• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mugilan 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
விருந்து முடிந்து மயூரா உட்பட எல்லாரும் அவரவர் இருப்பிடத்திற்கு திரும்பி இருந்தனர்.

இரவின் தனிமை. பல வருடங்களுக்கு பின் இன்று நேருக்கு நேராக சந்தித்துக்கொண்ட அந்த இரு நண்பர்களின் உள்ளம் மட்டும் உறங்க மறுத்தது.

அணிந்திருந்த ஸ்வெட்டரையும் தாண்டி ஊசி போடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இங்கே அவன் வீட்டு தோட்டத்தில் நடை பயின்றுக்கொண்டிருந்தான் முகிலன். அதே போல் பக்கத்து வீட்டில் வருண். இருவரின் இருப்பும் ஒருவருக்கு ஒருவர் புரியாமலும் இல்லை.

வருணின் அந்த ஒரு நிமிட பார்வை அவனை திரும்ப திரும்ப தொந்தரவு செய்து கொண்டிருந்தாலும் அவனை தேடி செல்வதாக இல்லை முகிலன்.

‘முகிலன் வருணிடத்தில் போய் நிற்பதா? இந்த ஜென்மத்தில் இல்லை’

சொல்லிக்கொண்டவன் சின்ன சின்ன குச்சிகளை பொறுக்கிக்கொண்டு வந்து தரையில் போட்டு தீ மூட்டிக்கொண்டு அதனருகே அமர்ந்துவிட்டிருந்தான்.அந்த தீயின் கதகதப்பில் குளிர் அடங்கினாலும் உள்ளே நிகழ்ந்துக்கொண்டிருந்த பிரளயம் அடங்க மறுத்தது.

அதே நேரத்தில் திரும்ப திரும்ப நினைவுக்கு வந்துக்கொண்டிருந்த முகிலனின் விழிகளை மறக்க வைக்கும் ஆயுதம் ஒன்றை கையிலெடுத்தான் வருண். சிகரெட்! அடுத்த இரண்டாவது நிமிடத்தில் முகிலனின் நாசியை தொட்டிருந்தது சிகரெட்டின் நாற்றம்.

‘வருணா? வருண்தானே புகைப்பது?’ தலைமுதல் கால் வரை பரவியது பய பூகம்பம். அந்த நாற்றத்தில் ஒரு பிரளயமே நிகழ்ந்துக்கொண்டிருந்தது முகிலனுக்குள்ளே.

‘வேண்டாம் வருண்’ கத்த வேண்டும் போல் இருந்தது முகிலனுக்கு; ஒரு சிகரெட் முடியும் வரை தலையை கைகளுக்குள் புதைத்துக்கொண்டு பேசாமல் அமர்ந்திருந்தான் முகிலன்,

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் இரண்டாவது சிகரெட். சர்ரென தலைக்கு ஏறி இருந்தது முகிலனின் ஆத்திரம். எப்போது அங்கிருந்து எழுந்தான்? எப்போது வருண் வீட்டுக்குள் நுழைந்தான் என்பது முகிலனுக்கே தெரியவில்லை. உள்ளே சென்று வருண் சட்டையை கொத்தாக பிடித்திருந்தான் அவன்.

‘சிகரெட்டை கீழே போடு..’ உறுமினான் முகிலன். வருண் திகைத்து போய் முகிலனின் கண்களையே பார்த்திருக்க

‘சிகரெட்டை கீழே போடுடா’ உச்சகட்ட கோபத்தில் வெடித்தது முகிலன் குரல்.

அசையவே இல்லை வருண். அடுத்த நொடி அவன் கையிலிருந்து சிகரெட்டை பிடுங்கி தூர எறிந்திருந்தான் முகிலன்.

‘இனி சிகரெட்டை தொடு கையை உடைச்சு நெருப்பிலே போட்டுடறேன். அதுக்கு அப்புறம் நீ எப்படி சிகரெட் பிடிக்கறேன்னு பார்க்கிறேன்’ முகிலன் சீறிக்கொண்டிருக்க இமைதட்டக்கூட மறந்து அவன் கண்களையே பார்த்திருந்தான் வருண்.

‘நீ யாருடா என்னை கேட்க?’ மெல்ல மெல்ல எழுந்தது வருணின் கேள்வி. சட்டென தன்னிலை பெற்றான் முகிலன். அவன் சட்டையிலிருந்து கையை விலக்கினான். இப்பொது மறுபடியும் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான் வருண்.

‘வருண்... வேண்டாம்’ கொஞ்சம் அழுத்தமாக சொன்னான் முகிலன். அவன் வாயிலிருந்த சிகரெட் மறுபடியும் தூர பறந்திருந்தது.

‘நீ யாருடா என்னை கேட்க?’ மறுபடியும் அதே கேள்வி

‘நான் முகிலன் டா. நான் உன்னை கேட்காம வேறே எவன் கேட்பான்?.’ ஊருக்குள்ளே யார் என்ன வேணும்னாலும் பேசட்டும். ஆனா உனக்கு ஒண்ணுன்னா உன் கூட நிக்கறவன் நானாதான் இருப்பேன். புரியுதா?’ என்றான் அவன் கண்களுக்குள் பார்த்து

‘அப்போ ஏன்டா அனுபமா இல்லாம போனப்போ நீ வரலை?’ கேட்டவனின் விழிகள் இப்போது நீர் சேர்ந்திருந்தது. திகைத்து போனான் முகிலன்.

‘கட் பண்ணு’ அன்று அவன் கத்திய காரணம் புரிந்தது. இதுதான் அவன் மனதில் இருந்த கோபமா?

‘நாம ஆயிரம் சண்டை போட்டிருக்கோம். அது வெளியுலகத்துக்கு. என்னை பொறுத்தவரை நீ என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் முகிலா. அப்பா, அம்மா, அண்ணன் தம்பி, அத்தை, மாமா இது எல்லாத்துக்கும் மேலே டா நீ எனக்கு’ இப்போது வருணின் கண்களை தாண்டி கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது.

‘நாம இதுவரைக்கும் நேருக்கு நேரா நின்னது கூட இல்ல அந்த இடத்துக்கு நீ எப்படி வந்தேன்னு எனக்கு தெரியலை. ஆனா நான் முயற்சி பண்ணிட்டேன். அந்த இடத்திலே என்னாலே வேறே யாரையும் வைக்க முடியலை முகிலா. மயூராவை கூட’ குரல் தடுமாற வருண் பேசிக்கொண்டே போனான்.

பேச்சற்றுப்போய் நின்றிருந்தான் முகிலன். அவன் மனதில் இருப்பதை அட்சரம் பிசகாமல் பேசிக்கொண்டே இருக்கிறானே வருண்.

‘என் கண்ணீர், வலி வேதனை, இது எதையும் வெளியிலே சொல்லாம உன் தோளுக்காக காத்திருக்கேன்டா நான்.’ இப்போது முகிலனின் கண்களிலும் நீரேற்றம்.

‘நீ எனக்காக இருக்க மாட்டியா முகிலா’ கண்களில் வழியும் வெள்ளத்துடன் வருண் கேட்க அவனை நோக்கி இரு கைகளையும் நீட்டி இருந்தான் முகிலன். அடுத்த நொடி அவன் தோள் சாய்ந்திருந்தான் வருண்.

ஆறடி ஆண் மகன் ஜென்ம ஜென்ம பந்தமாய் நிற்கும் நண்பனின் தோள்களில் சிறு குழந்தையாய் மாறி தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்தான்

‘என் அனுபமா என்னை விட்டு போயிட்டா முகிலா. எனக்குன்னு யாருமில்லைடா’ அங்கே. முகிலனின் கண்களிலும் நிற்காமல் வழிந்துக்கொண்டிருந்தது கண்ணீர். இதமாய் அவன் முதுகை வருடிக்கொடுத்துக்கொண்டே நின்றான் அவன்.

அதிகாலை மூன்று மணி. வருணின் கட்டிலில் முகிலன் அமர்ந்திருக்க அவனது மடியில் படுத்துக்கொண்டு குழந்தையாய் உறங்கிக்கொண்டிருந்தான் வருண். நிஜமாகவே வருண் அன்புக்கு ஏங்கும் ஒரு குழந்தையாக இருப்பான் என கனவிலும் நினைக்கவில்லை முகிலன்.

‘இது என்ன இப்படி ஒரு பந்தம் எங்கள் இருவருக்கும்?’ பதில் தெரியாமலே அவன் தலையை மடியில் ஏந்திக்கொண்டு அமர்ந்திருந்தான் முகிலன். உறக்கம் கொஞ்சமும் வரவில்லை முகிலனுக்கு. வருண் உறங்கும் முன் நிறைய பேசினார்கள் இருவரும்..

‘என் அனுபமா என்னை விட்டு போயிட்டாடா’ என அடிக்கடி சொன்னானே ஒழிய மறந்தும் கூட அவன் திருமணத்தை முகிலன் நிறுத்தியது பற்றி ஒரு கேள்வி வரவில்லை வருணிடமிருந்து.

அதை பற்றி கேட்டு, திட்டி, சண்டையிட்டிருந்தால் கூட ஒரு வகையில் நிம்மதியாக இருந்திருக்கும் முகிலனுக்கு. ஆனால் இப்போது? அடி மனதில் சிறு கோடாய் ஒரு குற்ற உணர்வு படர்ந்து கிடந்தது.

‘அனுபமா உன்னோட அன்புக்கு தகுதியானவ இல்லை வருண். அதை உன்கிட்டே எப்படி சொல்ல?’ மருகினான் உள்ளுக்குள்ளே. ‘அதை விட அவ இடத்துக்கு உன் அன்புக்கு தகுதியான ஒருத்தியை நான் உனக்கு என்னால் கொடுக்க முடியும். அவளை ப்ரியங்கங்களுடன் உனக்கு கொடுப்பான் முகிலன்’

மறுநாள் காலை

‘என்னது முகிலன் உன் வீட்டிலே இருக்காரா? டேய்.. என்னங்கடா பண்றீங்க? உங்களை எல்லாம் நம்பவே முடியலை.’ வருணின் அழைப்பில் திக்குமுக்காடி போய் சொன்னாள் மயூரா. அடுத்த சில நிமிடங்களில் அந்த வீட்டில் இருந்தாள் பெண்.

‘வாங்க மயூரா வெங்கட்ராமன்’ அவன் முழு பெயர் சொல்லி அழைக்க

‘டேய்... என்னதுடா இது முழு பேரை சொல்லி இப்படி கூப்பிடுற’ என்றான் வருண். ‘மயூரான்னு கூப்பிட வேண்டியதுதானே?

‘கேளு கேளு நல்லா கேளு. மீட் பண்ண நிமிஷத்திலே இருந்து இதே டார்ச்சர்தான் ‘ மயூரா புலம்ப சின்னதாய் சிரித்தான் முகிலன்.

‘நீ வேணும்னா செல்ல பேர் வெச்சு கூப்பிடு வருண்.’ என்றான் அவன் முகம் பார்த்து. அந்த வார்த்தைகளின் உள் அர்த்தம் முகிலன் மட்டுமே அறிந்திருந்தான்.

‘நான் குரங்குன்னு கூப்பிடுவேன். இல்லேன்னா பிசாசுன்னு கூப்பிடுவேன். அதுதான் இந்த மூஞ்சிக்கு சரியா செட் ஆகும்’ வருண் சொல்ல அவள் அடிக்க வர இருவரையும் ரசிக்க தவறவில்லை முகிலன். வெகு நாட்களுக்கு பிறகு வருணிடம் கலகல சிரிப்பு சத்தம்.

‘ரொம்ப நாளைக்கு அப்புறம் அழகா சிரிக்குற வருண். ரொம்ப சந்தோஷமா இருக்கு’ மயூரா சொல்ல

‘அழுது தீர்த்துட்டேன் மயூரா. மனசு லேசாயிடுச்சு’ என்றான் வருண் முகிலனின் முகம் பார்த்தபடியே.

அப்போது ஒலித்தது முகிலனின் கைப்பேசி. திரையை பார்த்தவனுக்கு சத்தியமாய் தனது கண்களை நம்ப முடியவில்லை. திரை ‘அப்பா’ என ஒளிர்ந்துக்கொண்டிருந்தது.

‘அய்யோ.... என்னவாயிற்று என் தந்தைக்கு? என்னை அழைக்கிறாரே? உடல் நலமில்லையா என்ன?’ இப்படிதான் முதலில் போனது முகிலனின் எண்ண ஓட்டங்கள்.

உண்மையில் அவர் அவனை அழைத்து பேசிய சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. அப்படியே அழைத்தாலும் அது சண்டை போடுவதற்காகத்தான் இருக்கும்! சரி என்னவென்று பார்ப்போம் என்றபடியே

‘முகிலன்...’ என்றான் அழைப்பை ஏற்று.

‘பத்திரமா இருக்கியா முகிலா? எங்கே இருக்கே நீ?’ என்றார் அந்த தந்தை. அவர் கேட்ட விதமே அவனை ஆச்சர்யத்தின் உச்சிக்கு தள்ளியது.

‘நான் நல்லாத்தான் இருக்கேன். இங்கே ஊட்டியிலே இருக்கேன். உங்களுக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா என்ன?’ என்றான் சந்தேகமாக.

‘ஊட்டிக்கா அங்கே எதுக்குடா போனே. நீ உடனே கிளம்பி வா’ என்றார் படபடப்பாக.

‘அப்பா..’ அவரை நிதானமாக அழைத்தான் பல நாட்களுக்கு பிறகு. இன்று அவரை அப்படி அழைக்க வேண்டுமென தோன்றியது அவனுக்கு. ‘எனக்கு இங்கே ஷூட்டிங் இருக்கு. முடிச்சிட்டு வரேன்பா’

‘டேய்... வேண்டாம்டா. அங்கே ஷூட்டிங் எல்லாம் வேண்டாம்டா. மலை எல்லாம் இருக்கும் வேண்டாம்டா’ அவர் அங்கே கத்த ஆரம்பிக்க

‘அப்பா நான் ஷூட்டிங் முடிச்சிட்டு வந்து உங்களை பார்க்கிறேன். இப்போ டென்ஷன் ஆகாம ரெஸ்ட் எடுங்க’ சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்திருந்தான் முகிலன்.

அடுத்து ஏதோ ஒரு விபரீதம் நடக்க போகிறது என பல கனவுகள், சில உள்ளுணர்வுகள்எச்சரித்துக்கொண்டிருந்தன அவரை. அதை எல்லாம் சொன்னாலும் நம்புபவன் இல்லை முகிலன்.

‘இத்தனை நாள் மகன் அருகிருந்த போது துடிக்காத உள்ளம் அவன் விட்டு போய்விடுவானோ என்ற பயம் வந்ததும் பதற ஆரம்பித்து இருந்தது.

புலம்பி என்ன பயன்? இது? வினை விதைத்தவர்கள் வினை அறுக்க வேண்டாமா? தாங்கள் மாதவனுக்கு செய்தவற்றுக்கெல்லாம் வெங்கட்ராமனும் அமுதனும் பதில் சொல்ல வேண்டாமா என்ன?

அதே நேரத்தில் என்ன தோன்றியதோ மயூரா தனது தந்தையை அழைத்தாள். அவருடன் பேசி நான்கைந்து நாட்கள் ஆகின்றன. அம்மாவிடம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறாள் தினமும். ஆனால் அவர் திரைப்படம் நின்று போன செய்தி மட்டும் இன்னமும் அவளிடம் யாரும் சொல்லி இருக்கவில்லை.

‘ம்.. சொல்லு..’ என்றார் கொஞ்சம் வெறுப்பு கலந்த குரலில்

‘சும்மா உங்களோட பேசணும்னுதான் பா போன் பண்ணேன்’

‘ஒண்ணும் அவசியம் இல்லை. அதான் நீ அங்கே இருக்கிற மத்தவங்களோட கொண்டாட்டமா இருக்கியே. அப்படியே இரு. எனக்கு நீ தேவை தேவை இல்லை.’ துண்டித்திருந்தார் அழைப்பை. துவண்டு போனது மயூராவின் முகம்.

‘என்னாச்சு மயூரா? அப்பா திட்டினாரா?’ கேட்டான் வருண்.

‘ம்..’

‘அவருக்கு படம் நின்னு போன கோபம்’

‘என்னது படம் நின்னு போச்சா?’ கொஞ்சம் அதிர்ச்சியுடன் முகிலனை பார்த்தாள் மயூரா.

‘எஸ் மயூரா வெங்கட்ராமன்.’ என்றான் முகிலன் ‘முடிச்சிட்டோம்’ அவள் முகம் இன்னுமாக மாற்றம் கொள்ள

‘இருங்க இருங்க. படம் மட்டும்தான் நின்னு போச்சு. உங்க அப்பாவை நான் ஒண்ணும் பண்ணலை. எதுவும் பண்ற மூட் இப்போ இல்லை’ என்றான் சின்ன சிரிப்புடன்.

‘ரொம்ப சந்தோஷம்’ உதட்டு சுழிப்புடன் வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள் அவள்.

‘நான் இப்போ கூட ரெடி மயூரா. உங்க அப்பாவை யாரோடையும் எந்த பிரச்னையும் வெச்சுக்காம படம் பண்ண சொல்லு நான் உடனே டேட்ஸ் கொடுக்கறேன்’ இது வருண்

‘ம்..’ என்றாள் மயூரா.

‘வருண்,,, இப்போ மேடம் என்னை வெச்சு படம் பண்றாங்களா இல்லை அதுவும் முடிஞ்சதா கேட்டு சொல்லு’ அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே முகிலன் கேட்க

‘நாம ஷூட்டிங் போலாம் முகிலன்’ என்றாள் மயூரா சட்டென.

இரண்டொரு நாள் கழித்து அவர் கோபம் சற்று தணிந்த பிறகு அப்பாவுடன் பேசிக்கொள்ளலாம் என்று தோன்றியது அவளுக்கு. ஆனால் அந்த இரண்டொரு நாளில் சில விஷயங்கள் கை மீறி போயிருக்கும் என அவளுக்கு தெரியவில்லை.
 




Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
அன்றைய படப்பிடிப்பும் முடிந்திருந்தது. வருணும் அவர்கள் படபிடிப்புக்கு வந்திருக்க மாலையில் .வருண், முகிலன், மயூரா என மூவருமே கிளம்பி இருந்தனர் காரில்..

‘உன்னை எந்த ஹோட்டல்லே டிராப் பண்ணனும்னு சொன்னே?’ கேட்டான் வருண்.

‘மணி எட்டுத்தானே ஆச்சு வருண். நான் கொஞ்ச நேரம் உங்க ரெண்டு பேரோடையும் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு போறேனே.’ என்றாள் கெஞ்சலாக..’நீ நாளைக்கு ஊருக்கு போறேன்ன்னு சொன்னே இல்ல. மறுபடியும் நாம மூணு பேரும் எப்போ இங்கே வருவோம்னு தெரியாது’

‘சரி வா..’ காரை கிளப்பினான் வருண். அது நேராக முகிலன் கெஸ்ட் ஹவுசை அடைந்திருந்தது

இரவு உணவை முடித்துக்கொண்டு மூவரும் அந்த தோட்டத்தில் அமர்ந்தனர். சிரித்து சிரித்து பேசி மகிழ்ந்து மூவர் முகமும் மலர்ந்து கிடந்தது. குச்சிகளை பொறுக்கிக்கொண்டு வந்து தீ மூட்டினான் முகிலன்.

‘இப்படி சந்தோஷமா இருந்து ரொம்ப நாள் ஆச்சு’ என்றபடியே மயூராவின் அருகில் அமர்ந்தான் வருண்.

‘இனிமே எப்பவும் சந்தோஷமா இருப்பே வருண். அதுவும் நம்ம மயூரா வெங்கட்ராமனை எப்பவும் பக்கத்திலேயே வெச்சுக்கோ நீ ரொம்ப சந்தோஷமா இருப்பே’ என்றான் முகிலன் அருகருகே அமர்ந்திருந்தவர்களை தனது பார்வையில் நிரப்பிக்கொண்டு.

‘இதுவா? இது என்னை விட்டு ஓடிடும்’ என்றான் வருண்.

‘அதெல்லாம் ஓடாது எப்படி ஓடும்?’ கேட்டபடியே கைப்பேசியை வெளியே எடுத்தான் முகிலன். ‘நான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?

‘எடுக்கலாமே’ வருண் ஒப்புக்கொண்டு விட குழப்பமாக முகிலனை பார்த்தாள் மயூரா. ‘ஏதோ ஒன்று சரி இல்லை’ என்று சொன்னது அவள் உள்ளுணர்வு. ‘முகிலன் எப்போதும் இப்படி எல்லாம் இல்லையே?’

இருவரையும் சேர்த்து கைப்பேசியில் ஒன்றாக பதித்துக்கொண்டான் முகிலன். இருவரையும் அக்னி சாட்சியாக மானசீகமாக சேர்த்து வைத்து விட்ட திருப்தி அவனுக்கு,

‘அக்னி முன்னாடி ரெண்டு பேரும். ரொம்ப அழகா இருக்கு’ முகிலன் வாய்விட்டு சொல்லிவிட

‘எங்கே காட்டு’ வருண் ஆர்வமாக வாங்கிப்பார்க்க முகிலன் எண்ண ஓட்டம் புரிந்தது போல் மொத்தமாக மாற்றம் கொண்டிருந்தது மயூரா முகம்.

சில நிமிடங்களில் எழுந்திருந்தாள் அங்கிருந்து ‘என்னை ஹோடேல்லே டிராப் பண்ணிடறியா வருண். டைம் ஆச்சு’

அவள் முகம் போன போக்கை வைத்து அவள் மனம் படித்திருந்தான்தான் முகிலன்.

‘இருக்கட்டும். அவள் மனமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறும். இந்த படம் முடிந்ததும் நான் அவளை விட்டு மெல்ல விலகினால் அவள் என்னை மறந்து விட மாட்டாளா என்ன?’

நாளை மதியத்துக்கு மேல் வருண் ஊருக்கு புறப்படுவதாக இருந்தது. அன்றைய இரவையும் முகிலனுடன் கழிக்கவே விரும்பினான் வருண்.. அவனை விட்டு விலக மனம் ஏனோ ஒப்புக்கொள்ளவே இல்லை.

அங்கே முகிலன் கெஸ்ட் ஹவுஸின் செக்கியூரிட்டியிடம் இருந்தது ஒரு பைக். அதை விரல்களால் வருடிக்கொண்டே சிறிது நேரம் நின்றிருந்த முகிலன்

‘வருண் பைக் ஒட்டி ரொம்ப நாள் ஆச்சு. அப்படியே மலைபாதையிலே ஒரு ரைட் போயிட்டு வரலாம் வரியா?’ என்றான்..

‘இதுவரைக்கும்தான் உன் பேச்சை கேட்கலை. இனிமே முகிலன் என்ன சொன்னாலும் சரிதான்’ சட்டென சொன்னான் வருண்.

‘ஆஹா,,,ன்... இதுவரைக்கும் கேட்கலையா? இது எப்போ?’

‘அது எப்பவோ! சரி விடு. இப்போ பைக் எடு’ உற்சாகமாக சொன்னான் வருண்.

செக்கியூரிட்டியிடம் சாவியை வாங்கிக்கொண்டு இருவரும் பைக்கில் வளைந்து வளைந்து பறந்தனர். அந்த இருளில் யாரும் அவர்களை அடையாளம் தெரிந்துக்கொள்ளவில்லை.. இதுவரை கைக்கு எட்டாமல் இருந்த ஏதோ ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் கை சேர்ந்த ஆனந்தம் இருவருக்கும்.

‘வருண்’

‘ம்’

‘உனக்கு மயூராவை ரொம்ப பிடிக்குமாடா? அன்னைக்கு நீ எனக்காகவே இருப்பியான்னு கேட்டியா அவளை?’

‘’ஹா... ஹா... அதையும் சொல்லிடுச்சா அது. எனக்கு உண்மையிலேயே அதை ரொம்ப பிடிக்கும்டா. அருமையான பொண்ணு’

‘குட்,,, ரொம்ப சந்தோஷமா இருக்கு. பத்திரமா பார்த்துக்கோ அவளை’ சொன்னவனின் கரம் மகிழ்ச்சியில் ஆக்ஸிலேட்டரை இன்னமும் அதிகமாக திருகியது.

மறுநாள் காலை விடிந்திருந்தது, முகிலனின் அருகில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான் வருண். மகிழ்ச்சியாய் கண் விழித்தான் முகிலன் எதையோ பெரிதாக சாதித்து விட்ட திருப்தி அவனிடம் இருந்தது.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்...​
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
Hats off Vatchala....
ரொம்ப நுணுக்கமா,
எந்த knotம விட்டுப், போகாமல்..
அழகாக கதையை இணைத்திருக்கீங்க...

வருணின் சிகரெட், பழக்கத்தை
மையமாக வைத்து..
இருவரையும் நெருக்கம்....
அகம் மட்டுமின்றி,புறத்திலும்....
 




vadivelammal

இணை அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
574
Reaction score
1,781
Location
bangalore
ஹாய் வத்சலா மேம்
ஸ்டோரி ரொம்ப அருமையாக த்ரில்லிங்கா கொண்டு போறீங்க மூவருக்கும் எதுவும் ஆகாமல் save பண்ணுங்க இந்த பிறவியிலாவது மூவரும் அருமையான வாழ்வை வாழ வேண்டும் போன பிறவியில் தான் அவர்கள் மூவர் வாழ்வும் கேள்விக்குறியாகி பாதியில் நின்று போனது இப்பவும் திரும்ப அதே கதை வேண்டாம் வருணுக்கு வேறு நல்ல துணையை கொடுங்கள் ஆனால் முன்ஜென்மத்தில் காதல் பறவைகளாக நீ இன்றி நான் இல்லை என்று உயிர் நீத்த மீராவின் காதலுக்கு உயிர் கொடுங்கள் ஆனால் எழுத்தாளரின் எண்ணங்களே சிறப்பானது என்று நினைக்கும் பொழுது நட்பா ?காதலா ?உங்கள் தீர்ப்பே எங்களை வசீகரிக்கும் என்பதில் ஐயமில்லை waiting for next intresting சஸ்பென்ஸ் அப்டேட்மா நன்றி
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
முகிலனுக்கு முடிவு சரியில்லை என்றால் நான் மிகவும் வருத்தப்படுவேன்
 




Devi

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
323
Reaction score
1,366
Mukilan mudivu ennavaaga irukkum? Meeravin kannan Meeravidame.. kodutthudunga Vathsala. Please.. Waiting eagerly for final update
 




sivamalar

மண்டலாதிபதி
Joined
Feb 1, 2018
Messages
105
Reaction score
252
Location
chennai
நட்பு இது தூய்மையாய் இருந்துவிட்டால் உலகத்தில் கிடைத்த பொக்கிஷம் அத்தனையும் எதையும் தொலைக்க தோணும் அதற்காக பிரியங்களுடன் இங்கு யார் தொலைக்க போகிறார்கள் அறிந்தவனா அறியாதவனா.................
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top