுத்து கடக்க இருக்கும் வாழ்க்கை பாதையில் தோல்வி வந்து நமக்கு கடந்த காலத்தை நினைவு படுத்தும்..’ என்பதை உணர்த்தியது..

அதை உணர்ந்த மஞ்சரி தன்னுடைய அம்மாவிடம் சென்று, “அம்மா எனக்கு இந்த திருமணத்தில் சம்மதம்.. ஆனால் ஒரு நிபந்தனை..” என்று சொன்னவளை அவளின் அம்மா கேள்வியாக பார்க்க, “வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உச்சிக்கு சென்றாலும் அவர் உங்களுக்கு கொடுக்கும் வாக்கில் இருந்து பின்வாங்கவோ, மறந்து போகவோ, கைவிடவோ கூடாது.. இதை மட்டும் அவரிடம் தெளிவாக சொல்லிவிடுமா” என்று கூறினாள்..

அடுத்த முகூர்த்தத்தில் மனோகர் – மஞ்சரி இருவருக்கும் திருமணம் நடந்தது.. இன்று அதே நடைபாதையில் கணவன் மனைவி இருவரும் நடந்து செல்ல மனோகரன், “உன்னோட அம்மாவிடம் எதுக்கு மஞ்சு அப்படி சொன்னாய்..?” என்று கேட்டதும் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் மஞ்சரி..

அவனின் முகம் குழப்பமாக இருப்பதைப் பார்த்து, “என்னை பெண் பார்க்க வந்த நீங்க, ‘உங்களின் மகளை திருமணம் செய்து சென்ற பிறகு எந்த நிலையிலும் அவளை கைவிடாமல், கண்கலங்காமல் பார்த்துக்கொள்கிறேன்..’ என்று சொன்னது என்னை யோசிக்க வைத்தது..” என்று கூறியவள், “வாழ்க்கையில் இன்று நாம் நடந்து போகிறோம்.. நாளை காரில் கூட போகலாம்.. ஆனால் நாம் என்றுமே மாறாமல் இருக்கணும்..” என்று கூறியவள் அந்த இடத்தில் நின்றாள்..

அந்த சாலையைக் கணவனுக்கு காட்டி, “நீங்க என்றும் மாறாமல் இருப்பீங்க என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தது இந்த நடைபாதைதான்.. காரணம் என்ன தெரியுமா..? இந்த பாதையில் இத்தனை மாற்றம் வந்தும் நான் இன்றும் இந்த சாலையில் நடந்தது தான் போகிறேன்.. செல்லும் பாதையில் ஆயிரம் மாற்றங்கள் வரலாம்.. ஆனால் வாழ்க்கையில் எந்த நிலையிலும் சொன்ன சொல்லில் இருந்து தவறக்கூடாது..” என்று கூறியவள் கணவனின் முகத்தைப் பார்த்தாள்.. அவனும் புரிதலுடன் அவளின் கரம்பிடிக்க அதே நடைபாதையில் இருவரும் நடந்தது சென்றனர்..

அன்புடன்
சந்தியா ஸ்ரீ

[இன்று காலையில் நான் ரோட்டில் போகும் பொழுது அது எனக்கு உணர்த்திய செய்தியை அப்படியே கற்பனையாக கொண்டுவந்து உங்களுக்கு கொடுத்திருக்கிறேன்.. நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள் தோழிகளே.. இது என்னோட முதல் சிறுகதையும் கூட...!]
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
''கனவில் வந்த கள்வனே''
21st அப்டேட் எப்போத்
தருவீங்க, சந்தியா டியர்?
post pottuvidden banuma
 




Nuha

புதிய முகம்
Joined
Aug 3, 2018
Messages
9
Reaction score
9
Location
Colombo
Hi sari kuttyyy...!!
Ni ivaloooo ellam yosikuriyaa..? Superrrrrrrr a irukuda....!!! I'm really proud of u....! Vaalkai pathina in karuthukkal sindanaihal ellame arputhama iruku....!! Unmaya yatharthatha solliruka... Semada... Sema..! Keep it up..!????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top