Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 4

#1
டியர் பிரண்ட்ஸ்,

உங்களை ரொம்ப நாள் வெயிட் பண்ண வைக்காம ஒரு குட்டி அப்டேட்டோட வந்துட்டேன். நெக்ஸ்ட் அப்டேட் பெரிசா தரேன்.

வைட்டிங் போர் யுவர் லைக்ஸ் & கமெண்ட்ஸ்.

அன்புடன்,
சுகி.

அத்தியாயம் 4

இரவு உணவை முடித்தவுடன் பாலா, தன் ரூமிற்கு பியாவுடன் வந்தாள். அர்விந்த் உடன் நடந்த அனைத்து சம்பாஷணைகளையும் கேட்ட பியா, ஏன்டி, அவர இப்படி டார்ச்சர் பண்ணறே பாவம்டி என்றாள்.

ஓஹ், உன் ஆள சொன்னதும், உனக்கு ஹார்ட்டு வலிக்குதோ எனவும் கப்சிப் என வாயை மூடிக்கொண்டாள் பியா,பாவம் பொழைச்சு போகட்டும், விட்டுடலாம்னு நெனச்சேன். இனி விடறதா இல்லடி என் செல்லாகுட்டி. அய்யய்யோ, தூங்க போன சிங்கத்தை அடிச்சு எழுப்பி விட்டுட்டோம் போலயே என் நினைத்து முழி பிதுங்க என்ன பண்ண போறாளோ என பார்த்துக்கொண்டு இருந்தாள் பியா.

பாலா தன் போனை எடுத்து தன் நண்பன் மகேஷுக்கு கால் பண்ணி ஸ்பீக்கரில் போட்டாள். ஹெல்லோ மகேஷ், என்னடா பண்ணறே. ஹ்ம்ம்ம், சொல்லு பாலா, டிவி பார்த்துட்டு இருக்கேன், என்ன விஷயம் தேவையில்லாம இந்நேரத்தில் கூப்பிட மாட்டேயே என்றான். உங்க நொண்ணன் வந்துட்டாரா என்றாள்.

அண்ணா சாப்பிட்டு அவன் ரூம்க்கு போய்ட்டான், ஏன் எதாவது பிரச்சனையா? இல்ல ஒன்னும் இல்லடா...2 வீக்ஸுக்கு முந்தி உங்க அண்ணனை சென்டர் மால்ல பார்த்தோம் உன்கூட, பியா வேற உங்க நொண்ணனைப் பார்த்துட்டு அளவான உயரம், அழகிய மீசை, ஆப்பிள் கன்னம்னு உருகுறாளேனு, நண்பிடா போட்டுட்டு, இந்த அர்விந்து எப்படி பியாக்கு ஒத்து வருவானா மாட்டானானு பேச வந்தா இந்த அர்விந்து ஸ்டைலா தலையாட்டிட்டு என்கூட பேசமா போய்ட்டான். ஹய்யோ, அவனை என்ன செஞ்ச பாலா என்று அலறினான் பாலாவை பற்றி அறிந்தவனாக.

அதிகமா ஒண்ணும் செய்யலடா, என்ன இருந்தாலும் எனக்கு அண்ணனாகப் போய்ட்டான். சோ, பெருசா எதுவும் பிளான் பண்ண முடியல. ஓகே, நான் இப்ப சொல்லறதை மட்டும் செய். ஸ்பீக்கர் ஆன் பண்ணிட்டு உங்க அண்ணா கிட்ட போ, போயி நா சொல்லற மாதிரி பேசு. உங்க அண்ணாக்கு நான் லைன்ல இருக்கேனு தெரியக்கூடாது. உங்க அண்ணா பாவம்னு நினைச்சா நீ பாவம் ஆகிடுவடா... என்ன புரிஞ்சுதா என்று மிரட்டினாள்.

சரி என்றவாறு அர்விந்தின் அறைக்குள் நுழைந்தான். அர்வி, என்னடா ரொம்ப டல்லா இருக்கே, ஆபீஸ்ல எதாவது பிரச்சனையா...பார்த்த உடனே தெரியற மாதிரி டல்லாகவா இருக்கேன், ஆபீஸ் பத்தி பேசாதேடா. நானே செம காண்டுல இருக்கேன்.

ஹேய், அர்வி என்னடா ஆச்சு? அதை ஏன் கேக்குற மஹி, உங்க காலேஜ்ல இருந்து ஒரு காளியாத்தா வந்தா பைனல் இயர் ப்ராஜெக்ட் பண்ணறேன்னு சொல்லிட்டு ஆடு ஆடுனு ஆடி தள்ளிட்டா. பேரு என்ன அண்ணா? பால திரிபுர சுந்தரி... பேரை போல அவ சுந்தரி தான்...ஆனா அவ வாய் இருக்கே வாயி உலகமே எனக்கு சொந்தமானதுனு விலை பேசி வித்து போடுவாடா. இனிமேல் அவ இருக்கற திசைக்கே போக கூடாதுனு இருக்கேன்டா. அப்படி என்னதான் நடந்துச்சு ஆபீஸ்ல.. தெரியமா ஒரே ஒரு வார்த்தை பேசிட்டேன்டா. அதுக்கு போய் என்னை கண்டமேனிக்கு வாடா போடானு மரியாதை இல்லாம பேசிட்டாடா.

அவ வந்து போனதுக்கு அப்பறம் பேய் அடிச்ச மாதிரி பேஸ்தடுச்சு போய்ட்டேன்டா..இன்னும்கூட நார்மல் மோடுக்கு வர முடியல. அவ பாலா இல்லடா காலா... அவ பியூச்சர் புருஷனை நினைச்சா தான் ரொம்ப பாவமா இருக்கு. ஒரு அடங்காப்பிடாரி கைல போய் சிக்க போறானே...முடிஞ்சா பிரஜின் சார் கிட்ட சொல்லி அவ இருக்கற பில்டிங்க விட்டு எதிர்திசைல இருக்கற மாதிரி கொடுங்கனு கேட்டு போய்டுவேன்டா. என்ன அண்ணா, நீ சொல்லறத பார்த்தா சேதாரம் ரொம்ப ஜாஸ்தி போல தெரியுதே...சரி சரி எதுக்கும் பார்த்தே இரு.

காலேஜ்ல சீனியரே, அவள கண்டா பயப்படுவாங்க. காலேஜ்ல அவளை ஜான்சி ராணி, சண்டி ராணி, ரவுடி பாலானு தான் கூப்பிடுவாங்க அண்ணா என தானும் ரெண்டு பிட்டை சேர்த்து போட்டான். ஹ்ம்ம்ம் இருக்கும்டா, அவள அடக்கும் சண்டிவீரன் எங்க இருக்கானோ தெரியலையே... சீக்கிரமா கண்ணுல காட்டப்பா முருகா...(சீக்கிரமே அந்த சண்டி வீரன் வரப் போகிறான் என்று அப்பொழுது அவனுக்கு தெரியவில்லை)

போனை வைத்தவுடன் பரவாயில்லை உன் ஆளு கொஞ்சம் டீசென்ட்டா தான் என்ன திட்டி இருக்கான். கொஞ்சமே கொஞ்சம் என் மனசு அவன மன்னிச்சு விட்டுடலாம்னு சொல்லுது பார்ப்போம் என்றபடி தூங்க சென்றனர்.

1522955205211.png
புதன்கிழமை காலை 9 மணிக்கு, பாலாவும், பியாவும் டிசைனர் ஸ்டூடியோ ஆபீஸ் நோக்கி சென்றனர். பாலா ஆப் வைட் ஸ்லீவ்லெஸ் ஷார்ட் டாப்பும், டார்க் ப்ளூ டிசைனர் ஸ்கர்ட்டும் அணிந்து இருந்தாள். பியா ஸீத்ரோ பிளாக் ஷர்ட்டும், ப்ளூ லெவிஸ் ஜீன்ஸும் அணிந்திருந்தாள். இருவரும் ரிசெப்ஷனை அடையும் முன்பே பாலா அர்விந்தை பார்த்து விட்டாள். அவனும் பிளாக் ஷர்ட் மற்றும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்திருந்தான். இருவரையும் மாறி மாறி பார்த்த பாலா, சட்டுனு " கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, உன் கண்ணு ரெண்டும் என்னை இழுக்கும் தெளசண்ட் வாட்ஸ் பவரு " என பாட ஆரம்பித்தாள்.

1522955156409.png

அவ பாடலைக் கேட்ட அர்விந்த், நம்மள பத்தி தான் பாடுறாங்களோ என நினைத்து ஙே என்று முழித்தபடி நின்றான். பின்னர், பாலா அருகில் நின்ற பெண்ணும் பிளாக் டிரஸ் போட்டு இருப்பதை பார்த்து, தலையை உதறியபடி தன் கேபின் நோக்கி சென்றான்.

இங்கு, பியாவின் பாடு தான் திண்டாட்டமாக போய்விட்டது. பாலா ஒரே மாதிரி டிரஸ் பண்ணலாம்னு சொன்னதை மறுத்துவிட்டு இந்த டிரஸ் அணிந்து வந்தாள். என்னடி, உங்க ஆளு ட்ரஸ்க்கு மேட்ச்சா போடணும்னு தான் நான் சொன்ன ட்ரெஸ்ஸை வேண்டாம்னு சொன்னியா.... என்ன காலையிலேயே செம தரிசனம் போல இருக்கு....என ஓட்டி எடுத்தாள். பாலா மீ பாவம் விட்டுடு என்றாள் கைகூப்பியபடி...அதற்கு மேல் ஏதும் பேசாமல் MD ரூமினை அடைந்தனர்.

"ஹாய் பிரஜு", "வெல்கம் பாலா அண்ட் பிரியா". பிரஜின், பாலா பியாவின் ஸ்கூல் சீனியர் மற்றும் சிவாவின் ஸ்கூல்மேட். தாங்க் யூ என்றனர் கோரஸாக.

நீங்க ரெண்டு பேரும், பார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்து அர்விந்த் கிட்ட இந்த வீக் ரிப்போர்ட் பண்ணுங்க. டிசைன் ஹெட், ஒரு பெரிய பிசினஸ் ஆபருக்காக மும்பை போய் இருக்கார். அவர் வந்தவுடனே, உங்களுக்கான வேலை கொடுக்கப்படும். அர்விந்த் வில் எக்ஸ்பிளைன் யூ ஆல் தி டிபார்ட்மெண்ட்ஸ் அண்ட் இட்ஸ் ஸ்டாப்ஸ் இன் JDS (Joseph Designer Studio).

அரவிந்தை பார்க்க செல்ல, அவன் வேறு ஒரு வேலையாக டிசைனிங் ரூம் வரை சென்று இருந்தான். உடனே பாலா, "பியா மச்சானை பார்த்தீகளா இந்த டிசைனர் ஸ்டுடியோவில்" என பாட்டு பாடி கலாய்த்து கொண்டு இருந்தாள்.

ஒருவழியாக பார்மாலிட்டீஸ் அனைத்தும் முடித்து மணியை பார்க்க 11 am. ஹாய் அர்விந்த், வேர் இஸ் மை ஜிஞ்சர் டீ? ஹான், விடாக்கொண்டி, சாப்பாட்டுராமி டான்னு 11 மணிக்கு கேக்கறதை பாரேன் என நினைத்து கொண்டு, இதோ 2 மினிட்ஸ் மேடம், கொண்டு வருவாங்க என்றான்.

டைம் இஸ் சோ ப்ரெஸ்ஸியஸ், போனா திரும்ப வராது. அப்படி இப்படி என டீயை உறிஞ்சிக் கொண்டே ஒரு பெரிய லெக்சர் கொடுத்து அரவிந்தை நொந்து நூடுல்ஸ் ஆக்கி விட்டாள். மேம், ப்ளீஸ் என்னை விட்டுடுங்க, இனிமேல் லேட் ஆகாது. ஹான், அப்படி வா வழிக்கு என்று நினைத்தபடி, தோ பாரு அர்விந்து, சாப்பாடு நமக்கு ரொம்ப முக்கியம் தம்பி....பாரதியே சொல்லி இருக்கார் தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்னு என்றாள் பொங்கி வழிந்த சிரிப்பை அடக்கியபடி.
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top