Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 23

#1
ஒரு நீண்டஆஆ இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் பிரண்ட்ஸ்..............என்னடா கிளைமாக்ஸ் பகுதியைப் போடாமல் காக்க வைக்கிறேன் என்று என்னை திட்டும் என் நண்பிகளுக்கும், நெக்ஸ்ட் எபிசோட் எப்பனு கேட்கிற என்னோட தோழிகளுக்காகவும் அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்..........

தயை கூர்ந்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன்...........

அத்தியாயம் 23

1544813173248.png

"எனக்கு கணவனாக வரப்போகிறவர் என் மனதுக்கு பிடித்தவராக இருக்க வேண்டாமா? தாத்தா.....என் ஆரனுக்கு அழகில்லையா, படிப்பில்லையா, நமக்கு சமமான வசதிதான் இல்லையா?"......எல்லா விதத்திலும் என்னை விட உயரமான இடத்தில் இருக்கிறார்...அப்படி பார்த்தால் நான் தான் அவருக்கு பொருத்தமில்லாமல் இருக்கிறேன்" என்றாள் ஆதங்கமாக தன் தாத்தாவை நோக்கியபடி....

"உனக்கு பிடிக்கிற மாதிரி 1000 பேரை கொண்டு வந்து நிறுத்துவேன் நம் சமூகத்தில்... மேலே நீ சொன்னது எல்லாம் இல்லாவிட்டால் கூட அவரை என்னால், நீ எதிர்பார்க்கிற மாதிரி மாற்ற முடியும் நம் சமூகத்தை சேர்ந்தவனாக இருக்கும் பட்சத்தில்....."என்றார் தெனாவெட்டாக......

"ஓஹ், உங்களுக்கு பணம் சம்பாரித்து கொடுக்க வேறு சாதி மதத்தினர் வேண்டும்...உங்களுக்கு பணிவிடை செய்ய வேறு இனத்தவர் வேண்டும்.......கல்யாணம் செய்ய மட்டும் உங்கள் இனத்து பெண் / பையன் தான் வேண்டுமோ?...மற்ற வேலைகளுக்கும் உங்கள் சமூகத்தவரையே பயன்படுத்த வேண்டியதுதானே "என்றாள் பாலா சூடாக....

"அதைத்தான் நானும் சொல்கிறேன் சுந்தரி....தொழில் என்பது வேறு, நமது குடும்பம்,சமூகம் என்பது வேறு....நீ நினைப்பது நடக்காது....என்றார் முடிவாக (நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டாருங்கோய்)

"என்னைப் பொருத்தமட்டில், உலகில் உள்ளது ரெண்டே ரெண்டு இனம் ஆண் சாதி மற்றும் பெண் சாதி...உலகம் தோன்றிய கூற்றுப்படி பார்த்தால் நாம் அனைவரும் ஆதாம் ஏவாள் மூலம் தோன்றியவர்கள்....அப்படிப் பார்த்தால் அனைவரும் உறவினர்கள்.............தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்ட சாதி/இனம், இன்று பல்வேறு காரணங்களால் பிரிக்கப்பட்டு, பிளவுபட்டு உள்ளோம்....நான்
ஆரனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் அதுவும் உங்கள் ஆசியுடன் " என்றாள் பாலா தீர்க்கமாக

"அது நான் உயிருடன் இருக்கும்வரை நடக்காது"

"நடக்கும், நடத்திக்காட்டுவேன்"

"ஹேய், சும்மா இருடி...தாத்தா இல்லாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு காலுல விழுந்து....பேசி ஒத்துக்க வெச்சு இருக்கலாம்...அதுக்குள்ள உன்னை யாருடி வாக்குறுதிகளை அள்ளி வீச சொன்னது ..... " என்றாள் பிரியா காதில் கிசுகிசுப்பாக............

"எல்லாம் என்நேரம், நீ உன்னோட லவ் கல்யாணத்துல முடிச்ச சந்தோஷத்துல பேசுற...ஏன் சொல்லமாட்டே......"

"பிரியாவை பாரு, லவ் பண்ணுனாலும் நம் இனத்து பையனையே பண்ணி இருக்கா....அவளுக்கு இருக்கற புத்தி உனக்கு ஏன் இல்லாம போச்சு" என தாத்தா பாலாவை கடுகடுக்க.....

பாலா பிரியாவின்மேல் செம காண்டானாள் என நமக்கு சொல்லி புரியவேண்டியதில்லை........

"சாரி தாத்தா, இந்த கல்யாணமும் நடக்காது...என் பிரச்சனை சரியாகாமல் என் ஆருயிர் தோழி, என் அத்தை பெத்த ரத்தினம், கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் தாத்தா....உங்கள் சாதி வெறியால் நம் குடும்பத்தில் யாருக்குமே கல்யாணம் நடக்கப்போறதில்லை" என்றாள் சோகம் போல முகத்தை வைத்த படி...

இது என்னடா புது குண்டை தூக்கி போடுகிறாள் என தாத்தா விழி பிதுங்க......பிரீயோ " நான் எப்ப கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன்...நானே கஷ்டப்பட்டு இந்த அம்பியை கரெக்ட் பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்தா....பொசுக்குன்னு கல்யாணம் வேண்டான்னு சொன்னேன்னு சொல்லிட்டியேடி பாவி மக்கா..." என்றாள் பாலாவின் காதில் கிசுகிசுப்பாக புலம்பியபடி...

"என்ன பிரீ, எனக்கொரு பிரச்சனைனா உனக்கு இல்லையா....அப்படி இல்லைனாலும் பரவாயில்லை.....உயிர் கொடுப்பாள் தோழினு நீ நிரூபிக்க வேண்டாமா... தமிழ்நாடு மக்களின் சாபம் உனக்கு வேணுமா...நல்லா யோசிடி ....உன்னை உயிரை கொடுக்க சொல்லல....ஜஸ்ட் திருமண காண்ட்ராக்ட்டை போஸ்ட்பான் பண்ணி....லவ் காண்ட்ராக்ட்டை எக்ஸ்டன்ட் பண்ணத்தானே சொல்றேன் " என்றாள் கூலாக.......

"உன் மொக்கையை கொஞ்சம் நிறுத்துடி, இதற்கு அதுவே மேல்...என் கல்யாணத்தை நானே நிறுத்தி விடுகிறேன்" என்றாள் கடுப்புடன்....

பாலா பார்த்த பார்வையில், "பிரீயுடன் சேர்ந்து மற்ற மூவரும் (நவீ , சிவா, திரு) பாலா கல்யாணம் நடந்தால் தான் தாங்கள் திருமணம் செய்வோம் என ஒன்றுபோல கூறினர்"

"ஸ்ஸ்ப்பா.. எத்தனை பேருக்கு பஞ்சாயத்து பண்ணியிருப்போம்...என் எதிர்ல நின்னு பேசவே யோசிப்பாங்க ...இந்த சில்வண்டு என்னடானா அசராம என்னை மண்டை காய விடறாளே" என நினைத்தாலும்...

வெளியே தன் கெத்தை விடாமல் " ஹ்ம்ம்ம் பார்க்கலாம், எவ்வளவு நாளைக்கு நீங்க கல்யாணம் பண்ணாம இருக்கீங்கனு" என்றார் படுநக்கலாக.....

உங்கள் பேத்தி நான் என்ற பாலாவும் சளைக்காதவளாக" பார்க்கலாம் தாத்தா, உங்கள் பேரன் பேத்தி எல்லாம் கல்யாணம் ஆகாம இருக்கறாங்கனா....உங்க சமூகம் உங்களைத்தான் ஏன் என்று கேள்வி எழுப்பும் தாத்தா....எங்களை கேட்காது, அப்படியே கேட்டாலும்," நான் ஆல்ரெடி கமிட்டேட் டு ஆரன்...தாத்தா அனுமதிக்காக வைட்டிங் என சொல்லிடுவேன்" என்றாள் படுகூலாக...மேலும் "எத்தனை வசதி இருந்து என்ன, ராமசாமி குடும்பத்து வாரிசுகளுக்கு யார் செய்த பாவமோ சாபமோ கல்யாணமே நடக்க மாட்டேங்குதுனு பேசுவார்கள் என தாத்தாவை மறைமுகமாக மிரட்டினாள். (பின்ன யாரு பேத்தி இவ.....நாட்டாமை 8 அடி பாஞ்சா இவ 32 அடி பாய்வா இல்ல)

"ஓஹ் அப்படியா, பரவாயில்லை ராமசாமி பஞ்சாயத்து பண்ணி மத்தவங்களை பிரிச்சு விட்டது மாதிரி தன் பேத்திக்கும் அதே தீர்ப்பு தான் கொடுத்திருக்காருனு என் நேர்மையை பாராட்டி இன்னும் என் சமூகநிலையை உயர்த்துவார்கள்" என்றார் பெருமையாக....

"எங்களுக்கு கல்யாணம் ஆகாமல் இருந்தாலும் பரவாயில்லை....உங்களுக்கு உங்க கெளரவம் தான் பெருசு இல்ல....தெரியாமல் தான் கேட்கிறேன் உங்க கௌரவத்தை வைத்து நீங்கள் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்.....இதன்மூலம் நீங்கள் காதலர்களை, கணவன் மனைவியை பிரித்துள்ளீர்கள்....வேற்று இனத்தவரை நேசித்ததிற்காக....வெளிப்பேச்சில் மட்டும் அன்பே சிவம் என்று பேசுவீர்கள் உங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வதற்கு" என்று பதிலடி கொடுத்தாள் பாலா சூடாக....

பதில் பேச முடியாத கோபத்துடன் தனது மகனை நோக்கி, "என்னடா கிருஷ்ணா, உன் பொண்ணை இப்படி வளர்த்து இருக்கிறாய்....பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்காமல் என்ன பேச்சு பேசுகிறாள்....நீயெல்லாம் என்னிடம் சரி என்பதை தவிர்த்து ஒரு வார்த்தை எதிர்த்து பேசியதில்லை" என்றார் கடுப்பாக...

"சரி தான், உங்களுக்கு தேவை ஒரு தலையாட்டி பொம்மை...எங்க அப்பாவை நான் தர முடியாது....வேண்டுமென்றால் தஞ்சாவூரிலிருந்து ஸ்பெஷல் தலையாட்டி பொம்மையை உங்களுக்காக வரவழைக்கிறேன் தாத்தா...நீங்களும் நீங்கள் நினைத்ததை அதனிடம் பேசலாம்....மறுபேச்சு பேசாமல் தலையாட்டி கொண்டே இருக்கும்" என்றாள் குறும்பாக....

பாலாவின் பேச்சைக் கேட்ட அனைவருக்கும் சிரிப்பை அடக்க முடியாமல் தடுமாற, கோபத்துடன் தாத்தா அவ்விடத்தை விட்டு அகன்றார்....

அடங்காப்பிடாரியின் இம்சை தொடரும்......
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top