You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Nilave ennidam nerungaathey 13

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹலோ நண்பர்களே ,
போன அத்தியாயத்துக்கு நீங்க குடுத்த கமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது , உங்களோட ஆதரவுக்கு நன்றி நண்பர்களே .
நிலவே என்னிடம் நெருங்காதே " வோட அத்தியாயம் 13 படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை பகிருங்கள் .

நிலவே என்னிடம் நெருங்காதே 13

99.jpg
காலை பொழுது புலர்ந்த வேளையில் என்றும் இல்லது சீக்கிரமே எழுந்த ஆஷிக் கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு தன் தலையை ஒப்பனை செய்து கொண்டிருக்க ,

" குட் மார்னிங் ஆஷிக் " என்றவாறு உள்ளே நுழைந்த ஆதர்ஷ்ஷை பார்த்து ," குட் மார்னிங் டா " என்று தன் வேலையை தொடர்ந்து கொண்டே கூறினான் ...

" டேய் எங்க கிளம்பிட்ட " என்ற ஆதர்ஷிடம், தன் முழுக்கை சட்டையை தன் முழங்கை வரை மடக்கி விட்டவாறே அவன் புறம் திரும்பி ,

" சமீர் வீட்டுக்கு "

" டேய் இப்போவே வா , ஒரு ரெண்டு நாள் போகட்டும் "

" இல்லை இன்னைக்கே பேசியாகணும் "

" சரி நானும் வரேன் "

" வேண்டாம் மச்சான் நான் பார்த்துகிறேன் "

" டேய் அவரு கோபத்துல உன்னை எதாவது பேச ... நீ பதில் பேச பிரச்சனை எதுவும் ஆகிற போகுதுடா "

" என் தங்கச்சியோட வாழ்க்கை டா ... என்ன நடந்தாலும் பொறுமையா இருப்பேன் " என்று முதன் முறை ஆயிஷாவை தன் தங்கை என்று உரிமையாய் கூறிய ஆஷிக்கை பார்த்து புன்னகைத்த ஆதர்ஷ்

" சரி டா ஆள் தீ பெஸ்ட் ... ஏதும்ன்னா போன் பண்ணு சரியா " என்று ஆதரவாக அவனது தோளில் தட்டி .. வழியனுப்பி வைத்தான் ..

ஆதர்ஷிடம் விடைபெற்ற ஆஷிக் ஒரு சில மணி நேரத்தில் சமீரின் இல்லம் அடைந்தான் .

கதவு திறந்திருப்பினும் காலிங் பெல்லை அழுத்திவிட்டு ஆஷிக்
வாசலில் நின்று கொண்டிருந்தான் ...

ஷாஹித் டைன்னிங் டேபிளில் தன் வீட்டாருடன் சாப்பிட்டுகொண்டிருக்க .... யாராக இருக்கும் என்று வெளியே சென்று பார்த்த ரஸ்மின் ,

" எப்படி பா இருக்க என்னவிஷயம் " என்று கேட்க ... அவரை பார்த்து லேசாக தன் தலையை அசைத்தவன் " ஷாஹித் ஸார பார்க்கணும் " என்று கூற ... அதற்குள் வீட்டினுள் இருந்து ஷாஹித் ,
" ரஸ்மின் யாரு வந்திருக்காங்க " என்று கேட்க

" அதுங்க " என்றவர் தயக்கத்துடன் ஆஷிக்கை உள்ளே வருமாறு செய்கைசெய்ய ...

தன் காலணிகளை கழற்றிவிட்டு உள்ளே வந்த ஆஷிக்கை பார்த்த ஷாஹித் கோபமுற்று ,
" இங்க எதுக்கு வந்த , உன்னை யாரு உள்ள விட்டது " என்று கடுமையாய் பேச ...
வந்த கோபத்தை தனக்குள்ளே அடக்கிக்கொண்டவன் ... மிகவும் பொறுமையாக அவரிடம் ,
" சார் நேற்று நடந்ததை பத்தி நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் "
" என்ன பேச போற அதான் மொத்தமாய் எங்களை கேவல படுத்திட்டியே " என்று எரிச்சலுடன் கூற ...
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
" என்னால புரிஞ்சிக்க முடியுது ... கனவுகள் உடையும் பொழுது அது எவ்வளவு கஷ்டம் குடுக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும் ....
நடந்த எதையும் நான் நியாய படுத்த விரும்பலை ... அது தப்பு தான் ஆனா அது எந்த அளவுக்கு தப்போ ..... அந்த அளவுக்கு உண்மை ...
நான் நினைச்சிருந்தா என் தங்கச்சிக்காக விருப்பமே இல்லாம உங்க பொண்ண கல்யாணம் பண்ணிருக்கலாம்... அப்படி நான் பண்ணிருந்தா .... அது நான் உங்க பொண்ணுக்கு பண்ற பெரிய துரோகமா இருந்திருக்கும் ...
சரி எல்லாம் போகட்டும் உங்க கிட்ட ஒன்னு கேட்க்கிறேன் ... உங்களுக்கு என்னை பத்தி என்ன சார் தெரியும் ?? என் அப்பா பெரிய பிஸ்னஸ் மேன்னா உங்க பொண்ணை எனக்கு குடுத்திருவீங்களா !! நான் யாரு என்னன்னு தெரிஞ்சிக்க மாட்டீங்களா ...
நான் அதிகமாக பொண்ணுங்க கூடத்தான் பேசுவேன் ... மோஸ்ட்டா நைட் பப்ல நீங்க என்ன பார்க்கலாம் ... வீக்கெண்ட்ல பியர் இல்லாம இருக்க முடியாது ...
பார்ட்டி பியர் பிரண்ட்ஸ் இது தான் ஆஷிக் இது தான் என்னோட
ரோட்டின் லைஃப் இப்படி தான் டெல்லியில வாழ்ந்துட்டு இருக்கேன் ....
ஆனா இப்படி பட்ட ஆஷிக்குள்ள இருக்கிற ஒரு அழகான காதல் தான் ஜியா ...
என் காதலை உங்ககிட்ட சொல்லலாமான்னு கூட எனக்கு தெரியலை ஆனாலும் சொல்றேன் ....
எங்களோட லவ் அட்ஜஸ்ட்மெண்ட்ல போகல அண்டர்ஸ்டாண்டிங்க்ல போகுது ...
எங்களுக்குள்ள எதுவமே ஒத்துவராது ஆனாலும் அவ எனக்கு நான் அவளுக்குன்னு வாழ்ந்துட்டு இருக்கோம் ....
அஞ்சி வருஷமா லவ் பண்ணி .... சண்டை போட்டு பிறிஞ்சி ஆறு வருஷம் ஆச்சி இத்தனை நாள்ல ஒரு பொண்ண கூட என்னால ஜியாவோட இடத்துல வச்சி பார்க்க முடியலை ..
அவளை தவிர என்னால இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது ....
இந்த விஷயத்தை நான் அன்னைக்கே சொல்லிருக்கணும் .....ஆனா என்னால எதுவும் சொல்ல முடியலை ...
இதுல முழு தப்பும் என்னுடையது தான் ....எங்க வீட்ல யாருக்கும் இது தெரியாது ... எல்லார் முன்னாடியும் சட்டுன்னு சொல்ல முடியலை .... யாரும் என்கிட்ட இந்த கல்யாணத்துல விருப்பமான்னு கூட கேட்கலை ....
உங்களை தனியா சந்திச்சாவது பேசிருக்கணும் ... அதை செய்யாதது என் தப்பு தான் ...
ஜியா அம்மா தங்கச்சின்னு யோசிச்சேன் ஆனா உங்க உன் பொண்ணை பத்தி யோசிக்காம போய்ட்டேன் ...
தப்பெல்லாம் என்னோடது இதுல என் தங்கச்சிக்கு தண்டனை குடுக்காதீங்க ....
என்ன தண்டனையா இருந்தாலும் நான் ஏத்துக்கிறேன் எனக்கு குடுங்க என் தங்கச்சி பாவம் . .... அவ அழும் பொழுது கஷ்டமா இருக்கு ...
இதுவரைக்கும் நான் என்னை பத்தி சொன்னது எல்லாமே உண்மை ... நான் இவ்ளோ பேசுனத்துக்கு அப்புறமும் உங்களுக்கு என் மேல உள்ள கோபம் போகலைன்னா பரவாயில்லை...
என்னை மன்னிக்க கூட வேண்டாம் ! நீங்க என்னை எவ்வளவு திட்டணும்ன்னாலும் திட்டுங்க ... ஏன் உங்க முகத்துலையே நான் முழிக்கலை நான் போயிடுறேன் ...
என் தங்கச்சி பாவம் அவளை தயவு செஞ்சி ஏத்துக்கோங்க ...
உங்க எல்லார் மனசையும் ரொம்ப காயப்படுத்திட்டேன் முடிஞ்சா என்னை மன்னிச்சிருங்க " என்றவன் தாஹிராவின் பக்கம் திரும்பி ,
" ஐயம் ரியலி சாரி " என்று மூச்சு விடாமல் தன் மனதில் உள்ளதை கொட்டி தீர்த்துவிட்டு ... அங்கிருந்து சென்றான் ..

ஜியாவின் வீட்டில் ,
" அட வாங்க அக்கா என்ன ரொம்ப நாளா ஆளையே காணும் " என்று திவ்யா அந்த பெண்மணியை முகமலர்ச்சியோடு உள்ளே அழைக்க ...

அதை பொருட்படுத்தாத அந்த பெண்மணி " இப்போ என்ன முடிவு பண்ணிருக்க " என்று கேட்க ... விஷயம் புரியாமல் குழம்பியவர் ..

" எதை பத்தி அக்கா சொல்றீங்க " என்று கேட்க ..

" எதை பத்தியா ?? உனக்கு விஷயம் தெரியுமா இல்லையா " என்று ஆர்மபித்தவர் முகத்தில் பாவனைகளுக்கு குறைவின்றி கூறி முடித்தவர் .... திவ்யாவின் பதிலுக்காக காத்திருக்க ... அவர் எதிர்பார்த்தது போலவே அதிர்ச்சியடைந்த திவ்யா முகத்தில் கோபம் ததும்ப

" என்ன அக்கா சொல்றீங்க .. பிரச்சனைன்னு சொன்னா ...இதை பத்தி மூச்சி விடலை அக்கா "

" நீ இப்படி ஏமாளியா இரு ... ஊரு முழுக்க இந்த பேச்சி தான் ... அந்த பெரிய வீட்ல வேலை பார்க்குற வேலைக்காரி மூலமா எனக்கு தெரியும் "

" அவளை என்ன பண்றேன்னு பாருங்க " என்ற திவ்யாவை தடுத்த
அந்த பெண்மணி
" ஏய் ஆத்திர பட்டு என்ன ஆக போகுது ... போன மானம் போனது தானே .... புத்தியோட யோசி இவளுக்கு ஒரு வரனை பாரு .... இவ விஷயம் தெரிஞ்சா சரண்யாவோட வாழ்க்கைக்கு தான் பிரச்சனை "

" அது சரி இவ்வளவு தெரிஞ்சதுக்கு அப்புறம் யாரு ஜியாவ கல்யாணம் பண்ணுவாங்க "
" அதுக்கெல்லாம் ஏற்பாடு இல்லாமலா வருவேன் ... நீ சரி சொன்னா நாளைக்கே தட்டு மாத்திக்கலாம் "

" அப்படியா "

" ஆமா பையன் வெளிநாட்ல வேலை பார்க்குறேன் ... வீட்ல ரொம்ப வசதி , வரதட்சணை எதுவும் வேண்டாம் பொண்ணு அழகா இருந்தா போதும்ன்னு சொல்லிட்டாங்க உனக்கு ஒரு செலவு இல்லை "

" வெளிநாட்ல வேலையா ... பையன் எப்படி "

" அதெல்லாம் விசாரிக்காம சொல்லுவேன்னா பையன் ரொம்ப நல்லவன் .. என்ன சொல்ற "

" அவரு ஊர்ல இல்லை நாளை மறுநாள் தான் வருவாரு ....அவர் வந்ததும் அவர் கிட்ட பேசிட்டு சொல்றேன் "

'" ஆனா அவங்க நாளைக்கே உறுதி பண்ணனும்ன்னு சொல்றாங்களே "

" நாளைக்கா அவர் இல்லாம எப்படி அக்கா "

" பையன் ஊருக்கு வந்திருக்கான் ... நாளைக்கு நைட் ஊருக்கு கிளம்பிருவான் ... போனா ரெண்டு மாசம் கழிச்சி தான் வருவான் அதான் உடனே உறுதி பண்ணினா நல்லா இருக்கும்ன்னு அவங்க வீட்ல நினைக்கிறாங்க "

" அவர் கேட்டா என்ன சொல்றது "

" நீ என்ன ஜியாக்கு கெட்டதா செய்யிற ... நல்ல விஷயம் தானே வந்ததும் சொல்லு புரிஞ்சுக்குவாரு ... யோசிக்காத திவ்யா ..."

" இல்லை அக்கா அவரு இல்லாம ... மனசுக்கு நெருடலா இருக்கு " என்றவரிடம்

" உனக்கு சரண்யாவை பத்தி கவலை இருக்கா இல்லை .... இவ எதுவம் ஏடாகூடமா பண்ணிட்டா சரண்யாவை யாரு கல்யாணம் பண்ணிக்குவாங்க ... இப்போ என்ன கல்யாணமா நடக்க போகுது காப்பு போட்டு உறுதி பண்ண போறாங்க அவ்வளவு தானே ... இவ பண்ணின காரியத்துக்கு இப்படி பட்ட சம்பந்தம் கிடைக்கிறது பெரிய விஷயம் .... விட்டா இதை மாதிரி அமையாது ....
சரண்யாவோட வாழ்க்கை உனக்கு முக்கியம்ன்னா இதுக்கு சரி சொல்லு " என்றவர் அழுத்தமாய் கூற ...

சரண்யாவின் பெயரை அந்த பெண்மணி கூறியதும் ...பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கூட யோசிக்காத திவ்யா " பையன் நல்லவன்னு சொல்றீங்க ...உங்களை நம்பி சரின்னு சொல்றேன் "என்று இருமானதாய் கூற

" அப்படி சொல்லு ... நாளைக்கு கொஞ்சம் பேரு மட்டும் கூப்பிட்டு உறுதி பண்ணிக்குவோம் " என்றவர் தான் சென்று வருவதாக கூறி அங்கிருந்து செல்ல ... அவர் சென்றதும்

" யாருக்கு உறுதி பண்ணனும் " என்றவாறு வந்த ஜியாவை பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்தவர் பிறகு அவளது முகத்தை கூட பார்க்காது .

" உனக்கு தான் " என்று எரிச்சலோடு கூற .....

" சித்தி எனக்கு கல்யாணம் வேண்டாம் " என்று கெஞ்சி கேட்டவளிடம்

" வேண்டாம்ன்னா என்ன டி அர்த்தம் ... சொல்ல சொல்ல கேக்காமா அந்த பையன் வீட்டுக்கு போய் வம்ப விலை குடுத்து வாங்கிட்டு இப்போ என்ன வேண்டாம்....
அங்க நடந்த எல்லாத்தையும் மறைச்சிட்டு ....ஓங்கி ஒன்னு போட்டேன்னா வாய் பேசிறாதா ...

இங்க பாரு நல்லா கேட்டுக்கோ நாளைக்கு நான் சொல்ற மாதிரி கேட்டு ஒழுங்கா நடந்துக்கணும் இல்லைன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ....

கொஞ்சம் சரண்யாவையும் நினைச்சு பாரு உன்னால அவ வாழ்க்கை வீண் ஆகணுமா ... அப்புறம் உன் சித்தப்பாக்கு சொல்லலாம்ன்னு எதாவது திட்டம் போட்ட ..... என் சாவதான் பார்ப்ப " என்றவர் வார்த்தைகளை விஷத்தை போல அவளிடம் கொட்டிவிட்டு அங்கிருந்து செல்ல ....

ஜியா மிகவும் மன வேதனை அடைந்தாள் ... தன் நிலையை நினைத்து மிகவும் நொந்து கொண்டாள் .

" ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது .... என் வாழ்க்கையில வலி வேதனையை தவிர வேற எதுவமே கிடையாதா " என்று கண்ணீர் மல்க கதறினாள்...துக்கம் பொங்க கண்ணீரில் கரைந்தாள் .
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
ஆஷிக் ஷாஹித்திடம் தன் மனதில் பட்ட அனைத்தையும் பேசிவிட்டு வந்தாலும் .. அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை நினைத்து ஒருவித நெருடலில் இருந்தாலும் ... அவனது மனம் முழுவதையும் ஜியாவின் நினைவுகளே ஆக்கிரமைத்துக்கொண்டிருந்தன .

ஜியாவை பற்றி நினைக்க நினைக்க அவனது கண்களில் இருந்து கண்ணீர் அவனையும் மீறி உருண்டோடின .

பால்கினியில் நின்று கொண்டு வானத்தையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவனை இருக்கரங்கள் தழுவ ....

" ஜியா " என்றவாறே சற்றென்று திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி கலந்த சந்தோஷம் காத்திருந்தது . ...

" ஜியா இல்ல பா நான் உன் அம்மா " என்ற ஹாஜராவை , அழுதுகொண்டே கெட்டி அணைத்துக்கொண்டான் , இறுகிப்போய் இருந்தவன் மனதுக்கு அந்த இதமான அணைப்பு மிகவும் தேவை பட்டது ....

தன் தாயின் அணைப்பில் இருந்து விடுபட்டவன் தன் கண்ணீரை துடைத்து கொண்டு ,

" நீங்க ஏன் இங்க வந்தீங்க , நான் பண்ணின காரியத்துக்கு உங்க மூஞ்சில முழிக்க கூட எனக்கு தகுதி இல்லை " என்று தொண்டைவிம்ப கூறியவன் கரம் புடித்து தன் அருகில் இருந்த சோபாவில் உட்காரவைத்து ஹாஜரா ,

" ஆஷிக் , இங்க பாரு "

" சாரி மா எனக்கு அந்த நேரம் என்ன பண்ணனும்னே தெரியலை . நான் பண்ணினதெல்லாம் தப்பு தான் ..
ஆனா என்னை ஒதுக்கிராதீங்க... " என்று தன் மடியில் தலை சாய்த்து ஏங்கிக்கொண்டிருக்கும் மகனின் சிகையை ஆதரவாக கோதிய படி

" அம்மாக்கு எப்படி டா உன்னை புடிக்காம போகும் ....
நீ என் பையன் டா ஆயிஷா மேலை நீ எவ்வளவு அன்பு வச்சிருக்கன்னு .... நீ எனக்கு நிரூபிச்சிட்ட எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு " என்றதும் அவரது மடியில் இருந்து சற்றென்று எழும்பியவன் ,

" உங்களுக்கு எப்படி தெரியும் " என்று ஆச்சரியமாய் கேட்க

" சமீர் அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வந்தாங்க ...கல்யாணத்தை எப்போம் வச்சிக்கலாம்ன்னு கேட்டாங்க .....நான் என்ன சொன்னேன்னு கேட்க மாட்டியா " என்றவரிடம்

" என்ன மா " என்றவனிடம்

" என் பெரிய பையனோட கல்யாணம் முடிஞ்ச கையோட ஆயிஷாவோட கல்யாணத்தை வச்சிக்கலாம்ன்னு சொன்னேன் ..., சொல்லு எப்போ என் மருமகளை என்வீட்டுக்கு கூட்டிட்டு வர போற " என்று அவர் கூறவும் ... ஆஷிக்கின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி ..... சந்தோஷத்தில் வார்த்தைகள் எதுவம் வராமல் ... தடுமாறியவனிடம் ஹாஜரா

" அம்மாவை மன்னிச்சிருப்பா உன் விருப்பம் தெரியாம அவரு சொன்ன எல்லாத்துக்கும் உன்னை சம்மதிக்க வச்சி அம்மா உனக்கு அநியாயம் பண்ண பார்த்தேன் . நீ ஜியாவை விரும்புற விஷயம் தெரியாது .... தெரிஞ்சிருந்தா நான் கண்டிப்பா அன்னைக்கே சமீர் குடும்பத்துக்கிட்ட சொல்லிருப்பேன் "

" அம்மா ப்ளீஸ் நீங்க, என்கிட்ட போய் மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு ப்ளீஸ் மா "

" இல்லை பா நானும் அவர்கூட சேர்ந்துட்டு உனக்கு விருப்பம் இல்லாத ஒரு கல்யாணத்தை உனக்கு பண்ண பார்த்தேன் , இனிமே அப்படி நடக்காது என்ன நடந்தாலும் பரவாயில்லை நீ முதல்ல போய் ஜியாகிட்ட பேசு ... அம்மா உன் கூடவே இருக்கேன் "

" அம்மா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை "

" நீ எதுவும் சொல்ல வேண்டாம் , ஆதர்ஷ் எனக்கு எல்லாத்தையும் சொல்லிட்டான் ஜியா உன் மேலை கோபமா இருக்கிறதா சொன்னான் .... அது என்ன கோபமா இருந்தாலும் சரி பண்ண வேண்டியது உன்னோட பொறுப்பு "

" மா ஆயிஷா என்ன சொன்னா "

" ஆயிஷா நீ வீட்டை விட்டு போனதுல இருந்து எதுவும் சாப்பிடல நான் தான் சமாதானம் படுத்தி சாப்பிட வச்சேன்.....
நீ எதை பத்தியும் யோசிக்காம நேரா போய் ஜியாவை பாரு அவளோட கையில கால்ல விழுந்தாவது அவளை சமாதானம் செஞ்சி கூட்டிட்டு வா இது என்னோட ஆர்டர் " என்று அன்போடு கண்டித்தவரிடம் சந்தோஷமாக விடைபெற்றுக்கொண்டு ஆதர்ஷுடன் ஜியாவை காண சென்றான் .

ஆஷிக் சந்தோஷத்தில் துள்ளி குதித்து கொண்டிருக்க ....

ஜியாவோ அவளது அறைக்குள் தன்னை சிறைவைத்து கொண்டு தன் விதியை நினைத்து கடவுளிடம் ,

" நான் என்ன தப்பு பண்ணினேன் நீயே சொல்லு எனக்கு ஏன் இப்படிலாம் நடக்குது ...
சின்ன வயசுல என் அப்பா அம்மாவை என்கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட நான் ஒன்னும் சொல்லல ...
அப்புறம் ஆஷிக் எனக்கு கிடைச்சான் உண்மையா காதலிச்சேன் அவனும் எனக்கு துரோகம் பண்ணிட்டான் அப்போ கூட நான் ஒன்னும் சொல்லல ...
ஆனா அதுக்கப்புறம் நீ எனக்கு குடுத்த வலி இருக்கே அது எந்த பொண்ணுக்கும் வரக்கூடாதது ....
என்னை ஏன் இன்னும் விட்டு வச்சிருக்க மொத்தமா சாகடிச்சிட வேண்டியது தானே....
இப்போ இந்த கல்யாணம் இதெல்லாம் எனக்கு தேவையா ஒன்னு எனக்கு நிம்மதியான வாழ்க்கையை குடு இல்லனா என்ன சாக விடு.... .
எனக்கு தெரியும் நீ எனக்கு அந்த நிம்மதிய கூட குடுக்க மாட்டன்னு .....
நீ தந்த வர போதும் நானே எடுத்துகிறேன் ....இனிமே இந்த உலகத்துல வாழ்றதுக்கு எனக்கு தகுதியே இல்லை ... சித்தப்பா ..... சித்தி .... சரண்யா .... என்னை எல்லாரும் மன்னிச்சிருங்க செத்து போறத தவிர எனக்கு வேற வழியில்லை " மனம் உடைந்து அழுதாள் .....

சிறிது நேரம் கண்களை மூடி எதையோ யோசித்தவள் ... மனதை கல்லாக்கிக்கொண்டு
தனது அறையில் கொசுவை கொல்வதற்காக பயன்படுத்தப்படும் திரவத்தை எடுத்து கொஞ்சம் கூட யோசிக்காமல் தன் வாயில் சரித்தாள்.
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
ஜியா உட்கொண்ட சில நொடியில் உள்ளே வந்த சரண்யா

" அக்கா உங்கள எல்லாரும் வர சொன்னாங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க வாங்க " என்று கூறி அழைக்க அழுது வடிந்த முகத்தை அழுத்தி துடைத்துவிட்டு சரண்யாவுடன் ஹாலுக்கு வந்தாள் ...

முகமெல்லாம் வேர்த்து கொட்ட , அழுது அழுது வீங்கி போயிருந்த அவளது விழிகளை பார்த்து மாப்பிள்ளை வீட்டார் ,

" என்னாச்சி பொண்ணோட முகம் ரொம்ப வாடி போய் இருக்கு " என்று விசாரிக்க .. அதற்குள் அவளது சித்தி ,

"அட அப்படியா இருக்கு அது வேற ஒன்னும் இல்லை ஜியாக்கு அவங்க சித்தப்பான்னா உயிரு ...அவரு இந்த நேரம் பார்த்து வெளியூர் போயிருக்காருல அதான் கொஞ்சம் வாட்டமா இருக்கா வேற எதுவும் இல்லை " என்று சமாளித்தார்.

பெரியவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்க ,

ஜியாவிற்கு நெஞ்சில் படபடப்பு அதிகமாகிக்கொண்டே போனது ..... அவசரத்தில் இப்படி செய்துவிட்டாள் ஆனால் நேரம் போக போக சாவின் பயம் அவளுக்குள் குடிகொண்டது ....

முகமெல்லாம் வேர்த்து கொட்ட மூச்சி விடவே சிரமப்பட்டு கொண்டிருந்தவள் ... அதை வெளி காட்டாமல் பொய்யாய் புன்னகைத்து கொண்டிருந்தாள் . பல பேச்சுவார்த்தைக்கு பிறகு , மாப்பிள்ளையின் தந்தை

," அப்புறம் என்ன அதான் எல்லாம் பேசியாச்சே அப்புறம் என்ன ஆரம்பிக்கலாமா " என்று கூறவும் ,

திவ்யா " ஆமா " என்று கூற ... காப்பு போடுவதற்கான சண்டங்கு இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பிக்கும் நிலையில் இருக்க ....ஜியாவோ எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்கிற அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தாள்.

ஒருவழியாக ஜியாவின் இல்லத்தை அடைந்த ஆஷிக் ஆதர்ஷிடம்

" என்னடா வீட்ல எதோ ஃபங்கஷன் மாதிரி இருக்கு "

" ஆமா டா ஆஷிக் .... இந்த நேரத்துல நீ உள்ள போறது சரியா இருக்குமா "

" இருக்காது தான் ... இந்த நேரத்துல என்ன ஃபங்கஷன் டா வைக்க போறாங்க ... ஏதுக்கும் உள்ளே போறேன் டா ... ஜியாகிட்ட பேசியே ஆகணும் ...இதுக்கு மேலையும் என்னால பொறுமையா இருக்க முடியலை டா " என்று உறுதியாக கூற

" சரி அவசரப்படாம .. கோபப்படாம .. பொறுமையா .. பேசு சரியா நான் வெளியில வெயிட் பண்றேன் " என்ற ஆதர்ஷிடம் விடைபெற்று கொண்டு உள்ளே சென்றவன்...

ஜியா பட்டு புடவை கெட்டி மணப்பெண் போல் நின்றுகொண்டிருந்த தோற்றம் கண்டு மிகவும் அதிர்ந்து போனான் ...அவனது விழிகளில் தீயின் ஜுவாலை தெறித்தது ... ஜியாவின் கையில் மாப்பிளை வளையல் அணிவிக்கும் நேரம் பார்த்து வேகமாக வந்து ஜியாவின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்தவன் ஜியாவை கோபமாக பார்க்க....

அவையில் இருந்த அனைவரும் ஒருவருக்கொரு ஏதேதோ பேச ஆரம்பித்தனர் ....

அப்பொழுது அவளது சித்தி ஆஷிக்கிடம் ,
" நீ ஏன் டா இங்க வந்த முதல்ல வெளியில போ " என்று கூற .... அவன் அவருக்கு தன் பார்வையை மட்டும் பதிலாக கூற ... அவனது பார்வையை சந்தித்தவரின் விழிகளில் கலவரம் குடிகொள்ள ... அவனை விட்டு ஓரடி தள்ளி நின்றார் ....

வெண்பனி போல இருந்த வதனம் அழுது அழுது சிவந்து பொய் இருந்ததை கூட கவனிக்காதவன் ... ஆக்ரோஷத்தோடு அவளது கரங்களை பற்றி ...

" உனக்கு என்ன சொன்னாலும் புரியாதுல ...
உன்னை நினைச்சி நான் அழுதுட்டு இருக்கேன் ...
நீ என்னனா நல்லா அலங்காரம் பண்ணிட்டு கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டு இருக்க ...
ஏண்டி என்ன சாகடிக்கிற .... " என்றவனின் கைப்பிடியில் இருந்து தன்னை விடுவித்தவள் தடுமாறும் குரலில் ,

" இங்கிருந்து போ உன்னை பார்க்கவே புடிக்கலை துரோகி " என்று கூற தன்

நிதானத்தை இழந்தவன் ...அவளது கரம்பிடித்து வேகமாக தன் பக்கம் இழுத்து கோபம் வருத்தம் வலி என்று உணர்ச்சி பொங்க,

" என்னை புடிக்கலையா ... நான் துரோகிதான் , அப்படியே இருந்துட்டு போறேன் ...
ஆனா நீ எனக்கு வேணும் ...... உன்னால முடிஞ்சது பார்த்துக்கோ .....என்னோட காதலை இத்தனை பேர் முன்னாடி தான் நிரூபிக்கணும்ன்னா அதுக்கும் நான் தயார் " என்றவன்

அவளது இதழை நோக்கி குனிய ....... அவளது மூக்கில் இருந்து கசிந்த ரத்த துளிகள் அவனது கையில் பட அதிர்ச்சியில் உறைந்து போனான் ... நிமிர்ந்து அவளது முகத்தை பார்க்க அவளோ மூச்சி வாங்கமுடியாமல் இமை மூடியவாறு நொடியில் பொழுதில் அவன் மார்போடு சாய்ந்தாள் ...
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#9
Superb ud sis...jia ku enna aagumo nu tension ah irukku
hai rihaa ....
thanks for ur support friend ..
ellam sari sariyaagirum paa ...thaan aashik irukkaane ...
keep supportinng
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#10
ashik ayusha problema solve pannitaan nalla annan......... ippo jiyava kaapithutavanla sis ivalo suyanlama irukangale avanga sithi nice epi sis
haai sri ...
jiyavaium sari panniruvaan ....namma aalu ..
thanks for ur comment ..
kepe supporting freind..
 

Sponsored

Advertisements

Top