• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mugilan 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
ப்ரியங்களுடன்.... முகிலன் 22​

மறுநாள் காலை

சில்லென்று விடிந்திருந்தது உதகமண்டலத்தின் காலைப்பொழுது. குளித்து முடித்து கைப்பையில் இருந்த மற்றொரு உடைக்கு மாறிக்கொண்டு இரவில் முகிலன் கொடுத்த முத்தம் போதாதென்று இன்னுமாக முத்தமிட்டு செல்லும் பனி மூட்டத்தின் நடுவே தோட்டத்தில் அமர்ந்து தூரத்தில் மேகங்களை காதலித்துக்கொண்டிருக்கும் மலைகளை ரசித்தபடியே சுடச்சுட காபியை பருகிக்கொண்டிருந்தாள் மயூரா.

‘குட் மார்னிங் மயூரா வெங்கட்ராமன்’ சில்லென கலைத்து நிமிர்த்தியது முகிலனின் குரல். விருட்டென எழுந்து நின்றாள் அவள்.

‘குட் மார்னிங் முகிலன்’ அவள் முகத்தில் அவளே அறியாமல் கொஞ்சம் வெட்க பூக்கள் பூக்கத்தான் செய்தன.

‘நல்ல தூக்கமா நைட்?’ வெகு இயல்பாக கேட்டவனின் முகத்தை அவள் அவசரமாக ஆராய ‘ஐ ஆம் ரெடி நாம ஷூட்டிங் போகலாம்’ என்றான் எதுவமே நடவாதது போல்.

அவன் விழிகளை படித்தவளுக்கு நேற்று இரவு நடந்தது எதுவுமே அவனுக்கு மருந்துக்கு கூட நினைவில்லை என்று நன்றாக புரிந்தது.

‘என்ன அப்படி பார்க்கறீங்க மயூரா வெங்கட்ராமன்?’ அவன் கேட்க ஒன்றுமில்லை என தலை அசைத்தாள் பெண். அவனது மயூரா வெங்கட்ராமன் இப்போது அவள் இதழ்களில் ஒரு ரகிசய சிரிப்பை விதைத்தது

அவன் ஆழ் மனதில் இருப்பதை எல்லாம் நேற்று இரவே தெரிந்துக கொண்டாகி விட்டது. என் முகிலனை எனக்கு தெரியுமே! இனி அவனிடம் வாதாடுவதற்கு எதுவும் இருக்கிறதா என்ன?’ சிரித்துக்கொண்டாள் தனக்குள்ளே

‘உங்களுக்கு உடம்பு நல்லா ஆகிடுச்சா?’ சிறு புன்னகையுடன் கேட்டாள் பெண்.

‘ரொம்ப நல்லா ஆகிட்டேன், நைட் ரொம்ப நல்ல தூக்கம்’ அவன் சொல்ல

‘குட் வெரி குட்’ என்றபடி இரவின் நிகழ்விலிருந்து தன்னை வெளியே தள்ளிக்கொண்டு இயல்பாக்கி கொண்டாள்.

‘முகிலன்.. ரெண்டு நாள் முன்னாடி நான் இங்கே பக்கத்து வீட்டுக்குத்தான் வந்தேன் வருணை பார்க்க’ என்றாள் வருண் வீட்டின் மீது பார்வையை பதித்துக்கொண்டே.

‘ஆஹான்’ என்றான் முகிலன். நேற்று அவன் பேசியதை அவளிடம் சொல்லவில்லை. ‘இப்போ எப்படி இருக்கான் அவன்?’ என்றான் பக்கத்து வீட்டை பார்த்துக்கொண்டே

’ம்’ என்றவளின் முகத்தில் கொஞ்சம் மாற்ற ரேகைகள். ‘இப்போது இந்த பேச்சை ஆரம்பித்து இருக்க கூடாதோ?’ லேசாக நெருடியது அவளுக்குள்ளே.

‘என்னாச்சு? உங்க முகம் அப்படியே மாறுது?’ முகிலன் அவள் முகம் பார்த்து மனம் படித்து மெல்ல குடைய

‘நல்லாத்தான் இருக்கான் முகிலன். நாம கிளம்புவோம்’ அவள் நகர முயல

‘வருண் எப்படி இருக்கான் சொல்லுங்க’ ஒரு வித அழுத்தத்துடன் அவன் மறுபடியும் கேட்டான். ‘ஏதோ ஒன்று சரி இல்லை என்று புரிந்திருந்தது அவனுக்கு.

‘பச்....’ என்றபடியே அவன் பக்கம் திரும்பினாள் மயூரா. ‘நிறைய ஸ்மோக் பண்றான் போல இருக்கு முகிலன்’ என்றாள் அவன் முகம் பார்த்து ‘திடீர்னு வந்த புது பழக்கம்’

‘வாட்?’ ‘ஸ்மோக் பண்றானா?’ அவன் குரலில் பேரதிர்ச்சியை சந்தித்த பாவம். உள்ளுக்குள் ஒரு பய உருண்டை உருண்டு மேலே வரும் உணர்வு அவனுக்கு.

நெற்றியை தேய்த்துவிட்டுக் கொண்டவன் இடம் வலமாக தலை அசைத்துக்கொண்டு ‘நீங்க அவன்கிட்டே பேசலையா இதைப் பத்தி’ என்றான் அவள் முகம் பார்த்து.

‘கேட்டேன் என் நிம்மதிக்குன்னு சொல்றான். தனக்கு யாருமே இல்லைன்னு ஃபீல் பண்றா மாதிரி தெரியுது.’

‘அதுக்குத்தான். அதுக்குத்தான் நீங்க அவன் கூடவே இருங்கன்னு சொன்னேன்’ என்றான் அவசரமாக.

‘கூடவேன்னா எப்படி முகிலன்?’ அவள் குரலில் கொஞ்சம் சூடு ஏறியது. ‘நீ அரை மணி நேரம் எனக்காகவே இருக்க முடியுமான்னு கேட்டான். அப்படி எப்பவும் இருந்தேன்னா நான் சிகரெட் விட்டுடறேன்னு சொல்றான். என்னாலே அதெல்லாம் முடியாது’

சில நொடிகள் அப்படியே மௌனத்தில் விழுந்தான் முகிலன்.

‘அவனுக்கு உங்களை ரொம்பவும் பிடிக்குமோ? அதன் பிறகு மெல்ல கேட்டான் அவன்.

‘பிடிக்கும் முகிலன். ஒரு இத்தனை நாள் ஃப்ரெண்டாதான் என்னை அவனுக்கு பிடிக்கும். பட் இப்போ அவன் இருக்கும் மனநிலையில் என்ன யோசிக்கிறான்னு தெரியலை. அவன் வேறே மாதிரி ஏதாவது யோசிச்சு இருந்தான்னா என்னாலே அதுக்கு அப்புறம் அவன் முகத்தை கூட பார்க்க முடியாது. அதனாலே இதை பத்தி நான் மேலே பேசாமல் கிளம்பி வந்திட்டேன்’ என்றவள் அதற்கு மேல் இந்த பேச்சை வளர்க்க விரும்பாமல்

‘நீங்க சீக்கிரம் ரெடி ஆகுங்க முகிலன். நாம ஷூட்டிங் போகலாம்’ சொல்லிவிட்டு உள்ளே சென்றிருந்தாள்

‘ஒரு வேளை அனுபமா இடத்தில் மயூராவை வைத்து பார்க்கிறானா வருண்’ அவசர கேள்வி கேட்டது அவனது மூளை.

வருண் மனதில் நினைப்பதை கூட எப்போதும் சரியாக கணித்துவிடும் முகிலன் இந்த முறை கொஞ்சமாய் சறுக்கி இருந்தான். அவன் புகை பிடிக்கிறான் என்ற ஒரு செய்தியே அவன் மூளையை மொத்தமாக மழுங்க செய்ய போதுமானதாக இருந்தது. யோசனையில் கண்கள் மூடி இருக்க கேசத்தை அழுந்த கோதிக்கொண்டான் முகிலன்.

சிகரெட்! முதலில் அதை விளையாட்டாகத்தான் ஆரம்பித்தான் மாதவன். இவன் அதை ஆரம்பித்த நேரத்தில் கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கவில்லை. சிகரெட் பிடிப்பவன்தான் கம்பீரமான ஆண் மகன் என அவனது பல நண்பர்கள் துவங்கி சினிமா வரை எல்லாருமே கற்று தந்த காலம் அது.

சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இடுப்பில் கையை வைத்துக்கொண்டு புகையை வெளியிடுவான் மாதவன்.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஜெயித்து விட்ட உணர்வு தோன்றும் அவனுக்கு. சிகரெட் பிடிக்கும் போது உடம்பில் ஒவ்வொரு அணுவிலும் ஏதோ ஒரு அமைதி ஒரு கிறக்கம் பிறப்பது போன்றதொரு உணர்வு தோன்றும் அவனுக்கு.

பதினாறு வயதில் துவங்கிய பழக்கம் கண்ணன் அவன் வாழ்வில் வருவதற்கு முன்னரே அதற்கு அடிமையாகி இருந்தான் மாதவன். கண்ணன் அவன் நண்பனாக வந்த பிறகு அதை குறைக்க அவன் எடுத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

ஒரு நாளைக்கு ஐந்து ஆறு என இருந்தது அவன் வேலைக்கு என டெல்லி சென்ற பிறகு ஐம்பது அறுபது என மாறிப்போனது. வேலை நிமித்தமாக எங்கிருந்தாலும் வாரம் ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து எட்டி பார்க்கும் வசதி எல்லாம் இருந்ததில்லை அந்த காலத்தில். டெல்லியிலிருந்து வருடத்துக்கு ஒரு முறை ஊருக்கு வந்தால் அதிகம். மாதவனின் தனிமைக்கு சிகரெட்டே துணையாக இருந்தது.

விளைவு இதய நோய். அதை யாரிடமும் சொல்லிக்கொள்ளவும் இல்லை மாதவன். சரியான சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் அடுத்த கட்டமாக ஹார்ட் அட்டாக். இருபத்தி ஏழு வயதில் அவனுக்கு வந்தது ஹார்ட் அட்டாக். டெல்லியில் உடன் பணி புரிந்தவர்கள் துணையில் உயிர் பிழைத்தான். இதை கண்ணனிடம் கூட இதுவரை சொன்னதில்லை அவன்.

தீபாவளி அன்று இரவு மாதவன் வீட்டிலேயே தங்கி இருந்தான் கண்ணன். மாதவனுக்கு நடந்த அவமானத்திற்கு பிறகு அண்ணனுடன் இனி பேசுவதில்லை எனவும் வீட்டில் இனி சாப்பிடுவதில்லை எனவும் முடிவு செய்திருந்தான் கண்ணன்.

வெளியில் புயலும் மழையும் துவங்கி இருந்தது. அன்று இரவு தனதருகில் படுத்து கிடந்த கண்ணனிடம் மெதுவாக சொன்னான் மாதவன்

‘ஒரு விஷயம் சொல்றேன். வீட்டிலே யாருக்கும் சொல்லாதே. ரெண்டு மாசம் முன்னாடி எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சுடா’

‘அதிர்ந்து போய் எழுந்து அமர்ந்தான் ‘ஹார்ட் அட்டாகா? என்னடா பேசறே? இந்த சின்ன வயசிலே எப்படிடா?’

‘சிகரெட்’ அவன் ஒற்றை வார்த்தையில் சொல்ல பகீரென்றது கண்ணனுக்கு

‘டேய்... டேய்.. என்னடா என்னடா நீ? சரியா ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டியா இல்லையா? பதறினான் உயிர் நண்பன்

‘எல்லாம் எடுத்துக்கிட்டேன்டா. மாத்திரை சாப்பிடறேன். இப்போ நல்லாத்தான் இருக்கேன்’ மாதவன் சாதாரணமாக சொல்ல மனம் தாளவில்லை இவனுக்கு. இரவு முழுதும் புலம்பிக்கொண்டே இருந்தான் கண்ணன். இரவு முழுதும் உறங்கவில்லை. ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை மாதவனை தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டே இருந்தான் அவன்.

‘அடுத்த தடவை நீ டெல்லி போகும் போது நானும் உன் கூட வரேன். அங்கே எனக்கு ஏதாவது ஒரு வேலை கிடைக்காம போகாது. இனிமே நான் உன்னை தனியா விடுறதா இல்லை’

சிரித்தான் மாதவன். ‘நான் போற இடத்துக்கெல்லாம் உன்னாலே வந்திட முடியுமாடா? உலகத்திலே இதெல்லாம் நடை முறையிலே சாத்தியம் இல்லை.’ ஆனால் கடைசியில் அப்படித்தான் வரப்போகிறான் என்பதை அப்போது உணரவில்லை மாதவன்.

கன மழை இரண்டு நாட்கள் தொடர்ந்துக்கொண்டே இருக்க சென்னை வெள்ளகாடாக மாறி இருந்தது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

‘முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ராமவரம் வீட்டுக்குள்ளே கூட தண்ணி வந்திடுச்சாம். அவராலே வெளியிலே வர முடியலையாம். ஒரு போட் வெச்சு அவரை கன்னிமாரா ஹோடேலுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க’ அடுத்தது அவர்கள் வாழ்க்கையில் வரப்போகும் விபரீதங்கள் பற்றி அறியாமல் பேப்பர் படித்து எல்லாருக்கும் கதை சொல்லிக்கொண்டிருந்தாள் மீரா.

வீட்டில் சாப்பிடுவதை தவிர்த்து மாதவனின் வீட்டில்தான் சாப்பிட்டுகொண்டிருந்தான் கண்ணன். அம்மாவுக்கு அவன் மீது கோபம்தான்.

இரண்டு நாட்கள் கடந்திருக்க. அப்பா சொன்னார் கண்ணனிடத்தில் ‘ரெண்டு நாள் கோயம்புத்தூர் வரைக்கும் போயிட்டு வர முடியுமாடா கண்ணா. ஒரு முக்கியமான வேலை இருக்கு.?’ கோபம் அமுதனின் மீது அப்பா என்ன செய்தார்?

மாதவனை விட்டு செல்ல மனமில்லை என்றாலும் அப்பாவின் பேச்சை தட்ட முடியாமல் கிளம்பி இருந்தான் கோவைக்கு. மழை சற்று மட்டுப்பட்டிருக்க ரயில் சேவைகளும் துவங்கி இருந்தன,

எப்போதும் போல் அவனுடன் கிளம்பின அவனது கேமரா அதனோடு மீராவின் புகைப்படங்கள். என்றுமில்லாமல் அன்று அவனை வழி அனுப்ப ரயில் நிலையம் வந்திருந்தான் மாதவன்.

‘பத்திரமா இருந்துக்கோ மாதவா. இன்னும் நாலஞ்சு நாள் லீவு இருக்கில்ல. நான் வந்ததும் அப்பாகிட்டே சொல்லிட்டு நானும் உன்னோட டெல்லி வரேன். அதுவரைக்கும் ஊரிலேயே இரு. எங்கேயும் போகாதே’ மூன்று நான்கு முறை திரும்ப திரும்ப சொல்லிவிட்டுதான் கிளம்பினான் கண்ணன்.
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
இதுவரை நண்பன் சொன்ன பேச்சுகளில் எதையுமே பெரிதாக கேட்டதில்லை மாதவன். இதையாவது கேட்டிருந்திருக்கலாம் அவன்.

கண்ணன் கிளம்பிய அடுத்த நாள் அமுதன் வீட்டு வேலைக்காரன் இவனை பார்த்து சொன்னான் ‘நீங்க உடனே ஊட்டி கிளம்பி போவீங்களாம். அமுதன் சார் படத்திலே உங்களுக்கு ஏதோ வேஷம் இருக்காம்’

அவ்வளவுதான். அவ்வளவேதான். தரையில் கால் படவில்லை மாதவனுக்கு. அடுத்த பஸ்சிலேயே கிளம்பி இருந்தான் கோவையை நோக்கி. நண்பன் சொன்ன வார்த்தைகள் காற்றில் போயிருந்தன.

வந்திருக்க வேண்டாம் அந்த நாள். ஆனால் வந்தே விட்டது! .

கண்ணன் கோவையில் தனது வேலையில் மும்முரமாக இருந்த நேரத்தில் அவனுக்கு வந்தது அந்த செய்தி.

‘சார் மாதவன் சார் உங்க அண்ணன் ஷூட்டிங்க்கு ஊட்டி வந்திருக்கார். படம் நடிக்க போறாராமே?

‘அவன் இருக்கும் உடல் நிலையில் ஊட்டி மலை ஏறி அவன் வருவது எந்த வகையில் உசிதம்? இதில் படத்தில் வேறு நடிக்க போகிறானா? ‘பைத்தியக்காரன்! பைத்தியக்காரன்’ வாய்விட்டு கத்தியவன் உடனே புறப்பட்டு பறந்தான் ஊட்டியை நோக்கி.

உதகமண்டலத்தில் நடந்துக்கொண்டிருந்தது படப்பிடிப்பு. வெங்கட்ராமனே இயக்குனர். அவரை மாமாவென அழைக்க பயம் மாதவனுக்கு அவர் அருகில் சென்று நின்று

‘சார்..’ என்றான் மெதுவாக

‘என்ன?’ பார்வையில் அப்படி ஒரு அலட்சியம்’

‘அமுதன் சார் வர சொன்னாங்க. ஏதோ வேஷம் இருக்குன்னு சொல்லி’ தயங்கி தயங்கித்தான் சொன்னான் மாதவன் .

‘அப்படி ஓரமா போய் இரு. தேவைன்னா கூப்பிடறோம்’ அவர் சொல்ல சரி என தலை அசைத்து விட்டு ஓரமாய் போய் அமர்ந்துக்கொண்டான் மாதவன் பசி தாகம் என எதை பற்றியும் கவலைப்படாமல் அழைப்புக்காக காத்திருந்தான் அவன்.

திடீரென அழைத்தார்கள் அவனை. என்ன வேஷம், என்ன செய்ய வேண்டும் எதுவும் புரியவில்லை முதலில். பின்புதான் புரிந்தது அமுதன் நடிக்கும் சண்டை காட்சியில் இவன் டூப்பாக நடிக்க வேண்டும் என்பது.

‘பொதுவா இந்த மாதிரி சீன் எல்லாம் ஸ்டன்ட் ஆக்டர்ஸ்தான் பண்றாங்க. ஏதோ நீ ரொம்ப ஆசை பட்டியேன்னு உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கறேன். பயன்படுத்திக்கோ’ ஆணையிடும் தொனியில் சொன்னார் அமுதன்.

‘சரி’ என தலை அசைத்தான் மாதவன். அங்கே வேலை செய்துக்கொண்டிருந்த ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் அமுதனுக்கும் நடந்த சண்டையினாலேயே அவர்கள் விலகிக்கொண்டது இவன் அறியவில்லை.

இப்போதுதான் மெதுவாக ஒரு பயம் பற்றிக்கொண்டது மாதவனுக்கு. ‘எத்தனை முறை சொன்னான் கண்ணன். இது வேண்டாம் வேண்டாம் என்று. கேட்கவில்லையே நான்’

‘இங்கே பாரு நீ இப்போ இந்த மலைப்பாதையிலே பைக் ஒட்டிட்டே போகணும் வேகமா. உனக்கு பக்கத்திலே இந்த வண்டி போகும். அப்படியே கொஞ்சம் எட்டி அந்த வண்டியை பிடிச்சிட்டு தொங்கிடணும்.’ அவ்வளவுதான். இது நீ நல்லா பண்ணா உனக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும்.

காட்சி துவங்கும் முன் கண்ணனின் நினைவுகள் திரும்ப திரும்ப வந்துக்கொண்டிருந்தன மாதவனுக்கு.. ஏனோ அவனை பார்க்க வேண்டுமென தோன்றியது. இப்போது எப்படி இயலும்?

அதே நேரத்தில் அவனை காண படப்பிடிப்பு தளத்திற்கு வந்துக்கொண்டிருந்தான் கண்ணன் துவங்கியது படப்பிடிப்பு. இரண்டு, மூன்று என டேக்குகள் போய்க்கொண்டிருக்க காட்சி சரியாக வரவில்லை. பலர் இவன் மீது கோபத்தை காட்ட துவங்கி இருந்தனர்.

‘சார் இவன் உங்க அக்கா பையனா. கொஞ்சம் சரியா நடிக்க சொல்லுங்க. எத்தனை டேக் எடுக்கறது? ஸ்டன்ட் மாஸ்டர் சொல்ல

அவன் அருகே வந்தார் வெங்கட்ராமன். ‘கோபம் வந்தால் எதையும் யாரையும் எட்டி உதைப்பது வெங்கட்ராமனின் பழக்கம். அதற்கு மேல் அன்று கண்ணன் அவரை அவமான படுத்திய காட்சியும் அவர் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. அதை அப்படியே மாதவன் மீது காட்ட துணிந்திருந்தார்

‘ஏன்டா ஏன்டா இப்படி மானத்தை வாங்குற? எட்டி உதைத்தார் அவனை. தடுமாறி கீழே விழுந்தான் மாதவன். ‘ஒழுங்கா நடிக்க முடிஞ்சா நடி. இல்லேன்னா போய் தொலை’

‘கண்ணா எங்கேடா இருக்கே நீ’ அந்த நேரத்தில் மனதிற்குள் அவனை கண்ணீர் மல்க அழைத்தான் மாதவன்.

நெஞ்சிலும் கைகளிலும் ஒரு வித வலி மெல்ல மெல்ல புறப்பட்டது. வெளியில் சொல்லிக்கொள்ள இயலவில்லை அவனால். மறுபடியும் அதே காட்சியில் அவன் நடிக்க ஆரம்பித்த நேரத்தில்தான் நடந்தது அந்த விபரீதம்.

பைக்கிலிருந்து அந்த வண்டிக்கு இவன் தாவ முயன்ற வேளையில் தடுமாறி கீழே விழுந்து சட்டை வண்டியில் மாட்டிக்கொள்ள மலைப்பாதையில் அப்படியே சில அடி தூரம் தரதரவென இழுத்து செல்லப்பட்டான் மாதவன். வண்டி நிற்பதற்குள் உருண்டான், பாறையில் மோதிக்கொண்டான்.

‘மா...த....வா...’ கண்ணனின் அலறல் அவனது செவிகளை அடைந்த நேரத்தில் இந்த பூலோக வாழ்வை முடித்திருந்தான் மாதவன்.

அவன் கீழே கிடப்பதை பார்த்து அலறி துடித்தான் கண்ணன் சுவாசம் இல்லை அவனிடத்தில். மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினான் அவனை. அங்கே அவன் உயிருடன் இல்லை என்பதை உறுதி செய்தனர். இந்த ஸ்டன்ட் செய்த நேரத்தில் அவனுக்கு இன்னொரு முறை மாரைடைப்பு வந்ததாகவும் சொன்னார்கள்.

‘கொன்னுட்டீங்களேடா. என் மாதவனை கொன்னுட்டீங்களேடா’ கண்ணனின் கத்தலில் அந்த பகுதியே அதிர்ந்தது.

‘காலம் வரும். எனக்கும் காலம் வரும்’ கூவினானே ‘அப்போ இதே ஊட்டியிலே இதே இடத்திலே நீங்க ரெண்டு பேரும் இதே மாதிரி கதறுவீங்க. நான் அதை பார்ப்பேன். விட மாட்டேன். உங்க ரெண்டு பேரையும் அதுவரைக்கும் சும்மா விட மாட்டேன்’ அமுதனையும் வெங்கட்ராமனையும் பார்த்து கூவினான் கண்ணன்

கதறினான் கத்தினான். புரண்டான் அவன். நண்பனை இழந்த அதிர்ச்சியில் அவனுக்கு ஆரம்பித்தது நெஞ்சு வலி. யாரையும் தனது அருகில் கூட வரவிடவில்லை அவன் .

வலியில் துடித்துக்கொண்டே சொன்னான் ‘இப்போ போறேன். அடுத்து வருவேன். இந்த வீட்டுக்கே வருவேன் உங்க யாரையும் வாழ விட மாட்டேன்’

‘நான்தான்டா உன்கூட எப்பவும் இருக்க போறவன். எப்பவும்! வாழ்கையிலே கடைசியிலே கூட!’ முன்பு ஒரு முறை அவன் சொன்ன வார்த்தைகளுக்கு இணங்க அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் கண்ணனது சுவாசம் தன்னாலே நின்று போயிருந்தது.

‘நம்பவே முடியவில்லை யாராலும். எல்லாரும் கதறி துடித்தார்கள் ‘இப்படி ஒரு நட்பை இதுவரை யாரும் கண்டதில்லை’ என்றார்கள்.

இது எதுவுமே செய்யாமல் பேசாமல் அமர்ந்திருந்தாள் மீரா. அந்த பேரிடியை அப்படியே உள்ளுக்குள் விழுங்கி விட்டதைப்போல் இருந்தது அவளை பார்த்தபோது.

‘நீ என்னை என் கண்ணன்னு சொல்லு’ எத்தனை முறை கேட்டிருப்பான். சொல்லவில்லையே நான். அவனை அப்படி அழைக்கவில்லையே உள்ளுக்குள் மருகினாள் கண்ணனுக்காக.

‘வாழ்கை என்ற ஒன்றை தொட்டு கூட பார்க்காமல் சென்று விட்டானே?’ வருந்தினாள் மாதவனுக்காக.

எல்லாவற்றையும் உள்ளேயே புதைத்துக்கொண்டாள் பாரதியை மட்டும் இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். உள்ளத்தின் பாரம் உடலை உருக்கியது. உணவும் உறக்கமும் குறைந்தது. மருத்துவர்கள் ஏதேதோ காரணம் சொன்னார்கள். கடைசியில் கண்ணன் சென்ற பத்தாவது நாள் அவனை பின் தொடர்ந்து சென்றுவிட்டிருந்தாள் மீரா.
தொடரும்......
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
உன்னதமான நட்பு....
அவன் முடிவிலும், இவன் துணை....
கண்ணனின் மீரா...
என் கண்ணன் என்று சொல்ல
சந்தர்ப்பம் வராமலே அவன் சென்ற பாதையில்...

நிறைவேராத ஏக்கங்கள் ,ஆசைகள்
இந்த பிறப்பில், நிறைவேறுமா....?

கனமான பதிவு .....
கண்ணனின் மா.....த...வா....இன்னும்,
காதுகளில் ஒலிக்கின்றது....
 




Devi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
323
Reaction score
1,366
oh.. edhirpaarkkavilai ippadi oru mudivai. Kannan, Madhavan, Meera moovarin pinaippu.. vaarthaigal varavillai. :love:
 




sivamalar

மண்டலாதிபதி
Joined
Feb 1, 2018
Messages
105
Reaction score
252
Location
chennai
புரிகிறது என் முகிலன் என்ற வார்த்தையின் அர்த்தம் விட்ட குறை ..... நிறைவேறாத
என்னன்னவோ ஆசைகள் உள்ளத்தின் ஓசைகள் இன்று சோகம் கூட வருத்தத்துடன் இணைத்து பரவசத்தை தருமா படிக்கும் போது தருகிறது இப்பொது
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
What a friendship ! Superb sis nice epi sis kaadhalum & natpum kalanalum pirikka mudiyala ????
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
கடவுளே என்னமாதிரி நட்பு இது.கண்ணீர் விடவைத்துவிட்டீர்கள் மேம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top