• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"ஹர்மிந்தர் சாஹிப் ",தர்பார் சாஹிப் ","கடவுளின் உறைவிடம் ", உயர்ந்த புனித நீதிமன்றம் (exalted holy court )என்று அழைக்க படும் "அமிர்தசரஸ் தங்க பொற்கோயில்" அந்த காலை வேலையில் சூரிய கதிர்களால் ஒளிர்ந்து ,மன இருளை நீக்கும் இறைவனை வணங்க நம்மை அழைக்கும் அழகை காண கண் கோடி வேண்டும் .

1280px-Golden_Temple_Amritsar_Panorama.jpg

Ek Onkaar There is only one God ஒரே ஒரு கடவுள் உண்டு

Satnam His name is truth அவர் பெயர் சத்தியம்

Karta Purakh He is a Creator அனைத்தையும் உருவாக்கியவர் அவர்

Nirbhao He is without fear பயம் இல்லாதவர்

Nir vair He is without hate வெறுப்பு இல்லாதவர்

Akal Murat He is beyond time காலத்தை வென்றவர்

Ajuni Saibhan He is beyond birth and death பிறப்பு,இறப்பு தொட முடியாதவர்

Gur Parsad He is self-existent அவர் சுயம்பு ஆனவர்

Jap Meditate on his name அவர் பெயரை சொல்லி தொழுவோம்

Aadh sach jugaadh sach For he was when time began, he has been true for ages காலம் உருவாகும் போது இருந்தவர்

Hai bhee sach naanak hosee bhee sach He is still true, Guru Nanak says - he will forever be true அவர் மட்டுமே உண்மை -குரு நானக் சொன்னது போல் என்றுமே அவர் மட்டுமே நிலைத்து நிற்கும் உண்மை.


என்ற பஜனை பாடல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் இருந்து பஜன் பாடல் ஒலிக்க அங்கு நம் பிராத்தனையை வைப்போம் .

அர்ஜுன் -ப்ரீத்தி வாழ்க்கைக்குள் போவதற்கு முன் பஞ்சாப் பற்றியும்,பஞ்சாபி மக்களை பற்றியும் கொஞ்சம் பார்த்து விடலாம் .தமிழ்நாட்டு கலாச்சாரம் ,பழக்கவழக்கம் ,உணவு ,உடை என்று முற்றிலும் மாறுபட்ட மக்கள் .அவர்களை பற்றி படிக்கும் போது,சில தகவல்கள் தெரிந்து இருந்தால் தான் அந்த மாநில மக்களை புரிந்து கொள்ள முடியும் .

நம்ம மாநிலதிற்கு மாப்பிள்ளையாக வந்தாலும் வரலாம் இல்லையா அர்ஜுன் ஜி அதான்.
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "ஊரு
விட்டு ஊரு வந்து"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
அனிதா ராஜ்குமார் டியர்
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
“பஞ்சாப்”---ஐந்து நதிகள் –சட்லெஜ்(sutlej), ரவி(ravi), பீயஸ்(beas), செனாப்(chenab), ஜீலம்(jeelam) நதிகள் பாய்வதால் பஞ்சாப் (பஞ்ச -5) அப் (தண்ணீர் ) "பஞ்சாப்" என்று பெயர்.வேத காலத்தில் "சப்த சிந்து" என்று அழைக்க பட்ட இடம்.உலகத்தின் முதல் மற்றும் மிக மிக பழமையான "தக்ஸசீலம் பல்கலைக்கழகம்" உலக அரங்கில் நாளாந்த,காஞ்சி பல்கலைக்கழங்கங்களுக்கு இணையாக பரத கண்டத்தின் பெருமையை உலககிற்கே அறிவித்த இடம்.இப்பொழுது இந்த இடம் பாகிஸ்தானுக்கு சொந்தமான பஞ்சாபில் உள்ளது.இந்தியா , பாகிஸ்தான் இரு நாடுகளிலும் பஞ்சாப் என்ற மாநிலம் இருக்கிறது .

"பஞ்சாப் சிங்கம் /sher -e -punjab "என்று இந்த மாநில மக்கள் அழைக்கப்படுவார்கள். வீரத்திற்கு அகராதி. 2.6% மக்கள் தொகை இருந்தாலும் இந்திய ராணுவத்தில் இவர்கள் எண்ணிக்கை 16.6%.ஏறக்குறைய 538% அதிகமாய் ராணுவத்தில் எண்ணிக்கை விகிதத்தில் பணியாற்றும் மக்கள் கொண்ட மாநிலம் .

இந்தியாவின் 16 ஆவது மக்கள் தொகை,ரெண்டு கோடியே 85 லட்சம்.சீக்கியர்கள் 57.69%,ஹிந்து பஞ்சாபிகள் -38%.

'Punjabiyan di shaan vakhri.' என்ற வார்த்தைக்கு ஏற்ப இவர்களிடம் உள்ள aura ‘ஷங்கர் 2.0’ படத்தில் சொல்வாரே அதே "பாசிட்டிவ் aura" பஞ்சாபிகளிடம் அதிகமாவே உண்டு. மற்ற எந்த மாநிலத்தவரும் compete செய்யவே முடியாத ஒன்று.உன்னதமான மனிதர்கள்.வாழ்க்கையை அனுபவித்து,வாழ்வையே காதலிக்க தெரிந்தவர்கள். வீரத்திற்கும்,காதலுக்கும் பேர் போனவர்கள்.

Akshay-Kumar-During-a-shooting0.jpg

உதவி செய்வதில் இவர்களை அடித்து கொள்ளவே முடியாது.பழகி விட்டால் குடும்பத்தில் ஒருவராய் ஏற்று நமக்கு எல்லாமுமாக மாறி விடுவார்கள்.அதே சமயம் ஊர்,உலகம் என்ன வேண்டும் என்றாலும் சொல்லி கொள்ளட்டும் என்று தங்கள் பாதை,வழி மாற்றி கொள்ளாத வைராக்கியம் மிக கொண்டவர்கள்.

" அவர்களின் "தெனாவட்டு"," நிமிர்வு" செமையாக இருக்கும். அந்த பாசம்,அன்பு,அவர்களின் aura,நேர்மை,கனிவூ,வாழ்க்கையை ருசித்து,ரசித்து வாழ்வது அவர்களோடு பழகி பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.

இவர்களை போல் சிறந்த விருந்தோம்பாளர்களை காண்பது அரிது.அவர்கள் வீட்டுக்கு வரும் கெஸ்ட்டுக்கு ட்ரெயின் பெட்டி போல் வரிசை கட்டி நிற்கும் உணவூ வகைகளே சான்று. சாப்பிட நமக்கு தான் வயிற்றில் இடம் இருக்காது .சாப்பிடாமல் அனுப்பவே மாட்டார்கள்.பட்டர் சொட்ட சொட்ட இவர்கள் செய்யும் பட்டர் சிக்கென்,பித்தளை டம்ளர் நிறைய லசி,கீர் என்று அரிசியில் செய்யும் பாயசம்,பராத்தா.

ஹ்ம்ம் எஸ்,வீ.ரங்காராவ் பாடுவது போலே "கல்யாண சமையல் சாதம் "என்று ரவுண்டு கட்டி,ராஜ்கிரண் பாத்தி அமைத்து சாப்பிடுவது போலே விரும்பி உண்பார்கள். தினமும் குறைந்தது மூன்று-நான்கு வகை உணவூ வகை எப்போ சென்றாலும் சுடசுட ரெடியாக இருக்கும் நள்ளிரவில் கூட

(இப்படி வர்ணித்து சொல்வதிலேயே தெரிந்து இருக்குமே -அதே தான் அந்த கல்யாண சமையல் நம்ம ஹனி தான் )

பஞ்சாபிகள் சிறந்த நடனக்காரர்கள்.பல் போன பாட்டி முதல் ரெண்டு வயது குழந்தை வரை,விடிய விடிய நடனம் சிறிதும் களைப்பு என்பதே இல்லாமல் ஆடி கொண்டு இருப்பார்கள்.ஆடி முடித்து இவர்கள் வீட்டுக்கு செல்லவதே விடியற்காலை 2 அல்லது மூன்று மணிக்கு தான்.ஆனால் காலை 5-6 மணிக்கு மேல் உறங்கவே மாட்டார்கள்.அடுத்த நாள் வேலைக்கு என்று புத்துணர்ச்சியுடன் கிளம்பி விடுவார்கள்.

punjabi-culture.jpg

(இவர்களுடன் சென்று,ஆடி,முட்டி கழன்று போன அனுபவம் மக்கா நம்ம ஹனிக்கு )

சுக்ஹபீர் முதல் diljit dosanjh, யோ யோ ஹனி சிங்க் வரை உள்ள பாடல்கள் நமக்கு பிடிக்கலாம்,பிடிக்காமல் போகலாம்.ஆனால் புறக்கணிக்க முடியாது.மொழி புரியவில்லை என்றாலும் நம் கால்கள் நிச்சயம் ஆட ஆரம்பித்து விடும்.

இவர்களோடு பழகி பார்த்தால் தான் தெரியும், இவர்களின் எனர்ஜி லெவல்.எந்த அளவிற்கு பார்ட்டி,டான்ஸ் என்று இருக்கிறார்களோ அதே அளவுக்கு கடின உழைப்பாளிகள்.பிச்சை எடுக்கவே மாட்டார்கள் அது கவுரவ குறைவூ.அதற்கு பதில் "வேலை செய்கிறேன்,அதற்கு உண்டான பணம் கொடு" என்று சட்டை பிடித்து கேட்பார்கள்.வேலைக்கு உண்டான சம்பளம் கேட்டு வாங்குவார்கள்.தொழிலில் அவ்வளவூ நேர்த்தி இருக்கும்.

இவர்களின் ஆடைகள் வானவில்லையும் தோற்கடிக்கும் அளவூ வர்ணஜாலம் மிக்கது. செம்ம ட்ரெஸ்ஸிங் சென்ஸ் கொண்டவர்கள் .பளீர் கலர் எல்லாம் விரும்பி அணிவார்கள்.."குப்பை" என்று போடுவதில் இருந்து கூட முழு ஆடை வடிவமைத்து விடுவார்கள்.

22 மாவட்டங்கள் கொண்ட பஞ்சாப், அரசு நிர்வாகத்திற்காக மஹஜா(mahaja), தோபா (doaba),மால்வா(malwa), போதா (poadh) என்று வகை படுத்தப்பட்டு இருக்கும். இவற்றில் மால்வாவில் உள்ள “bathinda” என்ற நகரத்திற்கு தான் செல்கிறோம். இதான்பா நம்ம ஹீரோ” பஞ்சாப் சிங்கம்” "அர்ஜுன் "சொந்த ஊர் .

"டாபர் -ஐ -ஹிந்து"இந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் சரித்திர பிரசித்தி பெற்ற நகரம் பதிண்டா /bathinda.ஏரிகளின் நகரம்.உலகின் முதல் பெண் சுல்தான்"ரசியா பேகம்" சிறை வைக்க பட்ட "Qila mubarak"கோட்டை இந்த நகரத்தில் தான் உள்ளது.

QILA-MUBARAK-BATHINDA4.jpg

292 கிராமங்கள் அடங்கிய மாவட்டம்.விவசாயம் பிரதான தொழில் என்றாலும் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது.

"ஹிந்து பஞ்சாபிகள்" அதிகம் உள்ள மாவட்டம்.சர்வதேச எல்லை கோட்டுக்கு அருகில் இருப்பதால் ரெண்டு பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது.ஆசியாவின் மிக பெரிய ராணுவ தளம் மற்றும் தளவாடங்கள் அவை.

main-qimg-4e73e0bbe77e69fd3f84d7dbbac07364-c.jpg


எதற்கு எவ்வளவூ பெரிய இன்ட்ரோ என்றால் பஞ்சாபிற்கு வந்து விட்டோம் இல்லையா...அதான் உங்களை புரட்டி போட போடும் "பாரா /சகோதரர்களை, பைனா /சகோதரிகள் " பற்றி அவர்கள் வாழ்க்கை பற்றி கொஞ்சம் சொன்னேன்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நாள் -ஏப்ரல் 10

நேரம் – 9.00PM

இடம் - பதிந்தாவில் உள்ள HMEL GATED கம்யூனிட்டி

452-HMEL-Township.jpg

அந்த HMEL குடியிருப்பில் "Paramēśura dī barakata-கடவுளின் கருணை "என்ற பெயர் பலகை தாங்கி நின்ற அந்த பங்களா வண்ண விளக்குகளாலும்,மலர் அலங்காரங்களுடன் மிளிர்ந்து கொண்டு கொண்டு இருந்தது.அந்த வீட்டின் மூத்த மகள் “பாயல்/PAYAL”லுக்கு “சச்தீப்புடன் /SACHDEEP” உடன் அன்று காலை தான் திருமணம் முடிந்து, இரவில் வரவேற்பு நடந்து கொண்டு இருந்தது .

452-HMEL-TownshipBhatinda.jpg


பஞ்சாபிகளின் திருமணம்,வரவேற்பு என்றால் கேட்கவும் வேண்டுமா ?ஆடல் ,பாடல்,உறவுகள் ,நட்பு என்று கலை கட்டி கொண்டு இருந்தது . இன்னொரு பக்கம் உணவு மலை.நிச்சயமாய் அது உணவு மலை ,கடல் தான்

(பஞ்சாபி திருமண முறைசடங்கு நம்மை விட வேறுபட்டு இருக்கும் .ஒரு ஐடியா கிடைக்க ,அவர்களின் திருமண ,வரவேற்பு பற்றி தெரிந்து கொள்ள கீழே வீடியோ கொடுத்து இருக்கேன் .)


இரவு பன்னிரெண்டையும் தாண்டி கோலாகலம் நடந்து கொண்டு இருக்க , பாயலின் அன்னை ,சகோதரிகள் பாயலை “பேக் பாரா” இரவு சடங்கிற்காக, தயார் செய்ய வீட்டிற்கு அழைத்து சென்றனர் .

romantic-room-decoration-ideas-valentines-day-2-first-night.jpg

பன்னீரில் நீராட வைத்து ,புது உடை அணிய கொடுத்து ,பூக்களால் அலங்கரிக்க பட்ட அறையில் பாயலை விட்டு வந்தனர் .இவர்கள் சடங்கில் மனைவி தான் முதலில் அறையில் முக்காடிட்டு காத்து இருப்பாள் .அதன் பிறகு தான் கணவன் அறைக்குள் வருவார் .


சச்தீப், வீட்டின் கீழ் அறையில் ரெடியாகி ,பெரியவர்களின் ஆசீர்வாதம் பெற்று ,எளிமையான குர்தாவில் தன் காதல் மனைவி பாயல் இருந்த அறைக்குள் ,இளைய தலைமுறையின் கேலி ,கிண்டலுக்கு ஆளாகி ,நொந்து நூடுல்ஸ் ஆகி ,டன் கணக்கில் அசடு வழிந்த பின் போனால் போகட்டும் என்று உள்ளே விடபட்டான்.

கதவு தாளிட்டவன் ,அதன் மேலேயே சாய்ந்து நின்று தான் விட்டான் .அது வரை பிடித்து இருந்த மூச்சினை இழுத்து விட்டவன் ,

"பாயல் !...சாலி (மனைவியின் தங்கை அழைக்கும் விதம் ),சாலா (மனைவியின் தம்பி ),பென்ஜி (அவன் தங்கை ) எல்லா வானரங்களும் சேர்ந்து அப்படி ஒரு கேலி ,கிண்டல் ,படுத்தி எடுத்துட்டாங்க .நல்லவேளை சாஸ் (மாமியார் -பாயல் அம்மா )வந்து ஒரு அதட்டல் போட்டதும் தான் எல்லாம் கிளம்பி போச்சுங்க ...வாழ்க சாஸ்ஜி ."என்றவன் இரவு விளக்கின் ஒளியில் ,மலர்களின் வாசத்தில் நிரம்பி இருந்த அறையின் அலங்காரங்களை ரசித்தான் .

"ரொம்ப நல்லா டெகரேட் செய்து இருக்காங்க இல்லை பாயல் ...ஆனால் இது எல்லாவற்றையும் விட ரொம்ப ரொம்ப அழகாய் இருப்பது என் பாயல் மட்டும் தான் .உன்னிடம் காதலை சொல்ல தயங்கி தயங்கி ,எங்கே யாரையாவது உன் வீட்டில் திருமணம் செய்துட போறாங்கன்னு பயந்தது எனக்கு தான் தெரியும் .நல்லவேளை ரெண்டு ப்ரெண்ட்ஸ் நல்ல நண்பர்களாய் இருந்ததால் அவங்களாகவே இந்த திருமணத்தை முடிச்சி வச்சுட்டாங்க .இந்த நொடி உலகத்தில் யாரு அதிக சந்தோசத்தில் இருப்பது என்றால் அது நான் தான். ஒட்டி (மனைவி )”!என்ன பேச மாட்டேங்கறே ?'என்றவன் கட்டிலில் அமர்ந்து அவன் பாயலை நெருங்கி, அவள் முகத்தை பார்க்க ,அவன் மனைவி இழுத்து போர்த்தி கொண்டு ஆழந்த உறக்கத்தில் இருந்தாள் .

(பிரியாணி போச்சே !)

அசைத்து பார்த்தும் அவள் எழும்பாததால் ,

‘இவளுக்கு தூங்க டைம் கிடைச்சுது பாரு .அவனவன் இருக்கும் நிலை தெரியாம.இதுக்கு சினிமா பட செட் போல் டெகரேஷன் ,அவ்வளவூ கேலி ,கிண்டல்...என் நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது’என்று மனதிற்குள் நினைத்து கொண்டவன் ,

சத்தமாய் “டயர்ட்டா இருப்பே அதனால் இப்போ விடறேன் .கொஞ்ச நேரம் தூங்கு .அலாரம் வைத்தாவது காலையில் ஒரு ஷோ ஓட்டறேன் . "என்றவன் தன் விடியற்காலை ஷோவ்விற்கு டைம் செட் செய்து விட்டு ,தன் தலையணையை நான்கு மொத்து மொத்திவிட்டு படுத்தான் .

ஒரு வாரத்திற்கும் மேலாக சடங்கு சம்பிரதாயம் என்று அவனும் டயர்ட் என்பதால் படுத்த உடனே உறங்கியும் போனான் .அவன் வைத்த அலாரம் சரியாக தன் வேலையை செவ்வனே செய்ய ,எழுந்தவன் இன்னும் உறங்கி கொண்டு இருந்த மனைவியை ஒரு முறை பார்த்து விட்டு ,தன்னை தூய்மை செய்து கொண்டு திரும்பினான் .

அவளுக்கு பிடித்த க்ரீன் டீ எடுத்து கொண்டு பாயலை நெருங்கியவன் ,அவள் இடையில் கை போட்டு கொண்டு ,அவள் கழுத்தில் தன் முகத்தை வைத்து கொண்டான் .

"டார்லிங் !...ஒட்டி .....மேரா பியாரி ....கொஞ்சம் உன் கர்வாலா (கணவன் )மேல் கருணை காட்டுங்கள் மகாராணி ...உன் சச்தீப் பாவம் இல்லையா ..."என்றவன் கணவனாய் அவளை நெருங்க ,அவளிடத்தில் அதற்கு இணையான பிரதிபலிப்பு சுத்தமாய் இல்லை .

சற்று நேரத்தில் பொறுமை இழந்தவன் ,அவளை விட்டு விலகி எழுந்து நின்று "என்ன தான் உனக்கு பிரச்சனை பாயல் ?.இந்த திருமணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா என்ன ?வேறு யாரைவது லவ் செய்துட்டு ,உன் ப்ரெண்ட்ஸ் வற்புறுத்தலின் பேரில் என்னை மணந்து கொண்டாயா?எதுவாக இருந்தாலும் பேசிடு பாயல் .நானும் இந்த ஒரு மாதமாய் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் .உன்னிடம் திருமணத்திற்கான பூரிப்பே இல்லை .என்னை அவொய்ட் செய்வது போலவே நடந்துட்டு இருந்தே ...நேத்து உனக்கு வந்தது டையர்டா இல்லை விலகளா ?"என்றான் பொறுமையை இழுத்து பிடித்து .

அப்பொழுதும் அவன் மனைவி பாயல்லிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை .

"தட்ஸ் இட் பாயல் ...ஐ வாண்ட் அன்சர் நொவ் .....ஸ்பீக் அப் ....goddamit ."என்றவன் பாயல்லை பிடித்து உலுக்கி எழுப்பி அமர வைத்து விட்டு கைகளை விலக்கி கொள்ள ,பாயல் கட்டிலில் சரிந்தாள் உயிர் அற்ற உடலாய் .

கண்கள் நிலை குத்தி நிற்க ,கடைவாயில் ரத்தம் ஒழுகி கிட க்க ,உள்ளங்கை மணிக்கட்டில் கயிறு ஒன்று பலமாய் கட்டப்பட்டு இருக்க , பாயலின் தலை துவண்டு இருந்தது .கண் முன்னே காண்பது என்ன என்று சச்தீப் மூளை சில பல வினாடிகள் உணர முடியாமல் ஸ்தம்பித்து போனது .

“ஓஹ் நோ ....பாயல் ...பாயல் ...கெட் அப் ....பாயல் ..."என்று அவள் கன்னத்தை தட்டி ,தண்ணீர் தெளித்தும் அவளிடம் அசைவூ இல்லை என்றதும் ,அடுத்த நொடி கதவை ஓடி போய் திறந்தவன் ,"சாஸ்ஜீ ...சோராஜீ ...மாதாஜி "என்று அந்த பங்களா அதிரும் விதமாய் அலறினான்.

டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு இரவு பன்னிரெண்டு மணிக்கே உயிர் பிரிந்து இருக்கிறது என்று அணுகுண்டை வெடிக்க வைத்து விட்டு சென்றார் .அதாவது சச்தீப் அந்த அறைக்குள் வருவதற்கு முன்பே பாயல் உயிர் பிரிந்து இருக்கிறது . அடுத்த சில வினாடிகளில் முன் தின கோலாகலம் மறைந்து,துக்கத்தை அணிந்து கொண்டது அந்த வீடு.


பயணம் தொடரும் ...
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
nanu second...:cool::cool:
wow amirtha saras golden temple super ka....:love::love::love:
we are waiting ..(y)(y)(y)
arjun namma mappilai ah???:eek::eek:
appo intha durban vechu singh mama???:rolleyes::rolleyes:

ஹாய் தோழி ,

உங்கள் ரெவியூக்கு நன்றி .

இன்ட்ரோ போடும் போதே ஹீரோ அக்ஷய் குமார் ,சோனு சூட் போட்டோ போட்டு இருந்தேனே பா .
தவிர அவன் பெயர் அர்ஜுன் என்றும் கொடுத்து இருந்தேன் .

இந்த சிங் பெயர் சச்தீப் .he his family side characters.not of importance.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top