• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
அத்தியாயம் - 5

டீ டைம் முடிந்தவுடன், அர்விந்த் இன்டக்க்ஷன் ப்ரோக்ராமை Arrange பண்ணி இருந்தான்.

மேம், உங்க ரெண்டு பேருக்கும், 2 டேஸ் இன்டக்க்ஷன் ப்ரோக்ராம் பிளான் பண்ணி இருக்கோம். டிசைன் ஸ்டுடியோல உள்ள அனைத்து டிபார்ட்மென்ட் அண்ட் இட்ஸ் மெம்பர்ஸ், அவங்களோட நேச்சர் ஆப் ஒர்க், ஹய்ரர்கியல் ஸ்டக்ச்சர், ஹிஸ்டரி ஆப் பேஷன் டிசைனிங், அவர் கோல்ஸ் & விஷன் etc...etc. செஷன் 12 pmல
இருந்து ஸ்டார்ட் ஆகுது. ப்ளீஸ் கோ அண்ட் சிட் இன் தி ட்ரெயினிங் ரூம் நம்பர் 8 என பாலாவை பார்த்தபடி பேசிக்கொண்டு இருந்தான். பியாவை திரும்பியும் பார்க்கவில்லை... இவளே பேய் மாதிரி இருக்கா, இவள் பிரண்ட் மட்டும் தேவதையாவா இருக்கப்போகுது... அதுவும் இல்லாமல் தெரியாத பேய்யை விட தெரிந்த பேய்யே மேல் என நினைத்து கொண்டு...

பாலா, ஆல்ரெடி தன் தாத்தா கம்பெனியில் உள்ள டிசைன் ஸ்டூடியோ பற்றி அறிவாள். நாம் பார்க்காத, படிக்காத விஷயமா என எண்ணி, என்ன புதுசா சொல்லிக்கொடுத்து விடப்போகிறார்கள் என நினைத்து அசுவாரஸ்யமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டுடிருந்தாள். மிகவும் ஹய் டெக்கான ட்ரெயினிங் ரூம் அது. வைட் போர்ட் முதல் வீடியோ கான்பெரென்ஸ் வரை அனைத்து வசதிகளும் இருந்தன....சரியாக 12 மணிக்கு நெடு நெடுவென்ற உயரத்துடன் ஒரு பாரினர் உள்ளே நுழைந்தான்.

ஹாய் கைஸ், ஐயம் மைக் அலைஸ் மைக்கேல் சீனியர் டிசைனர் இன் JDS. அனைத்து உரையாடல்களும் ஆங்கிலத்திலே இருந்தாலும் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.

முதலில் அசட்டையாக இருந்த பாலா பின்னர் ஊன்றி கவனிக்க ஆரம்பித்தாள். வெள்ளியன்று மாலை, இன்டக்க்ஷன் கிளாஸ் நிறைவடைந்தது. இதில் இத்தனை விஷயங்கள் உள்ளதா என பிரமித்தாள். உண்மையாகவே, JDS மீது மதிப்பும் மரியாதையும் கூடி இருந்தது இந்த நாட்களில்.
ட்ரைனர்ஸ் ஒவ்வொருவரும் கேட்ட ஒரே கேள்வி, ஹொவ் டிட் யூ கெட் தி இன்டெர்ன்ஷிப் ஆபர் இன் JDS?
ஏனென்றால், இதுவரை ஒருவரையும் JDS உள்ளே இன்டெர்ன்ஷிப்காக அனுமதித்ததில்லை. ச்சே, எவ்வளவு பெரிய ஆபர மிஸ் பண்ண பார்த்தோமே என நினைத்தாள்.

ரெண்டு நாளில், பாலாவும் பியாயும் தெரிந்து கொண்டது இதைத்தான். பேஷன் மானுபாக்டுரிங்ல மூன்று வகைகள் உள்ளன. 1. Haute Couture - தனி ஒருவருக்காக டிசைன் செய்வது (பிரைடல், செலிபிரிட்டி, etc ) 2. Ready To Wear - Exclusive Collection of JDS ( Spring / Winter / Summer Collections for a small group of people) 3. Mass Market - JDS என்ற பிராண்ட் நேமின் பெயரில் வேர்ல்ட் wide customers கு சப்ளை செய்வது.

பேஷன் இண்டஸ்ட்ரில, நமக்கு பிக்கஸ்ட் போட்டியாளர்கள்னா சீனா அண்ட் பங்களதேஷ். பேஷன் வேர்ல்ட்ல, மிக முக்கிய கிளைண்ட்ஸ் உள்ள இடம் பாரிஸ்(பிரான்ஸ்), மிலன் (இத்தாலி) நியூயார்க் (USA) & லண்டன் (UK ).
JDS இன் ஹவுஸ் டிசைனர்ஸ்ல மேஜர்ரா 4 டிவிசன் இருக்கு. அதுல மைக் லண்டன் டிசைனர்ஸ் யூனிட்டை பார்த்துக்கொள்கிறான். சாஷா நியூயார்க் டிசைன் யூனிட்டையும், சார்லஸ் மிலன் டிசைன் யூனிட்டையும், எலா பாரிஸ் டிசைன் யூனிட்டையும் பார்த்துக்கொள்கின்றனர். இவர்கள் நாவருமே, அந்தந்த நாட்டில் உள்ள பெஸ்ட் யூனிவர்சிடியில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் நாட்டு கிளைண்ட்டிடம் பேசவும், அந்நாட்டின் நியூ ட்ரெண்டை அறிந்து கொள்ளவும், இவர்களை பணியில் அமர்த்தி இருந்தார் JDSன் ஹெட். என்னதான் முயன்றாலும் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை பாலாவால். இது தவிர, இண்டியன் டிசைன் யூனிட், பேஷன் ரிசெர்ச் சென்டர், CAD சென்டர், Technical டிசைனிங், பையிங் யூனிட், ட்ரைனிங் யூனிட், ஸ்டைலிஸ்ட், மாடெலிங் & பேஷன் போட்டோகிராபி என பல பிரிவுகளை கொண்டது JDS. இவை அனைத்தும் AV என்றும் பாஸ் என்றும் அழைக்கப்படும் ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. AV மும்பை வரை சென்றுள்ளதால், Monday தான் அவரைப் பார்க்க முடியும்.

அவளுடைய தாத்தா கம்பெனி, இண்டியன் மார்க்கெட்டை மட்டுமே மனதில் கொண்டு அமைக்கப்பட்டது. ஆனால், JDS ஓ இந்தியா மற்றும் வேர்ல்ட் லெவல் கஸ்டமர்ஸை டார்கெட்டாக கொண்டு நிறுவப்பட்டியிருந்தது.

இரவு உணவை முடித்து, பாலா, பியா, சிவா & நவீ நால்வரும் மொட்டை மாடியில் கூடியிருந்தனர். சிவாவும், பாலாவும் நாளை பாண்டிச்சேரி செல்லவிருந்தனர். அதை பற்றி தான் டிஸ்கஷன் ஓடிக் கொண்டியிருந்தது.
தீடிரென நியாபகம் வந்தவனாக நவீ, " உங்க இன்டெர்ன்ஷிப் எப்படி போகுது, ஒர்க் ப்ளேஸ் எல்லாம் செட் ஆகிடுச்சா " என கேட்டான்.

ஹ்ம்ம், ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கு நவீ என்றாள் பியா.. ஆமாமா நம்ம பியாவுக்கு நல்லா சூப்பரா தான் போகுது என நக்கல் அடித்தாள் பாலா. கம்முனு இருந்தவளை தூண்டி விட்டுட்டயே நவீ என உள்ளுக்குள் பல்லை கடித்தபடி, வெளியே சிரித்தபடி பாவமாக பார்த்தாள் பியா.

உடனே பாலா, " புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது.
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது, மனம் சூடான இடம் தேடி அலைகின்றது" என பாட சிவாவும், நவீயும் நிலவை பார்த்து பாடுகிறாள் என நினைத்தனர். பியாவோ திரு திருனு முழித்தபடி பாலாவை கோபமாக முறைத்தாள். பியா பாட ஆரம்பித்தவுடன், சிவா male வாய்சில் உள்ள லிரிக்ஸை பாட தொடங்கினான். இது அடிக்கடி நடப்பது தான், பாலா பிமேல் வாய்ஸ் லிரிக்கும், சிவா மேல் வாய்ஸ் லிரிக்கும் மாறி மாறி பாடுவர். பியா, பாட்டை கேட்டபடியே காலையில் நடந்ததை ரீவைண்ட் பண்ணி பார்த்தாள்.

View attachment 657

காலையில் JDSகுள், நுழைந்ததுமே அர்விந்த் எங்காவது தென்படுகிறானா என பார்த்துக் கொண்டே ட்ரெயினிங் ரூம் சென்றாள் பியா. ஹப்பாடி, இன்னைக்கு இவ கிட்ட இருந்து தப்பிச்சோம்னு அறிவும், ஹய்யோ அவரை இன்னைக்கு பார்க்க முடியலையே என மனமும் சண்டை போட்டு கொண்டிருந்தது. ரூம் வாசலையே பார்த்தபடி அமர்ந்து இருந்தாள். பாலா முக்கியமாக எதுவோ நோட்ஸ் எழுதிக்கொண்டு இருந்தாள். மெதுவாக உள்ளே நுழைந்தான் அர்விந்த், குட் மார்னிங் மேம் அண்ட் ஷண்முகப்ரியா(நோட் தி பாய்ன்ட் மேம் ஷண்முகப்ரியா ஆகிட்டாங்க) என்றபடி. அன்றைய நாளின் முக்கிய டாபிக் பற்றி சொல்லி, தனி கவனம் செலுத்துமாறு அட்வைஸ் செய்தான். மேலும், சிலதை சொல்லியபடி நின்றான். அப்பொழுது தான், பியா நோட் பண்ணினாள் அர்விந்தும் அவளும் வைட் ஷர்ட் அண்ட் லைட் ப்ளூ ஜீன்ஸ் அணிந்து இருந்தனர்.

ஹான் அர்விந்த், இன்னைக்கும்(அழுத்தி சொல்லி) என்ன ஒரே மாதிரி வைட் ஷர்ட்ல கலக்குறீங்க, வாட்ஸ் ஸ்பெஷல் என்றாள் பாலா. இதை கேட்டதும், பியா லைட்டாக வெட்கப்பட, பாலா ஓட்டுவதை அறியாத அர்விந்த், தீடிருனு எதுக்கு வைட் ஷர்ட் பற்றி கேக்குறாங்க என முழித்தான்.

ஸ்பெஷல் எல்லாம் ஒன்னும் இல்ல மேம், எனக்கு வைட் கலர் ரொம்ப பிடிக்கும், பிரைடேனு போட்டுட்டு வந்தேன். இதை கேட்டதும் பியா ஆச்சர்யப்பட்டாள், அவளுக்கும் மிக பிடித்த கலர் வைட் தான். பாலா நக்கலாக பியாவை பார்த்து சிரித்தபடி, உனக்கு கருப்பு தான் பிடிச்ச கலருன்னு நினைத்தேன் அர்விந்த் என்றாள் நேற்று தான் பாடிய பாடலை நினைத்தபடி. பாலா தன்னை வைத்து ஏதோ பிளான் செய்கிறாள், மாட்டக்கூடாது என நினைத்து வராத போன்காலை பேசியவாறு அங்கிருந்து தப்பித்து ஓடினான். ( ஹப்பா, ஒரு வழியா அர்விந்துக்கு அவன ஓட்டுறாங்கனு தெரிச்சுடுச்சுடோய்).

அர்விந்த் சென்றதும், கிடைத்த இடைவெளியில் கிடாய் வெட்டினாள் பாலா. பியா யோசித்து யோசித்து ஒரு முடிவு பண்ணி, லஞ்ச் டைமில் ரெஸ்ட் ரூம் போகிறேன் என பாலாவை கழட்டி விட்டு அர்விந்த் கேபினுக்கு போனாள். இவளை கண்டதும், அலறி (மனசுல தான்பா) என்ன என கேட்டவாறு எழுந்து நின்றான். இல்ல எனக்கு உங்க பர்சனல் போன் நம்பர் வேணும் என்றாள். என் பர்சனல் நம்பர் உங்களுக்கு எதுக்குங்க ?

நீங்க என்ன டிரஸ் போட்டுட்டு வர்றீங்கனு முன்னாடியே போன் பண்ணி கேட்டுக்கலாம்னு தான். மார்னிங் பாலா நம்ம டிரஸ் வெச்சு, ஏதோ பிளான் பண்ணுச்சு, இப்ப இந்தம்மா வேற வந்து பர்சனல் நம்பர் கேக்குது. ஒரு வேலை வீட்டுலயும் என்னை நிம்மதியா இருக்க விடக்கூடாதுனு பிளான் பண்ணறாளுகளோ என நினைத்தபடி கேபினை விட்டு தலை தெறிக்க ஓடினான் அர்விந்த். ச்சே, இந்த லூசு ஏன் என்னை பார்த்து இப்படி ஓடுது என நினைத்து, சரி மஹேஷ்கிட்டயே அர்விந்த் நம்பர் வாங்கிக்கலாம் என்று நகர்ந்தாள் பியா.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
fashion manufacturing details nice.............. intha arvindku ippo than thanai otranganu theryuthu...... hero monday varara........ nice epi sis:love::):):)
 




sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
fashion manufacturing details nice.............. intha arvindku ippo than thanai otranganu theryuthu...... hero monday varara........ nice epi sis:love::):):)
Thanks Friend, Google Aandavar than eppothum pola ippavum kai kodutaar...enna pannarathu intha kalathula koda ippadiyum sila appavigal irukka than seiyuthu....
 




Saratha

புதிய முகம்
Joined
Jan 20, 2018
Messages
12
Reaction score
10
Location
Salem
Very nice mam. You are trying hard to give the story relevant correct informatio. All the best.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top