• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sugi's Oru Adangaapidaari Mela Aasaippatten - Episode 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
ஹாய் பிரண்ட்ஸ்,
ஒரு பெரிய அப்டேட் கொடுத்து இருக்கேன். ஹோப் யு வில் லைக் இட். எங்க ஊர் திருவிழாக்கு போறதுனால திஸ் வீக் என்னால அப்டேட் கொடுக்க முடியாது.

ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட் இட். ஐ வில் கேட்ச் யூ கைஸ் ஆன் மன்டே.
Thank you very much for your likes and comments.

அத்தியாயம் - 3

View attachment 621

அர்விந்த், இன்று 8.45 amக்கு ஜோசப் டெக்ஸ்டைல் குரூப்ஸின் முக்கிய பில்டிங்கான டிசைனர் ஸ்டூடியோ ரிசெப்ஷன் முன் நின்று டைம் பார்த்தான். 9 மணிக்கு தான் வேலை தொடங்கும், அதுவரை நியூஸ்பேப்பர் படிக்கலாம் என்று லாபியில் உள்ள ஸோபாவில் உட்கார்ந்து ஹிந்து பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

பட் பட் பட் என்ற சத்தத்துடன், ஒரு பெண் புல்லட் வண்டியை பார்க் பண்ணிவிட்டு இறங்குவதை கண்ணாடியின் வழியே சுவாரசியமாக பார்த்தான். ஆம், அப்பெண்ணின் costume அவனை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது.

நல்ல பால் வெள்ளை நிறத்திற்கு தகுந்த மாதிரி ப்ளாக் கலர் ஸ்லீவ்லெஸ் டீசர்ட்டும், அதை டக்இன் பண்ணி போட்டிருந்த வைட் கலர் லெவிஸ் டைட் பேண்டும், ப்ளாக் நெட்டெட் ஓவர் கோட்டில் போடப்பட்டிருந்த வைட் கலர் எம்பிராய்டரி டிசைன்னும், ட்ரஸ்க்கு மாட்சாக தூக்கி போட்டிருந்த போனிடைல், இளஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக், டிசைனர் சாண்டலுடன் கூடிய ஸ்டெயிலான நடையும் பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க சொன்னது.

நம்ம ஆபீஸ்ல இப்படி ஒரு பொண்ணா, நியூ ஜாய்னியா இருக்குமோ என்று நினைத்தான். ச்சேசே
இருக்காது, இவ்வளவு அழகான பொண்ணு எல்லாம் நம்ம கம்பனிக்கு எங்க வேலைக்கு வர போகுது, ஒரு வேலை கிளைன்ட்டா இருக்குமோ என்று நினைத்தபடி ஆ என்று பார்த்து கொண்டு இருந்தான்.

டக் டக் என்ற சத்தத்துடன் நடந்து வந்தவள், நேராக ரிசெப்ஷனிஸ்ட்டிடம், Hello I am Bala, I would like to meet Mr. Arvind, Could you please get me an appointment to meet him?

இவர்கள் பேச்சை கவனித்திருந்த அர்விந்த், வாவ், இவ்வளவு அழகான பொண்ணு நம்ம பார்க்கத்தான் வந்திருக்கு. இன்னைக்கு நீ நரி முகத்துல முழிச்சு இருக்க போலயே என தட்டி கொடுத்து கொண்டான்.

Hello Mam, could you please tell me the purpose of the visit? I would need to discuss about my final year project and i am coming from Joseph Engineering college.

Ok, please wait mam, i will check with the concern person and update you soon. Thank you.

உடனே ரிசெப்ஷன்க்கு கால் பண்ணி, ஹான், நேயா please ask her to come to my cabin after 15 minutes. ஓகே சார்.

Mam, you can go and meet him in 15 minutes of time. It is in third floor,right side corner room & Mam, i wanted to tell you something, you are looking very beautiful"

வாட் என்ன நேயா ஒரு பொண்ண அழகுனு சொல்லறாளா நம்ப முடியல. ஏன்னா, தன்னை விட யாரும் அழகில்லைனு நினைக்கிறவ தன் இயல்பைமீறி பாலாவை பாராட்டி உள்ளாள்.

Thank you. என்று சொல்லியபடி லாபியை நோக்கி சென்றாள். ஸோபாவில் அமர்ந்து டைம் பார்த்தபடியே போனை நோண்டி கொண்டு இருந்தாள்.

அர்விந்த், தன் கேபின் நோக்கி நடந்தபடியே, தன் சந்தோஷத்தை யாருக்காவது சொல்ல வேண்டுமே என்று தன் MD ப்ரஜின்க்கு கால் செய்தான். "என்ன அர்விந்த், எதாவது முக்கியமான விசயமா, நான் கொஞ்சம் பர்சனல் ஒர்க்ல இருக்கேன்டா. சார் நம்ம ஆபீஸ்க்கு, ஒரு அழகான பொண்ணு வந்து இருக்கு சார், நீங்க வேற இன்னைக்குனு பார்த்து லீவு. நா யாருகிட்ட போய் என் சந்தோஷத்த சொல்லறது சார் என சிவாஜி வாய்ஸ்ல பீலிங்ஸ்ஸ கொட்டினான். யாருடா அது? பேரு பால திரிபுர சுந்தரி பிரம் ஜோசப் இன்ஜினியரிங் காலேஜ்.

ஹேய், அடக்கி வாசி டா, அவ எங்க அப்பாவோட டைரக்ட் ரெகமெண்டேஷன்ல வந்து இருக்கா. லாஸ்ட் வீகென்ட் தான், டாட் இதைப்பத்தி சொன்னார்.அதுனால தான், பைனல் இயர் ப்ராஜெக்ட் பண்ண அல்லொவ் பண்ணி இருக்கேன்டா. யூசுவலா, அப்பா யாரையும் சிபாரிசு பண்ண மாட்டார். அவரே சொல்லி இருக்கார்னா, இந்த பொண்ணு ரொம்ப பிரைட் ஸ்டுடென்ட்டா இருக்கனும். நான் வெளிய இருக்கேன், என்னனு பேசிட்டு கால் பண்ணு.

ஹெல்லோ, மே ஐ கம்மின் அர்விந்த்? யெஸ் ப்ளீஸ் கம்.

சேரில் உட்கார்ந்தபடியே, தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள். ஹெல்லோ பால திரிபுர சுந்தரி, உங்கள ஷார்ட்டா திருப்பு திருப்புனு சொல்லுவாங்களா என்றான். யெஸ் அர்விந்த், உன்னை அறுவை அறுவைனு ஷார்ட்டா கூப்பிடற மாதிரி. நானே என் வாயைக்கொடுத்து டேமேஜ் பண்ணிட்டேன் போலவே என்று நினைத்தபடி, உங்க ப்ரோபைல கொஞ்சம் கொடுக்கறீங்களா என மரியாதையாக கேட்டான். (ஐயா கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட் பாலிசிய பாலோ பண்ணறாராம்).

சரி, இந்தா அர்விந்த். நாந்தான், ரெஸ்பெக்ட் கொடுக்கறேனே பாலா, நீங்க என்னை வா போனு பேசறீங்க. உங்கள விட நான் 3 இயர்ஸ் பெரியவன். அதுவந்து, நான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, இந்த பாலா மாத்தவே மாட்டா. நீ என்ன திருப்புனு சொல்லறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும் அறுவை.

என்னது அறுவையா? நீ ப்ராஜெக்ட் பண்ண வந்து இருக்கேன்னு நியாபகம் வெச்சுக்கோ. நான் இங்கே MD யோட பர்சனல் செகரெட்டரி. நான் நினைச்சா உன்னை ப்ராஜெக்ட் பண்ண விடாம செய்ய முடியும்.

ஹப்பா, அறுவை மன்னா, அத முதல்ல செய் உனக்கு புண்ணியமா போகும். கொஞ்சம் கூட அசர மாட்டேங்கறாளே. தேவையில்லாம ஒரு வார்த்தை பேசிட்டு இப்படி முழிக்கறியே அர்விந்தா என்று தன்னையே நொந்தபடி, ப்ரொபைலை புரட்டினான்.

இப்பொழுது, புரிந்தது, ஏன் சேர்மேன் சார் சிபாரிசு பண்ணினார்னு. பாலா டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் உடன் ஈவினிங் காலேஜ் மூலம், பேஷன் டெக்னாலஜி, டிப்ளமோ இன் இன்டீரியர் டிசைனிங், டிப்ளமோ இன் பேஷன் போட்டோகிராபி, பியூட்டிசியன் & ஹேர்ஸ்டைலிஸ்ட் கோர்ஸ் என தன் ப்ரோபெஷன்க்கு தேவையானதை தேடி தேடி படித்து இருந்தாள். அதைவிட, அவளது டிசைனிங் ஒர்க் புக் சொன்னது அவளது திறமையை.

இப்பொழுது, பணிவாக ஓகே மிஸ்.பால திரிபுர சுந்தரி, உங்க ப்ரொபைல் ரொம்ப நல்லா இருக்கு. உங்க பிரண்டையும் நாளைக்கு வந்து பார்மாலிட்டிஸ் முடித்து ஜாயின் பண்ண சொல்லிடுங்க. அதுக்கு முன்னாடி இந்த அக்ரீமெண்டையும் படிச்சு பார்த்து சைன் பண்ணிடுங்க.

இது என்ன அக்ரீமெண்ட் மிஸ்டர். அர்விந்த்? இது நீங்க ப்ராஜெக்ட் முடிந்து இங்கவே ஒன் இயர் வரைக்கும் வேலை செய்யறதுக்கான ஒப்பந்தம் என்றான் பல்லை கடித்தபடி பொறுமையாக.

எதுக்கு ஒன் இயர் ஒர்க் பண்ணனும் என்றாள் கோபமுகத்தோடு, பின்ன 6 மாசம் பிரீயா டிரைனிங் படிச்சிட்டு, அதுக்கு வேற ஸ்டைபெண்ட் கொடுத்து நாங்க தலைல முக்காடு போடறதா என்றான்.

அது உன் பிரச்சனையடா. எனக்கு ஆணிய புடுங்கவே வேண்டாம். ஐயம் லீவிங் நொவ். நான் இங்க தான் ப்ராஜெக்ட் பண்ணனும்னு ஒத்த காலுல நிக்கல. காசு குடுக்குறானாம் காசு நீயா காசு கொடுக்கறே.

என்னது டாவா? ஹெல்லோ, என்ன நினைச்சுட்டு இருக்கீங்க, நானும் பொறுத்து பொறுத்து போனா ரொம்ப தான் பண்ணறே. உன்னை யாரு பொறுத்து போக சொன்னது, பொங்கி எழேன்டா. நானும் அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்த்துட்டு போறேன்.

இருடி, MD கிட்ட பேசிட்டு வந்து கவனிச்சுக்கறேன். அப்பொழுது, அவ மொபைலில் இருந்து போடா போடா புண்ணாக்கு ,போடாத தப்பு கணக்கு என்ற சாங்கை அலற விட்டாள். வெறி வெறியென்று பல்லை கடித்தபடியே MD க்கு டயல் பண்ணியபடியே ரூமை விட்டு வெளியே வந்தான். ஆமாம், அந்த புண்ணியவதி கிட்ட வெளியே வெயிட் பண்ணுனு சொல்லி திருப்பி எதாவது வாங்கி கட்டிக்கறதுக்கு பதிலா நாமளே போலாம்னு எழுந்து வந்து விட்டான்.

எடுத்தவுடனே, சார் பைனல் இயர் ப்ராஜெக்ட் பண்ணறேங்கற பேர்ல ஒரு அடங்காப்பிடாரி நம்ம கம்பனிக்கு வந்து இருக்கு சார். தயவு செய்து, இந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிடலாம் சார்.என்னை வாடா போடான்னு எல்லாம் பேசறா சார். அடிப்பாவி, இவன் கிட்டயும் உன்வேலைய காட்டிட்டியா என்று நினைத்தபடி, அப்படி எல்லாம் எடுத்தவுடனே பேச மாட்டாளே, என்ன நடந்ததுனு சொல்லு என கேட்க, அழுகாத குறையாக அர்விந்த் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.

உள்ளே பாலா பியாவிற்கு கால் பண்ணி, நடந்ததை கூறிக்கொண்டு இருந்தாள். " ஹேய் பியா, உன் ஆளு இங்க தான் இருக்கான்டி. என்ன லூசு சொல்லற கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுடி. அதாண்டி, நம்ம கிளாஸ்மேட் மகேஷ்சோட அண்ணா, நாம கூட சிட்டி சென்டர் மால்ல பார்த்தோமே, நீகூட விழுந்து விழுந்து சைட் அடிச்சியே. சரி, உனக்காக போய், பேசலாம்னு மகேஷ் கிட்ட போனா பெரிய இவன் மாதிரி வேலை இருக்குனு கெத்தா தலையாட்டிட்டு பொண்ணுங்கள பார்க்காத மாதிரி போனானே. செம காண்டுல இருந்தேன் உன் ஆளு மேல, நல்ல வெச்சு செஞ்சுருக்கேன்டி. இனி பையன் வாய தொறக்கட்டும் என்கிட்டே என்றாள் கோபத்தோடு. ஹேய் எருமை, என்னடி வார்த்தைக்கு வார்த்தை என் ஆளுனு சொல்லற, பார்க்க ஹாண்ட்சம்மா இருக்கான்னு மட்டும் தானேடி சொன்னேன் என்றாள் அழாக்குறையாக.

அது எல்லாம், முடியாது மச்சி, இவன் தான் உன் ஆளுனு நான் பிக்ஸ் பண்ணிட்டேன். 6 மாதம் இங்க எனக்கு பொழுது போக வேண்டாமா. அடியேய் அரக்கி, உனக்கு டைம்பாஸ் ஆக பலியாடு நானாடி. உண்மையான பலியாடு வெளிய போன் பேசிட்டு இருக்குடி என்றாள் சிரித்தபடி.

சரி சரி மீதிக்கதைய வீட்டுல வந்து பேசிக்கலாம். உன் ஆளு, பிரஜூ கிட்ட பேசிட்டு, எப்ப வேணுமானாலும் வரலாம் பை டி பியா.

வெளியே, இங்க பாரு அர்விந்த், பாலா கிட்ட அக்ரீமெண்ட் அது இதுனு எல்லாம் பேசாதே. அவ என்ன கண்டிஷன் போட்டாலும் ஓக்னு சொல்லி நாளைக்கே ஜாயின் பண்ண சொல்லிடு. அவ அவங்க கம்பெனில தான், ப்ராஜெக்ட் பண்ணனும்னு இருந்தா. டாட், அவங்க அப்பாகிட்டயும் HOD கிட்டயும் பேசி கன்வின்ஸ் பண்ணி தான் வந்து இருக்கா. அவ திறமை தெரிச்சதுனால தான் இன்டிரெக்டா போர்ஸ் பண்ணி வரவெச்சு இருக்கோம். அதுவும் இல்லாம, அவ எங்க பாமிலிக்கு ரொம்ப கிளோஸ்டா. காரியத்தை கெடுத்துடாதடா. நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ நாளைக்கு பாலாவும், பிரியாவும் ஜாயின் பண்ணனும். அடக்கடவுளே நாமளே ஏழரையை கூப்பிட்டு விட்டோம் போல இருக்கே என்று நினைத்தபடி உள்ளே சென்றான்.

"பாலா மேம்"... என்னையா கூப்பிட்ட அர்விந்த் என்றாள் ராகம் இழுத்தபடி நக்கலாக. தன் விதியை எண்ணி நொந்தபடி, மேம் MD சார் அக்ரீமெண்ட் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டார். உங்களுக்கு வேற எதாவது கன்செர்ன் இருக்கானு கேட்க சொன்னார் மேம் என்றான் வார்த்தைக்கு வார்த்தை மேம் போட்டப்படி.

பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி, தோ பாரு, அர்விந்து வீக்டேய்ஸ் மட்டும் தான் நாங்க ஆபீஸ் வருவோம். அதுவும் காலேஜ்ல வேலை இருந்தா வர முடியாது. கவலைப்படாதே, அதெல்லாம் கரெக்டா இன்பார்ம் பண்ணிடுவோம். அப்பறம், பைக் ரைடிங், பெஸ்டிவல், திருவிழா & போர் அடிச்சா லீவு போடுவோம். எங்க ப்ராஜெக்ட் வேலை போக மீதி நேரம் இருந்து நல்ல மூட் இருந்தா உங்க கம்பனிக்கு ஹெல்ப் பண்ணறோம்.

ஸ்டைபெண்ட் எல்லாம் கரெக்டா வந்துடனும். மார்னிங் 11am க்கு ஜிஞ்சர் டீ வித் பஜ்ஜி / வடை, லஞ்ச் கேன்டீன்ல சாப்பிட்டுக்குவோம். ஈவினிங் 4pm க்கு கரெக்டா பிரெஷ் ப்ரூட் ஜூஸ்(வெயில் ஜாஸ்தில) வித் ஸ்னாக்ஸ். சாட் ஐட்டம்ஸ இருந்தா மச் பெட்டர் அர்விந்து. ட்ரான்ஸ்போர்ட் எல்லாம் நாங்களே பார்த்துக்கறோம் நீ சிரமப்படவேண்டாம். இப்போதைக்கு இவ்வளவு தான் வேற எதாவது மறந்து விட்டிருந்தா நாளைக்கு சொல்லறேன். அப்பறம் நீ ஏதோ டினு சொன்ன மாதிரி இருந்ததே முன்ன.

அய்யோ மேம், உங்க பவர்ர பத்தி தெரியாம பேசிட்டேன், ப்ளீஸ் மன்னிச்சுடுங்க.

சரி, சரி நீ போய் உங்க MD கிட்ட பேசி பெர்மிசன் வாங்கிட்டு வா போ என்றாள் சிரித்தபடி. அதெல்லாம் வேண்டாம் மேம், நீங்க என்ன கேட்டாலும் செய்து தரச்சொல்லி இருக்காரு MD.

ஓகே அர்விந்து, அப்ப நாளைக்கு வந்து பார்மாலிட்டீஸ் முடித்து ஜாயின் பண்ணிக்கறோம். ஹாப்பி தானே என்றாள் கண்சிமிட்டியபடி. வெரி ஹாப்பி மேம் என்றான் அழாக்குறையாக.

அவள் சென்றதும் ஹப்பா என தலை மேல் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டான். நேரமே சரியில்லடா அர்விந்து, யாரு முகத்துல முழிச்சனோ. இதேபோல காலையில் பாலாவை பார்த்தவுடன் சொன்ன டயலாக் நியாபகம் வந்ததும், அனைத்தையும் மறந்து பொங்கி பொங்கி சிரிக்க ஆரம்பித்தான்.
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
hero sir than MD ya sis............vanthavutane arvinda peethi aakitala:rolleyes::rolleyes::rolleyes:nice epi sis:):):):):)
 




Tamilkannan

நாட்டாமை
Joined
Jan 20, 2018
Messages
81
Reaction score
82
Location
Chennai
Hero aaran innum varave illa.:unsure::unsure::unsure: Appdina prajinthan aaran'ah:whistle::whistle::whistle:. Romba confused erukkuo_Oo_Oo_O. Aravind romba paavam vaayai kudhuthu vaangi kattigittan:p:p:p. Balava adichukkave Mudiyadhu;););) Chirichu Chirichu kannula thanniye vandhurichu:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. Adangaapidari mela aasapatten sema poruthamana thalaippu.(y)(y)(y):love::love::love::love::love:
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
Hero aaran innum varave illa.:unsure::unsure::unsure: Appdina prajinthan aaran'ah:whistle::whistle::whistle:. Romba confused erukkuo_Oo_Oo_O. Aravind romba paavam vaayai kudhuthu vaangi kattigittan:p:p:p. Balava adichukkave Mudiyadhu;););) Chirichu Chirichu kannula thanniye vandhurichu:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. Adangaapidari mela aasapatten sema poruthamana thalaippu.(y)(y)(y):love::love::love::love::love:
Thank you Friend...You don't know, how I am happy after seeing your comment.....Hero will be introduced soon ....All the confusion will be answered shortly.....Happy to see that you are enjoyed this episode....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top