• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Rudrangi - 21(4) Final Epi

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
ஹாய் மக்காஸ்..

இவ்ளோ நாள் நான் இதை முடிச்சதா நினைச்சுட்டேன்.. I am really sorry.. இப்போ பிரியாதுரை அவர்களோட கமென்ட் பார்த்த அப்புறம் தான் கவனிச்சேன்..என்னை மன்னித்து கொள்ளுங்கள்..




21(4)

ரவிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ருத்ராவிற்கும் ராக்கியின் பேச்சு கேட்டிருக்கு அனைவரும் அதிர்ந்து நின்ற அந்த ஒரு நொடியில் ருத்ராவின் கை அவனது கன்னத்தை பதம் பார்த்தது..

ருத்ரா அடித்த சத்தத்தில் கோமதி ஏதோ சொல்ல வர, அவரை முந்திக் கொண்டு வாயைத் திறந்த ருத்ரா, “உங்க கிட்டயிருந்து இத கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..கடைசில நீங்களும் உங்க அம்மா சொன்னத நிஜமாக்கனும்னு நினைச்சுட்டிங்க போல..” என்றவளிடம் மறுத்து பேச ராக்கி வர,
கையை உயர்த்தி அவனைத் தடுத்தவள், “எனக்கு என் வாழ்க்கைய வாழ தெரியும்...இப்போ கூட உங்க பண்ணுன தப்பை சரி பண்ண தான் என்னைக் கல்… சாரி..இந்தப் பேச்சு வந்ததுன்னு எனக்குத் தெரியும்...உங்க பண்ணுன தப்பை எப்பவுமே சரி பண்ண முடியாது அதுக்காக நான் அவங்களை பழிவாங்க போறேன் நினைச்சா அது தப்பு… உங்க அம்மாவால எவ்வளவோ கெட்டது நடந்திருந்தாலும் என் வாழ்க்கைய என்னால தனியா கொண்டு போற துணிச்சல உங்க அம்மா தான் எனக்கு கொடுத்தாங்க..”


“வெயிட்..இன்னும் நான் பேசி முடிக்கல...அதுக்காக உங்க அம்மாவையோ என் வாழ்க்கையில உங்களால நடந்த சில பிரச்சனைகளை மன்னிக்கும் அளவுக்கு நான் தியாகி கிடையாது பாருங்க..இனி எனக்கு ஏதாவது உதவி பண்ணுறதா இருந்தா தயவு செஞ்சி என் மூஞ்சில முழிச்சிடாதீங்க..”என்றவள் இருக் கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்டாள்..

ருத்ராவின் பேச்சில் கோமதிக்கே என்னவோ போல் ஆகிவிட, அவர் பேச விழையும் போது அவரைப் பார்த்து திரும்பியவள், “ஆன்ட்டி, என்னை எப்பவும் நீங்க சொல்லுவீங்களே ‘****** ******’னு..” என்றவள் ஆரம்பிக்கும் போதே ரவி அவளைத் தடுக்க முயல,

“இரு சர்..ஆன்ட்டி கிட்டகொஞ்சம் பேசுறேன்..” என அவனது கையை தனது தோளில் இருந்து விலக்கி கைக்குள் வைத்து கொண்டு,

“ஆங்..என்ன சொன்னேன்..ம்…’******’ அது தான.. உண்மைய சொல்லனும்னு இதை நீங்க முன்ன சொல்லும் போது எல்லாம் எனக்கு ரொம்ப வலிக்கும்..ஆனா இப்போ யோசிச்சு பார்க்கும் போது என்னோட இந்த சேன்ஜ்’அ சர்வா, அப்பா யாருமே இப்போ வரைக்கும் ஏத்துக்க முடியாதபட்சத்துல நீங்க மட்டும் தான் அக்ஷ்ப்ட் பண்ணிருக்கீங்க இல்ல...உங்களால என் குடும்பம் சீரழிஞ்சுட்டுன்னு சொல்றத விட, என்னோட என் பிறப்பால மட்டும் தான் என் குடும்பம் சீரழிஞ்சிட்டுன்னு தான சொல்லனும்… நோ நோ அப்படியும் சொல்ல கூடாது..இந்த சொசைட்டிய தான் தப்பு சொல்லனும்...எவ்வளவோ தப்பு செய்ற ஆண் பெண்ணை இந்த சமூதாயம் ஏத்துக்க முடியும் போது உடல் ஊனத்தை இந்த சமூகம் ஏத்துக்க முடியும் போது பாலுணர்வு ஊனத்தை மட்டும் எதனால ஏத்துக்காம போச்சு...” எனப் பேசிக் கொண்டே வந்தவள் ஒரு கட்டத்தில் நிறுத்தி ரவி வர்மனிடம் திரும்பி,

“சர்… எங்களுக்காக போராட யாரும் இல்ல...இனி எங்களுக்கான முன்னேற்றத்தை நாங்க தான் பார்த்துக்கனும் இல்லையா..எத்தனை நாள் தான் அரவாணிகள் விபசாரம் திருட்டு பிச்சைன்னு சொல்ல முடியும்...இதுக்கான முதல் தடையை யாராவது தூக்கி எறிஞ்சா தான நல்லது..” என்றவளுக்கு ஆமோதிப்பாய் தலையசைத்த ரவி வர்மன், ‘வா போகலாம்’ என்பது போல தலையசைக்க, வழிந்த கண்ணீரைத் துடைத்த ருத்ரா,

“இப்போ கூட உங்களால தான் எனக்கு ஒரு தெளிவு கிடைச்சிருக்கு ஆன்ட்டி…” என்றவள்,

“இது வரைக்கும் நீங்க எனக்கும் என் குடும்பத்துக்கும் பண்ணுன எல்லாம் உதவிக்கும் நன்றி என இரு கூப்பி அவ்விடத்தை விட்டு சென்றிருந்தாள்..

அவள் சென்றவுடன் தனது அன்னையின் பக்கம் திரும்பிய ராக்கி, “அம்மா, இப்போவாவது சிவ..ருத்ராவை புரிஞ்சுதா..அவன் எப்பவுமே அந்த எண்ணத்துல என்கிட்ட பேசுனது இல்ல..அவனை நீங்க புரிஞ்சிக்கனும்னு தான் நான் இப்படி சொல்ல வேண்டியதா போச்சு…” என்றவன் ரவி வர்மனின் பக்கம் திரும்பி, “சாரி டா…” என்க..

ரவிவர்மன் அமைதியாய், “ராக்கி, பரவாயில்ல...உங்க அம்மா பண்ணுன தப்புக்கு உன்னை நான் ஒதுக்க முடியாது...சரி டா நாங்க கிளம்புறோம்..” என்றவன் அப்ஷ்ராவின் கைப் பிடித்து ருத்ராவை நோக்கி கிளம்ப,

போகும் அவர்களையே பார்த்து நின்ற ராக்கி, “அம்மா, இவ்ளோ பிரச்சனைக்கும் காரணம் சிவ...ருத்ரா சொன்ன மாதிரி சமூதாயம் இல்ல நீங்க என்மேல வைக்காத நம்பிக்கை தான்...பையன் மேல வச்சிருக்க பாசம் நம்பிக்கையா இருக்கனும் அதை நீங்க மறந்துட்டிங்க மா...ஒருவேள என்மேல நீங்க நம்பிக்கை வச்சிருந்தா அந்தக் குடும்பம் இப்படி ஆகிருக்காது எனக்கும் அந்தக் குறைய கடவுள் கொடுத்திருக்க மாட்டான்..” என்றவன் பெருமூச்சை விடுத்து காரில் ஏறும் அவர்களையே பார்த்து நிற்க,

“நான் போய் அவங்க கிட்ட மன்னிப்பு கேக்குறேன்..” எனக் கிளம்பிய தாயின் கையைப் பிடித்து தடுத்தவன்,

“மன்னிப்பு கேட்குற தகுதிக்கு நாம இல்ல மா.. அவங்க கிட்டயிருந்து ஒதுங்கி நிப்போம் மா..வாங்க..” என்றவனும் தன்மீது கண்மூடித்தனமான பாசத்தை வைத்துள்ள தாயின் கைப் பற்றி அழைத்து சென்றான்..

ருத்ராங்கியின் வேகமும் விவேகமும் இனி அரவாணிகளின் முன்னேற்றத்திற்கான பாதையை உருவாக்க, அந்தக் கரடு முரடான பாதையில் கூட அவளுக்கு பூக்கள் தூவி அழைத்து செல்ல அவளது குடும்பம் என்றும் அவளுக்கு இருந்தது…

தீண்டத்தகாதவர்கள் அல்ல அவர்கள்
வேசியல்ல அவர்கள்
தாசியும் அல்ல அவர்கள்
பரதேசியும் அல்ல அவர்கள்
சொர்க்கத்தில் வாழ ஆசை கொள்ளாவிட்டாலும்
கொஞ்சம் மானத்தோடு வாழ ஆசைக் கொள்ளும் பிறப்பு தான்…


உயிர் கொடுத்து பத்து மாதம் பத்தினியின் வயிற்றில் பிறந்தவளின் பிறப்பை கொச்சைப் படுத்திவிட்டோம்..
அர்த்தனாரியானவனை கருவறையில் கருங்கல்லில் வடித்து வணங்குகிறோம், கருவறையில் அர்த்தனாரியாய் பிறப்பெடுத்தவளை வீதியில் விரட்டி அடிக்கிறோம்..
பிறப்பில் ஆணை வடித்து
உணர்வில் பெண்மை புகுத்தி
பிரம்மன் வடித்த அற்புத சிற்பத்தை காறி உமிழ்கிறோம்...
காகித பூக்களென நினைத்து கசக்கி எரிய துணிந்த நமக்கு எப்போது புரியும் அவர்களும் நம்மை போன்று வாசம் வீசி செழித்து பூக்கும் வண்ண மலர்கள் என்று...?
கைப்பாவை பொம்மை என நினைத்து அடிக்கிறாய் அணைக்கிறாய் உன் சுகங்களுக்கு அவளை இரையாக்குகிறாய்...
காமுக மனிதன் அவளை இரசித்து இச்சை தீர்க்கும் போது தெரியவில்லையா பாலினம்...
ஆராதிக்கும் நிலை மரியாதை வேண்டாம் சக உயிராய் நினைக்கும் கண்ணிய பார்வை போதுமே...


ருத்ராங்கிகளின் தேடலுக்கு விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் ருத்ராவின் முடிவில்லா பாதையில் பூ தூவ நானும் விடைபெறுகிறேன்..
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ருத்ராங்கி கதையை படித்த ஒருவராவது அரவாணிகளை பார்க்கும்பொழுது முகம் சுளிக்காமல் சினேகபாவனை காட்டினாலே இக்கதைக்கு கிடைத்த மிகபெரிய வெற்றி ஒரு நல்ல சமுககதையை கொடுத்ததற்கு நன்றி பவி
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
இதுலாம் அநியாயம் நான் உன்னிடம் பேசும்போழுது இக்கதை முடிக்காமல் இருக்கிறது என்று சொல்லி பல மாதங்கள் ஆகிறது
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஹப்பா ஒரு வழியா மனசு வந்ததா?? இந்த கதையை முடிக்கணும்னு... அருமையான கதை... இதை இப்படி நிறுத்தி வைச்சிருக்கீங்களேனு நினைச்சுட்டே இருந்தேன்...
 




priyadurai

இணை அமைச்சர்
Joined
Feb 3, 2018
Messages
543
Reaction score
389
Location
mumbai
They are also human we must care about them
My near hm oru thirunangai irukanga everyone calld them amma i calld her akka she is so nice to everyone and lovely hurt, i meet such people in train slso they r gud
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
Ungala Romba nal thedunean Theriyuma too late ya ?
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
A big Apaluse for this story aadhiraa kanna ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top