• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
இனிய நட்புக்களே,

தாமதத்திற்கு மன்னிக்கவும், சொந்த வேலை காரணமாக என்னால் தொடர்ந்து அப்டேட் கொடுக்க முடியவில்லை.....

எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி....

தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்,
சுகி.

அத்தியாயம் 14

அடுத்த நாள் காலை மெதுவாக எழுந்து காம்ப்ளிமென்டரி பிரேக் பாஸ்ட் முடித்து தமிழ்நாட்டில், ஊட்டிக்கு அடுத்ததாக சுற்றுலாப் பிரியர்களைக் கவர்ந்து இழுக்கும் மலைகளின் அரசியான கொடைக்கானலுக்கு பயணித்தனர்....லிண்டாவும், ஹாரியும் இவர்களுடன் காரியிலேயே மலைப்பாதையை ரசித்தபடியும், புகைப்படம் எடுத்தபடியும் தங்கள் பயணத்தை அனுபவித்தனர்.....

மிதமான வெயிலும், இதமான சாரலுமாய் கூடவே மெல்லிசையை ஒலிக்கவிட்டு காரை ஓட்டி வந்த பாலா, பாதிதூரம் வந்ததும், தனது கேமராவை எடுத்துக்கொண்டு டிரைவர் சீட்டை AV யிடம் ஒப்படைத்தாள்........
தன் இடப்புறமும் திரும்பி, பல போட்டோக்களை கிளிக்கியவள், தங்கள் பயணத்தை வீடியோவும் எடுத்தாள்.....

சிறிது ஓய்வு எடுக்க வண்டியை நிறுத்தியவர்கள், கீழே இறங்கி மலைகளின் அழகை ரசிக்க.... AV காரிலேயே அமர்ந்துகொண்டான் இவர்களை பார்த்தபடியே...எதேச்சையாக AV புறம் திரும்பியவள், ஒரு கையில் கூலர்ஸும், மறுகையை நெற்றியில் வைத்தபடி AV அமர்த்திருத்தவிதம் பார்க்க மிகவும் ஸ்டைலாக, அழகாக, ஹாட்டாக இருந்தது...தன் கேமரா கண்ணால் ரசித்த பாலா, தடுமாற்றத்தை மறைத்தபடி அவனுக்கே தெரியாமல் அத்தோற்றத்தை பதிவு செய்தாள்....

View attachment 896

கொடைக்கானல், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு ஆண்டு முழுவதும் குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. சங்ககாலத்தில் இதன் பெயர் கோடைமலை, இது கொங்குநாட்டின் ஒரு பகுதி ஆகும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு... பாலா, இதுபோன்ற தகவல்களை பகிர்ந்தபடியும், தேவையான இடத்தில் நிறுத்தி கிளிக் செய்தபடியும் பயணத்தை தொடந்தனர்....

தாங்கள் பதிவு செய்த ஹோட்டலை அடைந்து, மதிய உணவை முடித்துக்கொண்டு, பெரிஜம் எரியை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.... கொடைக்கானல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி, பரப்பளவில் பெரியது. வனத்துறையின் அனுமதி பெற்று, இரவு தங்குவதற்கான அனுமதியும் பெற்று கொடைக்கானலில் இருந்து 27 கி.மீ.தொலைவில் உள்ள ஸ்டார் வடிவ ஏரியை அடைந்தனர்.....

பசும்புல்வெளியாக பரந்து காட்சியளிக்கும் ஏரியின் சுற்றுப் பகுதியில், ரோமத்திற்காக வளர்க்கப்படும் ஆடுகள் மேய்வதை காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது.....

இயற்கை அன்னையின் கொடையை ரசித்தபடியே, போட்டிங் பகுதிக்கு வந்தனர்...நிறைய புதுமணத்தம்பதியினரை காண நேர்ந்தது....லிண்டா - ஹாரி ஒரு போட்டிலும், AV - பாலா மற்றொரு போட்டிலும் சென்றனர்....

பசுமையான மலைகளுக்கு நடுவில் போட்டிங் செய்வது பரவசமாக இருந்தது. போட் செல்லும் வழியின் இருபுறமும் அடர்ந்த மரங்கள் அமேசான் காடுகளைப் போல மிரட்டலாக இருந்தன. வனத்தில் தாகத்திற்காக இளைப்பாறிய வனவிலங்குகளையும் காண முடிந்தது....பாலா, நிறைய முறை வந்திருந்தாலும், பார்க்க பார்க்க தெவிட்டாத இடம்தான் இந்த ஏரி....

View attachment 898

AV க்கு, ஏரியின் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை என தோன்றியது....பாலா தன் முந்தைய ட்ரிப்பில் நடந்த, சுவாரஸ்யமான நிகழ்வையும், சிவாவை தான் படுத்திய பாட்டையும்....மேலும் அவ்விடத்தை பற்றி, தெரிந்த விசயங்களை பகிர்ந்தபடியும்.....புகைப்படங்களை எடுத்தபடியும், பசுமையான சூழலை ரசித்தபடியும் போட்டிங் பயணத்தை நிறைவு செய்தனர்....
 




Last edited:

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
பின்னர், தொப்பி தூக்கி பாறைக்கு சென்றனர்....பேரிஜம் ஏரிப்பகுதியில் உள்ள இந்த இடத்தில் நின்றபடி, தொப்பியை தூக்கிப் போட்டால் கீழே பள்ளத்தில் விழாமல், காற்றின் அழுத்தம் காரணமாக அது மேலே எழும்பி வரும். இதனால், இதை தொப்பி தூக்கும் பாறை என அழைக்கின்றனர்.

அங்கிருந்து, வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்ட ட்ரீ வாக்கிங் சென்றனர்....சுமார் 800
மீட்டர் உயரத்தில், மரங்களுக்கு இடையே அமைக்கப்பெற்ற தொங்கும் பாதை வழியாக வனவிலங்குகள் சரணாலயத்தை ஒருவருடன் ஒருவர் கைகோர்த்தபடி சுற்றி பார்த்தது ஒரு புது அனுபவமாக இருந்தது ஆரனுக்கும் பாலாவுக்கும்.....(எக்கோ டூரிஸத்தின் ஒரு பகுதியாக, கொடைக்கானலில் ட்ரீ வாக் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது...கற்பனையாக இதனை என் கதையில் இணைத்துள்ளேன் பிரண்ட்ஸ்...)

View attachment 899

மனதை மயக்கும் மாலை நேரத்தில், சுற்றிலும் மரங்கள் சூழ, பறவைகளின் ஒலி காதை நிறைக்க.....குளிரில் பரபரவென கைகளை தேய்த்தபடி அண்ணாந்து பிரம்மாண்டமான மரங்களையும், வன விலங்குகளையும் பார்வையிட்டபடி....அசைந்து ஆடும் தொங்கும் பாலத்தில், ஒருவரை ஒருவர் பாலன்ஸ் செய்தபடி தங்கள் பயணத்தை முடித்தனர்......அது ஒரு மறக்க முடியாத சாகச பயணமாக இருந்தது......


இரவு அங்கேயே தங்கி, காலை சூர்யோதயத்தை காண முடிவு செய்திருந்ததால் திரும்ப பேரிஜம் ஏரியை அடைந்தனர்.....தினமும் குறிப்பிட்ட அளவு பயணிகளை மட்டுமே ஏரிப் பகுதிக்கு அனுமதிப்பதால் பாலா முன்னமே இரவு தங்குவதற்காக அனுமதி வாங்கியிருந்தாள். இரவு நேரத்திற்கான உணவுகளை அனைவர்க்கும் பேக் செய்து எடுத்து வந்திருந்தாள்....இரவில் தங்குபவர்களின் உதவிக்காக ஒருவரை பாரெஸ்ட் டிபார்ட்மெண்டில் இருந்து அனுப்புவார்கள். அதிகாலையில் சூரிய உதயத்தின் போது ஏரியின் அழகை ரசிப்பது என்பது பரவசமான அனுபவம். இரவு தங்கினால் மட்டுமே இந்த ஹைலைட்டான அம்சத்தை ரசிக்க முடியும்.

வனஅலுவலர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல....ஏற்கனவே சிலர், டென்ட் அடித்து தங்கி இருந்தனர்......மடமடவென பாலா, AV மற்றும் ஹாரியின் உதவியோடு இரண்டு டென்ட் கட்டினர்........ஒன்றில், ஹாரியும் லிண்டாவும் தங்க, மற்ற டென்ட்டை பாலாவும் AV யும் பகிர வேண்டிவந்தது.....

அனைவரும், கொண்டுவந்திருந்த உணவை உண்டு, ஏற்கனவே நெருப்பு போடப்பட்டிருந்த இடத்திற்கு சென்றனர்....பத்துபேர் கொண்ட காலேஜ் பசங்க குழு ஒன்றும், மூன்று பாமிலியும் சுற்றி இருக்க ஆட்டம் பாட்டத்துடன் களை கட்டிஇருந்தது .....இவர்களும், அச்சோதியில் ஐக்கியமாக....பாலாவை நிறைய கண்கள் வட்டமிட்டன....அதனை பார்த்த AV பொறாமையில், அவள் தன் கண்பார்வையை விட்டு எங்கும் போகாதவாறு பார்த்துக்கொண்டான்.... இடையில், இயற்கை உபாதைக்காக பாலா சென்றபோதும், பாதுகாப்புக்காக கூடவே சென்று அழைத்து வந்தான்....குளிரை தாங்க முடியாமல் ஹாரியும் லிண்டாவும் உறங்க சென்றுவிட.....சிறிது நேரம் கழித்து, பாலாவும் AV யும் டென்டிற்கு திரும்பினர்....

"பாலா, நீ உள்ள படுத்துக்கோ, நான் வெளியே படுத்துகிறேன்"....

லூசாடா நீ என்பது போல பார்த்த பாலா " இந்த குளிர்ல எப்படி வெட்ட வெளியில படுப்ப, போக போக குளிர் இன்னும் ஜாஸ்தியாகும்"...

இல்லை, நீ பத்திரமாக இருந்துக்கோ, நான் அந்த பசங்ககூட ஷேர் பண்ணிக்கறேன்....

"ஹ்ம்ம்ம், அவனுங்களே 2 டென்ட்ல 10 பேரு படுக்கறாங்க... இதுல எக்ஸ்ட்ரா பிட்டிங்கா நீ எங்க படுக்க....பேசாம உள்ள வந்து படு"

இல்லை, நான் ரொம்ப நல்லவன் என AV தயங்க, பாலா உள்ளே சென்று படுத்து விட்டாள்....படுத்தவள் தூங்காமல் முழித்தபடியே கிடந்தவள்..... வெளியில் சென்று பார்க்க, பாலாவை தனியாக விட்டு செல்ல மனமில்லாமல் அவள் இருந்த டென்ட்க்கு வெளியே குளிரை தாங்க முடியாமல் தன்னை குறுக்கி படுத்தபடி இருந்தான்.....அவனை சென்று எழுப்பியவள், உள்ளே வந்து படுக்கும்படி சொல்ல...மறுத்துப்பேசாமல் டென்டின் ஓரமாக முதுகு காட்டியபடி படுத்தான்.... பாலா குளிருக்கு ஏற்றபடி ஆடைகளை உடுத்தி இருந்தாள்....ஆனால் ஆரனோ, ட்ராவல் செய்ய இலகுவான ஆடைகளையே எடுத்து வந்திருந்தான்...இதனை யோசிக்கவில்லை...... குளிரில் அவன் நடுங்குவதை பார்த்த பாலா, பிளாஸ்க்கில் இருந்த சூடான டீயை ஊற்றி கொடுத்தாள்.... பின்னர் தனது சால்வையை எடுத்து போர்த்திவிட்டு தன் உறக்கத்தை தொடர்ந்தாள்.....

View attachment 900

சரியாக 4 மணிக்கு, அலாரம் அடிக்க ஏரிக்கரைக்கு சென்று ரெப்பிரஷ் செய்து வந்தனர்...............பின்னர் வாயில் பனிப்புகையை ஊதியபடி, பாலாவின் சால்வையை போர்த்தியபடி.....அவ்வழகிய காட்சியை தனது மனதிற்கு பிடித்தவள் அருகில் நின்று கண்டு களித்தான் அக்காதலன்......வெண்புகை போர்த்திய, மலைகளுக்கிடையே, ஏரியின் மறுஓரத்தில் இருந்து எழுந்த கதிரவனை பார்க்க கண்கோடி வேண்டும் நமக்கு....இயற்கையின் அழகுக்கு ஈடேது.........

View attachment 901

பயணம் தொடரும்...........
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
Nice ud, Semma traveling, naamalum sendhu tour pona maari irundhathu, tree walk scene super:love::)(y)
Thank you dear Friend.....Our nalla writeraala than vaasipavarkalai kathaiyudan sernthu payanam seiyya vaikka mudiyum.....avvalavu periya paaraatai thantha en tholizhiku Nandri....You made me so happy dear friend.....
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
kodai patriya varnanai arumai sis. nice epi sis:love::love::love::love:tree walik karpanai nalla irunthathu(y)(y)(y)(y)AV ivalo nallavana tentuku ulla koota varama............ nice
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
kodai patriya varnanai arumai sis. nice epi sis:love::love::love::love:tree walik karpanai nalla irunthathu(y)(y)(y)(y)AV ivalo nallavana tentuku ulla koota varama............ nice
Thank you Friend....Thanathu porupil, nesathil irukkum pennin mariyathaiyai kappathu koda oru aanmaganin kadamai Thane...
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
Very nice ud sis.....appidiye ella sceneries um kannu munnadi vandha feel. Andha tree walk Maas. Super accent sis.
Thank you so much Friend.....Very happy to see that you liked this episode and the way I narrated it ....I will keep a note of it....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top