• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Rudrangi - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
~12~

சுலபமாக விவாகரத்தைப் பற்றி பேசிபவளின் கரத்தை இறுக்கமாய் பற்றினான் ரவி. ‘என்னைவிட்டு போய்டுவியா..?’ கண்களில் கேள்வி தாங்கி ருத்ரமூர்த்தியாய் அவன் நிற்க..

புதிதாய் பேசிடும் அவனது கண்களில் பாஷை புரியவில்லை என்றாலும் காரணம் தனது பிரிவு தான் என்பதை சரியாய் கண்டு கொண்டாள் அப்ஷரா.

அவனது பிடி கூட கூட முகம் வலியில் கசங்கி, தானாய் விழிகள் கண்ணீரைச் சிந்தியது.

அவளது அழுகையை தாங்க முடியாதவன் போல, இறுக்கமாய் பிடித்திருந்த கரங்களை தன்னை நோக்கி இழுத்தவனுக்கு இப்போது கூட அவளுக்கு வலிக்கும் என்பது உரைக்கவில்லை,

“என்ன டி என்னை விட்டு போயிடுவியா..? அதுவும் டிவோர்ஸ் வாங்கிட்டு..?” சூடான வார்த்தைகள் தான் ஆனால் தெளிவாய் வந்தது.

அவனது கேள்வி புரிந்தாலும், இவன் தானே தன்னை வேண்டாம் என்றான் என்ற எண்ணம் தோன்ற அதையே அவளது முகமும் பிரதிபலித்தது.

புரியாத அவளின் பார்வையைப் பார்த்தவன், தனது உணர்வைக் கூட அவளால் புரிந்து கொள்ள முடியவில்லையா..?

என்னையும் எனது உணர்வுகளையும் கூட புரிந்து கொள்ளாமல் இவள் என்ன காதல் செய்தாள்..? அநியாயத்திற்கு மனம் பாலிய காலத்தில் பார்த்த படங்களுக்கு அழைத்து சென்றது.

அவளது கண்களின் பாஷையும் முகத்தின் பிரதிபலிப்பும் அவனால் சுலபமாய் கண்டு கொள்ள முடியும்.

இப்போது அவளது வேதனை கூட அவனுக்குத் தெரிந்தது தான் ஆனால் பிடித்தக் கையை விடுவது தான் கஷ்டமாகயிருந்தது.

சில உணர்வுகளை மனம் உணர்ந்தாலும் அது சரியா என எதிர்சாரியின் வாய் வார்த்தையில் இருந்து வரும் பொழுது தான் அது சரியாகவிருக்கும் அது தான் அவளுக்கு வேண்டியது.

இவனின் கோபத்தின் அளவு கூடும் போது கைகளின் இறுக்கமும் தாராளமாய் கூட அப்ஷரா வாயடைத்து போய்விட்டாள். ரவியின் கோபத்தைப் பார்த்து ஞானவேலுக்கு திருப்தியாய் இருக்க, இனி தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என நினைத்தவர் அமைதியாய் அறை நோக்கி நகர, அதையே நினைத்திருந்த ருத்ராவும் உள்ளே சென்றுவிட்டாள்.

“சொல்லு டி..” ஆவென வாய்பிளந்து தன்னைப் பார்க்கும் அப்ஷராவின் முகத்தில் பார்வையை நிலைக்க விட்டவன் அதிகாரமாய் கேட்க,

கையை அவனிடமிருந்து விடுவித்து கொள்ள போராடினாளே தவிர, வாயில் இருந்து வார்த்தையை கொஞ்சமும் உதிர்க்க வில்லை.

அவளின் வலியை உணர்ந்தவன், கைகளைப் பிடித்து தர தரவென இழுத்துக் கொண்டு அறையினுள் நுழைய, அவனது அறைக்குள் நுழைகிறோம் என்ற உணர்வு கூட அவளுக்கு இல்லை.

கட்டிலின் அருகே வந்ததும் பிடித்திருந்த கையை சுண்டி இழுக்க, அவனின் இந்த திடீர் செய்கையை எதிர்பார்க்காதவள் அவன் மேல் சாய்ந்து தன்னை நிலை நிறுத்தி கொள்ள, கோபத்தில் இருந்தவனுக்கு அவளது நெருக்கம் உரைத்தாலும் அதைப் பொருட் படுத்தவில்லை.

“உன்னைத் தானே கேட்குறேன்..” அழுத்தமாய் அவன் கேட்க

தன்னை வேண்டாம் என்று சொல்லி இவ்வளவு தூரம் பாடாய் படுத்திவிட்டு இப்போது தன்னையே குற்றம் சொல்கிறானே என்ற கோபம்..

“என்ன சொல்லனும்..ம்ம்...சொல்லுங்க..” என்றவளின் கைகள் இப்போது அவனது கரத்தைப் பற்றியிருந்தது.

அவளுக்கு குறையாத அதே கோபத்தோடு, “என்னைவிட்டு போயிடுவியா டி..?” என்க

“நானா போறேன்னு சொன்னேன்..என்னை ஒவ்வொரு தடவையும் போ போன்னு துரத்துறது நீங்களா நானா..? சொல்லுங்க...என்னால முடியல…” ஒட்டு மொத்த வருத்தமும் நெஞ்சை அடைக்க, நெஞ்சைப் பிடித்து கத்தி அழுதவளின் இத்தனை நாள் துயரம் அவனையும் நிலை குலைய வைத்தது.

“சாரி டி..ப்ளீஸ்..” இதுவரை கேட்டிராத மன்னிப்பு அவனின் உதட்டில் இருந்து வெளிவர இன்னுமே அவன் செய்து வைத்திருக்கும் சொதப்பல்கள் எதுவும் அவனுக்குத் தெரியவில்லை.

வெகு நேரம் அழுதாள், அவனின் சமாதானம் அவளது காதில் ஏறவில்லை..அவனுக்கும் அவளது ஆழுகையை நிறுத்தும் வகை புரியவில்லை..முன் சாமத்தைக் கடந்தும் அவளது அழுகை மட்டுப்படாமல் இருக்கவும், தனது நெஞ்சில் முகம் புதைத்து இருந்தவளை தன்னிடம் இருந்து பிரித்தவன், அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

கன்னத்தில் விழுந்த அடியில் சிறிது சுயநிலை அடைந்தவளின் அழுகை கேவலாய் மாற, அவளின் பார்வையோ கோபத்தை தாங்கியிருந்தது.

அவளை அழுத்தமாய் ஒருமுறை பார்த்தவனின் மனதில், இவளிடம் இப்போது எதுவும் பேச வேண்டாம் என்ற எண்ணம் எழ அறையின் கதவை சாவி கொண்டு பூட்டியவன், சாவியை சட்டை பையில் போட்டுக் கொண்டு கட்டிலில் படுத்துவிட்டான்.

அவனது செயலை விழி விரித்து பார்த்தவளுக்கு அவன் தன்னிடம் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதே முதன்மையாய் நிற்க, அவனையே பார்த்திருந்தவளின் உறைந்த பார்வையை கடிகாரத்தின் சத்தம் நினைவுக்கு மீட்டு வர, இப்போது பசி வயிற்றைக் கிள்ளியது.

அழுதது வேறு சோர்வைத் தர, எங்கே மயங்கிடுவோமோ? எனவும் அவனது அருகில் சென்றாள்..

அவனது அருகே அமர்ந்து தண்ணீர் ஜக்கை எடுக்க, காலி பாத்திரம் சிரித்தது. காலையில் இருந்த குழப்பத்தில் உண்ணாமல் விட்டது தவறு எண்ணும் போது அவளது பார்வை குப்புற படுத்திருந்தவனின் மேல் பதிய, அவனும் அவளைத் தான் லேசாக கண்களை திறந்து நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.

அவன் தூங்கி விட்டான் என நினைத்தவள், அவனது பாக்கெட்டில் இருந்து சாவியை எடுக்கும் பொருட்டு அவனை திருப்பி படுக்க வைக்க நினைக்க மட்டும் தான் முடிந்தது.

அவளால் கொஞ்சமும் அசைக்க முடியவில்லை..

அவளது முயற்சிகள் அவனது இதழில் குறுநகையை தோற்றுவித்தாலும், அதை மறைத்தவன், இன்னும் அழுத்தமாய் மெத்தையில் தன்னை புதைத்துக் கொள்ள, அவளுக்கு அவனை அசைக்க இன்னும் சிரமமாய் இருந்தது.

பல பொஷிசனில் அமர்ந்து அவனை திருப்ப நினைக்க முடியவேயில்லை..வேகமாய் எழுந்தவள் கையை அங்கும் இங்கும் திருப்பி, வெறும் தரையில் தண்டால் எடுத்தது மட்டுமல்லாது தலையனையால் பழுதூக்கி தன்னை தயார் படுத்திக் கொண்டவள் அவனை இப்போது திருப்ப முயற்சிக்க.

இப்போது அவனே கொஞ்சம் விட்டுக் கொடுத்து சாய்ந்து படுக்க, அந்த சின்ன இடைவேளையை பயன்படுத்தி அவனது சட்டை பையினுள் கையைவிட, மிருதுவான அவளது கரங்களின் ஸ்பரிசம் சில நொடிகள் சென்றே அவனது கருத்தில் பதிந்தது.

வலது புற நெஞ்சில் உராய்ந்த அவளது கைகள் மெல்ல மெல்ல இடது புற சட்டை பை பக்கம் இடம்பெயர, தன்னிலை அறியாமல் அவளது கரத்தை இறுகப் பற்றித் திரும்பி படுக்க, அவனது திடீர் செய்கையை எதிர்பாராதவள் அவனது நெஞ்சில் புகம் புதைய விழுந்தாள்.

தன் மேல் விழுந்தவளை தூக்கத்திலே இறுகப் பற்றுவதைப் போல் தன்னுடன் சேர்த்து இறுக்கியவன், அந்நொடியை ஆழ்ந்து அனுபவிக்க அவளோ இவனைவிட்டு விலகும் முயற்சியில் இறங்கியிருந்தாள்.

தன்மேல் நெளிந்து கொண்டிருப்பதில் எரிச்சல் கொண்டவன், “ச்சூ..” சன்னமாய் எரிச்சல் பட, அவனது குரல் காதில் விழவும் அமைதியாய் படுத்து கொண்டாள் அப்ஷரா.

அவளது அமைதியை உணர்ந்தவன், “எதுக்கு டி என்னைத் தூங்க விடமாட்டிக்க..?”

அதட்டலான அவனது கேள்வியில் வேகமாய் திரும்பி அவனது முகம் பார்க்க, அவனோ கண்களை மூடியிருந்தான், “இவன் பேசுனானா இல்ல என் மனப்பிராந்தியா..?” சிந்திக்கும் போதே

“சொல்லு டி..” என்றவன் கண்களை திறந்து வைக்க

திறந்த அவனது விழிகளை பார்த்திருந்தவளுக்கு முன்னேரம் வரை நிகழ்ந்திருந்த பிரச்சனைகள் மறந்திருந்திருக்க நீள்விழிகளை மேலும் பெரியதாக்கி அவனைப் பார்த்தாள்.

அவளின் விழிகளை தனது வேல் விழி கொண்டு பார்த்தவன், “என்ன..?” என்பது போல் புருவத்தை ஏற்றியிறக்க

“எனக்கு பசிக்குது..” என்றாள் எங்கோ பார்த்து

“அதை என் முகத்தைப் பார்த்து சொல்லு டி..” சின்ன அதட்டலுடன் அவன் சொல்ல,

அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவளுக்கு இந்நேரம் வரை அடக்கி வைத்திருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர மறுபடியும் தலையை குனிந்து கொண்டாள்.

*******

ருத்ராவின் தயக்கத்தை சைட் மிரர் வழியே கண்டவனுக்கு அவளது தயக்கம் ஒருவித ஆர்வத்தைக் கொடுக்க, “என்னது ஒண்ணுமில்லை..” எனத் தன்னை மீறி ஊக்குவித்தான்.

அந்த ஆர்வத்தை காதல் என்ற வட்டத்திலோ காமம் என்ற இடத்திலோ வைத்து பார்த்தால் அது தவறு. ஆணாய் பார்த்து வளர்ந்த சிவாவிடம் பெண்மையின் பிரதிபலிப்பினைக் கண்ட ஆர்வம் மட்டுமே ராக்கியிடம் இருந்தது. அவனது மென்மையான நளினம் கலந்த தயக்கம் அவனுக்கு ஒருவித ஆர்வத்தையும் ரசனையையும் விட்டுச் சென்றது.

எதிர்பாலினத்தவரைப் பற்றி அறியும் ஆவலாய் கூட இருக்கலாமோ?!

ராக்கியின் கேள்வியில் சிவா தனது தலையை நீட்டிப் பார்க்க, ராக்கியும் அவளைத் தான் பார்த்து கொண்டிருந்தான்.

அவனது கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதியாய் சிவா இருந்துவிட, அவர்களது தெரு முக்கில் சிவாவை இறக்கிவிட்டவன்.

“சிவா...உண்மையா ஒன்னு சொல்லவா…?” என்றவனை கேள்வியாய் அவள் நோக்க

“ரொம்ப அழகாயிருக்க..” என்றான் சிநேக சிரிப்புடன்

அவனது புகழ்சிக்கு அழகாய் வெட்கப்பட்டவள், “தாங்க்ஸ்..” என்க

“ப்ரெண்ட்ஸ்..” என்றான் கைகளை அவள் முன் நீட்டி

பெண்மையின் உணர்வு அவன் அழகாய் இருக்கிறாய் என்பதில் வெட்கம் கொள்ள, தன்னையும் மதித்து அவன் பேசுயது சிவாவின் நெஞ்சில் சிறு துளியாய் விழுந்திருந்தது.

நீட்டிய அவனது கரத்தையும் அவள் சிநேகமாய் பற்றிக் குலுக்க, சுற்றத்தாரின் பார்வை கேவலமாய் அவ்விருவரையும் தீண்டிச் சென்றது.

அத்தெருவில் அவள் நடந்து வீட்டிற்குள் நுழைவதற்குள் எதிர்பட்டோர் எல்லாம் ஒருமாதிரியாக பார்த்துச் செல்ல, சிவா அவர்களின் பார்வையை கண்டாலும் இப்போதெல்லாம் அதை மனதில் வைத்து புதைக்க கற்றிருந்தாள்.

வீட்டிற்குள் நுழைந்த சிவாவிடம் பரீட்சை பற்றி கேட்டறிந்து கொண்ட ராதையிடம் அனைத்தையும் சொன்னவள் ஆட்டோ காரனிடம் நடந்த பிரச்சனை மறைக்க உடன் ராக்கியின் பேச்சையும் மறைத்து விட்டாள்.

இதைச் சொன்னால் எங்கே படிக்க வைக்க மாட்டார்களோ என்ற பயமும் அம்மா அழுவார்கள் என்ற கவலையிலும் அவள் மறைக்க.

காலம் மறைக்காமல் இருக்குமா..?

அக்கம் பக்கத்தினர் ஒன்றை ஒன்பதாக மாற்றி துரும்பையும் எறும்பாய் மாற்றி ராக்கியின் தாய் காதுக்குள் போட்டு வைக்க

அவருக்கோ அருவெருப்பில் மனமும் உடலும் கசந்தது.

இரவு தாமதமாய் வீட்டிற்கு வந்த ராக்கியிடம் அவனது தாய் விசயத்தை போட்டு உடைக்க, அன்னையின் குணம் தெரிந்தவன்

“நான் ஏன் மா அவ கிட்ட பேச போறேன்..” என்றான் விட்டேற்றியாக

மகனது குரலில் உண்மை என நம்பியவர், வேறு வேலைப் பார்க்கச் சென்றுவிட்டாலும் மகனை கண்காணிக்க துவங்கினார்.

கருப்பு பக்கங்கள் ஆரம்பம்.. முடிந்த அளவிற்கு உண்மையை உரக்கச் சொல்லுவோம்..

ருத்ராங்கி வருவாள்
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
சூப்பர் பவி.. ரொம்ப நாள் வெயிட் பண்ண வச்சுட்டா.. அழகான அம்சமான எபி..
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
superb epi sis adada ravikiu apsara piriya poranavudane kobam kannu mannu theriyama varuthu..............nalla than irukku. rakhi& sivavin natpai kalanka patuthapokirarkala .........avanai sutri irukkum makkal......... pavam siva antha pinchu nenjam ethunai vedhanai thangumo:(:(:(:(
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top