• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
ஹாய் என் இனிய நட்புக்களே,

உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி.............

வரும் புதனன்று அடுத்த அத்தியாயம் போடுகிறேன் பிரண்ட்ஸ்.....

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் தோழி,

சுகி....


அத்தியாயம் 15

சூரிய உதயத்தை கண்டு கழித்த பின்னர், சுற்றிலும் பசுமை போர்த்தியபடி இருந்த பைன் மரங்களையும், யூகலிப்டஸ் மரத்தின் வாசனையையும் முகர்ந்தபடி பாரஸ்ட் பகுதிக்குள் இருந்த தனியார் எஸ்டேட்டை நோக்கிப் பயணித்தனர்....

அந்த தனியார் எஸ்டேட்டை, சிவாவின் தந்தை 5 வருடங்களுக்கு முன்பு வாங்கியிருந்தார் தன் நண்பரிடமிருந்து.......ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வெள்ளைநிற மாளிகை, சுற்றிலும் படிக்கட்டு முறைப்படி விவசாயம் செய்யப்பட்டு இருந்தது.....

2 மணி நேரம் சென்று தங்கும் இடத்தை அடைந்தனர்....இவர்கள் வண்டியை கண்டதும் அங்கேயே தங்கி வீட்டை பராமரிக்கும் சாந்தாவும், கணேசனும் வாசலுக்கு விரைந்தனர்...

" பாப்பா, நல்லாருக்கீங்களா, நீங்க வருவீங்கன்னு சிவா தம்பி போன் பண்ணுச்சு"... ரூம் எல்லாம் ரெடி பண்ணி வைத்துவிட்டேன் .....குளித்துவிட்டு வாங்க....காலை பலகாரம் சாப்பிடலாம்...." என்று மூச்சு விடாமல் பேசிக்கொண்டே பாலாவை அழைத்து சென்றாள்.....

"அக்காகா...மெல்ல கொஞ்சம் மூச்சுவிட்டு பேசுங்க....டிரைவர் அண்ணாக்கு ரூம் ரெடி பண்ணி கொடுங்க....நாங்க ரெடி ஆகிக்கிட்டு கீழே சாப்பிட வர்றோம்"....என்றபடி அனைவரையும் அழைத்துச்சென்றாள்.............

இவர்கள் சம்பாஷணையை கேட்டபடி நுழைந்த ஆரன், என்னாது பாப்பாவா??...நல்ல பீப்பாய் மாதிரி இருக்கா...இவளை போய் பாப்பானு சொல்லறாங்களே....கண்ணு தெரியாதோ.... என முணுமுணுத்தபடி ...

"அக்கா, வாங்க ஹாஸ்பிடல் போலாம் கிளம்புங்க...பாவம் இந்த கண்ணை வைச்சுட்டு எப்படி வேலை செய்வீங்க" என்றான் அக்கறையாக...

"ஏன் தம்பி, எங்கண்ணுக்கு என்ன குறை நல்லாத்தானே தெரியுது." " ஹ்ம்ம்ம்...அப்படி தெரிஞ்சிருந்தா இந்த பீப்பாயை பாப்பானு சொல்லுவீங்களா" என பாலாவை வம்பிழுத்தான்....

"டேய், நான் பீப்பாய் மாதிரியா இருக்கேன்....நல்லா பாருடா... நான் பீப்பாயா?" ... இடுப்பில் கையை வைத்தபடி தன்னை சுற்றி காண்பித்தாள்.....

"ஹ்ம்ம், பீப்பாயினு சொல்ல முடியாது.... பீப்பாய் மேலிருந்து கீழ் வரைக்கும் உருண்டையா இருக்கும்....உனக்கு எது எது எங்கு இருக்கணுமோ அங்க இருக்கு" என்றவன்.... சாமுத்ரிகா சிலை போல, அளவு எடுத்து வைத்தமாதிரி கரெக்டா இருக்கு" என அவளுக்கு மட்டுமே கேட்கும் படி மெல்லிய குரலில், கண் சிமிட்டியபடி அருகில் வந்து கூறினான்....

"ஹான், காலையிலேயே நீ ஒரு மார்க்கமாதான்டா இருக்கே....எதுக்கும் கொஞ்சம் மந்திரிச்சு விட்டாதான் அடங்குவேனு நினைக்கறேன்" ....என்று முகத்தை சுளித்து பழிப்பு காட்டியவாறே தன் ரூம் நோக்கிச்சென்றாள்....

காலை உணவை முடித்து விட்டு, அங்கு அழைத்துவரப்பட்ட பழங்குடி இனத்தை சார்ந்த கணியனுடன் மலையேற துவங்கினர்.....அவ்வூர் மக்கள் போய்வரக்கூடிய ஒற்றையடி பாதையில்.....அடர்த்தியான வனத்தின் உள்ளே மெளனமாக நடந்து சென்றனர்.....பலவித கலவையான மணத்தை சுவாசித்தபடி...போட்டோ எடுத்தபடி....வழியில் கிடைத்த ப்ளம்ஸ்,பேரிக்காய், பேஷன் புரூட், மலைவாழைப்பழம் போன்றவற்றை சுவைத்தபடியும் மலையேற்றத்தை தொடர்ந்தனர்......

இரு மணிநேர பயணத்தின் முடிவில், ஒரு அழகான அருவியை அடைந்தனர்........மனித வாசனை படாத இடம்......அடர்ந்த காட்டுக்குள் வெள்ளித்தூறலாய் வட்டப்பாறையின் மேல் கொட்டும் அருவி.....அவ்விடத்தை ரசித்தபடி ஆரன் மெய்மறந்து நின்றுவிட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.....

சுற்றுலா தலமாக உள்ள, நிறைய அழகிய இடங்கள் அங்கே வந்து செல்லும் மனிதர்களால் மாசுபடுத்தப்படுகிறது....தின்பண்டங்களை தின்றுவிட்டு பிளாஸ்டிக் காகிதத்தை எறிவதும், குடித்துவிட்டு கண்ணாடி பாட்டிலை போடுவதும்...குளித்துவிட்டு துணியை ஆற்றில் விடுவது என தங்களால் முடிந்த அளவு மாசுபடுத்துகின்றனர்.....நம்நாட்டு வளங்களை நாம் தானே காக்க வேண்டும்....கண்ணாடி பாட்டிலை தெரியாமல் மிதித்து விட்டு காட்டு விலங்குகள் பாதிக்கப்படுகின்றன....பிளாஸ்டிக்கை தின்று இறந்துவிடும் பிராணிகள் எத்தனை......நீரை மாசுபடுத்துவதால் பாதிப்புக்குள்ளாகும் நீர்வாழ் உயிரினங்கள் எத்தனை.........மற்ற எந்த உயிரினமும் மனிதரை போல கெடுதல் செய்வதில்லை..............படித்த நாமாவது இதைபோல் செய்யாமல் இருக்க வேண்டும்...நம் சுற்றத்தாரையும் மாசுபடுத்த விடாமல் தடுக்க வேண்டும்.......

பெரிய வட்டப்பாறையின் மேல் விழுந்த அருவி, குளம் போல தேங்கி நின்ற நீரில் கலந்தோடியது....ஹாரியும், லிண்டாவும்...ஷார்ட்ஸ் மற்றும் ஸ்விம் டிரஸ்ஸுடன் நீருக்குள் பாய்ந்தனர்.....ஆரன் ஒரு பாறையின் மேல் அமர்ந்து அருவியை ரசிக்க............பாலாவோ தன் புகைப்படக்கண்ணால், பறவைகளையும், அழகான அருவியையும், கூடவே பாறைமேல் அமர்ந்திருந்த ஆரனையும் கிளிக்கினாள்.....

புகைப்படம் எடுத்துமுடித்து, ஆரனின் அருகில் சென்று அமர....அவளது கேமெராவை பார்த்து கைநீட்டியப்படி, "உன் கேமராவை கொடு, என்னதான் எடுத்திருக்கிறாய்னு பார்க்கிறேன்"

கேமராவை கொடுக்க போன பாலா சிறிது தயங்கி ...அவனையும் சேர்த்தல்லவா படம் பிடித்துள்ளோம்....." அ..அது, லேப்டாப்பில் போட்டு காட்டுகிறேன்....இதில் அவ்வளவு தெளிவாக தெரியாது." என்றபடி கேமரா பாக்கில் வைத்து மூடினாள்.....

எதையோ நம்மகிட்ட மறைக்கிறாளோ.... ஹ்ம்ம் பார்த்துக்கலாம் நமக்கு தெரியாமலா போக போகுது என எண்ணியபடி, "நீ தண்ணிக்குள்ள இறங்கலயா....நீச்சல் தெரியாதா... இல்லை தண்ணியில கண்டமா"...என நக்கலடித்தான்.........

"எனக்கு தண்ணியில கண்டமோ, என்னவோ தெரியாது...ஆனா உனக்கு கண்டம் உன் வாயிலதான்னு நல்லா தெரியுது" என்றபடி உடைமாற்ற சென்றாள்.... கூடவே ஆரனும் எழுந்து, உடைமாற்றி வந்தான்............

View attachment 914

பாலாவின் 2 பீஸ் ஸ்விம் சூட்டை பார்த்து ஆவென வாய் பிளந்தபடி மூர்ச்சையாகி நின்றான்............இவன் தன்னை பார்ப்பதை அறிந்து அவன் மண்டையில் நச்சென்று கொட்டி, " என்னடா, இப்படி வெறிச்சு பார்க்கறே.....பலநாள் பட்டினி கிடக்குறவன் ஆசையா பிரியாணியை பார்க்கற மாதிரி..... நீ லண்டன்ல பார்க்காத பொண்ணுகளா".... என்றாள் கோபத்துடன்.....

"ஹ்ம்ம்..லண்டன் பார்க்ல கூட இதைவிட சின்ன டிரஸ் போட்டு நடமாடுவாங்க டேன்னிங்குனு....நீயும் மற்ற பொண்ணுங்களும் ஒண்ணா".....

"எல்லாருக்கும் இருக்கறதுதானே எனக்கும் இருக்கு, நான் மட்டும் என்ன ஸ்பெஷல்" என்றாள் பியாவிடம்
வாதிடுவது போல் வெளிப்படையாக.... பின்பு தான் சொன்னதை உணர்ந்து, தான் எப்படி இவ்வளவு வெளிப்படையாக இவனிடம் பேசுகிறோம் என எண்ணி... எதுவும் பேசாமல் அருவியை நோக்கி சென்றாள்........

"ஹா ஹா ஹா" என்று சிரித்தபடி............மற்ற யாரும் எனக்கு ஒண்ணுமேயில்லை....ஆனால் நீ எனக்கே எனக்கானவள் என்று முணுமுணுத்தபடி வட்டப்பாறையை நோக்கி சென்றான்.....

ஹாரியும், லிண்டாவும் தங்கள் உலகில் மெய்மறந்து நீச்சல் அடித்தபடியும், ஒருவரை ஒருவர் உரசியபடி அணைத்தும் .... முத்தமிட்டுக்கொண்டும் இருந்தனர்........

பாலா வட்டப்பாறையில், கொட்டும் அருவியின் கீழ் நின்று கொண்டிருந்தாள்.........அவளுக்கு மிகவும் பிடித்த விஷயம் சலசலவென்ற கொட்டும் அருவியில் நிற்பது..............வெகுநேரம் தன்னை மறந்து நீச்சலடித்தவள், பசியெடுக்க அருகில் இருந்த பாறையின் மேல் அமர்ந்தாள் .......

முன்னமே கரையேறிய ஆரன், பாலா பசி பொறுக்க மாட்டாள் என்று அறிந்தவனாக நீரும் பழங்களையும் எடுத்து அவளருகில் சென்றாள்...........கண்ணில் நன்றியை காட்டியபடி, பேரிக்காயை எடுத்து கடிக்க ஆரம்பித்தாள்.........

பசி அடங்கியதும் தான் ஆரனை நிமிர்ந்து பார்த்தாள்...."கால் ரொம்ப வலிக்குதா" என்றான் சிரியாமல்...........தான் கால் நீட்டி அமர்ந்திருப்பதை பார்த்து கேக்கிறான் என நினைத்து....."இல்ல..ரிலாக்ஸ் பண்ணத்தான் இப்படி உட்கார்ந்து இருக்கேன்"

"ஹ்ம்ம் ஓகே...காலையில இருந்து என் மைண்டுகுள்ளவே ஓடிட்டு இருக்கே, அதுதான் காலு வலிக்குதானு கேட்டேன்" என்றான் குறுஞ்சிரிப்புடன்.....

"என்னது உன் மைண்ட்ல ஓடிட்டு இருக்கேனா....எப்படி உன்னை விட்டு தூரமாத்தான் ஓடி போயிருப்பேன்" யார்கிட்ட இந்த பாலா கிட்டவே உன் பிட்டை ஓட்டறியா என பதிலடி கொடுத்தாள்.....

ச்சே, மூக்கு கழண்டு விழும்போல இருக்கே ஆரா.....வேற ஏதாவது ட்ரை பண்ணு என மனசாட்சி குரல் கொடுக்க.....

"ச்சூ, ஒரே ஹாட்டா இருக்கு இல்ல பாலா" என்றான் ஊதியபடி....

இவனுக்கு நட்டு கிட்டு கழண்டு போச்சா....ஜில்லுனு தண்ணிக்குள்ள, சிலுசிலுனு அடிக்கற காத்துல உட்கார்ந்து இருக்கிற நமக்கு நடுக்கம் வரும் போல இருக்கு............இந்த லூசுக்கு ஹாட்டா இருக்கா.....

"உனக்கு எதுவும் இல்லையே...நல்லாத்தானே இருக்கற....இந்த குளுமையான இடம் உனக்கு ஹாட்டா இருக்கா" என்றாள் விசித்திரபிறவியை பார்ப்பது போல....

"ஓஹ், உனக்கு ஹாட்டா இல்லையா.......ஒருவேளை நீ பக்கத்துல இருக்கறதுனால எனக்கு ஹாட்டா இருக்கலாம்" என ஜொள்ளினான்...........

அடப்பாவி என வாயில் கைவைத்தபடி, " என்னடா, ஆர் யூ ப்ளர்டிங் வித் மீ ?

"எஸ் அப்கோர்ஸ், பேபி....பிகாஸ் யு ஆர் என்ஜாயிங் இட்" என்றான் நகைச்சுவையான புன்னகையுடன்........

"நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குதாம்...விட்டா நான்தான் உன்னை ப்ளர்ட் பண்ண வைச்சனு கூட சொல்லுவடா" என்றாள் சிரித்தபடி

"அதுதானே உண்மை....உன்னோட திமிராலயும்,அழகாலயும் அறிவாலயும் நீதாண்டி என்ன ப்ளர்ட் பண்ண வைத்தாய்" என மெல்லிய குழைந்த குரலில் கூறினான்....

"சரி, ஜொள்ளியது போதும், ஆல்ரெடி அருவி ஓடுது....சோ, உன் அறுவையை கொஞ்சம் ஸ்டாப் பண்ணு" என்றாள் கேலியாக சிரித்தபடி....

"அசிங்கபட்டுட்டியே ஆரா" என ஆள்காட்டி விரலை தன்னை நோக்கி காட்டியபடியே எழுந்தான்...

பேசிக்கொண்டே இருவரும் நேரமாகிவிட்டதை உணர்ந்து, ஹாரி மற்றும் லிண்டாவை அழைக்க அவர்களைத் தேடினர்....

அவர்களை தேடிச்சென்ற இருவரும், அவர்கள் இருந்த கோலத்தை பார்த்து செயலிழந்து மூர்ச்சையாகி நின்றனர்......

பயணம் தொடரும் ................
 




Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
நம்நாட்டு வளங்களை நாம் தானே காக்க வேண்டும்....கண்ணாடி பாட்டிலை தெரியாமல் மிதித்து விட்டு காட்டு விலங்குகள் பாதிக்கப்படுகின்றன....பிளாஸ்டிக்கை தின்று இறந்துவிடும் பிராணிகள் எத்தனை......நீரை மாசுபடுத்துவதால் பாதிப்புக்குள்ளாகும் நீர்வாழ் உயிரினங்கள் எத்தனை.........மற்ற எந்த உயிரினமும் மனிதரை போல கெடுதல் செய்வதில்லை..............படித்த நாமாவது இதைபோல் செய்யாமல் இருக்க வேண்டும்...நம் சுற்றத்தாரையும் மாசுபடுத்த விடாமல் தடுக்க வேண்டும்.......
Nice Ud, and super information:)(y)
 




Sairam

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
327
Reaction score
392
Location
Tamilnadu
என்ன பசங்களா ஹாரியும் லின்டாவும் உங்களுக்கு ப்ரி ஷோ காட்டிட்டாங்களா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top