• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mukilan 26 FINAL

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
ப்ரியங்களுடன் முகிலன் 26​

படப்படிப்பு தளத்திருக்கு வந்திருந்தனர் முகிலன் மயூரா, வருண் மூவரும். அன்றிரவு இவன் தோளில் அழுது முடித்த பிறகு வருண் ஒரு சிகரெட் கூட பிடிக்கவில்லை என்பது முகிலனுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

பேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்துக்கொண்டு அந்த பகுதியை சுற்றி விழிகளை சுழற்றிக்கொண்டே நின்றிருந்தான் முகிலன்.

நிறையவே சரிவுகளும், வளைவுகளும் கொண்ட அந்த மலைப்பாதையில் நின்ற போது அவன் உணர்வுகளில் கண்டிப்பாக மகிழ்ச்சி ரேகைகள் இல்லை. ஏனென்றே தெரியாத மெலிதான ஒரு அழுத்தம். நேற்று இரவு அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்த போது இருந்த மனத்திருப்தி கூட இப்போது காணாமல் போயிருந்தது.

‘என்ன இடம் இது.? இந்த மன அழுத்தத்துக்கு இந்த இடமும் ஒரு காரணமா என்ன? புரியவில்லை அவனுக்கு.

முகிலன் அடிக்கடி சொல்வதுதான். ஒன்றும் ஒன்றும் எப்போதும் ரெண்டாகத்தான் இருக்கும்.

இறைவனின் புத்தகத்திலும் அதே கணக்குத்தான். நாம் பேசும் பேச்சுக்கள் தொடங்கி விடும் மூச்சுக்கள் வரை எல்லாம் இந்த கணக்கிலேயே அடக்கம். கணக்குகள் நேராகும் வரை இறைவன் தனது விளையாட்டை நிறுத்துவதில்லை.

அன்று இதே இடத்தில் அமுதனும், வெங்கட்ராமனும் விளையாடிய விளையாட்டுகளை இன்று முடித்து வைக்க தயாராக நின்றிருந்தன அங்கே இருந்த மூன்று வண்டிகள்.

காமெராவை வைத்து கோணம் பார்த்துக்கொண்டிருந்தாள் மயூரா. தூரத்திலிருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்த முகிலன் மெல்ல அவள் அருகில் வந்தான்.

என்றைக்கும் இல்லாமல் ‘ஹாய் மயூரா வெங்கட்ராமன்’ என அவனே துவங்கினான்.

இன்று மெரூன் நிற சல்வாரும் காதில் ஆடும் ஜிமிக்கிகளுமாக வந்திருந்தாள் மயூரா. அவளை ரசிக்க வேண்டுமென துடித்த மனதை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் முகிலன்.

‘ம்’ முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் தலை அசைத்துவிட்டு நகர்ந்திருந்தாள் அவள்..

நேற்று அவர்கள் இருவரையும் சேர்த்து அவன் எடுத்த அந்த புகைப்படமே காரணம் என்று புரிந்திருந்தது முகிலனுக்கு. எப்போதுமே அவள்தானே இவனிடம் தானாக வந்து பேசிப்பழக்கம். அவளது பாராமுகம் இன்று ஏனோ அவனை படுத்தி எடுத்தது.

எங்கிருந்தானோ அவன் அருகில் வந்து நின்றான் வருண். அங்கே அந்த காட்சிக்காக அந்த வண்டிகள் தயாராகிக்கொண்டிருந்தன. இருவரும் அந்த வண்டிகளையே பார்த்திருந்தனர்.

‘என்ன சீன் முகிலா இன்னைக்கு?’ என்றான் வருண். அந்த வண்டிகளை பார்த்துக்கொண்டே. ஏதோ ஒரு கலக்கம் அவனையும் ஆட்டிக்கொண்டிருந்தது.

‘தெரியலை. கேட்கணும் ஏதோ ஆக்ஷன் சீன் போலிருக்கு’ இது முகிலன். சில நொடிகள் கழித்து

‘வருண்’ என்றான் முகிலன்.

‘ம்’

‘உனக்கு என்கிட்டே ஏதாவது கேட்கணுமா? என் சட்டையை பிடிச்சு உலுக்கு கேட்கறதுனாலும் கேட்டுடு. அப்புறம் நமக்கு எப்போ நேரம் இருக்கும்னு தெரியலை.’ அந்த காட்சிக்கென தயாரக நிற்கும் பைக்கை பார்த்துக்கொண்டே சொன்னான் முகிலன்.

‘நேரமிருக்காதா ஏன்?’ வருண் கொஞ்சம் திடுக்கிட

‘இல்ல நீ ஊருக்கு போயிடுவே. அதான் சொன்னேன்’ சட்டென கலைந்துதரை இறங்கினான் எங்கிருந்தோ.

‘சில கேள்விகள் கேட்டுத்தான் பதில் தெரிஞ்சுக்கணும்னு இல்லை முகிலா’ என்றான் வருண் வானத்தை பார்த்துக்கொண்டே. ‘தெரிஞ்சே தான் கேட்கலை. நீ தப்பு செஞ்சிருக்க மாட்டேன்னு தெரிஞ்சேதான் கேட்கலை, அவ தப்பு செஞ்சிட்டானு தெரிஞ்சேதான் கேட்கலை. உங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வரும்போது அவரை பார்க்க நிறைய ஹிந்தி நடிகர்கள் வந்தாங்க. அவங்க மூலமா அனுபமா பத்தி எனக்கு தெரிஞ்சிடுச்சு முகிலா’. என்றான் ஆழ்ந்த மூச்சுடன்

கொஞ்சம் நிம்மதி கலந்த சுவாசம் எழுந்தது முகிலனிடத்தில்.

‘எனக்கு இதயத்திலே ஏதோ ஒரு பிரச்சனை. அதுக்கு நீ ஆபரேஷன் பண்ணிட்டே. சரி. அதுக்கு பதிலா உன் இதயத்தை எடுத்து வைக்கிறேன்ன்னு சொல்றது எப்படி முகிலா சரியா வரும். அது முட்டாள்த்தனம் இல்லையா? அந்த இதயம் எனக்கு ஒத்து வரணும் இல்லையா?.

வருண் தெள்ளத்தெளிவாக கேட்க ஆடிப்போனான் முகிலன்.

‘எனக்கு மயூரா ஒரு ஃப்ரெண்ட் மட்டும்தான். ஒரு ஃப்ரெண்டா அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்தான். ஆமாம் கேட்டேன். நீ எனக்காக அரை மணி நேரம் இருப்பியான்னு கேட்டேன். அரை மணி நேரம் உன் தோளிலே சாஞ்சு அழணும்ன்னு நான் கேட்க வந்தேன் அதுக்குள்ளே மேடம் பொங்கிட்டாங்க. அது உன் வரைக்கும் வந்திடுச்சு’ அழகாய் புன்னகைத்தான் வருண்.

அந்த நேரத்தில் அங்கே வந்து நின்றாள் மயூரா ‘ஷாட் ரெடி முகிலன்’ என்றாள் அவன் முகம் பார்க்காமல்.

நீங்க என்ன சீன்னே சொல்லலையே மயூரா வெங்கட்ராமன்’ முகிலன் கேட்டு வைக்க

‘ஆங்... நான் செத்து போற சீன்’ என்றாள் இவள் படீரென.

ஹேய்...’ நண்பர்கள் இருவருமே பதறிப்போயினர்

‘ஏன் மயூரா இப்படி பேசறே?’ வருண் கேட்க

‘பின்னே வேறே எப்படி பேச? நான் என்ன பொம்மையா? என்ன தைரியம் இருந்தா என்னையும் உன்னையும் ஒண்ணா வெச்சு போட்டோ எடுப்பான் இந்த ஆளு? அதுவும் அக்னி முன்னாடி’ அவள் வார்த்தைகள் வெடித்து எழ

‘மயூரா வெங்கட்ராமன்’ முகிலன் சற்றே தழைந்த குரலிலேயே ஆரம்பிக்க

‘வாயை மூடறீங்களா? எகிறினாள் பெண் ‘எப்போ பாரு ம...யூ...ரா வெ...ங்...கட்...ரா...மன்.’ ஏன்னு கேட்டா முகிலன் முகிலனா இருக்கணும் அதுக்காக அப்படின்னு சொல்றது. ஆனா மத்தவங்க மட்டும் அவங்க அவங்களா இருக்க கூடாது. இவர் பொம்மை மாதிரி தூக்கி மத்தவங்க கையிலே கொடுப்பார். நாம அப்படியே போயிடணும்’

‘அவன் உங்க ஃப்ரெண்ட்ன்னா நீங்க உங்க உயிரை கூட அவனுக்காக கொடுக்கலாம். ஆனா என்னை கொடுக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது’ அவள் கட்டை விரல் அவன் முன்னால் நீண்டது.

வாழ்கையில் முதல் முறையாக ஒரு ஆழ்ந்த மூச்சுடன் சற்றே தலை குனிந்தான் முகிலன்.

ஆனால் கொஞ்சமும் கோபம் எழவில்லை அவனுக்கு. மீரா இப்படி இருக்க வேண்டும் என்றுதானே அந்த கண்ணன் விரும்பினான். இன்று இப்படி தைரியமாக பேசும் மயூராவை பார்த்து முகிலனுக்கு கோபம் வருவதில் ஏதேனும் நியாயம் இருக்கிறதா என்ன ?

‘உண்மையிலேயே நீங்க என்னை மனசிலே எந்த இடத்திலே வெச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும் முகிலன். அது எனக்கு மட்டும்தான் தெரியும்’ மெல்ல தழைந்தது அவள் குரல்.

சட்டென விழிகளை நிமிர்த்தி அவள் கண்களுக்குள் மாறி மாறி பார்த்தான் முகிலன். மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு இருவரையும் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் வருண்.

‘தெரியலை. எந்த ஜென்மத்திலே யாரோட அன்பை நான் நிராகரிச்சேன்ன்னு தெரியலை. இந்த ஜென்மத்திலே நீங்க என்னை நெருங்க விட மாட்டேங்கறீங்க.’ குரல் இன்னுமாக தழைந்து போயிருந்தது.

‘அது என்ன வலின்னு இப்போதான் எனக்கு தெரியுது. அப்படி யாரையாவது நான் நிராகரிச்சு இருந்தா அவங்க என்னை மன்னிசிடுங்க’ அவள் வானத்தை பார்த்து சொல்ல இப்போது முகிலனின் கண்களில் ஏனென்றே தெரியாமல் மெல்ல மெல்ல நீர் சேர்ந்தது.

அவனை அப்படி பார்க்கவும் மனம் தாளவில்லைதான் மயூராவுக்கு. என்ன இருந்தாலும் முகிலன் முகிலனாக இருப்பதுதான் அழகு எனவும் தோன்றியது அதற்கு மேல் அங்கே நிற்கவும் தோன்றவில்லை அவளுக்கு.

‘ஷாட் ரெடி முகிலன்’ இது ஆக்ஷன் சீன். ஒண்ணும் பெரிய ரிஸ்க் இல்லை. நீங்க பைக்லே வேகமா முன்னாடி போற வண்டியை சேஸ் பண்ணனும். அவ்வளவுதான். நான் பின்னாடி வண்டியிலே கேமராவோட வருவேன்’ சொல்லிவிட்டு அவன் முகம் பார்க்காமல் நகர்ந்தாள் பெண்.
 
Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
கொஞ்ச நேரம் சிலையாக நின்றிருந்தவனை தோள் தொட்டு கலைத்தான் வருண்

‘அது அப்படிதான். திடீர் திடீர்னு பொங்கிடும். பழகிக்கோ’ மெல்ல சிரித்தான் வருண்.

பதில் பேசவில்லை முகிலன். அவனுக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை. வருண் முகத்தையே பார்த்திருந்தான் சில நொடிகள். பின்னர் அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

‘என்னடா?’ சில நொடிகள் கழித்து நிமிர்ந்தான் வருண்.

‘ஒண்ணுமில்லை சும்மா’ என்று அவன் தோள்களை அணைத்துக்கொண்டான் ‘டேக் கேர். பத்திரமா இருந்துக்கோ வருண்’

‘என்னடா திடீர்னு?’

‘இல்ல நீ ஊருக்கு போறேல்ல அதான் சொன்னேன். நான் டேக் போறேன் பை.’ அவன் முதுகில் செல்லமாய் தட்டிவிட்டு கை அசைத்து விட்டு நகர்ந்தான் முகிலன்.

அந்த மலைப்பாதையில் அவனுடைய பைக் தயாராக நின்றது. அதை இயக்கிக்கொண்டான். முன்னால் அவன் துரத்த போகும் வண்டி நின்றிருக்க பின்னால் ஒரு திறந்த வேனின் மீது காமெராவுடன் நின்றிருந்தாள் மயூரா.

ஒரு முறை திரும்பி மயூராவின் முகத்தை பார்த்துக்கொண்டான் முகிலன். அவளுக்கும் உள்ளுக்குள் மெலிதாக பிறந்தது வலி. ‘இத்தனை கடுமையாக அவனை பேசி இருக்கக்கூடாதோ?’

ஸ்டார்ட்... காமெரா... ஆக்ஷன்...

சர்ரென கிளம்பியது அவன் பைக். அவன் முன்னால் இருந்த வண்டியை துரத்திக்கொண்டு நகர அவனுக்கு பின்னால் அந்த திறந்த வண்டியில் காமெராவுடன் அவள். முழு வேகத்தில் மலைப்பாதையில் செல்ல ஆரம்பித்தன மூன்று வண்டிகளும்

சரியாக அந்த நேரத்தில் அங்கே வந்து இறங்கினர் அமுதனும், வெங்கட்ராமனும் அமுதனுக்கு இரண்டு நாட்களாக இருந்த பயத்தில் அவர் உடல் நிலையையும் மறந்து கிளம்பி வந்திருந்தார் ஊட்டிக்கு. வாழ்க்கையில் முதல் முறையாக மகனை கண்டு விட ஏங்கியது அவர் உள்ளம்.

ஊட்டிக்கு வந்து அவர் நேராக வந்தது வெங்கட்ராமன் இருக்கும் ஹோடேலுக்கு . இந்த இடத்தில் படப்பிடிப்பு என்று தெரிந்ததுமே இருவருமே கொஞ்சம் ஆடித்தான் போயினர்.

விழுந்தடித்துக்கொண்டு புறப்பட்டு அவர்கள் இருவரும் அங்கே வந்து நின்ற நொடியில் அவர்கள் இருவரிடமிருந்தும் வெளிப்பட்டது பெரிய அலறல் .

‘ம... யூ,,,ரா...’ வெங்கட்ராமன் அலற

‘மு... கிலாஆஆஆஆ.....’ அலறினார் அமுதன்.

கண் இமைக்கும் நேரத்தில் அங்கே என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை. அந்த வண்டியிலிருந்து கீழே விழுந்த மயூராவின் உடை வண்டியில் மாட்டிக்கொண்டு அவள் மலைப்பாதையில் வண்டியுடன் இழுத்து செல்லப்பட்டுக் கொண்டிருக்க

ஒட்டிக்கொண்டிருந்த பைக்கிலிருந்து தடுமாறி மலையிலிருந்து அந்த பள்ளத்தாக்கை நோக்கி கீழே விழுந்துக்கொண்டே இருந்தான் முகிலன். கீழே! கீழே! கீழே!

‘அம்மா’ என்று சொல்லவில்லை அவள்!

‘மு....கி...ல...ன்’ என்பதே மயூரா உச்சரித்த கடைசி வார்த்தையாக இருக்க

அவள் அலறல் \செவிகளில் விழுந்துக்கொண்டே இருக்க ‘ம...யூ...ரா.....’ கத்திக்கொண்டே கீழே சென்றுக்கொண்டிருந்தான் முகிலன்.

‘அய்யோ....’ முகிலா!!!!! மயூ,,,, ரா’ பதறிக்கொண்டு ஓடி வந்தான் வருண்.

ரத்த வெள்ளத்தில் கிடந்தாள் மயூரா. தலை பாறையில் மோதிக்கிடந்தது. மூச்சு இருக்கிறதா தெரியவில்லை. அவளை கைகளில் அள்ளிக்கொண்டான் அவன்.

‘நேற்றுதானே நீ தேவை இல்லை’ என்றேன். ‘ஐயோ... என் மகளே மயூரா என்னிடம் திரும்ப வந்துவிடு’ என வெங்கட்ராமன் கதற இப்போது அவர் கண்களுக்கு அங்கே மயூரா தெரியவில்லை. மாதவன் தெரிந்தான்.

‘இதே போல்தானே அவனும் வண்டியில் இழுத்து செல்லப்பட்டு வீழ்ந்து கிடந்தான்’ அவனும் ஒரு வகையில் என் ரத்தம்தானே. என் அக்கா பெற்ற பிள்ளைதானே? இறைவா. இது அவனுக்கு நான் செய்த பாவமா? கதற ஆரம்பித்தார் அவர்.

உடல் வலுவிழக்க கை கால்கள் செயலிழப்பது போல் இருக்க மயங்கி சரிந்திருந்தார் வெங்கட்ராமன்.

பெற்ற மகன் கண் முன்னே பள்ளத்தாக்கில் விழுவதை பார்த்த நிமிடத்தில் இத்தனை ஆண்டுகள் இவன் என் மகன் என்ற உணர்வே இல்லாத மனிதரின் ஒவ்வொரு அணுவும் கதறியது.

‘முகிலா... நான் தப்பு பண்ணிட்டேன் முகிலா... நான் நீ என்னை ஏதாவது செய்திடுவேன்னு நினைச்சேன். ஆனா உனக்கே இப்படி ஆகும்னு நினைக்கலை முகிலா. நான் சுயநலவாதி முகிலா. இத்தனை நாள் நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுதிட்டேன் முகிலா, நான் சுயநலவாதி. நீ திரும்பி என்கிட்டே வந்திடு முகிலா. நான் உன்னை பத்திரமா பார்த்துக்கறேன் முகிலா.’

மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தனர் மயூராவும், வெங்கட்ராமனும். இரவு ஆகியும் முகிலனின் உடல் கிடைத்த பாடில்லை. அவனது கைப்பேசியை கண்டுபிடிக்க முயன்றுக்கொண்டிருந்தனர் போலீசார்.

அமுதனின் அருகில் தளர்ந்து போய் அமர்ந்திருந்தான் வருண். ஆனால் கண்ணீர் மட்டும் வரவில்லை அவனுக்கு.

‘போய் விடுவாயாடா முகிலா? அப்படி என்னை விட்டு போய்விடுவாயாடா முகிலா? உனக்கு அதற்கு மனம் வருமா?

என்ன தோன்றியதோ ‘நீங்க வருத்தபடாதீங்க சார். முகிலனுக்கு எதுவும் ஆகலை’ உறுதியாக சொன்னான் வருண்.

‘எப்படி சொல்றே வருண்?’ விழிகள் விரிய கேட்டார் தந்தை.

‘என் மனசுக்கு தெரியுது சார். அவனுக்கு எதுவும் ஆகி இருந்தா இத்தனை நேரம் என் மூச்சு நின்னு போயிருக்கணும்’

‘இல்ல வருண். இல்ல. கண்ணன் நினைச்சதை செஞ்சிட்டான் வருண். செஞ்சிட்டான். நான் எதிர்பார்க்கலை. இதை நான் எதிர்பார்க்கலை. இதே இடத்திலே நீங்க ரெண்டு பேரும் கதறுவீங்கன்னு சொன்னான். எங்களை கதற வெச்சிட்டான்’ புலம்பிக்கொண்டே அமர்ந்திருந்தார் அவர்’ ‘நான் உனக்கு செஞ்ச தப்புக்கு பதில்தான்டா இது. அதுக்கு எனக்கு கடைச்ச தண்டனை.’

‘புரியலை சார். நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை’ என்றான் வருண்.

‘என் தம்பி கண்ணனையும் அவன் ஃப்ரெண்ட் மாதவனையும் பற்றி தெரியுமா உனக்கு?

‘தெரியும் சார் கேள்வி பட்டிருக்கேன்’

‘அவங்க ரெண்டு பேரும் இப்போ இல்லை. அவங்க ரெண்டு பேரும்தான் முகிலனும் நீயும். அன்னைக்கு என் கனவிலே வந்து இதைத்தான் சொன்னான் மாதவன். அந்த காலத்திலே அவனுக்கு நான் நிறைய தப்பு செய்திருக்கேன். அவமானப் படுத்தி இருக்கேன். அதுக்கு பரிகாரமாதான் நானே அறியாம எங்கேயோ இருந்த உன்னை நானே நடிகனா கொண்டு வந்தேன் போலிருக்கு. கடைசியிலே உன் வீட்டுக்கே நான் வந்து வாழ வேண்டிய நிலைமை கூட எனக்கு வந்தது. எல்லா வகையிலும் நான் செஞ்ச தப்புக்கு எல்லாம் பரிகாரம் செஞ்சுடணும் போராடினேன். ஆனா கண்ணன் என்னை மன்னிக்கலை. என் பையன் முகிலன் என்னை மன்னிக்லை’

‘சார் என்ன சார் நீங்க? இந்த காலத்திலே இதெல்லாம் நம்பறீங்களே சார்’ என்றபடி தலையை கைகளுக்குள் புதைத்துக்கொண்டான் வருண்.

‘இல்ல வருண். கணக்குத்தான். இந்த உலகத்திலே எல்லாமே கணக்குத்தான். எல்லார் கணக்கும் நேராகுற வரைக்கும் இந்த பூமி நிக்காது’ சொன்னார் அமுதன்.

மெல்ல நிமிர்ந்தான் வருண் ‘அது சரி அப்போ மயூரா? அவ யாரு?

‘அவ மீரா. கண்ணன் காதலிச்ச பொண்ணு’ சொன்னார் அமுதன். சில நொடிகள் மௌனமாய் இருந்தவன் மறுபடியும் அழுத்தமாக சொன்னான்

‘நீங்க சொல்ற படியே இருந்தாலும் எது எப்படி இருந்தாலும் அவன் திரும்பி வருவான். அவனுக்கு எதுவம் ஆகி இருக்காது சார்’

‘முகிலன் சார்’ கதறிக்கொண்டே ஓடி வந்தான் ஷ்யாம் ‘தலைவா’ என வருணின் தோளில் சாய்ந்து கதறினான் அவன்.

இங்கே வெங்கட்ராமனும், மயூராவும் ஐ.ஸி யூவில் இருந்தனர்.

‘அவருக்கு அந்த பெரிய அதிர்ச்சியிலே ஸ்ட்ரோக் வந்திருக்கு வருண்’ வெங்கட்ராமனை பற்றி சொன்னார் மருத்துவர். கால்கள் ரெண்டும் செயலிழந்திருக்கு. அவராலே நடக்க முடியாது’

பகீரென்றது அமுதனுக்கு. அவர் அன்று மாதவனை காலால் எட்டி உதைத்த காட்சி திரும்ப திரும்ப இவர் நினைவில் ஆடிக்கொண்டே இருந்தது.

உடல் முழுவதும் காயங்கள் நிறைந்திருக்க அவ்வப்போது அரை குறை நினைவு வந்து வந்து போய்க்கொண்டிருக்கும் மயூரா உச்சரித்துக்கொண்டிருந்த ஒரே வார்த்தை ‘மு..கி..ல..ன்’.

வெங்கட்ராமனுக்கும் ஓரளவு நினைவு திரும்பி இருந்தது. ‘மயூரா?’ அவரை பார்க்க வந்த வருணிடம் கேட்டார். இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கு இல்லை என அவரிடம் அவன் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை..

‘தனது கால் செயலிழந்து இருப்பதுவும் புரிந்தது ‘அவருக்கு. நீங்க பொதுவாவே கோபம் வந்தா எல்லாரையும் எட்டி உதைப்பீங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். இனிமேலாவது அதை குறைச்சுக்கோங்க. ஆண்டவன் நமக்கு காலை அதுக்காக கொடுக்கலை.‘ முகிலனின் வார்த்தைகள் இப்போது அவர் செவியில் அறைந்தன.
 
Vathsala Raghavan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
239
Reaction score
3,372
‘முகிலன்?” மெதுவாக கேட்டார் வெங்கட்ராமன்.

‘தெரியலை சார். அவன் இன்னும் கிடைக்கலை. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு’ சொன்னான் வருண்.

‘எங்கே அடித்தால் எங்கே யாருக்கு வலிக்கும் என இறைவன் வகுத்து வைத்த விதியிலிருந்து தப்பிக்க மூடியாமல் தளர்ந்து போயிருந்தனர் இரண்டு தந்தையினரும். பேசக்கூட சக்தி அற்றுப்போயிருந்தனர் மயூராவின் அம்மாவும், அண்ணனும்.

‘செய்தது பாவம் என்று உணர்ந்துவிட்டால் அந்த பாவத்துக்கு கொஞ்சமேனும் விமோசனம் கிடையாதா இறைவா? எதாவது மாயம் செய்து என் முகிலனை எனக்கு தர மாட்டாயா? கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார் அமுதன்.

இந்த சம்பவத்தில் தமிழகமே ஆடிப்போயிருந்தது. முகிலனது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி. எல்லாரும் கண்ணீரில் மிதந்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் உடல் கிடைக்காதது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருந்தது. அங்கங்கே அவனுக்காக பிரார்த்தனைகள் துவங்கி இருந்தன.

மறுநாள் அதிகாலை நேரம். இன்னும் இருள் விலகி இருக்கவில்லை. அமுதன் அழுது அழுது அரை உறக்கத்திற்கு சென்றிருந்தார்.

‘ஷ்யாம்; என்றான் வருண் ‘அவன் விழுந்த இடத்திலே போய் பார்த்திட்டு வரலாம் வரியா? நிச்சியமா அங்கே எங்கேயாவது மயக்கமா இருப்பான்.’

‘கண்டிப்பா தலைவா. போவோம்’ கிளம்பினர் இருவரும்.. அங்கே சென்று பார்த்ததில் மேலிருந்து அவன் விழுந்த இடத்தின் நேர் கீழே இருந்தது அந்த நீர்நிலை.

‘தலைவா., தலைவா கண்டிப்பா சாருக்கு ஒண்ணும் ஆகி இருக்காது தலைவா. அவர் நேரே தண்ணியிலே தான் விழுந்திருக்கணும் தலைவா. அவர் நீச்சல் ரொம்ப நல்லா அடிப்பார் தலைவா. எப்படியும் எழுந்து வந்திடுவார் தலைவா’ உற்சாக மிகுதியில் பைத்தியம் போல் கூவினான் ஷ்யாம்.

ஆனாலும் சில மணி நேரங்கள் அந்த இடம் முழுவதும் தேடித்தேடி தோற்றிருந்தனர் வருணும், ஷ்யாமும். முகிலனின் சுவடே தெரியவில்லை.

மறுபடியும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும். ஆனாலும் இன்னமும் சொல்லிக்கொண்டிருந்தான் வருண் ‘முகிலனுக்கு ஒண்ணும் ஆகி இருக்காதுடா’

அதே நேரத்தில் ஐ. சி. யூவில் படுத்திருந்த மயூராவின் செவிகளில் விழுந்தன அந்த வார்த்தைகள்

‘மயூரா. ஹேய்.. ரஸ்னா கொஞ்சம் கண்ணை திறந்து பாரேன்’ அந்த குரலில் அவள் உடல் மொத்தமும் குலுங்கி ஓய்ந்தது.

மறுபடியும் சிறிது நேரம் கழித்து அதே அழைப்பு ‘மயூரா. கண்ணை திறந்து பாரு. நீ என்கிட்டே ஆசைப்பட்டு கேட்டது இதுதானே. நான் உன்னை மயூரான்னு கூப்பிடனும்னுதானே. இதோ கூப்பிடறேன் பாரு. உனக்கு ஒண்ணுமில்லை கண்ணை திறந்து பாருடி ரஸ்னா’

சில நிமிடங்கள் கடக்க ஐ.சி. யூ விலிருந்து வருணிடம் ஓடி வந்தாள் அந்த நர்ஸ் ‘சார் மயூராவுக்கு முழுசா நினைவு திரும்பிடுச்சு. நல்லா கண்ணை திறந்து பார்க்குறாங்க’

திக்கு முக்காடிப்போனான் வருண். விழுந்தடித்துக்கொண்டு ஓடினான் உள்ளே. அவனை பார்த்ததும் புன்னகைத்தாள் மெல்ல. அவள் உச்சரித்த முதல் வார்த்தை ‘முகிலன்’

‘முகிலனா? அவன்..’ தடுமாறினான் வருண். அவளிடம் என்ன சொல்ல? எப்படி சொல்ல? குலை நடுங்கியது வருணுக்கு.

இல்லை அவனுக்கு எதுவும் ஆகி இருக்காது தன்னை தேற்றிக்கொண்டவன் மெல்ல சொன்னான் அவளிடம்.

‘முகிலன் நல்லா இருக்கான். ஒரு வேலையா கோவை வரைக்கும் போயிருக்கான். நாளைக்கு வந்திடுவான்.’ அந்த பதிலில் அவள் புருவங்கள் கேள்வியாய் சுருங்க அங்கே அருகிலிருந்து கேட்டது அந்த குரல்

ஆஹா....ன்’ முகிலன் கோவை போயிருக்கானா?

அந்த குரலில் வருணுக்குள் என்ன ஆனது என்று தனியாக சொல்ல வேண்டுமா என்ன? குரல் வந்த திசையில் ஆனந்தத்தின் மொத்த உருவமாய் திரும்பியவனின் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.

அங்கே மயூராவின் அடுத்த படுக்கையில் ஆயாசமாக படுத்திருந்தான் முகிலன்.

‘டேய்... மு...கி... லா!!!’ ஐ.ஸி.யூ என மறந்து கூவினான் வருண்.

‘டேய்... டேய்.. கையிலே ட்ரிப்ஸ் ஏறுதுடா டேய்...’ என்று முகிலன் கத்தியதை கூட கண்டுக்கொள்ளாமல் அவனை இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான் நண்பன். அவன் கண்களில் வெள்ளம்.

‘என்னடா முகிலா இப்படி பயமுறுதிட்டே?’ உனக்கு என்னமோ ஏதோன்னு நான் பைத்தியக்காரன் மாதிரி.... தெருத்தெருவா சுத்திட்டு வரேண்டா... நீ இங்கே ஒய்யாரமா படுத்திருக்கே... எங்கேடா போனே??? உனக்கு ஒண்ணுமில்லையே... ரொம்ப பயந்துட்டேன்டா நான்... நீ.. நல்லா இருக்கே இல்லே... உனக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுடா.... நீ என் முகிலன்டா...’ அவனை விட்டு தன்னை விலக்காமல் கதறும் நண்பனை ஆதரவாக முதுகில் வருடிக்கொடுத்தான் முகிலன். இதை ரசிப்பான புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மயூரா.

சில நிமிடங்கள் கழித்து வருண் சுதாரித்த பிறகு நடந்ததை சொன்னான் முகிலன் ‘மலை மேலிருந்து தண்ணியிலே விழுந்துதுட்டேன் வருண். எப்படியோ நீச்சல் அடிச்சு ஏதோ ஒரு கரைக்கு போயிட்டேன். அங்கே போய் மயக்கமா கிடந்தேன் போலிருக்கு. அங்கே ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை. போன் தண்ணிக்குள்ளே போயிடுச்சு. அதுக்கு அப்புறம் ராத்திரி ரெண்டு மணிக்கு என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்காங்க. இப்போதான் கண் திறந்து பார்த்தா பக்கத்திலே நம்ம மயூரா வெங்கட்ராமன் படுத்திருக்காங்க..........’ அவன் அவளை பார்த்தபடியே கண் சிமிட்ட

உடல் முழுதும் வலியில் அழுந்தியபோதிலும் கஷ்டப்பட்டு அவனை முறைத்துவைத்தாள் மயூரா.

‘முகிலன் சார்..’ கூவிய படியே ஆனந்த கடலில் மூழ்கினான் அவனை வந்து பார்த்த ஷ்யாம்.

அருமையான பொக்கிஷத்தை கைக்கெட்டாத தூரத்தில் தொலைத்துவிட்டேன் என்று கதறிக்கொண்டிருந்த வேளையில், இதோ தந்தேன். வைத்துக்கொள் என இறைவன் அதை திருப்பி தந்தால் அங்கே கண்ணீர் ஒன்றே மொழியாகுமா? முகிலனின் மடியில் படுத்துக்கொண்டு அரை மணி நேரம் அழுது தீர்த்தார் அமுதன்.

இது நடந்து முடிந்து சரியாக இரண்டு மாதங்கள் கடந்திருந்தன. சென்னையில் களை கட்டி இருந்தது வெங்கட்ராமனின் வீடும் அதற்கு அருகில் இருந்த அமுதனின் மகாலிங்கபபுரம் பங்களாவும்.

தேவதையாய் தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்தாள் மயூரா. .புது மாப்பிள்ளையின் தோரணையில் கம்பீரமாக வலம் வந்துக்கொண்டிருந்தான் முகிலன். சினிமாக்காரர்களும் பத்திரிக்கையாளர்களும் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தனர் அங்கே.

மகழ்ச்சி, ஆனந்தம், சந்தோஷம் என்றெல்லாம் வார்த்தையில் வர்ணித்துவிட முடியாத ஒரு பரவச உணர்வில் இருந்தாள் மயூரா. அவளது வாழ்கையில் இந்த நொடி இவ்வளவு சீக்கிரம் வருமென அவள் நினைக்கவில்லை. இவனுடன் எத்தனை போராட வேண்டி இருக்குமோ இதற்கெல்லாம் எனதான் நினைத்துக்கொண்டே இருந்தாள் அவள்.

சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார் வெங்கட்ராமன். அவரை இந்த நிலையில் பார்த்த பின்பு சத்தியமாய் நடந்தது எதையுமே நினைக்க தோன்றவில்லை முகிலனுக்கு. வாழ்கை எத்தனை நிலையற்றது என்பது மட்டும் தெளிவாக புரிந்திருந்தது அவனுக்கு.

சுற்றி இருக்கும் எல்லோர் மனமும் மகிழ்ச்சியில் நிரம்பி இருக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க மனம் நிறைந்த புன்னகையுடன் மாங்கல்யத்தை ஏற்றுக்கொண்டாள் அவன் ரஸ்னா.

ஜென்ம ஜென்மமாக வந்த கனவுகளும் ஏக்கங்களும் கைகூடி விட்ட ஆனந்தத்தில் இருவர் கண்களிலும் கண்ணீர். உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தான் நம் மாதவன், இல்லை இல்லை நம் வருண். இதை காணத்தானே அவனும் ஜென்ம ஜென்மமாய் காத்திருந்தான்.

அவளது அப்பா, அம்மா, அண்ணன் என அனைவரது கண்களும் நிரம்பியே விட்டிருந்தன. இமைக்க கூட விரும்பாமல் மேடையையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் அமுதன். தனது அன்பு கணவனின் கைப்பற்றி அக்னியை வலம் வந்தாள் மயூரா.

‘வருண் சார்...’ அப்போது அங்கே ஓடி வந்து அழைத்தாள் மயூராவின் உதவி இயக்குனர் வித்யா.

‘சூப்பர் ஸ்டார் வந்திருக்கார் சார்.. அவரை வெல்கம் பண்ண வரீங்களா?’ என்றாள் அவள் அவசரமாக.

‘எஸ். பேபி இதோ வந்திட்டேன்’ சொல்லிவிட்டு அவசரமாக வாசல் நோக்கி ஓடினான் வருண். அந்த பேபியை அவன் உச்சரித்ததை அவனே அறிந்திருக்கவில்லை. சில மாதங்கள் கழித்து அவளே அவன் பேபி ஆகப்போகிறாள் என்பதை அவளும் அறிந்திருக்கவில்லை.

இரவின் தனிமை

அந்த மகாலிங்கபுரம் வீட்டு மொட்டை மாடியில் முகிலன் மார்பில் படுத்துக்கிடந்தாள் மயூரா.

‘இந்த உலகத்திலேயே மொட்டை மாடியிலே ஃபரஸ்ட் நைட் கொண்டாடுற ஆளு நீங்கதான்’ அவன் அணைப்பில் கசங்கி, முத்தத்தில் கரைந்துக்கொண்டே சொன்னாள் மயூரா. ‘பாருங்க நிலா பார்க்குது’.

அவள் வார்த்தைகளில் வெட்கத்துடன் சிரித்து மேகங்களின் பின்னால் ஒளிந்துக்கொண்டது அவர்கள் வருத்தங்கள், சோகங்கள் இப்போது மகிழ்ச்சி என எல்லாவற்றக்கும் சாட்சியாக நிற்கும் அந்த வெண்ணிலவு.

மீராவின் கண்ணன் மீராவிடமே

எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே

அவளது கைப்பேசி இனிமையாய் இசைத்துக்கொண்டிருந்தது.

நிறைந்தது
 
Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
கணக்கு தான் எல்லாமே கணக்குதான்.எங்கே அடித்தால் யாருக்கு வலிக்கும் இறைவன் கணக்கு.எப்படிபட்ட வரிகள்.அழகான நிறைவு.மாதவனை நினைத்தால் மெலிதான சோகம்.
 
Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
ப்ரியங்களுடன் முகிலனை
படைத்த ப்ரிய வத்சலாவை
பாராட்ட வார்த்தைகள் இல்லை ....

வாழ்த்துகள் V V ....
V FOR VICTORY. (y)(y)(y):)
 
N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore

முற்பிறவி இப்பிறவி நல்ல இணைப்பு சுவாரஸ்த்துடன்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top