• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sugi's Oru Adangaapidaari Mela Asaippatten - Episode 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sweetsugi123

மண்டலாதிபதி
Joined
Mar 29, 2018
Messages
269
Reaction score
1,207
Location
Coimbatore
அத்தியாயம் 8

View attachment 726

பாலாவும், அர்விந்தும் கான்பரன்ஸ் ரூமிற்குள் நுழையும் போதே, அனைவரும் வந்திருந்தனர். பாலா, பிரஜின் பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தாள். பிரஜினுக்கு முன் மைக்கும் அவனுக்கு முன் AVயும் அமர்ந்து இருந்தனர்...அர்விந்த் பாலாவுக்கு அடுத்த சீட்டிலும், எதிர்ப்புறத்தில் உள்ள இருக்கைகளில் லண்டனிலிருந்து வந்திருந்த கிளைன்ட் நால்வரும் அமர்ந்திருந்தனர். 27 to 30 வயதுள்ள ஆண், பெண் என இருவரும், 40 to 45 வயதுள்ள ஆண், பெண் என இருவரும் வந்திருந்தனர்.

அவர்கள் நால்வரும் தங்களை முறையாக அறிமுகப்படுத்தி கொண்டனர். AV எழுந்து, பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் அறிமுகப்படுத்தினான். பாலாவை அறிமுகப்படுத்தும் போது, மேனேஜ்மென்ட் நியூ ஜாய்னி என்றே அறிமுகப்படுத்தினான். தென் இந்த மீட்டிங் அஜெண்டா பற்றி சுருக்கமாக விளக்கினான். பாலா, நம் AV யின் நடை உடை மற்றும் ஸ்டைலான உரையில் கவரப்பட்டாலும், அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை. பிளைனான முகத்தோடு வேடிக்கை பார்த்திருந்தாள். பின்னர் கிளைன்ட் சைடிலிருந்து, தங்கள் தேவைகளை, தொழில் போட்டிகளை பற்றி விவாதித்தனர். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் சென்ற பிறகு, 15 மினிட்ஸ் பிரேக் விடப்பட்டது கூடவே சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. இதற்கிடையே பாலா, எக்ஸ்கியூஸ் மீ என்றபடி அவசரமாக தன் கேபின் சென்று, தனது டிசைன் ஆல்பம் புக்கை எடுத்துக்கொண்டு, லண்டன் டிசைன் யூனிட்டிடம் சென்று தனக்கு வேண்டிய தகவல்களை பெற்று கொண்டாள்.

அவள் திரும்பி வரும்பொழுது, மைக் தனது பிரசென்ட்டேஷனை தொடங்கி இருந்தான். இந்த மீட்டிங் எதற்காக என்றால், சம்மர் கலெக்க்ஷன் டிரஸ் ஆர்டர் பற்றி டிஸ்கஸ் பண்ண வந்து இருந்தனர். ஏராளமான போட்டி காரணமாக, இந்தமுறை தனித்துவமாக, டிமாண்ட் அதிகமுள்ள கலெக்க்ஷனை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்து ஏஜெண்டை அனுப்பாமல் நேரிடையாக வந்திருந்தனர் பிரைம் மார்க் நிர்வாகிகள். மைக்கும் இன்றைய ட்ரெண்ட்க்கு ஏற்ற மாதிரி இந்த வருட சம்மர் கலெக்க்ஷனை பற்றி விளக்கிக் கூறினான். AV யும் தன்னால் முடிந்தவரை அவர்களுக்கு சில பல டிசைன்களைக் காட்டினான். முடிவில், மற்ற இருவரும், ஓரளவுக்கு அரைமனதாக ஏற்று கொண்டாலும், இளைய தலைமுறையினர் இருவரும், மேலும் எதாவது யூனிக்காக காட்டுங்கள் என்றனர். வருஷா வருஷம் கொடுக்கற ஆர்டர் தானே என மைக்கும் இதற்காக வேறு எதையும் யோசிக்கவில்லை. மைக்கும், கையை விரித்த நிலையில் வேறு என்ன பண்ணுவது என யோசிக்க ஆரம்பித்தான் AV. பேசாமல், ஒரு ரெண்டு நாள் டைம் கேக்கலாம் ஆனால் அவர்கள் அதற்கு ஓகே சொல்லுவார்களானு தெரியலையே என தயங்கினான். இதைப் பார்த்த பாலா பிரஜினிடம் " பிரஜு, நான் சில ப்ரோபோசலை கூறவா", அனைவரும் கைவிரித்த நிலையில், அவளது இன்டெரெஸ்ட் பற்றி அறிந்திருந்ததால், ஓகே என்றான்.

View attachment 725

வணக்கம் டியர் பார்ட்டிசிபண்ட்ஸ், ஐயம் பாலா, பிரெஷர் இன் JDS...அனைவருக்கும் புரியும் படி, தமிழில் கொடுத்துள்ளேன் பின்வரும் உரையாடலை... எனக்கு தெரிந்த வகையில், சில ப்ரோபோசலைத் தருகிறேன், உங்கள் அனுமதியுடன் என்றாள்...இவள் தொடங்கியவுடன், AV இவ எதையாவது ப்ரொபோஸ் பண்ணி சொதப்பிவிடக்கூடாதேனு பயக்க, நம்மை விட என்ன பெரிதாக சொல்லிவிடப் போகிறாள் என மைக் நினைக்க, பேசாமல் கம்முனு உட்காருவதைவிட்டு இந்த அல்லிராணிக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என அர்விந்த் மனதில் நக்கலடிக்க, அவளை முழுமையாக நம்பியது பிரிஜின் ஒருவனே.

அவர்கள் யெஸ் ப்ளீஸ், என்றவுடன் நன்றி, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெஸ்ட்டானதை தர வேண்டும் என நினைத்து நேரடியாக இங்கு வருகை தந்து இருக்கும் தங்களுக்கு மீண்டும் ஒருமுறை வெல்கம் மற்றும் நன்றியினை எங்கள் JDS சார்பாக சொல்லிக் கொள்கிறேன் என தெளிவான ஆங்கிலத்தில் புன்னகை முகத்துடன் கூடை ஐஸை தூக்கி வைக்க தொடங்கியதும், அதுவரை அசட்டையாக இருந்த, மைக், அர்விந்த் மற்றும் இளைஞரணி கிளைன்ட் நால்வரும் நிமிர்ந்து அமர்ந்தனர்.

மேலும், போன வருடம் அவர்கள் எவ்வளவு டிஃபரெண்டாக, பெஸ்ட்டாக தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர் அண்ட் எப்படி அவர்கள் போட்டியாளர்களிடம் தனித்துவமாக இருந்து வெற்றி பெற்றார்கள் என கூறி அசர வைத்து நடுத்தர வயதுள்ள கிளைன்ட் இருவரையும் பிளாடாக்கினாள்..... ஏன் வாடிக்கையாளர்களுக்கும், சுற்று சூழலுக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் ஆர்கானிக் பாப்பிரிக் ஆடைகளை வழங்க கூடாது என கேள்வி கேட்டு யோசிக்க வைத்தாள்.

இளைஞரணி தலைவன், செய்யலாம் ஆனால் எங்கள் பட்ஜெட்க்குள் வராது என்றான். இதற்கான மூலப்பொருள் இந்தியாவில் எளிதாக கிடைக்கும் என கூறி, பாப்பிரிக், டிசைனிங், மானுபாச்சுரிங், பேக்கிங், டிரான்ஸ்போர்ட் அனைத்திற்குமான காஸ்ட்டை விவரித்து, நீங்கள் சொன்ன பட்ஜெட்டை விட சற்றே அதிகமான காஸ்ட் வரக்கூடும். ஆனால், நாம் அனைவரும், மனத்திருப்தியோடு தரமான பொருளை வாடிக்கையாளர்களுக்கு தரலாம். மேலும், இந்த ப்ராடக்ட் தனித்துவமாக உள்ளதால், புதுமையான மார்க்கெட்டிங் மூலம் நிறைய புது வாடிக்கையாளர்களை பிடிக்கலாம் என்று கூறி, லண்டன் மார்க்கெட் யுக்திகளையும் கூற ஆரம்பித்தாள். விலை சற்று அதிகம் எனினும், தரமாக இருந்தால் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவர் அண்ட் நீங்கள் உங்கள் லாபத்தில் சிறிது குறைத்து விற்றால், நிறைய கஸ்டமர் வாங்கும் போது உங்கள் லாபமும் பாதிக்காது. போட்டியாளர்களிடமும் எளிதாக வெற்றி பெறலாம் என தனது ப்ரோபோசலை ஸ்ட்ராங்காக பதிய வைத்தாள்.

முதலாவதாக, ஆர்கானிக் பனானா பைபர் பாப்பிரிக், மக்கும் தன்மை உள்ளது. உறுதியான இயற்கை பைபர், நீண்ட நாள் உழைக்க கூடியது. தண்ணீர், கண்ணீர், நெருப்பு இவற்றால் பாதிக்கப்படாது. மிகவும் மிருதுவானது, காற்று எளிதாக ஊடுருவக்கூடியது சம்மர்ற்கு மிகவும் ஏற்றது என்றாள் அழுத்தமாக....காட்டன் மற்றும் சில்க் உடைக்கான மிகச்சிறந்த மாற்று இது.

இந்த பாப்பிரிக், வாஷ் செய்யும் பொது சுருங்கும் தன்மையடையது. அதனால், ஸ்டிச்சிங் யூனிட்டிற்கு போவதற்கு முன் 4 to 5 டைம்ஸ் வாஷ் செய்து அனுப்பினால், ஷ்ரிங்க்கிங் இஸ்யூஸ் வராது என்று அதில் உள்ள சிக்கலுக்கு தீர்வையும் கூறி மேலும், தனது ஆல்பத்திலிருந்த டிசைன்களைக் காட்டினாள். அடுத்ததாக, சுத்தமான காட்டன் துணியில், இயற்கை சாயத்தை கொண்டு, களம்கரி பென் ட்ராயிங் கொண்ட டிசைன் பற்றியும், ஹாண்ட்லூம் போச்சம்பல்லி ட்ரெண்டி டிசைன் ஆல்பத்தையும் காட்டினாள்.

அவள் காட்டிய ஆல்பத்தில், லைட்டாக பாரம்பரிய டச் கொண்ட வெஸ்டர்ன் ஆடைகளும், பிரிட்டிஷ் மக்களுக்கு பிடித்த வெளிர் நிறத்தில் இருந்த பனானா பைபர் ஆடைகளும், சம்மர் வகேஷன்க்கு போடுவது போல் அழகான கலர் காம்பினேஷன் & பென் ட்ராயிங் உடைய களம்கரி ஆடைகளும், போச்சம்பல்லி ட்ரெண்டி ஆடைகளும் இளைஞரணியை மிகவும் கவர்ந்தது. அவர்கள் தங்களுக்கு வேணும்கற டிசைனையும், என்னென்ன சேஞ்சஸ் வேணும் என்பதையும் கூறினர்.

அதற்குமேல், AV அனைத்தையும் தன் கையில் எடுத்துக் கொண்டான். கொடுக்கப்பட்டு இருந்த ஆர்டர்க்கு, ரெக்குயர்மெண்ட்கான புளுப்ரின்ட்,விலைப்பட்டியல், விற்பனைக்கான ஒப்பந்தம் அனைத்தையும் ரெடிபண்ணி நாளை காலையில் சைன் பண்ணலாம் என முடிவு எடுக்கப்படும் போது மணி இரண்டானது.

கிளைன்ட் அனைவரையும், லஞ்ச் சாப்பிட அழைக்க அவர்கள் அனைவரும் எழுந்து வந்து தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் பாலாவுக்கு தெரிவித்தனர். இளைஞரணி வெரி ஹாப்பி மச்சி.....மீட்டிங் வெற்றிகரமாக முடிந்த சந்தோசம் அனைவர் முகத்திலும் இருந்தது.என்றும் இல்லாதவாறு AV மிகவும் புன்னகை முகத்துடன் காணப்பட்டான்.. தன் சுந்தரியால் அல்லவா இந்த ஆர்டர் நமக்கு கிடைத்தது அதுவும் கிளைன்ட்டின் மனநிறைவோடு. அனைவரும் பாலாவை புகழ்ந்தாலும், பாலா அவர்களை வழி அனுப்பி விட்டு அவசரஅவசரமாக கேன்டீன் நோக்கி பாய்ந்து சென்றாள். பின்ன, யாருக்கு ஆர்டர் கிடைச்சா என்ன, கிடைக்காட்டி என்ன நமக்கு சாப்பாடு ரொம்ப முக்கியம் அமைச்சரே, கேன்டீன்ல வேற 2.30 க்கு லஞ்ச் கிளோஸ் பண்ணிடுவாங்க....ரெஸ்ட்ரூம்க்கு போய்விட்டு, பியாவுக்கு கால் பண்ணி கேன்டீன் வரச்சொல்லிட்டு, ஆர்டர் கொடுத்து, லஞ்ச் வாங்கி வரும்போது அர்விந்த் தனியாக ஒரு டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.

பாலாவும், அர்விந்த் அருகிலேயே சென்று அமர்ந்து உண்ணத் தொடங்கினாள்...பாலாவைப் பார்த்த அர்விந்த் மனதிற்குள், என்னடா இந்த அலட்டு அலட்டுதே மங்குனி அமைச்சரா இருக்கும்னு பார்த்தா, இது விசயம் தெரிஞ்ச மங்காத்தாவா இருக்கே என நினைத்தான். என்ன அர்விந்து, இதுக்கு கூட கொஞ்சம் விஷயம் தெரியுதுனு பார்க்கற மாதிரி இருக்கே என பாலா கேக்க, திரு திருவென விழித்தபடி, அப்படியெல்லாம் உங்கள போய் நினைப்பேனா மேம், உங்க அறிவு என்ன, அழகு என்ன, ஸ்டைல் என்ன நான் தான் உங்ககிட்ட டிரைனிங் வரலாமானு யோசிச்சுக்கிட்டு இருந்தேன் என அந்தர் பல்டி அடித்தான். அவன் தடுமாறி, பதற்றத்துடன் பேசியத்தைக் கேட்ட பாலா நமட்டுச்சிரிப்புடன் தன் வேலையைப் பார்த்தாள். (சாப்பிடற வேலையைத் தாங்க

பியா வந்து, ஏண்டி எருமை லேட்டு, பசில நான் டிரைனிங் கொடுக்கறவரை கடுச்சு வைச்சுருப்பேன் இன்னும் கொஞ்ச நேரத்துல என சொல்லிக்கொண்டே வந்தவள் அர்விந்தை பார்த்ததும், சமத்தாக சைட் அடித்தபடி உண்ணத் தொடங்கினாள்...பியா பேசியத்தைக் கேட்டு, சற்று நகர்ந்து அமர்ந்த அர்விந்த், " அய்யோ, கடவுளே என்னை இப்படி ரெண்டு இரத்தக் காட்டேறிக கிட்ட மாட்டி விட்டுட்டாயே என புலம்பியபடி, அவசரமாக உணவை முடிச்சு தன் கேபின் நோக்கி ஓடினான். கிளைன்ட் மீட்டிங்னால லேட் ஆகிடுச்சு பியா என்று தங்களுக்குள் பேசியபடி உணவை முடித்து தத்தம் பணியிடத்தை நோக்கிச்சென்றனர்.
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
alli rani all rounder polaye asathal sis:love::love::love::love::love::love:organic banana fibre fabric pathina details arumai(y)(y)(y)(y) nice epi sis:love::love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top