• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Palagi Parkkalam - Chapter 26 Part 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijiya lakshmi jagan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
193
Reaction score
4,743
Hi friends,

26 chapter posted below. Padichitu unga comments ah sollunga.

அத்தியாயம்----26​
சூர்யா சொன்னதும் அவனுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த சுடர் அங்கு இருந்த கட்டிலில் அமரலாமா….? வேண்டாமா….? என்று யோசிக்கும் வேளயில் அந்த அறைக்குள் சாவகாசமாக வந்த சூர்ய கலா….”என்ன சுடர் நின்னுட்டு இருக்க….?” என்று கேட்டுக் கொண்டே அந்த கட்டில் மீது அமர்ந்தவள்.
பக்கத்தில் இருந்த இடத்தை தட்டி….”உட்கார் சுடர் உன் கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்று சொன்னதும். அவளின் செயலையும், அவளின் பேச்சையும் பார்த்து யோசனையுடன் அவள் காட்டிய இடத்தில் அமர்ந்தவளிடம்.
“இப்போ என்ன செய்யிறதா இருக்க சுடர்…..?” சூர்ய கலா கேட்ட கேள்வி புரியாத சுடர்.
“என்ன செய்யிறதென்னா…..? உன் கேள்வி புரியல” சூர்யா என்று அழைக்க வந்தவள் “கலா” என்ற அழைப்பில் முடிக்க.
“தோ இது தான் என் கேள்வி. என்னை எப்போவும் சூர்யான்னு தானே...கூப்பிடுவ…..?இப்போ என்ன அந்த பெயரை கூப்பிட வந்து கலான்னு கூப்பிட்ட.” என்று கேட்டவளுக்கு பதில் சொல்லாது தன் கைய் விரலை ஒன்று ஒன்றாய் இழுத்து விட்டு பார்த்துக் கொண்டு இருந்தவளின் கை பற்றி அவளின் செயலை தடுத்து….”சொல்லு சுடர்….” என்று தான் கேட்ட கேள்வியையே திரும்பவும் கேட்டவளை இப்போது நேர் கொண்டு பார்த்த சுடர். இப்போது கேள்வி கேட்பது தனதாக்கிக் கொண்டாள்.
“உன்னால எப்படி இவ்வளவு ஈஸியா எடுத்துக்க முடிஞ்சது…..?” எதை என்று கேட்காது.
“வேறு எப்படி எடுத்துக்க சொல்ற . வாழ்கைய ப்ராக்டிக்கலா ஏத்துக்கனும் சுடர்.” ஏதோ பேச வந்த சுடரை இடை மறித்து.
“ நான் முதல்ல பேசிடறேன். தில்லை எனக்கும் அண்ணா தான் சுடர். அவன் இறப்பு உன்னளவு எனக்கும் பாதிப்பு இருக்கு. ஆனா அதையே நினச்சிட்டு இருந்தா…..நம்ம அப்பா, அம்மா நிலமைய கொஞ்சம் யோசிச்சி பாரு…..?
ஒரே பிள்ளைய பறிகொடுத்துட்டு இருக்கிறவங்களுக்கு இருக்கும் ஒரே நிம்மதி நம்ம சந்தோஷம் தான். அதையாவது அவங்களுக்கு நாம கொடுக்கலாம் இல்லையா….?”
சூர்ய கலாவின் பேச்சை எந்த வித இடையூறும் தராது கேட்டுக் கொண்டு இருந்த சுடர்.” நீ சொல்வது வாஸ்தவம் தான் சூர்யா. நம் சந்தோஷம் தான் அப்பா, அம்மாவுக்கு நிம்மதி தரும். ” என்று சொல்லி விட்டு சூர்ய கலாவை பார்க்க.
அவளின் சூர்யா என்று அழைப்பில் சட்டென்று சுடரின் முகத்தை நிமிர்ந்து பார்த்த சூர்ய கலாவுக்கு அவள் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்றில் அமைதியாக அவளை பார்த்திருந்தாள்.
“நம் சந்தோஷம் எங்கு என்பது தான் பிரச்சனையே….உன்னால் இங்கு சந்தோஷமா இருக்க முடியுமா…..?” என்ற கேள்விக்கு.
சூர்ய கலா அமைதியாகி விட…. “நான் இங்கு என்பது இந்த வீட்டில் இல்ல. விக்ரமுடனான உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்குமா…..?”
ஏதோ பேச வந்தவளை….”நீ பேசும் போது நான் அமைதியா கேட்டேன் தானே….?இப்போ நீ அமைதியா கேளு. நம்ம அண்ணா சாவுக்கு விக்ரம் காரணம் இல்ல.
அது எனக்கு நல்லாவே தெரியும். ஆனா யாரு சாகடிச்சதுன்னு தெரிஞ்சே….கேச திசை திருப்ப பார்த்தது தப்பு இல்லையா……?
கோர்ட்டில் அத்தன பேரு பார்க்க என் பக்கம் நியாயம் இருப்பது தெரிஞ்சே என்ன பத்தி தப்பா பேசினாரு…..அது நியாபகம் இருக்கா சூர்யா.” திரும்பவும் சூர்யா என்ற அந்த பெயரை அழுத்தி உச்சரிக்க.
சுடரின் எந்த பேச்சுக்கும் பதில் சொல்ல முடியாது அமைதியாக இருந்த சூர்ய கலாவை பார்த்து… “உன்னால பதில் சொல்ல முடியாது சூர்யா. விக்ரம் மேல இவ்வளவு தப்பு இருந்தும் அவன கல்யாணம் செய்துக்க விரும்பினதுக்கு காரணம் என்ன….? சூர்யா.” என்று கேட்டவளுக்கு.
“காதல்….” என்ற ஒத்த வார்த்தையில் சொல்லி குனிந்து கொண்டவளின் தலையயே பார்த்திருந்த சுடருக்கு அதற்க்கு மேல் என்ன பேசினாலும் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்ததால்...எதுவும் சொல்லாது இருக்க.
சுடரிடம் இருந்த எந்த வித பேச்சும் இல்லாது போல அவளை நிமிர்ந்து பார்த்த சூர்ய கலா. “என்ன சுடர் எதுவும் சொல்லலே…..”
“இதில் நான் சொல்ல என்ன இருக்கு ...அது தான் உன் செயலிலேயே நீ காட்டிட்டியே உன்னுடைய காதலின் புனிதத்தை.”
“என்ன சொல்ற….?”
“காதலுன்னு சொல்லிட்டு தலை குனிஞ்சிக்கிட்டியே இதில் இருந்து தெரியல உன் காதல் எவ்வளவு புனிதமானதுன்னு…..” இவ்வளவு நேரமும் அமைதியாக பேசிக் கொண்டு இருந்த சூர்ய கலா.
சுடரின் உன் காதல் எவ்வளவு புனிதமானது என்ற இகழ்ச்சியான பேச்சில்….”சுடர்….” என்று குரல் உயர்த்தி அதட்டினாள்.
தன் தந்தையிடம் பேசி விட்டு தன் அறைக்கு வந்த சூர்ய பிரகாஷ் தன் அறைக்கு வெளியில் விக்ரம் நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்து.
“என்ன விக்ரம் இங்கு நிக்குற…..?” என்ற கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாது அவனை முறைத்து பார்க்க.
விக்ரமின் முறைப்பில் நாம என்ன தப்பா சொன்னோம் என்று ஒரு நிமிடம் தான் பேசியதை யோசித்து பார்த்ததில் ஒரு தப்பும் இல்லை என்ற பதிலே கிடைத்தது.
அதனால் திரும்பவும் முன்பு கேட்ட கேள்வியையே கேட்க. இப்போது முறைப்போடு பதிலாய்.... “ ஆ உள்ள போன என் மனைவி உன் மனைவிக்கிட்ட அரை மணிநேரமா பேசிட்டு இருக்கா.” என் மனைவி, உன் மனைவி என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து சொன்னான்.
சூர்ய கலா சுடரிடம் பேச வேண்டும் என்றதற்க்காகவே அந்த அறைக்கு சென்றதால் கதவை அடைத்து விட்டாள்.
அதனால் சகோதரி இருவர்களின் உரையாடல் நல்ல வேளை விக்ரமுக்கு கேட்கவில்லை. அப்படி இருக்கும் போதே இந்த கோபம் விக்ரமுக்கு .
திருமணம் முடிந்த அன்றே தன்னை விட்டு தன் சகோதரியிடம் இவ்வளவு நேரம் செலவிடுகிறாளே என்ற கடுப்பில் சூர்யாவின் அறைவாயில் நின்றவனிடம் கேள்வி கேட்டால் கோபம் வரத்தானே செய்யும்.
அவன் நிலை புரியாது…. “சிஸ்டர் இரண்டு பேருமா பேசிட்டு இருக்காங்க. அதுக்கு நீ ஏன்டா வாயில்ல காவல் காத்துட்டு இருக்க…..?” என்று சிரிப்புடன் வினவ.
“ஏன்டா சொல்ல மாட்ட. என் நல்ல நேரம் ஏதோ என் மனைவி என்னை முறைக்காம அமைதியா பாக்குறா…. சுடர் கூட சேர்ந்தா என் நிலமையும் உன் நிலம போல ஆனா...நீயே சொல்….?” என்று நியாயம் கேட்க.
அவன் பேச்சில் உண்மை இருந்தாலும் தன் மனைவியை எப்படி அப்படி சொல்லலாம் என்று…”ஏன்டா என் மனைவி கிட்ட உன் மனைவி பேசினா கெட்டுடுவாளா…..?” என்று கோபத்துடன் கேட்பது போல் விளையாட்டாய் கேட்க.
“அப்போ இல்ல இன்றியா…..?” விக்ரமின் கேள்விக்கு பதில் சொல்ல முனையும் போது இவ்வளவு நேரமும் கேட்காத அவர்களின் பேச்சு சத்தம் சூர்ய கலா சத்தமாக பேசியதில் கேட்க. விக்ரமும், சூர்யாவும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டே அவசரமாக உள்ளே நுழைந்தனர்.
சுடரின் பேச்சுக்கு ஏதோ சொல்ல வாய் திறந்த சூர்ய கலா தன் கணவரும், சூர்யாவும் வந்ததை பார்த்து அமைதியாக வாய் மூடிக் கொண்டாள். இருந்தும் அவள் முகம் அவளின் கோபத்தை தெள்ள தெளிவாக எடுத்து காட்ட. அது விக்ரமின் கண்ணுக்கும், சூர்யாவின் கண்ணுக்குமே பிடி பட.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜி டியர்
 




Last edited:

stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
Nice update ma'am
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top