• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 20 Part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
பின் மகிழாமல் எப்படி இருப்பார். தான் கேட்டது அனைத்துக்கும் ஒத்துக் கொண்ட நல்ல மாப்பிள்ளைக்கு உடனடியாக சந்திராவுக்கு கொடுக்க என்று நினைத்த அனைத்து சொத்தையும் சந்திரா பேரில் பதிவு செய்து விட.
அதனை பாரமரிக்கும் பொறுப்பும் நம் உமா சந்தருக்கு வந்து சேர. கிராமம் சென்னையில் இருக்கும் கடையின் வாடகை வசூலிப்பு. அதற்க்கும் மேலாக கொஞ்ச காலாமாக சொந்தமாக தொழிலை ஆராம்பிக்க போகிறேன் என்று வெளி ஊர் வெளி நாடு என்று பறந்தாலும் தன் மனைவி மேல் உயிரையே வைத்திருந்த கணவன் எந்த ஊருக்கு சென்றாலும் ஒரு பரிசு பொருள் இல்லாது வர மாட்டார்.
இது வரை அடி என்ன….? கடிந்து ஒரு வார்த்தை கூட கணவனிடம் இருந்து வாங்காத சந்திராவுக்கு உமா சந்தரின் இந்த புதிய பரிமாணம் அதிர்ச்சி என்பதை விட பேரதிர்ச்சி என்று கூட சொல்லலாம் விக்கித்து நிற்க.
மேலும் “உன் அப்பன் என் மகளை கல்யாணம் செய்துக்கன்னு என் காலில் விழாத குறையா கெஞ்சின தொட்டு அக்கா மகளை நாமலே கட்டிக்கிலேன்னா வேற எவன் கட்டிப்பான்னு கட்டிகிட்டேன்.
ஒரு பிள்ளை பிறக்கவே உன்னை பிடி என்னை பிடின்னு ஆயிடிச்சி. சரி ஒரு பிள்ளைன்னாலும் ஆம்பிள்ள பிள்ளையா போயிடுச்சின்னு நானும் என் மனச தேத்திக்கிட்டேன்.
சரி பிள்ளையில் தான் நம் கொடுப்பனை அவ்வளவு தான்னு பார்த்தா…..கல்யாணம் ஆகி ஐந்து வருஷத்திலேயே இங்கு நோவு அங்கு நோவுன்னு டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனா…
அவங்க ஒரு இடிய என் தலையில் இறக்கினாங்க. இனி உங்க மனைவியுடன் உடல் உறவு வெச்சிகிட்டா உயிருக்கே ஆபாத்துன்னு. நானும் மனுஷன் தானேடி.” அத்தனை வருஷ ஆதாங்கத்தை கொட்டிய கணவனை கைய்யாலாகதனத்துடன் மட்டும் தான் சந்திராவால் பார்க்க முடிந்தது.
அவனை எதிர்த்து ஒரு வார்த்தை அவளால் பேச முடியவில்லை. தன் தந்தை தன்னிடம் “மாமாவையே உனக்கு கல்யாணம் செய்து வெச்சிட நினைக்கிறேன்.” என்று சொன்னதும்.
“மாமா ஒத்துக்குனாரா….?” என்று தான் முதலில் கேட்டாள்.
அதிலேயே அவளின் சம்மதம் தெரிந்து விட. “அங்கு பேசிட்டு தான் உன் கிட்ட பேசுறேன்மா. நீ இனி எதுக்கும் கவலை பட கூடாது. உன் அப்பா எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்.” என்று சொல்லியது வரை தான் சந்திராவுக்கு தெரியும்.
அதனால் தன் தந்தை கணவனிடம் கெஞ்சி தான் தனக்கு மணம் முடித்தார் என்று தன் கணவன் வாயால் சொல்ல கேட்ட அந்த பேதையின் ஏற்கனவே ஆட்டம் கண்டு கொண்டு இருந்த இதயம் நொருங்கிவது அவளுக்கே கேட்பது போல் இருக்க அடுத்த வார்த்தை பேச முடியாது எரிந்த கன்னத்தின் மேல் கை வைத்து அந்த இடத்தை விட்டு போக கதவை அடைந்தவளுக்கு தன் தந்தை கண்ணில் நெருப்பு துண்டு வைத்தது போல் சிவந்து நிற்பவரை பார்த்து.
“அப்பா….” என்று கதறி அவர் நெஞ்சில் சாய.
அவள் தலை தடவிக் கொடுத்து கொண்டுக் இருக்க.அலுவல் அறையில் இருந்து வெளியேறிய உமா சந்தர் அந்த இடத்தில் தன் மாமனார் இருப்பதை பார்த்து.
எப்போதும் போல் ஒரு சில நொடி தான் அதிர்ந்து நின்றது. பின் தோளை குலுக்கி விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறியவனின் முதுகையே பார்த்திருந்தவருக்கு.
தன் நெஞ்சி மீது சாய்ந்திருந்த மகளின் செயலின் வித்தியாசத்தில்…”சந்திரா….” என்று கூப்பிடுவதற்க்கும் தன் மொத்த பாராத்தையும் தந்தை மீது சாய்த்து அவள் விழுவதற்க்கும் சரியாக இருக்க. “வேலா….” என்ற அழைப்போடு அந்த பங்களா திரும்பவும் அல்லலோ….பட்டு காணப்பட்டது.
வீட்டில் இருப்பவர்களின் முகத்தை எப்படி பார்ப்பது. அதுவும் தன்னை நம்பும் மாமாவை ஏமாற்றுவது ஒரு வித குற்றவுணர்ச்சியை கொடுக்க. எப்போதும் அளவோடு இருக்கும் சூர்யா அளவுக்கு அதிகமாக மது அருந்தினான்.
அதுவும் தன் ரசனையான இசையின் நேரத்தை கடந்தும். அப்படி தன்னில் மீழ்கி இருந்தவனை அவனின் போன் இசை இடையூறு செய்ய.
“சே...யாரு இந்த நேரத்தில்.” என்று முதலில் ரிங்கை கட் செய்ய.
அடுத்தும் இசைக்கும் போது.” சகல யாருன்னு பாருடா….அவங்களுக்கு ஏதாவது பிரச்சனையா இருக்க போது.” சுடர் வீட்டை நினைத்து அந்த போதையிலும் விக்ரம் சொல்ல.
சூர்யா பதட்டத்துடன் தன் போனில் மின்னும் எண்ணை பார்க்க. அதில் தெரிந்த பெயரில் புருவம் சுருங்க.
இந்த நேரத்தில் ஏன்…. என்ற யோசனையோடு போன் எடுத்து பேசியவனுக்கு. அங்கு சொல்ல பட்ட செய்தியில் மொத்த போதையும் இறங்க.
“விக்ரம் வா….” என்ற சொல்லோடு அந்த பாரை விட்டு வெளியேறியவனை தொடர்ந்து விக்ரமும் உடன் சென்றான்.
 




Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
ஹாய் விஜி அப்டேட் நைஸ் இன்னும் பெரியதாக தந்தால் மிகச்சிறப்பு உமாசந்தர் சந்திரா லைப் யில் எவ்வளவு கஷ்டங்களா உமாசந்தர் உண்மை முகம் வெளிப்படுகிறதோ சூர்யா உங்கள் காதல் இன்னும் ஆழமாக வளர்ந்து விட்டது என்ன செய்ய போகிறீர்கள் காதலிலும் ஜெயித்து வீட்டில் உள்ளவர்களையும் சம்மதிக்க வைத்து அம்மா இப்படி முடியும் முதலில் சுடர் எதை ஏற்றுக்கொள்வாளா அடுத்து என்ன காத்திருக்கிறோம்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏற்கனவே இதய நோயாளியான
சந்திர கலா, தாய் மாமனான
கணவன் கொடுத்த
அதிர்ச்சியும், அடியும்
தாங்காமல் இறந்து
விட்டாளா, விஜி டியர்?
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Hi viji mam
Enakku ippo sudar family ah vida surya family ah ninacha thaan romba feel ah irukku. Aduthadutthu problems face pandranga!!!! But intua situation layum surya avan love la romba romba strong ah irukkan???semmmmma surya chance eh illa, gethu thaan po☺☺ surya and sudar rendu perum seranum. All the best bros for your love. Waiting for next update. Semma epi enjoyed it lot????
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,196
Reaction score
1,920
Location
Hosur
Chandra Ku idayam balaveenama
Oh god ivlo adirchi thangamudiyade Enna achi
Umachandar innum enna thillu mullu pannirukaro
Ini enna waiting aavalidan
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top