Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 21

#14
தாமதத்திற்கு மன்னிக்கவும் தோழமைகளே....இனி தொடர்ந்து ரெகுலர் அப்டேட்ஸ் இருக்கும்......
முந்தைய எபிசோடுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி நன்றி ....

படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.............

அன்புடன்,
சுகி....

அத்தியாயம் 21

View attachment 1384
காலையிலேயே வீடு, பியாவை உறுதி செய்யும் நிகழ்ச்சிக்கான வேலைகளை ஆரம்பித்து பரபரப்பாக காணப்பட்டது. சில முக்கிய உறவினர்களையும் கூடவே பிரஜின் பாமிலியை மட்டுமே அழைத்திருந்தனர்....
பாலா மெதுவாக எழுந்து, தன்னை ரெப்பிரெஷ் மட்டும் செய்து கொண்டு அதே நைட் டிரெஸ்ஸுடன் டைனிங் ஹாலிற்கு வந்தாள்......பசி வயிற்றைக் கிள்ள, இந்த கோலத்தில் ராது பார்த்தால், மண்டகப்படி உண்டு என நிச்சயமாக தெரிந்தாலும்....சோறா, சொரணையானு யோசித்து சோறே என முடிவு பண்ணி வந்திருந்தாள்...... பாலாவோட சரித்திரத்தை திருப்பி பார்த்தீங்கனா மக்களே.....அவ சொல்ல வருவது இது தான்....நாம வாழணும்னா நேரா நேரத்துக்கு வகை தொகையா கொட்டிக்கணும்....

அனைவரும், இவளுக்காக காத்திருக்க...ராது இவள் கோலத்தை பார்த்ததும் தனது அர்ச்சனையை தொடங்கி விட்டாள்...."ராது ப்ளீஸ், பசில எனக்கு காது அவுட்....கேட்காது, சின்ன குழந்தையை சாப்பிட விடமா திட்டாதே...ஒரு வாரம் கழிச்சு இப்பத்தான் வீட்டு சாப்பாட்டை கண்ணுல பார்க்கறேன்......சாப்பிட்டு வரேன் நம்ம பஞ்சாயத்தை தனியா வெச்சுக்கலாம்" என இறங்கி பேச..... ராதாவும் தன் மாமனார் மற்றும் மாமியார் முன் அவளை வசை பாட முடியாமல் மௌனமானார்.....

"குழந்தையாம் குழந்தை, விட்டா ஒரு குழந்தைக்கே அம்மாவாகிடுவா" என அருகில் இருந்த பியா முணுமுணுக்க.......

மகளே இன்னைக்கு நீ என்கிட்ட மாட்டுனே...கைமா தான்டி என பாலா பாசப்பார்வை பார்க்க....அதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட பியா....செத்தடி பியா தனக்குத்தானே கூறிக்கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் சாப்பிட ஆரம்பித்தாள்........

"பாலா, அம்மா சொல்லறதை கேளுடா....வீட்டுல எல்லாரும் இருக்கும் போது, இப்படி இருந்தா நல்லாவா இருக்கு....நம்ம குடும்பத்துக்குனு ஒரு மரியாதை இருக்குல்ல" என தாத்தா அறிவுரை கூற....சரிங்க தாத்தா இனிமேல் பார்த்து நடந்துக்கறேன் என உடனே ஏற்றுக் கொண்டாள்...(இல்லையென்றால் தாத்தா குடும்பப் பெருமையை பற்றி பேச தொடங்கி விட்டால், இன்றைக்கு முடிக்க மாட்டார்)

தன் அத்தை மற்றும் பாட்டியிடம் சிறிது நேரம் செல்லம் கொஞ்சிவிட்டு, மதியத்திற்கு என்ன மெனு என ஆராய்ந்து விட்டு...பியாவின் ரூமிற்கு சென்றாள்....பியாவிற்கு பார்லர் பெண்கள் மெஹந்தி போட்டுக்கொண்டிருக்க .....

"பாலா நீயும் மெஹந்தி போட்டுகிறாயாடி" என கேட்க...."நமக்கு இதெல்லாம் ஒத்து வராதுடி...பாட்டிகிட்ட சொல்லி மருதாணி வைத்துவிட சொல்லறேன்"

"ஹ்ம்ம்ம் நீ நடத்துடி செல்லம், உன் ஆளு அம்பியா இருந்தாலும் பேசுன ரெண்டே நாள்ல காயை நகர்த்தி, கல்யாணத்துக்கே ஏற்பாடு பண்ணிட்டார்.... என் ஆளுந்தான் இருக்கே...சரியான தத்தி தாண்டவராயன்" என புலம்ப.....பக்கென்று பார்லர் பெண்கள் சிரித்து விட்டனர்.........

"மானத்தை வாங்காதேடி பக்கி" என பியா முறைக்க........"ஹா ஹா ஹா ...இங்க பாருடா மானம் காத்த மாதேவி பேசறதை" என பாலா நக்கலடிக்க....இதற்குமேல் பேசினால், இந்த பெண்கள் முன்னால் பாலா நம்மை டோட்டல் டேமேஜ் பண்ணிவிடுவாள் என்பதால், வாயை கப்பென்று மூடி கொண்டாள் பியா.....

"என்னடி உன் அம்பி மாமா இன்னும் உனக்கு கால் பண்ணலையா?...உன் ரூம் பக்கம் வந்தாலே தீஞ்ச சட்டி
வாசம் வருதுன்னு எனக்கு நியூஸ் வந்ததே" என வம்பிழுக்க ....அதே நேரம் அர்வி காலிங் என பியா போன் அடிக்கவும் சரியாக இருந்தது....

"ஹாஹாஹா, செத்தான்டா சேகரு" என குஷியாக பாலா போனை எடுக்க.......

"ஏய்...அவரு பாவம் விட்டுடுடி" என கெஞ்ச.......

"பாருடா, புள்ளப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருச்சு....உங்க அம்பி மாமு, என்கிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ண சொன்னதை நீ மறந்து இருக்கலாம்.....ஆனால், அசிங்கப்பட்டதை இந்த பாலா மறக்க மாட்டாள்" என குறும்பாக சொல்லியபடி ஸ்பீக்கரில் போட்டாள்........

"ஹாய்டா பிரீ பேபி" என அர்விந்த் குழைய.....போனை மியூட்டில் வைத்து" தோடா பிரீ பேபியாம்.....ஓவர் ஸ்பீட் உடம்புக்கு நல்லதில்லமா" என்றவள் மீண்டும் ஸ்பீக்கரில் போட்டு" தாங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெகு தொலைவில் இருப்பதால், தற்போது தொடர்பு கொள்ள இயலாது.....மீண்டும் முயற்சி செய்யவும்" என சிரிக்காமல் கூறி கட் செய்தாள்.....

அர்விந்த் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து ஓய்ந்தவன், மகேஷிடம் புலம்ப.....அவன் தனது போனில் இருந்து அழைத்தான்........."என்னடா மகேஷ், உங்க அண்ணன் அம்பி.... பியா சாரி பிரீ கூட பேச முடியலைனு அழுகிறது இங்க வரைக்கும் கேக்குதே" என சிரிக்க...."ஓஹ், இது உன் வேலைதானா....டூர் முடிச்சு வந்திட்டாயா பாலா...சூப்பர் இன்னைக்கு கலக்கிடலாம்"

"யாரெல்லாம் உங்க சைடுல இருந்து வர்றாங்கடா? என வினவ....அவன் சில சொந்தங்களை சொன்னவன்....பிரஜின் அண்ணா, ஆரன் அண்ணாவையும் கூப்பிட்டு இருக்கோம் வர்றாங்களானு தெரியலை" என்றான்....தனக்கு வேண்டிய தகவல் கிடைத்த மகிழ்ச்சியில் "பிரஜுவும், ஆரனும் பாமிலியோட கண்டிப்பா வருவாங்கடா....அப்பா இன்வைட் பண்ணி இருக்காங்க....." என பேசி முடித்து வைத்தவள்.....

உடனே தனது போனில் இருந்து ஆரனுக்கு அழைத்தவள், "என்னடா பண்ணற" என வினவ...."இப்பத்தான்டி தூங்கலாம்னு ரூமிற்க்கு வந்தேன்" என்க...." சரிசரி, ஈவினிங் பியா பங்சனுக்கு என்ன டிரஸ் போடறே"

"உறுதி தானே பண்ணறாங்க, இதுக்கு நான் வரணுமா சுந்தரி"...."ஆமாடா நீ கண்டிப்பா வந்துதான் ஆகணும்.....என்ன பண்ணறியோ எனக்கு தெரியாது... எங்க தாத்தாவை நீ கவுத்தாதான் நம்ம மேரேஜ் நடக்கும்.....நல்ல சான்ஸ் யூஸ் பண்ணிக்கோ" என ஐடியா கொடுக்க.......பயபுள்ள என்னமா பிளான் பண்ணுது என வாய்மேல் விரலை வைத்தபடி பார்த்திருந்தாள் .....

"இங்க பாருடா, நீ பாட்டுக்கு உன் லண்டன் பீட்டரை தாத்தா கிட்ட காட்டிடாதே......நல்ல பட்டு வேஷ்டி சட்டை போட்டுட்டு, மாப்பிள்ளை தோரணையில் வந்து, தொபுக்கடீர்னு எங்க தாத்தா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிற.....அப்பத்தான் இந்த பையன் படிச்சும், இவ்வளவு மரியாதையா நடந்துகிறானேன்னு ஒரு சாப்ட் கார்னர் உன்மேல வரும்.....அதுக்கப்புறம், உன் சாமர்த்தியம்....உன்மேல நெகட்டிவ் அபிப்பிராயம் வராம பார்த்துக்கோ.........."

"சுந்தரி, உன்னவே லவ் பண்ண வைச்சுட்டேன்...உங்க தாத்தாவையும் லவ் பண்ண வைச்சுடலாம்" என குறும்பாக சொல்லி சிரிக்க......."பார்த்துடா, அவனா நீயினு எங்க தாத்தா கேட்டிட போறார்.....எங்க தாத்தாவை சம்மதிக்க வைக்கறது அவ்வளவு ஈஸி இல்லடா........எங்க சமூகத்துல எது நடந்தாலும் எங்க தாத்தா தான் முன்னாடி நிற்பார்.........பழைமைவாதி, கல்யாணத்துக்கு கண்டிப்பா ஜாதி மதம் பார்க்கிறவர்......அவரை நினைத்துதான் உனக்கு நான் எந்த பதிலையும் சொல்லல...........ஆனால், உன்னை தவிர யாரையும் என்னால கல்யாணம் பண்ண முடியாதுனு இப்ப புரிந்து கொண்டேன்....அதே சமயம், எங்க தாத்தாவை எதிர்த்தும் என்னால கல்யாணம் பண்ண முடியாது" என மன இறுக்கத்துடன் கவலையாக பேச.....

"நீ ஒண்ணும் டென்ஷன் ஆகாதேடா....நான் பார்த்துக்கறேன்....கண்டிப்பாக நம்ம மேரேஜ் உங்க தாத்தா சம்மதத்தோட தான் நடக்கும்" என வாக்களித்தான்.....ஆனால் அது அவ்வளவு சுலபமானது அல்ல என ஆரன் புரிந்துகொள்ள தவறினான்......

ஆம், பாலாவின் தாத்தா ஹிந்து சமூகத்தில் குறிப்பிட்ட ஜாதியின் தலைவர்....அவர் சமூகத்தில் பல பிரச்சனைகளுக்கு, இன்னமும் இவர்தான் பஞ்சாயத்து பண்ணி வைப்பது....மதம் மாறி கல்யாணம் பண்ணிய ஜோடியை ஒதுக்கி வைத்ததும்....ஏன் பிரித்து விட்டதும் கூட உண்டு அவ்வகையான பஞ்சாயத்துகளில்....... அப்படிப்பட்டவரின் செல்லப் பேத்திதான் வேறு மதத்தை சேர்ந்த ஆரனை விரும்புவது..........இதுதான் கடவுள் போட்ட கணக்கு என்பதா? இல்லை இவரால் பிரிக்கப்பட்ட ஜோடிகளின் சாபம் என்பதா?

நாளை பார்க்கலாம்...............
பாவம் ஆரன்
 
#18
Nice epi sis. Appo ivanga kadhalukku villain thaaththadana?
Ivvalavu naallavala baala nee?
பாலா, அடாவடி பிடிவாதம் பிடிச்ச கழுதைனாலும் கொஞ்சம் நல்லவதான்...தாத்தா என்ன பண்ணறாருனு பார்க்கலாம்....
 

Sponsored

Advertisements

Top