• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thaalikkayiru 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
அத்தியாயம் - 8

காற்றைத் தின்று கொண்டிருந்தது இரவு. அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளை திறந்து கொண்டதில் காற்றின் வரத்து சற்று கூடுதலாக இருந்தது.

வசந்தி ஜன்னலுக்கருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு இரண்டு கைகளையும் ஜன்னலில் வைத்து அதன் மீது தன் தலையை சரித்து அழுது கொண்டிருந்தாள்.

முள்ளஞ்சேரி ஊர் அவளுக்கு தெரிந்திருந்தாலும் குளத்தங்கரையிலிருக்கும் கேடி ஜோசப்பின் தனி வீடு அவளை பயமுறுத்தியது.

உடல் முழுக்க பயம் அவளை சுற்றிக் கிடந்தது. சூன்யமாகிப்போன தனது வாழ்க்கையை நினைத்து துவண்டிருந்தாள்.

அவள் மனம் பிரபாகரனையே நினைத்துக்கொண்டிருந்தது. அவன் கண்முன்பே இன்னொருத்தனின் தாலியை சுமந்தபடி கடந்து போனது எத்தனை கொடிய துன்பம்.

கேடி ஜோசப் எப்போது தாலி கட்டினானோ அப்போதே அவள் உடம்பில் உயிர் இருந்தும் உயிரற்ற ஜடமாகத்தான் இருந்தாள்,

பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. பேசத் தெரிந்த ஊமையாகவே இருந்தாள். வடியும் கண்களுக்கு அளவே இல்லாமல் போனது.

இரவு ஒன்பது மணிக்கு கரண்ட் கட்டாகியிருந்தது. அறை முழுக்க இருள் கவ்வியிருந்தது. அவள் எழுந்து சென்று மெழுகுதிரி தேடி எடுத்து வந்து பத்த வைத்து இருளை விரட்டியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. அந்த இருட்டில் பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள்.

நாய்கள் ஊளையிட்டுக்கொண்டே இருந்தன. தெக்குக்கரையிலிருக்கும் அவள் குடிசையில் ஒரு நாய்ச்சத்தம் கேட்டால் போதும் பயத்தில் அவள் அப்பா கருப்பசாமியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நாய்களை துரத்தச் செய்வாள்.

இன்று இருட்டு அறையில் அவள் காதுகளின் நாய்களின் சத்தம் விழுகிறது அவளுக்கு பயமில்லை, அவள் மனம் மரத்துக் கிடந்தது.

காதல் தோற்றிருந்தால் கூட இப்படி வருத்தப்பட்டிருக்க மாட்டாள், ஆனால் இந்த ஊரே பயந்து நடுங்கும் கேடி ஜோசப் வலுக்கட்டாயமாக அவள் கழுத்தில் தாலி கட்டியது தான் பெரிய அவமானமாகக் கருதினாள்.

அந்த வலியை தாங்கிக் கொள்ளத்தான் அவளால் முடியவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் கரண்ட் வந்தது. கட்டிலுக்கருகில் இருந்த மேசையில் ஆப்பிள் பழங்கள் இருந்தது.

முன்பெல்லாம் ஆப்பிள் பழம் அவளுக்கு கிடைக்காத ஒன்று. கருப்பசாமியிடம் ஒரு நாள் கூட தனக்கு ஆப்பிள் என்றால் அலாதி பிரியம் என்று சொன்னதில்லை.

இப்போது இருக்கும் விலைவாசியில் அது வாங்குவது முடியாத காரியம் என்றே அந்த ஆசைகளை குழி தோண்டி புதைத்திருந்தாள்,

இன்று ஏராளமாய் ஆப்பிள் வாங்கி வைத்திருந்தான் கேடி ஜோசப், ஆனால் அதில் ஒன்றைக் கூட தின்ன ஆசை வரவில்லை. பசி அவள் உடலை வாட்டி எடுக்கத்தான் செய்கிறது, இருந்தாலும் சாப்பிடப் பிடிக்கவில்லை.

வெளியே புல்லட் சத்தம் கேட்டது, அந்த சத்தம் கேட்ட பிறகும் அவள் அந்த ஜன்னலை விட்டு எழுந்திருக்கவே இல்லை.

கேடி ஜோசப் உள்ளே நுழைவதற்கு முன்பு அவன் அருந்திய மது வாசம் உள்ளே நுழைந்தது. அவன் அரை போதையில் இருந்தான்.

கதவு திறந்தே கிடந்தது. அவன் உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டான். கதவின் பின்னால் சாய்ந்து கொண்டு வசந்தியை எற இறங்கப் பார்த்தான்

அவள் ஜன்னலை விட்டு எழும்பாமல் தலை சாய்த்தபடியே இருந்தாள். தான் அறைக்குள் வந்தது, கதவை தாளிட்டது இந்த சத்தங்களுக்குக் கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை.

கேடி ஜோசப் அவள் அருகில் வந்து நின்றான். அவன் கையில் பாதி முடிந்த நிலையில் மது பாட்டில் ஒன்று இருந்தது.

”வசந்தி, இண்ணைக்கு நமக்கு முதல் ராத்திரி, எல்லா புருஷன்களும் கையில ஒரு முழம் மல்லிகைப் பூவோட, திருநெல்வேலி அல்வாவோட பெட்றூமுக்குள்ள நுழைவான், ஆனா இந்த ஜோசப் கையில பாட்டில் இருக்கேன்னு பார்க்கிறியா..? என்ன பண்றது இந்த சரக்கு உள்ள போகலையின்னா தூக்கம் வராது, ஆமா, உன்ன இந்த வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்து விட்டிட்டு வெளியே போறப்போ என்கிட்ட ஏதோ தனியா கொஞ்சம் பேசணும்னு சொன்னியே இப்போ சொல்லு.” அரைப் போதையுடனே சொன்னான். கேடி ஜோசப்.

”தனியா கொஞ்சமில்ல, நிறையவே பேசவேண்டியதிருக்கு…இதுவரைக்கும் கேடி ஜோசப்ங்கிற பேரக்கேட்டாலே என் கைகாலெல்லாம் நடுங்கும், ஆனா இப்போ எனக்கு அப்பிடி பயமே இல்ல ஏன் தெரியுமா..? உயிர் மேல எனக்கு ஆசை இல்ல..இந்த ஊரே உன்னக்கண்டு பயப்படலாம், ஆனா இந்த வசந்தி இனி பயப்படமாட்டா…நீ இந்த ஊருக்கு பெரிய தாதாவா இருக்கலாம், ஆனா எனக்கு நீ வெறும் கூஜாதான்.!” அவளுக்கு எங்கிருந்து அப்படியொரு தைரியம் வந்ததோ குரல் இறுக்கமாய் கேட்டது.

அவள் பார்வை வேறு விதமாய் இருந்தது, சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா எப்படி பிரபுவுடன் முகத்தை சரித்து வைத்து கண்களை உருட்டி பேசுவாளோ அதே போல் நின்றாள் வசந்தி.

கேடி ஜோசப் ஆடிப்போனான். ரொம்ப சாதுவாக காலையில் பார்த்தவளை இப்போது பத்ரகாளியாக நிற்பது கண்டு மிரண்டான். அவன் இடுப்பில் கட்டியிருந்த பெல்டைக் கழட்டி அதிலிருந்த கத்தியை எடுத்து நீட்டினான்.

”என்னடி சொன்ன துப்பு கெட்ட நாயே…என்கிட்ட எதிர்த்தாடி பேசற..? உன்ன…கொடல உருவி மாலையா போட்டிடுவேன் ஜாக்கிரதை” பற்களை நற நறவென்று கடித்தபடி சொன்னான் கேடி ஜோசப்..

”அனியாயமா என் பிரபாகரன என்கிட்டயிருந்து பிரிச்சி என் கழுத்துல அவன் கட்டவேண்டிய தாலிய நீ கட்டினியே, அந்த நிமிஷத்திலயிருந்து இந்த வசந்தி உயிரற்ற புணமாத்தான் நடமாடிகிட்டு இருக்கிறா…உன் கையில கத்தியிருக்கு, ஆத்திரத்துல என்ன குத்தி கொல பண்ணு நான் சாகிறதுக்கு தயாரா இருக்கேன்.!” மீண்டும் பத்ரகாளியானாள் வசந்தி.

கேடி ஜோசப் கையிலிருந்த மது பாட்டிலை அண்ணாந்து பார்த்து அப்படியே வாய்க்குள் சரித்தான். அதன் வாசம் அடர்த்தியானது.

”என் கழுத்துல நீ தாலி கட்டிகிட்டா உன்ன என் புருஷனா நான் ஏத்துக்குவேன்னு நீ நினச்ச, இந்த வசந்தி இப்பவும் சரி எப்பவும் சரி உன்ன என் புருஷனா எந்த சமயத்திலயும் நான் ஏத்துக்கமாட்டேன். இந்த ஊருக்காகவும் என் அப்பாவுக்காகவும் உன் கூட குடும்பம் நடத்துவேன் ஆனா என் மனச பிரபாகரனுக்கு கொடுத்தது கொடுத்தது தான். உன் பலத்தக் காட்டி என்ன பலாத்காரம் பண்ண நினைச்சா இந்த வசந்தி அடுத்த நிமிஷமே செத்துப்போயிடுவா பார்க்கிறியா பார்க்கிறியா?” சொல்லிவிட்டு தன் இடுப்பில் கட்டியிருந்த சேலையை உருவி ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியை நிறுத்தி விட்டு சேலையை அதன் மீது தூக்கி வீசினாள்.

சேலையின் ஒரு முனை மின் விசிறியில் பட்டு தொங்கி சரிந்தது.

”கழுத்துல சுருக்கு போடவா? போடவா? உன் விரல் நுனி என் உடம்பில பட்டா அடுத்த நிமிஷம் இந்த வசந்தி இங்க பொணமா நிப்பா!”

கேடி ஜோசப் அதிர்ந்து போய் அவளையும் மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருந்த புடவையையும் மாறி மாறிப் பார்த்தான்.

அவன் குரல் அடங்கியிருந்தது. குடித்திருந்த மது தானாய் இறங்கியது. உடல் வியர்த்துக் கொட்டியது.

கதவைத் திறந்து கொண்டு ஹாலுக்கு வந்து போட்டிருந்த ஷோபாவில் கால் நீட்டிப் படுத்தான். ஊரே அவனைக் கண்டு பயப்படுகிறது ஆனால் கேடி ஜோசப் அவளுக்குப் பயந்தான்.

அவனுக்கு தூக்கம் வரவில்லை. அந்த இரவிலும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். குளத்தின் கரையிலிருந்து தவளைகள் கத்திக்கொண்டே கிடந்தன.

எந்த பாம்புகளும் அதன் சத்தம் கேட்டு வரவில்லை. கேடி ஜோசப் அந்த இருட்டிலும் நடந்து வந்து அருகிலிருந்த திரைப்பட நடிகர் ஆல்பர்ட்ராஜின் கல்லறையின் மீது வந்தமர்ந்து சிகரெட் ஒன்றை பத்த வைத்தான்.

ஊரே அடங்கிக் கிடந்த அந்த இரவில் அந்த கல்லறையில் வந்தமர்ந்து கொண்ட போது காற்று அவன் உடலைத் தழுவியது.

ஆல்பர்ட்ராஜ் நினைவுக்கு வந்தான். சிறந்த நாடக நடிகர். சின்ன வயதிலேயே நாடகம் தான் அவனுக்கு உயிர். அருகிலிருந்த முள்ளஞ்சேரி கோவில் திருவிழாவில் அவன் நடித்த நாடகம் கண்டு அவனை மனதார பாராட்டினான்.

அன்றிலிருந்து அவன் மீது ஒரு ஸ்னேகம் ஒட்டிக்கொண்டது. கோவில் திருவிழாக்கள் வரும்போதெல்லாம் நாடகம் நடத்த மூன்று முறை ஸ்பான்சர் செய்தது நினைவுக்கு வந்தது,

இருபது வருடங்களுக்கு முன்பு அவன் சினிமாவில் நடிக்க ஆர்வமாய் சென்னைக்குச் செல்லும்போது அவனிடம் சொல்லி விட்டுபோனான்.

அவன் தனி ஆளாக நின்று போராடினாலும் எந்த சினிமாவிலும் தலை காட்ட முடியவில்லை. வீட்டில் பெரிதாக வசதி ஒன்றும் இல்லை தான் ஆனால் அவனது மனைவி தன்னம்பிக்கையை தளர விட வேண்டாம் என்று ஊக்கப்படுத்துவாள்.

பத்து வருடங்களுக்குப் பிறகு அவன் ஊர் வந்த போது அவன் முகம் பிரகாசமாக இருந்தது. இயக்குநர் ஹரி அவர்களின் டிரைவராக பணி கிடைத்திருக்கிறது, இனி மெல்ல மெல்ல அவர் படங்களில் வாய்ப்பு கேட்டு முன்னுக்கு வருவேன் என்று நம்பிக்கையோடு சொன்னான்.

அவன் சொன்னது போல் ஆறு திரைப்படத்தில் சிறு வேடம் செய்து சினிமாவில் முகம் காட்டினான். வில்லன் நடிகர் பொன்னம்பலம் போல் மீசையற்று அவரைப்போல முரட்டு தோற்றத்திலிருந்தான் ஆல்பர்ட்ராஜ்.

தாமிரபரணி, சேவல் போன்ற அவரது படங்களில் நடித்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டான், வன்மம், மாப்பிள்ளை சிங்கம் படங்களிலும் நடித்து முடித்த போது அவன் முகம் மாறி இருந்தது.

கடா மீசை வைத்து உருவமே மாறி இருந்தான். அவனது தோற்றம் கண்டு இயக்குநர் ஹரியே வியந்து போய் சிங்கம் -3 சினிமாவில் நடிகர் சூர்யாவின் டிரைவராகவே நடித்து தனக்கென்று தனி முத்திரை பதித்தான்.

படப்பிடிப்பு முடிந்து ஊர் வந்தபோது அவன் முகம் பிரகாசத்திலிருந்தது, அவனது ஓட்டு வீடு கழிக்கோல்கள் நைந்து ஒழுகிக்கொண்டிருந்தது.

”அண்ணே...அடுத்த வருஷம் வீடு கட்டியிர்வேண்ணே!” ஆல்பர்ட்ராஜ் சொன்னது இப்பொழுதும் கேடி ஜோசப்பின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

படப்பிடிப்பு முடிந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட போது அவனுக்கு உயர் ரத்த அழுத்தம் நோய் வந்து காலன் அவனை களவாடிச்சென்றான்.

சிங்கம்-3 திரைப்படத்தில் நல்ல வேடமேற்று நடித்ததை பார்க்க கொடுத்து வைக்காதவன் ஆனான். அவனது மனைவிக்கும் பிளஸ் டு படிக்கும் அவனது மகனுக்கும் யார் ஆறுதல் சொல்லக்கூடும்.

ஆல்பர்ட்ராஜை நினைக்க நினைக்க கேடி ஜோசப்பின் மனம் இறுகியது. சற்று நேரத்துக்கு முன்பு வசந்தி ஆடிய ஆட்டம் கண்டு மிரண்டு அந்த கல்லறை மீது படுத்தான்.

கல்லறை மார்பிள் கல்லால் பதிக்கப்பட்டிருந்தது. அதன் மீது படுத்துறங்கியபோது தூக்கம் அவனைத் தழுவியது.

ஐந்து மணிக்கெல்லாம் அவனுக்கு முழிப்பு வந்தபோது சட்டென்று எழுந்து தனது வீட்டுக்கு நடந்தான். வழியில் யாராவது பார்த்துவிடக்கூடாது என்று அங்கும் இங்கும் பார்த்த படியே நடந்தான்.

ஊரே அவனைக்கண்டு பயந்து கிடக்கிறது நேற்று தாலி கட்டிக்கொண்டவன் முதலிரவு அன்று கல்லறையில் படுத்துக்கிடந்தான் என்றால் அது அவனுக்கு இழுக்கு.

அவள் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்டத் தெரிந்தவனுக்கு அவள் பேச்சை தட்டத் தெரியவில்லை.

வீட்டுக்கு வந்து சேர்ந்த போது முன் கதவு திறந்தே கிடந்தது. மீண்டும் ஷோபாவில் வந்தமர்ந்தான். அன்றிலிருந்து அவனது படுக்கை அந்த ஷோபாவில் அமைந்திருந்தது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
பால்ராசய்யா சார்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பால்ராசய்யா சார்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Vasanthi is bad
Uyir irunthaal thaane Pirabhakaranai ninaikka mudiyum ngrathai Vasanthi maranthu vittaalo, Paalraasaiyaa Sir?
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
வசந்தியிடம் இவ்வளவு துணிவை எதிர் பார்க்கவில்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top