• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
ஹாய் என் இனிய நட்புக்களே,

உங்களை சந்திக்க மீண்டும் ஒரு பதிவுடன் வந்து விட்டேன்.............

என்னுடைய முந்தைய அத்தியாயங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..........

மறக்காமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே..........உங்கள் கருத்துக்கள் என் எழுத்தை மேம்படுத்த உதவும்...........

தங்கள் லைக்ஸ் மற்றும் கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்கும்,
சுகி....

அத்தியாயம் 19

பயணம் கற்றலில் ஒரு வகை. மனிதர்கள் மட்டுமல்லாது, சில விலங்கினங்களும், நிறைய பறவை இனங்களும் கூட நீண்ட பயணங்கள் மேற்கொள்கின்றன.

1525720477705.png

இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மதுவுண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் ஒன்று உண்டெனில் அது கண்டிப்பாக கோவாவாகத்தான் இருக்க முடியும். கோவா நகரம் போர்த்துகீசியர்களின் ஆளுகையின் கீழ் இருந்ததால் அதன் வாழ்வு முறையில் போர்த்துகீசிய பாதிப்பு பளிச்சென தெரிவதை இங்கு முதல் முதலாக வரும் பயணிகள் கட்டாயம் உணர்வார்கள். இந்த நகரத்தில் வாழும் மக்கள் தங்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். அதன் காரணமாகவே இந்நகரத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் கட்டிடங்களையும், அடையாளச் சின்னங்களையும் கவனத்துடன் சிறந்த முறையில் பராமரித்து வருகிறார்கள்.

அத்தகைய புகழ் வாய்ந்த கோவாவின் கேண்டலிம் பகுதியில் உள்ள தனியார் கடற்கரையின் குடிலில், நீலக்கடலை பார்த்தவாறு அமர்ந்து, காலை உணவாக பரிமாறப்பட்ட பாரம்பரிய கொங்கணி உணவு மற்றும் இங்கிலிஷ் உணவு வகைகளை ரசித்து உண்டனர் அந்நால்வரும்.........மெளனமாக உணவை முடித்த பின்னர், ஹாரியும் லிண்டாவும் இன்று ரிசார்ட்டிலேயே ஓய்வு எடுப்பதாக சொல்லி விடைபெற, ஆரனும் பாலாவும் கடலுக்கு அருகில் போடப்பட்டிருந்த நிழற்குடையின் கீழ் அருகருகே அமர்ந்தனர் .............

"சுந்தரி, நீ இன்னும் எனக்கு பதில் சொல்லவே இல்லை" என்றான் பாலாவை பார்த்தவாறு சாய்ந்து அமர்ந்தபடி........

"எதுக்கு, என் பொண்ணால் உன் பையன் கஷ்டப்படக்கூடாதுனு சொன்னியே அதுக்கா" என நக்கலாக சொன்னவள்..."அதை உனக்கோ இல்லை எனக்கோ...கல்யாணம் ஆகும்போது பார்த்துக்கலாம்" என்றாள் கூலாக........

"கல்யாணம், குழந்தைக்கே வழியக் காணோம், இதுல அய்யா பையனுக்கு பொண்ணு செட் பண்ண போயிட்டாரு....என்ன கொடுமைடா சரவணா" என்றாள் பல்லை கடித்தபடி முணுமுணுப்பாக ...........

"நீ மட்டும் ரெடினு சொல்லு சுந்தரி, நாம இப்பவே கூட குழந்தையை ரெடி பண்ண ஆரம்பிச்சுடலாம்" என்றான் புருவத்தை உயர்த்தி கண்சிமிட்டியபடி

"ஓஹ், அய்யாவுக்கு அப்படி வேற நினைப்பு இருக்கோ, என்கிட்டே அடிவாங்காம, உருப்படியாக ஊரு போய் சேரமாட்டேன்னு நினைக்கறேன்"

"என்ன சுந்தரி, அடிதடினு யாரோ மாதிரி பேசற, நீயும் நானும் அப்படியா பழகியிருக்கோம்..."

"எப்படா நாம பழகி இருக்கோம்...நீ பீல் பண்ணற அளவுக்கு எல்லாம் நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல ஒண்ணுமே இல்லை..."

"அதுக்கு தான் சொல்லறேன், நாம பழகி பார்க்கலாம்னு....பழகி பார்த்தாதானே, நான் ஹாரியைவிட பெட்டரா கிஸ் பண்ணறேனா இல்லையானு தெரியும்..Practice Makes a Man Perfect.....சோ, நாம ரெண்டுபேரும் சேர்ந்து ப்ராக்டிஸ் பண்ணி, குருவை(ஹாரியை) மிஞ்சிய சிஷ்யனாகிடலாம் என்ன சொல்லறே பேபி..." என கண்ணில் குறும்புப்சிரிப்புடன் வாய்கொள்ளாச் சிரிப்புடன் பாலாவை வம்புக்கிழுத்தான்.....

ஹான், இவன்கிட்ட எப்ப நாம ஹாரி ரசிகையானதை சொன்னோம் ஒருவேளை பியாகிட்ட பேசுவதை கேட்டிருப்பானோ....எமகாதகன் இவன்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையாத்தான் இருக்கனும்........."ஹ்ம்ம்ம், நீ ப்ராக்டிஸ் பண்ணிப் பார்க்க நான் ஒண்ணும் உன் கேர்ள் பிரண்டோ, உன் பொண்டாட்டியோ இல்லை...அதுக்கு வேற ஆள பாரு.........."

"என்ன சுந்தரி, இதுக்கெல்லாம் வேற ஆள பார்க்க முடியுமா....நீ என் பக்கத்துல இருக்கும்போது நான் எதுக்கு வேற ஆள பார்க்கணும் டார்லிங்" என்றபடி சரசமாக அருகில் வந்தான் ...........

பதட்டமடைந்த பாலா அவசரமாக, " அங்க ஒரு வெள்ளைக்காரி உன்னவே முறைச்சு முறைச்சு ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கா....நீ வேணும்னா உன் ட்ரைனிங்க்கு அவளை யூஸ் பண்ணிக்கோ" என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்....

"அப்படியா சொல்லற, நீ சொன்னா சரியாகத்தான் இருக்கும்" என்றபடி எழுந்தவன் 100 அடி தொலைவில் இருந்த அப்பெண்ணை நோக்கி நடந்தான்.......

தான் சொன்னமாதிரி செய்துவிடுவானோ என நெஞ்சம் பதைபதைக்க பார்த்துக்கொண்டிருந்தாள் பாலா.....

"ஹாய், ஹாவ் யு காட் எனி ஸ்பிரைன் ஆன் யுவர் நெக்....யு ஆர் ஸ்டேரிங் அஸ் பார் எ லாங் டைம்....டூ யு நீட் எனி ஹெல்ப்" என்றான் அவளருகில் இருந்த சேரில் அமர்ந்தபடி..........

"ஓஹ், நோ தேங்க்ஸ்" என சிறிது தடுமாறியவள்...."ப்ளீஸ் டோன்ட் மிஸ்ட்டேக் மீ, ஐ ஹாவ் நாட் லுக்டு அட் யு கைஸ்.....வாஸ் திங்கிங் ஆன் சம்திங் பர்சனல்" என்றாள் தெளிவாக.........ஏதோ நினைத்தபடி யோசனையாக பார்வையை இவர்கள் புறம் திரும்பியபடி தனி உலகில் இருந்தவள்......ஆரன் பேசியபடி அருகே அமரவும் நினைவுலகம் வந்தாள்...

இருவரும் பொதுவாக சிரித்து பேசியபடி இருக்க...தூரத்தில் இருந்து பார்த்த பாலா... சிறிது நேரம் பொறுத்துப்பார்த்தவள் புசு புசுவென்ற கோபத்துடன் ஆரனிடம் வந்தாள்....

அருகில் வந்த பாலாவை காட்டியபடி, "சி ஐ டோல்டு யு.....மை வைப் இஸ் சோ கிரேசி அபௌட் மீ.....ஷி காண்ட் லிவ் வித்தவுட் மீ பார் எ செகண்ட்..." என்றான் நக்கல் சிரிப்புடன்..........

"டேய், நீ என்கிட்டே செமத்தியாக வாங்கப் போறேடா" என்றவள் அவன் தலைமுடியை பிடித்து ஆட்டியவள் அவன் எழுந்து ஓடவும்.....துரத்தி பிடித்தவள் அவனை கரை ஓரத்தில் இருத்த நீருக்குள் தள்ளி...........நீருடன் சேர்த்து ஈர மணலை...சுவற்றில் சாணி அப்புவது போல் தூக்கி அவன்மேல் வீசினாள்.....

பதிலுக்கு அவளையும் நீரில் தள்ளிவிட்டவன்....அவள்மீதும் நீரைஇறைத்து விளையாட ஆரம்பித்தான்...........மாறி மாறி ஈரமணலை இறைத்து விளையாடி களைத்தவர்கள்....நீரிலேயே கண்மூடி இளம்வெயிலுக்கு இதமாக படுத்திருந்தனர்.....

பாலா குட்டி ஸ்கர்டும், டிஷர்ட்டும் அணிந்திருந்தாள்....அது நீரினால் உடலோடு ஒட்டிபோய் அவளது வடிவை அழகாக காட்டியது....நீரில் வெளுத்திருந்த மேனியும், சிவந்த இதழும் ஆரனை வாவென அழைக்க....தன் உணர்வுகளை கட்டுப்படுத்த படாதுபாடு பட்டான்.........

"என்னடா, உன் கேர்ள்பிரண்ட் ட்ரைனிங் எடுக்க ஓகே சொல்லிட்டாளா" என கிண்டலாக கேட்கவும்....."நான் ஏன்டி, அடுத்தவ கிட்ட ட்ரைனிங் எடுக்கணும் என் சொந்த ப்ராபெர்ட்டி பக்கத்தில் இருக்கும்போது..." என்றவன் அருகில் படுத்திருந்த பாலாவை அழுத்தி பிடித்தபடி....அவள் இதழில் பொறுமையாக, மென்மையாக...நீண்ட கவிதையை எழுதினான்..........முதலில் திமிறியவள், அவனது ஆழ்ந்த, அழுத்தமான முத்தத்தில் மூழ்கி அமிழ்ந்து போனாள்......அவள் மூச்சு திணறவும், விடமனமில்லாமல் விட்டவன்.... பெருமூச்சுவிட்டபடி கண்மூடி படுத்திருந்தவளின் தலைமுடியைக் கோதியவன்... முகத்தில் தன்னவள் என்கிற சந்தோஷ விகசிப்புடன்....நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்..........

"ஏய் சுந்தரி, கண்ணை திறந்து பாருடி உன் புருஷை....மீ பாவம்டி...எதாவது பேசு இல்லனா முன்ன மாதிரி ரெண்டுஅடிகூட கொடுத்துடு....ஆனா பேசாம மட்டும் இருக்காதே" என்றான் வருத்தமாக....அவசரப்பட்டுவிட்டோமோ, அவளுக்கு பிடிக்கவில்லையோ என நினைத்தபடி....

கண்ணைத் திறந்து அவனை பார்த்தவள்,"ஹ்ம்ம்ம் ஏதோ ஹாரி ரேஞ்சுக்கு இல்லைனாலும் ஏதோ பரவாயில்லை சுமாராக இருந்தது" என சிரிக்காமல் கூறியவள்.........."உனக்கு கொஞ்சம் நிறையவே ப்ராக்டிஸ் தேவைப்படும் போல இருக்குடா" என்றவள் எழுந்து தன் காட்டேஜ்க்கு செல்ல ஆயத்தமானாள்......

ங்கே என முழித்தபடி தாடையின்மேல் விரல்களை வைத்தபடி, "அடிப்பாவி, இந்த வெட்கம் வெட்கம்னு சொல்லுவாங்களே...அப்படினா கிலோ என்ன விலைனு கேட்ப போலிருக்கே" என்றான் குறுஞ்சிரிப்புடன்....

"உன்கிட்ட நான் எதுக்குடா வெட்கப்படனும்...வேணும்னா நீ வெட்கப்படு, நான் வேணும்னா பார்த்து ரசிக்கிறேன்.....எல்லாக் கதைகளிலும் ஹீரோயின் வெட்கப்பட்டு செந்தணல் ஆனாள், செங்கொழுந்து ஆனாள் அப்படி
இப்படின்னு சொல்லறாங்க....நான் நிஜத்துல பார்த்ததே இல்லடா....ப்ளீஸ் ப்ளீஸ் ஒருவாட்டி வெட்கப்பட்டு காட்டேன்...பார்க்க ஆசையாக இருக்கு" என கலாய்த்து அவனது பிபியை எகிற வைத்தாள்.........

"ஏய் நீ பொண்ணா இல்லை ஆபரேஷன் எதாவது பண்ணி அவனா இருந்து அவளா மாறிட்டயா" என்றான் சந்தேகம் வருவதுபோல நடித்தபடி.

"வெட்கப்படலன்னா பொண்ணே இல்லைனு சொல்லிருவியா....இருடி நீ என்கிட்ட மாட்டாமலயா போய்டுவே" என கறுவ....

"ஹய்யோ...இல்லடா செல்லம்....நீ பெண் இல்லை
தேவதைன்னு சொல்ல வந்தேன்டா...டங்க் ஸ்லிப் ஆகிருச்சு..." என உடனே காலில் விழுந்தான் நம் ஜான்சிராணியின் ஹீரோ.......

ஸ்ஸ்ஸ்ஸப்பா, சொல்லாமலே பெரிய ஆப்பா வைப்பா...சொல்லிட்டு செஞ்சானா நம்ம பாடி தாங்காதுடா சாமி.....பியாவாச்சும் பாவப்பட்டு அரவிந்தை அவங்க பிரண்ட்ஸ் கிட்டத்தான் மாட்டிவிட்டாள்...இவ வஞ்சனை இல்லாம வைத்து செய்வாளே என நினைத்தவன் கொஞ்சமும் யோசிக்காமல் அந்தர்பல்டி அடித்தான்.....
 
Last edited:

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
தத்தம் ரூமிற்கு சென்று கிளம்பி, ஹாரி லிண்டாவையும் அழைத்துக்கொண்டு பாகா கடற்கரைக்கு சென்றனர்....பாகாவில் உள்ள பிரிட்டோஸ் உணவகம் Sea Food உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது...அங்கு சென்று தங்கள் மதிய உணவை முடித்தவர்கள்.....

கோவாவில் ஏராளமான கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளன, அவற்றில் ஒன்றுதான் குழந்தை இயேசு பசிலிக்கா (Basilica of Bom Jesus) அல்லது Borea Jezuchi Bajilika என்னும் கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டு இடம்.
இந்தியாவின் பழைய கோவா நகரில் அமைந்துள்ள இந்த தேவாலயம், உலகப் பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் புனித இடம் ஆகும்.....இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற புனித பிரான்சிசு சேவியரின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில்தான் புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் அழியாநிலையில் உள்ளது. நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அழிவுறாமல் பாதுகாக்கப்பட்டு வரும் தூய சேவியரின் உடல், அத்தேவாலயத்தில் வெள்ளிப் பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு ஒரு முறை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம்.

நானூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கருங்கற்களாலான தேவாலயம் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக காட்சியளித்தது.சுமார் இருநூறடி நீளமும், அறுபதடி அகலமும், அறுபதடி உயரமும் கொண்ட தூண்களில்லாத பிரதான ஹால் பிரமிக்க வைத்தது.ஆலயத்தின் இடப்புறத்தில் தூய மரியாளின் பீடம் தங்க நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது. ஆலயம் முழுவதும் பழைய பொலிவு அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட்டு வந்திருப்பது நன்கு தெரிந்தது. அமைதியான அச்சூழலில் மெய்மறந்து மவுனமாய் அமர்ந்திருந்தார்கள் அந்நால்வரும்.....

தேவயாலயத்தின் உள்ளே மற்றும் வெளியே என பல கிளிக்குகளை எடுத்தவர்கள்........திரும்பும் வழியில் சில இடங்களை பார்த்தவர்கள்....கேண்டலிம் பீச்க்கு வந்தனர்....லோக்கல் மற்றும் பாரினர்ஸ் குழுமி இருக்கும் அந்த இடம் வாட்டர் விளையாட்டுகளுக்கு பெயர் பெற்றது....பனானா ரைடு, பாராசூட் ரைடு, வாட்டர் ஸ்கையிங், போட்டிங், வாட்டர் ஸ்கூட்டர் போன்ற பல விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.......பல மணி நேரம் நீரில் விளையாடிவிட்டு பசி எடுக்கவும் தான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்........தங்கள் காட்டேஜ்க்கு வந்தவர்கள் குளித்து உடைமாற்றி டின்னர் சாப்பிட பாலாவை அழைக்க....பாலா வெளியே செல்வதாக சொல்லி பின்தங்கிவிட ஆரன் அவர்களிடம் சொல்லிவிட்டு பாலாவிடம் வந்தான்....

"ஏய், நீ சுற்றிப்பார்க்க வந்தாயா இல்லை இங்குள்ள ஸ்பெஷல் உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட வந்தாயா" பசியில் சாப்பிட விடாமல் பண்ணுகிறாளே என எண்ணி கடுப்பாக கேட்டான்....

"இங்க பாருடா, காலையில் கொஞ்சம் தான் என்னால் சாப்பிட முடிந்தது....மதியம் அவர்கள் முன் டீசென்ட் மெயின்டெய்ன் பண்ண வேண்டியும், அதிகமாக சாப்பிட்டால் நடந்து சுற்றி பார்க்க முடியாதுங்கற காரணத்தால் சரியாக சாப்பிடவில்லை.......இப்பவும் அவர்களுடன் போய் என்னால் கொறிக்க முடியாது ...........காலையில இருந்து சுத்துனதுக்கு ரெண்டு புல் மீல்ஸ் சாப்பிட்டா தான் என்னால பேசவே முடியும்.........சோ நான் ரிட்ஸ் கிளாசிக் போய் பிஷ் தாளி சாப்பிடப்போறேன்.....சார்க்கு எப்படி வசதி என்கூட வர்றீங்களா இல்லை பட்டினியோட நடுராத்திரியில் உங்க பிரண்ட்ஸ்(பேய்கள்) கூட உலா போறீங்களா" என்றாள் புருவத்தை உயர்த்தியபடி கேலியாக.

"அம்மா அரிச்சந்தரி, பசியினால் பேச முடியாதுனு சொல்லி இந்த பேச்சு பேசறியே.....என்னால முடியல" என்றவன் சிரிப்புடன்...

"வேறவழி சீதை இருக்குமிடமே இந்த கலியுக ராமருக்கு சொர்க்கம்" என்றவன் பாலாவுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தான்.......

ரிசெப்ஷனில் சொல்லி வாடகைக்கு மோட்டார் பைக்கை புக் செய்திருந்தாள்......"என்னடா பார்க்கறே...ஐ மிஸ் மை கருப்பிடா (அதாங்க கருப்புக் குதிரை)" வண்டியை பாலா ஓட்ட ஆரன் அவளது பின்னால் நெருங்கி அமர்ந்து கொண்டான்...

நேரே ஹோட்டலில் சென்று நிறுத்தியவள், தாளி உணவை ஆர்டர் செய்து ஒரு கட்டுக் கட்டினாள்........
"கலியுக கடோத்கஜி, எங்க போனாலும் சாப்பிட எங்க நல்லா டேஸ்ட்டா வக்கணையா இருக்கும்னு உன் டேட்டாபேஸ் அப்டேட் பண்ணிட்டுதான் வருவியா" என்றான் அவள் சாப்பிட்ட வகைகளை பார்த்து அதிர்ச்சியில்.....

"பின்ன எங்கு எப்ப சாப்பிடறதுனு பிளான் பண்ணிட்டு தான் ட்ரிப்புக்கே கிளம்புவோம்.........என்னை பத்தி என்ன வேணுமானாலும் பேசிக்க....ஆனால் சாப்பாட்டை பத்தி பேசுனா நான் பொல்லாதவள் ஆகிடுவேன்"

ஆமா இப்ப மட்டும் ரொம்ப நல்லவளாவா இருக்க என எண்ணி அமைதியாக பாலாவைப் பார்க்க................

"பசிதீர்க்க போதுமான அளவு உணவு உண்பது மனிதனின் அடிப்படை உரிமை........உணவே மருந்து....உணவு கொடுத்தாரே உயிர் கொடுத்தார்....பசி வந்தால் பத்தும் பறக்கும்..........நம் முன்னோர் காலத்தில் இருந்தே அறுசுவையுடன் உணவு உண்ட மக்கள் நாம்...."என ஆரம்பித்தவள் மொண்ணைக் கத்தியான நாவினால் அறு அறுவென அறுத்து AVயின் காதை புண்ணாக்கினாள்.........

புண்ணான தன் காதை எதை விட்டு ஆற்றுவது என தெரியாமல் தன்னையே நொந்து கொண்டான்........

பயணம் தொடரும்...............
 
Last edited:

Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,199
Reaction score
1,924
Location
Hosur
Nice update dear.. Gova pathi soolirukeenga
Four month before we went goa
Inda idangalaiyellam parthom semma
 
sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
"என்ன சுந்தரி, அடிதடினு யாரோ மாதிரி பேசற, நீயும் நானும் அப்படியா பழகியிருக்கோம்..."
:LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:
"உன்கிட்ட நான் எதுக்குடா வெட்கப்படனும்...வேணும்னா நீ வெட்கப்படு, நான் வேணும்னா பார்த்து ரசிக்கிறேன்.....எல்லாக் கதைகளிலும் ஹீரோயின் வெட்கப்பட்டு செந்தணல் ஆனாள், செங்கொழுந்து ஆனாள் அப்படி
இப்படின்னு சொல்லறாங்க....நான் நிஜத்துல பார்த்ததே இல்லடா....ப்ளீஸ் ப்ளீஸ் ஒருவாட்டி வெட்கப்பட்டு காட்டேன்...பார்க்க ஆசையாக இருக்கு"
amamla ithu oru oru nalla question:p:p:p:D:D:D:D
கலியுக கடோத்கஜி, எங்க போனாலும் சாப்பிட எங்க நல்லா டேஸ்ட்டா வக்கணையா இருக்கும்னு உன் டேட்டாபேஸ் அப்டேட் பண்ணிட்டுதான் வருவியா" என்றான் அவள் சாப்பிட்ட வகைகளை பார்த்து அதிர்ச்சியில்.....
nalla title........... arumaiyana epi sis:love::love::love::love::love:
 
Niranjana

மண்டலாதிபதி
Joined
Mar 1, 2018
Messages
155
Reaction score
168
Location
Sri lanka
தத்தம் ரூமிற்கு சென்று கிளம்பி, ஹாரி லிண்டாவையும் அழைத்துக்கொண்டு பாகா கடற்கரைக்கு சென்றனர்....பாகாவில் உள்ள பிரிட்டோஸ் உணவகம் Sea Food உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது...அங்கு சென்று தங்கள் மதிய உணவை முடித்தவர்கள்.....

கோவாவில் ஏராளமான கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ளன, அவற்றில் ஒன்றுதான் குழந்தை இயேசு பசிலிக்கா (Basilica of Bom Jesus) அல்லது Borea Jezuchi Bajilika என்னும் கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டு இடம்.
இந்தியாவின் பழைய கோவா நகரில் அமைந்துள்ள இந்த தேவாலயம், உலகப் பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் புனித இடம் ஆகும்.....இந்தியாவின் திருத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற புனித பிரான்சிசு சேவியரின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில்தான் புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் அழியாநிலையில் உள்ளது. நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அழிவுறாமல் பாதுகாக்கப்பட்டு வரும் தூய சேவியரின் உடல், அத்தேவாலயத்தில் வெள்ளிப் பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு ஒரு முறை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படுவது வழக்கம்.

நானூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கருங்கற்களாலான தேவாலயம் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக காட்சியளித்தது.சுமார் இருநூறடி நீளமும், அறுபதடி அகலமும், அறுபதடி உயரமும் கொண்ட தூண்களில்லாத பிரதான ஹால் பிரமிக்க வைத்தது.ஆலயத்தின் இடப்புறத்தில் தூய மரியாளின் பீடம் தங்க நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது. ஆலயம் முழுவதும் பழைய பொலிவு அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட்டு வந்திருப்பது நன்கு தெரிந்தது. அமைதியான அச்சூழலில் மெய்மறந்து மவுனமாய் அமர்ந்திருந்தார்கள் அந்நால்வரும்.....

தேவயாலயத்தின் உள்ளே மற்றும் வெளியே என பல கிளிக்குகளை எடுத்தவர்கள்........திரும்பும் வழியில் சில இடங்களை பார்த்தவர்கள்....கேண்டலிம் பீச்க்கு வந்தனர்....லோக்கல் மற்றும் பாரினர்ஸ் குழுமி இருக்கும் அந்த இடம் வாட்டர் விளையாட்டுகளுக்கு பெயர் பெற்றது....பனானா ரைடு, பாராசூட் ரைடு, வாட்டர் ஸ்கையிங், போட்டிங், வாட்டர் ஸ்கூட்டர் போன்ற பல விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.......பல மணி நேரம் நீரில் விளையாடிவிட்டு பசி எடுக்கவும் தான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்........தங்கள் காட்டேஜ்க்கு வந்தவர்கள் குளித்து உடைமாற்றி டின்னர் சாப்பிட பாலாவை அழைக்க....பாலா வெளியே செல்வதாக சொல்லி பின்தங்கிவிட ஆரன் அவர்களிடம் சொல்லிவிட்டு பாலாவிடம் வந்தான்....

"ஏய், நீ சுற்றிப்பார்க்க வந்தாயா இல்லை இங்குள்ள ஸ்பெஷல் உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட வந்தாயா" பசியில் சாப்பிட விடாமல் பண்ணுகிறாளே என எண்ணி கடுப்பாக கேட்டான்....

"இங்க பாருடா, காலையில் கொஞ்சம் தான் என்னால் சாப்பிட முடிந்தது....மதியம் அவர்கள் முன் டீசென்ட் மெயின்டெய்ன் பண்ண வேண்டியும், அதிகமாக சாப்பிட்டால் நடந்து சுற்றி பார்க்க முடியாதுங்கற காரணத்தால் சரியாக சாப்பிடவில்லை.......இப்பவும் அவர்களுடன் போய் என்னால் கொறிக்க முடியாது ...........காலையில இருந்து சுத்துனதுக்கு ரெண்டு புல் மீல்ஸ் சாப்பிட்டா தான் என்னால பேசவே முடியும்.........சோ நான் ரிட்ஸ் கிளாசிக் போய் பிஷ் தாளி சாப்பிடப்போறேன்.....சார்க்கு எப்படி வசதி என்கூட வர்றீங்களா இல்லை பட்டினியோட நடுராத்திரியில் உங்க பிரண்ட்ஸ்(பேய்கள்) கூட உலா போறீங்களா" என்றாள் புருவத்தை உயர்த்தியபடி கேலியாக.

"அம்மா அரிச்சந்தரி, பசியினால் பேச முடியாதுனு சொல்லி இந்த பேச்சு பேசறியே.....என்னால முடியல" என்றவன் சிரிப்புடன்...

"வேறவழி சீதை இருக்குமிடமே இந்த கலியுக ராமருக்கு சொர்க்கம்" என்றவன் பாலாவுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தான்.......

ரிசெப்ஷனில் சொல்லி வாடகைக்கு மோட்டார் பைக்கை புக் செய்திருந்தாள்......"என்னடா பார்க்கறே...ஐ மிஸ் மை கருப்பிடா (அதாங்க கருப்புக் குதிரை)" வண்டியை பாலா ஓட்ட ஆரன் அவளது பின்னால் நெருங்கி அமர்ந்து கொண்டான்...

நேரே ஹோட்டலில் சென்று நிறுத்தியவள், தாளி உணவை ஆர்டர் செய்து ஒரு கட்டுக் கட்டினாள்........
"கலியுக கடோத்கஜி, எங்க போனாலும் சாப்பிட எங்க நல்லா டேஸ்ட்டா வக்கணையா இருக்கும்னு உன் டேட்டாபேஸ் அப்டேட் பண்ணிட்டுதான் வருவியா" என்றான் அவள் சாப்பிட்ட வகைகளை பார்த்து அதிர்ச்சியில்.....

"பின்ன எங்கு எப்ப சாப்பிடறதுனு பிளான் பண்ணிட்டு தான் ட்ரிப்புக்கே கிளம்புவோம்.........என்னை பத்தி என்ன வேணுமானாலும் பேசிக்க....ஆனால் சாப்பாட்டை பத்தி பேசுனா நான் பொல்லாதவள் ஆகிடுவேன்"

ஆமா இப்ப மட்டும் ரொம்ப நல்லவளாவா இருக்க என எண்ணி அமைதியாக பாலாவைப் பார்க்க................

"பசிதீர்க்க போதுமான அளவு உணவு உண்பது மனிதனின் அடிப்படை உரிமை........உணவே மருந்து....உணவு கொடுத்தாரே உயிர் கொடுத்தார்....பசி வந்தால் பத்தும் பறக்கும்..........நம் முன்னோர் காலத்தில் இருந்தே அறுசுவையுடன் உணவு உண்ட மக்கள் நாம்...."என ஆரம்பித்தவள் மொண்ணைக் கத்தியான நாவினால் அறு அறுவென அறுத்து AVயின் காதை புண்ணாக்கினாள்.........

புண்ணான தன் காதை எதை விட்டு ஆற்றுவது என தெரியாமல் தன்னையே நொந்து கொண்டான்........

பயணம் தொடரும்...............
Nice
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top