• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilave Ennidam Nerungaathe review by Mrs Roy

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

edenroy3

புதிய முகம்
Joined
Jul 16, 2018
Messages
5
Reaction score
3
Location
srilanka
'Nilave Ennidam Nerungaathe' romba per intha storya vaasichiruppeenga .... eluthu nadai migavum arumaiyaaga irunthathu enthai marukka mudiyaathu ....
aanal kathaiyin amaipil oru sila vishayangal suvarasiyathirkkavum .... eethirpaaratha thiruppathai erpaduthavum amaikka patiruppathai oru vaasagiyaaga , oru ammaavaga , oru pennaaga ennaal eetru kolla mudiyavillai ...
eluththaalargal avargalin thiramaiyai kaatta vendum thaan athu matravargalin manathai paathikkum vithamaaga irukka koodaathu ...
eluththalargalin eluthu vaasippavargaluku nambikkai kodukkum vithamaagavum ...thayiriyam kodukkum vithamaagavum irukka vendum ....
nayagi jiya vin karppalippai thudangi ..... doctor gal seiyyum akiramam varai ulla kaatchigal .... samuthayathin meethum maruthuvargal meethum perum ava nambikkaiyai erpaduthi ullathu ....
aan nanbargal meeethu ulla nambikkaiyai kuraikindrathu .... athunai thayiriya mikka oru pennaal aen thannai kaaptrikolla mudiyavillai ???
jiyaa thnnai kaaptri kondirunthaal endral evvalavu nandraga irunthirukkum ... padikkum vaasargalukku ethu evvalavu thunichchalai thanthirukkum ....
eluthubavargal vendumaanal nera pokirkaaga eluthalaam naan en pondra vaasagargal appadi illai .... ungalin ovvoru eleuthum engalin aal manathai thaakkum ....
ungalin elluthu engalin thayiriyaththaiym nambikkaiym thati eluppa vendum keti mudaki poda koodaathu ....
nalla eluthaalaragal endru nambi thaan naangal padikka varukondrom .... oru penne penn palaginamaanaval endru koorinaal naatil pengalukku ethiraaga nadakum kutraththai eppadi nirutha muidyum ...
vaarthaigalai kavanamaaga kaiyandirunthaal nandraga irunthirukkum .... siru kulanthaigalum kathai padikirargal .... avargal artham ketkum poluthu oru thaayaga naan enna pathil kooruvathu ??
oru pen thaniyaga thnnai kaapatrikolla mdiyaathaa ....pengalai aene innum karppennum vishayathail adimai padukireergal ??
kathai enbathu vaasipavargalukku nermaraiyaana ennangalai tharavendum ....
eluthkkal ungaludaiyathu thaan .....aanal vaasagargal illaavittaal ungalin eluthukal uyiratru thaan irukkum ...athai eluthaalargal thngalin manathil vaithirunthaal nandraga irukkum ..... tv yil trpkkaga suvaarasimaana sambavangalai poduvathu pola commentkkaaga manathai aluthum sambavangalaiyum vaarthaigalaiyum payanpaduththaatheergal ... ithu eluthaalargalukku enathu iniya vendukol ....
naemiraa neenga oru nalla eluththaalar .... athanaala thaan ennaal ithai etrukolla mudiyavillai .... nalla nermaraiyaana ennaglai thara koodiya kathaigalai naan ungalidam irunthu varaverkindren ...
by
Mrs Roy
 




shajiya

மண்டலாதிபதி
Joined
Jan 26, 2018
Messages
340
Reaction score
764
Location
tharamani, chennai
சகோதரி.....தங்கள் கருத்தை தவறென்று சொல்லவில்லை ஆனால் தற்பொழுது சமுகத்தில் நடக்கும் சில அத்துமீறல்களைத்தான் நெமிரா அவர்கள் சொல்லி உள்ளார்.....அவர் ஒட்டுமொத்த மருத்துவர்களை பற்றி சொல்லவில்லை.....அதில் இருக்கும் சில புல்லுருவிகளை பற்றிதான் சொல்லி உள்ளார்.....சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு பலியாகின்றனர்.... ஆண் பெண் நட்பை தவறென்று அவர் சொல்லவில்லை தவறான நபர்களின் நட்பைத்தான் அவர் தவறு என்று சொல்கிறார்.... சில உண்மைகள் ஏற்றுக்கொள்ள கடினமாகத்தான் இருக்கும் ஆனால் தற்பொழுது நம் சமுகத்தின் நிலை இதுதான்.... இது என்னுடைய கருத்து இது எவரையாவது புண்படித்து இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்....
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
@edenroy3 சொல்வது என்னவென்றால், சமுகத்தில் நடக்கும் அத்து மீறல்களை ஜியா எதிர்த்து போராடி வெற்றிபெறுவதாக காட்டி இருக்கலாமே என்பது தான்...
அது கூட முடியவில்லையென்றால், படித்த பெண்ணுக்கும், சாதாரண பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்.., சாதாரண பெண் கூட தன்னைக் காத்து கொள்வாளே.... ( குழந்தைகளுக்கு தான் நாம் ஏதும் சொல்லித்தருவதில்லை ) பெண்.., எந்த நிலையில் இருந்தாலும், எவ்வளவு படித்திருந்தாலும் ,அவளை, ஒரு ஆண் நினைத்தால்.................. என்னுடைய கருத்தும் இது தான் ..

இன்னும் எவ்வளவு நாள் தான் பெண்களை கொடியிடை ஆகவும், காற்றில் பறப்பது போன்ற எடை என மென்மையானவளாகவும், பலவீனமானவளாகவும், ஒரு அடிக்கு மயங்கி விழுபவளாகவும், பயந்த சுபாவம் உள்ளவளாகவுமே காண்பிப்பீர்கள்... அப்படி இருந்தால் தான் அவள் நாயகி... பலமாக இருந்தால், தைரியமாக இருந்தால் அவள் வில்லி.

இவ்வளவு, முட்டாளாகவும், கோழையாகவும், வெளிநாட்டில் தனியாக படித்து அங்கு இருந்த ஆண்களிடம் தைரியமாக ஆளுமையாக இருந்த பெண்ணை, திருமணமாகி , காதல் கணவனோடு , சமுகத்தில் பலமுள்ள மாமனார், உறவினர்களுடன் இருக்கும் போது காட்டி இருப்பது நெருடலாக உள்ளது. அவளோட வீடியோ இருந்தவர்களிடம் தனியாக, நைட் ல் சென்று மாட்டிக்கொள்வது சினிமாத்தனமாகவே தோன்றுகிறது.சமீர், ஜியா விடம் பேசும் இடங்கள், தூண்டிவிடுவது போலவும் , அதிகப்படியாகவும் உள்ளது. நடந்த சம்பவத்தின் அழுத்தத்தை கூட்ட வேண்டும் என்பது போல திணிக்கப்பட்டது போலத்தான் உள்ளது. வன்முறை காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்படம் பார்த்த உணரவே மிஞ்சியது.

women empowerment னால ஜியா தன்னை காத்துக்கொள்வாள் அப்படினு சொன்னிங்க... எதை குறிப்பிடுகிறீர்கள் என தெரியவில்லை ...

எப்போதும் வரும் முன் காப்பதே நல்லது. எல்லாம் நடந்த பின்,வேறு வழியில்லாமல் போராடுவது தைரியம் ஆகாது..

நேமிரா வின் எழுத்தும், கதை நகர்த்த விதமுமே, கடைசிவரை படிக்க தூண்டியது... கடைசி சில episodes நான் படிக்கவில்லை. என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற கதைகள் இளம் பெண் எழுத்தாளர்களிடமிருந்து, வருவது மிகவும் வருந்தத்தக்கது.

edenroy3 சொன்னது போல, சின்ன பிள்ளைகளும், படிக்கிறார்கள்.. பெண் குழந்தைகள் படிக்கும் போது கண்டிப்பாக நம்பிக்கை இழப்பார்கள். பெண்கள் எவ்வளவு திறமையாக இருந்தாலும், படித்து இருந்தாலும் , இந்த ஒரு விஷயத்தில் ஆண்கள் அவர்களை அழித்து விடலாம் என்று பெண்களே ஒத்துக்கொள்வது போல் உள்ளது. இதெல்லாம் தவிர்க்க முடியாது, அதிலிருந்து மீண்டு வர வேண்டும், அந்த பெண்களை திருமணம் செய்பவர்கள் தெய்வம் போலவும் காட்டப்படுவது தவிர்க்க பட வேண்டும்...

உங்கள் எழுத்தை 1000 பேர் படிக்கும் நிலையில் இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல.. ஒரு வார்த்தையை சாதாரண மனிதன் சொல்வதற்கும், பாப்புலர் ஆன ஒருவர் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனால், தான் MP, MLA ACTORS சொல்லும் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

நேமிரா., எழுத்தாளர்கள் சமுதாயத்தில் மிகவும் முக்கியமானவர்கள்... இன்டர்நெட், FACEBOOK WHATSAPP எல்லாம் இல்லாத காலத்திலேயே., வெறும் எழுத்துக்களால் சமுதாயத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்கள்... அந்த அளவு நம்பிக்கையை உங்கள் மீதும் வைத்திருக்கிறோம்.. அந்த ஆதங்கத்தில் வந்த விமர்சனமே தவிர, தங்களை வருத்த அல்ல.
ஆரம்பத்திலிருந்து, ஆர்வமாக படித்து வந்ததாலும் , உங்களுடன் நல்ல தோழமை இருந்ததாலும் நான் ஏதும் சொல்லவில்லை.. ஆனால், இப்போது சொல்லாமல் இருக்க முடியவில்லை... மன்னித்துவிடுங்கள்... தோழி...

முள்ளிலிருந்து காத்துக்கொள்ள காலணி தான் தேவையே தவிர, வழி எல்லாமே முட்களாக இருக்கிறது, காலை கிழித்து விட்டது , ரணமாயிருக்கிறது, நடக்க முடியவில்லை என்ற புலம்பல்கள் அல்ல... எல்லா காலத்திலும், (மஹாபாரத, ராமாயண காலத்திலிருந்தும் , அதற்கு முன்னும் கூட ) நல்லதும் இருந்திருக்கிறது , தீயதும் இருந்திருக்கிறது.. அது போலத்தான், இந்த காலத்திலும், நம் சமுகத்திலும் இரண்டும் இருக்கிறது... புதிதாக இப்போது எதுவும் வந்துவிடவில்லை......

இந்த சம்பவங்களை நியூஸ் பேப்பர் வழியாகவும், விளைவுகளையும், வேதனைகளையும் சொல்லாமலேவும் தான் நாம் அறிவோமே .... நடக்காமல் இருக்க என்ன பண்ணலாம் சொல்லுங்க..... என்பது தான் என் மனக்குறை....

சமுதாயத்தில் நடக்கும் கொடூரங்களையும், அதன் விளைவுகளையம், கற்பனையில் மட்டுமே கிடைக்கும் தண்டனைகளையுமே சொல்லாமல், அதிலிருந்து காத்துக்கொள்ளவும், அந்த கயவர்களை இனம் காணவும், அடுத்தவர்க்கு, நேராமல் காப்பாற்றவும், கற்றுக்கொடுங்கள்...

ஆண்களை பெண்களுக்கு உறுதுணையாக இருப்பது போலவும், மதித்து நடப்பது போலவும் காட்டினால் ஆண்களுக்கும் அது முன் மாதிரியாக இருக்கும்... இப்போது இது தான் அவசரமான தேவை...

அழகான, உணர்வு பூர்வமான காதல் நிறைந்த, நன்கு படித்த , நவீன சூழ்நிலையில், விறுவிறுப்பாக நகர்ந்த, நான் மிகவும் ரசித்து படித்த ஒரு கதைக்கு, இது போன்ற ஒரு review எழுத வேண்டியிருந்ததற்க்கு மிகவும் வருந்துகிறேன்...

என் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் இல்லை...ஆனால், ஒரு வாசகியாக, ஒரு பெண்ணாக, சொல்ல உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்... தவறு இருந்தால் தயவு செய்து மன்னித்துவிடுங்கள்....

உங்கள் தோழி..
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top