• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews SSKN - காதல் நயாகரா எனது பார்வையில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
சில்லல்லவா சில்லல்லவா காதல் நயகரா

இந்த கதையின் தலைப்பை பார்த்து நீங்க யாரும் இது ஒரு காதல் கதை என்கிற முடிவுக்கு வரக்கூடாது. வாநிஷா ஸ்டைலில் கஜகஜா கதை என்றும் நினைக்கக்கூடாது.

இந்த கதையை ஆசிரியர் எப்படி புனைந்து இருக்காங்க என்றா வலிகளின் மேல் கட்டமைத்து இருக்காங்க. வா நிஷாவின் ஸ்டைலில் நகைச்சுவையுடன், ரொமன்டிக் டாச்சுடனான கனமான கதை தான் காதல் நயாகரா.

‘நயாகரா தூரத்தில் பார்க்கும்போது அமைதி
கிட்ட வந்த பேரிரைச்சல்’ - அப்புவின் கவிதையில் இருந்து எடுத்த வரிகள்

தூரத்து பச்சை அழகு என்பது போல ஜீனியஸின் வாழ்க்கை நமக்கு ரொம்ப பிரமிப்பாக, வியப்பாக இருக்கும் ஆனால் நிஜத்தில் அப்படியா என்றால் கேள்விக்குறிதான்??. இந்த காதல் நயாகரா அப்படி பட்ட அதிமேதாவிகளின் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் வலிகளும், வேதனைகளும், காதலையும் பற்றியது தான்.

மூன்று நீர்விழ்ச்சிகள் ஒன்று சேர்வது தான் நயாகரா நீர்வீழ்ச்சி அது போல இந்த காதல் நயாகராவும் மூன்று ஜோடிகளை கொண்டது. அதில் ஒரு ஜோடி நமக்கு எல்லாம் முன்பே பரிச்சயம் ஆன கதாபாத்திரம். ஆமாம் உயிர் விடும் வரை உன்னோடு தான் என்கிற கதையின் தொடர்ச்சி தான் இந்த காதல் நயாகரா. அதில் வரும் மாசிலாமணி மற்றும் கவிலயா தான் இந்த கதையின் நாயகன் நாயகி ( இது ஆசிரியர் சொல்வது ஆனால் நிஜம் வேற அதை நீங்களே படிச்சு பார்த்து புரிந்துக்கொள்ளுங்கள்)

வெங்கடேஷ் என்கிற வெங்கி அவருடைய மகள் கவிலயா மற்றும் சகோதரி அபிலயா என்று ஒரே குடும்பத்தில் மூன்று ஜீனியஸ். தாங்குமா இந்த உலகம் என்ற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது. மூன்று பேரும் வான் வெளியையும், விண்மீன்களையும், நட்சத்திரங்களையும் அறிந்தவர்கள் (Astro Physician). இந்த கதையின் முக்கிய மூன்று புள்ளிகள் இவர்கள் தான். இவர்களை சுற்றி தான் இந்த கதையும் நகருகிறது.

கவிலயா - மாசிலாமணி

உலகமே சிக்ஸ் பேக் என்றா கதையின் நாயகனுக்கோ எட்டு பேக். வரிகுதிரை போன்று மார்பை உடையவன். ஜிம் ஓனர் என்றா சும்மாவா. அவன் காதலியின் கண்களுக்கு பேரழகன். ஆண்களே பெண்களை வர்ணித்து பார்த்து, கேட்டு, படித்து இருப்போம் ஆனால் இங்க கவி ரொம்ப ரசித்து உருகி மணியை வர்ணணை செய்வா ஒரு இடத்தில் நாம காலி. ‘மணி நீ கிண்ணுனு இருக்கடா’ இதை கவியின் வாய்வழியாக கேட்கும்போது (நான் மணி ஆர்மி நான் மணி ஆர்மி என்று உரக்க சொல்ல தோன்றும்).

மணி என்றாலே ‘Man of principles’. மூன்று சகோதரிகளுடன் வளர்ந்ததாலோ என்னவோ கவியின் பிரச்சனையை புரிந்து நடக்குமிடம் எல்லாம் applause தான். ‘எனக்கு என்னடி ஈகோ உன்கிட்ட’ என்று சொல்லுகிற இடமெல்லாம் ‘Mani the great’ என்று உணரவைப்பான். (இவனுக்கு ஆர்மி வைக்காமல் வேற யாருக்கு வைப்பது சொல்லுங்கள் )

அப்படிபட்ட ஆணழகன் கவியை தேடி, அவள் பதின்பருவத்தில் சொன்ன காதலை இன்றுவரை நெஞ்சில் சுமந்து வந்தவனை. மனது முழுக்க காதலை புதைத்துக்கொண்டு நீயும் வேண்டாம் உன் காதலும் வேண்டாம் ஓடிடு என்று அவனை விரட்டுகிறாள் என்றா. நமக்கு எல்லாம் கண்டிப்பாக தோன்றும் அவ என்ன லுசா என்கிற எண்ணம் தான் எல்லாருக்கும் வரும். அவளை அலைகழிக்கும் விஷயம் என்ன என்பதை கதையை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள் தோழிகளே.. படிச்சா தான் அதன் சுவையையும், உணர்வையையும் முழுவதுமாக உணரமுடியும்.

வெங்கி - மீராம்மா

ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இறந்த பின் பதினைந்து வயது கவிலயாவை வளர்க்கும் பொறுப்பை ஏற்ற பொறுப்பான தந்தை வெங்கி. மனைவி இறந்த பின் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து மகளும் அவருமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். Astro Physics Professor மின்னல் வேகத்தில் கோல்களில் கணக்கை போட்டு முடிப்பவர். ஆனால் பெண்களின் மனதை அக்கா, மனைவி, மகள் என்று அவர் கடந்த பெண்களை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் மேதாவி.

குடும்ப பிரச்சனை காரணமாக அமெரிக்காவுக்கு வீட்டுவேலை செய்ய வருகிறார் முதிர்கன்னி மீராம்மா. வெங்கியின் குட் டைம் மீராம்மா அவர் வீட்டுக்கே வேலைக்கு வருகிறார்கள். அப்பாவும் மகளும் அவங்களை வெச்சி செய்வாங்க. ஆனால் அவங்க விஜய் ஆண்டனி பாட்டு பாடிகிட்டே அவங்களை எல்லாம் அசால்டு பண்ணிட்டு போயிகிட்டே இருப்பாங்க. இல்லை என்றா இவங்களை சமாளிப்பது எளிதான விஷயமில்லையே.

இப்படி பட்ட மீராம்மா மேல தான் காதல் வருது just 49, கொஞ்சம் மேடிட்ட வயிறு, ஆனால் தலை முழுக்க முடி இருக்கும் வெங்கிக்கு. இப்ப நினைச்சா கூட அவர் பண்ண இந்த அலும்பல் தான் உச்சம். மீரா டேட்டிங் போக போற ஆளை இந்த வெங்கி எப்படி சொல்லி வழி அனுப்புவார் என்றா ‘ மீரா சாமு அண்ணாவோட shopping போயிட்டு வா” சொல்லுற இடமிருக்கே.. குலுங்க குலுங்க சிரிச்சயிடம்.

இதில இவருக்கு மட்டும் மூன்று வில்லன்கள் அதில் சாமு அண்ணா தான் அவருடைய முதல் எதிரி. வெங்கி மீராவிடம் வழியும் வழிசலில் ஒரு இடம் கூட நம்மால் அவரை ரசிக்காமல் இருக்க முடியாது. அதிகமாக கலாய் வாங்கியதும் இவர் தான் அதிகமாக ரசிக்கப்பட்டவரும் இவர் தான். So sweet of Venki… I miss you.. Venki Monki ??♥♥??

அபிலயா - பாலாகணபதி

அபி அதிக நேரம் பேசியது நட்சத்திரங்களுடனும், விண்மீன்களிடமும் தான். தன் மனதில் இருப்பதை தன்னை போலவே ஜீனியஸான வெங்கியிடம் மட்டுமே பகிரந்துக்கொள்வாள். என்ன செய்ய பெற்றோர்களுக்கு அவ அதிமேதவிதனம் பயத்தையே அளித்தது. விளைவு படிப்பை பன்னிரண்டாம் வகுப்போடு நிறுத்தி விட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் அவளை மாமா வீட்டிற்கு அனுப்புகிறார்கள். அங்கு தான் அவள் வாழ்க்கையே புரட்டி போட்டது.

அவளின் புத்திக்கூர்மை
இவனுக்கோ ஆற்றாமை
மாமனுக்கோ பெருமை
விளைவு கொடுமை - அவளுக்கு

விண்மீன்களை உணர்ந்த - அவள்
உள்மனதை உணர்த்த மறந்தாளே
பெரிய விடைகளை எளிதில் கண்டவள்
தன் மாமானின் சிறிய அவாவை
அறியாமல் விட்டாளே..

விதி செய்த சதியா - இல்லை
சகி செய்த பிழையா …
யாரை நொந்து என்ன ?
முற்று பெறவேண்டிய அவள் வாழ்வை
எச்சமாக முடித்தாளே…
உயிரை துச்சமாக நினைத்தாளே..
எங்களை கண்ணீரில் கரைத்தாளே..

பயத்துடன் ஆரம்பித்த உறவு கடைசியில் காதலோடு மறைந்துவிட்டது. போட்டா போட்டி போட்டுக்கொண்டு ஒருவர் மேல் ஒருவர் அன்பையும் காதலையும் வாரி வழங்கி என்ன புண்ணியம். விரலுக்கு இறைத்த நீர் போல வீணாக போனதே.. எபிலாகில் பாலாவை பார்த்ததும் துக்கம் நெஞ்சையடைத்துக்கொண்டு வந்தது. இந்த மொத்த கதாபாத்திரத்தில் என்னை வெகுவாக உளுக்கியவர் பாலகணபதி தான்.

பாபு -நிலா

மனிதர்கள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம். இன்னும் ஒரு ஜோடி இருக்கு. மேலே பார்த்தது எல்லாம் அதிமேதாவி தனத்தால் பட்ட வலிகள் என்றால் இந்த பாபு வேற வகை. அவங்க எல்லாம் பிளஸ்சின் (+) உச்சம் என்றா இவன் மைனஸ்சின் (-) உச்சம்.

இந்த பதிவை படிச்சு நான் கொதிச்சு தான் போனேன்.இவனை எங்கமா பிடிச்ச
என்று ஆசிரியரிடம் கேட்கவும் தவறவில்லை. உண்மை சம்பவத்தின் ஒரு சிறு துளி தான் பாபு என்று பச்சக்கென்று ஈட்டியை இறக்கவும் அவங்க மறக்கவில்லை.

இப்படி கூட ஒருத்தன் இருக்க முடியுமா?? அக்காவை காதலித்து தங்கையை மணம் முடித்து. பின் அக்காவிடம் உரிமையை கோறும் அதிமேதாவியின் எதிர்பதம். என் மனசை குளிர வைத்தது வெங்கி தான். நான் ஆசைபட்ட மாதிரியே அவன் காலை உடைத்தது தான். கொஞ்சம் கவலையாகவும் இருந்தது கையையும் ஏன் உடைக்கவில்லை என்று. (அக்கா - மீராம்மா; மீராம்மாவின் தங்கை - நிலா)

இந்த காதல் நயாகரா வா நிஷாவின் மற்றுமொரு மாறுபட்ட கதைகளம். நெடுங்கதையை தொடர்கதையாக படிப்பதில் உள்ள இன்பத்தை முற்றிலுமாக அனுபவித்த கதை காதல் நயாகரா. அந்த நீர்வீழ்ச்சியில் உங்கள் அனைவருடனும் சேர்ந்து நானும் நனைந்ததில் பெரும் மகிழ்ச்சி..

படிச்சு பார்த்து உங்கள் கருத்தை பகிர்ந்துக்கொள்ள மறவாதீர்கள். ஒரு லைக்காவது போடுங்கள் அது தான் ஆசிரியர்களுக்கான உந்து சக்தி.
 




Last edited:

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அருமையான விமர்சனம் ப்ரேம்ஸ். ஒரு மாறுபட்ட கதைக்களம் வநி ஸ்டைல் காமெடியோட அழகா வந்திருக்கு.
என்னதான் கதை வெளிநாட்டில் நடக்குதுன்னாலும்,
பொதுவா வயதானவர்கள் காதல் அப்படிங்கறது கேலிக்குரிய விஷயமாதான் பார்க்கப் படுது சமுதாயத்துல.
இந்த நாவல்ல வநி அந்த சிக்கலான விஷயத்தையும் ஏத்துக்க வச்சிருக்காங்க. இது அவங்க எழுத்துக்கு கிடைத்த வெற்றி.

I'm just 49 சொல்லி சொல்லியே ஸ்கோர் பண்ணிடறார் வெங்கி.
உண்மையில வெங்கி மீரா தான் கதை நாயகர்கள் . சப்போர்ட்டுக்கு யங் கா ஒரு ஜோடி இருக்கட்டும் ன்னு தான் கவியும் மணியும் வராங்க .

பொதுவா வநீஷா கதைகள்னாலே காமெடியா இருக்கும். இந்த நாவல்லயும் பல இடங்கள் வாய்விட்டு சிரிக்கற மாதிரி இருந்தது.
குறிப்பா
"ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே" அப்படின்னு வெங்கி மீராவ சைட் அடிச்சு பாடினா, மீரா அசால்டா ஐம்பது வயசாச்சில்ல கண்ணுல பூ விழுந்திருக்கும் நல்லா பாருங்க ன்னு கலாய்ச்சிட்டு போற சீன் செம்ம....

தனியா விழுந்து பொறண்டு சிரிச்சேன். நிறைய சீன் இந்த மாதிரி ரசிக்கும் படி இருக்கும்.
கண்டிப்பா வாசித்து பாருங்க நண்பர்களே.
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
அருமையான விமர்சனம்... vanisha ரொம்ப சீரியஸ்சான விஷயத்தை சிரிக்க சிரிக்க சொல்றதுல கில்லாடி.... (எனக்கு வர்றது இவ்ளோதான். )
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top