• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thaalikkayiru -15 (2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
அவன் பைக்கை எடுத்துக்கொண்டு அவளை திரும்பிப் பார்த்த படியே புறப்பட்டுப் போனான். வசந்தியின் உடல் லேசாய் கொதித்தது.

இதுநாள் வரை வாழ்ந்தது வாழ்க்கை அல்ல, மனதுக்குள் இருக்கும் பிரபாகரனோடு கேடி ஜோசப்பின் வீட்டில் ஒரு வேலைக்காரி போல வாழ வேண்டிய கட்டாயம்.

பிரபாகரன் இப்போது எடுத்த முடிவை அப்போது எடுத்து இருந்தால் கேடி ஜோசப் வீட்டில் வாழும் நிலமை வந்து இருக்காது.

ஒரு நாள் தாமதம் வாழ்க்கையை மாற்றிப்போட்டது. இப்போது ஒன்றும் கெட்டு விடவில்லை, நல்லவேளை வீட்டில் கேடி ஜோசப்பும் இல்லை.

நாளை காலையில் தான் வருவார். அவள் மனதில் கூடியிருந்த பயம் விலகி தனது எதிர்காலம் இனி பிரபாகரனோடு தான் என்று நினைத்த போது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

பிரபாகரன் தன்னை இன்னமும் மறக்காமல் இருந்தது கூடுதல் பலமாக இருந்தது. வேறு யாராக இருந்தாலும் திருமணமான பிறகு ஒன்றிரண்டு நாட்கள் கவலையுடன் இருந்து விட்டு பின்பு அம்மா அப்பா பேச்சைக் கேட்டு மனம் மாறி இருப்பார்கள்.

அவன் அப்படியொன்றுமில்லை. அன்று தெக்குக்கரையில் சாராயம் குடித்துவிட்டு மயங்கிச் சரிந்தவனை அப்பா தூக்கி வந்து வீட்டுத் திண்ணையில் படுக்க வைத்திருந்தார்.

தூக்கத்தில் புலம்பியபோது தனது பெயரை உச்சரித்ததே அவன் மனது இன்னும் தன்னை மறக்கவில்லை என்று புனலாகியது.

எல்லாம் விதி என்று அப்போது அவனைப் பற்றிய ஆசைகளை அடக்கி வைத்திருந்தாள், காலம் இப்போது தான் கனிந்து வந்திருக்கிறது.

வசந்தி இரவு செல்வதற்கு அப்போதே துணி மணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள், எல்லாம் முடிந்தாயிற்று. பக்கத்து வீட்டுச் சிறுவன் அபிலாஷ் பள்ளிக்கூடம் முடிந்து மதியம் இரண்டு மணிக்கெல்லாம் வந்து விடுவான்.

அந்த வீட்டில் அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவன் தான். கேடி ஜோசப்புக்கும் அவளுக்குமான தூதுவனும் அவன் தான்.

அவனிடம் இந்த ஊரை விட்டே போகப் போகிறேன் என்ற தகவலைச் சொல்ல வேண்டும். நாளைக் காலை கேடி ஜோசப் வரும்போது அவன் தகவல் சொல்லிவிடுவான்.

அவனிடம் நல்ல பழக்கம் நிறையவே இருந்தது, இதை யார்கிட்டயும் சொல்லிடாத என்றால் அவன் வேறு யாரிடமும் சொல்லவே மாட்டான்.

நாளை காலையில் கேடி ஜோசப்பிடம் மட்டும் தான் சொல்ல வேண்டும் என்று கண்டிசன் போட்டால் சொன்னபடி செய்வான்.

கேடி ஜோசப்புக்கு அது தலை குனிவாக இருக்கும்.

இருக்கட்டும் என் வீடு தேடி வந்து மிரட்டி என் கழுத்தில் தாலி கட்டியபோது ஒரு வார்த்தை கூட பேசாமல் நான் தலை குனிந்திருந்தேன்.

அதன் வலியை கேடி ஜோசப்பும் உணரட்டும். மனதுக்குள் கறுவிக்கொண்டாள் வசந்தி.

மணி இரண்டரை ஆகியிருந்தது ஸ்கூல் வேன் வந்து சேர அபிலாஷ் இறங்கி அவன் வீட்டுக்கு நடந்த போது அவனை காத்திருந்து அழைத்தாள் வசந்தி.

”இருங்க புக்ஸ் எல்லாம் வீட்டுல வெச்சிட்டு வந்துடுறேன்!” சொல்லிவிட்டு அவன் வீட்டுக்குச் சென்று புக்ஸ்சை வைத்து விட்டு அணிந்திருந்த யூனிபார்மை கழட்டி விட்டு வேறு உடைக்கு மாற்றி விட்டு வந்தான். அவன் வந்ததும் அவனை கட்டி அணைத்தாள் வசந்தி.

”என்னக்கா...ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல!”

”ஆமடா..ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!” பதில் சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்

”நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணிடப் போறேன், நான் இண்ணைக்கு நைட் கிளம்பிடுவேன், நாளைக்கு காலையில கேடி ஜோசப் அங்கிள் கிட்ட நான் இனி திரும்பி வரமேட்டேன்னு நீ சொல்லணும், இத நீ வேற யார்கிட்டயும் சொல்லக்கூடாது, சரியா..!”

”அப்பறம் நீங்க திரும்பி வரவே மாட்டீங்களா..?”

”மாட்டேன்!” அவள் சொன்னதும் அவள் மடியிலிருந்து நழுவி வாசலுக்கு வெளியே வந்தான்.

”போக்கா..நான் சொல்லவே மாட்டேன்!” அவன் கண்களை கசக்கியபடி அவன் வீட்டுக்கு நடந்தான்.

வசந்திக்கு என்னவோ போல் ஆனது. வந்த கொஞ்ச நாளில் அவன் மனதில் சட்டென்று வந்து ஒட்டிக்கொண்டான். மூன்றாம் வகுப்பு படித்தாலும் அறிவில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவனைப்போல் முதிர்ச்சி இருந்தது.

மாலையில் அவனை அழைத்து சமாதானப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அவள் வாசலில் நின்றபடி அவன் வீட்டைப் பார்த்தபடி நின்றாள்.

வெயில் இறங்கி மேற்குப் பக்கம் சரிந்தது. வசந்தி இரவுக்குக் காத்திருந்தாள். இரவு சட்டென்று வந்து விடாதா என ஏங்கினாள்.

அவளுக்கு ஒன்று புரிந்தது. எதை அதிகமாக எதிர் பார்க்கிறோமோ அது தானாகவே நடந்தாலும் நடக்கவில்லை என்றே தோன்றும்.

நேரம் அவளுக்காக தாமதமாக ஒன்றும் ஓடவில்லை, ஆனால் தாமதமாக ஓடுவதைப் போல் உணர்ந்தாள்.

வீட்டு ஷோகேஸ்சில் வைத்திருந்த கேடி ஜோசப்பின் போட்டோவில் அவன் கடா மீசையுடன் கம்பீரமாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.

வசந்திக்கு அந்த போட்டோவைப் பார்த்த போது சிரிப்பு வந்து முட்டியது. புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருக்கும் கேடி ஜோசப் நாளை காலை வரும்போது தன்னை காணாமல் மனம் தளர்வான்.

பக்கத்து வீட்டு அபிலாஷ் ஓடி வந்து விஷயத்தைச் சொல்லும் போது மனம் தளர்ந்து பிரபாகரனைப் போல் மது அருந்தப் போவான். நினைக்க நினைக்க சந்தோஷமாக இருந்தது
 
N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore

பிணைப்பு!?
 
lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
இது தப்பு இல்லையா வசந்தி
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top