Rudrangi - 21(2) Next V.Short Epi

Aadhiraa

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
Hi makkas..!

Here comes the next...(y)21(2)

தொலைத் தொடர்பு வளர்ந்து வேரூன்றி நிற்கும் இந்நேரத்தில் செய்திகள் மக்களின் மத்தியில் வேகமாய் நோயைப் போல பரவியிருக்க, தமிழ்நாட்டில் இருக்கும் சில அரவாணிகள் அரவான் மகிழ் மையத்தை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தோள் கொடுக்க நின்றனர்..

அரவான் மகிழ் மையம் தற்சமயமாக மூடப்பட்டாலும், ரவிவர்மன் தனது ஆள் பலத்தை முழுவதும் செலுத்தி கைதில் இருந்து அனைவரையும் விடுவிக்க, என்ன முயன்றும் கோமுவின் நீதிமன்ற முறையீடைத் தடுக்க முடியவில்லை..

வெளியூருக்கு வேலைக்குச் சென்றிருந்த ராக்கி விஷயம் அறிந்து அன்னையிடம் சண்டையிட அவனது அதட்டல் உருட்டல்களைக் கண்டு கொள்ளாதவர்,

“இவனால தான நீ கல்யாணம் வேண்டாம்னு வாழ்க்கைய இழந்து நிக்கிற..?!” என்பதிலே வந்து நின்றார்..

நம்பகத்தன்மை என்பது கொஞ்சமும் இல்லாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே என நிற்கும் அன்னையை கொன்றால் என்ன? என ஒருமனம் இடித்த போதும், பொறுமையை இழுத்து பிடித்தவன் இப்போது ரவி வர்மனுக்கு தோள் கொடுக்க வந்துவிட்டான்..

ருத்ராவிற்கு எல்லாம் சூனியமாகத் தான் தெரிந்தது...ஊரில் உள்ள அனைவரில் வாயிலும் அரைப்பட்டு தனது குடும்பம் சீரழிந்து நிற்க, ஊடகங்களில் இருந்து பேட்டிக்கு போட்டி போட்டு மேலும் அவளைத் திணற வைத்து இன்று தீர்ப்பு நாளுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருந்தனர்..

அமர்வு நீதிமன்றத்தில் ஞானவேல் ஒரு பார்வையாளராக படியேற, குற்றவாளி கூண்டில் ரவிவர்மன் நின்றிருந்தான், அவனுக்கு பின் போட்டிருந்த இருக்கையில் ருத்ராங்கியும் அவளைச் சார்ந்தவர்களும் நிற்க, கேஸை எடுத்து வாதாட அப்ஷரா வக்கீல் உடையில் நின்றாள்..

கோமு பார்வையாளர் இடத்தில் நிற்க, கேஸ் தொடங்கியதும் ரவிவர்மன் சார்பில் அந்த மகிழ் மையம் தொடர்பான அனைத்து டாக்குமென்ட்டுகளும் சப்மிட் செய்யப்பட்டது..

ருத்ராவின் பேரில் விபச்சார வழக்கு மட்டுமல்லாது, ராக்கியை அவள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைப் போல ஆட்கொணர்வு மனுவும் கொடுக்கப்பட்டிருக்க, அடுத்தடுத்த விசாரணையில் திசை மாறி, ருத்ராவிற்கும் ராக்கிக்கும் என்ன உறவு என்பதில் வந்து நின்றது..

ஆயிரம் தான் ருத்ரா பிறப்பால் ஆணாய் இருந்தாலும், மென்மையான பெண்மை குணத்தைக் கொண்டவளுக்கு கேட்கப்பட்ட கேள்விகள் எதுவும் உவப்பானதாய் இல்லை என்பது அவளது முகச்சுழிப்பில் தெரிய,

இப்போது நீதிபதிகளின் முன்னே வந்த ராக்கி, “சார், நான் என்னோட தரப்புல சில விஷயங்களை பேசலாமா..?” என்றான் தெளிவாய்..

“ம்...யூ மே ப்ரொசிட்..”

“தாங்க் யூ சார்...முதல்ல ஆட்கொணர்வு மனு எதுக்கு கொடுத்தாங்க எனக்குத் தெரியல பிகாஸ் நேத்து ஈவ்னிங் வரைக்கு நான் அவங்க கூட அவங்க வீட்டுல தான் இருந்தேன்..

சரி போகட்டும்..எனக்கு சிவா...சாரி ருத்ராங்கிக்கும் என்ன உறவுன்னு கேக்குறீங்க...என்னோட தோழன் ரவி வர்மனோட தங்கை தான் ருத்ராங்கி..அவங்க ஒரு ட்ரான்ஸ் ஜென்டர்..நான் அவங்களை கல்யாணம் பண்ணிக்க போறேன்னே வச்சிக்கோங்க..அது என்னோட தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அதை இங்க சொல்லனும்னு எனக்கு அவசியம் இருப்பதா தெரியல சார்..

லீகலா சொல்லனும்னா இப்போ திருநங்கைகள் ஒரு ஆணைத் திருமணம் பண்ணுறது தப்பில்லைனு சொல்லும் போது எங்க ரெண்டும் பேருக்கும் இடையில இருக்கிற உறவு..?” என்றவன் நிறுத்தி ரவி வர்மனைப் பார்க்க, மொத்தக் கூட்டமும் அவனைத் தான் திகைத்து பார்த்துக் கொண்டிருந்தது..
 

Advertisements

Top