• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
ennapa sugi
propose scenea comedy scena mattriya perumai ummaye serum valgha um ellutthu pani valarga un writting style pidipa porgilli
என் கதைக்கு முதன் முதலாக பொற்கிளி பரிசளித்த நீவீர் வாழ்க...நின் குலம் வாழ்க.....வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க.....
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
AV propose scene chance illa Vera level... Taj Mahal controversies naan kelvi pattu irukken... innum niraiya namba history matri irukkanga... Semma interesting ud.., can’t wait for Sundari response....
AV proposal scene pidikumo pidikaathonu neichen.....wow...ellarukum pidithirukirathu.....thank you Friend......
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
Ama ya indha propose panna scene semma comedy...enakke first enna solran nu purila...apparam patha arivaalithanama yosichurukkan av

:ROFLMAO::ROFLMAO:
சுந்தரி, உன்னை எப்படி
ப்ரொபோஸ் பண்ணறதுனு தெரியாம மண்டை காய்ந்து....என்னை உனக்கு பிடிக்குமான்னு தெரிய உன்னை உசுப்பேத்திவிட்டு அதுல எனக்கு நானே ஆப்பு வெச்சு....நான் பட்ட கஷ்டம் எனக்குள்ளவே போகட்டும்....இதே கஷ்டத்தை என் பையன் உன் பொண்ணால பட வேண்டாம்....சோ நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்க ரெண்டு பேரையும் அண்ணன் தங்கையா ஆக்கிடலாம்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இந்த பகுதியை எழுதும் பொழுது....பிடிக்குமோ பிடிக்காதோ என நினைத்து தான் எழுதினேன் சிஸ்.....ஹைலைட்டே இந்த சீனாக ஆகிவிட்டது......:love: :love: :love: :love: :love:
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
Ulahathulayae porakka pora pasangala annan thangai aakki propose pannathu ithuvae muthan murai nice proposing semmai ud pa aana sinnatha mudinjiruccu
ha ha ha ha ... thank you dear friend.... you made my day....
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
full moon tajmahal pakathil propose panrana so sweet:love::love::love::love::love:tajmahal pathina details arumai.

:D:D:D:D:D:Dnice:love::love::love::love::love:
நன்றி தோழி....வரலாற்று பேராசிரியர் PN Oak அவர்களின் புத்தகத்திலுள்ள தகவல்களைத்தான் கொடுத்துள்ளேன்......தங்கள் அனைவருக்கும் ப்ரோபோசல் பகுதி பிடித்திருந்தது என அறியும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது....
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
தாஜ் மகளை பற்றி நீங்கள் கூறிய விஷயங்கள் அருமை
Kandipaga padikrom
Aran chellam ushar agita superrrr
Thank you for your support Friend......Vera vali balakooda irukkum pothu ushaara than irukanum.....
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
ithula oru important news ennana Taj Mahal shahjahan build pannathu than and athu kaadhal chinnam than athu mattum illama athula patterned arabian marbles plus shahjahan than katnaruthu apdinindrathuku neriya evidence irukku and kindly prove aana vishayathai mattum ezhuthunga bcoz sarchai kuriya vishayathai pesi innoru babur mosque ramar kovil issue start panna vendame plz
ஹாய் பிரண்ட்.....

கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்ட பழமையான பொக்கிஷம் தான் தாஜ்மஹால்.....அந்த காலகட்டத்தில் என்ன நடந்து இருக்கும் என நீங்களோ நானோ பார்த்திருக்கவோ அல்லது இதுதான் உண்மை என அடித்து கூறவோ முடியாது...........நம் முன்னோர்களால் எழுதி வைக்கப்பட்ட குறிப்பு அல்லது வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறியதை தான் உண்மை என நம்பிக் கொண்டிருக்கிறோம்..........அந்த வகையில் வரலாற்று பேராசிரியர் Dr. P N Oak என்பவர் சில பல ஆதாரங்களுடன் கொடுத்திருந்த தகவலைத் தான் எனது கதையில் பகிர்ந்துள்ளேன்......

மேலும் என்னை பொறுத்த வரைக்கும் இறைவன் ஒருவனே....எல்லா மதமும் சம்மதம்.......யாரையும் புண்படுத்தவோ....வேறுவகையில் பிரச்சனையை ஏற்படுத்தவோ இந்த தகவல்களை பகிரவில்லை..........என்னுடைய பொழுது போக்கிற்க்காக கதை எழுதும் நான், ஜாலியான கதையை கொடுக்க முனைத்துள்ளேனே தவிர நீங்கள் சொல்லும் விதமாக எந்த அரசியல் பண்ணவும் நான் கதை எழுதவில்லை என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.................

தங்கள் கருத்துக்கு நன்றி...........உங்களை போல, எனக்கும் மிக நெருங்கிய இஸ்லாம் நண்பர்களும், கிறிஸ்துவ நண்பர்களும், இன்னும் பிற நண்பர்களும் உள்ளனர்.....

தயவு செய்து என் கதையில் மதத்தை கொண்டு வராதீர்கள்.........
 




Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka
ஹாய் என் இனிய நட்புக்களே,

Saturday special treat for you guys.....

உங்களை ஏமாற்ற மனமில்லாமல் மீண்டும் ஒரு சுவாரசியமான பதிவோடு வந்துவிட்டேன்.....

படித்துவிட்டு, மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் தோழிகளே...........

மீ வைட்டிங் பார் யுவர் லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்...

அன்புடன்,
சுகி............


அத்தியாயம் 18

View attachment 956

இருவரும் பழையபடி ஒருத்தரை ஒருத்தர் வாரியபடியே விமான பயணத்தை கழித்தனர்........கனெக்ட்டிங் பிளைட் மூலம், சரியாக 5 மணி நேரத்தில் டெல்லி ஏர்போர்ட்டை அடைந்து, தி லீலா பேலஸ் ஹோட்டலை நோக்கி பயணித்தனர்..........

செக்கின் முடித்து, ரூமிற்குள் சென்று செட்டிலாகும் போது மணி பத்து......தாஜ்மஹாலில் சூரிய உதயம் மற்றும் மறைவு மிகவும் அழகானதாகும்...டெல்லியிலிருந்து ஆக்ரா வரை ட்ரெயின் மூலம் பயணிப்பதே சிறந்த வழி....பயண நேரத்தை மிச்சப்படுத்தலாம்....காலை 6 மணிக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் பிடித்து 8 மணிக்கு ஆக்ரா சென்றடைந்து...ப்ரீபெய்டு டாக்ஸி மூலம் தாஜ்மஹாலை அடைவது என முடிவு செய்து தூங்க சென்றனர்.........இவர்கள் செல்லும் நேரத்திற்கு சூரிய உதயத்தை பார்க்க முடியாது......ஆனால் சூரியன் மறைவதை பார்க்க முடியும்...........

காலை 4 மணிக்கு எழுந்த ஆரன், இண்டர்காம் மூலம் ஹாரி மற்றும் லிண்டாவை ரெடியாகுமாறு பணித்துவிட்டு, பில்டர் காபியுடன் சென்று பாலாவின் அறைக்கதவை தட்டினான்...........

காபியின் மணத்தை கண்மூடி நுகர்ந்தவாறே, வழிவிட்டவள் .... பிரஷ் பண்ணிவிட்டு தனக்கான காபியை எடுத்து ரசித்து பருகினாள்.....அந்த கடும்குளிருக்கு இதமாக தொண்டைக்குள் இறங்கியது..........

பாலா குளிக்க ஆயத்தமாக, "ஹேய் வெயிட்....லெட்ஸ் சேவ் வாட்டர்...ஷவர் டுகெதர்"என்றான் ஆரன் கண்சிமிட்டியபடி குறும்பாக......"பேசாம நீ குளிக்காம இரு....வாட்டரை இன்னும் சேவ் பண்ணலாம்" என்றபடி ஆரனை வெளியே தள்ளி கதவை சாத்தினாள்........

ஹஸ்ரத் நிஸ்சாமுதின் ரயில் நிலையத்தை அடைந்து தங்கள் ஆக்ரா பயணத்தை ஆரம்பித்தனர்.........அனைவரும் காலை உணவு முடித்து, தாஜ் மஹாலை அடையும் பொழுது காலை மணி 9.........

ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடியாது.....கட்டிடக்கலையின் உச்சமென திகழும் இந்த தாஜ் மஹால் போன்றொரு கட்டிடத்தை காண்பது கூட அரிதே என நினைக்க தோன்றியது...எங்கிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியாக தெரியும் சமச்சீர் கட்டிடம்....வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடம் தான் இந்த மஹால்.

சில இடங்களை பகலில் சென்று பார்ப்பதை விடவும் இரவு நேரத்தில், மின் விளக்குகளின் ஒளியில் பார்க்கையில் அவை அதி அற்புதமாக காட்சியளிக்குமாம். அதிலும் குறிப்பாக சில இடங்களை பவுர்ணமி நாளின் நிலவொளியில் பார்ப்பதற்கு இணையான விஷயம் வேறெதுவுமே இருக்க முடியாதாம்....என கைடு விளக்கிக் கொண்டிருக்க......பார்ப்பதற்கு சிறிய மாளிகை போல தோற்றமளித்த தாஜ் மஹால் நடந்து அருகில் செல்ல செல்ல அதன் பிரம்மாண்டத்தை காண முடிந்தது............

ஆக்ரா நகரம் முழுவதுமே காண்பதற்கு இனிமையாக அழகானதாக இருந்தது....காதலின் சின்னம் என அழைக்கப்பட்டாலும், தாஜ் மஹால் பல்வேறு சர்ச்சைகளை கொண்டது.....

முகலாயமன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான ''தாஜ்மஹால்'' என்று வரலாறு தெரிவிக்கிறது.
ஆனால் தாஜ்மஹால் என்பது ''தேஜா மஹாலயா'' என்றழைக்கப்பட்ட புராதன சிவன்கோயில் என்று ஆதாரங்களுடன் கூறுகிறார் இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.

முன்பு ''தேஜா மஹாலயா'' என்கிற பெயரால் தாஜ்மஹால் அழைக்கப்பட்டுவந்தது என்று அவர் தெரிவிக்கிறார், ஜெய்ப்பூர் ராஜா ஜெய்சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான ''பாத்ஷாநாமாவில்'',ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகையை, மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்தெடுத்தது குறித்தும் குறிப்புகள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.

தாஜ்மஹாலின் உண்மையான வரலாற்றை மறைத்திட பிற்காலத்தில் புனையப்பட்ட பெயர்தான் மும்தாஜ்- ஷாஜகான் காதல் கதை என்கிறார் நியூயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின்மில்லர்.அவர்தான் தாஜ்மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறையில் தாஜ்மஹாலின் ஆயுளை கணித்தவர். மில்லரின் கருத்துப்படி தாஜ்மஹால் வயது 300க்கும் மேல் இருக்கும்,இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கிறார். அதே சமயம் மும்தாஜ் இறந்து ஒருவருடத்திற்குள் ஆங்கிலேய பயணியான பீட்டர்மாண்டி ஆக்ரா வந்திருந்தார்.இவரது பயணக்குறிப்புகளில் தாஜ்மஹாலின் கலை நயம் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் இன்று சொல்லப்படுகிற வரலாற்றில் மும்தாஜ் இறந்து 20 வருடத்திற்கு பிறகல்லவா தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கிறது என இவற்றையும் ஆதாரங்களாக முன்வைக்கிறார் பேராசிரியர் ஓக்.

பல நூறு அறைகளைக் கொண்ட தாஜ்மஹாலின் பெரும் பகுதி பொதுமக்களுக்காக இன்றளவும் திறந்துவிடப்படவில்லை. இதற்கு காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று கூறப்படுகிறது. தாஜ்மஹாலின் உள்ளே தலையில்லாத சிவன் சிலையும்,பூஜைக்கு பயன்படுத்துகிற பொருட்களும் இருக்கின்றன என்று அடித்து கூறும் பேராசிரியர் ஓக், தாஜ்மஹாலின் கட்டிடகலை நுட்பங்களை பார்க்கும் போது இது அனைத்தும் ஒரு இந்துகோயிலுக்குறியது என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.

இத்தனை விபரங்களையும் பேராசிரியர் ஓக் ''தாஜ்மஹால் உண்மையான வரலாறு'' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார். இதில் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாக கூறி அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் அன்றைய பாரதப்பிரதமர் இந்திராகாந்தி அரசால் தடைசெய்யப்பட்டது. (முடிந்தால் TajMahal The True Story By P N Oak புத்தகம் வாங்கி படித்துப்பாருங்கள் மக்களே)

எத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், தாஜ் மஹாலின் உள்ளே நுழைந்ததுமே மனஅமைதி, ஒருவித இதம் ஏற்படுவதை உணர முடிந்தது பாலாவினால்.......இந்த ஹய் டெக் காலத்தில்கூட இதைப்போன்ற ஒரு மாளிகையை யாராலுமே அமைத்துவிடமுடியாது என்பது திண்ணம்.........

சுவாமி விவேகானந்தரின் கருத்துப்படி, தாஜ்மஹாலின் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறுமாதமாவது தேவைப்படும்......படிக்கும்போது அதிகப்படியாக தோன்றிய வர்ணனை எவ்வளவு சத்தியம் என நேரில் பார்க்கும் போது புரிந்தது................

இத்தகைய பெருமை வாய்ந்த தாஜ் மஹால் அமில மழையால் மெல்ல மெல்ல சேதமடைந்து வருகிறது. வெயில், மழை, பனி, மற்றும் காற்றினால் பரவும் தூசி போன்ற காரணங்களினால் உலகப் பிரசித்திப் பெற்ற இந்த தாஜ்மகால் கட்டடம் மாசு படிந்து வருகின்றது என்பது வேதனைக்குரிய விஷயம்....

பிரமிப்புடன், தாஜ்மஹாலையும் அதன் வரலாறையும் கேட்ட நால்வரும், கால் வலிக்க வலிக்க சலிக்காமல் சுற்றி பார்த்தனர்......சற்றும் பிரமிப்பு குறையாமல், பூங்காவில் அமரும் போது மணி 8.....குறைவான மக்களே பூங்காவில் இருந்தனர் கடைசி ட்ரைனில் போக இருப்பவர்கள் மற்றும் லோக்கல் ஆட்கள்..........

கடைசி ட்ரெயின் டெல்லிக்கு 9 மணிக்கு என்பதால், சிறிது நேரத்தில் கிளம்ப இருந்தனர்.............பாலாவும், ஆரனும் அருகருகே அமர்ந்து...இருட்டில் செயற்கை விளக்குகளின் ஒளியில் அவ்வழகிய மாளிகையை, காதல் சின்னத்தை ரசித்தபடி மெளனமாக இருந்தனர்..............

அங்கு நிலவிய மௌனத்தை கலைத்தபடி, "சுந்தரி, உன்னை எப்படி
ப்ரொபோஸ் பண்ணறதுனு தெரியாம மண்டை காய்ந்து....என்னை உனக்கு பிடிக்குமான்னு தெரிய உன்னை உசுப்பேத்திவிட்டு அதுல எனக்கு நானே ஆப்பு வெச்சு....நான் பட்ட கஷ்டம் எனக்குள்ளவே போகட்டும்....இதே கஷ்டத்தை என் பையன் உன் பொண்ணால பட வேண்டாம்....சோ நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவங்க ரெண்டு பேரையும் அண்ணன் தங்கையா ஆக்கிடலாம்....என்ன சொல்லறே.....நம்மளோட IQவும், அழகும் சேர்ந்து அவங்களை சூப்பர் குழந்தைகளா மாற்றிடும் என்றானே பார்க்கலாம்.........(Super Child - An exceptionally gifted child)

ஒரு நிமிடம் ஸ்டன்னாகி, என்ன சொன்னான் என யோசிப்பதற்குள்.... பாலா எதுவும் பேச டைமே கொடுக்காமல் (பேசவிட்டால் அவனுக்கு தானே ஆபத்து), அவள் முன் மண்டியிட்டு...அவள் கைவிரல்களை பற்றி " ஐ பீல் இன் மை ஹார்ட் , யு ஆர் எவ்ரிதிங் டு மீ....ஐ லவ் யு டில் மை லாஸ்ட் பிரீத்" என அளவில்லா காதலுடன் அவளின் விரலில் அழகான வைர மோதிரத்தை போட்டான் தாஜ்மஹால் மற்றும் நிலவின் சாட்சியாக ............

அவனுக்கு மனநிறைவாக இருந்தது..தன்னுடைய காதலை அவன் கூறிவிட்டான்....அவள் இப்பொழுதே ஒத்துக்கொள்கிறாளோ இல்லையோ தெரியாது....ஆனால் அவன் காதலின்மேல் உள்ள நம்பிக்கை அவனிடம் அவளைச் சேர்க்கும் என முழுமையாக நம்பினான்............

அவள் பேசாமல் அமைதியாக இருக்கவுமே, அவள் வேண்டாம் என்று கூறவில்லை என்பதே நிம்மதியை தந்தது....பாலாவை அறிந்திருந்ததால், பிடிக்கவில்லையெனில் முகத்திற்கு நேராக பட்டென்று மறுத்திருப்பாள்........ஏன் கன்னத்தில் அரை கூட கிடைத்திருக்கலாம்.......

அவன் ப்ரொபோஸ் பண்ணிய விதத்தை பார்த்த பாலாவுக்கு....முதலில் சிரிக்க தான் தோன்றியது....யாரும் இப்படி சுற்றி வளைத்து ப்ரொபோஸ் பண்ணியிருக்க மாட்டார்கள்............உடனே ஓகே சொல்லாமல், தான் யோசிக்க வேண்டும் எனக் கூறி...ஆக்ராவிலிருந்து டெல்லி பயணத்தை மேற்கொண்டனர்.................

பயணம் தொடரும்...........
Nice
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top