You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 6

#1
எனது அருமை நட்புக்களே,

தாமதத்திற்கு மன்னிக்கவும்,பர்சனல் வேலை காரணமாக என்னால் நேற்று அப்டேட் கொடுக்க முடியவில்லை. அத்தியாயம் ஆறை பதிவு செய்துள்ளேன். என் கதையின் நிறை குறைகளை சொன்னால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

your valuable comments are so precious to me.

என்றும் அன்புடன்,
சுகி


அத்தியாயம் 6

பைக் ட்ரிப் போயிட்டு வந்த களைப்பில், பாலா சற்று அதிக நேரம் தூங்கிவிட்டு எழுந்து டைம் பார்க்க அது காலை 8 மணி என காட்டியது. ஹய்யயோ, 8.30 மணிக்கு பிரேக்பாஸ்ட் போகவில்லை எனில் ராது என் காதை பஞ்சர் ஆக்கிடுமே என நினைத்தபடி அவசர அவசரமாக ப்ரெஷ் பண்ணிவிட்டு டைனிங் ஹாலை நோக்கி ஓடினாள்.

அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து, பாலாவுக்காக வெயிட் பண்ணிக்கொண்டுருந்தனர். இவளை கண்டதும் ராதா, ஏண்டி, கழுதை வயசாகிடுச்சு, இன்னும் என்ன சின்ன குழந்தைனு நினைப்பா? இந்த மாதிரி அரையும் குறையுமா வெளியே வராதேனு எத்தனை தடவை சொல்லறது என பொரிய ஆரம்பித்தாள். நானும் தான் நிறைய டைம் சொல்லிட்டேன் என் டிரஸ் விஷயத்தில் தலையிடாதேனு நீ கேக்கறியா ராதுஉஉஉஉஉ என கத்தினாள்.

கழுதைனு அத்தை சொன்னதுக்கு இப்படி கத்தி காண்பிக்கணுமா பாலா என நக்கல் அடித்தான் சிவா.

பாமிலில எல்லோரும் நிறைய தான் சம்பாதிக்கிறோம். அதுனால, கஞ்சத்தனம் இல்லாம பெரியவங்க போடற ட்ரேஸ்ஸா எடு.. குழந்தைங்க போடற டிரஸ் எல்லாம் உனக்கு குழந்தை வரும் போது எடுத்துக்க என கடுகடுத்தாள் ராதா. பாலா தன் குட்டி ஷார்ட்ஸ் மற்றும் டிஷர்ட்டுடன் வெளியே வந்ததே இதற்கு காரணம்.

மா, எனக்கு கம்பர்டபிளா இருக்கற ட்ரேஸ்ஸை தான் போட முடியும். உன்ன மாதிரி 6 கஜம் புடவை எல்லாம் என்னால சுத்த முடியாது.ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்...ஆமா நாளைக்கு உங்க மாமியார் வந்து, பொண்ண நல்லா வளர்த்து வெச்சுஇருக்கே பாருனு என்னைத்தானே பேசுவாங்க உனக்கு என்ன....டோன்ட் ஒர்ரி மா, உன் மருமகப்பையன் கூட சேர்த்து அவங்க அம்மாவையும் கரெக்ட் பண்ணியிறலாம் என்றாள் கூலாக... இது அடிக்கடி நடப்பதுதான் என்றபடி அனைவரும் தத்தம் உணவில் கவனமாக இருந்தனர்.

என்ன ராது, குழந்தையை சாப்பிட விடாம திட்டிட்டு இருக்கே, நீ வாடா சுந்தரி, வந்து சாப்பிடுடா என்றார் கிருஷ். ஆமா குழந்தை இப்பதான் பீடிங் பாட்டில்ல பாலு குடிக்கறா, நீங்க மடியிலே படுக்க வைத்து தாலாட்டு பாடுங்க என நொடித்தாள் ராதா.

பிரியா, பாலா நான் முதல்ல போறேன் நீ பின்னாடி வா, இன்னைக்கு நம்ம JDS ஹெட் வேற வராருடி என்றபடி எழுந்து சென்றாள். பாலா கிளம்பிக் கொண்டியிருக்கும் போதே, பியாவிடம் இருந்து கால் வந்தது. "பாலா, லட்சுமி மில்ஸ் தாண்டிய சிக்னலில் இருக்கேன் கொஞ்சம் சீக்கிரமா வாடி என்றாள். ஓய், என்னாச்சு எதாவது ப்ரோப்ளமா? ஹ்ம்ம் கொஞ்சம் பிரச்சனை சீக்கிரமா வாடி. ஓகே ஐ வில் பி தேர் இன் 10 மினிட்ஸ். அவசர அவசரமாக டிரஸ் பண்ணி தனது கருப்பு குதிரையில் கிளம்பினாள் பாலா.

1523338605116.png
1523338502461.png

பாலா அங்கு செல்லும் போது, யூனிபார்ம் அணிந்த டிரைவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தாள் பியா. பியா முகம் கலக்கத்தையும், பயத்தையும் காண்பித்தது. பியா என்னடி நடந்தது? இவளை பார்த்ததும், பியா அழ ஆரம்பித்து விட்டாள். லூசு, அழமா என்னனு சொல்லுடி , அழறது எனக்கு பிடிக்காதுனு உனக்கு தெரியும்ல...இவள் இப்போதைக்கு சொல்லப் போவதில்லை என தெரிந்து பக்கத்தில் நின்று இருந்த டிரைவரிடம் கேட்டாள்.

அந்த சிக்னல் இருந்த கிளை சாலையில் தான், நிறைய கம்பெனிகளும், காலெஜ்களும் இருந்தன. அதனால், அங்கு நின்ற டிராபிக் போலீஸ், நல்ல விலை அதிகமுள்ள வண்டியாய் பார்த்து நிறுத்தி பணம் பிடுங்கி கொண்டு இருந்தனர். நம் பியா வண்டியையும் நிறுத்தி பணம் கேட்டுள்ளனர். அவள் தன்னிடம் அனைத்து டாக்குமெண்ட்களும் சரியாக உள்ளது எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுருக்கிறாள். அதற்கு அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், நீ கஞ்சா கடத்துனனு சொல்லி ஜெயில்ல போட்டுவேன்னு மிரட்டி சாவியை பிடுங்கி வைத்துள்ளான், இது தான் பாப்பா நடந்தது என்றார் அந்த 50 வயதுள்ள டிரைவர். சரி அண்ணா, நான் பார்த்துகறேன், நீங்க எங்ககூட வாங்க, வந்து அவனுக்கு தெரியாம, பேசறத என் போன்ல வீடியோ எடுங்க...சரி பாப்பா என்றபடி கூட வந்தார் முத்துசாமி.

ஹெல்லோ, உன் பேரு என்ன என்றாள் அந்த இன்ஸ்பெக்டரிடம், ஏய் நீ யாரு புதுசா பஞ்சாயத்து பண்ண வந்துருக்கே என்றான் திமிராக. அதற்குள் அவன் பேட்ச்சில் இருந்த நேமை பார்த்துவிட்ட பாலா, இங்க பாரு டேனியலு, நீ பியாகிட்ட பேசுனது தப்பு, மரியாதையா சாவிய கொடுத்துட்டு சாரி கேளு என்றாள் அழுத்தமாக.

என்னது, நான் சாரி கேட்கணுமா, என்ன திமிரா, ரெண்டும் பேரையும் திருடினு சொல்லி ஜெயில்ல போட்டுடுவேன் ஜாக்கிரதை என்று மிரட்டினான். டிரைவர் கூட அதை கண்டு பயந்தவனாக, வேண்டாம் பாப்பா காசை கொடுத்துட்டு போயிடலாம், இவன் வேற சென்ட்ரல் மினிஸ்டர்க்கு சொந்தக்காரனாம். அதுனால தான் இந்த ஆணவத்துல ஆடறான் என்றார் முத்து பாலாவின் காதில்.

எதற்கும் அசராத பாலா, "என்ன, எங்களை ஜெயில்ல போட்டுடுவியா, தைரியம் இருந்தா போடுடா பார்ப்போம், அடுத்தவங்க காசை பிடுங்கி திண்ணுகிற உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்". என்னது டாவா, நான் போலீஸ்காரன்டி, உன்னை என்ன பண்ணறனு பாரு என்றான் அதீதமான கோபத்தை காட்டியபடி....யாரைப்பார்த்து டி போடறடா பொறுக்கி என்றாள் அவன் அருகில் சென்று வீடியோவில் விழுகாதபடி. பொறுக்கி என்ன செய்வான் தெரியுமா என்றபடி, தனது அருகில் நின்ற பியாவின் கையை பிடிக்க போனான். பிடிக்க போனது மட்டும் தான் அவனுக்கு தெரியும், சரமாரியாக கன்னத்தில் அறைவிழ நிலைகுலைந்து போனான். ஒருவாறு சமாளித்து, அவளை அடிக்க கையை ஓங்கியவுடன், அவன் கையை பிடித்து முறுக்கி, முழங்கையில் டேக்வாண்டோ வெட்டு ஓன்று வெட்டினாள். கிரக் என்ற ஓசையுடன், அவனின் கை முறிந்தததை அனைவராலும் உணர முடிந்தது. தூரத்தில் இருந்து பார்த்த கான்ஸ்டபிள், ஏய் யாரு நீ, இவரு யாரு தெரியுமா உன்னை உயிரோடவே விட மாட்டாங்க என்றார். அதை நாங்க பார்த்துக்கறோம், முதல்ல அவன் பாக்கெட்ல இருந்து எங்க ஸ்கூட்டி சாவிய எடுத்து கொடு, எனக்கு ஆபீசிக்கு டைம் ஆச்சு. ஹான், நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் இது என்ன பேசிட்டு இருக்கு என நினைத்தபடி, இப்படி இன்ஸ்பெக்டர் கையை முறித்துவிட்டு, நீ கூலா ஆபீஸ்க்கு போறேன்னு சொல்லற" நீ என்ன லூசா என்பது போல பார்த்தார். கையை மட்டும்தான் முறிச்சேன்னு சந்தோசப்படு, இப்ப இந்த ஆளை தூக்கிட்டு போய் நல்ல டாக்டர் கிட்ட காட்டு. பேசி டைம் வேஸ்ட் பண்ணாதே என்று கூறி சாவியை வாங்கி கொண்டாள். இந்தா இது தான் என் அட்ரஸ், நான் இங்க தான் இருப்பேன், உன் இன்ஸ்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்க சொல்லு என்றபடி பியாவின் கையை பிடித்தபடி நகர்ந்தாள்.

ஆ என வாயை பிளந்தபடி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த டிரைவர் முத்துவும் பின்தொடர்ந்தார். பாப்பா, உங்க பேரு பாப்பா? தேங்க்ஸ் அண்ணே, என் பேரு பால திரிபுர சுந்தரி. அந்த அன்னையே அநியாயத்தை எதிர்க்க பாலாவின் ரூபத்தில் வந்ததாக மெய்சிலிர்த்தார். எதுக்கும் கொஞ்சம் பார்த்து ஜாக்கிரதையா இரு பாப்பா, என்றார் கவலையாக. கவலைப்படாதீங்க அண்ணா, இவனுக எல்லாம் பயப்படறவரைக்கும் தான் ஆடுவானுக, திருப்பி அடிச்சா கம்முனு போயிடுவாங்க.... நீங்க பார்த்துப்போங்க என்று சொல்லியபடி தனது குதிரையில் பறந்தாள். பியாவும் தனது ஸ்கூட்டியில் பின்தொடர்ந்தாள்.

1523348190777.png

இவை அனைத்தையும் காருக்குள் அமர்ந்து, ரசித்து கொண்டிருந்த சொந்தக்காரனின் இரு கண்களும், தனது ஜான்சி ராணியையே பின்தொடர்ந்தது. டிரைவர் முத்து வந்து வண்டியை ஸ்டார்ட் பண்ணப்போகவும், முத்தண்ணே, இருங்க ஒரு சின்ன வேலை இருக்கு என சொல்லியபடியே கீழே இறங்கினான் AV என்கிற ஆரன் வில்லியம் விக்டர். அந்த கான்ஸ்டபிளிடம் சென்று, தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, சில பல ஆயிரங்களை லஞ்சமாக தள்ளி, பாலாவின் முகவரியை பெற்று கொண்டான். மேலும், அவளை பற்றி, வேறு எந்த தகவலையும் யாருக்கும் சொல்லக்கூடாது என மிரட்டியும் சென்றான். இதை பார்த்துக்கொண்டிருந்த முத்து, தம்பி இதுபோல யாருக்காகவும் லஞ்சம் கொடுத்ததில்லையே என்னவாக இருக்கும் என யோசித்தபடியே காரை எடுத்தார். ஏனெனில், AV க்கு லஞ்சம் கொடுப்பது பிடிக்காத ஒன்று. லஞ்சம் கேட்டுத்தான் அவனது காரையும் நிறுத்தி இருந்தனர். எல்லாம் டாக்குமெண்ட்ஸ்ஸும் சரியாக உள்ளது. அப்படியே இல்லை எனினும், கவர்ன்மெண்டுக்காக பைன் கட்டிவிட்டு போறதை விட்டு எதற்காக லஞ்சம் கொடுப்பது என்பது அவன் எண்ணம். எதிலையும் ஒரு நேர்மை இருக்க வேண்டும் என நினைப்பவன். பாலா வராமல் இருந்திருந்தால், அவள் செய்ததை இவன் செய்து இருப்பான். யாருக்குமே பயப்படமாட்டன். தன்னை போலவே ஒருத்தியை பார்த்ததும் அசந்து விட்டான். தான் ஒருத்தனை ப்ளாட் ஆக்கினது தெரியாமல் JDS ன் உள்ளே நுழைந்தாள் பாலா.

கார் சென்று கொண்டிருக்கும் போதே, தன் நண்பனுக்கு அழைத்தான் " டேய், நான் ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன், அதுல இருக்கறது யாருனு விசாரிச்சு சொல்லுடா". ஹான், இந்த பொண்ணு பேரு என தொடங்கும் போதே பால திரிபுர சுந்தரி என்றான், பிரஜின். டேய் மச்சான், எப்படிடா, உனக்கு இந்த ஜான்சி ராணியை தெரியுமா என்றான், ஆர்வத்துடன். ஹ்ம்ம்ம், அந்த வாலுவை எனக்கு நல்லாவே தெரியும்டா. அவளுக்கு நான் ஸ்கூல் சீனியர், அவ கஸின் சிவா என்னோட கிளோஸ் பிரெண்ட் & அவங்க அப்பாவும், என் டாடும் திக் பிரண்ட்ஸ்டா... அதுனால தான், அவங்க அப்பாக்கு எவ்வளவோ பெரிய பெரிய ஆபர் வந்தும் நம்ம காலேஜேஸை விட்டு போகலை..அவ நம்ம பேமிலி பிரண்டடா. அம்மாக்கு அவளை ரொம்ப பிடிக்கும்...நீ பெங்களூரிலையே இருந்ததுனால உனக்கு தெரியல... ஆமா, பாலா போட்டோ உனக்கு எப்படி கிடைச்சுது, எதுக்கு அவளை பத்தி விசாரிக்கறே என்றான். சற்றுமுன், நடந்ததை சொல்லிவிட்டு , என்ன பொண்ணுடா அவள், எதுக்குமே பயப்படாமா தில்லா இருக்கா...ஐ திங்க், ஐ லைக் ஹெர் என்றான். அவளை பிடிக்காம யாருக்காவது இருக்குமா....அவ சரியான அடாவடி, கொஞ்சம் உனக்கு அவளை பிடிக்கும்னு தெரிஞ்சா கூட மிளகாய் அரைச்சுடுவாடா... சோ, நீ எப்பவும் போல கண்டிப்பாகவே இரு என்றான் பிரஜின் சிரித்தபடி.

1523361956687.png

போனை வைக்கும் சமயம், கார் JDSன் உள்ளே நுழைந்தது. நேயாவிடம் அரட்டை அடித்தபடி நின்று கொண்டிருந்த பாலா, அவசரமாக தன்னை சரிபடுத்திக்கொண்டு, ஒரு சிறு பெருமூச்சுடன் குட்மார்னிங் AV என்றாள். யாரை இவள் இத்தனை பெருமூச்சுடன் சைட் அடிக்கிறாள் என திரும்பி பார்த்த பாலா அசந்து நின்று விட்டாள் தன்னை தாண்டி ஒரு சிறு தலையசைப்புடன் கடந்து சென்றவனை பார்த்து...ஆம், பெண்களிலேயே சற்று அதிக உயரம் உள்ளவள் பாலா, அவளே அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருந்தான் அவன். மூன்று நாள் Shave பண்ணாத தாடி மற்றும் மீசையுடன் ஹாண்ட்சம்மாக இருந்தான். அது கூட அவனுக்கு அவ்வளவு அழகாக இருந்தது. வைட் கலர் ஷர்ட்டும், டார்க் ப்ளூ குச்சி ஜீன்ஸ்ஸும் அணிந்து லைட் பிரௌன் கலர் ஓவர்கோட் போட்டிருந்தான். தலையை ஸ்டைலாக வாரி, இடது கையில் சில்வர் கலர் பாசில் வாட்ச், வலது கையில் பிளாட்டினம் காப்பு, ஓவர்கோட் கலர்லேயே கிளார்க்ஸ் ஷூவும் அணிந்திருந்தான் அந்த அழகன்.

ஒரு நிமிடம், பேனு பார்த்தபடி நின்று விட்டோமே என தன் பின்மண்டையை தட்டியபடி, யார் இவர் என கேட்டாள் நேயாவிடம்... இவர் தான் நம் JDSன் ஹெட் மிஸ்டர். ஆரன் வில்லியம் விக்டர் அலைஸ் AV என்றாள் நேயா.
 

Attachments

#2
ins kaiya udaithutala:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:evalo thairyyema kattinalum, natu rottil kai udaipathu ellam konjam athikam sis.......... some intelligent move etukanam jansi rani........... this is my opinion:):):):) AV yai pathavane jerka nice sis:love::love::love::love:nice ud sis
 
#3
ins kaiya udaithutala:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:evalo thairyyema kattinalum, natu rottil kai udaipathu ellam konjam athikam sis.......... some intelligent move etukanam jansi rani........... this is my opinion:):):):) AV yai pathavane jerka nice sis:love::love::love::love:nice ud sis
அதே இன்ஸ்பெக்டர், நடு ரோடு, லேடீஸ்னு பார்க்காம கையை வைக்க வரும் போது, எதிர்த்து கையை உடைப்பது தவறில்லையே தோழி....

சமீபத்தில் இதே டிராபிக் இன்ஸ்பெக்டர், வண்டியை உதைத்து கர்ப்பிணி பெண் பலியானது என் மனதை மிகவும் பாதித்தது....அவனை போன்ற ஆளுகளை தட்டி கேட்க நம் நாயகியைப் போன்ற ஆண்களும் பெண்களும் முன்வர வேண்டும்.....

எனது பிரண்ட், கணவர் மற்றும் குழந்தையுடன் சினிமா பார்த்துட்டு வரும் வழியில், அனைத்து டாக்குமெண்ட் இருந்தும் பணத்துக்காக நடு ரோட்டில் குழந்தையுடன் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நிற்க வைத்து உள்ளனர். யாரோ ஒருவர் கொடுப்பதனால் தானே பணம் வாங்குகிறார்கள்...எனது நாயகி அநியாயத்தை எதிர்ப்பவள். அட்லீஸ்ட் அவள் வரையாவது எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என நினைப்பவள்....

மேலும், என் நாயகி எதற்கும் பயப்படாதவள், அநியாயத்தை பொறுக்காதவள், பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்பவள் மற்றும் மிகப்பெரிய பின்புலத்தை உடைய குடும்பத்தின் சப்போர்ட் உடையவள்....
 
#4
Ayyo semaya erukku ponga.:love::love::love::love::love:
Antha insu innum naalu katti erukkannum. :p:p:p:p:p
Hero introduction super:cool::cool::cool:.
Balava patha udane flat agitaru;););).
Balavin thairiyaththukku paaraatukkal.(y)(y)(y)
continued'ah padikkanumnu thonudhu. :D:D:D:D:D
Adutha epi Seekkiram kudunga.:giggle::giggle::giggle:
 

Jasha

Well-known member
#6
Avan ivala paathu siting ok but ivalum udanae looking vaenamae its my request fighting fightinga kondu ponga appo thaan interestinga irukkum but today nice epi
 
#7
Ayyo semaya erukku ponga.:love::love::love::love::love:
Antha insu innum naalu katti erukkannum. :p:p:p:p:p
Hero introduction super:cool::cool::cool:.
Balava patha udane flat agitaru;););).
Balavin thairiyaththukku paaraatukkal.(y)(y)(y)
continued'ah padikkanumnu thonudhu. :D:D:D:D:D
Adutha epi Seekkiram kudunga.:giggle::giggle::giggle:
நன்றி தோழி, உங்கள் கமெண்ட்ஸ்க்கு, என் எழுத்தை மேலும் மெருகேற்ற உதவுகிறது. அடுத்த எபிசோடை சீக்கிரமாக தர முயற்சி செய்கிறேன்.
 
#9
Avan ivala paathu siting ok but ivalum udanae looking vaenamae its my request fighting fightinga kondu ponga appo thaan interestinga irukkum but today nice epi
அழகை ரசிப்பது தவறில்லையே தோழி, யாராலும் அசர வைக்க முடியாத நமது பாலாவை, ஹீரோ சார் சிறிது அசைத்து பார்க்க வைத்துள்ளார்.....1000 பேர் இருந்தாலும் ஹீரோ ஸ்பெஷல் தானே, அதை அவள் உணராமலேயே ஹீரோவை பார்த்து சிறிது தடுமாறி உள்ளாள். மற்றபடி, உடனே தனது தடுமாற்றத்தை ஒத்து கொண்டால் அவள் பாலா இல்லையே......... மோதல், காதல் எல்லாம் கலந்த கதை தான் OAMA.
 
#10
அதே இன்ஸ்பெக்டர், நடு ரோடு, லேடீஸ்னு பார்க்காம கையை வைக்க வரும் போது, எதிர்த்து கையை உடைப்பது தவறில்லையே தோழி....

சமீபத்தில் இதே டிராபிக் இன்ஸ்பெக்டர், வண்டியை உதைத்து கர்ப்பிணி பெண் பலியானது என் மனதை மிகவும் பாதித்தது....அவனை போன்ற ஆளுகளை தட்டி கேட்க நம் நாயகியைப் போன்ற ஆண்களும் பெண்களும் முன்வர வேண்டும்.....

எனது பிரண்ட், கணவர் மற்றும் குழந்தையுடன் சினிமா பார்த்துட்டு வரும் வழியில், அனைத்து டாக்குமெண்ட் இருந்தும் பணத்துக்காக நடு ரோட்டில் குழந்தையுடன் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நிற்க வைத்து உள்ளனர். யாரோ ஒருவர் கொடுப்பதனால் தானே பணம் வாங்குகிறார்கள்...எனது நாயகி அநியாயத்தை எதிர்ப்பவள். அட்லீஸ்ட் அவள் வரையாவது எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என நினைப்பவள்....

மேலும், என் நாயகி எதற்கும் பயப்படாதவள், அநியாயத்தை பொறுக்காதவள், பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்பவள் மற்றும் மிகப்பெரிய பின்புலத்தை உடைய குடும்பத்தின் சப்போர்ட் உடையவள்....
ungal athangam bala moolam velipatuthi viteerkal(y)(y)(y)(y)(y)nice sis(y)(y)(y)(y)(y)
 

Sponsored

Advertisements

Top