• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 19
அவனின் மனம், ‘அவள் வாழ்க்கையில் இத்தனை நடக்க காரணம் என்னோட பிரிவு... நான் அவளோடு இருந்திருந்தால், இப்பொழுது அவள் இந்த நிலையில் இருக்க மாட்டாள்.. அவளை யாரும் தவறாக நினைக்க கூடாது என்று நினைத்த நானே அவளை தவறாக நினைத்துவிட்டேனே..’ என்று மனம் வருந்தியவன், ரோஹித்திற்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது... அவளை விட்டு இனிமேல் தன்னால் இருக்க முடியாது என்று..! தன்னுடைய செல்லை எடுத்து தந்தைக்கு கால் செய்தான்..
தந்தைக்கு போன் செய்தவன் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருக்க, அப்பொழுது வீட்டின் பின் கதவை சாத்திய மதுவைப் பார்த்தவன் கேள்வியாக புருவம் உயர்த்த அந்த வீட்டின் ஜன்னலும் சாத்தப்பட்டதும் யோசனையுடன்,
“அப்பா நான் சொன்னது எல்லாத்தையும் செய்துவிடுங்கள்.. நான் இன்னும் மூன்று நாளில் வந்துவிடுவேன்..” என்று சொன்னவன் அவனின் அறைக்குள் சென்றான்..
ரஞ்சித், கயல்விழி, அபூர்வா மூவரும் வீட்டின் உள்ளே நுழைய கயலைப் பார்த்த சிவரத்தினம், “வாடா கயல்விழி.. எப்பொழுது வந்தாய்..?! வந்ததும் தாத்தாவைப் பார்க்க உனக்கு தோணவே இல்ல..” என்று புன்னகையுடன் கேட்டவரைப் பார்த்து, ரஞ்சித் குழம்பினான்.. அவனிடம் இருந்த அபூர்வா, அவரிடம் தாவினாள்..
“நான் காலையில் தான் தாத்தா வந்தேன்.. அபூர்வாவைப் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தேன்..” என்றவளைப் பார்த்து சிரித்தவர்,
“என்ன ரஞ்சித் ஒன்னும் புரியாமல் நிற்கிறாய்..?!” என்று கேட்டவர், அபூர்வாவைப் பார்த்து, “தாத்தாவைப் பார்க்க ஏன் வரவே இல்லை..?” என்று கேட்டார்..
“தித்தி வந்திருந்தாங்க தாத்தா.. அதுதான் வரவே இல்ல..” என்று சொன்னவளைத் தூக்கிக்கொண்டு காமாட்சியிடம் சென்றவர், “கயல்விழி வந்துவிட்டாள்..” என்று சொன்னார்..
“என்னது கயல்விழி வந்திருக்கிறாளா..?!” என்று வாசலுக்கு விரைந்தவர், “வாடா என்னோட செல்லம்.. இன்னையோட இங்கே நடக்கும் பிரச்னைக்கு எல்லாம் ஒரு முடிவு வந்துவிடும் என்று நினைக்கிறேன்..” என்று அவளைக் கட்டிக்கொள்ள, ரஞ்சித்திற்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை.. அவன் குழப்பத்துடன் நின்றிருந்தான்..
அப்பொழுதான் கீழே வந்த கீர்த்தி, ரஞ்சித் அங்கே நிற்பதையும், கயல்விழியை காமாட்சி கட்டியணைத்து நிற்பதையும், சிவரத்தினம் அபூர்வாவைத் தூக்கி வைத்திருப்பதையும் பார்த்தவள்,
“தாத்தா இங்கே என்ன நடக்கிறது..?” என்று கேட்டவள், “வீட்டிற்கு வந்தவங்களை வாசலில் நிற்க வைத்திருக்கிறீங்க.. உள்ளே வாங்க ரஞ்சித்..” என்று அழைத்ததும்,
“வாங்க நானும் லூசு மாதிரி வாசலில் நிற்க வைத்தே பேசுகிறேன்..” என்று அவர்களை உள்ளே அழைத்துவர, கீர்த்தி ரோஹித்தின் அறையை நோக்கிக் குரல் கொடுத்தாள்..
“ரோஹித் இன்னும் உள்ள என்ன பண்ற..? ரஞ்சித் வந்திருக்கிறார்..” என்று கூறினாள்..
ரோஹித் அறையின் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தான்.. நடுஹாலில் ரஞ்சித் மற்றும் கயல்விழி நின்றிருந்தனர், ரோஹித் அங்கே நின்றிருந்த கயல்விழியைப் பார்த்து திகைத்தவன்,
“வா கயல்விழி.. வா ரஞ்சித்..” என்று வரவேற்றபடியே மாடியில் இருந்து இறங்கி வந்தான்.. அவளும் அவனைப் பார்த்தவுடன் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகைக்க முயன்றாள்..
ரஞ்சித் கயலின் முகம் பார்த்து, “என்ன கயல் முகம் ஏன் மாறுகிறது..?” என்று குழப்பத்துடன் கேட்டான்..
“இப்பொழுது உங்களுக்கு இது ரொம்ப தேவையா அண்ணா..? நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது.. இப்பொழுது ராகியை வெளியே அழைத்து வர வேண்டியது உங்களோட பொறுப்பு..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள்..
கயல்விழி மனதில் என்ன நினைத்தாளோ அவளே அவரிடம் நேரடியாக அனுமதி கேட்டாள்..
“தாத்தா வித் யுவர் பர்மிஷன்.. நான் ரஞ்சித் அண்ணா, ரோஹித், அப்புறம் இந்த அக்கா எல்லோரும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வருகிறோம்..” என்று சொல்ல, அவரும் அவளின் உள்ளர்த்தம் புரிந்து சரியென்றார்..
கீர்த்தி, ரஞ்சித் இருவரும் ஒன்றும் புரியாமல் நிற்க, ரோஹித் யோசனையுடன் அவளைப் பார்த்தான்.. அவளோ ஜீவாவிற்கு போன் செய்து, “எங்கே இருக்க ஜீவா இன்னும் பத்து நிமிசத்தில் நீ இங்கே இருக்கிறாய்..” என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்தாள்..
“கயல்விழி..” என்று அவளை அழைக்க, ‘என்ன..?’ என்பது போல பார்த்தாள்.. “நீங்க எல்லோரும் இங்கேயே இருங்க நான் இப்பொழுது வந்துவிடுகிறேன்..” என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றான் ரோஹித்..
அனைவரும் அவன் போவதைப் புரியாமல் பார்த்தனர்.. ரோஹித் சென்ற இடம் மதுவின் வீடு.. அவள் வீட்டின் முன் கதவும் சாத்தப்பட்டு இருந்ததும்..
அவனின் மனம் ‘எல்லோரும் இங்கே இருக்கும் பொழுது அவள் எதுக்கு எல்லா கதவையும் சாத்த வேண்டும்..’ என்ற கேள்வி மனதில் எழுந்தது.
“மதுமிதா..” என்று அழைத்தவன் வீட்டின் கதவைத் தட்டினான்.. அவள் திறக்கவே இல்லை..அவன் மனதில் சந்தேகம் தோன்றவே, ஒரு முடிவோடு கதவை உடைத்தான்.. உள்ளே அவள் கேசைத் திறந்துவிட்டு சமையல் அறையில் நின்றிருந்தாள்..
அவன் உள்ளே நுழைவதைப் பார்த்து தீப்பெட்டியை உரச நினைத்தாள்... உள்ளே நுழைந்ததும் கேசை வாசனை வீடு முழுவதும் பரவி இருக்க கேசை ஆப் செய்தவன், அவளின் கையில் இருந்த தீப்பெட்டியை வாங்கித் தூக்கி வெளியே எறிந்தான்.. ஜன்னல் கதவு அனைத்தையும் திறந்து வைத்தவன்,
அவளை நோக்கி வந்து, ‘பளார்..’ என்று ஒரு அரை விட்டான்.. அவள் சமையல் அறையில் இருந்து டைனிங் ஹோலின் டேபிளில் போய் விழுந்தாள்.. அவனுக்கு கோபம் அடங்க மறுத்தது..
அவன் மனம், ‘இன்னும் ஒரு செகண்ட் தாமதமாக வந்திருந்தாலும் என்னோட வாழ்க்கையே இருளிடம் நிரந்தமாக ஒப்படைத்துவிட்டு சென்றிருப்பாள்..’ என்று நினைத்தவன்
மதுவைக் கோபத்தோடு நிமிர்ந்து பார்க்க, அவனது அடியில் பொறி கலங்கி நின்றிருந்தாள் மதுமிதா.. அவளின் காது ‘ங்கொய்’ என்று கேட்டதும் கையை கன்னத்தில் தாங்கிக் கொண்டு, கண்களில் கண்ணீர் வழிய அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
“இத்தனை நாள் பொறுமையாக இருந்தவள், நான் வந்ததும் சாக நினைக்கிறாய்.. இதுதான் உன்னோட துணிச்சலா..?” என்று கோபத்தோடு கேட்டவன், அவள் அப்படியே அசையாமல் நிற்பதைப் பார்த்து அவனுக்கு கோபம் அதிகரித்தது..
“நீ செய்ய நினைத்த காரியம் என்ன என்று புரிந்துதான் செய்கிறாயா..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டான்..
“நல்ல யோசித்துதான் இந்த முடிவை எடுத்தேன்..” என்று அவள் அழுத்தத்தோடு சொன்னவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.. அவளின் கண்ணீர் அவனை என்னவோ செய்தது..
அவனின் நெஞ்சில் இருந்த நேசம் அவனின் கண்கள் பிரதிபளித்தது.. காதலிப்பவர்கள் கண்கள் காதலைப் பிரதிபளிக்கும் என்று சொல்வார்கள்..
அவனின் கண்கள் அவளின் மீது கொண்ட நேசத்தை வெளிப்படுத்த, அதில் நொறுங்கிப்போனது அவளின் மனம்.. ‘தன்னுடைய நேசத்திற்கு நிகரானது அவனின் நேசம்..’ நேசம் என்றுமே நஞ்சுடன் இருப்பதில்லை.. அது கறந்த பாலை விடவும் சுத்தமானது..
“எதுக்கு இந்த முடிவு எடுத்தாய் சொல்லு மது..” என்று அவன் கோபத்தைக் கட்டுப்படுத்த, அவனின் விழிகள் சிவந்தது..
“எனக்கு யாரும் இல்லை என்ற நினைவே எனக்கு வராமல் இருந்ததற்கு ஒரே காரணம் உன்னோட காதல்..” என்று அவள் சொல்ல,
“உனக்கு யாரும் இல்லை என்று யார் சொன்னது உனக்கு அத்தனை உறவுகளும் இருக்கிறது..” என்று சொன்னவனைப் பார்த்தவள் கசப்பான புன்னகை ஒன்றை உதிர்க்க அவளின் புன்னகை அவனின் உயிரை உலுக்கியது..
சிலரது கண்களில் வலியை
உணர்தேன் நேற்று!
சிலரது புன்னகையில் வலியை
உணர்தேன் இன்று!
” என்று மனதில் நினைத்தான்..
“நீ என்னைக்காவது திரும்பி வருவாய் என்று எனக்கு தெரியும், அதுதான் துணிச்சலுடன் காத்திருந்தேன்..” என்று சொல்ல அவனின் முகம் கொஞ்சம் மென்மையாக மாறியது..
அவளின் அடுத்த கேள்வியில் அவனின் முகம் வாடியது.. அவள் அவனை நோக்கி வந்தவள் அவனின் சட்டையைப் பிடித்து, “ஆனால் நீ என்னை என்ன கேள்வி கேட்டாய்..?! உன்னால் எப்படிடா என்னை அப்படி..?!” என்று கேட்டவள் கண்கள் கலங்க, அவன் பதில் பேசாமல் நின்றான்..
பத்து வருடம் மனதில் அடக்கி வைத்திருந்த கோபம் அனைத்தும் அவளின் வாய் மூலம் வெளிவந்தது.. அவளைப் பேசவிட்டு அவளின் மனதை அறிந்துக்கொள்ள முற்பட்டான் ரோஹித்..
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எப்பொழுதும் மனதில் வைத்து புழுங்குவதை விடவும் மற்றவரிடம் சொல்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருப்பார்கள்.. இவளைப் போல வெளியே சொல்லாமல் இருப்பவர்களுக்கு அவர்களை பேசவைப்பதை தவிர வேற வழியே இல்லை..
அவன் முகம் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க, அவள் கோபத்தில் அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்..
“அதைக் கூட தாங்க என்னால் முடிந்தது காரணம், நீ என்னைப் பார்த்தும் ‘நான் சொன்னதை செஞ்சு காட்டிடேன்..’ என்று நினைத்தாய்..” என்று கண்ணீரோடு சொன்னவள்,
“நீ என்னைக் கேட்ட கேள்வி என்னை கொன்றிருக்கலாம் ஆனால் என்னோட காதலைக் கொன்றுவிட்டது.. இப்பொழுது எனக்கு வேற வழி தெரியல.. அதுதான் இந்த முடிவை எடுத்தேன்..” என்று முழுவதுமாக மனம் உடைந்து அழுதாள் மதுமிதா..
அவள் அழுவதைப் பார்த்து மனம் தனது துடிப்பை நிறுத்தினாலும் அவன், “அபூர்வா பற்றி கவலை இல்லையா..?!” என்று மட்டும் கேட்டான்
“அபூர்வா பற்றி எனக்கு இருந்த கவலையும் நீ வந்ததும் மாறிவிட்டது.. அவளை நீ பார்த்துக் கொள்வாய் என்ற நம்பிக்கை..” என்று அவள் ஏதோ சொல்ல துவங்க,
“பூலோக வாழ்க்கையில் இருந்து விடுதலை வாங்க நினைத்தாய் இல்லையா..?” என்று அவன் கேட்டவுடன், அவனுக்கு பதில் சொல்ல மனம் இல்லாமல் முகத்தை மூடிக் கொண்டு கதறியவளை இழுத்து அணைத்தான் ரோஹித்..
அந்த இடத்தில் அமைதி சூழ்ந்திருக்க, அவளை அணைத்துக் கொண்டவனின் மார்பில் அமைதியை தேடி முகத்தை அவனது மார்பில் புதைத்துக் கொண்டாள்.. அவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது..
தன்னிடம் அடைக்கலம் தேடி வந்தவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான் ரோஹித்.. அவனுக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை.. என்னோட காதலி என்னிடம் வந்துவிட்டாள் என்பதிலேயே அவனின் மனம் அமைதியை அடைத்தது..
அவளுக்கு இத்தனை நாள் கழித்து மனதின் நிம்மதியை அளித்தது அவனின் அணைப்பு கொடுத்தப் பாதுகாப்பும்..! அவனின் அணைப்பில் அவன் கைகளுக்குள் இருக்கும் பொழுது எந்த விதமான ஒரு துன்பமும் உன்னை நெருங்காது என்பது போல அவளை அணைத்திருந்தான்..
அவளின் கண்ணீர் அவனின் சட்டையை நனைக்க, “ஏய் மது எதுக்கு இப்பொழுது இப்படி ஒரு முடிவு எடுத்தாய்.. உன்னைப் பிரிந்து என்னால் மட்டும் அல்ல நம்ம அபூர்வா கூட இருக்க மாட்டாள்..” என்று அவளின் காதருகில் சொன்னான்.. அவனுக்கு அவளின் இந்த முடிவை ஜீரணிக்க முடியவில்லை..
“இல்ல ரோஹித் தப்பு செய்து தண்டனை பெற்றால் கூட அதில் ஒரு நிம்மதியும் ஆறுதலும் இருக்கும்... எந்த தப்பும் செய்யாத என்னை எல்லோரும் என்ன என்னமோ சொன்னாங்க..” என்று சொன்னவள் அழுதுக்கொண்டே
“ஒருத்தன் கூட போய் ஏமாந்துவிட்டாள் என்று கூட என் காது படவே சொன்னாங்க..” என்று சொல்ல அவளின் மனதில் இருந்த காயத்தின் ஆழம் என்ன என்பதை அறிந்தான் ரோஹித்.. அவள் நிறுத்தாமல் மீண்டும் தொடர்ந்தாள்..
“அப்பொழுது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. நீயும் இப்படி சொல்லவும் என்னோட மனசு வலிக்கிறது.. இந்த நிலையில் இருப்பதை விட சாவதே மேல் என்று தோன்றிவிட்டது..” என்று தேம்பி தேம்பி அழுதவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவே இல்லை ரோஹித்திற்கு..!
அவளின் கவலைகளையும், அவளின் காயங்களையும் மாற்றுவதற்கு தான் மட்டுமே மருந்து என்று அவளின் வாய் மொழி மூலம் அறிந்துக் கொண்டவன்,
அவனின் மார்பில் புதைந்து இருந்தவளின் முகத்தைப் பார்க்க முயல, அவனின் முயற்சி தோல்வியைத் தழுவியது.. அவள் இன்னும் அவனுள் ஆழமாக புதைந்தாள்..
அவனின் மனம் வலிக்க, “இல்லடா நீ எந்த தப்பும் செய்யலடா.. நான் தான் எல்லாம் செய்தேன்.. என்னோட முட்டாள் தனம் தான்..” என்று பழியை அவன் ஏற்றுக்கொள்ள,
“கயல்விழி, ரஞ்சித் என்று எல்லோரும் உண்மை சொல்லவும் தான் என்னோட காதல் உனக்கு புரிந்திருக்கிறது..” என்று அழுகையுடன் கோபத்துடன் கேட்டவளின் குரலில் ஆதங்கம் வெளிப்படையாக தெரிந்தது..
அவளை அவனிடமிருந்து பிரித்தவன், “உன்னோட காதலை மற்றவர் சொல்லி அறிந்துக்கொள்ள நான் ஒன்றும் மூன்றாம் மனுஷன் இல்லை.. உன்னோட உயிர் காதலன்.. என்னிடம் நீயே சொல்லு..” என்று அவன் சிரிப்புடன் சொல்ல, அவள் அமைதியாக தலையைக் குனிந்து நின்றிருந்தாள்..
அவளின் முகத்தை தாடையை பிடித்து ஒற்றை விரலில் மெல்ல நிமிர்த்தியவன், அவளின் கண்களைப் பார்க்க, அவள் அவனின் முகத்தையே பார்த்தாள்.. அவனின் பார்வையில் என்ன இருக்கிறது என்று தனது தேடலைத் துவங்கியது அவளின் விழிகள்..
“நான் மட்டும் அவர்களிடம் கதை கேட்டு மெதுவாக வந்திருந்தால், நானும் அபூர்வாவும் அனாதையாக நின்றிருப்போம்..” என்று அவன் ஒருவித நடுக்கத்துடன் சொல்ல அவனின் வாயை மூடினாள் மதுமிதா..
அவளின் கைகளை விலக்கியவன், “உண்மைதானே..?” என்று ஒரு புருவம் உயர்த்தி அவளைப் பார்த்து கேட்டான் அவன்.. அவளும் ஆமாம் என்று தலையசைக்க, அவளின் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தியவன்,
“மதுமிதா நான் செய்தது தவறு தான்.. உன்னை நான் சந்தேகம் பட்டிருக்க கூடாது.. என்னோட நிலையில் இருந்தும் யோசிம்மா.. பத்து வருடம் உன்னை விட்டு பிரிந்தவன் உன்னை இப்படி பார்த்தும், என்னை என்னால் கட்டுபடுத்த முடியல..” என்றவன் அவளின் முகம் பார்த்தான்..
“எனக்கு தண்டனை கொடுப்பது என்றால் என் அருகில் இருந்து தண்டனை கொடு.. என்னை விட்டு பிரிந்து செல்லாதே..” என்று அவன் அவளின் விழிகள் பார்த்துக் கூறினான்..
அவனின் கண்களைப் பார்த்தவள், “ஸாரி சொல்லவே இல்லை..?!” என்று அவனைப் பார்த்து நக்கலாகக் கேட்டாள்..
“செய்கிற தப்பை எல்லாம் செய்துவிட்டு ஸாரி சொன்னால் மட்டும் மனசு வலிக்காதா..?! உனக்கும் வலிக்கும் எம்.கே. என்னோட ஸாரி உனக்கு நான் சொல்ல விருப்பம் இல்லை.. அதுக்கு நீயே தண்டனையை முடிவு செய்.. ஆனால் இப்பொழுது எடுத்த முடிவை மட்டும் எடுத்துவிடதே மதுமிதா..” என்று அவளை கெஞ்சினான்..
அவளை அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்தவன், அவளின் தலையை வருடி, “மதும்மா உன்னோட தூக்கம் கலைந்து பத்துவருடம் ஆகிவிட்டது.. உனக்கு என்னோட மடியில் படுத்து தூங்க வேண்டும் என்று நினைத்தால், நல்ல தூங்கு..” என்று சொல்ல அவனின் மடியில் படுத்தவள் அடுத்த நிமிடமே..
“ரோஹித் எனக்கு ஒரு பாட்டு மட்டும் பாடுடா..” என்று கேட்கவும், அவளை மடியில் தங்கியவன்,
உன்னைக் கொடு என்னைத் தருவேன்
இதுதான் காதலடி கண்ணீர் கொடு
புன்னகை தருவேன் இதுவும் காதலடி
தாலாட்டே கேட்காத ஒரு ஜீவன் நானம்மா..
தாயாகி நான் பாட சேயாகிக் கேளம்மா..
” என்று அவன் பாடிக்கொண்டிருக்க நிம்மதியாக அவனின் மடியில் படுத்து துயில் கொண்டாள் மதுமிதா..
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சந்தியா ஸ்ரீ டியர்
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 
Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka

Wow very nice dear
 
sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
nice epi sis(y)(y)(y)(y)asatuthanama suicide panna mudivuedukira right timela vanthu rohit kaapathitaan.............oru vazhiya samathanam aayitangala what about apoorva........waiting eagerly
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
nice epi sis(y)(y)(y)(y)asatuthanama suicide panna mudivuedukira right timela vanthu rohit kaapathitaan.............oru vazhiya samathanam aayitangala what about apoorva........waiting eagerly
thanks sister for your comment...!
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top