Book Offers in Ms Publications

part 5

Dhanuja

Author
Author
#1
அன்பு தோழிகளே,

களவாடிய தருணங்கள் பாகம் ஐந்து பதிவு பண்ணி விட்டேன்,படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்,என் கதையில் எதும் பிழை இருந்தால் உங்கள் கருத்துக்களை கொண்டு திருத்தி கொள்கிறேன்.

உங்கள் விருப்பத்திற்கேற்ப இங்கே பதிவிடுகிறேன்....களவாடிய தருணங்கள் -5
இரவு வெகு நேரம் கழித்து இனியாவுடன் வந்தவனைக் கண்கள் தெறித்து வெளியில்
விழுந்து விடுவது போல பார்த்தனர் நால்வரும்.

என்னங்கடா நடக்குது இங்க?காண்டீபன்.

எனக்கும் அதே பீலிங் தாண்ட என்று சொன்னது வேறு யாரும் இல்லை நம் சிதம்பரம்.

அவர் குரல் கேட்டுத் திரும்பியவர்கள் என்ன தாத்தா நீங்களும் இப்பிடி ஆகிட்டீங்க,
செமயா கமெண்ட் பின்னுறீங்க போங்க.

எல்லாம் என் நேரம்டா உங்க கூடலாம் கூட்டு சேர்ந்து சுத்த வேண்டியதா இருக்கு என்று
சலித்து கொண்டவரை முறைத்தவர்கள்,ரொம்ப தான் எங்களை எப்ப பாரு ஏ கே
துப்பாக்கி வைத்து சுட்டுகிட்டே இருக்க வேண்டியது,பெரிய பேரனை பார்த்த பொட்டி
பாம்பாட்டம் அடக்கி வாசிக்கிறது.

அருண்,கொஞ்சம் நேரம் சும்மா இருடா என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்.

தனது அறைக்குச் சென்றவளை கை பற்றித் தடுத்து நிறுத்தியவன் சாரிம்மா ......உனக்கு
இதில் எதுவும் வருத்தம் இல்லையே.

சா சா ..............இல்லங்க சார்..... நாக்கைக் கடித்து நிறுத்தியவள்,சாரிங்க பழக்க தோஷத்தில் சொல்லிடேன்,நீங்க வறுத்தபடாதீங்க எனக்கு இதில் பரிபூரண சம்மதம்,நானும் பெரியவர் கிட்ட சொல்லிடுறேன்,எதையும் போட்டு கொழப்பிக்காதீங்க.

கதிர்,சரிம்மா அப்புறம் தயங்கிவரே உங்க முழு பேரென்ன எனக்கு இனியா மட்டும் தான் தெரியும்.....................(இது வரைக்கும்அவளைப் பற்றி ஒன்றுமே...............தெரியாதாம்).

தப்பா நினைச்சுக்காதம்மா நீ சின்ன வயசில் இருந்து இங்க இருந்தாலும்,நான் உங்கிட்ட
அவ்வளவா பழகினது இல்ல,இனிமே அப்பிடி இருக்க முடியாதுல அதான்.

சிதம்பரம்,அட பாவி பயலே அவளுக்கு அடம் பிடித்து பெயர் வைத்ததே நீதானடா
என்று அலற.

இது எப்போது என்பது போல பார்த்தனர் நால்வர் குழு.

சிரித்தவாறே கண்ணுக்கினியாள் ..........என்றவள், டிரஸ் மாத்திட்டு சாப்பிடவாங்க.....
சரிம்மா .

இனியா போகும் வரை அமைதி காத்தவர்கள்,அவள் தலை மறைந்தவுடன் பள்ளி விட்டு
வீடிற்கு அடித்துப் பிடித்து செல்லும் குழந்தைகள் போல,அருண்,காண்டீபன்,நளினி
கலை ஓடி வர,அவர்களைத் தாண்டி ஓடினார் சிதம்பரம்.

அடேய்.....நில்லுடா.சிதம்பரம்.

சொல்லுங்க தாத்தா "இந்தப் பிள்ளையும் பால் குடிக்குமா" என்பதைப் போல் பார்த்த
வைத்தவனை, என்னடா பண்ண அந்த புள்ளையா.

என்ன தாத்தா? என்ன போய் இப்பிடி கேட்டுட்டீங்க.கதிர்.ஏய்,ஒழுங்கா விளையாடம சொல்லுடா,சிதம்பரம்.

அண்ணா,அண்ணியை எப்பிடி ஓகே சொல்ல வச்ச,நளினி.

உங்க அண்ணண் உத்தம சீலன் பார் அப்பிடியே உண்மையை சொல்லிட்டு தான் மறு
வேலை பார்ப்பான், சிதம்பரம்.

எதுக்கு தாத்தா வயசான காலத்தில் ஏவுளோ டென்ஷன் ஹ்ம்ம்......

சாப்பிட்டு பொறுமையா மொட்டை மாடியில் பேசலாம் சரியா,அம்முக்குட்டி.........

கலை,சொல்லுங்கள் அத்தான்.

எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடா என் பொண்டாட்டியை நாளைக்கு வெளில கூட்டிட்டு
போகிறேன்,அவளுக்கு காலேஜில லீவு சொல்லிரிய.

சரிங்கத்தான் சொல்லிடுறேன்,கலை.

என்னது வெளில கூட்டிட்டு போறியா அதிர்ந்தவன், நீ எல்லாம் வேஸ்ட் டா பார் கதிர்
அண்ணா ஏவுளோ ஸ்பீடா இருக்காருன்னு விஷால், காண்டீபன் கால்லை வார.

உன் தங்கச்சி லவ் பண்ணினேன் சொன்னதுக்கே என்ன ஒரு வலி பண்ணிட்டா,இதில்
வெளில கூப்பிட்டேன்னு வையிபஞ்சாயத்து வச்சுடுவா,என்ன ஆளா விடுடா சாமி
வேணுனா உங்க அண்ணாகிட்ட கேள் அன்னக்கி இரண்டு பேரும் என்ன பன்னாளுகன்னு.

அன்று தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச் சென்ற இருவரும்,அருணையும்
காண்டீபணியும் ஒரு வழிபண்ணிவிட்டார்கள்,அப்பிடி இப்புடி என்று சமாதானம்
படுத்துவதற்குள் உயிர் போய் உயிர் வந்தது,அதை எண்ணித் தான்,
காண்டீபன் விஷாலிடம் புலம்பிக் கொண்டு இருந்தான்.

இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருக்க,ஓசை இல்லாமல் அவர்களிடம்
தப்பித்தோம் பிழைத்தோமென்று அவனது அறைக்கு விரைந்தான், கதிர்.

அறைக்குள் வந்தவனுக்குப் பெருமூச்சு எழுந்தது உண்மை தெரிய வரும் பொது
இனியாவை எப்படிச் சமாளிப்பது என்றேபுரியவில்லை,அவளை நன்கு அறிந்தவன்,
அவளுடைய ஒவ்வொரு அசைவையும் உணர்ந்தவன் அவளைச் சமாளிக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கலானான்.

அங்கு,சிதம்பரம் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தார் அவரைப் பார்த்த
உமையாள்,இப்போ என்ன நடந்துச்சுனு இப்பிடி குறுக்கும் நெடுக்கும் நடக்குறிங்க.

ஏண்டி சொல்லமாட்டா உன் பேரன் அடிக்கிற கூத்துக்கு எப்போது என்ன பண்ணி
வைக்க போறான்னு தெரியாமல் சுத்திகிட்டு இருக்கிறேன் என்று கத்தியவரின் முன்
சென்று அவனுக்கு நூறு கொள்ளுவா உங்கள் வளர்ப்பு நீங்கக் கவலை படமா இருங்க
,இனிமே அவளச்சு அவனாச்சு.

நீ சொல்லுறது சரிதான் உம்மி எனக்குக் கதிரை கண்டா பெருமையா இருக்கு,ஆனா அந்த பொண்ணு இவனை புருஞ்சுகணுமே,நல்ல யோசுச்சு பாரு ஒன்னு ஒண்ணும் பார்த்துப்
பார்த்து செய்யுறான்,அவுளோ பாசம் வைத்து இருக்கான் அதை அந்த பொண்ணுகிட்ட
இன்னும் சொல்ல கூட இல்லை.

சொல்லியிருந்த ஓத்துக்கிட்டு கல்யாணம் பண்ணி இருப்பாளா,நீங்க வளர்த்ததுக்கு நான்
சம்பருச்சு உங்க கடனைஅடைச்சுடுறேன்,என் தகுதிக்கு தகுந்த மாதிரி பையான பார்த்து
கட்டிகிரேனு எப்பவோ போய் இருப்பா.

அதுவும் சரிதான் உம்மி,இந்த பொண்ணுக்கு கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் தெரிய
வந்தா கதிரின் நிலைமை,அவன் உடைந்து போறத என்னாலா பார்க்க முடியாதுடி,
எனக்கு அப்புறம் அவன் தான் இந்தக் குடும்பத்துக்கு.

புரியுதுங்க அவளை வழிக்குக் கொண்டு வந்துடுவான் எனக்கு நம்பிக்கை இருக்கு, அவன் மாடியில் காத்துகிட்டு இருப்பான்,நீங்கப் போய் பேசிட்டு வாங்க.

அவர் செல்வத்திற்குள் அங்குப் பட்டாளம் கூடிவிட்டது,மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டவர் டேய் உங்களுக்குவேற வேலையே இல்லையடா என்னமோ சதி திட்டம்
தீட்டுற மாதிரி எப்போ பாரு கூட்டம் போட்டுக்கிட்டு.

ஹலோ,மிஸ்டர்.சிதம்பரம் நீங்களும் அதுக்கு தானே வந்து இருக்கீங்க விஷால் அவரைக் குறி பார்த்துத் தாக்க,அவன்முதுகில் இரண்டு போட்டார்.

இவர்களின் சேட்டையை பார்த்துச் சிரித்து கொண்டே வந்தான் கதிர்.வாடா நல்லவனே
என் ரெத்த கொதிப்பை அதிகபடுத்தாமல் விஷயத்தைச் சொல்லு.

அவனும் அவரைத் தவிக்க விடாமல் மாலை நடந்தவற்றைக் கூறினான்.

கதிரை,அங்கு எதிர் பார்க்கத்தவள் உறைந்து போய் நிற்க,உக்காருங்க இனியா என்று
கூறியவன் அவனது நாற்காலியில் அமர்ந்தான்.

தன்னை ஒருவராகத் தேற்றி கொண்டு சார் என்று தொடங்கியவள் தான் வந்த காரணத்தை கூற.

உணர்வுகளை மறைத்துக் கொண்டு அவளிடம் நீங்க கரெக்டா தான் வந்து இருக்கீங்க
இனியா,உங்களுக்குப் பார்த்த மாப்பிள்ளை நான் தான்.

அவள் பேச வாய் எடுக்க கை நீட்டி தடுத்தவன் நான் சொல்லுறத கேட்டுட்டு அப்புறம் உங்க முடிவை சொல்லுங்க.

முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டவன் சர மாறியாக உண்மையைப் பொய்
கலந்து அடித்துவிட்டான்,நான் ஒரு பொண்ண சின்ன வயசில் இருந்து காதலித்தேன்
இனியா,அவளுக்கு அம்மா அப்பா யாருமே கிடையாதும்மா,அன்னை விடுதியில் தான் வளர்ந்தாள்,நாங்க இரண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலித்தோம்,
அவளுக்கு பதினெட்டாவது வயசில் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.

வீட்டுக்கு தெரியாமல் ஏன் சார் கல்யாணம் பண்ணீங்க,மீனம்மாவும் சிவா சாரும் ரொம்ப
நல்லவர்கள்,நீங்க சொன்னா பெரியவரே கல்யாணம் பண்ணி வைத்திருப்பரே.

நீ சொல்லுகிறது சரிதான் இனியா ஆனா அவ ரொம்ப சுய மரியாதை எதிர் பார்ப்பா
எளிமையா இருக்கனும் யோசிப்பா,யார் உதவியும் தேவை இல்லனு நினைப்பா.

இருந்துட்டு போகட்டும் சார் அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்.

இருடி நானே நம்பக் கதையைத்தான் ஒரு கோர்வையா சொல்லிக்கிட்டு இருக்கேன் இதில் இடையில் கேள்வி வேறா,நான் ரொம்ப பாவம்டி மனதிற்குள் அவளிடம் மன்றாடியவன் .


உனக்கு புரியுது அவளுக்குப் புரியலையே என் அந்தஸ்தை பார்த்து பயப்புடுறா,அவளை
யாராவது தப்பா பேசிடுவாங்கனு பயம்,அவ அடுத்தவாங்க பேச்சுக்கு ரொம்ப மதிப்பு
கொடுக்குறா.

ஓ............என்று சுதி இறங்கியது நானும் அப்புடித்தானே என்று மனதுக்குள் எண்ணியவள்
அதை மறைத்தவாறே அப்புறம் என்னாச்சு சார் இப்போ அவுங்க எங்க.

அவளுக்கு நான் எங்க வீட்டை விட்டு தனியா வரணுமா கூட்டுக் குடும்பமா இருக்க
அவளுக்கு புடிக்கலையாம்,எனக்கு என் குடும்பம் தான் முக்கியம் அதான் பிரிஞ்சுட்டோம்,
கடைசியா இப்ப இருக்கும் எந்த பொண்ணும் கூட்டு குடும்பத்தை விரும்பாது
உங்கள என்ன தவிர வேற எவளும் கட்டிக்க மாட்டான்னு சொல்லிட்டு
போயிட்டா.

எனக்கு என் குடும்பம் பிரியக் கூடாது அதான் தாத்தா உன்னக் கல்யாணம் பண்ணிக்க
கேட்டப்ப ஒத்துக்கிட்டேன்.

உனக்கு விருப்பம் இல்லனா உன்னைய கட்டாய படுத்த மாட்டேன்.

உங்ககூட வாழ அவளுக்குக் கொடுத்து வைக்கல,சிறிதும் யோசனை இன்றி நான்
உங்களை கல்யாணம் பண்ணிக்குறேன் சார்.

முகம் மலர்ந்தவன் உண்ணமயவா...........

உண்மையா சொல்லுறேன் அவ முன்னாடி நம்ப வாழ்ந்து காட்டலாம்,அது என்ன
கல்யாணம் நடந்தும் உங்களை தூக்கிபோட்டுவிட்டு போறது,தன்மானம் முக்கியம்
நினைக்குறவங்க,உங்கள விரும்பி இருக்கக் கூடாது,சரி அத விடுங்க இனி
ஆக வேண்டியத பார்ப்போம்.

கதிர் சொல்லி முடிக்கத் திறந்த வாய் மூடாமல் பார்த்தனர்.

இது உலக மகா நடிப்பு டா சாமி,அருண்.

லாஜிக்கே இல்லாத ஒரு பிளாஷ் பாக் சொல்லி அவளை கவுத்துட்டியே அண்ணா,விஷால்.

அதையும் அவ நம்பி இருக்கா பார் தலை எழுத்து டா சாமி,காண்டீபன்.

அட நீ வேறடா இத்தனை வருடம் நம்மகூட தான் இருக்கா நம்ப என்ன தொழில்
பண்ணுறோமுன்னு கூட தெரியாமல் இருக்கா பார்,தாத்தா கொடுத்த விசிட்டிங் கார்ட்ல போட்டிருக்க ஆபீஸ் கூட நமோடாதுனு தெரியாமல் போய் இருக்கு அந்தக் கூமுட்டை.


உங்களுக்கு ஏன் டா பொறாமை இனிமே அவ முன்னாடி நான் இது பேசினாலும் அதிரிச்சி ஆகாமல் இருக்கனும் எல்லாரும் ரொம்ப ரியாக்ட் பண்ணி கெடுத்துடாதீங்க,அப்புறம்
தாத்தா நிச்சயத்துக்கு நாள் பார்த்துருங்க என்று சொல்லிவிட்டு.

ஒரு வித மயக்கத்தில் நடந்து சென்ற பேரனைப் பார்த்தவர் முகத்தில் மகிழ்ச்சையை விட வேதனையே.

சிதம்பரத்தின் வேதனையை பார்த்த அருண்,தாத்தா இ ப்படிஎதுலையுமே ஓட்டமா
இருக்கிறவளா என்ன செய்றது,அண்ணன் வழி தான் சரி.அவர் பார்த்துக்குவார் நாங்களும் இருக்கோம் பார்த்துக்குறோம் நீங்க நிச்சயத்தை கவனிங்க அவரை சமாதானம்
படுத்தி அனுப்பி வைத்தான்.

நளினி மட்டும் அந்த லூசு எதை வைத்து அண்ணன் சொன்னதை நம்பினா,அவ சரியான
சைலன்ட் கில்லர் ஆச்சே என்று பலமாக யோசித்தாள்

அவள் கூடவே இருப்பவள் அல்லவா அவளின் இந்த ஆர்ப்பாட்டம் இல்லாத ஒத்துழைப்பு நெருடியது.

அவள் பயந்தது போலத்தான் அடுத்த நாள் நடந்தது.


களவாடுவான்…………………………….
 
#7
இந்த கதிர் பயல், ஏதோ
ஒரு கதையைச் சொல்லி
கண்ணுக்கினியாளை
எப்படியோ சரிக்கட்டிட்டானோ,
தனுஜா டியர்?
இல்லையே
எங்கேயோ இடிக்குதேப்பா?
 

Dhanuja

Author
Author
#8
இந்த கதிர் பயல், ஏதோ
ஒரு கதையைச் சொல்லி
கண்ணுக்கினியாளை
எப்படியோ சரிக்கட்டிட்டானோ,
தனுஜா டியர்?
இல்லையே
எங்கேயோ இடிக்குதேப்பா?
Athe athe.........nambita ava iniya elaiye parpom enna panuranu..
 

Latest Episodes

New comments

Latest updates

Top