You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Nilave ennidam nerungaathey 16

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹலோ நண்பர்களே ,
போன அத்தியாயத்துக்கு நீங்க குடுத்த கமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருந்தது , உங்களோட ஆதரவுக்கு நன்றி நண்பர்களே .
நிலவே என்னிடம் நெருங்காதே " வோட அத்தியாயம் 16 படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை பகிருங்கள் .

நிலவே என்னிடம் நெருங்காதே 16

images (42).jpg
ஆஷிக் தனது இரு கன்னத்தில் கை வைத்தவாறு கட்டில் மீது சம்பலம் போட்டு அமர்ந்து கொண்டு வேண்டா வெறுப்பாய் டிவி சேனலை மாற்றி கொண்டிருக்க , விசில் அடித்தவாறே அவனது அறைக்குள் வந்த ஆதர்ஷ் ,
" டேய் ஆஷிக் என்னடா இன்னும் ரெடி ஆகல "என்ற ஆதர்ஷிடம் .... எதையோ பறிகொடுத்தவன் போல

" ஏன் ஆகணும் " என்று ஆஷிக் கேட்க ...கடுப்பான ஆதர்ஷ் மீது தலையணையை எடுத்து அடித்தவாறே

"ஏன்னா ,என்னடா அர்த்தம் காலையிலே சொன்னேன்ல மத்தியானம் ரெடியா இரு , ஷாப்பிங் பண்ண மாலுக்கு போகணும்ன்னு . அப்போ சரி சரின்னு சொல்லிட்டு இப்போ என்னன்னு கேட்குற "

"சொன்னேனா " என்றவன் , ஆதர்ஷின் கையில் இருந்த தலையணையை வாங்கி அதன் மேல் குப்புற படுத்துக்கொள்ள எரிச்சல் அடைந்த ஆதர்ஷ் ஆஷிக்கின் கரம்பிடித்து வலுக்கட்டாயமாக எழுப்பி ,

" இப்போ என் கூட ஷாப்பிங் வர போறியா இல்லையா " என்று முரண்டு பிடிக்க

" மூடே இல்லடா நீ போய்ட்டுவாயேன் "

" டேய் தனியா போக எனக்கு மூட் இல்லைடா"

" அப்போ வா இரெண்டு பேரும் சேர்ந்து தூங்கலாம் " என்று கரம் பிடித்தவனை ..... அடித்தவன் ,

" உனக்கு என்னடா ஆச்சி "

" எரிச்சலா இருக்குடா ,ஜியாவ பார்க்கணும் போல இருக்கு .... அவ கூடவே இருக்கணும் போல இருக்கு ...... ஆனா அம்மா அவங்க போய் ஜியா வீட்ல பேசுற வரைக்கும் என்னை அவளை மீட் பண்ணாதன்னு சொல்லிட்டாங்க , நீயும் ஜியாவை இப்போதைக்கு பார்க்க போகாதன்னு சொல்லிட்ட எனக்கு என்னவோ மாதிரி இருக்கு எந்த ஒரு விஷயம் மேலையும் எனக்கு ஒரு விருப்பமே இல்லைடா , சரி பார்க்க தான் முடியலை போன் பண்ணலாம்ன்னா அவ எடுக்கவே மாட்டிக்கிறா "

" ஹாஸ்பிடல்ல இருந்து இப்போ தான் டிஸ்சார்ஜ் ஆகிருப்பா டா , ரெஸ்ட்ல இருக்கலாம்ல ரெண்டு மூணு நாள் கழிச்சி அவளே உன்கிட்ட பேசுவா ,
ஜியா உனக்கு தான்னு முடிவாகிடுச்சி உங்க வீட்ல எந்த பிரச்சனையும் இல்லை , ஜியா வீட்லையும் உங்க கல்யாண விஷயத்துக்கு ரொம்ப ஒன்னும் எதிர்ப்பு வரும்ன்னு எனக்கு தோணலை .
ஸோ நான் சொன்ன மாதிரி நீ கொஞ்சம் பொறுமையா இரு ,
எதுவும் கிறுக்குத்தனம் பண்ணி , எல்லாம் கூடி வரும் போது கெடுத்து விட்றாத என்ற ஆதார்ஷை பார்த்து ஆஷிக் முறைக்க ,
" முறைச்சாலும் என் பதில் அது தான் " என்று கூற , சரி என்பதை போல் தலையை அசைத்தவன் , மீண்டும் ,

" அப்போ இதெல்லாத்தையும் சீக்கிரமா பண்ணினா என்ன எதுக்கு தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணிட்டு " என்று ஆரம்பித்தவனிடம் , என்ன செய்வது என்று புரியாமல் ஆதர்ஷ் " 'உன்னை , இல்லை நான் தான் டா சுவற்றுல போய் முட்டிக்கணும் " என்று கூற , அதை கண்டு சிரித்த ஆஷிக் ,

" டேய் டென்ஷன் ஆகிட்டியா என்ன , சும்மா உன்னை கடுப்பேத்த அப்படி சொன்னேன் " என்றவாறு அவனது கழுத்தை கெட்டிக்கொள்ள ,

" டேய் போ டா சீக்கிரமா கிளம்பு " என்ற ஆதர்ஷின் கன்னத்தை கிள்ளியவாறே ,

" மூஞ்ச தூக்காத பத்து நிமிஷத்துல ரெடி ஆகிருவேன் " என்று அவன் கூறிய சில மணிநேரத்தில் இருவரும் தங்களின் காரில் மாலுக்கு சென்றனர் .

தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கியபிறகு அவர்கள் அங்கிருந்து கிளம்ப , அப்பொழுது ஆஷிக் ,

" டேய் பார்த்தியா இவ்வளவு பெரிய மால்ல ஆம்பளைங்களுக்கு மூணே மூணு ஷாப் தான் இருக்கு ஆனா இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் வெரைட்டி வெரைட்டியா இருக்குல்ல , சல்வார்க்கு தனி ஷாப்பு , பார்லர்லக்கு தனி , மேக் அப் ஐட்டம்ஸ்க்கு தனி ஏன் செருப்புக்கு கூட தனியா " என்றவன் தனக்கு எதிரே இருக்கு ஒரு துணிக்கடையில் ஜியாவை கண்டு ,

" டேய் ஆதர்ஷ் அது ஜியா தானே "

"ஆமா"

"ரெஸ்ட் எடுக்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்கா ... நீ நில்லு நான் போய் பார்த்துட்டு வரேன் " என்று ஆதர்ஷிடம் கூறிவிட்டு அவளை நோக்கி நடந்தான் ...
அங்கே ஜியா பிங்க் நிற சல்வார் ஒன்றை எடுத்து தன் மேல் வைத்து பார்த்து ,

" இது என்ன சைஸ் " என்று விற்பனை பிரிவில் உள்ள பெண் ஊழியரிடம் தன் கண்கள் மிளிர வினவ ,

அவர் " இது எல் சைஸ் மம் " என்றதும் முகம் சுருங்கியவளாய்

" ஓ " என்றவள் தனக்கு மட்டும் கேட்குமாறு

" எனக்கு இது செட் ஆகுமா ஆகாதான்னு தெரியலையே இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு , ஆனா கண்டிப்பா செட் ஆகாது ..... ம்ம் கடவுளே எல் சைஸ்ன்னா சின்னதாதான் இருக்கணுமா ... ஏன் என் சைஸ்க்கு செட் ஆகுற மாதிரி எல் சைஸ டிசைன் பண்ண கூடாதா ... " என்று அந்த ஆடையை தன் மேல் வைத்தவாறு கண்ணாடியின் முன்பு நின்று பார்த்து கொண்டிருக்க.
அவள் பின்னால் வந்து நின்ற ஆஷிக் தன் நாடியை அவளது தோளில் வைத்தவாறு ,

" பேபி இது உனக்கு செட் ஆகாது டா , ஹிப் பக்கம் கொஞ்சம் வெயிட் போட்ருக்க டா " என்று கூறி கண்ணடிக்க , அருகில் உள்ள பெண் ஊழியர் அவன் கூறியதை கேட்டு சிரிக்க , கோபமுற்ற ஜியா ஆஷிக்கை பார்த்து முறைத்தவாறே ,அந்த பெண்ணையும் பார்த்து முறைத்து விட்டு ,அங்கிருந்து செல்ல ,

" ஜியா நில்லு எங்க போற " என்றவாறு பின்னாலே ஆஷிக் செல்ல ..... எரிச்சல் அடைந்த ஜியா அவன் புறம் திரும்பி ,

" எதுக்கு இப்போ ஜியா ஜியான்னு ஏலம் விடுற "

" முதல் தடவ கூப்பிடும் பொழுதே நீ என்னனு கேட்ருக்கலாம்ல "

" என்ன" என்று கோபமாய் கூறியவளை பார்த்து ஆஷிக்

" ஷப்பா , என்ன கோபம் , சரி ரெஸ்ட் எடுக்காம இங்க என்ன பண்ற "

" ம்ம் தூங்கிட்டு இருக்கேன் "

" ஓ தூங்கிட்டியா " என்ற ஆஷிக்கை பார்த்து முறைத்த ஜியா அங்கிருந்து கிளம்ப போக , "ஏய் ஜியா சாரி சாரி " என்றவன்

" ஹெல்த் எப்படி இருக்கு " என்பதற்குள் ....

" அக்கா " என்று அழைத்து கொண்டே வந்த சரண்யா ,
" எனக்கு அந்த கடையில உள்ள மேக் அப் கிட் வேணும் " என்று கேட்க ,

" அதெல்லாம் ஏதும் வேண்டாம் ஜியா , ஏற்கனவே வீட்ல இருக்கிறத யூஸ் பண்ணினா அதுவே போதும் " என்று சரண்யாவின் பின்னால் வந்த ஜியாவின் சித்தி ஆஷிக்கை பார்த்ததும் புன்னகைக்க ,
பதிலுக்கு புன்னகைத்தவன் ,

" வணக்கம் சித்தி எப்படி இருக்கீங்க " என்ற ஆஷிக் சரண்யாவிடம் ," ஹாய் சரண்யா எப்படி இருக்க "

" நான் நல்லா இருக்கேன் " என்று பதிலுக்கு புன்னகையோடு கூறியவளிடம் ,

" ஏய் உனக்கு அந்த மேக் அப் கிட் வேணுமா , நாம போய் வாங்கலாமா " என்று கூறி யாருடைய சம்மதமும் கிடைக்கும் முன்பே சரண்யாவை அழைத்து கொண்டு கடைக்குள் செல்ல சரண்யாவோ ஆஷிக்கிற்கு எந்த மறுப்பும் கூற முடியாமல் தன் தாயும் அக்காவும் என்ன கூறுவார்களா என்ற பயத்தில் விழித்து கொண்டிருக்க , சட சடவென்று மேக் அப் பாக்ஸை வாங்கியவன் அதற்கான காசை கொடுத்துவிட்டு , பொருளை சரண்யாவிடம் கொடுக்க அவளோ பாதி தூரம் கையை நீட்டி விட்டு அவனிடம் இருந்து வாங்க தயங்கிக்கொண்டிருந்தாள்.
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
" வாங்கிக்கோ சரண்யா " என்று ஆஷிக் கூற , சரண்யாவை கரம் பற்றி தன் பக்கம் இழுத்த ஜியா ," சரண்யா வாங்க மாட்டா " என்று கூற ,

" ஏன் வாங்க மாட்டா , சரண்யா வாங்குவா " என்றவன் புன்னகையுடன் , சரண்யாவிடம் கொடுக்க ஜியா முறைப்பதை பார்த்து சரண்யா பயப்பட , ஆஷிக் ஜியாவிடம் ," ஏய் ஏண்டி இப்படி கண்ணை உருட்டிட்டு இருக்க எனக்கே பயமா இருக்கு சின்ன பொண்ணு பயப்பட மாட்டா " என்றவனை பார்த்து சரண்யாவும் சித்தியும் சிரிக்க ,

" வாவ் சரண்யா உங்க ஸ்மையில் ரொம்ப அழகா இருக்கே " என்றவன் அவளிடம் மேக் அப் கிட்டை கொடுக்க ,

" இதெல்லாம் வேண்டாம் பா "என்ற திவ்யாவிடம்

" இப்போ நீங்களா இதுல என்ன இருக்கு ..... நான் குடுக்க கூடாதா " என்றவனை பார்த்து ஜியா ," குடுக்க கூடாது " என்று கூற

" உனக்கு என்ன ஆச்சு ஜியா ஏன் இப்படி பேசுற உன் தங்கச்சி எனக்கும் தங்கச்சி மாதிரி தானே , அவளுக்கு வாங்கிக்கொடுக்கிற உரிமை எனக்கில்லையா "

" இல்லை , உனக்கு எந்த உரிமையும் இல்லை " என்று ஜியா கோபமுற , தூரத்தில் இருந்து கவனித்து கொண்டிருந்த ஆதர்ஷிர்க்கு எதோ பிரச்சனை என்று மட்டும் புரிய அவனும் அங்கே வந்தான் ,

ஜியாவின் சித்தி ," ஜியா விடு டா ஏன் கோபமா பேசுற "

" சித்தி ப்ளீஸ் நீங்க இதுல தலையிடாதீங்க " என்றவள்

" என்ன அப்படி பார்த்துட்டு இருக்க , பதில் கிடைச்சிருச்சா இங்க இருந்து கிளம்ப " என்று கூற , கோபமுற்ற ஆஷிக் ,

" என்னடி பதில் கிடைச்சிருச்சு " என்று ஜியாவின் கரத்தை கோபமாக பற்றிகொள்ள , அவனை தடுத்த ஆதர்ஷை பார்த்து உரிமையாய் முறைத்தவன் ,ஜியாவை நோக்கி

" உரிமை இல்லாம தான் எனக்காக விஷம் சாப்ட்டியா " என்று கேட்க ,

" உனக்காக யாரு விஷம் சாப்பிட்டா ??? ,நீயா எதாவது நினைச்சிகிட்டா என்னால எதுவும் பண்ணமுடியாது " என்று தனலாய் வார்த்தைகளை கொட்ட ... வெடுக்கென்று பற்றிய கரத்தை விடுவித்தான் ...
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#3
அவனது பிடியில் இருந்து தன் கரத்தை விடுவித்துக்கொள்ள ...."உனக்காக யாரு விஷம் சாப்பிட்டா ???" என்ற ஜியாவின் வார்த்தைகள் ஆஷிக்கை மிகவும் பாதித்தது பதில் கூற முடியாது சிலையென்று நின்றவன் ... தன்னை மீறி வந்த சீற்றத்தை அடக்க இயலாது கோபமாக இருக்க .. அவனது தோள் மீது கைவைத்த ஆதார்ஷ் , தன் கண்களால் ஆஷிக்கை பொறுமையை இருக்க சொல்ல , பொங்கி வந்த சீற்றத்தை தனக்குள்ளே அடக்கிக்கொண்டு .... தன்னை ஆசுவாசப்படுத்தி

" ஓகே ஜியா கோபப்படாத ,நீ இன்னும் பழைய கோபத்துலையே இருக்க அப்படி தானே , எனக்கு சத்தியமா இப்போ வர நீ அந்த விஷயத்துக்காக , தான் என் மேல இவ்வளவு கோபமா இருக்கன்னு என்னாலை நம்பவே முடியலை ... சரி எல்லாம் போகட்டும் பழசை பற்றி பேச வேண்டாம் எல்லாத்தையும் மறந்து புதுசா ஆர்மபிக்கலாம் தப்பெல்லாம் என்னோடது தான் உன் மனசை காயப்படுத்திருந்தா என்னை மன்னிச்சிரு ஐயம் ரியலி சாரி " என்று கூற ,ஜியா ஆஷிக்கிடம்

" என்ன சாரியா , சாரி சொன்னா எல்லாம் சரியாகிருமா ..... சொல்லு டா சாரி சொன்னா எல்லாம் சரியாகிருமா , உன்னை மன்னிக்கிற மாதிரியான துரோகத்தையாடா எனக்கு நீ பண்ணிருக்க உன்னை நம்புனனே " என்று கண்ணீர் மல்க ஜியா அழ , ஆஷிக்கோ ஒன்றும் விளங்காமல் அமைதியாய் நின்றான் ,தன் கண்களை துடைத்துக்கொண்ட ஜியா ,

" நான் ஒண்ணே ஒன்னு கேட்குறேன் அதுக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லு நீ பண்ணின அதே தப்பை நான் பண்ணிருந்தா என்னை நீ மன்னிப்பியா "

" ஜியா நீ எந்த தப்ப சொல்றன்னு எனக்கு சத்தியமா தெரியலை "

" தெரியலை , ஆஷிக் நடிப்பெல்லாம் போதும் ... உன் நடிப்பை நான் இன்னும் நம்புவேன்னு நீ எப்படி நம்புற ...உன்னை பார்க்கவே புடிக்கலை துரோகி " என்றவள் அங்கிருந்து செல்ல ,அவளை தடுத்தவன்

" துரோகி ..... துரோகி.... துரோகி ....

செத்து போயிரலாம் போல இருக்கு ... அப்படி என்ன துரோகம் தான் பண்ணினேன்னு சொல்லிட்டு போ " என்று கோபமாய் கூறியவனுக்கு , எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் ஜியா ,

" முடியாது " என்று மெதுவாகவும் அழுத்தமாகவும் கூற

கோபத்தில் ஜியாவை பிடித்து சுவற்றோடு சாய்த்து அவளது இரு கரங்களையும் பற்றிகொண்டவன் அவளிடம் ,

" என்ன நடந்தாலும் சரி சொன்னா தான் நீ இங்க இருந்து போக முடியும் " என்றவன் சில நொடிகள் அமைதிக்கு பின்பு மேலும் தொடர்ந்து ... "ஏண்டி என்ன கொல்ற , உன்னை நினைச்சி தினம் தினம் தவிக்கிறேனே அது உனக்கு புரியலையா , " என்று கோபமும் வலியும் தன் கண்களில் மின்ன கூறினான் ...
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#5
சுற்றும் முற்றும் உள்ள அனைவரும் அவர்களையே பார்ப்பதை உணர்ந்த ஜியா அஷிக்கின் பிடியில் இருந்து தன்னை விளக்க முயற்சித்த்தவாறே ,

" ஆஷிக் எல்லாரும் பார்க்கிறாங்க என்னை நீ இப்போ விட போறியா இல்லையா "

" பார்க்கட்டும் ... ஐ டான்' ட் கேர் ... எனக்கு பதில் வேணும் ... கஷ்டமா இருக்குடி"

" இதெல்லாம் தியாக்கூட தப்பான உறவு வைக்கிறதுக்கு முன்னாடி நீ யோசிச்சிருக்கணும் " என்ற மறுநொடி " ஜியா " என்று ஆஷிக் கர்ஜிக்க, அவனை தள்ளியவள் ,

"கத்துனா அவளுக்கும் உனக்கும் தப்பான தொடர்ப்பு இல்லன்னு ஆகிறாது .... நீ எவ்வளவு முறைச்சாலும் சரி எவ்வளவு கத்துனாலும், உனக்கு தியாக்கும் தொடர்ப்பு இருந்தது இருந்தது தான் " என்று அழுத்தமாய் ஜியா கூற ... கோபம் தாங்காமல் ஆஷிக் ஜியா மீது தன் கைகளை ஓங்க , அவளோ சிறு அசைவும் இல்லாமல் அவனையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் ...

அடிக்க வந்த அவனது கையின் வேகம் ... அவளது முகத்தை கண்டதும் அதன் வேகம் குறைய , ஓங்கிய கரத்தை தளர்த்தியவன் தன் ஆள்காட்டி விரலை அவள் முன் காட்டி

" பிரச்சனை எனக்கும் உனக்கும் ... தேவையில்லாம என் ஃப்ரண்ட பத்தி பேசாத " என்று மிரட்டும், தோரணையில் கூற .

" ஃப்ரண்ட் ... ஓ ... உங்க ஊர்ல இதுக்கு பேர் தான் நட்பா , நம்புனேன்டா ... எப்படி டா எனக்கு துரோகம் பண்ண உனக்கு மனசு வந்துச்சி " என்று கண்களில் கண்ணீர் மல்க கூறியவளிடம்

" உனக்கெல்லாம் நட்ப்ப பத்தி என்னடி தெரியும் , முன்னபின்ன உனக்கு ஃப்ரண்ட்ஸ்ன்னு யாரும் இருந்தால் தானே "

" ஆமா தியா அப்புறம் உன்னை மாதிரி ஆளுங்க தங்களோட தப்பான உறவை என்னை மாதிரி முட்டாளுங்ககிட்ட இருந்து மறைக்கிறது யூஸ் பண்ற வார்த்தை தான் நட்ப்புன்னு எனக்கு முன்னாடி வேணும்ன்னா தெரியாம இருந்திருக்கலாம் ஆனா இப்போ தெரளிவாவே தெரியுது "

" ஜியா எனக்கு கோபமா வருது தயவு செஞ்சி எதுவும் பேசாத " என்று ஆஷிக் கோபத்தை உள்ளடக்கியவாறு அழுத்தமாய் கூற ... அவனுக்கு பதில் பேச வந்த ஜியாவை தடுத்த ஆதர்ஷ் ,ஆஷிக்கை அமைதிப்படுத்திவிட்டு

" ஜியா பிரச்சனை வேற மாதிரி போகுது அதை பேசி தீர்க்கிறது தான் சரி "

" அதுல எனக்கு விருப்பம் இல்லை ஆதர்ஷ் " என்று எரிச்சலோடு கூற ...

" ஜியா இதுல நீயும் ஆஷிக்கும் மட்டும் சம்பந்தம் பட்ருந்தீங்கன்னா நான் ஒன்னும் தலையிட மாட்டேன் ... ஆனா நீ தியாவையும் ஆஷிக்கையும் பற்றி சொல்ற .... ஸோ பேசி தான் ஆகணும் "
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#7
" அந்த அசிங்கத்தை மறுபடியும் வேற பேசணுமா ....
என்ன வேணுமோ அதை ஆஷிக்கோட ஆசை காதலி தியாகிட்டையே கேட்டு தெரிஞ்சிக்கோங்க ...
ஏன் ஆஷிக் .... அவ உன்கிட்ட எதுவும் சொல்லலையா ... ம்ம் சொல்ல டைம் இருந்திருக்காது ... சார் தான் வேற வேலையில பிசியா இருந்தீங்களே . ஆனா தியாக்கு நான் நன்றி சொல்லணும் , அன்னைக்கு தியா மட்டும் என்கிட்ட உண்மையை சொல்லாம இருந்திருந்தாள்ன்னா என் நிலமையை கொஞ்சம் யோசிச்சி பாரு உன்னை இப்போ வர நம்பி ஏமாந்துட்டு இருந்திருப்பேன் ....
தப்பெல்லாம் நீ பண்ணிட்டு ஏதோ ஒரு லெட்டரை என்கிட்ட காட்டி நான் எழுதினேன்னு சொல்ற ...
உன் அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணினது ... ஆயிஷா உன்னோட ஸ்டேப் சிஸ்டர் ... இப்படி எல்லாமே உன்னை லவ் பண்றதுக்கு முன்னாடியே எனக்கு தெரியும் இதெல்லாத்தையும் காரணம் காட்டி உன்னவிட்டு போற ஆளா நான் இல்லை ...
எவ்வளவு பெரிய டிராமா ... உன் தப்ப மறைக்க எப்படி எல்லாம் யோசிச்சு என் மேல பழியை போட்ருக்க .... என்ன தியாவும் நீயும் சேர்ந்து போட்ட ப்ளனா இது " என்று ஜியா கூற ஆதர்ஷ்க்கு குழப்பம் இன்னும் அதிகமானது ....
வெகுண்டெழுந்த ஆஷிக் தனல் தெறிக்கும் விழிகளோடு , ஜியாவை வெறித்து பார்த்தவாறு ....

" ஷட் அப் ஒருவார்த்தை இனிமே பேசுன ... என்னை நீ வேற மாதிரி பார்ப்ப .... " என்று மிக கடினமாக கோபம் தெறிக்க பற்களை கடித்தவாறு கூற ... பதிலுக்கு ஜியா திமிர இருவரையும் சமாதானம் செய்த ஆதர்ஷ் ,

" சண்டை போடுறதுனால எந்த பயனும் இல்லை தியாவ வச்சி பேசி இதை இன்னைக்கு தெளிவு படுத்திறது தான் என்னைக்கும் நல்லது " என்ற ஆதர்ஷிடம் ஆஷிக்

" டேய் இவ தான் ஏதோ உளர்றான்னா , நீயும் அவ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிகிட்டு இருக்க இவளோட சந்தேக புத்திக்காக நாம நம்ம தியாவ சந்தேக படணுமா என்ன ..... சின்னா வயசுல இருந்து நமக்கு அவளை தெரியும் டா ... ஜியா சொல்றத கேட்டா அவளால சத்தியமா தாங்கிக்கவே முடியாது " என்று தன் தோழிக்காக பரிந்து பேச

" ஆஷிக் பிரச்சனைன்னு வந்ததுக்கு அப்புறம் பேசி தீர்க்கிறது தான் சரி , அவளுக்கு போன் பண்ணி உடனே என்வீட்டுக்கு வர சொல்லு "

" ஆதர்ஷ் " என்று ஆஷிக் தயங்க

" சொன்னதை செய் "என்று கட்டளையிட்டான் ...

இதை அனைத்தையும் கவனித்த ஜியாவின் சித்தி , ஜியாவிடம் என்ன பேச என்று விளங்காமல் அவளையே பார்க்க , அவள் அவரிடம் ,

" பழைய விட்டு போன கணக்கெல்லாம் தீர்க்க வேண்டியிருக்கு சித்தி , முடிச்சிட்டு வீட்டுக்கு வந்திர்றேன் , நீங்க சரண்யா கூட பத்திரமா வீட்டுக்கு போங்க " என்று கூற ,அவர் அவளிடம் ,

" கொஞ்சம் பொறுமையா இருமா , எனக்கென்னவோ இப்போ கூட ஆஷிக் மேல தப்பு இருக்கிற மாதிரி தெரியலை " என்று தன் மனதில் உள்ளதை கூற .... ஜியா அதற்க்கு சமாதானம் ஆகவில்லை என்பதை உணர்ந்தவர் ..தன் மகளை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றார்...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top