• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Exclusive Short Stories (site day) Exclusive

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
Short Stories (site day)

அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் மக்களே!

நமது தளத்தில் ‘SITE DAY’ கொண்டாடவிருப்பது அனைவரும் அறிந்ததே...

இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குட்டிக் கதைகளுக்கான ஒரு தேடல் நடைபெற உள்ளது.

இது போட்டி இல்லை!!!

உள்ளுக்குள் புதைந்து கிடக்கும் புதையல்களை வெளிக் கொணர ஒரு வாய்ப்பு எனலாம்!!!

சில சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய நாவல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு சிறுகதை/ குட்டிக் கதை சர்வ சாதாரணமாக ஏற்படுத்திவிடும்.

பாரதி சொன்ன ‘அக்கினிக் குஞ்சு’ போன்றவை இந்த குட்டிக் கதைகள்.

அதனால்தானோ என்னவோ அவரே நிறையக் குட்டி கதைகளை எழுதியிருக்கிறார்.

சிறிய கதைகளால் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இது...

நமது தளத்தைப் பொறுத்தவரை... ஒவ்வொரு எழுத்தாளரும் வாசகரே... அதுபோல் ஒவ்வொரு வாசகரும் எழுத்தாளரே!

எனவே மகிழ்ச்சியாகத் தயாராகுங்கள் மக்களே!

உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளரைத் தட்டி எழுப்புங்கள்.
✒✒✒✒✒✒✒✒✒✒✒

இதோ போட்டிக்கான விதிமுறைகள்...

• தலைப்பு உங்கள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்...

• பெயர்களை... பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை...

• Thread open செய்தவுடன்... ஒருவர் எத்தனைக் கதைகளை வேண்டுமானாலும் அதில் பதிவிடலாம்..

• கதைகளை நேரடியாக comments box இல் type செய்யலாம் அல்லது copy & paste செய்யலாம்...

• கதைகள் 150 முதல் 200 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்...

• ஜனவரி 18 ஆம் தேதி முதல் கதைக்கான திரி open ஆக இருக்கும்...

• கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 24/01/2019...

• இந்தத் திரியின் comments boxes... கதைகளைப் பதிவிடுவதற்கு மட்டுமே...

• Comments களுக்கு என்று தனியாக ஒரு திரி உபயோகத்தில் இருக்கும்...

• கதைகளுக்கான comments எல்லாவற்றையும் அதில் பதிவிடலாம்...

கதைகளுக்கான திரியில் comments பதிவிட்டால் அவை நீக்கப்படலாம்... ஆகவே அந்த நிலையை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

STRICTLY COMMENTS ARE PROHIBITED

Comments செய்வதற்கு இங்கே click செய்யவும்...

Short stories COMMENTS
 




Last edited:

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
அம்மா

தோழியின் தந்தையினுடைய மரணச் சடங்கிற்கு சென்றதிலிருந்து பரிக்ஷயா சிந்தனை வயப்பட்டிருந்தாள்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் வரை ஹாஸ்டலில் எல்லோரும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தது ஞாபகம் வர தன் தோழியை எண்ணி பரிக்ஷயா அவளையும் அறியாமல் கண் கலங்கினாள்.
சிரித்த வண்ணமாக திரியும் தன் தோழியை எண்ணி வருந்தியவளாக தன் தோழியின் வீட்டை நோக்கி பயணம் செய்தவள் அவளது நண்பி அழுவதை பார்த்து தாளாமல் வெளியே வந்து நின்று தன் தாயை நினைத்து பார்த்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த தன்னை தனியாளாக வளர்த்த தன் தாயுடன் இது நாள் வரை அவள் சரியாக பேசியதே இல்லை.
காரணம் அவர் பல வீடுகளுக்கு சென்று வீட்டு வேலை பார்ப்பவர். அதை அவள் விரும்பவில்லை. இப்போது ஐ.டி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்பவள் மாதந்தோறும் சம்பளத்தை அவருக்கு அனுப்பினாலும் அவரை சென்று பார்க்கவில்லை.
தான் வெளியூர் செல்வதாக கூறிய போது அவர் பார்த்த ஏக்கமான பார்வை அவள் கண் முன்னே தோன்றியது.
அவர் வெளி வீட்டிற்கு சென்று வேலை பார்த்து தனக்கு அவமானம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே பணம் அனுப்புகிறாள் பரிக்ஷயா .
“அவர் கஷ்டப்பட்டிருக்காவிட்டால் தான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா? ஒன்றை இழந்த பின்பு தான் அதன் மதிப்பு தெரியுமாம். தாயை இழந்த பிறகு வேதனைப்படுவதா? முடியாது அவர் என் அம்மா....அம்மா....இப்படி நான் அவரை அழைத்ததே இல்லையே....." என்று மனதிற்குள் வேதனை கொண்டவள் கண்களை துடைத்து கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி சென்றாள். அதிகாலை தன் வீட்டை வந்தடைந்த பரிக்ஷயா கதவை தட்டி விட்டு காத்து நின்றாள்.
"யாரு இந்த நேரத்தில???" என்றவாறு கதவைத் திறந்த தன் தாயை ஓடி வந்து அணைத்துக் கொண்டவள் "அம்மா......" என்று கூற அவளது தாயோ கண்கள் கலங்க "இந்த வார்த்தையை கேட்கத்தான் இருபது வருஷமாக காத்துட்டு இருந்தேன்மா....." என்று கூற"அம்மா...அம்மா....அம்மா....." என்று கூறி அவரை கட்டி கொண்டாள் பரிக்ஷயா.......
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
நடிகை

அந்த கல்யாண மண்டபமே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

இன்னும் சற்று நேரத்தில் மூகூர்த்தம்.

மணமகள், மணமகன் இருவரும் அவரவர் அறைகளில் திருமணத்திற்கான அலங்காரத்துடன் தயாராகி கொண்டிருந்தனர்.

மணமகள் அறையின் பக்கத்து அறையில் அமர்ந்திருந்தாள் அவள்.

அவளிடம் ,அவள் அம்மா "இதோ பார் இது வரை இந்த திருமணத்தை கொண்டு வந்தது பெரிது இல்லை.

அவன் உன் முன்னாள் காதலன் ஆனால் இந்நாளில் உன் தங்கையின் கணவன்.

இனிதான் நீங்கள் சந்திக்க வேண்டிய சந்தர்பங்கள், சூழ்நிலைகளும் சமாளிக்க வேண்டியது அதிகம்.புரிஞ்சு நடந்துகோமா" என்று கூறி சென்று விட்டார்.

ஐயர் மணமகளை அழைக்கும் சத்தம் கேட்டது. மனதை தயார்படுத்தி மணமேடை அருகே சென்றாள் அவள்.

அங்கே தங்கையை மணகோலத்தில் கண்டவளது மனம் நிறைந்தது. மனத்திற்குள், "குட்டிமா உனக்காக எதையும் சமாளிப்பேன்" என்று நினைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்றாள் அவள்.

"கெட்டி மேளம், கெட்டி மேளம்" மணமகன் மங்களநாணை மணமகள் கழுத்தில் அணிவித்துவிட்டு நிமிர்ந்து அவள் கண்களை சந்நித்தான்.

இப்போதும் அவள் கண்களில் தங்கையின் மீதான பாசமே தெரிந்தது.

ஒரு குற்றம் சாட்டும் பார்வையை அவள் மீது செலுத்தி திரும்பி கொண்டான்.

அவனின் குற்றம் சாட்டும் பார்வையை உணர்ந்தும் எந்தப் பிரதிபலிப்பும் காட்டாமல் கண்ணீரை கட்டுபடுத்தினாள் அவள்.

கரகோஷம் அரங்கை நிறைத்தது. கேமிரா அவள் முகத்தின் அருகே இருந்து நகர்ந்தது.

இயக்குனர் "Cut, Nice shot" என்று கூறி அவளின் அருகில் வந்தார்.
" சூப்பரா நடித்தமா.. இப்போதும் உன் முகத்தில் அதே உணர்வு இருக்கிறது". என்று பாராட்டி சென்றார்.

அவளுக்கு மட்டுமே தெரியும் நாளை நடைபெறவிருக்கும் தங்கையின் கல்யாணத்திற்கு பார்த்த ஒத்திகை என்று.

அவள் நடிகை நிழலிலும், நிஜத்திலும்.
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
கடலாழி பெண்ணாழி



“மகன் தீவிர யோசனையில் இருப்பதைப் பார்த்த மீனாட்சி”.



கார்த்தி ,நானும் ஒரு மணிநேரம் பார்க்கிறேன் ஏதோ யோசனையா இருக்க



பெரிய பிரச்சனையா? அம்மாவின் சொல்லுக்கு செவி சாய்த்த மகன்,



அவர் அருகில் அமர்ந்து அந்தச் சொர்க்கத்தில் தலை சாய்த்து



படுத்தான்.(தாய் மடி)





என்னடா ?என்று நிரம்புகள் புடைத்து, தோள்கள் சுருங்கி இருந்த கைகளால்



வருடிக்கொடுத்தால்,மயில் இறகை கொண்டு வருடியது போன்று



இருந்தது.





அம்மா ஒரு கதை போட்டிம்மா நான் பெண்களை பற்றி எழுத போறேன்

அதான் யோசுச்சுகிட்டு இருக்கேன்,எப்படி யோசுச்சாலும் நிறைய

விஷயம் கொளப்பாம இருக்கு .



“அதான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன், அதுக்கு அவர் பதிலும்



கொடுத்துட்டாரு படிக்கனும். (எவர்?)







அதான் பதில் கொடுத்து இருக்காருல படிடா எதாவது நல்ல யோசனை



தோனும் என்று எழுந்து செல்ல பார்க்க அவரைத் தடுத்து இருங்கம்மா



சேர்ந்து படிப்போம்.



அன்புள்ள மகனே!

பெண்களைப் பற்றி நீ கேட்கிறாய், என்னால் இன்று வரையில் பிரித்தறிய



முடியாத ஒன்று என்றால் அது பெண் தான்.



கடல் ஆழி எது வரை என்று நீ சென்று பார்க்க முடியுமா?



பல வகையான உயிர் இனங்கள் , பல வகையான தாவரங்கள்,



ரகசியங்கள் கொண்ட புதர்கள், விலை உயர்ந்த முத்துக்கள்,உயிர்



காக்கும் பவளப் பாறைகள், அது போல தான் இந்தப் பெண்களும் பல



வகையான குணங்கள், பல வகையான பரிமாணங்கள் தாயாய்,



தோழியாய், தமக்கையாய், தாரமாய், தனக்குள் எண்ணில் அடங்க



ரகசியங்களைப் பூட்டி கொண்டு வெளியில் அன்பை மட்டும் செலுத்தி



நம்மை வாழ வைக்கின்றனர்,இன்னும் என்னுள் தேடல் உள்ளது மகனே



“கடல் ஆழி போல பெண்ணாழி முடிந்தால் கண்டு அறிந்து எனக்கும்



சொல்”



இப்படிக்குப் படைத்தவன்,



பிரம்மன்,

சரஸ்வதியின் கணவன்,

விண்ணுலகம்.

உரக்கச் சிரித்து மகனை உச்சி முகர்ந்தால் மீனாட்சி.



(கர்வம் கொள் பெண்ணே! நீ பெண் என்பதில்!)
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
பழமையே பெருமை



என்ன பெருசு ரொம்ப சோர்வா தெரியுற எதாவது சாப்பிட்டியா,

தலையைத் தூக்கி பார்த்தது சிவகாளை.

என்ன ஒரு கம்பீரம் அதன் தோள்கள் சுருங்கி ,கூன் விழுந்து வயதான

தோற்றத்தை கொண்டாலும், இன்றளவும் குறையாத கம்பீரம் ?

(தமிழனின் மரபைப் பறை சாற்றும் கம்பீரம்).

ஏற இறங்கப் பார்த்த சிவகாளை மீண்டும் படுத்துக்கொள்ள, குட்டி



காளைக்கு கோபம் வந்துவிட்டது, ரொம்ப தான் பெரிசுக்கு



கொழுப்பு.............



கோலிக் குண்டு கண்களைச் சுழற்றிய குட்டி காளை, சரி அதவிடு பெருசு



ஜல்லிக்கட்டு பார்க்க போகலையா, கலந்துக்க தான் தெம்பில்லை



பார்க்காவது வா........



இதற்கு அசைந்து கொடுத்த சிவகாளை இப்ப நடக்குற ஜல்லிக்கட்டுல எனக்கு



அவுளவ விருப்பம் இல்லை.



பார்ரா................ஏன் பெரிசு..........



அப்போது இருந்தது உண்மையான வீரம், நான் உச்சபட்ச கோபத்தில்



முன்னகால மண்ணைக் கொண்டு வருடி, என் திமில சிலுப்பிச் சீறி



பாய்ந்து வரும் பொது, எனக்கு சமம்மா நிற்பாண்ட வீரத் தமிழன்



எங்கையும் ஓட மாட்டான் ஒத்தைக்கு ஒத்தை, எதிரியா இருந்தாலும்



வீரத்தில் சிறந்தவனா இருந்தான் அதற்குத் தலை வணங்கித் தோற்று



போவேன், தோல்வி கூட வீர வரலாறு ...................இப்போ ……….



அன்னைக்குக் காளை அடக்குனா தான் பொண்ணு, எந்தச் சூழ்நிலை

வந்ததாலும் எதிர்த்து நின்று போராடுவேன்னு சொல்லா இல்லாமல்

செயலா உறுதி கொடுத்தான் தமிழன்.


என்ன பெருசு போட்டுத்தாக்குது சமாளி ...காலம் மாறிப்போச்சு பெரிசு.



ஒ...மனுசங்க தான் அப்புடி சொல்லிட்டு திரியிறாங்கன்னா நீயுமா, நம்ப

இனத்தோட மானத்தை வாங்காதட..



வாய்யை இறுக்கமாக மூடிக்கொண்டு வந்த வழியை பார்த்து

சென்றது குட்டிகாளை.



சிறிது தூரம் சென்ற காளையை அழைத்த சிவகாளை சிறுசு காலம்

மாறி போச்சுன்னு பருத்தி கோட்டையிலே பாலிடாயில் கலந்து

இருக்க போறானுக இப்போ எல்லாத்துலயும் கலப்படமா.



உனக்கு இருக்க கொழுப்பு இருக்கே என்று கூறி சென்றது குட்டிகாளை.

பழமையே பெருமை! நிமிர்ந்து நில் தமிழா!.........

Dhanuja senthilkumar

 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
பைத்தியம்!

சிவமணி காலையில் தன்னுடைய கடையைத் திறக்க செல்லும்பொழுது அவனின் எதிரே வந்தார் ஒரு வயதான பாட்டி... அவரைப் பார்த்ததும் சிவமணியின் முகம் போன போக்கைப் பார்த்தார் செந்தில்..

அவனின் பார்வையைத் தொடர்ந்து அந்த பாட்டியைப் பார்த்தவரின் தோற்றம் கண்டு, “பாவம்..” என்று வாய்விட்டு கூறினார்...

அந்த பாட்டி சிவப்பு வண்ண நூல் சேலையில் ரோட்டில் யார் வருகிறார் யார் போகிறார் என்று தெரியாமல் ஜடை முடியுடன் பாவமாக நடந்து சென்றார்..

தன்னுடைய பலசரக்கு கடையைத் திறந்த சிவமணி, “காலையிலேயே பைத்தியத்தின் முகத்துல முழிச்சிருக்கேன்” என்றார் எரிச்சலுடன்..

“அதுக்கு எதுக்கு இப்படி சொல்ற..?” என்று கேட்டார் செந்தில்..

“அடபோப்பா நல்லவங்க முகத்தில் முழிச்சிருந்த இன்னைக்கு நல்ல வியாபாரம் நடந்திருக்கும்..” என்றார் கோபத்துடன்.. சிவமணி அவர் சொன்னதைக் கவனிக்கவே இல்லை..

“அண்ணா இரண்டு டீ..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த டீக்கடை பெஞ்சில் அமர்ந்தார்..

அந்த பாட்டி தங்களை நோக்கி வருவதைப் பார்த்த செந்தில் அவரின் எதிரே சென்று, “அம்மா வாங்க டீ குடிங்க..” என்று சொல்ல சிவமணி, “செந்தில் உனக்கு என்ன பைத்தியமா..?” என்று கேட்டார்..

செந்திலின் முகத்தையும், சிவமணி முகத்தை மாறிமாறிப் பார்த்த அந்த பாட்டியின் முகத்தைப் பார்த்து, “நான் உங்க மகன் மாதிரிம்மா..” என்று சொல்லி அங்கிருந்த பெஞ்சில் அமரவைத்து டீயை அந்த பாட்டியின் கையில் கொடுத்தார் செந்தில்..

அந்த டீயைக் கையில் வாங்கிய பாட்டி, “என்னோட புருஷன் இருக்கிற வரையில் என்னை ராணி மாதிரி வெச்சிருந்தார்.. எனக்கு எந்த குறையும் இருந்ததில்ல..” என்றார்..

“இப்ப போறவங்க வரவங்க எல்லாம் என்னை பைத்தியம் என்று சொல்லும் அளவில் வெச்சிருக்காங்க நான் பெத்த பிள்ளைகள்...” என்றவர் கண்ணீர் விட அவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டார் செந்தில்..

அந்த பாட்டியில் தெளிவான பேச்சில், ‘யாரும் பைத்தியம் இல்லை.. அவங்க பிள்ளைகள் அவர்களை பைத்தியம் ஆக்கிவிட்டனர்..’ என்ற உண்மையை உணர்ந்ந்து பித்துபிடித்து நின்றார் சிவமணி..

sandhiya sri
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
விடிவெள்ளி..

(தமிழ்நாட்டில் நீட் மருத்துவப் பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முந்தைய ஆண்டு)

12 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் கடைசி தேர்வான பயாலஜியை எழுதி முடித்து வெளியே வந்த ஸ்ரீலட்சுமி, "மெடிசின் படிக்க சீட் கிடைச்சிடுமா ஸ்ரீ"? என்று கேட்ட தோழிகளிடம்"நம்ம பரீட்சை மார்க்கை அடிப்படையா வச்சின்னா கண்டிப்பா கிடைக்கும். ஆனால் நீட் எக்ஸாம் வந்துச்சின்னா கஷ்டம் பா"என்று உண்மையை எந்த மறைவும் இன்றி சொன்னாள் ..

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை சி.பி.எஸ்.சி பாடதிட்டத்தில் நீட் பொதுத்தேர்வு எழுதச் சொன்னால் என்ன தான் செய்வார்கள் கிராமப்புற அரசாங்கப் பள்ளி மாணவர்கள்..

பெயரில் இருக்கும் லட்சுமி கொஞ்சம் கூட வீட்டில் இல்லாத ஏழை மாணவி ஸ்ரீலட்சுமி..
ஆனால் அவள் வீட்டில் நீக்கமற சரஸ்வதி குடியிருந்தார்..
லட்சுமி யின் தம்பி, தங்கையும் கூட படிப்பில் கெட்டி..
ஆனால் தாயோ சிறிது மனநலம் குன்றியவர்..
தகப்பனோ தமிழ்நாட்டின் சிறந்த "குடி"மகன்..
தன் கையே தனக்குதவி என பாடுபட்டு படித்து வரும் சுயம்புகள் அந்த வீட்டின் பிள்ளைகள்..

தேர்வு முடிவுகள் லட்சுமியை மருத்துவ படிப்புக்கு கொண்டுசெல்ல, அந்த அரசு கட்டணத்தைக் கூட கட்ட வழியில்லாது,தனது மருத்துவ கனவு கனவாகவே போய்விடுமோ எனக் கதறினாள் பெண்ணரசி..

அவளின் கதறல் பத்திரிகையில் செய்தியாக வர,கை குடுத்தன சில நல்ல உள்ளங்கள்...

அவர்களின் உதவியால் கல்லூரியில் சேர கிளம்பிய அன்று காலையில் வாழ்வின் முதன்முதலாக மகளின் கைபிடித்து 1,000ரூபாயை வைத்த தகப்பனைப் பார்த்த மகளிடம்,"என் பொண்ணு வைரம் என்பது ஊரிலுள்ள எல்லாருக்கும் தெரியுது, இப்பவும் அது எனக்கு தெரியலைன்னா நான் பாவிம்மா"..இனி நான் நம்ம குடும்பத்தை பாத்துக்குவேன் கவலைப்படாதே,என்று நம்பிக்கை யோடு சொன்னார்..

மனநிறைவோடு வெளிவாசலுக்கு வரும் போது, கிராம மக்கள் தங்களுக்குள் நிதி திரட்டி தங்களது கிராமத்தில் இருந்து முதன்முதலாக மருத்துவம் படிக்கச்செல்லும் பெண்ணிற்கு நல்ல உடைகள்,டெதஸ்கோப் என்று ஏதேதோ வாங்கி அவள் கைகளை நிறைத்தனர்..மட்டுமன்றி "உன்னோட படிப்புக்கு நாங்க என்னவேண்டுமென்றாலும் செய்வோம்,நீ நல்லா படிக்க மட்டும் செய் என்ற உத்வேகத்தை கொடுத்தனர்"..

அதைக்கேட்ட பெண்ணரசியின் கண்கள் நிறைந்தன கண்ணீரால்..
தான் மருத்துவராய் ஆன பின் தன் மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்வேன் என்ற உறுதியோடு பயணப்பட்டாள் ஸ்ரீ தனது லட்சியத்தை நோக்கி ..

நாமும் விருப்பத்தோடு அயராது படித்தால் இந்த அக்காவைப்போல பெரிய படிப்பெல்லாம் படிக்கலாம் என்ற விதையை தன்னையறியாமலே அந்த கிராமத்து சிறார்களின் மனதில் விதைத்து அவர்களின் விடிவெள்ளியாய் நின்றாள் ஸ்ரீலட்சுமி..

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி,
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்..
-மகாகவி பாரதியார்.
 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
வாழ்க்கை பக்கங்கள்



ஒரு வாரம் ஓடிவிட்டது,

திவ்யாவின் மனநிலையில் மாற்றம் இல்லை,
உண்பது, தூங்குவது, சாப்பிடுவது அனைத்தும் தாய் லட்சுமியின் பிடிவாதத்தில் மட்டுமே,
திவ்யாவை கட்டாயப்படுத்தி குளிக்க அனுப்பிவிட்டு , கணவரிடம் வந்தவள்
கண்ணீருடன், ராம் ... திவிய என்னால இப்படி பார்க்க முடியலைங்க..... அவ மனநிலைய நாம எப்படியாவது மாத்தனும் ,என்று கூறினாள்.
ஒரு பெருமூச்சுடன் , உண்மைதான் லட்சுமி, ஆனால் அவளுக்கு இன்னும் தன் தோழியின் இறப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவில்லை, இருபது வருட நட்பல்லவா,
மான்யா, காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொள்வாள் என யாரும் எதிர்பார்க்கவில்லையே.....
அவளுக்கு உணவு கொடு, நான் அவளை சிறிது தூரம் வாக்கிங் கூட்டிச்செல்கிறேன் .....
வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மாலுக்கு, திவ்யாவை அழைத்து வந்ததிலிருந்து , ராம் பேசுவதை அமைதியாக கேட்டவாறு, சோகசித்திரமாக நடந்துகொண்டிருந்தாள், திவ்யா....


சற்று நேரம் கழித்து , ராம்,ராம்....
யாரோ அழைக்கும் ஒலியில் கலைந்தவர்கள், திரும்பி பார்க்க அங்கே நின்றிருந்த நடுத்தர வயது பெண்மணியைக்கண்டு தந்தையை ஏறிட்டாள்....
ஹாய்,ராம்... என்னை நினைவில்லையா, நான்தான் சக்தி....
மூச்சுவாங்க கூறியவளை பார்த்த ராம், ஆச்சர்யத்துடன், ஹேய் சக்தி, நாம் சந்தித்து பலவருடங்கள் ஆகிவிட்டது,..
நல்லாயிருக்கியா???....
ஆமாம் ராம், நாம் சந்தித்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன, நான் சென்ற மாதம் வரை மும்பையில் இருந்தேன், என் கணவர் பணிஓய்வுக்கு பின் சொந்த ஊருக்கு வந்தோம்.
நான் நன்றாக இருக்கிறேன், என்மகளுக்கு திருமணம் முடித்துவிட்டேன்,, நீ நன்றாக இருக்கிறாயா??? இவள் உன் மகளா?
அப்படியே உன்னை போலவே.. உன் மனைவி எப்படி இருக்கிறார்கள்,?...


கேள்விமேல் கேள்விகள் கேட்டு ஆர்வத்துடன் அப்பாவிடம் பேசும் பெண்மணியை ஆச்சர்யமாக பார்த்திருந்தாள், திவ்யா....

இவள் என் மகள் திவ்யா , என்று அறிமுகப்படுத்தியதும், திவ்யாவுடன் ஆர்வத்துடன் பேசிய சக்தியை மிகவும் பிடித்திருந்தது திவ்யாவுக்கு,
சற்று நேரம் கழித்து விடைபெறும்போது, சிறுபிள்ளை போல் ஓடிச்சென்று அருகில் இருந்த கடையில் ஒரு பெண்டன்ட் செட் வாங்கி தந்தவரை வியப்பாக பார்த்து பின் தந்தையை பார்த்தாள், அவர் வாங்கிக்கொள்ள சொன்னதும் வாங்கிக்கொண்டு நன்றி கூறினாள்.

சக்தி, விடைபெற்று சென்றதும் மெதுவாக வீடுநோக்கி நடக்க ஆரம்பித்தனர்....
முதலில் மவுனத்தை கலைத்த ராம்,
திவி, சக்தியும் நானும் சிறுவயதில் படிக்கும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பினோம், ஆனால் சாதிப்பிரச்சனையால் அவளது மாமாவுக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர்.
அதன்பிறகு இன்றுதான் சந்திக்கிறேன்.... கூறி அமைதியாக நிறுத்தினார் ராம்...
தந்தையின் விழிகளை சந்தித்த திவ்யாவின் விழிகள் பளிச்சிட்டன...
ஏதோ ஒன்று புரிந்தது போல தெளிவான முகத்துடன் தந்தையை ஏறிட்டவள் ..
நம் வாழ்க்கை புத்தகத்தில், காதல் ஒரு பக்கம்தான் இல்லையாப்பா,
ஒரு பக்கம் கிழிந்ததற்காக, புத்தகத்தையே
தூக்கியெறிவது பைத்தியக்காரத்தனம்.....
மான்யா, செய்தது பைத்தியக்காரத்தனம்தான் இல்லையாப்பா......
தெளிவான முகத்துடன் தன்னிடம் கேள்வி கேட்கும் மகளைப்பார்த்து,

வாழ்க்கையில் காதல் என்ற பக்கம் சரியில்லாமல் போனாலும் திருமணம் என்னும் அழகான பக்கம் காத்திருக்கும், அதனை புரட்டிப் பார்க்காமல் புத்தகத்தை கிழித்தெறிவது மடத்தனம், மான்யாவின் இழப்பு வருத்தத்திற்குரியதுதான் , ஆனால் அதற்காக நீ உன்னை வருத்திக்கொள்வது எங்களை வேதனைப்படுத்துகிறது..... என்று கூறினார் ராம்.


கிளம்பிய போது இருந்தது போல இல்லாமல் , தெளிவான முகத்துடன் வந்த மகளைப் பார்த்த லட்சுமி , ராமிடம் கண்களால் என்ன என்று வினவ, வாழ்க்கையின் நிதர்சனத்தை இன்றுதான் புரிந்துகொண்டாள் நம் மகள்.... என்று கூறியவரை புரியாமல் பார்த்த லட்சுமியிடம் சக்தியை சந்தித்ததைக்கூறி நடந்ததை புரியவைத்தார் ராம்.
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top