• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thaalikayiru -5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
அத்தியாயம் -5-

சூரியனின் வெளிச்சங்களை இரவு விழுங்கியதில் அடர்ந்த இரவின் ஆழம் அதிகமாக இருந்தது. கிள்ளியூர் சாலையோரம் இருந்த தேவி குளம் யார் வரத்துமின்றி அமைதியாக கிடந்தது.

குளத்தில் வளரும் பஞ்சலை மீன்களும், சுலோப்பியா மீன்களூம், விரால் மீன்களும் மேலே எழும்பி குதித்ததில் குளத்து நீரில் சத்தம் எழும்பின.

நீர்ப்பாம்புகள் கல்லிடுக்கில் நுழைந்து தலை நீட்டாமல் தூங்கியிருந்தன. தவளைகள் தான் தூக்கமின்றி அழுது கொண்டு இருந்தன.

குளத்தின் மறுகரையில் முப்பது ஏக்கர் வயலை ஒன்று சேர்த்து ஒரே வயலாக வைத்திருந்தார் தீப்பொறி திவாகர்.

ஆரம்பத்தில் பத்து செண்ட் வயல் மட்டுமே சொந்தமாக இருந்தது. காலப்போக்கில் அக்கம் பக்கத்து வயல்காரர்கள் விவசாயம் செய்வதில் நஷ்டம் வருகிறது என்று விற்க முன் வந்த போது எல்லா வயல்களையும் வாங்கிச் சேர்த்ததில் முப்பது ஏக்கராக விரிந்திருந்தது.

வயலங்கரையில் இருந்த ஓடால் வேய்ந்த பங்களா வீட்டையும் சேர்த்து வாங்கியபோது அது அவருக்கு தண்ணி அடிக்கும் பங்களாவாகவே மாறியது.

தீப்பொறி திவாகர் ஊர் வரும்போதெல்லாம் அந்த பங்களாவின் முதல் மாடியில் அமர்ந்து வெளிநாட்டுச் சரக்கை சிறுகச் சிறுகக் குடித்து மட்டையாகி விடிந்த பிறகே வீடு திரும்புவார்.

அவருக்குத் துணையாக அவரது தம்பி வாசுதேவனும் தவறாமல் ஆஜராகிவிடுவார். தீப்பொறி திவாகர் ஊரில் இல்லை என்றாலும் வாசுதேவனும் அவனது சகாக்களும் வந்தமர்ந்து மட்டையாகிப் போவதுண்டு.

பங்களாவின் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்டிருந்தாலும் பங்களாவின் மேல் தளத்தை தேக்கு மரங்களால் நிரப்பி அதன் மீது முதல் மாடி அமைத்து ஜன்னல்கள் தாராளமாய் வைக்கப்பட்டிருந்தது.

தரையிலிருந்து மேலே வர மரப்பலகையிலான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன, அவைகளில் ஏறும்போதும் இறங்கும் போதும் எழும் காலடிச்சத்தம் டீறிஎஸ் சவுண்ட் சிஸ்டத்திலிருந்து எழும் சத்தம் போல் கேட்டது.

முதல் மாடியின் கூரை பனைமர உத்தரத்தால் இணைக்கப்பட்டு அதன் பக்கவாட்டில் பனைமர கழிக்கோல்கள் இணைத்து அதன் மீது வரிசையாக ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

முதல் மாடியின் எல்லா ஜன்னல்களையும் திறந்து விட்டதில் காற்று அறை முழுக்க சுதந்திரமாய் வந்து போனது. ஜன்னல் வழியாக தனது வயலை வேடிக்கை பார்த்தபடி நின்றார் தீப்பொறி திவாகர்.

கண்ணுக்கெட்டும் தூரம் வரை அவர் இடமாகவே இருந்தது. நிலவு இல்லாத வானத்தில் தூரத்தில் தெரிந்த நட்சத்திரங்கள் வானில் கோலமிட வைத்த புள்ளிகளாகவே தெரிந்தது.

வயலங்கரையிலிருந்து எழுந்த தவளைகளின் சத்தமும், பூச்சிகளின் ரீங்கார குரலும் அவரது காதுகளில் இசை ஒழுகி விழுவதைப்போலவே கேட்டது. அந்த பங்களாவில் தண்ணி அடிக்க எல்லாம் தயாராக இருந்தாலும் கேடி ஜோசப்பின் வருகைக்காக காத்திருந்தார் தீப்பொறி திவாகர்.

வாசுதேவன் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது சானல் முக்கு தாண்டியதாகவும் இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்து சேர்வேன் என்று பதில் தந்தான் கேடி ஜோசப்.

சொன்னபடி ஐந்தே நிமிடங்களில் பங்களா வந்து சேர்ந்தான். அவனது சீறிப்பாயும் புல்லட் சத்தம் அடங்கியபோது வண்டியை விட்டு இறங்கி பங்களாவின் படிக்கட்டுகளின் ஏறினான். அவன் காலடிச்சத்தம் அழுத்தமாகவே கேட்டது.

”ஐயா..வணக்கம், எதோ என்ன வரச்சொன்னீங்களாமே…” தனது கைகளை கூப்பியபடி வந்தான் கேடி ஜோசப்.

”என்னப்பா…இந்த ஊரே உன்னக்கண்டு பயப்படுது, நீ என்னடாண்ணா என் முன்னாடி பொட்டிப்பாம்பா அடங்கி நிக்கிற..? என்னால நம்பவே முடியலியே..?”

”இந்த ஜோசப் யாருக்கும் எப்பவும் பயப்பட்டதில்ல, இருந்தாலும் நீஙக் பெரிய மனுஷன், உங்ககிட்ட மரியாதையா நடந்துக்கிறது என்னோட கடமை இல்லையா..?

”நீ பலே கில்லாடிதான்.”

”நான் கில்லாடி இல்ல ஜோசப், கேடி ஜோசப்”.

” கேடி ஜோசப், இந்த தீப்பொறி திவாகர் நெருப்பு மாதிரி தொட்டா சாம்பல் தான் மிஞ்சும். அப்பிடி இருந்தும் தெக்குக்கர சேரியில இருக்கிற ஒரு பொண்ணு என் மகன கைக்குள்ள போட்டு இந்த வீட்டு மருமகளா வர ஆசப்படுறா…என் ரேஞ்சுக்கு அவள மேல அனுப்பியிடலாமுன்னு முடிவு பண்ணீட்டேன், நீ என்ன சொல்ற..?

”இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு..? நீங்க ஒண்ண முடிவு பண்ணினா அது பண்ணினதுதான், அத மாத்த உங்களுக்கு மட்டும்தான் உரிமையிருக்கு, இப்ப சொல்லுங்க அந்த பொண்ண எப்ப குளோஸ் பண்றது..?”

”நினச்சத முடிக்கிறவன்தான் இந்த தீப்பொறி திவாகர். அந்த பொண்ண தீர்த்து கட்டியிடு. மத்தத நான் பார்த்துக்கறேன், வாசுதேவா கேடி ஜோசப்புக்கு அஞ்சு லட்சம் பணம் அட்வான்சா குடுத்திடு, இது வெறும் அட்வான்ஸ்தான், காரியம் முடிஞ்சா புள் செட்டில்மென்ட்.. ஒ.கே.”

”முடிச்சிட்டு கூப்பிடுறேன், அப்போ நான் கிளம்பறேன்!”

அவர் கண் அசைக்கவும் வாசுதேவன் ஐந்து லட்சம் ருபாய் நோட்டுகட்டுகளை பிளாஸ்டிக் காகிதத்தில் போட்டு கொண்டு வந்து கொடுத்தான். கேடி ஜோசப் அதை வாங்கிக்கொண்டு கீழே இறங்கி வந்து தனது புல்லட் இருக்கும் இடத்துக்கு நடந்தான்.

முதல் மாடியில் கேடி ஜோசப்பும், தீப்பொறி திவாகரும் பேசிய ரகசிய பேச்சுக்களை முதல் மாடியின் பின் பக்கமிருந்த ஜன்னல் மறைவில் மறைந்து இருந்தபடி கேட்டுக்கொண்டிருந்தான் பிரபாகரன்.

அவனது அப்பாவும் சித்தப்பாவும் வயலங்கரை பங்களாவில் இருக்கிறார்கள் என்ற தகவல் செக்யூரிட்டி வாயிலாக கிடைத்தபோது உஷாரானான் பிரபாகரன். ஏதோ ஒரு திட்டம் போடப்போகிறார்கள் என்று அவன் உள் மனது சொல்லியது.

சடையன்குழி பாலத்தில் அமர்ந்து கொண்டு அவனது நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது புல்லட்டில் கேடி ஜோசப் சீறிப் பாய்ந்து போவதைக் கண்டான்.

அவனுக்குப் பின்னால் இரு சக்கர வாகனத்தில் பாலோ செய்தான் பிரபாகரன். கேடி ஜோசப் வயலங்கரை பங்களாவுக்குள் நுழைந்த போது அவன் சந்தேகப்பட்டது சரியாகவே இருந்தது. ஜன்னல் மறைவில் ஒட்டு கேட்டபோது அவன் உயிரே போனது போல் உணர்ந்தான். தனது காதலுக்கு அப்பா குழி தோண்டுவது வெட்ட வெளிச்சமாக புரிந்தது.

கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்தபடி ஓசை எழுப்பாமல் மாடிப்படிகளில் மெதுவாக இறங்கி குளத்தங்கரைக்கு வந்து கேடி ஜோசப்புக்காக காத்திருந்தான்.

சற்று நேரத்துக்கெல்லாம் புல்லட்டின் வெளிச்சம் வெகு தூரத்துக்கு வெளிச்சம் பாய்ச்ச சீறிப்பாய்ந்தபடி வந்து கொண்டிருந்தான் கேடி ஜோசப். அவன் வரும் வழியில் குறுக்கே நின்று கொண்டு இரண்டு கைகளையும் விரித்து பிடித்தபடி நின்றான் பிரபாகரன். கேடி ஜோசப் சட்டென்று பிரேக்கிட்டு புல்லட்டை நிறுத்தினான். பிரபாகரின் கண்கள் கலங்கி இருந்தன.

”கேடி ஜோசப், நீயும் அப்பாவும் பேசினதெல்லாம் ஜன்னல் மறைவில நான் கேட்டுகிட்டுதான் நின்னேன். நானும் வசந்தியும் உயிருக்குயிரா காதலிக்கிறோம், எங்க காதல எங்கப்பா ஏத்துக்கல, அதான் உன்ன கூப்பிட்டு என் வசந்திய தீர்த்துக்கட்ட சொன்னாரு, கேடி ஜோசப் உன் கால்ல வேணுமிண்ணாலும் விழுறேன், என் வசந்திய எதுவும் பண்ணியிடாத, என் அப்பாவுக்கு கொடுத்த வாக்குறுதிய காப்பாத்த என் வசந்திய நீ கொல பண்ணியிட்டா அடுத்த நிமிஷமே நான் உயிரோட இருக்கமாட்டான், எங்க ரெண்டு பேர் சாவுக்கு நீ காரணமாயிடாத…” அழவில்லை என்றாலும் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

”நான் சொல்லிகிட்டு எதயும் செய்யவும்மாட்டேன், செஞ்சிகிட்டு எதையும் சொல்லவும் மாட்டேன்!” சொல்லிவிட்டு புல்லட்டின் கிளச்சைப் பிடித்து கீயர் மாற்றிவிட்டு பறந்தே போனான். அவன் புல்லட்டின் பின்புறமிருந்த சிவப்பு விளக்கு மறையும் வரை அந்த வண்டியை வெறித்தபடி நின்றான்.

அவன் கவலையை யாரிடம் போய் சொல்வது, கேடி ஜோசப் சொன்னால் கேட்கும் ஆளும் கிடையாது, அவன் முரடன் அவனிடம் பேசுவது செவிடன் காதில் ஊதும் சங்கு போலத்தான் எந்த பயனும் கிடையாது.

இதற்கு இரு முடிவு கட்டியாக வேண்டும், இப்படியே விட்டால் வசந்தி உயிருக்கு ஆபத்து வந்து விடும், கேடி ஜோசப் நேரம் காலம் பார்த்து தான் செய்வான். அதற்குள் அவள் கழுத்தில் தாலி கட்டி மனைவி ஆக்கி இந்த ஊரை விட்டே எங்காவது ஓடி விட்டால்....

அவன் மனதில் அந்த சிந்தனை அடிக்கடி வந்து வந்து போனது. இது தான் சரியான முடிவு. இன்று இரவே இந்த விஷயத்தை வசந்தியிடம் சொல்ல வேண்டும்.

அவளும் நிலமையை புரிந்து கொண்டு இதற்கு சம்மதிப்பாள். மடத்து இசக்கி கோவிலில் வைத்து நாளை காலையில் அவள் கழுத்தில் தாலி கட்டலாம், பிறகு கோவைக்கு அவளோடு புறப்படலாம். அவன் சிந்தனை மாறாமல் வட்டமடித்து நின்றன.

இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தெக்குக்கரைக்கு விரைந்தான். இரவு மணி பத்தாகி இருந்தது கருப்பசாமி தூக்கம் வராமல் அரசாங்கம் இலவசமாக கொடுத்த தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தார்.

வசந்தி தென்னை ஓலைகளிலிருந்த ஈக்குகளை சீந்திக்கொண்டிருந்தாள், முற்றம் கூட்ட வைத்திருந்த துடைப்பம் அதர பழசானதால் புதிய ஈக்குகளை சீந்தி சேகரித்துக் கொண்டிருந்தாள்.

மொஃபல் வெளிச்சத்தில் குடிசைக்கு வந்து சேர்ந்தான் பிரபாகரன். ”வசந்தி” என்ற ஒற்றைக் குரல் கேட்டு இருக்கையை விட்டு எழுந்து வெளியே வந்தாள் வசந்தி. கருப்பசாமி டிவியை அணைத்தபடி பரபரத்தார். .

: ”என்னப்பா..இந்த ராத்திரி நேரத்துல வந்திருக்கிற?” பதட்டமாய் கேட்டார் கருப்பசாமி. பிரபாகரன் பதில் பேசாமல் மூச்சிரைத்தபடி நின்றான்.

”என்னாச்சு பிரபாகரன், ஏதாவது பிரச்சனையா” கவலையோடு கேட்டாள் வசந்தி.

” வசந்தி, இனியும் நாம இப்பிடியே இருந்தா நம்ம உயிருக்கும் காதலுக்கும் ஆபத்து வந்துடலாம், நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன், நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கு நம்ம மடத்து கோவில்ல வெச்சு வசந்தி கழுத்துல தாலி கட்டலாம்ன்னு இருக்கேன், நாளைக்கு சாயங்காலம் நாங்க ரெண்டு பேரும் கோயம்பத்தூர் போலாமுன்னு முடிவு செஞ்சிருக்கேன்!” பிரபாகரன் சொன்ன போது ஒரு கணம் அதிர்ந்தாலும் தனது மகள் கழுத்தில் தாலி கட்டுறேன் என்று கேட்டபோது மனசுக்கு சந்தோஷமாக இருந்தது.

”தம்பி..எனக்கிருக்கிறது ஒரே பொண்ணு, எம் பொண்ணு கல்யாணத்த எப்பிடியெல்லாம் நடத்தலாமுன்னு கனவு கண்டிருப்பேன் தெரியுமா? நீ பணக்கார வீட்டுப்புள்ள, நீ என் பொண்ண விரும்பறேன்னு கேள்விப்பட்டதும் எங்கே என் பொண்ணு வாழ்க்கை பாழாப்போயிடுமோன்னு பயப்பட்டேன், ஆனா இப்போ அவ கழுத்துல தாலி கட்டறேன்னு சொல்ற, கேட்கிறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு.” கருப்பசாமி முகம் மகிழ்ச்சியில் பிரகாசமானது.

”அப்பா, உங்க பொண்ணு ஒரு நல்லவரத்தான் விரும்பியிருக்கிறான்னு சந்தோஷப்படுங்க, பணக்கார வீட்டு ஆம்பளங்க எத்தனையோ பேர் ஆசை காட்டி அப்பாவி பொண்ணுங்கள மோசம் பண்ணியிருக்காங்க, ஆனா என் பிரபாகரன் அப்படி இல்ல, தெய்வமா மதிக்கப்படவேண்டியவர், அவங்க வீட்டுல ஆயிரம் பிரச்சனைகளுக்கு மத்தியிலயும் என் கழுத்தில தாலி கட்டறேன்னு சொல்றார், உண்மையிலேயே நான் ரொம்ப குடுத்து வெச்சவதான்.”

: ”வசந்தி, நான் போயிட்டு காலையில வந்திடுறேன், என் அப்பா சம்மதிச்சிருந்தா உன் கழுத்துல எவ்வளவு நகை வேணுமிண்ணாலும் போட்டிருக்கலாம், நம்ம கல்யாணம் எப்பிடியெல்லாமோ நடந்திருக்கும், ஆனா இது என் சம்மதத்தோட நடக்கிற கல்யாணம், என்னால உன் கழுத்துல மஞ்சள் தாலி தாம்மா கட்ட முடியும்,”

, ”நீங்க என் கழுத்துல கட்டுற தாலி தங்கமா இருக்கணும்ங்கிற அவசியம் இல்ல, மஞ்சள் கயிறா இருந்தாலும் மனசுக்கு பிடிச்ச ஒருத்தர் கட்டுறதாயிருந்தா அந்த மஞ்சள் கயிறையே தங்கத்தாலியா நான் ஏத்துக்குவேன்”

”வசந்தி, நான் வர்றேன்.”

”போயிட்டு வாங்க.” பிரபாகரன் போவதையே பார்த்தபடி நின்றாள் வசந்தி.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
பால்ராசய்யா சார்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top