THAVAM 28(5)

anitha1984

Author
Author
#1
யாரோ எழுதிய கவிதை ,யாரோ இசை அமைத்து பாடியது தான் .அது அவன் சொந்த படைப்பு இல்லை தான் என்றாலும் மேடையில் அவன் பாடிய விதம் ,கேட்பவரின் மனதை போட்டு பிசைந்து எடுத்தது .அந்த பாடலின் மொழி வேறு தான் என்றாலும் ,இசைக்கு, காதலுக்கு மொழி தேவை இல்லை தானே .....அந்த பாடலை கேட்டவருக்கு விஜய்யின் காதல் அதன் ஆழம் புரியாமல் இருக்காது தான் .மற்றவருக்கே அதன் பாதிப்பு இருக்கும் போது யாருக்காக அவன் பாடினானோ,யாருக்காக அவன் உருகி கொண்டு இருக்கிறானோ அவளுக்கு புரியாமல் போகுமா என்ன ????
vijay-speech-mersal-audio.jpg

விஜய்யின் காதல் தோட்டத்தில் அமர்ந்து யோசித்த போதே விளங்கி விட்டது தான் .அவனும் அவன் சொல்லால் ,செயலால் காதலை உணர்த்தி விட்டான் தான் .ஒரு வீட்டின் அறை முழுக்க நினைவு சின்னங்களை எழுப்பி அல்லவா வைத்து இருக்கிறான். ஆனால் எப்படி அவன் கைகள் கட்டப்பட்டு இருக்கிறதோ அதே போல் மதுராவின் கரங்களும் கட்டப்பட்டு இருந்தது .அவள் முடிவுக்கு யாரும் குறுக்கே வர போவதில்லை தான் .அப்படியே குறுக்கே வந்தாலும் அதை சமாளிக்கும் திடமும் அவளுக்கு உண்டு தான் .ஆனால் விஜய்க்கும் அவளுக்கும் நடுவே இருக்கும் அகழி மிக பெரியது ஆயிற்றே .....practical ப்ரோப்லேம் நிறைய உண்டு என்பதால் தான் அவள் மௌனம் காப்பது .

கண்ணீர் வழிய படுத்து இருந்தவள் கைகளில் பட்டது அந்த நோட்பேட் .அதனை எடுத்து புரட்டியவள் விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள் .பக்கம் பக்கமாக அவள் படங்கள் பென்சில் ஸ்கெட்ச் மூலம் வரைய பட்டு இருந்தது .சிலவற்றில் விஜய்யும் உடன் இருந்தான் .இருவரையும் வரைந்து இருந்தான் .அத்தனை தத்ரூபம் அதில் .சிலவற்றுக்கு வண்ணம் பூச பட்டு இருந்தது .இதே போல் 20 குறையாத பெரிய நோட்பேட்களை அந்த அறையில் பார்த்ததாக நினைவுக்கு வர தலையை பிடித்து கொண்டாள் மதுரா .
24125638_163908057688915_7207221788617474048_n.jpg

DTEV47GV4AIUSRo (1).jpg
38638207_2213683032252136_7525708998188728320_n.jpg

முப்பது பக்கம் திருப்பிய பின் ,விஜய் கை எழுத்தில் அவர்களின் கடந்தகாலம் முன்னே விரிந்தது .

"ஒரு குடும்பத்திற்கு மூத்த மகன் என்பது பெரும் சுமை .அதுவும் அப்பா பாராலிஸிஸ் வந்து படுத்த படுக்கையாக இருக்கும் போது இதை எல்லாம் எப்படி சமாளித்தார் என்று சுத்தமாக புரியவில்லை .நேத்து வரை கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்ந்து விட்டேன் .ராஜா வீட்டு கண்ணுகுட்டியாக அப்பாவும் ,அம்மாவும் என்னை தாங்கி விட்டனர்.ஆனால் இன்றோ இவர்களையும் ,தம்பி ,தங்கையையும் தாங்கும் பொறுப்பு என்னுடையது .யாரின் வயிறும் வாட கூடாது ,அப்பாவுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் ,எங்கள் மூவரின் படிப்பும் கெட கூடாது .தம்பி நான் வேலைக்கு போகிறேன் என்று வந்து நிற்கிறான் .அவனை சமாளிப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது .வேலை சமயத்தில் இப்படி ஆனதால் இழப்பீடு பெரும் தொகையாகவே வந்து இருக்கு .அதை பேங்க்கில் போட்டு மாத வருமானம் வரும் படி செய்து விட்டேன் .சொந்தமாய் குடி இருந்த வீட்டை காலி செய்து விட்டு ,சிறிய வீட்டுக்கு குடி போய் விட்டோம் .சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டோம் .அது மெயின் ஏரியா என்பதால் வாடகையும் கணிசமாக வருகிறது .ஊரில் இருந்த விவசாய நிலத்தையும் ஆண்டு காண்ட்ராக்ட்டுக்கு குத்தகை விட்டு இருக்கிறேன் .

அம்மாவும் சிக்கனமாக தான் செலவு செய்கிறார் .தம்பி ,தங்கை பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்கின்றனர் .அப்பாவுக்கும் உயர்தர சிகிச்சை அளித்தால் மீண்டும் பேசவும் ,எழுந்து நடமாடவும் முடியுமாம் .அதனால் வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு செய்து ஆல்வினின் அப்பா செய்யும்
செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலில் அவர்க்கு உதவி கொண்டு இருந்தேன் .விற்கும் இடத்திற்கு ஏற்ப கமிஷன் தாராளமாகவே வருகிறது .சில பள்ளி பசங்களுக்கு டியூஷன் எடுக்கிறேன் ..ஆனாலும் சில சமயம் மூச்சு முட்டி போகிறது .எல்லோருக்கும் சுமைதாங்கி கல்லாக இருப்பதால் அவர்கள் பிரச்சனைகளை ,தேவைகளை என் மேல் இறக்கி வைக்கிறார்கள் .ஆனால் நான் யாரிடம் இளைப்பாறுவேன் ????

(பாவம் விஜய் நீ...........அந்த சமயத்துல நான் என்ன செய்தேன் ....கார்திக்க்கை உண்டு இல்லை என்று செய்து கொண்டு இருந்தேன் .........ஸ்கூலில் வால் என்று பேர் எடுத்தேன் ......பவானியின் BP ஏத்தி கொண்டு இருந்தேன் )

உறங்க கிடைப்பதே வெறும் நான்கு மணி நேரம் தான் .பசி ,தூக்கம் இது எல்லாம் பார்க்கவே முடியாது .ஆனாலும் ஏதோ ஒரு சோர்வு .இப்படி தந்தையை ,குடும்பத்தை காப்பாற்ற ஓடி கொண்டு இருந்த போது தான் மாசிலாமணி சார் பழக்கம் ஆனார் .குன்னூர் அருகே அவருக்கு ஏதோ ஒரு பங்களா வாங்க வேண்டி இருந்தது .ஆல்வின் அப்பாவால் அதை செய்ய முடியவில்லை .என்னை தான் அனுப்பினார் .வேண்டா வெறுப்பாக தான் சென்றேன் .ஆனால் அந்த பயணம் தான் என் வாழ்க்கைக்கு உயிர் அளித்தது .அவர் எதிர்பார்த்ததை முடித்து கொடுத்தேன் .அவருக்கு என்னை மிகவும் பிடித்து போனது .என்னை பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார்.மூன்றே நாளில் மற்றொரு தந்தையாக மாறி போனார் அந்த கோடீஸ்வரர் .
 
anitha1984

Author
Author
#4
அத்தனை அன்பு ,கருணை .மனிதருள் காணக்கிடைக்காத மாணிக்கம் அவர் .கோடி கோடியாய் பணம் இருந்தும் ,ஒற்றை பிள்ளை பெற்று இருந்தும் ,அந்த குன்னூரில் பணக்கார ஏழையாய் இருந்து கொண்டு இருக்கிறார் .அன்புக்கு மிகவும் ஏங்கி போய் இருந்தார் .அவருக்கு உடம்பு சரி இல்லாமல் போகவே கூடவே இருந்து நான் தான் பார்த்து கொண்டேன் .அவர் குணமானதும் கூட என்னை போக விடவில்லை .அவரின் அன்புக்கு கட்டுப்பட்டு மேலும் இரண்டு நாட்கள் தங்கி இருந்த போது தான் என் வாழ்வு ஒரு விபத்தால் மாறியது .

யார் அது என்று தெரியவில்லை ........குடித்து விட்டு வண்டி ஒட்டி என்னை பரலோகத்திற்கு அனுப்ப முடிவு செய்தவன் .ஆனால் எனக்கு கிடைத்தது சுவர்க்கம் .அடி பட்டு ரத்த வெள்ளத்தில் நடு ரோட்டில் துடித்து கொண்டு இருந்தேன் .கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தார்களே ஒழிய துணித்து யாரும் உதவ முன்வரவில்லை .மருத்துவ துறையில் "கோல்டன் டைம் "என்று ஒன்று உண்டு .டாக்டர் கூட சொல்வாரே "கொஞ்ச நேரத்திற்கு முன் கொண்டு வந்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று " அந்த முதல் உதவி நேரத்தை ,உயிரை காப்பாற்றும் அந்த நொடியை தான் "கோல்டன் டைம் "என்பார்கள் .இதற்குள் நோயாளிகளை ,விபத்தில் சிக்கியவர்களை கொண்டு சென்றால் காப்பாற்றி விடலாம் .ஆனால் யாருமே முன்வரவில்லை .மரணபயத்தில் துடித்து கொண்டு இருந்தேன் .வலி ....வலி ..........வலி மட்டுமே தெரிந்தது .

அப்பொழுது தான் அது நடந்தது ......கூட்டத்தை விளக்கி கொண்டு வந்தாள் அவள் .அவளை கண்ட அந்த நொடி நான் இறந்து விட்டேனா என்று கூட குழம்பி விட்டேன் .என் உயிரை கொண்டு செல்ல வந்த வானத்து தேவதை தான் அவளோ என்று........அவ்வளவூ அழகு அவள் ........அடிபட்டு நினைவு தப்பி கொண்டு இருந்த வேளையில் சைட் அடித்தவன் நான் ஒருவனாக தான் இருப்பேன் .அதுவும் அந்த பெண் பார்ப்பதற்கு ஸ்கூல் கேர்ள் போல் இருந்தாள் .

IMG_20170428_002912_761.jpg

அவளுக்கு பத்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவம் கண் முன்னே விரிந்தது .அடிபட்டு உயிர்க்கு போராடிய ஒருவனை தான் காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்த்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது .ரத்த வெள்ளத்தில் இருந்த அவன் முகம் அன்று அவளுக்கு சரியாக தெரியவில்லை .அன்று தான் காப்பாற்றிய நபர் விஜய் தான் என்று இன்று அவன் எழுதியதை படித்த பின் தான் அவளுக்கு தெரிய வந்தது .

அங்கு இருந்தவர்களை சரமாரியாக திட்டி தீர்த்தவள் ,பெரிய towel ஒன்றை வைத்து அழுத்தி அதனை அவள் தாவணி கிழித்து கட்டி என் ரத்த பெருக்கை நிறுத்தியவள் என்னை மடி தாங்கி கொண்டாள் .

"சார் ...........சார் ..............உங்களுக்கு ஒன்றும் ஆகாது ......சீக்கரம் ஹாஸ்பிடல் போய்டலாம் ........."---ஒஹ்ஹஹ் குயில் கூவியதோ ...........அவள் தான் என் கன்னத்தை தட்டி பேசி கொண்டு இருந்தாள் .

(உயிர் இருக்கான்னு நான் பயந்துட்டு இருந்தா ...........குயிலாம் குயில் )

அவள் மடியில் சொகுசாக படுத்து கொண்டு ,அவளையே சைட் அடித்து கொண்டு இருந்தேன் .அவளோ என் உயிரை காக்க போராடி கொண்டு இருந்தாள் .

"angel "----அவள் பெயர் தெரியாது .ஆனால் அவள் தான் என் angel .என்னை காப்பாற்ற வந்த தேவதை பெண் .எனக்காகவே கடவுள் படைத்த மறுபாதி ....என்னவள் ............தவம் செய்யாமலே எனக்கு கிடைத்த தேவதை .....

ஆட்டோ மூலம் என்னை ஹாஸ்பிடல் கொண்டு சென்றாள் .அன்னையாய் என் மடி தாங்கி இருந்தாள் .இப்படியே என் உயிர் போனாலும் எனக்கு கவலை இருந்து இருக்காது .அத்தனை அமைதி அவள் அருகே இருக்கும் போது .

(அடப்பாவி நீ நிம்மதியா உயிர் விட்டு இருப்பே ....நான் அல்லவா ஒரு உயிரை காப்பாற்ற முடியவில்லையே என்று வாழ்க்கை முழுதும் அழுது இருப்பேன் ....தத்து பித்துன்னு உளறுது எருமை .)

அவள் தொடுகை .....அவள் வாசம் ....அவளின் எனக்கான தவிப்பு ..........எனக்கு பிடித்து இருந்தது .எனக்கே எனக்காக ஒரு உயிர் துடிக்கிறது அது எனக்கு அடிபட்டதால் தான் என்றாலும் ........காதல் கொண்ட மனம் அதற்கு பிடித்த வர்ணம் பூசி கொண்டது .

காதல் ..............அவன் அவனுக்கு எப்படி எப்படியோ காதல் வரும் ...........எனக்கு நடு ரோட்டில் ....ரத்த வெள்ளத்தில் உயிர்க்கு போராடும் சமயத்தில் காதல் வந்தது .....அதுவும் நல்லதிற்கு தான் .....அவளை கரம் பிடிக்க வேண்டும் என்ற வெறியே "பூட்ட கேஸ் "என்ற நிலையில் இருந்த என்னை மீட்டு வந்தது என்பது தான் நிஜம் .....நான் உயிர் பிழைத்தது அந்த தேவதையால் தான் .....அந்த தேவதைக்காக மட்டும் தான் ........அவளோடு வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே என் உயிர் பிழைத்ததோ என்று இன்று தோன்றுகிறது .

PENANCE WILL CONTINUE......
 
#10

View attachment 4622

இதுக்காவது விஜய்யோடு சேரட்டும் Pl.
 
Latest updates

Latest Episodes

Top