Nilave ennidam nerungaathey 16

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#11
சில மணிநேர பயணத்திற்கு பிறகு ஜியா ஆஷிக் ஆதர்ஷ் மூவரும் ஆதார்ஷின் இல்லத்திற்கு வர...

அவர்கள் வந்த சில மணிநேரத்தில் ," ஆஷிக் ... ஆதர்ஷ் எங்க டா இருக்கீங்க " என்று அழைத்து கொண்டே உள்ளே வந்த தியா ஆஷிக்கை பார்த்து " என்னடா வர சொல்லிருக்கீங்க ஏதும் பார்ட்டியா " என்று எப்பொழுதும் போல அவனது தோளில் தன் கையை போட்டவாறு கேட்க

" வாங்க தியா உங்களுக்காக உங்க ஃப்ரண்ட்ட்.... ஆஷிக்..... " என்று அழுத்திய ஜியா ஆஷிக்கை பார்த்தவாறே ," ரொம்ப நேரமா காத்துகிட்டு இருக்காரு " என்று கூற ,

அங்கே ஜியாவை அவர்களுடன் கண்டவுடன் தியாவின் முகம் நெருப்பில் பட்ட சருகாய் மாறியது வந்த கோபத்தை அடக்கிக்கொண்டவள் தனக்குள் ,

" என்ன ஆனாலும் இவ ஆஷிக்கை விடமாட்டா போலையே" என்று கடிந்துகொண்டவள் பிறகு ..

தன் முகத்தை இயல்பு நிலைக்கு மாற்றி கொண்டு ," ஜியா எப்படி இருக்கு உன் ஹெல்த் " என்று கேட்க

கோபமுற்ற ஜியா ," போதும் ... இன்னும் எவ்வளவு தான் ரெண்டு பெரும் நடிப்பீங்க , உனக்கும் ஆஷிக்கும் உள்ள ரிலேஷன் ஷிப் பத்தி நீயா சொல்றியா நானா சொல்லட்டா" என்று அதட்டலோடு கேட்க...

" என்ன பேசுற என்ன ரிலேஷன் ஷிப், ஆஷிக் ஜியாக்கு என்னாச்சி " என்று தியா ஒன்றும் அறியாதது போல கேளிவிக்கு பதிலாய் கேள்வியையே கேட்டாள்

" நடிக்காத தியா நவம்பர் முப்பது 2012 ஆஷிக்கோட பிறந்தநாள் பார்ட்டி இப்போ கூட உனக்கு எதுவும் நியாபகம் வரலையா , அன்னைக்கு நைட் உனக்கு ஆஷிக்கும் எதுவும் நடக்கலை "

" அன்னைக்கு நைட் எங்களுக்குள்ள என்ன நடந்தது , ஆஷிக் ஜியாக்கு என்ன ஆச்சு .... நமக்கு என்ன நடந்தது .. ஏதாவது சண்டை போட்டுக்கிட்டோமா " என்று வெகுளி வேடம் தரிக்க

" நடிக்காத தியா ,அடுத்தநாள் காலையில நான் வந்த அப்போ நீ எதுவும் என்கிட்ட சொல்லல "

" நான் என்ன சொன்னேன் .... நீ அன்னைக்கு வந்தியா !! எப்போ வந்த ?? நாங்க எல்லாரும் போனதுக்கு அப்புறம் வந்தியோ ?? " என்று அப்பாவியாக கேட்க

" ஆஷிக் இவ தான் எல்லாம் சொன்ன இப்போ எதுவுமே தெரியாத மாதிரி நடிக்கிறா "

" போதும் அவ நடிக்கலை நீ தான் நடிச்சிட்டு இருக்க " என்ற அவனது இறுக்கமான குரலில் ... க்ரோதம் ததும்ப கூற ... மிரட்சியுடன் அவனை நோக்கினாள்..

மேலும் தொடர்ந்தவன்

" நீ சொல்ற நவம்பர் முப்பது 2012 ,நைட் நான் என் வீட்லையே இல்லை , ஆதர்ஷ் கூட அவனோட வீட்ல இருந்தேன் ." என்றவன் கண்களில் அனல் தெறிக்க கூர்மையாக அவளை பார்க்க

அவன் கூறியதை கேட்ட ஜியாவுக்கு தலையே சுற்றியது ... அவளது வாயில் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் கணக்கில்லாமல் வழிந்தது ..... கூறியதையும் தியா கூறியதையும் ஒப்பிட்டு பார்த்தவளுக்கு .... தியாவின் சூழ்ச்சியில் தான் ஏமாந்தது தெளிவாக புரிந்தது ....
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#12
அவளது மனம் மெல்ல அந்த கசப்பான நினைவுக்குள் அவளை கொண்டு சென்றது ....

ஆஷிக் ஜியா இருவரது காதலும் ஐந்து வருடத்தை மிகவும் சுகமாய் கடந்திருந்த நேரம் அது ... ஆஷிக் தன் ஏரோனாட்டிகள் படிப்பை முடித்து பைலட் ட்ரேனிங்கில் சேர்ந்திருக்க , ஜியா தன் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு லண்டனில் மேல் படிப்பு படிப்பதற்காக தன்னை தயார்செய்து கொண்டிருந்தாள் ....
ஆஷிக்கின் பிறந்த நாளான நவம்பர் முப்பது 2012 அன்று ஜியாவுக்கு எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்க அவளால் ஆஷிக்கின் இல்லத்தில் நடந்த அவனது பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை ...
எனவே எக்ஸாம் முடிந்த அன்று இரவே கிளம்பியவள் அடுத்தநாள் காலையில் மும்பை வந்தடைய , வந்த அடுத்த நிமிடம் ஆஷிக்கை காண அவனது இல்லத்திற்கு மிகவும் ஆசையோடு சென்றாள் ...

----- தொடரும் நண்பர்களே
 

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
#16
nice epi sis. jiyaku diyavoda soolchi purinthu vittathu.ashikuku eppidi puriya vaikapora
thank you sri ... udane puriyum frd....
keep supporting...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top